ஆழியின் ஆதவன் 28

 ஆழி 28


"என்ன மூணு பேர் முகமும் பேயை பார்த்த மாதிரி இப்டி வெளுத்து போயிருக்கு, ஏனி ப்ராப்ளம்?‌ என்ற‌ யுக்தாவின்  குரலில் இயல்புநிலை வந்தவர்கள், "அதெல்லாம் ஒன்னு இல்ல யுக்தா, நாங்க நல்லா தான் இருக்கோம்" என்ற ஆதவன் குரலை செருமிக்கொண்டு, 


"சிட்டி கமிஷனர் சூசைட் தானா பண்ணிக்கிட்டாரு, நீ அதை கொ… கொலைனு சொல்றீயே?" என்ற ஆதவனை நிமிர்ந்து பார்த்த யுக்தா, "ஒருத்தர் அவருக்கு வாழ புடிக்கலைன்னு பண்ணிக்கறதுக்கு பேர் தான் தற்கொலை. யாரோ மிரட்டி அந்த மிரட்டலுக்கு பயந்து உயிரை விட்ட அதுக்கு பேர் தற்கொலை இல்ல ஆதவ் கொலை… இதுதான் கமிஷனர் கேஸ்ல நடந்திருக்கு." என்ற யுக்தாவின் பதிலில் நெஞ்சில் நீர் வற்றி போனது மூவருக்கும்.


"என்ன யுகி சொல்ற? அப்ப கமிஷ்னர் சூசைட் பண்ணிக்கலயா?" என்று ஆதி கேட்க, 


"அதை உன்னோட அருமை ப்ரண்ட்ஸ் கிட்ட கேளு ஆதி" என்ற பதில் அவள் கணவனுக்காக இருந்தாலும் அவள் அழுத்தமாக பார்வை மட்டும் ஆதவன், விஷ்ணு, முகில் மேலேயே இருந்தது.


மனைவியை நன்கு புரிந்து வைத்திருக்கும் ஆதிக்கு அவள் சொல்ல வருவதை புரிந்து கொள்ள அதிக நேரம் தேவைப்படவில்லை.


"சோ நீ இவங்க மூணு பேரை பார்க்கணும்னு சொன்னதுக்கும், இந்த கேஸ்கும் சம்பந்தம் இருக்கு, இட் மீன்ஸ், ஒன்னு கொலையை இவனுங்க செஞ்சிருக்கணும், இல்ல கொல பண்ண ஆளை இவங்களுக்கு தெரிஞ்சிருக்கணும்,‌ சோ இது ஒரு அன் ஆபீஷியல் இன்வஸ்டிகேஷன்,‌ ஆம் ஐ ரைட் யுகி?" என்ற கணவனை இதழில் புன்னகையுடன் திரும்பி பார்த்தவள் அவன் கேள்விக்கு ஆம் என்பது போல் இமைகளை மூடி திறந்தாள்.


ஆதியும், யுக்தாவும் மூவரையும் நேருக்கு நேர் பார்த்தபடி இருக்கு, யுக்தாவிடம் எதையும் மறைத்து பொய் சொல்வது முட்டாள்தனம் என்று நன்கு புரிந்து மூவரும் அமைதியாக இருந்தனர்.


ஆதி பொறுத்து பொறுத்து பார்த்து பொறுமைய இழுத்தவன், "இன்னும் எவ்ளோ நேரம்டா இப்படியே எங்க மூஞ்ச பாத்துட்டு இருக்க போறீங்க…? யுகி ஒரு கேஸ் பத்தி முழுசா தெரியாம எந்த முடிவுக்கும் வர மாட்டா… அவ உங்க குற்றவாளினு சொல்லல, சோ இதுல வேற என்னமோ இருக்கு" என்ற ஆதிக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் தவித்த ஆதவ்,


"யுக்தா சொன்னது உண்மைதான் ஆதி, எங்களுக்கு இந்த கொலையில் தொடர்பு இருக்கு, இதுக்காக நீங்க சட்டப்படி எந்த ஆக்சன் வேணும்னாலும் எடுத்துக்கங்க…‌ நாங்க அதை பேஸ் பண்ணிக்கிறோம்" என்ற விஷ்ணுவை ஆதி முறைக்க, 


"ப்ளீஸ்டா ஆதி இதுக்கும் மேல எங்களா எதுவும் கேட்காத" என்ற ஆதவனை அழுத்தமாக பார்த்த யுக்தா, "ஆமா ஆதி இதுக்கு மேல இவங்கள கேக்க ஒன்னும் இல்ல… நீ வா நம்ம போய் கேட்க வேண்டிய ஆளை கேட்போம்" என்ற யுக்தாவை ஆதி புரியாமல்  பார்க்க, 


