கண்ட நாள் முதல் 22

 அத்தியாயம் 22


நிலாவிற்கு காலை ஐந்து மணிக்கு உறக்கம் கலைந்து விட்டது.


(அய்யோ…!!! கலை அம்மா இங்க வாங்க.. பாருங்க உங்க பொண்ணு காலையில ஐஞ்சு மணிக்கு எழுந்திருக்க, இந்த அதிசயத்தை வந்து பாருங்க. அதொன்னும் இல்ல. கல்யாணம் ஆயிடுச்சு இல்ல புள்ளைக்கு பொறுப்பு வந்துடுச்சு அவ்ளோ தான். யாரும் பதற வேணாம்…) 


கண் விழித்த நிலாவுக்கு தான் இருக்கும் இடம் புரிய சில நிமிடங்கள் ஆனது. பின் திரும்பி சூர்யாவை பார்க்க எந்த சலனமும் இல்லாமல். சிறு குழந்தை போல் அமைதியாக உறங்கும் அவன் அழகு முகம் நிலாவின் கண்களில் நிறைய. அவளும் அறியாமல் அவள் இதழ்கள் புன்னகை மூடிக்கொள்ள, எழுந்து குளிக்க சென்றவள், பத்து நிமிடத்தில் குளித்து முடித்து சிவப்பு நிற அழகிய மைசூர் சில்க் புடவையில் வெளியே வர... உறக்கம் கலைந்த சூர்யா அவள் வருவதை பார்த்து உறங்குவது போல் கண்மூடி படுத்திருக்க, கண்ணாடி முன் நின்ற நிலா. தன் ஈர முடியை துண்டால் துடைக்க, அவள் கூந்தலில் இருந்த தெறித்த நீர் சூர்யா முகத்தில் பட. அவனுக்கு எழுந்து அப்படியே நிலாவை கட்டியனைக்க எழுந்த ஆசையை கஷ்டப்பட்டு அடக்கியவன். "ராட்சசி  காலங்காத்தால இப்டி பிரஷ்ஷா வந்த என்ன இம்சை பண்றாளே. நா வேற அவகிட்ட பெருச உனக்கும் என்னை புடிச்ச, அப்றம் தான் எல்லாம்னு வீரவசனம் பேசிட்டேன்" என்று தன்னை தானே திட்டி வாயுக்குள்ளே முனங்க. நிலா அதற்குள் தலைவாரி முடித்து நடுநெற்றியில் சிவப்பு நிற பொட்டு வைத்து. அதற்கு மேல் சிறு கீற்றாய் விபூதி வைத்தவள். அம்மா சொன்னது நினைவு வர அருகில் இருந்த குங்குமச்சிமிழை எடுத்து அதில் இருந்த குங்குமத்தை எடுத்து உச்சி வகிட்டில் வைத்தவள், கண்கள் அவளையும் அறியாமல் அதற்கு சொந்தமானவனை பார்த்து மென்மையாக சிரித்துவிட்டு ரூமை விட்டு வெளியே செல்ல. அவள் செல்வதையே பார்த்துக்கொண்டு இருந்த சூர்யா.. திருடி முழுச்சு இருக்கும் போது சண்டபோட்டுட்டு. தூங்கும் போது சைட் அடிக்கிற நீ..!!!   இருடி உன்னை கவனிச்சுக்கிறேன்" என்றவன். சந்தோஷமாக மீண்டும் தன் உறக்கத்தை தொடர்ந்தான்.


கீழே இறங்கி வந்த நிலா நேராக பூஜை அறைக்கு சென்று விளக்கேற்றி விட்டு. தன் அத்தையின் குரல் சமையல் அறையில் கேட்க அங்கே சென்றாள்.


நிலா சமையல் அறையில் நுழைய, அவளை கண்ட தனலட்சுமி..!! குளித்து முடித்து, புதிதாய் பூத்த மலராய், இதழில் அழகிய புன்னகையுடன் வந்த மருமகளை பார்த்து மனம் நிறைந்தவர். "வாடா நிலா" என்று அன்போடு அழைக்க, நிலா சமையல் அறைக்குள் சென்றாள்.


"என்னமா இவ்ளோ சீக்கிரம் எந்திரிச்சிட்ட. இன்னும் கொஞ்ச நேரம் தூங்குறது தானே" என்று அன்போடு அவள் தலையை வருடிபடி கேட்க.


