கண்ட நாள் முதல் 24
அத்தியாயம் 24
சூர்யாவின் சேட்டைகள், தனம் அம்மாவின் பாசம், மாமனாரின் தோழமை என்று நிலாவின் திருமணம் வாழ்க்கையில் ஒரு மாதம் ஓடி விட்டது. இதற்கு இடையில் நிலாவும் சூர்யாவும் இரண்டு முறை கலை அம்மாவின் வீட்டிற்கு சென்று வர. அந்த வீட்டின் செல்லப்பிள்ளை ஆகி போனான் சூர்யா.. (இதில் நிலாவிற்கு லைட்டாக பொறாமை தான்).
அழகிய காலை பொழுதில் தூக்கம் கலைந்து எழுந்த சூர்யா, அழகாய், அமைதியாய் முழுதாய் எழுதி முடித்த அழகிய பெண் ஓவியம் போல் உறங்கி கொண்டிருந்த நிலாவை, உலகம் மறந்து ரசித்துக்கொண்டு இருந்தான். "எப்ப டி நீ என் காதலை புரிஞ்சுக்க போற.. நானும் ஒவ்வொரு நாளும் என்னோட நடவடிக்கை மூலம் என்னோட காதலை ஒவ்வொரு நொடியும் உனக்கு உணர்த்திட்டு தான் இருக்கேன். ஆனா, நீ அதெல்லாம் நல்லா புரிஞ்சும், புரியாத மாதிரியே இருக்க. ஏன்டி இப்டி பண்ற? என்மேல் உனக்கு இருக்க காதலை உன்னை புரிஞ்சுக்க விடாமல் எது தடுக்குது. தினமும் உன்னை நினச்சு நினச்சு நா பொலம்பிட்டு இருக்கேன் நிலானி. ம்ம்ம்ம்.!!! எப்ப தான் நீ என்னை புரிஞ்சுக்க போறியே?" என்று தன்னை தானே நொந்தவன் எழுந்து ஜாகிங்கிற்கு கிளம்பினான். அய்யோ பாவம் கணவன் புலம்பியது எதுவும் உணராது நிலா ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.
காலை கண்விழித்த நிலா அருகில் சூர்யா இல்லாததால் அவன் ஜாகிங் போய் இருப்பான் என்று எழுந்தவள் குளித்து முடித்து கீழே சென்று மாமியாருக்கு உதவியாக சமையலில் இறங்கினாள். அப்போது தான் ஜாகிங் முடித்து வந்திருந்தான் சூர்யா.
"அம்மா காபி..." என்று சமையலறை நோக்கி குரல் கொடுக்க.
"நிலா உன் புருஷன் காபி கேக்குறான் பாரு, இந்த இத கொண்டு குடு" என்ற தனம் நிலா கையில் காபியை கொடுக்க,
நிலா காபியை எடுத்துக்கொண்டு சூர்யாவிடம் சென்றவள, "இந்தாங்க காபி' என்று சொல்ல, சூர்யா காபியை வாங்காமல், நிலாவையே உற்று பார்த்து கொண்டிருந்தான்.
குளித்திருந்த அவள் தலை மூடியில் சொட்டும் நீர் அவள் சங்கு கழுத்தில் வழிந்து அவள் அவன் மனைவி என்று சொல்லும், புத்தம் புது மஞ்சள் கயிற்றில் பட்டு தெறிக்க. பெயருக்கு ஏற்றாற்போல் வான் நிலா போன்ற அழகு முகத்தில், நடு நெற்றியில் பொட்டு வைத்து, உச்சி வகுட்டில் தான் திருமணம் ஆனவள் என்பதற்கு அடையாளமாக குங்குமம் வைத்து, அழகின் மொத்த உருவமாக தன் எதிரே நின்றவளை விட்டு ஒரு நொடி கூட தன் பார்வையை அகலாமல் பார்த்துக்கொண்டு இருந்தான் சூர்யா.
'அவன் பார்வையிலேயே தன் மொத்த காதலையும், கூடவே அவன் மன ஏக்கத்தையும் சொல்ல... நிலவுக்கு அவன் காதலும், அவன் ஆசையும் புரிய ஏனோ அவனை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் தலையை குனிந்து கொண்டாள்.
