ஆழியின் ஆதவன் 25

 ஆழி 25 


மீரா முன்னே நடக்க, அவள் பின்னால் நடந்து வந்த விஷ்ணு முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.


"இப்ப எதுக்கு மூஞ்சிய இப்படி வச்சிட்டு வரீங்க நீங்க?" என்ற மீராவை முறைத்த விஷ்ணு,


"ஏன்டி கேக்க மாட்ட, நீ ஏன் கேக்கமாட்ட… அந்தப் பூச்சி, புழு விக்கிற பொறம்போக்கு உன்னை அப்படியே முழுங்குற மாதிரி பாக்குறான். நீ என்னடான்னா ஒன்னும் சொல்லாம கம்முன்னு நிக்குற… எனக்கு உள்ள எப்படி எரியுது தெரியுமா… அவனை அங்கேயே நாலு மிதி மிதிச்சிருப்பேன் ஆனா, நீதான் என்னை புடிச்சு இழுத்துட்டு வந்துட்ட… இருக்கட்டும் இன்னைக்கே அவன் இடத்தை சீஸ் பண்ணி, அவனை அரெஸ்ட் பண்ணி உள்ள தள்ளுறேன்"


"அது உங்ளால முடியாது, அவன் ஒவ்வொரு மெட்டீரியல் டிரான்சாக்ஷனுக்கும் ஒவ்வொரு இடமா மாத்திட்டு இருப்பான். இப்ப நீங்க அங்கப்போனா அங்க உங்ளுக்கு ஒன்னும் கிடைக்காது" என்று அவனை உற்றுப் பார்த்து அழகாகச் சிரித்து,


"என்னை யார் பாத்தா எனக்கு என்ன… நான் யார பாக்குறேன்றது தான் நமக்கு முக்கியம். என்னோட பார்வை எப்பவும் உங்க மேல தான் இருக்கும். இந்த மீராவின் பார்வை எப்பவும் அவ கண்ணன் மேல மட்டும் தான் இருக்கும்" என்றவள் வேகமாக நடக்க, அவள் சொன்னதின் அர்த்தம் புரியாமல் முதலில் விழித்த விஷ்ணு… பின் அர்த்தம் புரிய ஓடிப்போய் மீரா முன்பு நின்றான்.


"நீ… நீ சொன்ன கண்ணன் நான் தானே?" என்று கேட்க, மீரா அவனை செல்லமாக முறைத்தவள், "கடவுளே இவரை கட்டிட்டு நான் என்ன தான் செய்ய போறனோ" என்று தலையில் அடித்துக்கொள்ள, "அதை பத்தி நீ கவலைப்படாத‌, அதெல்லாம் ஐயா தூள் கிளப்பிடுவேன்" என்றவன் அவளை இழுத்து நெஞ்சோடு அணைத்துக் கொண்டான்.


ஆதவ் கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் ஆழியை சீண்டி விளையாட, அவன் அருகாமை ஆழியை ரொம்பவே சோதித்தது. அவளையும் அறியாமல் ஆழி கொஞ்சம் கொஞ்சமாக ஆதவ்விடம் தன்னை இழந்துக்கொண்டிருந்தாள். எப்படியாவது ஆதவனை விட்டு தள்ளி இருக்க அவள் நினைக்க, உயிர் உள்ள வரை அவள் மனதிலும், எண்ணத்திலும் இருந்து மறக்க முடியாதபடி, விதி அவனோடு அவளை உயிரோடு உடலாக இணைக்க நாள் குறித்து காத்திருக்க, யுவராஜ் இந்தியா வர இன்னும் கொஞ்ச நாட்களே இருக்கும் நிலையில் ஆழி யாருக்கும் தெரியாமல் சில வேலைகளை செய்து கொண்டிருந்தாள்.


அன்று ஆதவன், விஷ்ணு, முகில் மூவரும் யுவராஜ் பற்றி தகவல்களை அக்குவேறு ஆணிவேராக அலசிக்கொண்டி இருக்க, முகிலின் ஃபோன் அடிக்க அதை எடுத்து பேசியவன் முகம் இறுக்கமாக மாறியது.