அதற்குள், "நீ… நீங்க யார பாக்கணும்? நாங்க தான் இதெல்லாம் செஞ்சதுன்னு  சொல்றோமே, அப்புறம் என்ன? என்று பதறிய முகிலை பார்த்து சன்னமான சிரித்த யுக்தா, "ம்ம்ம் என்ன ஒரு பதட்டம் முகில் உனக்கு… அவ்ளோ லவ் உங்க ஆள் மேல… செம்ம… நீங்க மூணு பேரும் பெரிய காதல் மன்னனுங்க தான்" என்று நக்கலாக சொன்னவள், உணவு மேசையில் இரண்டு கைகளை ஊன்றியபடி எழுந்து நின்று, "இப்ப இந்த மூணு காதல் மன்னர்களோட  மன்னிகளை, ஐ மீன் உங்க அந்த த்ரீ ரோசஸை பாக்க போலாமா?" என்ற யுக்தாவின் வார்த்தைகள், ஆண்கள் மூவரின் வாழ்க்கையையும் கேள்விக்குறி ஆக்கியது.


மீராவும் சைத்தராவும் தங்கள் லேப்டாப்பில் யுவ்ராஜ் பற்றி விவரங்களை பார்த்துக் கொண்டிருக்க, ஆழி குழந்தை நிலாவுக்கு கதை சொல்லி உணவு ஊட்டிக் கொண்டு இருந்தாள். அந்த நேரம் வீட்டின் காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்டு,‌ சைத்ரா எழுந்து சென்று கதவை திறந்தவள், அங்கே நின்ற முகிலை பார்த்து முகம் மலர்ந்து சிரித்தவள் முகம் முகில் பின்னாடி மார்புக்கு குறுக்கே கைகளை கட்டிக்கொண்டு நின்ற யுக்தாவை பார்த்ததும் சிரிப்பு இருந்த இடம் தெரியாமல் எங்கோ சென்று ஒளிந்து கொள்ள, "ஆழி" என்று சத்தமாக கத்தி விட்டாள்.


மீராவும் ஆழி  என்னமோ ஏதோ என்று ஓடிவர அங்கே இவர்கள் மூவரையும் முறைத்தபடி வாசலில் நின்ற யுக்தாவை பார்த்து மீரா அதிர, ஆழி கையில் இருந்த உணவு தட்டு டமார் என்று விழுந்து உணவு தரை முழுவதும் தெறித்தது.


யுக்தாவின் அழுத்தமான காலடிகள் ஆழியை நோக்கி வர, ஆழி கால்கள் பின்னோக்கி சென்றது. முதல் முறையாக ஆழியின் முகத்தில் பயத்தை பார்த்த ஆதவனுக்கும் அதிர்ச்சி தான். அங்கு என்ன நடக்கிறது என்று ஆண்கள் நால்வரும் புரியாமல் நிற்க, நடக்கப்போவது தெரிந்த பெண்கள் மூவரும் பதட்டத்தில் செயலிழந்து நின்ற நேரம், 'பளார்' என்று கேட்ட சத்தத்தில் அனைவரும் அதிர்ந்து பார்க்க, அடிவாங்கிய  கன்னத்தை தன் கையில் பற்றிக்கொண்டு யுக்தா முன்பு தலை குனிந்து நின்றாள் ஆழினி.


"யுக்தா" என்று சத்தமாக கத்திய ஆதவன், ஓடிவந்து ஆழியை இழுத்து தன் முதுகுக்கு பின்னால் நிறுத்திக்கொண்டு, "ஹவ் டேர் யு, எவ்ளோ தைரியம் இருந்தா, இவ மேல கை வைப்ப…? நீ யாரு இவளா அடிக்க?"  என்று ஆதவன் ஆத்திரத்தில் குதிக்க, யுக்தா மேலிருந்து கீழாக அவனை நக்கலாக ஒரு பார்வை பார்த்தவள்,


"அத கேக்க நீ யாரு மேன்? அவளுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்? அவளை அடிச்ச நீ ஏன் இந்த குதி குதிக்கிற?" என்று புருவத்தை உயர்த்தி கேட்கும் யுக்தாவை முறைத்த ஆதவன், தங்கள் தோழிக்கு ஒன்றென்றால் முதலில் வந்து நிற்கும் மீராவும் சைத்ராவும் திருட்டு முழி முழித்துக் கொண்டு ஒரு ஓரமாக பம்மிக் கொண்டு நிற்பதை பார்க்க தவறியவன், "எனக்கு எல்லா உரிமையும் சம்பந்தமும் இருக்கு, நான் அவ புருஷன், அவ என் பொண்டாட்டி" என்றான் அழுத்தமாக.