சூர்யா அவள் அருகில் சென்றவன். அவள் முகத்திற்கு வெகு அருகில் செல்ல. அவன் மூச்சு காற்றின் உஷ்ணம் நிலாவின் கழுத்தில் பட அவள் கண்களை இருக்க மூடிக்கொண்டாள். அவளின் மூடிய இமைகளில் சூர்யா தன் இதழ்களை மெதுவாக பதிக்க... நிலா மொத்தமாக தன்னை மறந்து நின்றாள். அவளின் அந்த நிலையை ரசித்தவன். அவளின் அழகு வதனத்தை தன் இரு கைகளில் ஏந்தியவன் விழிகள் நிலாவின் சிவந்த உதடுகளில் பதிய, அந்த எண்ணத்தை தவிர்த்தவன். அவள் காதருகே, "எப்ப டி என் காதலை புரிஞ்சிக்குவ.? என்னை பாத்தா உனக்கு பாவமா இல்லயா?" என்று
ஏக்கம் தோய்ந்த குரலில் கேட்க.
அந்த குரல் நிலாவின் செவி வழி நுழைந்து இதயம் வரை தாக்க... விழிகளை திறந்தவள். தன் முகத்திற்கு வெகு அருகில் இருந்த சூர்யாவின் காதல் வழியும் முகத்தை கண்டவள் இதயம் அதிவேகமாக அடித்துக் கொள்ள, அங்கிருந்து ஓடு விட. சூர்யாவின் நிலை தான் பாவமாகி விட்டது. ஒரு பெரு மூச்சு விட்டவன். "போடி போ... இன்னும் எத்தனை நாள் நீ என்கிட்ட இருந்து எஸ்கேப் ஆகி ஓடுறேன்னு நானும் பாக்குறேன்" என்றவன் ஆபீஸ் கிளம்புவதற்கு தன் அறைக்கு செல்ல, சூர்யா என்ற தன் அப்பாவின் குரலில் நின்றவன்.
"என்னாப்பா..??" என்றபடி குமரேசனிடம் வர, "சூர்யா நாளைக்கு தீபாவளி. நம்ம ஆபீசில் இருக்க எல்லாருக்கும் ஸ்வீட்ஸ், கிப்ட்ஸ் எல்லாம் ரெடி பண்ணிட்டியா?"
"அதெல்லாம் நேத்தே ரெடி ப்பா..!! வருஷா வருஷம் செய்றது தானே... இன்னைக்கு எல்லாருக்கும் கொடுத்துடலாம் பா" எனும்போதே, அங்கு வந்த தனம்மா, "சூர்யா உன் கல்யாணத்துக்கு அப்றம் வர்ர முதல் தீபாவளி இது, நீ நிலாவையும் ஆபீசுக்கு உன் கூட கூட்டிட்டு போடா. நீங்க ஆபீஸ் போயிட்டு வேல முடிஞ்சதும் அங்கிருந்து அப்படியே கலை அண்ணி வீட்டுக்கு போய் அவங்க மூனு பேரையும் இங்க அழச்சிட்டு வந்துடு, எல்லாரும் ஒன்ன இங்கயே தீபாவளி கொண்டாடலாம்" என்றவர் நிலாவையும் கிளம்ப சொன்னார்.
இருவரும் கிளம்பி சூர்யாவின் ஆபீஸ் வர அங்கு அவர்களுக்கு முன் அரவிந்த், தேவி ,தேனு இவர்களுக்காக காத்திருந்தனர்.
"ஏய் நீங்க இங்க என்னடி பண்றீங்க?"
"தனம் ஆன்டி தான் நிலா. நீங்க மட்டும் நல்லா நாளும் அதுவுமா தனிய வீட்ல இருந்து என்ன கிழிக்கப் போறிங்க, மரியாதையா நிலா கூட வீட்டுக்கு வாங்கன்னு நேத்தே ஃபோன் பண்ணி ஆர்டர் போட்டுட்டாங்க. அவங்க தான் எங்கள இங்க வந்து உன் கூட இருக்க சொன்னாங்க" என்று சொல்ல.. தன் அத்தை தான் மீது வைத்திருக்கும் பாசத்தை நினைத்து மனதில் மகிழ்ந்தவள். தேவி, தேனுவின் கைகளை பிடித்து ரொம்ப தேங்க்ஸ்டி... எனக்கு இப்படி ஒரு நல்லா குடும்பம் கிடைக்கவும். நல்லா வாழ்க்கை அமையவும் நீங்க தான்டி காரணம்" என்று கண்கலங்க.
