ஆழியின் ஆதவன் 29

 ஆழி 29



அதை கேட்டு ஆதியை தவிர மற்ற மூன்று ஆண்களுக்கு வியந்து போய்,‌ "அது எப்டி யுக்தா உனக்கு தெரியும்? என்று‌ ஆச்சரியமாக கேட்க, 


"நாங்க படிச்ச ஸ்கூல் ல அவங்க ஹெட் மாஸ்டர் ஆக்கும் மிஸ்டர் போலீஸ்கார்" என்று சைத்ரா குறும்பாக சொல்ல மீண்டும் அங்கு சிரிப்பலை பரவியது.


"ஓகே காய்ஸ் வாட் நெக்ஸ்ட்?‌ என்ற யுக்தாவின் கேள்வியின் உள்ளர்த்தம் ஆழிக்கு புரிய, "இல்லக்கா, அந்த யுவ்ராஜ் என்னோட டார்கெட் அவனை நான் என் கையால கொல்லனும். என் வாழ்க்கை நா செய்யப்போற கடைசி கொலை…  எனக்கு கிடைக்கவே கிடைக்காதுனு நெனச்ச எல்லாத்தையும் எனக்கு வாரிக் கொடுத்த ஆஷாக்கு நான் செய்ற நன்றிக்கடன் இது… இதுக்குள்ள நீங்க வராதீங்க க்கா, ப்ளீஸ்" என்னவளின் உணர்வு யுக்தாவுக்கு ஒன்றும் புரியாமல் இல்ல, ஆனால் மீண்டும் ஆழியும் மற்றவருக்கு கடந்து வந்த பாதையில் மீண்டும் செல்ல வேண்டாம் என்று எண்ணத்தில் யுவ்ராஜ் கதையை அவளே முடிக்க நினைக்க, ஆழி அதற்கு எதிராக நிற்க,


"ஆழி நான் சொல்றத கொஞ்சம் கேளுடி" என்று ஆரம்பிக்க, "ப்ளீஸ் கா… நீங்க வேற என்ன சொன்னாலும் நான் கேக்குறேன். பட் ப்ளீஸ் இதுல மட்டும் முடியாது கா… ஆஷாக்காக" என்று கொஞ்சும் போது  யுக்தா மறுக்க முடியுமா… "ம்ம்ம்" என்று இழுத்து மூச்சு விட்டவள், "ஓகே" என்று‌ தன் சம்மதத்தை ஒரு வார்த்தை தந்துவிட்டாள்.


"யுகி நீ சொல்ற அந்த யுவ்ராஜ் பெரிய பிஸ்னஸ் மேன் மட்டும் இல்ல, ஒரு பெரிய அரசியல் தலைவரோட பையனும் கூட, இவங்க அவர் பையன் மேல கைய வச்ச அந்த மனுஷன் சும்மா இருக்க மாட்டாரு? சோ இவங்க மூணு பேர் சோஃப்டிக்கும் எதுவும் ப்ளான் வச்சிருக்கியா?" என்ற ஆதியை யுக்தா அர்த்தமாக ஒரு பார்வை பார்க்க, "அப்ப ஆல்ரெடி ப்ளான் ரெடி" என்று தன் இணையின் பார்வையின் பொருள் உணர்ந்தது அழகாக சிரிக்க, தன்னவனை நினைத்து லட்சமாவது முறையாக கர்வம் கொண்டாள் நம்ம ஆதியின் திமிரழகி சம்யுக்தா.


"நான் யுவ்ராஜ் அப்பா கிட்ட பேசினேன். நடந்த எல்லாத்தையும் கொலைகள் உட்பட எல்லாத்தையும் சொல்லிடடேன்" என்று‌‌ யுக்தா சொல்ல அனைவருக்கும் அதிர்ச்சி.


"என்ன யுக்தா சொல்ற! அவர்கிட்ட எதுக்கு சொன்ன?" என்று ஆதவன் பதட்டமாக, ஆழினி யுக்தா முகத்தை கூர்ந்து பார்க்க, அவளுக்கு விஷயம் புரிந்து விட்டது.


"அக்கா எங்க பாதுகாப்புக்கு தான் இதை செஞ்சிருக்காங்க" என்றாள்.