யுக்தா நக்கலாக, "ஒஒஒ இவங்க உங்க பொண்டாட்டியா….? ம்ம் சூப்பர் சூப்பர், நல்ல ஜாடிக்கு ஏத்த மூடி தான்" என்றவள், ஆதவன் முதுகுக்கு பின்னால் இருந்த ஆழியை எட்டி பார்த்து, "இப்டி வந்து என் முன்னாடி நில்லுடி" என்று முறைப்பாக சொல்ல, ஆதவன் தன் கைகொண்டு ஆழியை இன்னும் தன் பின்னால் மறைத்துக் கொண்டு, "அவ வரமாட்ட… என்ன சொல்லணுமே அத என்கிட்ட சொல்லு" என்றான் அவன்.


யுக்தாவின் பேசிலும் நடவடிக்கையிலும் அவள் மனதில் என்னமோ இருக்கிறது என்று புரிந்து கொண்ட ஆதி, ஆழி அடி வாங்கியதை பார்த்து பயந்து அழுதுகொண்டிருந்த குழந்தை நிலாவை தூக்கி மடியில் வைத்துக்கொண்டு சமாதானப்படுத்தி படி, குழந்தையுடன் அமைதியாக அங்கிருந்து சோஃபாவில் உட்கார்ந்து கொண்டு நடப்பதை வேடிக்கை பார்த்துக் ஆரம்பித்துவிட்டான்.


ஆதவன் பதிலில் ஆழியை பார்த்து இன்னும் பலமாக முறைத்த யுக்தா, "ஏய் இப்ப நீ என் முன்னாடி வரியா இல்லயாடி" என்று சத்தமாக சொல்ல, ஆழி சட்டென்று ஆதவன் கைகளை உதறி விட்டு யுக்தா முன் வந்து நின்றாள். 


ஆழி தன் கையை உதறிவிட்டு வந்த பொறுத்துக்கொள்ள முடியாத ஆதவ், "ஆழி நீ எதுக்கும் பயப்படாத, இவங்களால உங்க மூணு பேரையும் ஒன்னு செய்ய முடியாது. எல்லாத்தையும் நாங்க பாத்துக்கிறோம்" என்று மீண்டும் ஆழியின் கையைப் பிடித்து தன் பக்கம் இழுக்கப் பார்க்க, ஆழியின் மற்றொரு கை யுக்தாவின் இரும்பு பிடியில் சிக்கி இருந்தது.


"மிஸ்டர். ஆதவன் நான் இங்க நிக்கும் போது உங்க இந்த பொண்டாட்டி மட்டும் இல்ல, அதோ நிக்குதே ரெண்டு, அதுங்களும் வேற யார்  பேச்சையும் கேக்காதுங்க… வேணும்னா முயற்சி பண்ணி பாருங்க" என்று கெத்தாக சொன்னவள், திரும்பி பார்த்து, "ஆமா தானடி?" என்று பெண்களை கேட்க மீரா, சைத்ரா தலை ஆமாம் என்று வேக வேகமாக மேலும் கீழும் ஆடியது.


தன் முன் தலை குனிந்து நின்ற ஆழியின் நாடியை பிடித்து அவள் முகத்தை உயர்த்தி தன்னை பார்க்கும்படி செய்த யுக்தா, அவள் கண்ணைப் பார்த்து "நா சொன்னது கரெக்ட் தானா ஆழி" என்றது தான் "சமிக்கா" என்று கத்தியபடி யுக்தாவை இறுக்கி கட்டிக்கொண்டு, "சாரிக்கா… சாரி. நாங்க உங்களுக்கு பண்ண சத்தியத்தை மீறிட்டோம். ஆ… ஆனா… நாங்க வேணும்னு செய்யல… ஆஷா… ஆஷாக்காக தான்" என்று கதறி அழ ஆரம்பித்துவிட்டாள் ஆழினி. 


யுக்தா ஆதரவாக அவள் முதுகை தடவிக் கொண்டே திரும்பி மீரா, சைத்ராவை பார்க்க, இருவரும் சட்டென  தன் கைகள் இரண்டையும் தங்கள் கன்னத்தை மறைப்பது போல் வைத்து கொண்டனர். 


