ஆழியின் ஆதவன் 17

 


ஆழி 17


ஆழி கையில் ஆவி பறக்கும் டீயுடன், அவன் ஆவியை எடுக்கும் ஆயுதத்தை எடுத்துக் கொண்டு வந்தாள்.


"இந்தாங்க சார் டீ, தலை வலிக்குதுன்னு சொன்னீங்க இல்ல, இந்தாங்க இந்த மருந்தை போடுங்க எல்லாம் பறந்து போய்டும்" என்று டீயும் கூடவே ஒரு கேப்சூல் மாத்திரையையும் அவன் கையில் கொடுக்க, இடித்துக்கொண்டே அந்த கேப்சூலை வாயில் போட்டுக்கொண்டு, டீயை ஒரு வாய் குடித்த விமல்,


"ஏங்க டீ சூப்பரா தான் இருக்கு… என்னை உள்ள கூப்பிடாம அவாய்ட் பண்ண, வேணும்னு தானே பொய் சொன்னீங்க" என்று ஏதோ பெரிய ரகசியத்தை கண்டு பிடித்தது போல் அட்டகாசமாகச் சிரிக்க, ஆழி அவன் கேவலமான சிரிப்பை சகிக்க முடியாமல் முகத்தை திருப்பிக் கொண்டு,


"அய்யோ அப்படி எல்லாம் இல்லீங்க சார், சும்மா ஒரு சேஃப்டிக்கு தான். இந்தக் காலத்துல யாரையும் நம்ப முடியல இல்ல, அதோட இது தனி வீடு வேற, இங்க இருந்து கத்துனா கூட யாருக்கும் கேக்காது, உதவிக்குக் கூட யாரும் இல்ல, அதான்…" என்றவளை வக்கிரமாக துகிலுரிக்கும் பார்வை பார்த்தபடியே எழுந்து ஆழியை நோக்கி நடந்த விமல்,


"நீ சொல்றது உண்மைதான் ப்யூட்டி, காலம் கெட்டுதான் கெடக்கு. ஆனா பாரு இவ்ளோ தெரிஞ்ச நீ, என்னை வீட்டுக்குள்ள விட்டு பெரிய தப்பு பண்ணிட்டியே" என்று சிரித்தபடியே விமல் ஆழி தோளில் கை வைக்க, சட்டென அவன் கையை தட்டி விட்ட ஆழி, இரண்டடி பின்னால் சென்று,


"ஹலோ என்ன பண்றீங்க நீங்க? முதல்ல வெளிய போங்க…" என்று கத்தியவளைப் பார்த்து சத்தமாகச் சிரித்தான் விமல்.


"வெளிய போறதுக்கா ப்யூட்டி நான் உள்ள வந்தேன். உன்னை மாதிரி ஒரு ஹாட்டான பொண்ணைக் கண்ணு முன்னால, அதுவும் யாரும் இல்லாத தனி வீட்ல கைக்கு எட்ற தூரத்துல வச்சிட்டு, வீட்ட விட்டு வெளிய போக நான் என்ன பைத்தியமா?" என்றவனை முறைத்துப் பார்த்த ஆழி,


"ஏய் என்ன பேசுற‌ நீ? எனக்கு உன் அக்கா வயசு இருக்கும்டா… என்கிட்ட போய் இப்படி தப்பு தப்பா பேசுறீயே உனக்கு அசிங்கமா இல்ல?"


"எது அக்காவா" என்று சிரித்த விமல்,


"சாரி ப்யூட்டி இந்த சென்டிமென்ட் எல்லாம் எனக்கு சுத்தமா இல்ல… எனக்குப் பொண்ணுங்க எல்லாம் வெறும் சுகத்துக்கும், பணத்துக்கும் தான்." என்றதும் அவன் பின்னந்தலையில் பலமாக எதோ ஒன்று அடிக்க, அவன் அப்படியே தலையைப் பிடித்துக்கொண்டு கீழே சரிந்தான்.