"எப்டி ஆழி? அந்த ஆள் யுவ்ராஜ் அப்பா… புள்ளைய காப்பாத்த அவரு உங்க மூணு பேரையும் எதாவது பண்ணிட்டா?" என்ற முகில் தோளை அழுத்திய யுக்தா,


"நீ நினைக்கிற மாதிரி இல்ல முகில். ஹீ இஸ் ஏ பெர்பெக்ட் பொலிட்டீசியன். அதனால் தான் நான் அவர்கிட்ட பேசினேன். நடந்த எல்லாத்தையும் கேட்ட பிறகு அவர் என்ன சொன்னார் தெரியுமா? எனக்கு புள்ளையே பொறக்கலனு நெனச்சிக்குறேன். அவனா நீங்க என்ன செஞ்சாலும் எனக்கு கவலை இல்லை. அவனை பத்தி யாரும் எதுவும் பேசாம நான் பாத்துக்குறேன். அவன் வெளிநாட்டுல ஏங்கயே இருக்கான், அங்கயே செத்து போய்ட்டான்னு கூட  சொல்லிடுறேன். இது நீயோ அந்த பொண்ணுங்களே எந்த வகையிலும் பாதிக்காம நான் பாத்துக்குறேன். ஆ…‌ஆனா, அவனை பத்தியா எந்த விஷயமும் வெளிய வரக்கூடாது. என் புள்ளை இவ்ளோ கேவலமான பிறவின்னு வெளியுலகத்துக்கு தெரிஞ்சு, ச்சீ இப்டி ஒரு புள்ளை பெத்திருக்கியேன்னு ஜனங்க என்னை கேவலமா பார்க்கிறதை தாங்கிக்கும் சக்தி எனக்கில்ல… தயவுசெய்து அவனை பத்தியா உண்மை அவன் சாவோட புதைந்து போய்டனும். இப்டி ஒருத்தன் இருந்த தடம் கூட இல்லாம செஞ்சிடுங்க" என்று திடமாக நின்றவரை பார்த்து யுக்தாவிற்கு சிரிப்பு தான் வந்தது.


"நான் சொல்றேன்னு தப்ப எடுத்துக்காதீங்க சார். யுவ்ராஜ் இவ்ளோ மோசமான சைக்கோவ மாற நீங்களும் ஒரு காரணம். ஒரு நல்ல அரசியல்வாதி, கட்சி தலைவராக இருந்த நீங்க உங்க புள்ளைக்கு நல்ல தகப்பனா இருக்க தவறிட்டீங்க, நீங்க மட்டும் அவனை கொஞ்சம் கவனிச்சு வளர்த்திருந்த இன்னைக்கு இத்தனை உயிர் போயிருக்காது. நீங்க ஒரு நல்ல அரசியல்வாதி, பட் நாட் ஏ குட் ஃபாதர். " என்றவள் எழுந்து நின்று, "நீங்க சொன்ன மாதிரி எல்லாம் நடக்கும். யுவ்ராஜ் பத்தி எந்த விஷயமும் வெளிய வராது" என்று உறுதி கொடுத்தவள் அடுத்ததாக சென்றது விமலின் வீட்டுக்கு தான்.


விமலின் தாய் விஜயா நெஞ்சில் அடித்து கதறி அழுது கொண்டிருக்க, யுக்தா அவர் அருகில் சென்று, "உங்க புருஷனும் புள்ளையும் செஞ்ச தப்புக்கு அவங்களுக்கு சரியான தண்டனை கிடைச்சிருக்கு… இதை இத்தோட விடுவது தான் நல்லது. நீங்க விமலும் அவன் அப்பாவும் காணும்னு கம்ப்ளைன்ட் கொடுத்திருக்கீங்க, அதை விசாரிக்க வந்த போலீஸ் நான் தான். இந்த கேஸை நான் பஃர்தாரா மூவ் பண்ண உங்க ஆசை புள்ளை பத்தியும் அருமை புருஷன் பத்தி வெளிய தெரிஞ்சிடும்" என்றது தான் ஓடி வந்து யுக்தா முன் கையெடுத்து கும்பிட்ட விஜயா, 


"வேணாம்மா வேணாம்… தயவுசெய்து இதை வெளிய சொல்லிடாதீங்க… எனக்கும் ஒரு பொண்ணு இருக்கும்மா, இந்த நாசமா போனவனுங்க பத்தி வெளிய தெரிஞ்சா, அவ வாழ்க்கையே பழ போய்டும். நா… நான் கேஸை வாபஸ் வாங்கிக்கிறேன்… நானும் எம் பொண்ணும் எங்கயாவது போய் கௌரவமா வாழ்ந்துக்குறோம்… அவனுங்க பத்தி சொல்லி எங்களை அசிங்கப்படுத்தாதீங்க" என்று கண்ணீர் விட்ட விஜயாவின் கையை எடுத்து அதில் அவள் கையை வைத்து கண்களை மூடித் திறக்க தான் விஜயாவிற்கு போன உயிர் திரும்பி வந்தது.