ஆழிக்கு அடுத்து பூசை தங்களுக்கு தான் என்று  தெரிந்து கைக்கொண்டு தங்கள் கன்னத்தை காப்பாற்றிக்கொள்ள பார்க்க, அதை பார்த்த யுக்தாவுக்கு சட்டென சிரிப்பு வந்துவிட்டது. சிரித்த முகத்துடன் இருவரையும் நோக்கி கண்களால் "வா" என்று சமிக்ஞை செய்ய, "அக்கா என்று கத்திகொண்டே வந்த இருவரும் யுக்தாவை கட்டிக்கொள்ள, மூன்று பேரையும் தன் கையெனும் சிறகுகளில் அடக்கிக் கொண்டாள் யுக்தா…


ஆதவ், முகில், விஷ்ணு மூவரும், "இல்ல எனக்கு புரியல" என்ற ரேஞ்சில் முழித்துக் கொண்டு நிற்க, 


"டேய் அங்க எதுக்குடா வெட்டிய நின்னுட்டு இருக்கீங்க, இங்க வந்து என் பக்கத்தில் உக்காருங்க, அதுங்க நாலும் அவங்க கட்டிப்புடி வைத்தியத்தை முடிச்சிட்டு வந்து நமக்கு பிளாஷ் பேக் சொல்லுவாங்க, அதுவரை இப்டி உக்காந்து வேடிக்க பாருங்க" என்றவன் மீண்டும் நிலாவுடன் விளையாட தொடங்கிவிட, யுக்தா தன்னை ஓட்டும் கணவனை செல்லமாக முறைத்தபடி அவன் அருகில் வந்து அமர, அவள் அருகில் வந்து அமர்ந்து கொண்டனர் ஆழி, மீரா, சைத்ரா மூவரும்.


லேசாக விசும்பிக் கொண்டிருந்த நிலாவை ஆழியிடம் கொடுத்த ஆதி, "சோ உனக்கு இவங்க மூணு பேரையும் முன்னாடியே தெரியும்! அப்டி தானா யுகி?" என்று கேட்டான்.


"ம்ம்ம்… ஆமா ஆதி, எனக்கு இவங்க மூணு பேரையும் ரொம்ப வருஷம் முன்னையே தெரியும், " என்று இழுத்து மூச்சு விட்டபடி, "இவங்களை முதல் முதல்ல பார்த்த நாள் இன்னும் மனசுல அப்டியே ஆழியாம இருக்கு" என்றவள் நினைவுகள் இவர்களை முதன் முதலில் பார்த்த நாளுக்கு சென்றது.



"அது நான் ஐபிஎஸ் முடித்திருந்த சமயம், அண்டர் கவர் ஆப்ரேஷன்ல ஒரு பெரிய சமுக விரோத கும்பலை பிடிக்க நானும், என் ப்ரண்ட் நிஷாவும் மும்பை போனோம், கிட்டத்தட்ட ஒரு வருஷம் போராடி அந்த கும்பல் பத்தி இஞ்ச் இஞ்சா அலசி, தோண்டி துருவி கடைசிய அவங்க கும்பலை வளைச்சு பிடிச்சோம். அப்ப தான் அங்க தான் இவங்க மூணு பேரையும் நான்  முதல் முறைய பாத்தோம்" என்ற திரும்பி ஆழி முகத்தை பார்த்து,


"எந்த கோலத்தில் இவளா நான் பார்த்தேன் தெரியுமா ஆதி?" என்றவளுக்கு அன்று ஆழியை பார்த்த நிமிடத்தில் ஏற்பட்ட அதே பதட்டம் இப்போது அந்த நொடியை நினைத்து அவள் உடல் அதிர்ந்து அடங்கியது. ஆதி அவள் தோளில் கையை அழுத்த, அந்த ஸ்பரிசத்தில் உணர்வு பெற்றவள், "எந்த கேங்க பிடிக்க நான் போனேனோ அந்த கேங் லீடரோட தலைமுடியை ஒரு கையில் புடிச்சிட்டு, மறு கையால் அவன் கழுத்தை ஒரே வெட்ட வெட்டிட்டு கோவமா நின்ன பாரு… ப்பாஆஆ…, அப்ப பார்த்த இவ முகம் இன்னும் என் மனசுல இருந்து மறையல ஆதி… அன்னைக்கு அவ கண்ணுல நான் பாத்த கோவம்… ஸ்ஸ்ஸ்… இப்ப நெனச்சாலும், ஐ கார்ட் எக்ஸ்பிளைன் இட் ஆதி" என்க,