"ஏன்டா நாயே… உனக்குப் பொண்ணுங்க எல்லாம் வெறும் சுகத்துக்கும் பணத்துக்கும் தானா, உன்னை எல்லாம் சும்மா விடக்கூடாதுடா" என்ற ஆதவ் அங்கிருந்த சேரை எடுத்து விமல் இடுப்பிலேயே பலமாக அடிக்க, விமல் அம்மா என்று அலறிய சத்தம் அந்த வீடு முழுவதும் எதிரொலித்தது.


"அய்யோ அய்யோ போலீஸ்கார்… போலீஸ்கார்... ஸ்டாப் ஸ்டாப். டெம்போ எல்லாம் வச்சுக் கடத்துறது நாங்க, ரான்சம் அமௌண்ட் கேக்குறது நீங்களா...? என்ன அநியாயம் இது…" என்று அரக்கப்பரக்க ஓடிவந்த சைத்ரா, ஆதவ் கையில் இருந்த சேரைப் புடிங்கி தரையில் போட்டு அதில் கால் மேல் கால் போட்டுக்கொண்டு உட்கார்ந்து கொண்டு விமலை பார்த்தவள்,


"என்ன ஆதவ் சார், நான் எவ்ளோ நேரமா என்னோட டர்ன் வரும்னு ஆசையா வெய்ட் பண்ணணிட்டு இருக்கேன், நீங்க என்னடான்னா, ஒரே அடியில இவன் கதைய முடிச்சு, என் ஆசைய அழிச்சிடுவீங்க போலயே" என்ற‌ சைத்ரா, விமல் தலைமுடியை பிடித்து நிமிர்த்தி,


"ஏன்டா டேய், அப்ப நீ என்ன சொன்ன, பண்பாடா... அடிங்கு கொப்பமவனே... யார் யார் எதைப் பத்தி பேசுறதுன்னு ஒரு வகைதொகை இல்ல… நீ எல்லாம் அந்த வார்த்தையைச் சொல்லலாமாடா பரதேசி… அப்புறம் என்ன சொன்ன?" என்று யோசித்தாள், "ஹான்…‌ அவ ப்யூட்டியா? ஹாட்டா இருக்காளா?" என்று‌ விமல் கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விட்டவள், "சொல்லுடா… இப்ப சொல்லுடா பாப்போம், பால் பவுடர் வாங்கி குடிக்கிற வயசுல உனக்கு எல்லாம் பொண்ணுங்க கேக்குது இல்ல..." என்றவள் விமல் கை மற்றும் காலின் அனைத்து நகத்தையும் பிடுங்கி எடுக்க, மீரா அவள் பங்கிற்கு அந்த இடத்தில் ஆசிட் ஊற்றி விட, வலியில் விமல் கத்திய கத்தலில் காட்டு மிருகங்கள் கூட தெறித்து ஓடி இருக்கும்.


ஆழி, விமல் தலையில் பட்டென அடித்து, தன் உதட்டின் மீது ஒரு விரல் வைத்து 'உஷ்' என்றவள், "டேய் மெல்லமா கத்துடா, உள்ள ரூம்ல, நிலா பாப்பா தூங்கிட்டு இருக்கு, நீ கத்துற கத்துல குழந்தை முழிச்சிக்கப்போறா, அமைதியா கத்துடா பன்னி" என்றவளை விமல் பரிதாபமாக பார்க்க, ஆழி நக்கலாகச் சிரித்தாள்.


"ஹலோ... இன்னும் வீட்டோட இன்டு இடுக்குல இருக்க, யாருக்காவது இவனுக்கு சீர்வரிசை செய்ய ஆசை இருந்தா வந்து செஞ்சிடுங்க, அப்புறம் வாய்ப்பு கிடைக்காது. போனா வராது இன்னைக்கு பொழுது போனா இவன் உயிர் நிக்காது." என்ற சைத்ரா, 


"புல்லட் முகிலும், டெப்டி விஷ்ணுவும் எங்கிருந்தாலும் இங்கே வருமாறு விழா குழுவின் சார்பாக கேட்டுக் கொண்டு இவனைக் கொல்லப்போகிறோம்" என்று கத்த, முகிலும் விஷ்ணு வீட்டிற்கு உள்ளே வந்து அவர்கள் ஆசை தீரும் வரை வலுவாக விமலை கவனித்தனர்.


