கண்ட நாள் முதல் 27

 அத்தியாயம் 27


"ஏய் நிலா என்னடி இது... திடீர்னு வந்து தேனுக்கு மாப்பிள்ளை பாத்தாச்சு.. நாளைக்கு நிச்சயதார்த்த நாள் குறிக்க மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வராங்கன்னு சொல்ற. யாரு பையன்? எந்த ஊரு, நல்லவனா, குடும்பம் எப்படி எதுவும் தெரியாம நீ பாட்டுக்கு இப்படி ஒரு ஏற்பாடு செஞ்சு வச்சிருக்க..?? உனக்கு என்ன  இதெல்லாம் வெளையாட்ட போச்ச" என்று கலை நிலாவை முறைக்க,


"என்னம்மா நீ உன் பொண்ணை பாத்தி நீ புரிஞ்சி வைச்சிருக்குறது இவ்ளோ தானாமா... தேனு எப்ப நா பாக்குற பையன தான் கல்யாணம் பண்ணுவேன்னு சத்தியம் பண்ணாளோ. அப்ப இருந்தே அவ என்னோட பொறுப்புமா. நீ சொன்ன மாதிரி இது விளையாட்டு இல்லை. தேனுவோட வாழ்க்கை. அதான் கடந்த ஒரு மாசமா அந்த பையனை பத்தி விசாரிச்சு அவங்க அப்பா, அம்மா கிட்ட பேசி. அவங்களை தேனுவோட அப்பா, அம்மா கிட்ட பேச வச்சு, ரெண்டு தரப்புக்கும் இந்த சம்பந்தம் புடிச்சு போச்சு. மேற்கொண்டு பேச எதுவும் இல்லை, நிச்சயம் பண்ண வேண்டியது தான் பாக்கின்னு சொன்னாங்க. அதனால தான் நீங்க எல்லாரும் இங்க இருக்கீங்க. சோ நா நாளைக்கு அவங்களை இங்கயே வர சொல்லிட்டேன்" என்று சொல்ல. அதற்கு மேல் யாருக்கும் எதுவும் கேட்க தோன்றவில்லை. தேனுவிற்கு உள்ளுக்குள் எரிமலையே வெடித்துக்கொண்டிருந்தது என்றால் அரவிந்தின் நிலை அதைவிட மோசம். சூர்யாவிற்கு இதை எப்படி சமாளிப்பது என்று ஒன்றும் புரியவில்லை, ஆனாலும் நிலா மீதிருந்த நம்பிக்கை அவனை யோசிக்க வைத்தது. தேவியும் சந்தியாவும் இன்னும் நிலா கொடுத்த அதிர்ச்சியில் அப்படியே கல்லாக அமர்ந்திருக்க. 


"எல்லாம் சரி நிலாம்மா.. மாப்பிள்ளை யாரு? என்ன பண்றாரு?"


"அவரு பிஸ்னஸ் பண்றாரு குமார். ஒரே பையன், எந்த கெட்ட பழக்கமும் இல்ல. நல்ல பையன். பாக்க அப்படியே சூர்யா மாதிரி சூப்பரா இருப்பாரு" என்று சொல்ல.. ஒரு நிமிடம் நிலைமை மறந்து சூர்யா நிலாவை காதலாய் பார்க்க அப்போது தான் தன் சொன்னதின் அர்த்தம் புரிய... நாக்கை கடித்துக்கொண்டவள், தலை குனிந்தபடி  "நா ஆக்டர் சூர்யாவை சொன்னேன்" என்று விளக்கம் கொடுக்க.. சூர்யாவிற்கு புஸ்சென்று ஆகிவிட்டது.


"சரி நிலா இதுல நாங்க சொல்ல ஒன்னு இல்ல. இதுல முடிவு எடுக்க வேண்டியது தேனும் அவ அப்பா, அம்மாவும் தான். நாளைக்கு அவங்க வரட்டும். அதுக்கு அப்றம் நம்ம மிச்ச கதையை பார்ப்போம்" என்று தனம்மா அந்த பேச்சை முடிக்க... அதுவும் சரிதான் என்று பெரியவர்கள் ஆமோதிக்க, நிலா எல்லோரையும் சாப்பிட அழைத்தாள். இளையோர் இப்போது சாப்பாடு வேண்டாம் என்று சொல்லி விட.. நிலா மற்றவர்களை சாப்பிட அழைத்து சென்றாள். 


