கண்ட நாள் முதல் 25
அத்தியாயம் 25
சூர்யா முக்கியமான வேலை என்று காலை வெகு சீக்கிரமே வெளியே கிளம்பி விட, நிலாவுக்கும் தூக்கம் கலைந்து விட, அவளும் எழுந்து கீழே வந்தவள், காலை உணவை தயார் செய்துவிட்டு, ஹாலில் அமர்ந்து அன்றைய செய்தித்தாளில் கவனத்தை செலுத்த, "குட் மார்னிங்" என்று சொல்லிக்கொண்டு வந்த தங்கையையும் தோழியையும் பார்த்தவள், "வாங்கடி வானரங்களா… என்ன நேத்து நல்லா தூங்கினீங்களா?"
"ஆமாக்கா நேத்து ஆடிய ஆட்டம். செம்ம டையர்டு கா. அசந்து தூங்கிட்டோம்" என்று சந்தியா சொல்ல தேனுவும், _ஆமா நிலா ரொம்ப நாள் கழிச்சு நாமெல்லாம் ஒன்னு சேர்ந்து அரட்டை அடித்து நல்லா இருந்தது. அந்த சந்தோஷம் நிம்மதியிலேயே நல்லா தூங்கினேன்."
"ம்ம்ம்ம் அதான் தெரியுதே... பத்து மணிவரை நல்ல இழுத்து போத்திட்டு தூங்கிட்டு இருந்தீங்க" என்று கிண்டல் செய்தவள், "சரி சரி... சீக்கிரம் ப்ரஷ் ஆகிட்டு வாங்க டிபன் எடுத்து வைக்கிறேன்" என்று நிலா சமையல் அறைக்கு போக, மூவரும் ரூமிற்கு போய் குளித்து விட்டு டைனிங் டேபிளில் வந்து அமர்ந்தனர்.
நிலா அவர்களுக்கு உணவு பரிமாறி விட்டு, தனக்கும் வைத்துக்கொண்டு அமர, நால்வரும் அரட்டை அடித்து கொண்டு காலை உணவை முடித்து ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
"ஆமா தனம்மா, அப்பா, அண்ணா யாரையும் காணோம், எல்லாரும் எங்க நிலா?"
"சூர்யாக்கு ஏதோ முக்கிய வேலையாம் தேவி. அதான் காலையிலேயே கிளம்பிட்டார். அத்தையோட சொந்தக்காரங்க யாருக்கே உடம்பு சரியில்லயாம்.. அதான் அத்தையும் மாமாவும் போய் இருக்காங்க.. நாளைக்கு தான் வருவாங்க…"
"ஓஓஓ அப்டியா…" என்ற தேவி "ஏய் நிலா. சொல்ல மறந்துட்டேன். உன்னோட கல்யாண லீவ் முடிய போகுதுடி. எப்ப வந்து மறுபடி ஜாயின் பண்ண போற?" என்று கேட்க…
"இல்ல தேவி, நா வேலையை ரிசைன் பண்ண போறேன்" என்று சொல்ல.. மூவருக்கும் தூக்கிவாரிப் போட்டது.
"ஏய் நிலா என்னடி சொல்ற நீ? புரிஞ்சு தான் பேசுறியா… உனக்கு இந்த வேலை எவ்ளோ புடிக்கும்னு எங்களுக்கு நல்லா தெரியும். அப்றம் எதுக்கு இந்த முடிவு.ன. தனம்மா இல்ல சூர்யா அண்ணா எதுவும் சொன்னாங்களா" என்று தேனு அவள் சொல்வதை நம்ப முடியாமல் பார்க்க
"இல்ல தேனு யாரும் எதுவும் சொல்லல. இது நானா எடுத்த முடிவு தான். அதுவும் அத்தைக்காக."