"என்னாச்சு முகில்? ஏன் முகம் ஒரு மாதிரி மாறிடுச்சு? எனி பேட் நியூஸ்?" 


"ம்ம்ம் ஆமா ஆதவ் பேட் நியூஸ் தான். ஆனா, அது யாருக்குனு தான் தெரியல" என்றவனை குழப்பமாக பார்த்தனர் விஷ்ணுவும் ஆதவனும்.


"டேய் என்னடா? என்ன ஆச்சு?"


"அந்த விமல் அம்மா, அந்த குட்டி நாய் விமலையும், அவன் அப்பன் அந்த சொறி நாயையும் காணும்னு நம்ம ஐ.ஜி பரதன் சார் கிட்ட கம்ப்ளைன்ட் குடுத்திருக்காங்க" 


"இது நம்ம எதிர்பார்த்து தானாடா… வீட்ல இருந்து ரெண்டு பேரை காணும்னா கம்ப்ளைன்ட் குடுக்க தானா செய்வாங்க… அதுவும் அந்த விமல் அப்பன் பெரிய ஆள் வேற, சோ இது நார்மல் தான். எப்டியும் அந்த எமனே வந்து தேடினாலும் அவனுங்க ஒரு முடியை கூட கண்டுபிடிக்க முடியாதபடி தான் நம்ம ஏஞ்சல்ஸ் வேலையை சுத்தமா முடிச்சிட்டாங்களே. அப்புறம் என்ன? விசாரிக்க வர்ற போலீஸ் ஆபீஸர் கொஞ்ச நாள் இன்வெஸ்டிகேஷன் பண்ணிட்டு ஒன்னு பண்ண முடியலன்னு சொல்லிட்டு போக வேண்டியது தான் " என்று விஷ்ணு சொல்ல முகில் முகம் இன்னும் இறுக்கமாக தான் இருந்தது.


"டேய் முகில் உன் முகத்தை பார்த்த ஏதோ பெரிய பிரச்சனை இருக்க மாதிரி தெரியுது. சொல்லுடா என்ன விஷயம்" என்று‌ ஆதவன் நிமிர்ந்து பார்த்தவன்,


"விஷ்ணு சொன்ன மாதிரி கொஞ்ச நாள் இன்வெஸ்டிகேஷன் பண்ணிட்டு ஒன்னு செய்ய முடியலனு சொல்ல, வர்ரது ஒன்னும் சாதாரண ஆபீஸர் இல்லடா ஆதவா" என்றவன் முகத்தை வைத்தே பிரச்சனை பெரிது என்று புரிந்து கொண்டனர் இருவரும்.


"யாரு முகில்? ஐ.ஜீ  யாரை இந்த கேஸை பாக்க சொல்லி இருக்காரு" என்ற விஷ்ணு கேள்வி முகில் சொன்ன பதிலை கேட்டு இருவரும் அதிர்ந்து நின்றனர்.


"டேய் என்னடா சொல்ற நீ? என்று ஆதவன், விஷ்ணு இருவரும் அதிர…


"ஆமாடா இந்த கேஸை ஹேண்டில் பண்ண போறது நம்ம ஆதியோட வைஃப் சம்யுக்தா தான். நம்ம ஐ.ஜீ பரதன் சார் இந்த கேஸ்காக அவரோட டைகரை களத்தில் இறக்கி இருக்காரு" 


(சம்யுக்தா & ஆதித்யன் என்னோட "அழகிய தமிழ் மகள்" கதையின் ஹீரோ ஹீரோயின். இந்த கதையில் சும்மா ஒரு கெஸ்ட் ரோல் பண்ண கூட்டிட்டு வந்திருக்கேன்.)


"உண்மையாவே இது பெரிய பிரச்சனை தான். யுக்தா பத்தி எனக்கு நல்லாவே தெரியும். அவ சிபிஐ ல இருக்கும் போது நாங்க சேர்ந்து வொர்க் பண்ணி இருக்கோம். ஒரு கேஸ் எடுத்த அதோட வேர்வரை நோண்டி எடுக்காம இருக்க மாட்டா. அந்த குவாலிட்டி தான் அவள தனிய காட்டும்." 