இருள் முழுதாகச் சூழ்ந்திருக்கும் அந்தக் காட்டுப்பகுதியில் அனைவரும் சுற்றி இருக்க, உடல் முழுவதும் ரத்தம் சொட்ட விமல் மரண பயத்துடன் அனைவரின் முகத்தையும் மாறி மாறி பார்த்தபடி தரையில் கிடந்தான்.


"டேய் விஷ்ணு பேசாம இவனை அரெஸ்ட் பண்ணி ஜெயில்ல போட்டுடலாம்டா. இவனெல்லாம் இவ்ளோ சீக்கிரம் சாகக் கூடாது. அனுஅனுவா ஜெயில்ல கிடந்து சித்திரவதைப் பட்டு சாகணும். பேசாம இவன்கிட்ட ஸ்டேட்மெண்ட் வாங்கி, எல்லாரையும் அரெஸ்ட் பண்ணலாம்" என்க, பெண்கள் மூவரும், "எதே..." என்றபடி தலையில் கைவைத்து கொண்டு,


"அப்பவே முகில் சொன்னாரு, என்ன இருந்தாலும் எங்க புத்தி போலீஸ் புத்தின்னு, அது சரியா இருக்கு." என்று‌ வாய்விட்டு புலம்பினர்.


"ஹலோ ஆதவ் சார் முதல்ல உங்களுக்குள்ள இருக்க சி.பி.ஐ க்கு லீவ் லெட்டர் குடுத்து வெளிய அனுப்புங்க… எப்பப்பாரு நீதிடா, நியாயம்டானு சரத்குமார் மாதிரி பேசிட்டு திரியுது. உங்களால இவனை எல்லாம் ஒன்னும் பண்ண முடியாது. அது உங்களுக்கும் தெரியும் இல்ல? அப்புறம் எதுக்கு இந்த தேவையில்லாத யோசனை எல்லாம். அதோட நாங்க வேற இவனுக்காக ஹெவியா இன்வெஸ்ட் பண்ணி இருக்கோம். அதெல்லாம் வேஸ்ட் ஆகிடும். அது நாங்க கஷ்டப்பட்டு ஸ்கெட்ச் போட்டு சம்பாரிச்ச காசு ஆதவ் சார். அது வேஸ்ட்டா போக நாங்க ஒரு நாளும் ஒத்துக்க மாட்டோம். கொஞ்சம் எங்க உழைப்புக்கு மரியாதை குடுங்க" என்றதும் சூழ்நிலை மறந்து அனைவருக்கும் சிரிப்பு வந்துவிட்டது.


"இங்க பாருங்க ஆதவ் சார், அப்பார்ட் ஃப்ரம் ஜோக், நீங்க சொல்றது சரியா வராது. பிகாஸ் இவனும் இவனோட அப்பனும் வெறும் ஏஜெண்ட் மட்டும் தான். இவனுக்கு சைலேஷ் பத்தியே முழுசா தெரியாது, அப்புறம் யுவ்ராஜ் பத்தி என்ன சொல்லுவான் சொல்லுங்க. அஃப்கோர்ஸ் நாங்க நினைச்சா உங்களுக்கு எல்லா ஆதாரத்தையும் சொடக்கு போடுற நேரத்துல ரெடி பண்ணி தரமுடியும் தான். பட் அதை நாங்க செய்ய‌மாட்டோம். பிகாஸ் இவனை ஜெயில்ல போட்ட அடுத்த நாலு நாள்ல இவன் அப்பன் இந்த நாயை வெளிய கொண்டு வந்திடுவான். வந்ததும் இந்த நாய் உங்க ஒவ்வொருத்தரையும் தேடி தேடி அழிக்கப் பார்க்கும். அதை எங்களால பாக்க முடியாது ஆதவ் சார். எங்களுக்கு நிலா பாப்பா ரொம்ப முக்கியம். இவனை வெளிய விட்டு பாப்பா உயிருக்கு ஆபத்தை தேடி வைக்க நாங்க விரும்பல" என்ற சைத்ரா திரும்பி விமலை பார்த்தவள், "அதோட நீங்க உங்க ஐடியாவை ரொம்ப லேட்டா சொல்லிட்டீங்க, ஆல்ரெடி இவன் நரகத்தை நோக்கி தன் பயணத்தை தொடங்கி விட்டான் ஆபிசர் அவர்களே!!" என்று இமை கொட்டி சிரித்தாள்.