"என்னடி சொல்ற?? எனக்கு ஒன்னுமே புரியல..?? என்ற தேவியை பார்த்து அழகாய் சிரித்த நிலா, "பாவம்டி அத்த. இத்தனை வருஷமா இவ்ளோ பெரிய வீட்ல தனிமையில இருந்து ரொம்ப கஷ்டப்பட்டு இருக்காங்கடி. நமக்கு ஒரு பொண்ணு இல்லையேன்னு இத்தனை வருஷம் ஏங்கி தவிச்சு இருக்காங்க, நம்ம நாலு பேர் இங்க வந்த பிறகு தான் அவங்க சந்தோஷமா இருக்காங்க. இப்ப போய் நா வேலைக்கு போயிட்டா, மறுபடியும் அவங்களுக்கு அந்த தனிமை வந்துடும்.. அதான் வேலையை விட்டுட முடிவு பண்ணிட்டேன். அதோட மாமாவுக்கும் அவர் ஆபிசில் ரொம்ப வேலை. சோ இனி நா வீட்ல இருந்த மாதிரியே அவரோட வேலையில உதவியா இருக்க போறேன்" மூவரும் பெருமையாக பார்க்க..
"ஐ ஆம் ப்ரவுட் ஆப் யூ நிலா. நீ தனம்மா மேல வச்சிருக்க பாசத்தை பாக்க ரொம்ப சந்தோஷமா இருக்குடி."
"இதுல சந்தோஷப்பட ஒன்னும் இல்ல தேனு. இந்த உலகத்தில் ரொம்ப அழகாக விஷயம் அன்பு தான்டி. அதை அத்தை எனக்கு நிறைய, இன்னும் சொல்லப்போனா அளவுக்கு அதிகமாவே கொடுத்திருக்காங்க. இப்ப என் முறை, அந்த அன்பை நா அவளுக்கு திருப்பி செய்யுறேன் அவ்ளோதான்" என்று சாதாரணமாக சொல்ல. நிலாவின் இந்த செயலில் மூவரும் மெய்சிலிர்த்து தான் போயினர்.
"ஏன் நிலா..?? தனம் அம்மா உன் கிட்ட பாசமா இருக்காங்க… அதனால நீயும் அந்த பாசத்தை அவங்களுக்கு திருப்பி தர்ர... ஓகே. அதே மாதிரி தானா சூர்யாண்ணாவும் உன்னை லவ் பண்றாரு. அப்ப நீயும் அவரை திரும்ப லவ் பண்ணனும் தானே" என்று தான் அதி பயங்கர சந்தேகத்தை கேட்க.
தேவி சொல்வது உண்மைதான். நிலாவுக்கு சூர்யாவின் அன்பும், காதலும் புரிய தான் செய்கிறது. ஆனால், பாவம் அவள் கடந்து வந்த கசப்பான அனுபவத்தால், அவளின் மனநிலையும் உணர்வுகளும் அவளுக்கே புரியாமல் தவிக்கிறாள் நிலாவிடம் தேவி கேள்விக்கு பதில் இல்லாமல் போக, நிலாவின் முகம் வாடிவிட… அந்த சூழ்நிலையை மாற்ற நினைத்த சந்தியா.
"ஆமா நேத்தே கேக்கணும்னு நெனச்சேன். தேவிக்கா சொன்னாங்க, அது யாரு அந்த கவிதா. என்னோட மாமஸ்ச சைட் அடிக்கிறவா? அவளை சும்மாவா விட்ட நிலா நீ?"