"நீ சொல்றது கரெக்ட் தான் ஆதவ். யுக்தா பத்தி எங்களுக்கும் தெரியும், அவங்க கைக்கு ஒரு கேஸ் போன தப்பு பண்ணவன் பொணம் கூட யாருக்கும் கிடைக்காது. அப்டியே நம்ம ஏஞ்சல்ஸ் மாதிரி தான் அவங்க."


"அதுதான் முகில் இப்ப பிரச்சனையே பாம்பின் கால் பாம்பறியும்ற மாதிரி யுக்தாக்கிட்ட நம்ம ஏஞ்சல்ஸை ஈசியா மாட்டிக்குவாங்களோன்னு பயமா இருக்கு"


"எனக்கு தெரிஞ்சு விமல், அவனோட அப்பன் பத்தி யுக்தாக்கு தெரிஞ்ச கண்டிப்பா இந்த கேஸ் போக்கு மாற நிறைய வாய்ப்பிருக்கு விஷ்ணு. பிகாஸ் யுக்தா ட்ரக் ரெக்கார்டு அப்டி…"


"இருக்கலாம் ஆதவ்… பட் அதுக்காக நம்ம கேர்லெஸ்ஸா இருக்க முடியாது. அவங்க மூணு பேரும் இப்ப நம்ம பொறுப்பு. இன் ஃபேக்ட் இதுல அவங்களை இழுத்து விட்டதே நம்ம தான் சோ வீ ஹவ் டூ ப்ரொடெக்ட் தெம்"


"யூ ஆர் ரைட் முகில் என்ன ஆனாலும் அவங்க மூணு பேருக்கும் எதுவும் ஆகிவிடக்கூடாது" என்ற விஷ்ணுவுக்கு முகிலும் ஆதவனும் தலையசைத்து தங்கள் முடிவு உறைந்தனர்.


ஆழினி யுவராஜை முடிக்கும் திட்டத்தை மீரா, சைத்ராவுடன் பேசிக்கொண்டிருக்க ஆதவன், விஷ்ணு, முகில் மூவரும் அங்கு வந்தனர். அவர்கள் மூவரின் முகம் ஏதோ போல் இருப்பதை பார்த்த சைத்ரா, 


"என்ன மூணு பேர் முகமும் பிஸ் போன பல்பு மாதிரி இருண்டு கெடக்கு?" என்று கேட்க, ஆதவன் திரும்பி ஆழியை பார்க்க, விஷ்ணுவின் பார்வையும் மீரா மேல் விழ, முகில் எழுந்து வந்து சைத்ரா அருகில் நெருங்கி அமர்ந்தவன் அவள் கையை எடுத்து தன் நெஞ்சோடு வைத்து இறுக்கிக் கொண்டான். 


பெண்கள் மூவரும் எதுவும் புரியாமல் குழப்பி இருக்க, "என்னாச்சு விஷ்ணு? ஏன் மூணு பேரும் ஒரு மாதிரி இருக்கீங்க… ஏனி ப்ராப்ளம்? என்று கேட்ட ஆழியின் கையை ஆதவன் சட்டென பிடித்து இழுத்து தன் நெஞ்சோடு இறுக்கி அணைத்தவன், 


"உனக்கு ஒன்னு ஆகாது… நா இருக்கவரை உனக்கு எதுவும் ஆக விடமாட்டேன் ஆழி" என்றவன் ஆழியை இன்னும் தன்னோடு இறுக்கிக்கொள்ள, ஆழி என்ன நடக்கிறது என்று புரியாமல் அவன் அணைப்பில் விழி விரித்து நின்றாள்.


"ஏய் என்னப்பா ஆச்சு? ஆதவ் என்ன சொல்றாரு..‌. ஆழிக்கு என்ன? ஏன் அவர் அப்டி சொல்றாரு?" என்று மீரா பதற, அவள் தோளில் கை போட்டு தன்னோட இணைத்துக்கொண்ட விஷ்ணு, "விமல் கேஸை விசரிக்க ஒரு ஆபீஸர் வரங்க…" என்றான்.