"என்ன சொல்ற சைத்ரா நீ? என்ன பண்ணீங்க? சர்ச் இல்ல… இத எப்ப பண்ணீங்க?" என்று முகில் வியப்பாக கேட்க, அவனைப் பார்த்து கண்ணடித்த சைத்ரா, "செஞ்ச ஆளு பின்னாடி நிக்குது, அதையே கேளுங்க" என்று ஆழியை கைகாட்ட, ஆண்கள் மூவரும் ஆழியை பார்த்தனர்.


"நானா ஒன்னும் செய்யல முகில். இவன் தான் உங்க கையால பாய்சன் குடுத்தாலும் பாயசம் மாதிரி ஃபீல்‌ பண்ணுவேன்னு சொன்னான். அதான் என் கையாலயே பாய்சன் குடுத்தேன்."


"அப்ப இவனுக்கு குடுத்த டீயில நீ விஷம் கலந்தியா?" என்ற விஷ்ணுவைப் பார்த்து அவள் இல்லை என்க,


"அப்புறம் எப்படி?" என்றான் விஷ்ணு.


"டீல விஷம் கலக்குற அளவுக்கு நாங்க ஒன்னும் சீப்பான கில்லர்ஸ் இல்ல. நாங்க  எல்லாம்  ஹைய் ப்ரோஃபைல் (high-profile), ட்ரேஸ்சே இல்லாம கிளீன் ஸ்வைப்ல மேட்டர முடிக்கிறவங்க... சோ டீ யில் எல்லாம் விஷம் கலக்க மாட்டோம். விஷம்‌ அவன் தலைவலிகு முழுங்குன மருந்துல தான் இருந்தது. பயபுள்ள ஒரு முழு‌ பாம்பை முழுங்கி இருக்கு" என்று மீரா சொல்ல, விமல் முகம் போன போக்கை பார்த்த மீரா சிரித்துக் கொண்டே விமல் அருகில் வந்து, அவன் தலை முடியை கொத்தாக பிடித்து,


"என்னடா புரியலயா? ஆழி தலைவலிக்கு உனக்கு ஒரு காப்ஸ்யூல் குடுத்தாளே ஞாபகம் இருக்கா, அதுக்குள்ள தலைவலி மருந்து இல்லடா, உன் தலைவிதியை முடிக்க போற உன்னோட எமன் இருக்கு, இன்னும் கொஞ்ச நேரத்துல அது தூக்கத்தில் இருந்து முழிச்சு, உன்னை ஒரேயடியா தூங்க வைக்க போகுது. ஆனா, அது நடக்க" என்று தன் கை கடிகாரத்தை பார்த்தவள், 


"ம்ம்ம் இன்னும் சரியா பத்துமணி நேரம் இருக்கு, நாங்க இப்ப இங்க இருந்து கிளம்பிடுவோம். உனக்கு உயிர் மேல ஆசை இருந்தா இந்தக் காட்டுல இருந்து வெளிய போய் உயிர் பொழச்சிக்கோ" என்ற மீரா அவள் ஐந்து விரல்களும் அவன் கன்னத்தில் பதியும் அளவுக்குப் பளார் என்று ஒன்று வைத்தாள்.


