கண்ட நாள் முதல் 28

 அத்தியாயம் 28


தனம்மா வாசலையே பார்த்து கொண்டு இருக்க. "யாரை பார்த்துட்டு இருக்கீங்க அத்தை?" என்று நிலா அங்கு வர. "நம்ம அரவிந்த்தோட அப்பா, அம்மாவை தான்டா எதிர்பார்த்துட்டு இருக்கேன். வருஷவருஷம் கண்டிப்பா இந்த பூஜைக்கு வந்து சூர்யாவை ஆசிர்வாதம் பண்ணுவாங்க. இந்த வருஷம் நீயும், சூர்யாவும் சேர்த்து ஆசிர்வாதம் வாங்கணும்" என்று சொல்லும் போதே. சரியாக அங்கு வந்து சேர்ந்தனர் ஶ்ரீதரும் லட்சுமியும். "வாங்க அண்ணா, வாங்க அண்ணி" என்று தனம்மா அவர்களை வரவேற்க. 'வந்துட்டோம் வந்துட்டோம்" என்றுபடி நிலா அருகில் வந்த லட்சுமி "எப்டி  இருக்க நிலா?" என்று அன்போடு கேட்க. 


"எனக்கு என்ன ஆன்ட்டி சூப்பரா இருக்கேன். இப்படி ஒரு அன்பான அத்தை, பெஸ்ட் ப்ரண்டு மாதிரி அருமையான மாமா இருக்கும் போது எனக்கென்ன குறை வரப்போகுது" என்க.


"ஏன்டி அந்த லிஸ்ட்ல நா இல்லயா?" என்று குறும்பாக குரல் வந்த திசையில் சூர்யா வர. இப்போது மயங்கி நிற்பது நிலாவின் முறையானது. கல்யாணத்திற்கு பிறகு இன்று தான் அவனை வேட்டி, சட்டையில் பார்க்கிறாள். பட்டு வேட்டி சட்டையில் இப்போது தான் குளித்து முடித்தேன் என்பதை அவனின் காற்றில் அலைபாயும் கேசம் சொல்ல.. அழகாய் அளவாய் இருந்த தன் மீசையை முறுக்கியபடி மாடியில் இருந்து இறங்கி வந்தவனை பார்த்த நிலாவின் சிப்பி இமைகள் முடி முடி திறக்க. "ஆத்தி என்ன இந்த மனுஷன் இன்னைக்கின்னு இவ்ளோ அழகா இருந்து தொலயுறாரு. போற போக்கை பாத்த நானே அவர்ட்ட ஓடி போய் ஐ லவ் யூன்னு சொல்லிடுவேன் போல இருக்கே. காலையில அவர் என் கண்ணு முன்னாடி வராதன்னு சொன்னதுக்கு அர்த்தம் இப்ப நல்லா புரியுது." என்று கணவனை பார்த்தவள், "இந்த ஆணழகன் எனக்கு மட்டுமே சொந்தமானவன்" என்ற கர்வம் அவளை மூழ்க செய்தது.

"நிலா கன்ட்ரோல் கன்ட்ரோல்...

அவர் பெத்டே வரை பொறுத்திரு' என்று தன்னை தானே நிலைபடுத்தியவள் விழிகள் மட்டும் அவனை விட்டு நகர மாட்டேன் என்று சண்டித்தனம் செய்தது.

சூர்யாவும் தன்னை ரசித்துக்கொண்டிருந்த நிலாவை தான் பார்த்துக் கொண்டிருந்தான். 


இவர்களில் ரொமாண்டிக் லுக்ஸை பார்த்துகொண்டிருந்த தேவி சூர்யா அருகில் சென்றவள். "ஹலோ அண்ணா? அங்க நாங்க உங்க பொண்டாட்டி நேத்து போட்ட குண்டுல குழம்பி போய் இருக்கோம். நீங்க என்னடான்னா இங்க ரொமான்டிக் லுக்கு வுட்டுட்டிருக்கீங்க…  இதெல்லாம் நல்லா இல்ல ஆமாம். பாருங்க அங்க தேனுவையும் அண்ணாவையும்... சிங்கிள்ஸ் சாபம் உங்களை சும்மா விடாது அண்ணா சொல்லிட்டேன்" என்க.