"அய்யோ... அதை ஏன் கேக்குற சந்தியா. இவ அடிச்ச வேப்பிலல அந்த கவி கதி அதோகதி ஆகி போச்சு. ரூமை விட்டு வெளிய வரும்போது சரக்கு அடிச்சா குரங்கு மாதிரியே வந்தவளா பாக்கணுமே... ஆனா, நிலா நீ அவ கன்னத்தில் உன் கைவரிசையையும் காட்டி இருக்கலாம். ஜஸ்ட் மிஸ்" என்று சிரிக்க,
நிலா கோபமாக, "அவளை எதுக்குடி நா அடிக்கணும்... நியாயமா பாத்த உங்க நொண்ணனை தான் அடி வெளுக்கணும். இந்த மாதிரி ஒருத்தியை வேலைக்கு வச்சிருக்குறதுக்கு!… நேத்து நல்லா நாள் ஆச்சேன்னு அந்த மனுஷனை சும்மா விட்டேன். இன்னைக்கு அவரை கண்டிப்பா எதாவது செஞ்சே தீருவேன்" என்று கோபமாக சொல்ல.
மூவரும் சிரித்து விட்டு, அதுக்கு வாய்ப்பே இல்ல நிலா. நீ அண்ணாவ பாத்தாலே ஆஃப் ஆகிடுவ… இதுல நீயாவது அவரை எதும் செய்யுறதாவது" என்று தேவி நிலாவை கிண்டல் செய்ய. நிலா அவளை அக்னியாய் முறைக்க,
"ஹலோ ஹலோ நிலா. கூல் கூல்... எதுக்கு இப்டி நெத்தி கண்ண தொறக்குற... நீ அண்ணாவ என்ன வேணும்னா பண்ணு. என்ன விட்டுடு. எனக்கு என் உசுரு முக்கியம் தாயே… ஆல் தி பெஸ்ட். நாங்க கெளம்புறோம்" என்று மூவரும் கிளம்ப. அவர்களை அனுப்பி விட்டு சூர்யாவை என்ன செய்யலாம் என்று யோசித்தவள். இன்று மதியம் சூர்யாவிற்கு சமைக்க வேண்டும் என்பது ஞாபகம் வர… "அச்சசோ... இத்தனை நாள் அத்தைக்கு ஹெல்ப் மட்டும் தான் பண்ணியிருக்கேன்.. இன்னைக்கு தான் நா முதல் முதல்ல அவருக்கு சமைக்கப்போறேன். அவர் டேஸ்ட் எனக்கு தெரியாதே? எப்டி இருக்க போகுதோ. ம்ம்ம்ம் எவ்ளோ கண்றாவியா இருந்தாலும் அவர் தின்னு தான் ஆகணும். நேத்து அந்த கவிதா இவரை பாத்து சைட் அடிக்கும் போது பாத்துட்டு சும்மா இருந்ததுக்கு என் சமையல திங்குறது தான் அந்த மனுஷனுக்கு தண்டனை" என்று தனக்கு தானே சொல்லியவள். அங்கு மஷ்ரும்ஐ பார்க்க வேலைக்காரி லட்சுமி சொன்னது நிலாவுக்கு ஞாபகம் வந்தது. சூர்யாவிற்கு மஷ்ரும் சுத்தமாக பிடிக்காது. ஒரு முறை தனம்மாவிற்கு செய்த மஷ்ரும்ஐ தவறுதலாக சூர்யாவிற்கு பரிமாறி விட... சூர்யா, லட்சுமியை பயங்கரமாக திட்டி விட்டதும் நிலாவுக்கு நினைவு வர, "ஐடியா" என்றவள். மஷ்ருமை வைத்து சமைத்து முடித்து சூர்யாகாக காத்திருக்க.
வீட்டு வாசலில் சூர்யாவின் கார் வந்து நின்றதும். நிலா ஒரு ஆர்வத்தில் வாசலில் வந்து நிற்க… சூர்யா அதிசயமாக அவளை பார்த்தவன். "என்ன இது? இவ முழியே சரியில்லயே. எப்ப என்ன பாத்தாலும் பார்வையில் ஒரு தடுமாற்றம், சின்ன திமிரு, கோவம் தான் இருக்கும். இன்னைக்கு என்னமோ வித்தியாசமா ஒரு கோக்கு மாக்கு தெரியுதே. நம்ம பழிவாங்க ஏதும் பிளான் போட்டு
இருப்பாளோ.?? என்று யோசனையும் உள்ளே வர.