"இல்ல அத்தை புது இடம் சரியா தூக்கம் வர்ல. அதோட..!" என்று இழுக்க. "என்னடா என்னன்னு சொல்லு" என்று பரிவும் கேட்க மாமியாரை பாவமாக பார்த்தவள்.. "அது அத்த… அது" என்று தயங்கி தயங்கி, "இல்ல அத்த நேத்து நைட் நா சரிய சாப்பிடல, பசியில் சரியா தூங்க முடியல" என்று தயங்கியபடி கண்களை சிமிட்டி குழந்தை போல் சொல்ல. அவளின் அத்தை அவளின் அந்த குழந்தை தனமான பேச்சை வெகுவாக ரசித்தவள்… "அதானே பார்த்தேன். கலை அண்ணி நீ ஏழு மணிக்கு குறைஞ்சு எழுந்திருக்க மாட்டேன்னு  சொன்னங்களே… இப்ப நீ இப்டி ஐஞ்சரை மணிக்கு வந்து நிக்கவும். நா அப்படியே ஷாக் ஆயிட்டேன்" என்று சொல்லி சிரிக்க.


"அய்யோ கலை... இப்டி என் s.t.d யை வெளிய பரப்பி என் மானத்தை வாங்கிட்டியே" என்று மனதிற்குள் தன் அம்மாவை திட்ட, "ஏன் டா நிலா உன்னோட அம்மா வீட்டுல பசியெடுத்த, நீ கலை அண்ணி கிட்ட அதை சொல்ல தயங்குவிய.??" என்று கேட்க. நிலா அவர் கேட்பதற்காக அர்த்தம் புரியாமல், "அம்மா கிட்ட எனக்கு என்ன தயக்கம் அத்தை' என்று சொல்ல.


"அதோ மாதிரி தான் நிலா நானும் உனக்கு. அங்க கலை அண்ணி உனக்கு அம்மா. இங்க நான் தான் உனக்கு அம்மா. நீ என்கிட்ட எதுவும் கேட்கவும் சொல்லவும் தயங்கவோ, யோசிக்கவோ எந்த அவசியமும் இல்ல... புரிஞ்சுதா? உனக்கு பசியெடுத்த, நீ நேர வந்து அத்த எனக்கு பசிக்குதுன்னு உரிமையோட கேக்கணும். அதை விட்டு பசியோட தூங்குவியா நீ? இனி இப்டி செய்ய கூடாது. ஒகேவா" என்று அவளை செல்லமாக மிரட்ட. 


நிலா அவர் அன்பில் கலங்கியவள், நீ சரி என்று தலையை மட்டும் ஆட்ட. தனம், "நீ கொஞ்சம் இருடா. உன் மாமா வாக்கிங் போயிருக்காரு. இன்னும் பத்து நிமிஷத்துல வந்துடுவாரு. அதுக்கு அப்றம் உங்க ரெண்டு பேருக்கும்.. சூப்பரா சத்துமாவு கஞ்சி போட்டு தரேன் என்றவர். கஞ்சி தயாரிக்கும் வேலையில் இறங்க நிலா அவர் செய்வதையே ஆசையாக பார்த்துக் கொண்டிருந்தாள்.


வாக்கிங் முடித்து வந்த சூர்யாவின் அப்பா. "என்ன காலையிலேயே மாமியாரும், மருமகளும் உங்க பாச மழை பொழிய ஆரம்பிச்சிட்டிங்க போல" என்றபடி சமையல் அறையில் நுழைய. "ஆமா கொஞ்சுறோம் தான். உங்களுக்கு ஏங்க பொறாமை... சும்மா கண்ணு வைக்காம போங்க அங்கிட்டு" என்றவர், "நிலா நீயும் போய் மாமா கூட டைனிங் டேபிளில்ல உக்காருமா. நா உங்க ரெண்டு பேருக்கும் கஞ்சி எடுத்துட்டு வரேன் என்று சொல்ல. "சரி அத்த" என்று திரும்பியவள். "ஆமா அத்த இந்த தேவி, தேனு, சந்தியா எல்லாம் வீட்டுக்கு எப்ப போனாங்க. யார் வந்து கூட்டி போனாங்க?" என்று கேட்க. 


"இல்ல நிலா அவங்க போறேன்னு தான் சொன்னாங்க… நா தான் அனுப்பல. ராத்திரி நேரம் இப்ப போக வேணாம்னு சொல்லி இங்கயே இருக்க சொல்லிட்டேன்.  ஆனா, பாரு மூனும் இல்ல நாங்க கிளம்புறோம்னு ஒரே ரகளை. மூனு தலைலையும் ஒரு கொட்டு வச்சு, கீழ் ரூம்ல போட்டு பூட்டிட்டு. கலை அண்ணிக்கு ஃபோன் பண்ணி புள்ளைங்க இங்க தான் இருக்குன்னு சொல்லிட்டேன்" என்று அவர் சிரித்துக் கொண்டே சொல்ல.. நிலாவுக்கு உள்ளுக்குள் எப்டி இவங்களால எல்லோரையும் ஒரே போல் நேசிக்க முடிகிறது என்று வியந்தவள். தனக்கு அத்தை உருவில் இன்னொரு அம்மா கிடைத்ததை எண்ணி "நிலா நீ ரொம்ப அதிர்ஷ்டகாரி தான்டி" என்று நினைத்துக்கொண்டே டைனிங் டேபிள் வந்தாள். 