"ஏய் நிலா ஒரு நிமிஷம் எல்லாம் சொன்னா பையன் பேரை சொல்லவே இல்லயே?" என்று கலை அம்மா கேக்க. "அச்சோ... பாரு மா எனக்கு மறந்தே பேச்சு. மாப்பிள்ளை பேரு சரவணன்..."என்று சொல்லி விட்டு சிரித்துக் கொண்டே சென்றுவிட்டாள்.  


இவ்வளவு நேரம் தேனுவின் கண்ணில் சிறைப்பட்டு இருந்த கண்ணீர், மடைதிறந்த வெள்ளம் போல் கொட்டிக்கொண்டிருக்க... தேவிக்கு அவளை எப்படி சமாதானம் செய்வதென்று புரியவில்லை. அரவிந்த் பொறுத்து பொறுத்து பார்த்தவன். "ஏய் இப்ப எதுக்குடி இப்படி அழுதுட்டு இருக்க? இப்ப என்ன ஆகிப்போச்சு. மாப்ளா தானே பாத்திருக்கா. கல்யாணம் ஒன்னும் ஆகலயே" என்று கோபமாக கத்த. 


"டேய் ஏன்டா பாவம் அவளே அழுதுட்டு இருக்க. நீ அவள போய் சத்தம் போட்டுட்டு அமைதியா பேசுடா…"


"பின்ன  என்ன டா சூர்யா… என்னை என்ன செய்ய சொல்ற.?? இவ இப்படி அழுறதுனால என்ன ஆகிட போகுது. என்ன ஆனாலும் இவதான் என் பொண்டாட்டி அது மாறாது. என்ன அது நிலா சம்மதத்தோட இல்லயான்னு தான் இப்ப பிரச்சனை" என்று தன் முடிவில் தெளிவாக சொல்ல… தேனு சட்டென்று எழுந்தவள், "முடியாது நா நிலாக்கு சத்தியம் பண்ணிக் கொடுத்திருக்கேன். அவ சம்மதம் இல்லாம, நா உங்களை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்" என்று சொல்ல, அரவிந்துக்கு அடக்க முடியாத கோபம் வந்துவிட, "ஏய் நீ தான்டி நிலாக்கு சத்தியம் பண்ணி கொடுத்திருக்க... நா இல்ல. சோ அந்த சத்தியம் எந்தவிதத்திலும் என்னை கட்டுப்படுத்தாது. நீ மட்டும் அடம் புடிச்சா, அன்னைக்கு சொன்னது தான்… உன்னை கடத்திட்டுப்போய்  கல்யாணம் பண்ணிக்குவேன் அவ்ளோதான்" என்று உறுதியாக சொல்ல.


"முடியாது முடியவே முடியாது. நிலா விருப்பம் இல்லாமல்" என்று தேனு மீண்டும் தொடங்க… "ஏய் நா இவ்ளோ சொல்றேன் நீ மறுபடியும் அதையே சொல்லிட்டு இருக்க. ஏன்டி அப்ப நிலா வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்க சொன்ன, நீ அவனை கல்யாணம் பணணிப்பியா.?? என்னை விட நிலா அவ்ளோ பெருசா போயிட்டாளா உனக்கு?" என்று கத்த.. தேனுவிற்கும் கோவம் வந்து விட 


"ஆமா எனக்கு உங்களைவிட நிலா தான் முக்கியம். அவ சொன்ன நா யாரை வேணும்னாலும்" என்று ஆரம்பிக்கும் போதே அரவிந்த்தின் கை தேனுவின் கன்னத்தை பதம் பார்த்து இருந்தது. அரவிந்த் தேனுவை நெருங்கி அவள் கழுத்தை பிடித்து நெரித்தவன். "ஏய் இங்க பாருடி. இந்த ஜென்மத்தில் உனக்கு கல்யாணம்னு ஒன்னு நடந்த அது என் கூட மட்டும் தான் நடக்கும்." என்று நெருப்பின் வெம்மை யோடு வந்து விழுந்து அவன் வார்த்தை.