"ஏய் லூசு எப்ப இருந்து நமக்குள்ள இந்த தேங்க்ஸ் சொல்ற கெட்ட பழக்கம் வந்தது" என்று தேவி பொய்யாய் முறைக்க,
"நீ எங்களுக்கு தேங்க்ஸ் சொல்ல வேணாம் நிலா. நீ எங்களுக்கு ஏதாவது செய்ய நெனச்ச. சீக்கிரமே சூர்யாண்ணாவை ஏத்துக்கிட்டு நீ சந்தோஷமா வாழணும். அதான்டி எங்களுக்கு வேணும்" என்று தேனு வார்த்தையில் நிலா திரும்பி சூர்யாவை பார்த்தவள். "எனக்கு அவரை புடிச்சிருக்குடி. ஆனா, என்னனு புரியல.. அதுக்கு மேல எதையும் என்னால யோசிக்க முடியல. ஏதோ ஒரு பயம்" என்று தலை குனிய,
"ஏய் என்னடி சொல்ற நீ? என்று தேவி ஆரம்பிக்க. அவளை நிறுத்திய தேனு. "அண்ணாவை நீ புடிச்சிருக்குன்னு சொநான்னதே போதும் நிலா. இனி போக போக நீ அவர் காதலை புரிஞ்சு.. நீயும் அவரை விரும்பி ஏத்துக்குவன்னு நாங்க நம்புறோம்." என்று சொல்ல.. நிலா தலையை மட்டும் ஆட்டினாள். அவளுக்கு தெரியவில்லை தனக்குள் சூர்யா மேல் இருக்கும் காதலை உணரும் நாள் வெகு விரைவில் வர போகிறது என்று.
அனைவரும் ஆபீக்குள் செல்ல, தேனுவும் தேவியும், நிலாவை தனியே அழைத்துச் சென்றவர்கள், "ஏய் நிலா அங்க ஒரு பொண்ணு நிக்கிறாளே அவளை கொஞ்சம் பாரு" என்று சொல்ல, நிலா அங்கு பார்க்க…
அதிக மேக்கப்பில், பார்ப்பவர்கள் கண்கள் முகம் சுழிக்கும் அளவு உடையணிந்து ஒரு பெண் நின்றிருக்க.
நிலா, "ச்சே என்னடி இது..?? யாரு இந்த பொண்ணு ஆபீஸ்க்கு இப்டி அசிங்கமா டிரஸ் பண்ணிட்டு வந்து இருக்கு? யாருடி இந்த எரும..??"
"அவ போட்டிருக்க டிரஸ்சுக்கு நீ இப்படி கேக்குறியே... அவ அந்த மாதிரி டிரஸ் போட்டு வர்ரதே.. உன் புருஷனை கவுக்கத்தான்னு தெரிஞ்ச, நீ என்னடி பண்ணுவ என்று கேக்க. நிலா கண்களில் கோபம் தெறிக்க, யாருடி அவ என் புருஷனை கவுக்க பிளான் பண்றவ" என்று புடவை முந்தானையை எடுத்து இடுப்பில் சொருகியவள். "யாருடி உங்களுக்கு இதை சொன்னது" என்று கேட்க..
"அரவிந்த் அண்ணா தான் சொன்னாரு நிலா. அவ பேரு கவிதா. அண்ணாவை கவுக்க பலதடவை
குட்டிகரணம் அடிச்சு பாத்திருக்கா, பட் நடக்கல, உங்களுக்கு கல்யாணம் ஆனா, பிறகு கூட அவ விடாம அண்ணாவை சைட்டடிச்சுட்டு தான் இருக்கா. அதான் அரவிந்த் அண்ணா அவளை கவனிக்க சொல்லி எங்ககிட்ட சொன்னாரு" என்று சொல்ல. "கல்யாணம் ஆன அப்றமும் எவ்ளோ தகிரியம் இருந்தா அவ எம் புருஷனை சைட் அடிச்சிட்டு இருப்பா. அவளா…" என்று நிலா கொலைவெறியில் கிளம்ப.
"ஏய் ஏய் நில்லுடி. அவசரப்பட்டு அவ கதையை முடிச்சுடாத. அவதான் அண்ணாவை சைட்டடிச்சான்னு சொன்னேன். பதிலுக்கு அண்ணா அவளை சைட்டடிச்சருன்னு சொன்னான…? அண்ணா அவளை திரும்பி கூட பாக்கல தெரியுமா" என்க..
"ம்க்க்கும் இதுல தெரிய என்ன இருக்கு. என் புருஷன் என்னை தவிர வேற எவளையும் நிமிந்து கூட பாக்கமாட்டாரு" என்று கர்வத்துடன் சொல்ல.