"ஆழி… மீரா என்ன சொல்றாங்க எனக்கு ஒன்னும் புரியல… அதுவும் அவனை இங்க விட்டுட்டு போகப்போறோம்னு சொல்றாங்க, என்ன இதெல்லாம்?"


"உங்களுக்குப் புரியற‌ மாதிரி சொல்றேன் விஷ்ணு" என்றவள், "டேய் பரதேசி நீயும் கேளு, அப்ப தான் நீ எப்படி சாகப் போறேன்னு தெரிஞ்சு, உனக்கு இன்னும் குளுகுளுன்னு இருக்கும்" என்ற ஆழி, 


"இவனுக்குக் குடுத்த அந்தக் காப்ஸ்யூல்குள்ள ஒரு சின்ன சைஸ் ஸ்னேக் இருக்கு, சைஸ் தான் குட்டி, பட் இட்ஸ் வெரி பாய்ஸ்னஸ். அதை தான் காப்ஸ்யூல் உள்ள வச்சு இவனுக்குக் குடுத்தேன். இன்னும் கொஞ்ச நேரத்தில இவன் பாடி டெம்பரேச்சர் சூட்ல காப்ஸ்யூல் மெல்ட் ஆகி ஸ்னேக் வெளிய வரும்" என்றது தான் தாமதம், விமல் வயிற்றைப் பிடித்துக்கொண்டு வாந்தி எடுக்கப் பார்க்க, "தச்சீ வாயமூடு, பேசிட்டு இருக்கேன் இல்ல. சத்தம் போட்டுட்டு இருக்க, சைத்து அவன் வாய்லயே நாலு மிதி மிதிடி"


"வித் பிளஷர் ஆழி" என்று விமல் அருகில் சென்ற சைத்ரா, "எங்க ஆழி ஆக்டர் விஜய் மாதிரி, சத்தமா பேசாத சுத்தாமா புடிக்காது, மொத்தமா தூக்கிடுவேன் கேஸு" என்று விமல் வாயில் பிளாஸ்டரை ஒட்டி விட்டு ஆழியைப் பார்த்து, "யூ கண்டினியூ" என்றாள்.


"அந்த ஸ்னேக் வெளிய வந்து இவனைக் கடிச்சதும், இவனோட‌ உடம்போட ஒவ்வொரு பார்ட்டும் செயலிழக்க ஆரம்பிக்கும், அதுல பர்ஸ்ட் பார்ட் அவனோட வாய் தான், ஐ மீன் அவனால பேச முடியாது. தென் கண்ணு ஃபியூஸ் போய்டும். அப்படியே ஒவ்வொரு பார்ட்டும். இங்கிருந்து இந்தக் காட்டைக் கடந்து வெளிய‌ போக, குறைஞ்சது ஏழு மணி நேரம் ஆகும். அதுக்குள்ள இவனோட பாதி உயிர் போயிருக்கும். இங்க நிறைய செந்நாய்ங்க இருக்கு, அதுங்க இவன் மீதி உயிரை நைட் டின்னர்க்கு எடுத்துக்கும். இப்ப எல்லாம் தெளிவா புரிஞ்சுதா?… சரி சரி டைம் ஆகுது. இதுக்கு மேல இங்க இருக்குறது உங்களுக்கு சேஃப்டி இல்ல, வாங்கப்போலாம்" என்ற ஆழி திரும்பி விமலை பார்த்து,


"மேல தனியா இருக்கணும்னு பயப்படாத, இன்னும் கெஞ்ச நாள்ல உங்கப்பன்‌‌ உனக்கு துணைக்கு வந்திருவான். நரகத்திலயாவது நல்லவனா இருக்கப் பாரு, அப்படி இல்லாட்டி, அங்க என் கண்ணுல மட்டும் படக்கூடாதுனு சாமிய வேண்டிக்க… மீட்‌ யூ இன் ஹெல்…" என்று விட்டு அனைவரும் அங்கிருந்து வெளியேறினார்.


வீட்டில் ஆறு பேரும் அமர்ந்திருக்க, அங்கு அசாத்திய அமைதி நிலவியது.