சூர்யாவிற்கு அப்போது தான் இன்று நடக்கப்போகும் பிரச்சனையே ஞாபகம் வந்தது. "அய்யோ ஆமாம்ல்ல நா மறந்தே போயிட்டேன் தேவி" 


"ம்ம்ம்ம் மறப்பீங்க மறப்பீங்க… மரியாதையா வந்த உங்க பொண்டாட்டி அந்த பிடாரியை ஆஃப் பண்ணுங்க… இல்ல நாங்க கிரிமினலா எதுவும் யோசிக்க வேண்டியிருக்கும் சொல்லிட்டேன் ஆமா…" 


"இப்ப என்ன என்ன செய்ற தேவி" எனும்போதே "டேய் சூர்யா எப்டிடா இருக்க??" என்று வந்த லட்சுமி அம்மாவின் வார்த்தையில் சூர்யா மட்டும் இல்லை நிலாவும் நிகழ்வுலகிற்கு வந்தாள். "நா நல்லா இருக்கேன் மா, நீங்க எப்டி இருக்கீங்க?" என்று ஶ்ரீதரனையும் சேர்த்து சூர்யா விசாரிக்க. பெரியவர்கள் அமர்ந்து பேசத்தொடங்கினார். 


பூஜை ஆரம்பிக்க, இன்னும் நேரம் இருந்தால் நிலா அனைவருக்கும் காபி எடுத்து வந்தாள். வேலைகளுக்கு இடையே தேனுவின் முகத்தை கவனிக்கவும் அவள் மறக்கவில்லை.


நிலா வாசலை பார்த்தவள், "வாங்க சித்து, வாங்க சித்தி" என்று அழைக்க அங்கு தேனுவின் அப்பாவும் அம்மாவும் வந்து கொண்டிருந்தார். தேனுவிற்கு உலகமே சுற்றுவது போல் ஆகிவிட்டது. நடக்கபோகும் விஷயத்தின் விபாரிதம் புரிந்தது. அரவிந்துக்கும் அதே நிலைதான்.


"ஏய் நிலா உனக்கு எத்தனை முறை சொல்லி இருக்கேன் அண்ணாவை சித்துன்னு கூப்பிடாத... சித்தப்பான்னு சொல்லுன்னு" என்று கலைவாணி அதட்ட.


"விடும்மா கலை, அவ அப்படி சொல்றது தான் எனக்கு பிடிச்சிருக்கு" என்ற தேனுவின் அப்பா கதிரேசன் கட்டிக்கொண்ட நிலா, "அப்டி சொல்லு சித்து" என்ற நிலா கலையை பார்த்து உதட்டை சுழித்து ஒழுங்கு காட்ட.. "எப்டியே போங்க" என்று கலை திரும்பிக்கொண்டார்.


நிலா தேனுவின் அப்பாவையும் அம்மா வளர்மதியையும் எல்லோருக்கும் அறிமுகம் செய்ய, அவர்களுக்கு சற்று நேரத்தில் அனைவரிடமும் நன்றாக பேசத் தொடங்கிவிட்டனர்.


தனம் பேச்சு வாக்கில் தேனுக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளை பற்றி கேக்க. கதிரேசன் மாப்பிள்ளை சரவணனின் புகழ் பாடியே களைத்து விட்டார். இதை கேட்ட தேனுவுக்கு அழுகை முட்டிக்கொண்டு வர.. அரவிந்திற்கு முகம் தெரியாத அந்த சரவணனுடன் தேனுவை இணைத்து வைத்து பேசுவதை கேட்க முடி முதல் அடி வரை எரிந்தது.


இவர்களை தவிர மற்ற அனைவரும் இன்று நாள் குறிப்பது பற்றியும் கல்யாணம் பற்றியும் பேசிக்கொண்டிருக்க. கதிரேசன் நடுவில் "நிலா... நீ ஜோசியர் கிட்ட பேசிட்டியாமா" என்று கேட்க. 