தேவியும் தேனுவும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துவிட்டு, "இப்ப நீ என்ன சொன்னா நிலா?" என்று குறும்பு கலந்த குரலில் கேட்க, அப்போது தான் தான் கூறியதின் அர்த்தம் புரிய நாக்கை கடித்துக் கொண்டவள். இனி அங்கு இருந்தால் ரெண்டு பிசாசுகளும் தன்னை உண்டு இல்லைன்னு ஆக்கிடும் என்று புரிய அங்கிருந்து ஓடி விட. "பாரு டி தேவி... மனசுல அண்ணா மேல இவ்ளோ ஆசை வச்சிட்டு வெளிய எப்டி நடிக்கிறபாரேன் திருடி... "ஆமா தேனு அவ அண்ணாவை காதலிக்கிற… ஆனா, அவளுக்கே அது புரிய மாட்டேங்குது. 'ம்ம்ம்' என்று பெரு மூச்சு விட்டவள். இதுல நம்ம செய்ய ஒன்னு இல்ல. நிலா அவளா தான் இதை உணரணும், பாப்போம் இப்ப வா நம்மளும் உள்ள பேசலாம்."
சூர்யாவும் நிலாவும் எல்லோருக்கும் ஸ்வீட்ஸ்சும் கிப்ட்டும் கொடுத்து முடிந்து சூர்யா கேபின்னுக்கு சொல்ல. பலி ஆடு ச்சே கவிதா, சூர்யாவின் அறைக்குள் பைலில் கையெழுத்து வாங்க வந்தவள். சூர்யாவை விழுங்கும் பார்வை பார்க்க. நிலாவுக்கு உள்ளுக்குள் பத்தி கொண்டு வந்தது. எவ்ளோ திமிரு இவளுக்கு, என் முன்னாடியே என் புருஷனை சைட் அடிக்கிற. இவளை" என்று உள்ளுக்குள் கருவி கொண்டு இருக்க, அவளின் அந்த முக மாற்றங்களை கண்ட சூர்யா. கவிதாவை பற்றி தேவி நிலாவிடம் சொன்னதாக அரவிந்த் சொன்னது நினைவு வர. உள்ளுக்குள் சிரித்தவன் நிலாவை பார்த்தும் பார்க்காதது போல் இருந்து விட. கையெழுத்து வாங்கி விட்டு வெளியே சொல்ல திரும்பியவளை, "ஒரு நிமிஷம்" என்று நிறுத்திய நிலா, அவள் அருகில் வந்து மிஸ். கவிதா இது ஆபீஸ். பேஷன் ஷோ ரம்ப் இல்ல. இப்டி அரைகுறை டிரஸ் போட்டு வர்ரதுக்கு. இது ஒன்னும் ஹோட்டல் ரிசப்ஷன் இல்ல. வர கஸ்டமரை கவர் பண்ண இப்டி டிரஸ் பண்ணிட்டு நிக்க. இது கௌரவமான ஆபீஸ். சோ இனி நீங்க ஒழுங்கா டிரஸ் பண்ணிட்டு வந்த நல்ல இருக்கும்" என்றவள், "இப்ப நீங்க போகலாம்" என்று திமிராய் சொல்ல. இதை எதிர்பார்க்காத கவிதா பேயறைந்த முகத்துடன் வெளியே செல்ல, சூர்யாவுக்கு தன் மீது ஐஸ் மழை பொழிவது போல் அவ்வளவு குஷி.
"ராட்சசி என்னை ஒருத்தி சைட் அடிக்கிறத கூட இவளால தாங்க முடியல. கோவத்துல அங்க கருகுற வாடை இங்க வருது. இவ்ளோ ஆசையை மனசுல வச்சிட்டு வெளிய ஒன்னுமே இல்லாத மாதிரி இருக்குறத பாரு. ம்ம்ம் இவ எப்ப காதலை சொல்லி, நா எப்ப என் குடும்ப விளக்கை ஏத்த போறனோ.. கடவுளே என்னையும் கொஞ்சம் கவனி பா."