அந்த நிமிடம் ஆண்கள் நால்வரின் பார்வை ஆழி மேல் ஒரு மிரட்சியுடன் படிந்திருந்ததை பார்த்த யுக்தா, "அந்த நிமிஷம் இவளை பாத்து எனக்கு செம கோவம் வந்துச்சு ஆதி, ஒரு சின்ன பொண்ணுக்குள்ள இவ்ளோ கொலைவெறியான்னு. பட், அடுத்த செகண்ட் இவளுங்க ரெண்டு பேரும் ஓடி வந்து இவளை கட்டிபிடிச்சு அழுததை பார்த்ததும் எனக்கு உள்ளுக்குள் ஏதோ ஒரு ஃபீலிங், இவங்களை பாத்தி தெரிஞ்சுக்கனும்னு தோணுச்சு, சோ அந்த இடத்தில் இருந்து எங்க கூட வந்த மத்த போலீஸ் யாருக்கும் தெரியாம நானும், நிஷாவும் இவங்க மூணு பேரையும் வெளிய கொண்டு வந்து ஒரு சேஃப்டியான பிளேஸ் வச்சிட்டு அந்த கேங்கை மொத்தம முடிச்சிட்டு இவங்ககிட்ட வந்தோம்" என்ற யுக்தா அருகில் வந்த சைத்ரா அவள் கால்கள் அருகில் அமர்ந்து யுக்தா மடியில் தலையை சாய்த்து கொள்ள, யுக்தா மெதுவாக அவள் தலையை வருடி விட, சைத்ரா கண்களில் வழிந்த கண்ணீர் யுத்தா ஆடையுடன் சேர்த்து முகிலின் நெஞ்சையும் நனைத்தது.


"இவங்க மூணு பேரோட பழைய வாழ்க்கை, அவங்க கடந்து வந்த கஷ்டங்களை கேட்ட சமயம் உண்மையாக நான் ஒடஞ்சிட்டேன் ஆதி… இந்த சின்ன வயசுல ஏன் இவங்க வாழ்க்கை இப்படி ஆச்சி? ஏன் இந்த சமுதாயம் இவங்களுக்கு இப்படி ஒரு கஷ்டத்தை குடுத்துச்சினு எனக்குள்ள அப்படி ஒரு கோவம்… இவங்களுக்கு எதாவது செய்யணும்னு தோணுச்சு, அப்ப தான் இவ" என்ற ஆழியை காட்டி, "நான் செஞ்ச கொலைக்கு என்னை ஜெயில்ல போடுங்க ஆனா, இவங்க ரெண்டு பேரை மட்டும் எங்கயாது பாதுகாப்பான இடத்தில் சேர்த்துடுங்க… அதுக்கு பதில் நீங்க என்ன சொன்னாலும் கேக்குறேன்… தூக்குல தொங்க சொன்னாலும் தொங்குறேன்னு எம் முன்னாடி முட்டி போட்டு கையெடுத்து கும்பிட்டு அழுதவளை பார்த்த செகண்ட், இவளா அந்த மலமாட்டை கழுத்தறுத்து போட்டான்னு எனக்கே சந்தேகம் வந்திடுச்சு, இவ இப்படி கொஞ்சினா, இதுக்க ரெண்டும், அவ எங்களுக்காக தான் இத செஞ்ச ப்ளீஸ் அவளை விட்ருங்க… எங்களை என்ன வேணும்னாலும் செய்ங்கன்னு ஒரே அழுகை," என்று சொல்ல, ஆதிக்கு இவர்களை மூவரையும் பார்க்க அத்தனை வியப்பாக இருந்தது. 


"அப்டி ஒரு சிட்டுவேஷன்ல கூட ஒருத்தரை ஒருத்தர் விட்டு கொடுக்காம இருந்த இவங்க மூணு பேரையும் எனக்கு ரொம்ப புடிச்சு போச்சு ஆதி. பரதன் மாமா ஹெல்ப் பண்ண, இவங்க மூணு பேருக்கு எந்தவித பாதிப்பும் இல்லாம வெளிய கொண்டு வந்தேன். அப்ப தான் வேற கேஸ் விஷயம நான் வேற ஊருக்கு போக வேண்டி வந்தது… சரி இவங்க  படிச்சிருக்காங்க, அவங்க வாழ்க்கையை அவங்க பாத்துப்பாங்கன்னு நெனச்சு எனக்கு தெரிஞ்ச இடத்தில் வேலை வாங்கி குடுத்துட்டு நான் கேஸ்காக வேற ஊருக்கு போய்ட்டேன், அது தான் நான் என் வாழ்க்கை செஞ்ச மிகப் பெரிய தப்புன்னு அதற்கப்பறம் தான் ஆதி எனக்கு தெரிஞ்சது. இவங்க இப்படி இருக்க ஒரு வகையில் நானும் ஒரு காரணமாயிட்டேன்" என்றவள் குரலில் குற்றவுணர்வு அப்பட்டமாக தெரிய, ஆழி ஓடி வந்து அவளை கட்டிக் கொண்டவள்,


"இல்லக்கா… நீங்க எந்த தப்பும் செய்யல… எல்லாம் எங்க விதி… எங்க தலையெழுத்து எங்க போனாலும் விடாம எங்களை விரட்டி அடிச்சதுக்கு நீங்க என்ன செய்ய முடியும்" என்று யுக்தாவை சமாதானம் செய்ய, 


"நான் இவங்களை விட்டு வந்தது எந்த கேஸ்காக தெரியுமா ஆதி?" என்று ஒரு வித இறுக்கமான குரலில் கேட்க, ஆதிக்கு புரிந்து விட்டது அவள் என்ன சொல்ல வருகிறாள் என்று. 