"அதெல்லாம் ரெண்டு நாள் முன்னையே மாப்புள்ள, பொண்ணு ஜாதகத்தை காட்டி நல்ல நாள் கேட்டு வாங்கிட்டேன். இன்னும் ஒரு மாசம் கழிச்சு நிச்சயம், அடுத்த ரெண்டு மாசத்துல கல்யாணம். அதை இன்னைக்கு பூஜை முடிஞ்சதும் ஐயரே சொல்லுவாரு சித்து. நா எல்லா ஏற்படும் செஞ்சுட்டேன்" என்று சொல்லி முடிக்கவில்லை.. அரவிந்துக்கு எங்கிருந்து அவ்வளவு கோபம் வந்ததே தெரியவில்லை... "stop it… போதும் நிலா…!! நிருத்து…" என்று உச்சகட்ட கோபத்தில் கத்த, நிலாவுடன் சேர்த்து அனைவரும் ஒரு நிமிடம் பயந்து விட்டனர்.


அவன் சத்தத்தில் ஏதோ விபாரிதம் நடக்குமோ என்று பயந்த சூர்யா. "டேய் அரவிந்த் ப்ளீஸ் டா… கொஞ்சம் பொறுமையா இரு" என்று அவனை அடக்க முயல.


"டேய் நீ சும்மா இருடா. யாராவது ஏதாவது பேசுனீங்க... நா மனுஷனா இருக்க மாட்டேன் சொல்லிட்டேன்" என்று கோபமாக சொன்னவன், அதே கோபத்தோடு கதிரேசன் பக்கம் திரும்பி. "இதோ பாருங்க மாமா நீங்க பாத்திருக்க மாப்பிள்ளை கூட தேனுக்கு கல்யாணம் நடக்காது. ஏன்னா நா தான் அவளை கல்யாணம் பண்ணிக்க போறேன். நா தேனுவை விரும்புறேன். அவளும் என்ன விரும்புற. ஆனா, இதோ நீக்கிறாளே நிலா... இந்த பிசாசுக்கு என்னை புடிக்காது" என்று சொல்ல. 


நிலா, "என்னது பிசாசா…?" என்று அரவிந்த்தை முறைக்க, அதை கண்டு கொள்ளாதவன். தன் பேச்சை தொடர்ந்தான். "நிலாக்கு என்னை புடிக்காதுன்ற ஒரே காரணத்துக்காக இவ என்ன கல்யாணம் பண்ணிக்க முடியாதுனு சொல்ற" என்று சொல்ல நிலா தேனுவின் முகம் பார்க்க நிலாவின் பார்வையை தாங்க முடியாமல் தேனு தலைகவிழ்ந்து கொண்டாள்.


"நிலாவை எனக்கும் பிடிக்கும் தான் சொல்ல போனா அவ எனக்கு தங்கச்சி மாதிரி. நா அவளை அப்டித்தான் நினைக்கிறேன். ஆனா, அவளுக்கு தான் என்ன சுத்தமா புடிக்கல.. ஓகே அது என் விதி ஆனா, அதுக்காக என்னோட காதலையும் தேனுவையும் என்னால விட்டு கொடுக்க முடியாது. என்ன நடந்தாலும் தேனுக்கும் எனக்கும் கல்யாணம் நடக்கும். அத யாராலயும் தடுக்க முடியாது. அதையும் மீறி நீங்க தேனுக்கு கல்யாணம் ஏற்பாடு செஞ்ச, கல்யாணத்தன்னைக்கே  இவளை தூக்கிட்டு  போய்டுவேன். அப்றம் மானம் போச்சு மருவாதி போச்சுன்னு சொல்ல கூடாது. அப்பா இதை உங்களுக்கும் சேர்த்து தான் சொல்றேன். தேனுவை தான் நா கல்யாணம் பண்ணிப்பேன். அவதான் உங்க மருமக. தேனு அப்பா, அம்மா கிட்ட பேசி  ஒழுங்கா எங்களுக்கு கல்யாணம் செஞ்சு வைங்க. இல்ல நா ஏதாவது ஏடாகூடமா யோசிக்க வேண்டி வரும்" என்று அரவிந்த் ஒரே மூச்சில் சொல்லி முடிக்க, ச்ச்சீ கத்தி முடிக்க... அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியில் இமை கொட்டாமல்  அரவிந்தை தான் பார்த்துக் கொண்டிருந்தனர்.