நிலா, "வாங்கங்க சாப்பிடலாம், லன்ச் ரெடி" என்று உற்சாகமாக சொல்ல, சூர்யாவிற்கு பக்கென்று ஆனாது. "என்னது லன்ச்சசசச?? கண்டிப்பா அப்ப ஏதோ பெரிய ஆப்பு தான் வச்சிருக்கான்னு மட்டும் புரியுது. அது என்னன்னு தான் புரியல… ம்ம்ம்ம் சமாளிப்போம்" என்று பாத்ரூம் சென்று ப்ரெஷ் ஆகி வந்தவன். டைனிங் டேபிளிலுக்கு வர, அங்கிருந்த மஷ்ருமை பார்த்தவனுக்கு நிலா தனக்கு வைத்த ஆப்பு எது என்று புரிந்தது. அவளை பார்த்து மென்மையாக சிரித்தவன். தன் ஆசை மனைவி முதல் முதலில் தனக்காக செய்த உணவை எந்தவித முகச்சுழிப்பும் இன்றி சாப்பிட்டு முடித்தவன். நிலாவை பார்த்து ஏதோ போல் சிரித்து விட்டு போக. ஏனோ எப்போதும் போல் நிலாவால அவன் சிரிப்பை ரசிக்க முடியவில்லை. அந்த நேரம் அங்கு வந்த லட்சுமியிடம் மீதி இருந்த சாப்பாட்டை அவர்கள் பிள்ளைகளுக்கு எடுத்துப்போக சொல்ல. லட்சுமி மஷ்ருமை பார்த்து "அய்யோ! நிலாம்மா என்ன இது மஷ்ரும் சமைச்சிருக்கீங்க? சூர்யா தம்பி பார்த்த கத்த போறாரு மா"
"ஏன்க்கா? எதுக்கு கத்தணும்? என்ன வந்துது இப்ப? எதுக்கு இப்படி பதறீங்க.?"
"அய்யோ நிலாம்மா சூர்யா தம்பிக்கு மஷ்ரும்னா அலர்ஜி. அத சாப்பிட்ட அவருக்கு ஆகாது. வீசிங்கும் காய்ச்சலும் வந்துடும்" என்று சொல்ல. நிலாவிற்கு ஒரு நிமிடம் உயிரே நின்று விட்டது. அவளே அறியாமல் அவள் கால்கள் சூர்யா அறை நோக்கி ஓட, அங்கு சூர்யா மூச்சு விட முடியாமல் கஷ்டப்பட்டு கொண்டிருப்பதை பார்த்தவள்., "சூர்யா என்… என்ன ஆச்சுங்க? என்ன பண்ணுது" என்று அவன் நெஞ்சை தடவியபடி பதறி துடிக்க.
"ஒன்னு இல்ல நி… நிலா நீ... நீ… பயப்படாத" என்று தட்டு தடுமாறி சொல்ல. அவன் உடம்பு நெருப்பாக கொதிக்க ஆரம்பித்தது. பதறிய நிலா டாக்டருக்கு ஃபோன் பண்ணி வர சொல்ல. அடுத்த பத்து நிமிடத்தில் டாக்டர் வந்து, ஊசி போட்டு மருந்து கொடுத்து விட்டு செல்ல, நிலா சூர்யாவை அக்னியாய் முறைத்துக் கொண்டிருந்தாள்.
"நிலானி செல்லம் இப்ப எதுக்கு மாமாவை இப்டி அன்பா பார்த்துட்டு இருக்க" என்று கண்ணடிக்க வந்ததே நிலாவுக்கு கோபம்.