"டேய் டேய் அரவிந்த் என்னடா பண்ற நீ?… ஏன்டா இப்டி பண்ற?" என்று சூர்யா அரவிந்தை நொந்து கொள்ள. "பின்ன என்னடா பண்ண சொல்ற. எப்டி என்னால இவ இல்லாம வாழ முடியாதோ? அப்டி தான்டா இவளும், நா இல்லன்னா செத்து போய்டுவ. அது ஏன்டா இந்த மரமண்டைக்கு புரியமாட்டேங்குது. எனக்கும் நிலாவை பிடிக்கும் தான். அவ விருப்பத்தோடு இந்த கல்யாணம் நடந்த எனக்கு சந்தோஷம் தான். ஆனா, அவளுக்கு தான் என்னை கண்டாலே பிடிக்கலயே... அதுக்கு நா என்னடா செய்ய முடியும்." என்று தான் இயலாமையை வார்த்தைகளில் கொட்டியவன். பின்ன ஆழ்ந்த மூச்சு எடுத்து, இங்க பாரு தேனு உனக்கு ரெண்டே ஆப்ஷன் தான் ஒன்னு உன் விருப்பத்தோடு நம்ம கல்யாணம்.. இல்ல உன் விருப்பம் இல்லாம நம்ம கல்யாணம்.  ஆக மொத்தம் கல்யாணம் கன்ஃபார்ம். சாய்ஸ் இஸ் யுவர்ஸ்" என்றவன்.. அங்கிருந்து சென்றுவிட, அனைவரும் தலையில் கை வைத்து இந்த பிரச்சனையை எப்டி சரி செய்வது என்று குழம்பி தவிக்க, சூர்யா நிலாவிடம் இதைப்பற்றி பேச வேண்டும் என்று சென்றவன்.. 


"நிலானி நீ என்ன நினச்சு இப்படி பண்ணிட்டிருக்க. சரி தேனு உனக்கு சத்தியம் செய்து கொடுத்திருக்க ஓகே.  ஆனா, அதுக்காக நீ இப்படி விடிஞ்சா கல்யாணம் புடி பாக்கு வெத்தலையன்னு சொன்னா என்ன அர்த்தம்?" என்று கத்திய சூர்யாவை நிலா அழுத்தமான பார்வை பார்க்க... அந்த ஒரு பார்வையே சொல்லியது "அத நீங்க சொல்றீங்களா? எனக்கே தெரியாம என்னை கல்யாணம் பண்ணிகிட்டவர் தானே நீங்க?" என்ற குற்றச்சாட்டு இருக்க. சூர்யா மேற்கொண்டு எதுவும் பேசவில்லை.  


"உன் பார்வையோட அர்த்தம் எனக்கு புரியுதுடி.. ஆனா. இது அப்டி இல்ல.. யாரு கண்டா ஒருவேல தேனு யாரையாவது மனசுல நினச்சுட்டு இருந்தா" என்று ஆரம்பிக்க… அவனை இடைமறித்தவள். "தேனு பத்தி எனக்கு தெரியும். எனக்கு சத்தியம் பண்றதுக்கு முந்தி அவ யாரையாவது விரும்பி இருந்தால் அத அவ என்கிட்ட சொல்லி இருப்பா, எனக்கு சத்தியம் செஞ்சு குடுத்த பிறகு கண்டிப்பாக அவ அதை மீற மாட்டான்னு எனக்கு தெரியும். சோ நீங்க அத பத்தி கவலைப்படாதீங்க" என்றவள் சென்று நிம்மதியாக உறங்கி விட. இதையெல்லாம் தேனுவும் தேவியும் பின்னால் இருந்து கேட்டுக்கொண்டிருந்ல தேனுவிற்கு மனது பொறுக்கவில்லை. "நா நிலாவுக்கு துரோகம் பண்ணிட்டேன் துரோகம் பண்ணிட்டேன் அவளுக்கு பண்ண சத்தியத்தை மீறிட்டேன்" என்று புலம்பி தவிக்க. அனைவருக்கும் அன்று இரவு உறக்கம் தொலைந்த இரவாகிபோனது.


விடிய போகும் நாளைய பொழுது இவர்களுக்கு என்ன ஆப்பை வைத்து காத்திருக்கிறதோ தெரியலயே...