அரவிந்த் கொடுத்த அதிர்ச்சியில் அனைவரும் வாய்மூடி மௌனமாக நிற்க. சூர்யா மட்டும் நிலாவை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.. (சைட் அடிக்கல மக்களே இது வேற மாதிரி) நிலாவின் முகத்தை பார்த்தவனுக்கு ஏதோ நெருடியது. அவனுக்கு ஏற்கனவே நிலாவின் இந்த கல்யாண முடிவில் ஒரு சந்தேகம் இருந்தது. நிலா, தேவி, தேனு நட்பை பற்றி சூர்யா நன்கு அறிந்து வைத்திருந்தான். ஒருவர் மனதில் நினைப்பதை சொல்லமாலே புரிந்து கொள்ளும் புரிதல் அவர்கள் மூன்று பேருக்கும் இடையே இருந்தது. அப்டி இருக்க நிலா திடீரென தேனுவிற்கு கல்யாணமென்று சொல்ல. சூர்யாவினால்  அதை நம்ப முடியவில்லை. நிலாவால் தேனு மனசு கஷ்டப்படும்படி எதுவும் செய்யமாட்டாள். செய்யவும் முடியாது என்று அவன் உறுதியாக நம்பினான். அதனால் தான் நேற்று தேனுவும் அரவிந்த்தும் என்ன நடக்குமோ என்று பயந்த போதும் கூட இவன் மட்டும் எதுவும்  நடக்காதென்று நம்பிக்கைக் கொண்டிருந்தான். இப்போது நிலாவின் முகத்தில் தெரிந்த மாற்றம் சூர்யாவிற்கு எதையே உணர்த்தியது. 


அரவிந்த் கத்தி முடிக்க அந்த இடத்தில் மழை பெய்து ஓய்ந்தது போல் ஒரு அமைதி. அரவிந்த்  பெரியவர்களை பார்க்க அனைவர் முகமும் பேயறைந்தது மாதிரி இருந்தது. கதிரேசன் தேனுவை தன் கூறிய கண்களால் பார்த்தவர். "இவர் சொல்றது எல்லாம் உண்மையா தேன்மொழி?" என்று கேட்க.. தேனுவிற்கு நாக்கு என்று ஒன்று இருப்பதே மறந்து போக. தலையை மட்டும் மேலும் கீழும் ஆட்டினாள். அவள் அந்த சின்ன ஆசைவே அரவிந்தின் நெஞ்சில் ஜில் என்று ஐஸ் கட்டி வைத்து போல் இருக்க. 


கதிரேசன், "குட்டிமா" என்று கத்த.. "சொல்லுங்க சித்து" என்று கதிரேசன் அருகில் வந்தால் நிலா. "நீ ரெண்டு மாசத்துக்கு அப்றம் குறிச்சிருக்க தேதியை மாத்து. வர முகூர்த்தத்தில் நிச்சயம், அடுத்த முகூர்த்தத்துலயே கல்யாணம்" என்று சொல்ல. 


தேனு, "அப்... அப்பா…" என்று தொடங்கும் போதே. கதிரேசன் முறைக்க…


தேனு, "யாராவது ஏதாவது செய்ங்க" என்பது போல் அனைவரையும் பார்க்க... தனம்மாவுக்கும் கலைக்கும் மனது கேட்காமல் "அண்ணா பாவம் அண்ணா குழந்தைங்க... ஏதே ஆசபட்டுட்டாங்க, அரவிந்தும் நல்ல பையன் தான். தேனுவை நல்லா வைச்சுப்பன்" என்று சொல்ல இடைப்புகுந்த ஶ்ரீதரன்,, "நீ சும்மா இரு தனம். கதிரேசன் சொல்றது தான் சரி…"


