ஆழியின் ஆதவன் 27

 


ஆழி 27



ஆழி அமைதியாக அமர்ந்திருக்க, அவள் மடியில் உறங்கிக் கொண்டிருந்தாள் குழந்தை வெண்ணிலா. 


"என்னாச்சு ஆழி உனக்கு? ஏன் ஒரு மாதிரி இருக்க… இஸ் எவ்ரிதிங் ஓகே?" என்ற மீராவை நிமிர்ந்துப் பார்த்த ஆழியின் கண்கள் கலங்கி இருந்தது.


"ஏய் ஆழி என்ன இது? எதுக்கு உன் கண்ணு கலங்குது" என்றபடி அவள் அருகில் வந்த சைத்ரா அவள் கண்ணைத் துடைத்து விட, அவள் கையை தன் கன்னத்தோடு அழுத்திக்கொண்டாள் ஆழினி.


"ஏன் சைத்து இப்படி எல்லாம் நடக்குது… ஏன் அந்த யுவ்ராஜ் ஆஷாவை கொன்னான்? ஏன் ஆஷா இதயம் எனக்குள்ள துடிக்கணும்? ஏன் நிலா பாப்பா என் மேல இவ்ளோ பாசமா இருக்கணும்? ஏன் ஆதவ் என்னை விரும்பணும்… ?அவர் காதலுக்கு துளி கூட தகுதி இல்லைனு தெரிஞ்சு, ஏன் எனக்கு அவர் மேல... நேத்து நான் ஏன்‌ அப்டி?" என்றவள் கண்களில் கண்ணீர் வழிய ஆரம்பிக்க, "ஏன் நிலாவும் ஆதவ்வும் என் வாழ்க்கையில வந்தாங்க...?" என்று மீண்டும் அழுதவள், குழந்தையை தூக்கிக்கொண்டு அவள் அறைக்கு சென்றுவிட, மீராவும் சைத்ராவும் ஒன்றும் புரியாமல் நின்றனர்.


"என்ன மீரா, ஆழிய பாத்தாச்சா?" என்று கேட்டபடி வந்த ஆதவை திரும்பி பார்த்த இருவரும், 


"ம்ம்ம் பாத்துட்டோம்… பட், நாங்க பாத்தது எங்க ஆழி தானானு எங்களுக்கே குழப்பமா இருக்கு, அவ ரொம்ப டிஸ்டர்ப்டா தெரியுறா... அவளை கொஞ்சம் கவனிச்சுக்கோங்க… இந்தாங்க இந்த பென்டிரைவ்ல யுவராஜ் ஷெட்டியூல் இருக்கு அவகிட்ட குடுங்க, இன்னும் ஐஞ்சு நாள்ல யுவ்ராஜ் இந்தியா வர்றான்னு சொல்லிடுங்க" என்றவர்கள் அங்கிருந்து கிளம்ப, 

"ஒரு நிமிஷம் நில்லுங்கமா" என்ற ஆதவ் குரலில் இருவரும் நின்று திரும்பி ஆதவனை பார்த்தனர்.


"நீங்க நினைக்குற மாதிரி அவ உங்க பழைய ஆழி இல்ல தான். இப்ப அவ என்னோட ஆழி, நிலாவோட அம்மா ஆழி… அதை அவ மனசு உணர ஆரம்பிச்சு இருக்கு, அதோட வெளிப்பாடு தான் அவளோட இந்த மாற்றம். இது நீங்க… நம்ம அவகிட்ட வரணும்னு எதிர்பார்த்த மாற்றம் தான். சோ யூ டோண்ட் வொரி. யுவ்ராஜ் மேட்டர் முடிஞ்ச அப்புறம் ஒரு நல்ல நாள் பாத்து முதல்ல உங்க ரெண்டு பேர் கல்யாணத்தை, வயசுல பெரியவங்களா நின்னு நாங்க நடத்தி வைக்குறோம். அப்புறம் சின்னவங்களா லட்சணமா நீங்க நாலு பேரும் எங்களுக்கு கல்யாணம் செஞ்சு வைக்கணும்… என்ன ஓகேவா" என்றதும் மீராவும் சைத்ராவும், "டபுள் ஓகே பெரியவரே" என்று சொல்ல…