யுக்தா சொன்ன அனைத்தையும் கேட்டு ஆதி கர்வமாக தன்னவளை பார்க்க, மீதி பேருக்கு கண்கள் கலங்கி இருந்தது.


"சோ ஆகமொத்தம் எல்லா பிரச்சனையும் சால்வ் ஆகிடுச்சு.‌ யுவ்ராஜ் கதையை முடிக்க அவங்க அப்பாவே ஹெல்ப் பண்ணுவாரு… சோ இனி எதுவும் பிரச்சினை இல்லை" என்று ஆதி சொல்லும் போது யுக்தாவின் பார்வை அழுத்தமாக ஆழி மேல் பதிந்திருந்தது.



ஆழி தலைகுனிந்து நிற்க, யுத்தா அவளை அழுத்தமாக பார்த்துக்கொண்டிருந்தாள். 


"ஏன் ஆழி நிமிர்ந்து என் முகத்தை பாக்க மாட்டியா?" என்றவள் அவள் நாடியை பிடித்து நிமிர்த்தி நேருக்கு நேர் அவள் முகம் பார்த்து, நீ என் முகத்தை நேர் பாக்காம போன மட்டும் என்னால உன்ன மனசு இருக்குறது கண்டுபிடிக்க முடியாதுனு நினைக்கிறீயா ஆழி?" என்றதும் ஆழி பார்வையை தாழ்த்திக்கொண்டாள்.


"லிசன் ஆழி, நான் உன்னை எதுவும் கேட்க போறது இல்ல, பட் நீ ஆதவ்வ கல்யாணம் பண்ணிக்கனும்குறது என்னோட ஆசை, அது உன்னோட ஆசையும் கூடன்னு எனக்கு தெரியுது. ஆனா ஏதோ ஒன்னு உன்னை ஆதவ் கூட சேரவிடாம தடுக்குது. அது எதுவா வேணும்னாலும் இருந்துட்டு போகட்டும். அது என்ன எதுன்னு நான் கேக்கல. பட் நீ ஏதோ முடிவெடுத்து இருக்கேன்னு எனக்கு புரிந்தது. அது என்ன முடிவு இருக்கும்னு கூட என்னால யூகிக்க முடியும். " என்றவளை ஆழி ஒரு தவிப்போடு பார்க்க"


"டோண்ட் வெறி ஆழி, இத பத்தி நான் யார்கிட்டயும் சொல்லமாட்டேன். உன்னால் ஆதவனையும் நிலாவை விட்டு இருக்க முடியாது. அது எனக்கு புரிஞ்ச மாதிரி, உனக்கு புரியும், சோ நீ எடுத்த முடிவை நீயே மாத்திப்பா. அதுவரை உன்கிட்ட நான் எதுவும் கேட்கவும் மாட்டேன், யார்கிட்டயும் எதுவும் சொல்லவும் மாட்டேன் " என்றவள் அங்கிருந்து செல்ல, ஆழிக்கு சில நாட்களாக தான் எடுத்த முடிவை தன்னால் செய்யமுடியுமா என்ற அடிக்கடி எழும் சந்தேகம் யுக்தா பேசிபோன பிறகு அவள் எடுத்து முடிவு இன்னும் ஆட்டம் கண்டது.