ஆதி தன் தோளோடு அவளை அணைத்துக் கொண்டு, "ரிலாக்ஸ் யுகி ரிலாக்ஸ்" என்று அவள் தன் நெஞ்சோடு அணைத்துக் கொள்ள யுக்தா இயல்புக்கு வந்தாள்.


"அந்த கேஸ்னால என் வாழ்க்கையே தலைகீழாக மாறி போயிடுச்சு, என்னை நானே மீட்டெடுக்க எனக்கு டைம் தேவைப்பட்டுச்சு, அதனால் நான் ரெண்டு வருஷம், வேலையை விட்டு,  என் மேல உயிரையே வைத்திருந்த என் குடும்பத்தை விட்டு யாருக்கும் தெரியாத இடத்துக்கு  போய்ட்டேன்" என்றவள் ஆதியை திருப்பி பார்த்து, " அதுக்கு அப்புறம் நடந்தது எல்லாம் உனக்கு தான் தெரியுமே, அப்பறம் நான் திரும்பி ‌ டியூட்டில ஜாயின் பண்ண அப்புறம், ஒரு கேஸ்காக மும்பை போயிருந்தேன். அப்ப இவங்க மூணு பேரையும் அவங்க வேலை செய்ற இடத்துக்கு பாக்க போனேன். ஆனா, இவங்க வேலைக்கு சேர்ந்த கொஞ்ச நாள்ளயே அங்க ஏதோ பிரச்சினை ஆகி வேலையை விட்டு போயிட்டாங்க ன்னு சொன்னாங்க, எனக்கு சந்தேகம் வந்து அந்த ஓனரை மிதிச்சு கேட்டப்பே தான், அவனோட பையன் மீரா கிட்ட தப்ப நடக்க டிரை பண்ண, ஆழியும் சைத்துவும் அவனை தூக்கி போட்டு மீதிச்சு, அது பிரச்சினையாகி அவங்க வேலையை விட்டு போய்ட்டத சொன்னான். மழை விட்டும் தூவானம் விடலைன்ற மாதிரி இவங்களுக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குதுன்னு விதியை திட்டிட்டே, இவங்களை தேடி பார்த்தேன். பட், இவங்களை பாத்தி எந்த தகவலும் கிடைக்கல… அந்த நேரம் ஒரு கேஸ்ல போலீஸ் தலையிடாமல் சில ஹய் ப்ரொபைல் கிரிமினல்ஸ் சில பேரை அன் ஆபீஷியல்ல முடிக்க வேண்டி இருந்தது. இதுல நானோ நிஷாவோ தலையிட கூடாதுன்னு மேல இருந்து ஸ்ட்ரிக்ட் ஆர்டர், சோ பைய்டு கில்லர்ஸ் வச்சு அவங்க கதையை முடிக்கலாம்னு நெஞ்சு, எந்தவித எவிடென்ஸூம் இல்லாம பெர்பெக்ட்ட வேலை முடிக்கிற ஆளை தேடும் போது" என்றவள் பேச்சு நிற்க, அவள் சொல்லாமலே என்ன நடந்திருக்கு என்று மற்றவருக்கு புரிந்தது.


"ஐ வாஸ் ஷாக்டு ஆதி… இவங்க மூணு பேரை அப்டி பார்த்தது சத்தியமா என்னால் அதை ஜீரணிக்கவே முடியல… வந்த கோவத்தில் இதுங்க செவுலலயே நாலு விட்டேன்" என்றது தான் சைத்ரா கை தன்னால் அவள் கன்னத்தை இறுக்கிப் பிடித்துக் கொண்டது.


"அதுக்கு பிறகு இவங்க சொன்னதை கேட்ட அப்பறம் தான் நான் இவங்களை மும்பைலையே விட்டு வந்தது எவ்ளோ பெரிய தப்புன்னு புரிஞ்சிது. இவங்க படிச்ச படிப்பு இவங்களுக்கு துணைய இருக்கும்னு யோசிச்சு நான், இயற்கை இவங்களுக்கு கொடுத்த இந்த அழகு இவங்களுக்கு வினையா முடியும்னு யோசிக்க தவறிவிட்டேன். ஆத்துல இருந்து காப்பத்தி கடல்ல புடிச்சி தள்ளின மாதிரி ஆயிடுச்சு "  என்ற யுக்தாவின் கண்கள் கலங்கிட, சைத்ரா வேகமாக வந்து அவள் கண்ணீரை துடைத்தாள்.