"ம்ம்ம் குட்… இப்ப நீங்க ரெண்டு பேரும் கிளம்புங்க, நாங்க ஈவ்னிங் வரோம்‌. அதுக்குள்ள அவ சரியாகிடுவா…" என்றவனைப் பார்த்து கிண்டலாகச் சிரித்த சைத்ரா, 


"ஹலோ பாஸ்… எங்க ஆழி வேலைனு வந்துட்டா  வெள்ளைக்காரி மாதிரி, எல்லா பிரச்சனையையும் தூக்கி அந்தால வச்சிட்டு இந்தால போட்டு தள்ளிட்டு போய்ட்டே இருப்பா" என்றவளை ஆதவ் தலையில் கொட்டி,


"வாயி வாயி… உன்னை கட்டிக்கிட்டு முகில் எப்படி தான் சமாளிக்க போறானோ" என்று கிண்டல் செய்ய, சைத்ராவுக்கு சிரிப்பு வந்துவிட்டது.


"அதெல்லாம் நான் அவரை நல்லா கவனிச்சுக்குவேன்… நீங்க உங்க ஆளை கவனிங்க" என்றுவிட்டு ஆதவ் அடிக்க வரும் முன் மீராவுடன் அங்கிருந்து ஓடிவிட, ஆதவ் அவளை பார்த்துச் சிரித்தவன்,


"வாலு வாலு… நான் ஏற்கனவே நேத்து கவனிச்சதுல தான் அவ எஸ்.ஜே சூர்யா மாதிரி, இருக்கு இல்ல… இல்ல இருக்குன்னு புரிஞ்சும் புரியாம பேசிட்டு திரியுறா… அது தெரியாம இது உளறிட்டு போகுது" என்றவன் ஆழி அறைக்குள் செல்ல, இவனை கண்டதும் சட்டென டேபிள் மேல் இருந்த  பேப்பரை அங்கிருந்த ஃபைல்லில் அவசர அவசரமாக மறைத்து வைத்தாள் ஆழி. அதை ஆதவ் கண்கள் கவனித்தாலும், மனதில் அது வித்தியாசமாக பதியாமல் போனது அவனின் துரதிர்ஷ்டம் தான்.


"என்ன மிஸஸ். ஆழினி மேடம். உங்க ஃப்ரண்ட்ஸ் கிட்ட என்னைப் பத்தி என்ன கம்ப்ளைன்ட் பண்ணீங்க?, ரெண்டும் உன்னை நான்  சரியா கவனிக்கவே இல்லைனு திட்டிட்டு போகுதுங்க…" என்று அவளை இழுத்து அணைத்து,


"அப்டியாடி?? நான் உன்னை சரியா கவனிக்குறது இல்லயா" என்று குறும்பாகக் கேட்டவன், அவள்‌ நெற்றியில் நெற்றி முட்டி, அவள் மூக்கின் நுனியை தன் மூக்கால் தேய்த்து, "இனிமே ஆயுசுக்கும் உன்னையும், நிலாவையும் கவனிக்கிறது ஒன்னு மட்டும் தான்டி என்னோட வேலை… அதுக்காக தான்" என்று எதையோ சொல்ல வந்தவன், 


"ம்ஹூம் அதை இப்ப சொல்ல மாட்டேன். நம்ம கல்யாணத்துக்கு நான் உனக்கு தர கிஃப்ட் அதான்" என்றவனை அவள் இமை உயர்த்திப் பார்க்க, நீர் கோர்த்திருந்த அவள் கண்களில் தன் இதழ்களை அழுத்தி பதித்து அவள் கண்ணீரை துடைத்தான்.


"எனக்கு அழுகுறது பிடிக்காது. அதுவும் எம் பொண்டாட்டி அழுதா அது எனக்கு சுத்தமா பிடிக்காது. போ போய் ஃபேஸ் வாஷ் பண்ணிட்டு வந்து… மீரா பென்டிரைவ் குடுத்திருக்கா, அது என்னன்னு பாரு" என்றவன் அங்கிருந்து செல்ல, போகும் அவனை முடிந்தவரை தன் மனதிலும் நினைவிலும் நிறைத்துக் கொண்டாள் ஆழினி.


ஆதவன் அவசரமாக பேச வேண்டும் என்று விஷ்ணு, முகிலை அழைத்திருக்க, ஆதவனுக்காக அந்த ரெஸ்டாரன்டில் காத்திருந்தனர் இருவரும்.


"என்ன விஷ்ணு இன்னும் இந்த ஆதவ்வை காணும்?"