ஆபீஸ் வேலை முடித்து அனைவரும் நிலா வீட்டிற்கு செல்ல.. அங்கு சூர்யாவிற்கு ஏகப்பட்ட மரியாதை. கலையும் ராம்குமாரும் சூர்யாவை விழுந்த விழுந்து கவனிக்க. நிலா உள்ளுக்குள் ருத்ரா தாண்டவம் ஆடிக் கொண்டிருந்தாள். "இந்த ஒருத்தி உக்காந்து இருக்கேன். ஆனா, இதுங்க கண்ணுக்கு நா தெரியாவே இல்லன்ற மாதிரி அவரையே விழுந்து விழுந்து கவனிச்சிட்டு இருக்குங்க. அப்டி என்ன தான் இருக்கே இவர்கிட்ட எல்லாரும் தலையில தூக்கி வச்சு
ஆடுறாங்க" என்று புலம்ப. ('அத நீ சொல்ற. நீயும் அந்த கூட்டத்துல ஒரு ஆள் தான்டி' என்று அவள் மனசாட்சி கத்த, "மகளே நீ சும்மா இரு. இப்ப நா இருக்க கடுப்புல நீ எதாவது பேசின.. மொத டெட்பாடி நீதான்" என்றது தான் "அய்யோ மீ எஸ்கேப்" என்று ஓடியது மனசாட்சி)
"மாம்ஸ் ஏதே கருகுற வாட வருது. உங்களுக்கு தெரியுத" என்று நிலாவை வெறுப்பேற்ற.
சூர்யா, "ம்மா அடுப்புல எதுவும் வச்சுட்டு மறந்துட்டீங்களா?" என்று புரியாமல் கேட்க...
"மாம்ஸ் கருகுறது அடுப்பு இல்ல. உங்க ஆத்துக்காரி வயிறு" என்று சொல்லி சந்தியா சிரிக்க. "அடியேய் உன்னை" என்று நிலா, சந்தியாவை அடிக்க துறத்த அனைவரின் சிரிப்பில் அந்த வீடே அதிர்ந்தது.
தலை தீபாவளியை சிரிப்பும், கும்மாளமாக முடித்து. சூர்யா நிலா மற்றும் மாமனார், மாமியாருடன் தன் வண்டியில் கிளம்ப. அரவிந்த் வண்டியில் தேவி, தேனு, சந்தியா ஏறிக்கொண்டனர்.
சூர்யா வீட்டிலும் அதே அரட்டை, சிரிப்பு என்று குடும்பம் மொத்தமும் சிரிப்பு, சந்தோஷத்தில் மிதக்க.. அனைவரின் மனமும் நிறைந்து போனது.
எல்லாம் முடிந்து கலையும் மற்றவரும் கிளம்ப, தனம்மா ஆசையாக கேட்டதால் தேவி, சந்தியா, தேனு அங்கேயே தங்கி விட்டனர். அரவிந்த் தாய், தந்தை ஊரில் இல்லாததால் அவனும் அங்கேயே தங்கிவிட்டான்.
இளையவர்கள் ஹாலில் உட்கார்ந்து தங்கள் அரட்டையை தொடர, தேனு தண்ணீர் குடிக்க சமையலறைக்கு போக. அரவிந்தும் வால் பிடித்துக்கொண்டு பின்னாடியே செல்ல. இத பாத்த தேவியும் சந்தியாவும் தங்களுக்குள் சிரித்துக்கொண்டனர்.
இங்கு சமையல்கட்டில் தேனு தண்ணி குடித்துவிட்டு திரும்பியவள் அங்கு நின்றிருந்த அரவிந்த் மேல் மோதி விழப்போக. இடையை வளைத்து பிடித்து அவளை கீழே விழாமல் பிடித்தான்.
"எரும எரும... இப்டியா திடீர்னு பின்னாடி வந்து நிக்கிறது" என்று அவன் மார்பில் மெதுவாக குத்த.
அவள் கைகளை பிடித்தவன். அதில் மென்மையாக முத்தமிட, தேனு அந்த முத்தத்தில் உருகி நிற்க. தேனுவின் கழுத்து வளைவில் முகம் புதைத்தவன். "என்னோட தீபாவளி ஸ்பெஷல் கிப்ட் எங்கடி?" என்று மயக்கும் குரலில் கேட்க.
"டேய் என்ன விளையாடுறியா? நா தீபாவளி கிப்ட்டா வாங்கி தந்த சட்டை தானாடா, நீ இப்ப போட்டிருக்க. அப்றம் கிப்ட் எங்கன்னு கேக்குற? லூசா டா நீ.? என்க… அரவிந்த் "அய்யோ" என்று தன் தலையில் அடித்துக் கொண்டேவன். "அடியேய்… நா இத சொல்லலடி... ஸ்பெஷல் கிப்ட்ட சொன்னேன்" என்று அவள் இளம் தாமரை நிற இதழ்களை தன் இரு விரல்களால் பிடித்து ஆட்டிக்கொண்டே சொல்ல. அவன் கையில் தட்டி விட்டவள், "ஆச தோசா போடா... அதெல்லாம் முடியாது. எனக்கு இதெல்லாம் சுத்தமா பிடிக்காது" என்றவள் திரும்பி நின்று வாய் மூடி சிரிக்க.