"இப்ப என்ன பண்ணலாம் ஆழி?" என்ற மீராவை பார்த்துச் சிரித்த ஆழி,


"நாலு பேரும் காணாம போயிருக்காங்கனு தெரிஞ்ச பிறகும் இவன் இவ்ளோ கூட உஷாரா இல்லாட்டி இவனெல்லாம் என்னடி பெரிய வில்லன். எதிரி சப்பைய இருந்தா பேட்டில் (Battle) போர் அடிக்கும் மீரா… இப்ப என்ன அவன் எல்லார்கிட்டயும் மும்பை வர்றதா சொல்லிட்டு, பெங்களூர் ஏர்போர்ட்ல லேண்ட் ஆகி இருக்கான். இப்ப அவன் எங்க இருக்கான்னு தெரியல, அவ்ளோ தான… நமக்கு ஒன்னும் அவனை கண்டு புடிக்கிறது பெரிய விஷயம் எல்லாம் இல்ல மீரா. நீ அவன் அப்பா நம்பரை ஹேக் பண்ணு சைத்து, அப்ப அவனோட ஃபோன் நம்பரை நம்ம புடிச்சிடலாம். நமக்கும் மும்பைல இருந்து அவனை இங்க கடத்துற‌ வேலை மிச்சம்..‌. சரி அவனோட வீக்னஸ் லிஸ்ட் எடு, அதுல நமக்கு எதாவது யூஸ் ஆகுதான்னு பார்ப்போம்."


"ஆழி அந்த யுவ்ராஜ்க்கு அவனோட அப்பான்னா ரொம்ப மரியாதை. அவர் மேல இவனுக்கு பாசம் அதிகம், அவர் தான் இவனோட பெரிய வீக்னஸ்" 


"வாவ் இது ஒன்னு போதுமே… நம்ம அவனை தேடி போக வேணாம்… அவன் நம்மை தேடிட்டு வருவான். தேங்க்ஸ் பார் தி இன்ஃபர்மேஷன் முகில்" என்ற ஆழியை புரியாமல் பார்த்தான் முகில்.


"என்ன போலீஸ்கார் எப்பவும்போல இப்பவும் அவ சொல்றது புரியலையா?" என்ற சைத்துவை பார்த்து முறைத்த முகில்,


"ஆமா பின்ன… என்னைக்கு தான் நீங்க  மூணு பேரும் பேசுறது எங்களுக்குப் புரிஞ்சிருக்கு..‌. எப்பப்பாரு புரியாத மாதிரியே பேசுறது… என்ன பழக்க வழக்கமே" என்ற முகிலை பார்த்து அனைவருக்கும் சிரிப்பு வந்துவிட்டது.


"டேய் முகில், ஆழி சொல்றது, யுவ்ராஜ்க்கு அவன் அப்பா மேல இருக்க பாசத்தை யூஸ் பண்ணி,  அவன் அப்பாவை கிட்நாப்… ம்ஹீம் கிட்நாப் கூட வேணாம். அப்படி ஒரு பொய் சொல்லி அதுக்கு அவன் அப்பாவையும் ஆமான்னு சொல்ல வச்ச போதும். அவரை வச்சே அவனை தூக்கலாம்னு சொல்றா..‌. இப்ப உனக்குப் புரியுதா அவ என்ன சொல்றான்னு" 


"ம்ம்ம் ம்ம்ம் நல்லாவே புரியுது.‌.. ஆழி என்ன சொல்றான்னும் புரியுது..‌. நீ ஆழிய நல்லா புரிஞ்சி வச்சிருக்கேன்னும் புரியுது.‌‌.. ஆனா, இந்த மாற்றம் எல்லாம் எப்ப நடந்ததுனு தான் புரியல… ஒரு வேளை மதி அம்மா ப்ளான் ஒர்க்அவுட் ஆகிடுச்சா… அப்ப சீமந்தம் கன்ஃபார்ம்ம" என்றதும் ஆழி தலையை குனிந்து கொள்ள, ஆதவ் முகில் முதுகிலேயே ஒன்று வைத்தான்.


"இப்ப எதுக்குடா என்னை அடிச்ச??


"இப்ப மட்டும் நீ வாய மூடல… அடிக்க மாட்டேன். சைத்ரா இருக்கான்னு கூட பாக்காம, எட்டி ஒரே மிதி…" என்றவனை முறைத்தபடி எழுந்து விஷ்ணு அருகில் சென்றவன், 


"சம்திங் ராங்டா விஷ்ணு..‌. சம்திங் ராங்" என்று சொல்ல, 


"அங்க என்னடா சத்தம்?" 


"ம்ம்ம் நாங்க சும்மா ஏதோ பேசுறோம் நீ உன் வேலைய பாருடா" என்ற முகில் சைத்ரா அருகில் சென்று அவளை இடித்த படி உட்கார்ந்து அவன் காதல் பயிரை வளர்க்க ஆரம்பித்து விட்டான்.