"நிலா நீ கல்யாண ஏற்பாடு பண்ணுமா. நா உனக்கு துணைய இருக்கேன். எவன் என்ன பண்றான்னு நானும் பாக்குறேன்" என்று தன் பங்கிற்கு கத்த. அரவிந்துக்கு மூக்கு மேல் கோபம் வந்து ஒட்டிக்கொள்ள, "அப்பா லூசாபா நீ... நா தேனுவை எனக்கு கல்யாணம் பண்ணி வைன்னு சொல்றேன். நீங்க அவளை இன்னொருதன் கல்யாணம் பண்ணிக்க ஹெல்ப் பண்றேன்னு சொல்ற?? நா சொல்றது உங்களுக்கு புரியுதா இல்லயா?" என்று கோபத்தில் தொடங்கி இயலாமையுடன் முடிக்க.


கலைக்கு நிலா மீது கோபமாக வந்தது. 'இவ மட்டும் தேனுகிட்ட பேசியிருந்த? இப்டி ஒரு பிரச்சனையே வந்திருக்காது' என்று அவளை மனதில் திட்டியவர். "ஏய் நிலா இது எல்லாம் உன்னால தான்டி வந்தது. நீ மரியாதையா ஃபோன் பண்ணி  மாப்பிள்ள வீட்டு ஆளுங்களை இப்ப இங்க வர வேணாம்னு சொல்லு... முதல்ல இவங்க பிரச்சினைய பேசி முடிப்போம்" என்று சொல்ல.


நிலா வெகு சாதரணமாக, "அது முடியாதுமா" என்று சொல்ல.


"ஏய் உனக்கு பைத்தியமா புடிச்சிருக்கு. தேனுவ கேக்காம நீயா ஒரு முடிவெடுத்து இப்ப இவ்வளவு பெரிய பிரச்சனையில வந்து விட்டிருக்கு, இப்ப மறுபடியும் அவங்க இங்க வந்து, இன்னும் பெரிசா ஏதுவும் நடக்கணுமா…? ஒழுங்கா ஃபோன் பண்ணுடி" என்று சொல்ல.


"அதுக்கு எல்லாம் எந்த அவசியமும் இல்ல கலை" என்று ஶ்ரீதரன் சொல்ல.. 


"அண்ணா நா சொல்றதை கொஞ்சம்?" என்று தொடங்க ஶ்ரீதரன் கலை நோக்கி வேண்டாம் என்று கைக்காட்ட கலை அதற்கு மேல் ஏதும் பேசவில்லை. இதில் டென்ஷன் ஆன அரவிந்த். "அப்பா ஏன்பா இப்டி பண்ற? எனக்கு கல்யாணம் ஆகணும். உனக்கு பேரன், பேத்தியை பாக்கணும். அவங்க கிட்ட அடி, உதை வாங்கணும், அவங்களை ஸ்கூலுக்கு கூட்டி போகனுன்னு  ஆசையே இல்லயா, அம்மா நீயாது உன் புருஷன்கிட்ட சொல்லும்மா" என்று பாவமாக கேட்க. 


அரவிந்த்தை முறைத்த ஶ்ரீதரன். திரும்பி கதிரேசனை பார்த்தவர், நிலாவிடம் திருப்பி, "நிலா என்னை மன்னிச்சுடுமா. என்னால முடியல மா, இவன் மூஞ்ச பாக்க பாக்க சிரிப்ப வருதுமா என்று டீச்சரிடம் பர்மிஷன் கேட்கும் பிள்ளைபோல் நிலாவை பார்த்து கேட்க, அதுவரை பல்லை கடித்துக் கொண்டிருந்த நிலா. ஶ்ரீதரனனையும் கதிரேசனையும் பார்த்து இதுக்குமேல என்னாலயும் முடியாது சாமி" என்றவள் இதழ்கள் மெல்ல மெல்ல சிரிக்க தொடங்க... அவளோடு சேர்த்து தேனு, அரவிந்தின் அப்பா அம்மாவும் விழுந்து விழுந்து சிரிக்க. "நிலா சூப்பர் ப்ளான்மா. அங்க அரவிந்த் மொகத்த கொஞ்சம் பாரேன்" என்ற ஶ்ரீதரன் இன்னும் பெரிதாக சிரிக்க... நிலா வயிற்றைப்பிடித்து சிரித்துக் கொண்டிருந்தாள்.