"டேய் லூசாடா நீ.? இல்ல லூசான்னு கேக்குறேன். உனக்கு தான் மஷ்ரும் அலர்ஜி இருக்கு இல்ல, அப்றம் ஏன் டா அதை சாப்டா?" என்று அவன் மார்பில் குத்திய நிலாவின் குரலில் அப்டி ஒரு வேதனை. அடிக்கும் அவள் வாழைத்தண்டு கைகளை தன் பிடியில் அடக்கியவன்.அவள் கண்களை நேராக பார்த்து…
"அடியே லூசு பொண்டாட்டி, நீ எனக்காக முதல் முறையா ரொம்ப ரொம்ப ஆசைய சமச்சிருக்க.. அத போய் நா எப்டி டி வேணாம்னு சொல்லுவேன். என்று குறும்பாய் சொல்ல. அவன் காதல் அவள் மனதை நிறைக்க… இமைக்காமல் அவன் முகத்தையே பார்த்தவள்... மீண்டும் சிறுபிள்ளை போல் தேம்பி தேம்பி அழுதவள், "சாரி சூர்யா... சத்தியமா தெரியாது… எனக்கு தெரியாது" என்று வார்த்தை வராமல் தவிக்க.
அவள் கலங்கிய கண்களை தன் கை கொண்டு துடைத்தவன்." எனக்கு தெரியும்டி. நீ வேணுன்னு செஞ்சிருக்க மாட்டேன்னு எனக்கு நல்லா தெரியும். உன்னால நான் கஷ்டபடுறத பாக்க முடியாது" என்றவன அவளை தன் நெஞ்சில் சாய்த்து அவள் தலையை வருடி விட…
கணவன் மார்பில் முகம் புதைத்தவள். "நீங்க மூச்சு விட கஷ்டப்படுறத பாத்ததும் எனக்கு உசுரே போயிருச்சு. ஒரு நிமிஷம் எனக்கு உலகமே நின்னு போனா மாதிரி ஆயிடுச்சு" என்று அழுதவள் அன்பில் மனம் குழைந்தவன். தனக்காக அழுது சிவந்த கண்களிள் முத்தமிட்டு, "நிலானி இதுவரைக்கும் நா என்னோட காதலை உனக்கு பல வழியில் உன்னை உணர வச்சிருக்கேன். ஆனா, இப்ப வரை நேரா உன் கிட்ட அதை சொன்னது இல்ல. ஆனா, ஏன்னு தெரியலடி இப்ப எனக்கு அதை சொல்லணும்னு ஆசைய இருக்குடி..!" என்றதில் நிலாவிற்கு முழு உடலும் ஒருமுறை அதிர்ந்து நின்றது. இதயம் இயல்பை மீறி வேகமாய் துடிக்க. அவள் கெண்டை மீன் கண்கள் ரெண்டு பட பட என்று அடித்துக்கொள்ள..
சூர்யாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவளை பிடித்து இருந்த சூர்யாவின் கைகளுக்கு நிலாவின் உடல் நடுங்குவது தெளிவாக தெரிய... அவளை தன்னோடு இறுக்கி அணைத்தவன். அவளில் காதுகளின் அருகில் தன் உதடுகளை கொண்டு வர. அவன் தொடும் முன் அவனின் அடர்ந்த மீசை முடிகள் நிலாவின் காதுகளை தொட்டு விளையாட... அந்த குறுகுறுப்பில் நிலா தன்னுடலில் ஒரு இன்ப அதிர்வை உணர்ந்தாள்.
நிலாவின் சிறிய தாமரை பூப்போல் மலர்ந்து இருந்த காதுகளில் மென்மையாக, "ஐ லவ் யூ நிலானி" என்று சொல்லி அவளின் கன்னத்தில் முத்தமிட… நிலா அவள் கணவனின் காதலில் மொத்தமும் கரைந்துவிட்டாள். எவ்வளவு நேரம் அவன் மார்பில் தஞ்சம் கிடந்தாள் என்று அவளுக்கே தெரியவில்லை… கணவன் மார்பில் மயங்கி கிடந்தவள் சூர்யாவின், "அடியேய் பொண்டாட்டி நான் சொன்னதுக்கு பதில் சொல்ல மாட்டியா?" என்று தன்னவனின் குரலில் நிகழ் உலகிற்கு வந்தவள். அவனை விட்டு விலகி சொல்ல முயல.