"தெரியலயே முகில் அவசரம பேசணும் உடனே வான்னு ஃபோன் பண்ணான், இங்க வந்து பாத்த அவனை இன்னும் காணும்" என்ற முகில் திரும்பி வாசலை பார்க்க, அங்கு வேகமாக வந்து கொண்டிருந்த ஆதவன் முகில் விஷ்ணு எதிரில் வந்து அமர்ந்தான்.



"என்ன ஆதவ் ரெண்டு பேரையும் உடனே வரச் சொன்னா? என்ன விஷயம்? எதுவும் ப்ராப்ளமா?" என்ற விஷ்ணுவை பார்த்த ஆதவன் இழுத்து மூச்சுவிட்டபடி, "ப்ராப்ளமா இல்லையானு இனிமே தான்டா தெரியும்" என்று புதிராக பதில் சொல்ல, 


"டேய் ஏற்கனவே இருக்க பிரச்சனைல மண்ட காஞ்சுபோய் கொடக்கோம். நீ வேற புதிர் போடாதடா… என்ன மேட்டர்னு சொல்லு" என்று கடுகடுத்தான் முகில்.


"ஆதி ஃபோன் பண்ணி இருந்தான், ஒரு வேலைய அவனும்  சென்னை வந்திருக்கானாம். உங்க மூணு பேரை பாத்து ரொம்ப நாள் ஆச்சு, மீட் பண்ணலாம்னு சொன்னான்,  அதான் உங்கள வர சொன்னேன்."


"மக்கும் இருக்க பிரச்சனை இது ஒன்னு தான் இப்ப கொறச்சல். நம்ம கூப்புடும் போதெல்லாம் வராம… வரக்கூடாதா டைம்ல கரெக்ட்ட வந்திருக்கான் பாரு" என்று விஷ்ணு சலித்துக்கொள்ள,


"டேய் மேட்டர் அதோட முடியல… இன்னும் இருக்கு… ஆதி தனிய வர்ல கூடவே யுக்தாவும் நம்ம பாக்க வராங்க" என்று ஒரு குண்டை தூக்கிப் போட விஷ்ணு, முகில் இருவருக்கும் முழி பிதுங்கி விட்டது.


"டேய் என்னடா சொல்ற! யுக்தா எதுக்கு நம்ம பாக்கணும்?" 


"அது தான் முகில் எனக்கும் புரியல, இன்பேக்ட் யுக்தா தான் நம்ம பாக்கணும்னு சொல்லியிருக்காங்க, ஆதி நம்ம மூணு பேரையும் தெரியும்னு சொல்லவே, ஆதி இந்த மீட்டிங் ஃபிக்ஸ் பண்ணியிருக்கான்."


"நீ சொல்றதை பாத்த, யுக்தாக்கு ஏதோ லீட் கொடச்சிருக்கும்னு தோணுது ஆதவ். அதான் அவங்க நம்ம பாக்கணும் சொல்லி இருப்பாங்க… இது மீட்டிங்கா? இல்ல நம்ம மூணு பேரையும் அன்பிசியல்ல இன்ட்ரா கேட்  பண்ண தான் இங்க வரச் சொல்லி இருக்காங்கன்னு தோணுது" 


"யூ ஆர் ரைட் விஷ்ணு. வீ ஹவ் டூ பீ வெரி கேர்ஃபுல். ரொம்ப கவணமா பேசணும்" என்று ஆதவ் சொல்லும் போதே, "என்ன கவணமா இருக்கணும் ஆதவ்" என்று பின்னால் இருந்து கேட்ட ஆதியின் குரலில் நன்பர்கள் மூவரும் முகத்தை இயல்பாக மற்றியபடி எழுந்து நின்று, 


"ஹாய் ஆதி எப்டிடா இருக்க? என்று கேட்டபடியே அவனை அணைத்துக் கொண்டனர்.