"இதுல உங்கு தப்பு எதுவும் இல்லக்கா, நீங்க எங்களுக்கு நல்லது தான் நெனச்சிங்க, "என்று பெருமூச்சு விட்டாள், "ஆனா விதி வேற பாதையில் எங்கள கதற கதற இழுத்துட்டு வந்துடுச்சு, அதுல இருந்து எங்களை மீட்க தெய்வம் மாதிரி நீங்க வந்தீங்க, உங்களை பாத்த அப்பறம் இதெல்லாம் விட்டு ஒதுங்கி நினைச்ச நேரம் தேவதை மாதிரி ஆஷா எங்க வாழ்க்கையில் வந்த, அவளை பாத்த அப்பறம் எங்களுக்கும் அவளா மாதிரி அமைதியான ஒரு வாழ்க்கையை வாழணும்னு ஆசை வந்தது. ஆனா…"  என்று அவள் விசும்பு, யுக்தா அவள் முதுகை மெல்ல வருடி விட்டாள்.


"ஆஷாவோட சாவு மறுபடியும் எங்களை  பழைய மாதிரி மாத்திடுச்சி, அவளை இல்லாம செஞ்ச ஒருத்தனையும் விடக்கூடாதுன்னு முடிவு செஞ்சோம். இது உங்களுக்கு தெரிஞ்ச கண்டிப்பாக எங்களை தடுக்க பாப்பீங்கன்னு தான், நாங்க எல்லாத்தையும் உங்ககிட்ட இருந்து மறச்சோம்." என்ற ஆழியின் முகத்தை பார்த்து மெதுவாக தலையாட்டி யுக்தா,


"இந்த கேஸ்காக நான் இங்க வந்து இன்வெஸ்டிகேஷன் ஸ்டார்ட் பண்ணும்போது இதுக்கு பின்னாடி நீங்க இருப்பீங்கன்னு நெனச்சு கூட பாக்கல ஆழி, முதல்ல அந்த விமல் பத்தி தெரிஞ்ச போது, டு பீ  ஹானஸ்ட் இவன் என் கையில் கிடைச்ச துண்டு துண்ட வெட்டி நாய்க்கும், நறிக்கும் போடணும்னு நெனச்சேன்" என்று சொல்ல,‌ சட்டென ஆதவ், விஷ்ணு, முகில் மூவரின் பார்வையும் ஆழி மேல் அழுத்தமாக விழ, ஆழி தலையை குனிந்து கொண்டாள்.


"ஏய்‌ என்னடா ஆச்சு? தீடிர்னு ஏன் மூணு பேரும் அந்த பொண்ணை அப்படி பாக்குறீங்க?" என்று ஆதி கேட்க,


"ம்ம்ம் அக்கா, தங்கச்சி குள்ள  இருக்க வேல் லென்த் பத்தி நெனச்சு தான் இப்படி பாக்குறோம்" என்று முகில் சொல்ல,‌ ஆதியும், யுக்தாவும் புரியாமல் பார்க்க,‌ ஆழி அந்த விமலை செந்நாய்களுக்கு படையலிட்டதை சொல்ல,‌ இந்த முறை ஆழியை அதிர்ச்சியாக பார்ப்பது யுக்தா, ஆதி முறையானது. கூடவே  அடுத்தடுத்து நடந்த அனைத்தையும் முகில் சொல்லி முடிக்க, அதை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தாள் யுக்தா. 


"நான் இந்த கேஸ்ஜபத்தி விசாரிக்கும் போது விமல் பின்னாடி அவன் அப்பனும் அந்த சைலேஷ் இருக்குறது தெரிஞ்சிது, கூடவே ஆதவன் தான் அந்த கேஸ் ஆபிசர்னு தெரிஞ்சிது,‌ அந்த கேஸ் டீல் பண்ணும்போது அவர் பொண்டாட்டி ஆக்சிடென்ட்ல இறந்ததால் அந்த கேஸ்ல இருந்து இவர் விலக்கிட்டாத சொன்னாங்க, இவரை கேஸ்ல இருந்து தூக்கியது இறந்து போன கமிஷ்னர். நான் அந்த ஆங்கில்ல கேஸ் பத்தி விசாரிக்கும் சமயம், விஷ்ணு இறந்த  ஆஷாவோட அண்ணானு தெரிஞ்சிது. கூடவே முகில் இவங்க ஃப்ரெண்ட் வேற… சோ ஒரு வேலை ஆதவன், விஷ்ணு, முகில் சேர்ந்து விமல், அவன் அப்பன் விஷயத்தில் எதாவது செஞ்சிருப்பாங்களோன்னு‌ ஒரு சின்ன டவுட் வந்தது. சோ இவங்க மூணு பேரையும் வாட்ச் பண்ணேன். பட் இவங்களை வாட்ச் பண்ண கொஞ்ச நாள்ளயே இவங்க இதுக்கொல்லம் சரிபட்டு வரமாட்டாங்கன்னு தெரிஞ்சிடுச்சு" என்றது தான் அனைவரும் வாய்விட்டு சிரித்து விட, சம்பந்தப்பட்ட மூவரும் யுக்தாவை உஷ்ண பார்வை  பார்த்துக் கொண்டிருந்தனர்.