"குட் மார்னிங் நிலாமா" என்று தோழமையுடன் வந்த தன் மாமனாரின் வார்த்தைகளில் முகம் மலர்ந்தவள், "குட் மார்னிங் மாமா" என்று அவளும் திருப்பி சொல்ல. 


"ஏன்டா மா நிக்குற, உக்காரு" என்று சொல்லி தன் அருகில் இருந்த சேரை  காட்ட. நிலா அவர் அருகில் உட்கார்ந்து கொண்டாள். கொஞ்ச நேரம் இருவரும் அன்றைய செய்தித்தாளில் வந்த முக்கிய நிகழ்வுகள் பற்றி பேசிக்கொண்டிருக்க.. நிலாவுக்குள் இருந்த சிறு தயக்கமும் தொலைந்து. தன் மாமனாருடன் சகஜமாக பேச தொடங்கி விட்டிருந்தாள்.


கைகளில் இரண்டு டம்ளரில் ஏலக்காய் மணம் கமழும் சத்து மாவு கஞ்சியுடன் வந்த தனம். "என்ன மாமனாரும் மருமகளுக்கு காலையிலயே உங்க அன்பு அணையை உடச்சு ஓட விடுறீங்க போல?" என்று நக்கலாக கேட்டுக்கொண்டு அங்கு வர. 


குமரேசன், "என்ன தனம் நா உன்னை கிண்டல் பண்ணதுக்கு பதிலுக்கு பதில் என்னை வர்ற மாதிரி தெரியுது?' என்று தனத்தை பார்த்து முறைக்க.


"மாதிரி எல்லாம் இல்ல... பதிலுக்கு பதில் தான்" என்று தனம் உதட்டை சுழித்து காட்ட, நிலா இவர்கள் இருவருக்கு இடையே நடக்கும் செல்ல சண்டையை பார்த்து ரசித்துக்கொண்டிருந்தாள்.


"அடியேய் வர வர உனக்கு என் மேல பயமே இல்லாம போச்சு. இரு இரு உன்னை கவனிச்சுக்கிறேன்."


"கவனிங்க, கவனிங்க... ஆமா அது என்ன இப்ப பயம் இல்லாம போச்சுன்னு சொல்றீங்க..?? நா எப்ப உங்களுக்கு பயந்து இருக்கேன். இப்ப அது விட்டு போக.? என்ன மருமக முன்னாடி கெத்து காட்டுறிங்களோ?'  என்று அவரை பார்த்து கிண்டலாய் சொன்னவர். "இப்ப உங்க கூட சண்டை போட எனக்கு நேரம் இல்ல.. நிலா இந்தம்மா நீ இதை குடி" என்று ஒரு டம்ளரை அவளிடம் கொடுத்து இன்னொன்றை தன் கணவரிடம் கொடுத்தார்.


மூவரும் அமர்ந்து பேசிக்கொண்டு இருக்க. அங்கு வந்தனர் தேவி, தேனு, சந்தியா.


"வாங்க மா… வந்து உட்காருங்க" என்று தனம் அழைக்க மூவரும், "குட் மார்னிங்" என்று சொல்லிக் கொண்டே அவர்களுடன் அரட்டையில் இணைந்து கொண்டனர்.


தனம் கண்கள் கலங்கி இருக்க, "அய்யோ அத்த என்ன ஆச்சு? ஏன் இப்ப கண்கலங்குறீங்க?" என்று நிலா பதற… 


"இல்லம்மா எனக்கு ஒரு பெண் குழந்தை இல்லன்னு ரொம்ப நாளா மனசுல ஒரு ஏக்கம் இருந்துது. சூர்யாவுக்கு அப்றம் ஏனோ எனக்கு பிள்ளையே இல்லாம போச்சு. இவரும், சூர்யாவும் ஆபீஸ் போனப்புறம், இவ்ளோ பெரிய வீட்ல நான் தனியா இருக்கும்போது எல்லாம் நமக்கும் ஒரு பொண்ணு இருந்து இருந்தா அது நம்ம கூடவே இருந்து இருக்குமே..?? ஏன் கடவுளே எனக்கு ஒரு பொம்பள பிள்ளை இல்லாம பண்ணிட்டியேனு புலம்பி இருக்கேன். ஆனா, அதுக்கு எல்லாம் வட்டியும் முதலுமா இப்ப எனக்கு ஒன்னுக்கு நாலு பொண்ணுங்களை தந்துட்டாரு பாரு அந்த கடவுள்"  என்று உணர்ச்சி பொங்க சொல்ல. பெண்கள் நால்வரும் தனத்தை காட்டிக் கொண்டனர்.