"ஹலோ இங்க நான் ஒருத்தி நிக்குறது உங்க கண்ணுக்கு தெரியுதா இல்லயா? என்றபடி சிரித்த முகமா நின்ற யுக்தாவின் கம்பீரத்தில் சற்று மிரட்சியோடு அவளை பார்த்தவர்கள், "வா… வாங்க மேடம்" என்று வரவேற்க,


"ஏது மேடமாஆஆஆ… ஹலோ என்ன என்னை மேடம்னு கூப்டு உங்க வயசை கம்மி காட்ட ட்ரை பண்றீங்க"  என்று வேடிக்கையாக கேட்டவள், "என்ன ஆதவ் நீ கூட மேடம்னு சொல்ற? நம்ம ரெண்டு பேரும் கொஞ்ச நாள் வேல பாத்தது மறந்து போச்ச?" என்று கேட்க,


"அதெல்லாம் நல்லா ஞாபகம் இருக்கு யுக்தா… பட் என்ன இருந்தாலும் இப்ப நீ எங்க ப்ரண்ட் ஆதியோட லைஃப் அதுக்காக தான் இந்த மரியாதை" என்று ஆதவன் சொன்னதும், விழிகளை பக்கவாட்டில் திரும்பி ஆதியை பார்த்தவள், "உங்க ப்ரெண்ட் தான் வயசாச்சு, அவரை கட்டிக்கிட்டதால எனக்கும் வயசாய்டுச்சா என்ன?" என்று குறும்பாக சொல்ல, ஆதி அவள் காதை செல்லமாக திருக்கியவன், "ஏய் யாருக்குடி வாயசாச்சு… எனக்கா? எனக்காடி வாயசாச்சு? என்றவன் எதையோ சொல்ல வந்து  திரும்பி நண்பர்களை பார்த்தவன், "நீ வீட்டுக்கு வா… அங்க வச்சு உன்னை கவனிச்சிகுறேன்" என்று ஒரு மாதிரி குரலில் சொன்னவன் அவளை பார்த்து கண்ணடிக்க, அவளின் பொய் கோபத்தையும் மீறி  முகத்தில் செம்மை பரவியது.


"ஹலோ ஆதி… உங்க ரொமான்ஸ் முடிஞ்சதுன்னா, நம்ம எதாவது ஆர்டர் பண்ணாலாமா" என்ற முகிலின் குரலில் ஆதியும் யுக்தாவும் இயல்புக்கு வர, அவரவருக்கு தேவையான உணவை வர வைத்து உண்ண ஆரம்பித்தனர். உணவு உண்பது ஒரு பக்கம் இருந்தாலும் நண்பர்கள் மூவரின் பார்வையும் குனிந்த தலை நிமிர்ந்து, உணவிலேயே பார்வை பதித்திருந்த  யுக்தா மீது அடிக்கொரு முறை படிந்தபடி இருக்க,


"சாப்பாடு பிளேட்ல தானே இருக்கு, அப்றம் எதுக்கு நீங்க மூணு பேரும் என் மூஞ்சையே பாத்துட்டு இருக்கீங்க" என்ற யுக்தாவின் கேள்வியில் மூவருக்கும் தூக்கிவாரிப் போட்டது. 

"ஆ… அது ஒன்னு இல்ல யுக்தா, ஜஸ்ட் சும்மா தான்,  ம்ம்ம்… ஆமா நீ கேஸ்காக தானா இங்க வந்த… அந்த கேஸ் பத்திய டீடெயில்ஸ் எல்லாம் ஸ்டடி பண்ணிட்டியா?" என்று ஆதவன் கேட்க,  


ஆதவனை நிமிர்ந்து பார்த்து சிரித்த யுக்தா, "ம்ம்ம்" என்று மட்டும் சொல்ல, ஆதவன், "அந்த மிஸ்ஸிங் கேஸ் இன்வெஸ்டிகேஷனை எங்க இருந்து ஸ்டார்ட் பண்ண போற?" என்று கேட்டான்.


"எப்ப ஆரம்பிக்க போறேன் இல்ல ஆதவ், ஆல்ரெடி ஸ்டார்ட் பண்ணியாச்சு" என்றவள் நிமிர்ந்து ஆதவ், முகில், விஷ்ணு மூவரின் முகத்தையும் கூர்ந்து பார்த்தபடி, "பை தீ வே இது மிஸ்ஸிங் கேஸ் இல்ல…" என்றவள் சற்று பொறுத்து, "இட்ஸ் ஏ மர்டர் கேஸ், அண்ட் இந்த கேஸ் விமல்ல இருந்து ஸ்டார்ட் ஆகல… சிட்டி கமிஷனர் கொலையில் இருந்து ஆரம்பிச்சிருக்கு" என்று சொல்ல, நண்பர்கள் மூவரின் முகமும் ரத்தம் உறைந்து வெளிறியதை யுக்தா கவனித்துக் கொண்டுதான் இருந்தாள்.