. நிலாவின் கையை பிடித்து நிறுத்திய சூர்யா, "பதில் சொல்லிட்டு போ நிலானி" என்றவன் கண்ணில் அவ்வளவு காதல். அது நிலாவுக்கு தெரிந்தாலும் ஏனோ அதை ஏற்க தான் முடியவில்லை.
"சாரிங்க இதுக்கு இப்ப என்கிட்ட பதில் இல்லை" என்று கலக்கத்துடன் வந்த நிலாவின் வார்த்தையில் மனம் வருந்திய சூர்யா. அவளை தான் அருகில் உட்காரவைத்தவன், "நா கேக்குறதுக்கு பதில் சொல்றியா நிலானி?" என்க. நிலா அதற்கு சரி என்று தலையாட்டினாள். "கொஞ்ச நேரம் முந்தி நா கஷ்டப்பட்டத பார்த்து அப்டி பதறி துடிச்சியே அது ஏன்டி?" என்று கேட்க.. நிலாவிடம் பதில் இல்லை. "சரி அத விடு இப்ப சொன்னீயே, நீங்க மூச்சு விட கஷ்டப்பட்டதை பாத்து எனக்கு உசுரே போயிருச்சுனு அதுக்கு என்ன அர்த்தம்?" என்று கேட்க பாவம் நிலாவுக்கே அதற்கான பதில் தெரியவில்லை. அதனால் தலை குனிந்து அமைதியாக இருந்தவளின் நாடியை பிடித்து உயர்த்தியவன். "நீயும் என்ன காதலிக்கிறடி. அது எனக்கு நல்லா தெரியது. ஆனா, உனக்கு தான் அது புரியவே மாட்டேங்குது. இது உனக்கும் எனக்குமான பிரச்சனை இல்லடி.. உனக்கும் உனக்குமான பிரச்சனை அத நீதான் சரிப்படுத்த முடியும். உனக்குள்ள நீ தேடினா கண்டிப்பா உன் மனசுல நா தான் இருக்கேன்னு உனக்கே புரியும். அப்டி ஒருநாள் வந்து நீயா உன் காதலை என்கிட்ட சொல்ற வரை உனக்காக என் காதல் கத்திட்டு இருக்கும்டி" என்று நிறைந்த காதலுடன் வந்த சூர்யாவின் வார்த்தை நிலாவின் உயிர் வரை சென்று தாக்க... அதற்கு மேலும் அங்கு இருக்க முடியாமல். "நீங்க ரொம்ப டயர்டா இருப்பீங்க. தூங்கி ரெஸ்ட் எடுங்க" என்றவள் அங்கிருந்து சென்று விட. கண்கள் முழுதும் ஏக்கத்துடன் போகும் அவளையே பார்த்துக் கொண்டிருந்த சூர்யா. தன் காதலை வெளிப்படுத்திய மகிழ்ச்சியில் நிம்மதியாக உறங்கி விட்டான்.
இங்கு நிலாவின் நிலை தான் பாவமாகி விட்டது. சூர்யா கேட்ட கேள்விகளை, நிலா தன்னை தானே பலவாறு கேட்டு பார்த்தாள். சூர்யாவை நா விரும்பலன்னா… அப்றம் ஏன் நா அவரோட சேட்டைய ரசிக்கிறேன். உண்மையை சொல்லப் போனா, இப்பெல்லாம் நா அவரோட அருகாமைக்கு ரொம்ப ஏங்குறேன். அவரு மூச்சு விட கஷ்டப்படும்போது எனக்கு உயிரே போய்டுச்சு... அது ஏன்?" என்று தன்னை தானே "ஏன்? ஏன்?" என்று கேள்வி கேட்ட நிலாவிற்கு கிடைத்த ஒரே பதில் "சூர்யா" "சூர்யா" மட்டும் தான். நிலாவின் இதழ்கள் அவளையும் அறியாமல் புன்னகை சூடிக்கொள்ள. "அப்… அப்ப… அப்போ நானும் அவரை… நானும் அவரை காதலிக்கிறேன்." என்றவள் விழிகள் அவள் காதல் கண்ணீராய் வழிய...