"என்னால நடந்ததை இப்பவும் நம்ப முடியல ஆழி. நாங்க நெனச்சது இவ்ளோ சீக்கிரம் நடக்கும்னு நாங்க நினைக்கவே இல்ல…" என்று இழுத்து மூச்சு விட்ட விஷ்ணு, 


"ஆமா காப்ஸ்யூல்ல ஸ்னேக் இருக்குன்னு சொன்னியே, அவ்ளோ சின்னப் பாம்பு இருக்கா என்ன? அது எங்கிருந்து உங்களுக்குக் கிடைச்சுது?"


"அதை ஸ்னேக்னு சொல்லிட முடியாது விஷ்ணு இட்ஸ எ கைன்ட் ஆஃப் வார்ம் (புழு) பட், அதோட விஷத்தன்மை அதிகம். குறிப்பிட்ட ‌சில கன்ட்ரில மட்டும் தான் இது இருக்கும். செம்ம எக்ஸ்பென்சிவ். உங்களுக்கே தெரியும் நாங்க என்ன பண்ணாலும், எவிடன்ஸ் இல்லாம தான் செய்வோம். அதுக்கு இந்த மாதிரி சில விஷயங்கள் எங்களுக்குத் தேவைப்படும். சோ" என்று தோளைக் குலுக்கினாள்.


"ம்ம்ம் உங்களுக்கு உங்க வேலை மேல செம்ம கமிட்மெண்ட் தான். ஆமா அந்த ஸ்னேக் என்ன அவ்ளோ எக்ஸ்பென்ஸ்வா ஆழி?"


"ஆமா முகில் ஒரு சின்ன‌ கன்சைன்மெண்ட் மினிமம் பத்துல இருந்து பதினஞ்சு லட்சம் வரும். அந்த ஏஜெண்ட் எங்களுக்கு ரெகுலர் சப்ளையர், சோ... லெவன் லாக்ஸ்க்கு குடுத்தான்." என்ற‌ ஆழி மீரா தோளை இடித்து, கூடவே அவனுக்கு இவமேல ஒரு க்ரஷ், சோ ரேட் கம்மியா குடுத்தான்." என்ற ஆழியின் தலையில் பலமாக மீரா கொட்ட, விஷ்ணுவுக்கு உள்ளுக்குள் அந்த ஏஜெண்ட் மேல் லேசாக கடுப்பு வந்தது. (இது என்ன இவனுக்குள்ள பொறாமை தீ எரிஞ்சு கருகுற வாசம் வருது… என்னவா இருக்கும்???)


"ஆமா ஆழி இந்நேரம் அங்க செந்நாய் வந்திருக்குமா?


"ம்ம்ம் வந்திருக்கும் முகில்??"


"அது எப்படி உனக்குத் தெரியும்?"


"நேத்து நான் அங்க போயிருந்தேன் முகில். நைட் ஒரு மணிபோல அங்க நிறையா செந்நாய்ங்க இருந்ததைப் பாத்தேன்" என்று அசல்ட்டாகச் சொல்ல, விஷ்ணு, ஆதவ், முகில் மூவரும் அதிர்ந்தனர்.


"ஏய் என்ன சொல்ற நீ?! அந்த நேரத்தில நீ அங்க போனீயா?" என்று ஆதவ் கேட்க,


"பின்ன அந்த இடத்தைப் பத்தி தெரியனும் இல்ல, அப்ப போய் பாக்கதானே வேணும், இதெல்லாம் எங்க வேலையில சகஜமான ஒன்னு தான்" எனும் போது எதோ நொறுங்கும் சத்தம் கேட்க, அனைவரும் அதிர்ந்து எழுந்து நிற்க,


ஆதவ் காலடியில் அங்கிருந்த பெரிய பூ ஜாடி கீழே விழுந்து உடைந்து இருக்க, கண்களில் கோவம் அக்னியாக எரிய ஆழியை தீயாக முறைத்துக் கொண்டிருந்தான் ஆதவ்.