"ஏய் ஏய்… நான் அப்படி மீன் பண்ணல… நீங்க மூணு பேரும் எதுவா இருந்தாலும் சட்டப்படி மூவ் பண்ற ஆளுங்க, உங்களால் இப்டி பிளான் பண்ணி கொல எல்லாம் செய்ய முடியாது, அதுவும் சுத்தமா ஒரு எவிடன்ஸ் கூட இல்லாம உங்களால் இத செய்ய முடியாதுன்னு தோனுச்சு, இருந்தாலும் எதுக்கும் இருக்கட்டும்னு உங்களை வாட்ஸ் பண்ண ஆள் வச்சேன். அப்ப தான் ஆழி உங்க கூட இருக்கான்னு தெரிஞ்சிது. ஆஷா பத்தி இவங்க மூணு பேரும் என்கிட்ட சொல்லி இருக்காங்க, அந்த பொண்ண பாத்த அப்றம் அவளை மாதிரி வாழனும்னு ஆசைய இருக்குன்னு சொல்லி கேட்டிருக்கேன். அப்றம் என்ன ஒன்னும் ஒன்னும் ரெண்டா தானா இருக்கு முடியும். சோ ஆஷாக்காக ஆழி தான் இதெல்லாம் செய்றான்னு புரிஞ்சிக்கிட்டேன்."


"ஆமா சமி க்கா… எங்க மூணு பேருக்கும் வாழ்ற ஆசைய கொடுத்தா, அவ செத்து எனக்கு உயிரையே கொடுத்தா, எல்லாத்துக்கும் மேல" என்ற ஆழி திரும்பி நிலாவையும் ஆதவனையும் பார்த்தவள், "எனக்கு அழகான உறவுகளையும் குடுத்திருக்க" என்று சொல்ல, அந்த வார்த்தையில் ஆதவன்  மனம் நிறைய ஆழியை பார்க்க, சட்டென் சுதாரித்த ஆழி, "நிலா பாப்பா எனக்கு கிடைச்ச வரம், அதோட மதிம்மா எம்மேல அவ்ளோ அன்பு வச்சிருக்காங்க" என்றவளை இப்போது ஆதவன் முறைத்து பார்க்க, இருவரின் பார்வையின் பாவத்தின் பொருள் உணர்ந்து கொண்ட யுக்தா, "அப்ப நிலா, அவ பாட்டி மட்டும் தான் உனக்கு உறவா, அப்ப ஆதவ் ஆட்டத்துல இல்லையா?" என்று குறும்பாக கேட்ட, 


"அப்டி கேளு யுக்தா? என்னை பெத்த எங்கம்மா வேணும், நான் பெத்த என் பொண்ணு வேணும் ஆனா, நான் மட்டும் ஆரோவாம்" என்ற ஆதவனின் பேச்சில் அனைவரும் சிரித்துவிட, ஆழி முகம் மட்டும் இறுகி இருந்தது. அதை மற்றவர் கவனிக்காமல் இருந்தாலும் யுக்தா கண்ணுக்கு தப்பவில்லை.


"ஓகே ஓகே, நிறைய அரட்டை அடிச்சாச்சு… வாட் நெக்ஸ்ட்?" என்ற ஆதியை திருப்பி பார்த்த ஆதவ், "இந்த கேஸ்ல கமிஷ்னர், விமல்,‌ சைலேஷ் எல்லாம் வெறும் துரும்பு தான்டா. இவனுங்களுக்கு பின்னாடி யார் இருக்கான்னு தெரிஞ்ச நீங்க ஷாக் ஆகிடுவீங்க" என்ற விஷ்ணு, யுவராஜ் பேரை சொ


ல்ல வர, அதற்குள் "தி கிரேட் பிசினஸ் லெஜண்ட் யுவராஜ்"  என்ற யுக்தாவின் குரல் கம்பீரமாக ஒலித்தது.