அவர்களை தவிர மற்ற அனைவரும் எதுவும் புரியாமல் திரு திரு என்று முழிக்க.ன. சூர்யா மட்டும் சன்னமாக சிரித்துக்கொண்டிருந்தான். சூர்யாவிற்கு மாப்பிள்ளையின் பெயர் சரவணன் என்னும் போதே சிறு சந்தேகம் இருந்தது. இப்போது நிலாவின் சிரிப்பு அவனுக்கு உணர்த்தி விட்டது. நிலாவின் எண்ணம் என்ன என்பதை எனவே அவனும் அமைதியாக இருந்தான்.


அனைவரும் பொறுத்து பொறுத்து பார்த்து முடியாமல் சிரித்துக் கொண்டிருந்தவர்களை முறைக்க. அரவிந்த் மட்டும் "அய்யோ……….. லூசுகளா இங்க என்ன பிரச்சனை போய்கிட்டு இருக்கு, நீங்க என்னமோ ஏதோ காமெடி ஷோ பாக்குற மாதிரி இப்டி ஈஈஈன்னு இளிச்சுட்டு இருக்கீங்க… ஏன் சிரிக்கிறீங்க காரணத்தையாது சொல்லி தொலைங்க….. மனுஷனுக்கு மண்ட காயுது" என்று கத்த. 


"காரணத்தை நா சொல்றேன்டா" என்று சூர்யா அரவிந்த் அருகில் வர, "என்னடா நடக்குது இங்க... தெரிஞ்ச நீயாவது சொல்லுடா, இதுங்க என்னை லூசக்கிடும் போல இருக்கு மச்சி" 


"உன் பேரு என்னடா?" என்று அரவிந்தை பார்த்து கேக்க.


"டேய் நீயுமா டா. என்னடா உன் பொண்டாட்டி கூட சேந்து நீயும் லூசா கிட்டிய என்ன..?? என்ன நேரம் இப்ப..?? இப்ப போய் லூசு மாதிரி கேள்வி கேட்டுட்டு" என்று கடுப்பாக. 


நிலாவை பார்த்த படியே, "டேய்... நா கேக்குறதுக்கு மட்டும் பதில் சொல்லு?" என்று சூர்யா மீண்டும் சொல்ல. நிலாவுக்கு புரிந்துவிட்டது சூர்யாவிற்கு தன் திட்டம் புரிந்துவிட்டதென்று. ஒருவேளை அரவிந்த் கூட சற்று நிதானமாக யோச்சித்திருந்தால், அவனுக்கும் நிலாவின் திட்டம் புரிந்திருக்கும். ஆனா, அவன் விதி காதல் கண்ணை மறச்சிடுச்சு... ம்ம்ம் நம்ம என்ன செய்ய முடியும்.? 


சூர்யா மீண்டும் அதே கேள்வி கேட்க அரவிந்துக்கு மட்டும் இல்ல தேனு உட்பட அனைவரும் ஒன்றும் புரியாமல் சூர்யாவை பார்க்க, கடுப்பான அரவிந்த். "டேய் இப்ப என்ன என் பேரு தானே சொல்லணும்? என் பேரு அரவிந்த்… போதுமாடா…" என்றவனை பார்த்து சிரித்த சூர்யா. லட்சுமி அம்மா கோயில்ல அர்ச்சனை பண்ணும் போது உனக்கு என்ன பேர் சொல்லி அர்ச்சனை செய்வாங்க?" என்று கேட்ட… வெறுப்பான அரவிந்த் "டேய் ஏன்டா?" என்று ஆரம்பித்தவன் ஏதோ நியாபகம் வர அரவிந்த் முகத்தில் திடீரென பல்பு எரிந்தது. 