ஆதவன் தான் கடமையை நிறைவேற்ற அதிகாலையிலேயே வந்து தன் அக்கினி கைகள் கொண்டு நிலமகளை எழுப்பினான்.


நிலா காலையிலேயே எழுந்து பூஜைக்கு தேவையான வேலைகளை பார்க்க. தனம்மா அவளுக்கு துணையாக இருந்தார்.  இரவு முழுவதும் அழுது அழுது தேனுவின் முகம் நன்கு வீங்கி இருக்க..ன அரவிந்த் விட்ட அறையில் அவள் வலது கன்னம் சிவந்து போய் இருந்தது. இன்று என்ன நடக்குமோ என்று பயந்து கொண்டு இருந்த தேனுவை தேவியும், சந்தியாவும் சமாதானப்படுத்த.. "என்ன தேனு இது, சின்ன புள்ள மாதிரி அழுதுகிட்டு... இப்ப என்ன நடந்து போச்சு.. தேதி தானே குறிக்க வரங்க பாத்துக்கலாம் விடுடி. மாப்பிள்ளையை துரத்துறது நமக்கு என்ன புதுசா. நிலாக்கு வந்த எத்தனை மாப்பிள்ளையை நாம ஓட ஓட விரட்டி இருக்கோம் மறந்துட்டியா? இதெல்லாம் நமக்கு சப்ப மேட்டர்டி. அப்டி நம்மையும் மீறி ஏதாவது நடந்து, கல்யாணம் வரைக்கும் போன, பையனை கிட்நாப் பண்ணிடலாம் யூ டோன்ட் வொரி பேபி" என்றவள் "ஆமா தானா சந்தியா என்று அவளை  பார்க்க. அவள் தேவியை முறைத்துக் கொண்டிருந்தாள். "அக்கா அப்ப நீங்க தான் நிலாக்கு வந்த மாப்பிள்ளை எல்லாம் விரட்டி விட்டீர்களா"


" ஏய் அதெல்லாம் ஒல்டு கதை டி. இப்ப அதெல்லாம் எதுக்கு விடு விடு. இப்ப தேனு கதையை பாப்போம்…"


"ஓகே தேனு அக்காவுக்காக இப்ப விடுறேன். தேனுக்கா நீங்க பீல் பண்ணாதீங்க. எல்லாத்தையும் சரி பண்ணிடலாம். நீங்க இப்ப போய் குளிச்சு ரெடியாகி வாங்க நம்ம பூஜைக்கு போய் சாமி கிட்ட வர மாப்பிள்ளைக்கு கை, கால் ஒடையனும், வாந்தி பேதி வரணும்னு வேண்டிக்குவோம்" என்று சொல்ல தேனு முகத்தில் விரக்தி புன்னகை பரவியது.


இங்கு தேனு நிலை இப்படி இருக்க... அரவிந்த் நிலை அதைவிட மோசமாக இருந்தது. நேற்று தேனுவை அடித்தது அவளுக்கு வலித்ததே இல்லயோ? இவன் இதயத்தில் மரண வலியை தந்தது. பாவம் தேனு என்ன இருந்தாலும் 'அவளை அடிச்சது தப்பு' என்று ஒரு மனம் சொல்ல, இன்னொரு மனமோ, 'அவ சொன்னது மட்டும் சரியா' என்று சண்டை இட அரவிந்த் உள்ளம் எரிமலையாய் கொதித்தது. "ம்ம்ம்" என்று ஆழ்ந்த மூச்சு எடுத்தவன். என்ன நடந்தாலும் பாத்துகலாம் என்று பூஜைக்கு கிளம்பினான்.


இங்கு தனம்மா," நிலா எல்லா வேலையும் ஓவர். நீ போய் உன் புருஷனை எழுப்பி ரெடியாக சொல்லு" என்று சொல்ல. "சரி அத்தை" என்றவள். அவர்களின் அறைக்கு செல்ல. அங்கு சூர்யா விடியும் வரை தேனு, அரவிந்த் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தவன். நேரம் கழித்து தான் உறங்கியிருந்தான். உறங்கும் தன் கணவனை ஒரு நிமிடம் தன் உள் மனதில் நிறைத்து கொண்டவள். இதற்கு முன்பெல்லாம் அவனை தொட்டு எழுப்ப தயங்குபவள். இன்று இவன் முழுவதும் என் சொந்தம் என்ற எண்ணம் வர, தூங்கும் அவனை தன் தளிர்கரம் கொண்டு உலுக்கியவள். 