"அப்ப யுவ்ராஜ் கிட்ட அவன் அப்பாவை கடத்திட்டோம்னு சொல்லி அவனை நம்ம சொல்ற இடத்துக்கு வர வைக்கணும்..‌. இல்ல ஆழி?" என்ற ஆதவை நிறுத்தினான் முகில்.


"இல்ல ஆதவ் அது சரியா வராது… கமிஷனர், விமல், சைலேஷ்க்கு அப்புறம் அடுத்து லிஸ்ட்ல  அவனா இருக்க சான்ஸ் இருக்கும்னு யோசிச்சு தானே, மும்பை வரேன்னு பொய் சொல்லி எல்லார் கவனத்தையும் அந்தப் பக்கம் திருப்பிட்டு பெங்களூர் வந்திருக்கான். இப்ப போய் நம்ம அவனை மிரட்டி நம்ம இடத்துக்கு வர சொன்னா, அதனால அவனோட உயிருக்கு ஆபத்து வரும்னு கூடவா அவன் யோசிக்க மாட்டான்"


"எஸ் ஆதவ், முகில் சொல்றது கரெக்ட் தான்… இவன மிரட்டினா எல்லாம் வேலைக்கு ஆகாது" என்றான் விஷ்ணு.


"அப்ப இதுக்கு என்ன தான் பண்றது?" என்று அனைவரும் யோசிக்க, ஆதவ் ஆழியை பார்க்க, அவன் பார்வையிலேயே அவன் மனதை படித்தவள், கண்களை மூடித் திறக்க, ஆதவ் அவளைப் பார்த்து சிரித்தபடி,


"அவனை மிரட்டி வர வைக்க முடியாது… ஆனா, பணம் கேட்டு அவனை பிளாக் மெயில் பண்ணி வர வைக்க முடியும். நீ எனக்கு பணம் குடுக்காட்டி உன் அப்பாவோட ஆப்போசிட் பார்ட்டிக்கு உன்னை பத்தின எவிடன்ஸ் எல்லாம் அனுப்பி உங்க அப்பாவோட அரசியல் வாழ்க்கையை மொத்தமா கவுத்துடுவோம்னு மிரட்டுவோம். அப்ப அவனுக்கு நம்ம பணத்துக்காக தான் அவனை பிளாக்மெயில் பண்றோம்னு கண்டிப்பா தோணும்… சோ அவன் அப்பாவுக்காக கண்டிப்பா வருவான்" 


"சூப்பர்டா ஆதவ். இதுதான் சரியான ரூட். இது பர்ஃபெக்ட்ட வேலை செய்யும். அவன் கண்டிப்பா வருவான்." என்ற முகில்,


"சரி எவ்ளோ பணம்  டிமான்ட் பண்ணலாம்னு டிசைட் பண்ணிட்டு, சட்டுன்னு அவனுக்கு ஃபோன் போடுங்க"


"டேய் நமக்கு பணம் முக்கியம் இல்ல… அவன் தான் முக்கியம்… சும்மா குத்துமதிப்பா ஒரு அமௌன்ட் கேக்க வேண்டியது தான்" 


"நோ விஷ்ணு… அது சரி இல்ல… நம்ம கேக்குற அமௌன்ட் நல்லா வர்த்தா இருக்கணும். அப்பதான் அவனுக்கு உள்ள ஒரு பயம் வரும். இல்லாட்டி நம்மளை சும்மா அமெச்சூர் அக்யூஸ்ட்னு நெனச்சிடுவான். அது நமக்கு தான் பிரச்சனை. நமக்கு பணம் தான் முக்கியம்னு அவன் நம்பணும்… பணத்துக்காக தான் இதை செய்றோம்னு அவன் நம்பினா தான் அவன் நம்ம கிட்ட சிக்குவான்." 



