உன் விழியில் கைதானேன் 19
விழி 19 மருத்துவமனை அறையில் தேவா படுத்திருந்த கட்டிலின் அருகில் அவன் கையைப் பிடித்துக் கொண்டு விழி மூடிப் படுத்திருந்த சந்தியாவுக்கு யாரோ தன்னை உற்றுப் பார்ப்பதுபோல் தோன்றச் சட்டென எழுந்தவள் கட்டிலில் இருந்தவனைப் பார்க்க, அவனும் அவளையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்க, அவள் கண்களில் அவளையும் அறியாமல் கண்ணீர்த் துளிகள் முத்து முத்தாக இறங்கியது. முழுதாக இரண்டு நாள்கள் அனைவரையும் பயத்திலேயே வைத்திருந்த தேவா, எந்த ஆபத்துமின்றி அப்போதுதான் கண் விழித்திருந்தான். ‘எனக்குத் தெரியும்டா… எனக்குத் தெரியும், உனக்கு ஒன்னும் ஆகாதுன்னு…’ என்று நினைத்தவள் அவன் கையை மெல்ல அழுத்த, ‘இந்த ஜென்மத்தில் உன்னைத் தனியா நிம்மதியா விட்டு நான் போக மாட்டேன்டி.’ என்று அவளுக்குத் தன் கண்களால் பதில் சொன்னவனைப் பார்த்து, சந்தியாவுக்குச் சிரிப்பும் அழுகையும் சேர்ந்தே வந்தது. அடுத்த ஒரு மணி நேரத்தில் அனைத்துப் பரிசோதனைகளும் முடிந்து வேறு அறைக்கு மாற்றப்பட்டான் தேவா. இன்னும் ஒரு வாரம் மருத்துவமனையில் அவன் இருக்க வேண்டும் என்று, மருத்துவர்கள் சொன்ன பிறகே அனைவருக்கும் நிம்மதிப் பெருமூச்சு வெளிவந்தது. அந்த ஒரு வாரமும...