"சூர்யா எழுந்திரிங்க...  பூஜைக்கு டைம் ஆச்சு, அத்த கூப்பிடுறாங்க எழுந்திரிங்க" என்று எழுப்ப. அவன் 

எழுந்துவாதாக தெரியவில்லை. நிலா பொறுத்து பொறுத்து பார்த்து வெறுத்து போனவள். "சூர்யா எந்திரி... சூர்யா எந்திரி…" என்று அஞ்சலி பாப்பா போல் அவன் காதில் கத்த. சூர்யா விழுந்து அடித்து எந்திரிக்க… நிலா அவனை பார்த்து வாயை மூடி குலுக்கி குலுக்கி சிரித்தாள்.  


காலைவேளையில் சூரியஓளி கதிர்கள் மேல் கால் வைத்து பூமிக்கு இறங்கி வந்த தேவதை போல் தன் கண்முன்னே அழகே உருவாய் நின்று இருந்த தன் காதல் ஓவியத்தின் சிரிப்பில் சிதறியவன். அவள் கட்டி இருந்த சிவப்பு வண்ண காஞ்சி பட்டு புடவையின் மடிப்பிலும், அது சொருகி இருந்த இடுப்பிலும் தன் சிந்தையை இழந்தான். அவளின் காதுகளில் ஆடிய ஜிமிக்கியில் அவன் சிந்தனையும் சேர்த்து ஆட… அவள் குழல் முழுதும் சூடி இருந்த மல்லிகை அவனை பாடாய் படுத்த..


"ஏன்டி காலங்காத்தலை என்ன போட்டுத்தள்ளனுன்னே இப்டி வந்து நிக்கிறியா?" என்றவனை புரியாமல் பார்த்த நிலா, " நா என்ன செஞ்சேன். அத்த தான் உங்களை எழுப்பி விட சொன்னாங்க. அதான் வந்தேன்" என்று தன் குயில் குரலில் சொல்ல.. அந்த குரலில் உருகிய சூர்யா அவளருகில் வந்தவன். "இதோ பாருடி இன்னைக்கு பூஜை ஒழுங்கா நடக்கணுன்னா? நீ  முடிஞ்சா வரை நா தனியாக இருக்கும்போது என் கண்ணுக்கு முன்னாடி வராத. மீறி  வந்த நடக்குற எதுக்கும் நா பொறுப்பில்ல" என்று ஒரு மாதிரியான குரலில் அவளை விழுங்கும் பார்வை பார்த்தபடி சொல்ல நிலாவுக்கு தூக்கிவாரி போட்டது. "அய்யா சாமி இந்த ஆட்டத்துக்கு நா வர்ல" என்றவள் அங்கிருந்து ஓடி விட.  சூர்யாவுக்கு மூச்சு விடுவதே கஷ்டமாக போனது. " பாவிமக இப்டி இம்சை பண்றாளே" என்று புலம்பியபடியே குளிக்கச் சென்றான்.


இங்கு கீழே சூர்யாவை தவிர மற்ற அனைவரும் வந்து விட. தேனுவின் முகம் பார்த்த நிலா. "ஏய் என்னடி?? என்ன ஆச்சு? முகம் ஏன் இப்படி வீங்கி போய் இருக்கு. கன்னம் வேற சிவந்திருக்கு?" என்று தேனுவின் கன்னத்தை தடவி பார்க்க.. அரவிந்துக்கு கண்களில் கண்ணீர் வரவா? வேண்டாமா? என்று எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது.


"ஒன்னு இல்ல நிலா நைட்டு கதவுல இடிச்சிக்கிட்டேன். அதான் கன்னம் சிவந்திருக்கு" என்று வாய்க்கு வந்ததை உளறி வைக்க. நிலா அவளை கூர்மையான பார்வை பார்க்க அதை தாங்க முடியாது தேனு தலையை குனிந்து கொண்டு போய் விட. நிலாவிற்கு உள்ளுக்குள் என்னவோ செய்தது.