"ஆதவ் இஸ் ரைட். இது நீங்க நினைக்குற மாதிரி இல்ல, அவனும் சாதாரணமான ஆள் இல்ல… தன்னோட சுய உழைப்புல, இன்னைக்கு டாப் பிஸ்னஸ் மேன் லிஸ்ட்ல உக்காந்துட்டு இருக்கவன். நம்மள மாதிரி எத்தனையோ பேரை தாண்டி, ஏறி மிதிச்சிட்டு இந்த இடத்துக்கு வந்திருப்பான். சோ வீ ஹாவ் டூ பீ வெரி கேர்ஃபுல்… இப்ப நம்ம டிரம்ப் கார்டு அவன் அவனோட அப்பா மேல வச்சிருக்க அந்த கண்மூடித்தனமான பாசம் தான்… நம்ம அதை யூஸ் பண்ணா கண்டிப்பா அவனால வேற எதையும் யோசிக்க முடியாது. கொஞ்ச நேரத்துக்கு பிளாங்க் ஆகிடுவான். அந்த டைம்மை நம்ம யூஸ் பண்ணிக்கணும். அவனால அவங்க அப்பாவோட உயிர், அன்ட் அவரோட  கௌரவத்துல ரிஸ்க் எடுக்க முடியாது. சோ நம்ம வலையில கண்டிப்பா விழுவான்." என்ற ஆழியை பார்த்து அனைவரும் ஆமாம் என்று தலையாட்டினர்.


"சரி எவ்ளோ கேக்கலாம்?"


"ஒரு 50 லட்சம் கேக்கலாம் ஆழி" என்ற விஷ்ணுவை ஆழி முறைக்க, மீரா‌ தலையில் அடித்துக்கொண்டாள்.


"ஏங்க... ஏங்க நீங்க இப்படி இருக்கீங்க. அந்த யுவ்ராஜ் கதையை முடிக்க, நாங்க வாங்கி வச்சிருக்கோமே ஒரு கன்சைன்மெண்ட்,  அது எவ்ளோ லட்சம் தெரியுமா... நீங்க என்னடான்னா..." 


"எதே..‌. லட்சமா..‌. ஏய் நீ என்னடி சொல்ற…?"


"ஆமா பின்ன இல்லீகலா ஒரு பொருளை அதுவும் இது மாதிரி ஒன்னை நாடு விட்டு நாடு‌ எடுத்துட்டு வர்றதுன்னா என்ன சும்மாவா… அந்த பிரானா பீஷ் என்ன ரேட் தெரியுமா?" என்ற மீராவை அதிர்ச்சியாக பார்த்தான் விஷ்ணு.


"ஆமா நானும் ரொம்ப நாளா கேக்கணும்னு நெனச்சேன். நீங்க உங்க ஒரு அசைன்மென்ட் க்கு எவ்ளோ வாங்குவீங்க?" 


"இப்ப அது எதுக்கு டெப்டி… நீங்க போலீஸ் தான, என்னமோ ஐடி டிபார்ட்மெண்ட் மாதிரி வருமானம் எவ்ளோன்னு கேக்குறீங்க? நாங்க ஒழுங்கா டேக்ஸ் கட்ற ஆளுங்க தான் டெப்டி சார்" 


"ச்சீ ச்சீ… அதெல்லாம் ஒன்னும் இல்ல சைத்து, சும்மா தெரிஞ்சுக்கலாம்னு தான் கேட்டேன், சொல்லேன்."


"அது ஆளையும், ஆழி எடுக்குற ரிஸ்க்கையும் பொறுத்தது விஷ்ணு"


"ஓஓஓஓ அப்ப நார்மல் ஆளா இருந்தா என்ன செய்வீங்க மீரா?"  


"அசைன்மென்ட் எடுக்கவே மாட்டோம்… ஒன்லி ஹை புரோஃபைல் ஆளுங்க தான். அதுல அரசியல் ஆளா இருந்தா ஒன்னு இல்ல ரெண்டு கோடி ஆகும்… இல்ல பெரிய பிக் ஷாட்டா இருந்தா" எனும்போதே மீராவை கையெடுத்துக் கும்பிட்ட விஷ்ணு,


"போதும்மா போதும். ஒரு குக்கர் சாதப் பதத்துக்கு ரெண்டு விசில் பதம்" என்றவனை கேவலமாக ஒரு லுக்கு விட்ட மீரா… 


"ஆழி நீ சொல்லு எவ்ளோ டிமான்ட் பண்ணலாம்" 


"150 கோர்ஸ் (Crores) கேளு" என்றவள் எழுந்து செல்ல, மீராவும் சைத்துவும் ஆழி சொன்னதை செய்து முடித்தனர்.