பலநாள் தன்னை வாட்டி வதைத்த உணர்வுக்கு இன்று காதல் என்ற உருவம் கிடைத்து விட. நிலாவின் காதலை அறிந்து கொண்ட மனது வானில் ரெக்கை இன்றி பறந்தது. இதயத்தில் இருந்த பாரம் முழுவதும் இறங்கி அங்கு முழுவதும் நிறைந்து விட்டிருந்தான் அவள் கண்கவர் கண்ணாலன். காதலை அறிந்த நொடி, அந்த காதலுக்குரியவனிடம் அதை சொல்ல காற்றாய் பறந்து காதலனிடம் வந்தவள். உலகின் மொத்த நிம்மதியையும் முகத்தில் கொண்டு உறங்கிக் கொண்டிருந்த அவள் கணவனை பார்த்தவள்.. அவன் அழகு முகத்தை பார்த்து பார்த்தபடி அமர்ந்து விட்டாள்.
"மனதில் உன்மேல் உள்ள காதலை உணர்ந்த நிமிடம்... நா மறுபடி புதிதாய் இம்மண்ணில் பிறந்தேன். இனி காலம் முழுவதும் உன் காதல் என்னும் கடலில் மூழ்கி முத்தெடுப்பேன்..."
நிலா செல்லமாக அவன் கன்னத்தை கிள்ளியவள். "ஏன்டா புருஷா... இவ்ளோ நாள் காதலை சொல்லு சொல்லுன்னு என் உயிரை வாங்கிட்டு. இப்ப நானே அத சொல்ல ஆசையா ஓடி வந்த இப்டி தூங்குறீயேடா" என்று தூங்கும் அவனிடன் வாதம் செய்தவள், "நீ எப்படா முழிப்ப.? எனக்கு என் மனசை உன்கிட்ட சொல்லணும்டா... சீக்கிரம் எந்திரிடா" என்று புலம்பியவள் கண்ணில் காலண்டர் பட. அப்போது தான் இன்னும் பத்து நாளில் சூர்யா பிறந்தநாள் என்பது அவளுக்கு நினைவு வர. "வாவ்" என்று துள்ளி குதித்தவள். "டேய் புருஷா இன்னும் பத்து நாள்ல உன் பொறந்தநாள் வருதுடா. உன் பொறந்தநாள் அன்னைக்கே என் காதலை உன்கிட்ட சொல்லி... என்னையே உனக்கு பரிச தர போறேன்" என்று வெட்கத்துடன் சொன்னவள். மெதுவாக அவன் கன்னத்தில் தான் முதல் முத்தத்தை பதித்து விட்டு. "அதுவரைக்கும் எனக்காக பொறுத்துட்டு இருடா புருஷா" என்றவள் மனம் நிறைந்த மகிழ்ச்சியில் அங்கிருந்து செல்ல…
(பாவம் நிலாவிற்கு தெரியவில்லை. காதலை சொல்வதை மட்டும் எப்போதும் தள்ளிப்போடக்கூடாது என்று. ஒருவேளை நிலா தன் மனதில் உதித்த காதலை உடனே சூர்யாவிடம் சொல்லி இருந்தால் பின்புவரப்போகும் மனவருத்தங்களை தவிர்த்து இருக்கலாம்... என்ன செய்ய எல்லாம் விதி. )