அரவிந்த் கோபமாக, "அதெப்படி
புடிக்காதுன்னு நானும் பாக்குறேன்" என்றவன். அவளை இழுத்து தன்னோடு சேர்த்து அணைத்து, அவள் இதழில் தன் இதழை பதிக்க... பெண்ணவள் அந்த முத்தத்தில் மொத்தமும் கரைந்தவள், கீழே விழுந்து விடாத படி அவன் சட்டை கலரை இருக்கி பிடித்துக்கொள்ள. நொடிகள் நிமிடங்களாக தொடர்ந்து. மூச்சு திணறல் வந்து அவர்கள் முத்த யுத்தத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தது.
அவளவன் முத்தத்தில் மயங்கி கண்மூடி இருந்த தேனுவை பார்த்து சிரித்த அரவிந்த், "ஏன்டி கொஞ்ச நேரம் முந்தி இதெல்லாம் தப்பு, எனக்கு பிடிக்காதுன்னு சொல்லிட்டு... இப்ப என்னடான்னா என் சட்டை கலரா இப்டி டைட்டா புடிச்சிட்டிருக்க" என்று வார்த்தையில், தேனுவுக்கு வெட்கத்தில் முகம் மருதாணியாய் சிவந்து விட, "ச்சி போடா" என்று விட்டு அங்கிருந்து ஓடி விட, அரவிந்த் தேனுவை பார்த்து சிரித்துக்கொண்டே திரும்ப, அங்கு சூர்யா கொலைவெறியுடன் நின்றிருந்தான்.
"டேய் மச்சி நீ எப்படா வந்த?" என்று அசடு வழிந்து கொண்டே கேட்க.
"ம்ம்ம்ம் நீ தேனு கிட்ட ஸ்பெஷல் கிப்ட் வாங்கிட்டுடிருந்தியே அப்போ தான் வந்தேன். டேய் உனக்கே இது நல்லா இருக்காடா. இங்க நா ஒருத்தன் கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரியா சுத்திட்டு இருக்கேன். நீ என்னடான்ன கல்யாணத்துக்கு முன்னாடியே ரிகர்சல் பாத்துட்டு இருக்க" என்று முறைக்க.
"டேய் நீ பிரம்மச்சாரியா இருக்கிறது. உன் விதிடா, அதுக்கு நா என்னடா பண்ண முடியும். எல்லாம் உன் தலையெழுத்து சோ சேட்" என்று கிண்டல் அடிக்க.
" நேரம்டா... எல்ல என் கெட்ட நேரம். நீ வேணும்னா பாரு என் வயித்தெரிச்சலை உன்னை சும்மாவே விடாது. நீயும் ஒருநாள் என்னை மாதிரியே பொலம்பி தவிப்ப பாரு, அப்ப வச்சுக்கிறேன் உனக்கு… இது என் சாபம்" என்று விளையாட்டாக சொல்ல, "உன் சாபம் பலிக்காது மச்சி. என்னையும் தேனுவயும் யாராலைனயும் பிரிக்க முடியாது என்று சொல்லிவிட்டு அரவிந்த் செல்ல. (சூர்யாவுக்கும் அரவிந்துக்கு தெரியவில்லை சூர்யா விட்ட சாபம் அவன் மனைவி மூலம் நிஜமாக போகிறதென்று பாவம்)
பட்டாசுகளின் சத்தத்தில் விடிந்தது தீப ஒளி திருநாள். காலையில் எண்ணெய் வைத்து தலை குளித்து. தனம்மா எடுத்து கொடுத்த புது துணியை உடுத்தி அனைவரும் வர. வேடிக்கை, விளையாட்டுடன் ஆரம்பித்த நாள் இளையவர்கள் குறும்பு, மகிழ்ச்சி, சண்டை, சாப்பாட்டுடன் இனிதாக முடிந்தது.
தீபாவளி கொண்டாட்டங்கள் முடிந்து. மறுநாள் காலைப்பொழுது இயல்பாக விடிந்தது.