"டேய் சூர்யா நீ... நீ… சொல்றது உண்மையா?" என்று ஆரம்பித்தவன் அந்த வாக்கியத்தை முடிக்க முடியாமல் கண்களில் கண்ணீருடன் நிலாவை திரும்பி பார்க்க…


தேனு சூர்யாவையும் அரவிந்தையும் ஒன்றும் புரியாமல் மலங்க மலங்க பார்த்துக் கொண்டிருக்க. தேனுவின் கன்னத்தை அன்பாக தடவிய நம்ம அரவிந்த் அம்மா லட்சுமி, "என்னமா மருமகளே. உனக்கு இங்க என்ன நடக்குதுன்னு ஒன்னுமே புரியல இல்ல?" என்று சிரித்தபடியே கேட்க.. 


அவர் சொன்னது எதுவும் தேனு காதில் விழவில்லை, லட்சுமி அம்மா சொன்ன மருமகளே என்ற வார்த்தை மட்டும் தான் மீண்டும் மீண்டும் தேனுவின் காதில் எதிரொலித்தது..ன தேனுவின் அதிர்ந்த முகத்தை பார்த்து சிரித்த லட்சுமி, "சரவணன் வேற யாரும் இல்லம்மா.. இதோ நிக்றனே. என் புள்ள அரவிந்த், இவனோட ஜாதக பேரு தான் அது. நிலா உனக்காக பாத்திருக்க மாப்ளா சரவணனும், நீ காதலிக்கிற அரவிந்தும் ஒரே ஆள்தான்" என்று சொன்ன வார்த்தையில். தேனுவின் தலையில் ஒரு டன் பூக்களை ஒரே நேரத்தில் கொட்டியது போல் அவ்வளவு பரவசம்.. சொல்ல வார்த்தை இல்லாத சந்தோஷம் தேனுவிற்குள். அவளின் சந்தோஷம் கண்ணீராய் அவள் கண்களில் வடிய நிலாவை நன்றியுடன் பாரக்க.


அரவிந்த் தான் மாப்பிள்ளை என்று தெரிந்து அனைவரின் மனதிலும் அப்படி ஒரு நிம்மதி, சந்தோஷம். தனம்மாவிற்கு தன் மருமகளை நினைத்து பெருமை பொங்கியது.


கலை மட்டும், "ஏன்டி சூர்ப்பனகை? எதுக்குடி இப்டி செஞ்ச? எல்லாரையும் ஒரு நிமிஷம் கதிகலங்க வச்சுட்டியேடி?" என்று நிலா தலையில் நறுக்கென்று கொட்டு வைக்க. 


நிலா குறும்பாக சிரித்தவள், "அட போம்மா... இவங்க எனக்கு செஞ்சத விட, நா ஒன்னும் பெருசா செஞ்சிடலே" என்று குழந்தை போல் சிரித்துக் கொண்டே சொல்ல.


அனைவரும் முகத்திலும் ஒரு நிம்மதியான புன்னகை மலர்ந்தது. யாரும் எதிர்பாராத நேரத்தில் அரவிந்த் நிலா அருகில் சென்றவன். அவளை இருக்கி கட்டிக்கொண்டு "தேங்க்யூ நிலா தேங்க்யூ. ரொம்ப தேங்க்ஸ்டி குட்டி பிசாசு" என்று அளவுக்கு மீறிய ஆனந்தத்தில் கத்த.. "டேய் பாவி உன் ஆளு இங்க இருக்குடா. அது எம் பொண்டாட்டிடா" என்று சூர்யா பாவமாக சொல்ல. 


நிலாவை விட்டு நகர்ந்தவன். "உனக்கு ஏன்டா பொறாமை. என் தங்கச்சி நா கட்டிப் பிடிப்பேன். உனக்கு என்னடா.? உனக்கு வேணும்னா, அதே நிக்கிதே தேனு, தேவின்னு ரெண்டு தங்கச்சி நீ அதுங்கள கட்டிக்கோ" என்று சொல்ல.


"ஹலோ மாம்ஸ்களா!!! அப்ப எனக்கு யாரும் இல்லயா?" என்று இடுப்பில் கைவைத்து

 முறைக்க. "உனக்கு நா இருக்கேன்டா செல்லம்" என்று தேவி அவளை கட்டிக்கொள்ள. அங்கு மகிழ்ச்சி பரவியது.