அதை கேட்ட ஆழி, ஆதவனை விட்டு விலகி நின்று தண்ணீர் கிளாஸை கையில் எடுத்தவள், 'உஃப்' இவ்ளோ தானா… நா என்னமோ ஏதோன்னு நெனச்சிட்டேன்" என்று சாதாரணமாக சொல்ல,


"நீங்க நெனைக்குற மாதிரி இது சிம்பிள் இல்ல ஆழி" என்ற முகிலை புரியாமல் பார்த்த சைத்ரா, "என்ன முகில்… அந்த விமலும் அவன் அப்பனும் சொசைட்டில பெரிய ஆளுங்க, சோ போலீஸ் தேட தானா செய்யும். இதெல்லாம் நமக்கு தெரிஞ்சது தானே… அந்த எமனே இறங்கி வந்தாலும் ஒன்னும் பண்ண முடியாது" என்றவள் முகத்தை தவிப்பாக பார்த்த முகில், "முதல்ல நாங்களும் அப்டி தான் நெனச்சோம். ஆனா, இப்ப" என்றவன் குரல் உள்ளே போய் விட்டது.


"என்ன ஆனாலும் சரி, நாங்க உயிரோட இருக்க வரை உங்களுக்கு ஒன்னு ஆட விடமாட்டோம்" என்று ஆதவன் அழுத்தமாக சொல்ல, ஆழி அவனை அழுத்தமாக பார்த்தவள், "விஷயத்தை முழுசா சொல்லாம, இப்டி மூணு பேரும் மாறிமாறி பயந்துட்டு இருந்த நாங்க என்னன்னு நினைக்கிறது?" 


"இந்த கேஸ்காக ஜ.ஜீ ஒரு ஸ்பெஷல் ஆபிசர் அப்பாயிண்ட்  பண்ணி இருக்காரு ஆழி. அதுதான் எங்க பயத்துக்கு காரணம்." என்ற விஷ்ணுவை திரும்பி பார்த்த ஆழி, "யாரு அந்த ஆபிசர்?" என்று கேட்ட, விஷ்ணு சொன்ன பேரைக் கேட்ட அடுத்த நொடி ஆழி கையில் இருந்த கண்ணாடி கிளாஸ் கீழே விழுந்து சுக்குநூறாக உடைந்தது.


"யா… யாரு அந்த ஆபிசர்?" என்ற ஆழியின் குரலில் அத்தனை நடுக்கம் எனில் மீரா, சைத்ரா இருவரும் உயிருள்ள சிலையாகவே மாறி விட்டனர் என்று என்னும் அளவு உறைந்து நின்றனர்.


"என்னாச்சு ஆழி? ஏன் திடீர் உன் குரல்ல இவ்ளோ பயம் என்ற ஆதவ் அருகில் சென்று அவன் சட்டை கலரை பிடித்து இழுத்தவள், "அந்த ஆபிசர் பேர் என்ன சொன்னீங்க?" என்று மீண்டும் அழுத்தமாக கேட்க, ஆதவன் ஆழியை கண்கள் சுருக்கி பார்த்தபடி, "சம்யுக்தா..‌. சம்யுக்தா ஆதித்தன். எங்க ப்ரண்ட் ஆதியோட மிஸஸ்" என்று சொல்ல, ஆழி ஒரு நிமிடம் அவனையே இமைக்காமல் பார்த்தவள் கண்களில் கண்ணீர் துளி அணைக்கட்டி நிற்க, ஆதவன் சட்டையில் இருந்து கையை எடுத்தவள், எதுவும் பேசாமல் அமைதியாக அங்கிருந்து செல்ல, 


"உங்களுக்கு யுக்தாவை தெரியுமா? என்று ஆதவன் கேட்ட கேள்வியில் ஒரு நிமிடம் நின்றவள், திருப்பி ஆதவனை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்தவள், எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவளோ சீக்கிரம் நாங்க," என்றவள் நிறுத்தி மீராவையும் சைத்ராவையும் பார்த்தவள், நான் இங்கிருந்து போய் ஆகணும்." என்று சொல்ல, மீராவும் சைத்ராவும் ஆழியை பார்க்க,

இப்போது ஒன்றும் புரியாமல் குழம்பி நிற்பது ஆண்கள் மூவரும் முறையானது.