மனைவியின் நீண்ட நாள் ஆசை நிறைவேறிய மகிழ்ச்சி குமரேசனையும் தொற்றிக்கொள்ள. "ஹலோ நானும் இங்க தான் இருக்கேன். அவ அம்மான்னா, நா உங்களுக்கு அப்பா என்னையும் கவனிங்க" என்று சொல்ல.


தேவி, "அதுக்கு என்னப்பா இதோ வந்துட்டேன்" என்று அவரை கட்டிபிடிக்க.. அவருக்கும் இத்தனை நாளாக மனதில் இருந்த பெண் பிள்ளை இல்லை என்ற குறை தீர்ந்தது.


இளம் பெண்கள் நால்வரும் "காலை சமையலை நாங்க செய்யுறோம்" என்ற பெயரில் சமையல் அறையை அதகளம் பண்ணிக்கொண்டிருக்க, தனம் அனைத்தையும் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தார். இத்தனை காலம் இதற்காக தானே ஏங்கி தவித்தார்.


தனம் காபி போட்டு நிலாவிடம் கொடுத்து சூர்யாவை எழுப்பி தர சொல்லிவிட்டு போக, நிலா, சூர்யாவை பார்க்க தயங்கி, "ஏய் சந்தியா இத கொண்டு போய் அவர் கிட்ட கொடுத்துட்டு வா" என்று சொல்ல.. 


"அய்யோ என்னால முடியாதுபா… அவர் என்ன மூடுல இருக்காரோ, நா போக மாட்டேன்" என்று நிலாவை பார்த்து கண்ணடித்துக் கொண்டே சொல்ல..?? தேனுவும், தேவியும் வாயை மூடிக்கொண்டு சிரிக்க, "ஏய் உனக்கு வர வர வாய் ஜாஸ்தி ஆகிடுச்சு" என்று அவள் தலையில் கொட்டி விட்டு காபியை எடுத்துக்கொண்டு தங்கள் அறைக்கு சென்றாள்.


சூர்யா நிம்மதியாக உறங்கி கொண்டிருக்க.. அவனை ஒரு நிமிடம் தன்னை மறந்து ரசித்த நிலா, "அடச்சே..!! என்ன இது நேத்து நைட்டு தான் உன்னை பழிக்கு பழி வாங்குவேன்னு வீர வசனம் பேசிட்டு, இப்ப இப்டி பாத்துட்டு இருக்க, ச்சே... நோ நிலா நீ இவர நல்லா இம்சை பண்ணணும். போக்கஸ், போக்கஸ் அதுல மட்டும் போக்கஸ் பண்ணு" என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டு, தூங்கும் அவனையே முறைத்து பார்த்தவள், "எப்டி தூங்குறான் பாரு… நேத்து இவன் முத்தம் கொடுத்துல நா நைட்டு முழுக்க தூங்காம முழுச்சு கிடந்தேன். இவன் மட்டும் நல்லா சுகமா தூங்குறான். இவனா என்ன செய்யலாம்" என்று யோசித்தவள். தன் நீண்ட பின்னலின் நுனியை எடுத்து தூங்கும் சூர்யாவின் காதுகளில் நுழைந்து விளையாட,  சூர்யா ஏற்கனவே சற்று உறக்கம் தெளிந்து இருந்தவன். நிலாவின் சேட்டை தெரிந்து உள்ளுக்குள் சிரித்து விட்டு திரும்பி படுத்துக் கொள்ள. நிலா மெத்தையின் மீது ஏறி சூர்யா அருகில் வந்து, மீண்டும் மூடியை அவன் காதில் விட, "அம்மா ப்ளீஸ்மா இன்னும் கொஞ்ச நேரம்மா ப்ளீஸ்" என்று கெஞ்ச. நிலா நுனி நாக்கை கடித்து சிரித்தவள். மீண்டும் தன் சேட்டையை தொடரா.. "ம்மா நீ  சொன்னா கேக்க மாட்ட" என்று நிலா கையை பிடித்து இழுக்க. அவன் இழுத்த வேகத்தில் நிலா அவன் மார்பின் மீது வந்து விழ.. சூர்யா அவளை இறுக்கி தன்னோடு அணைத்துக் கொள்ள, நிலாவின் நிலை தான் கவலைக்கிடமாகி போனது. 


அவள் முழுவதும் நிறைந்து இருக்கும், அவன் இதயத்தின் துடிப்பு அவளுக்கு துல்லியமாக கேட்க. ஏனோ அந்த ஓசை நிலாவின் மனதின் அடி ஆழம் வரை சென்று ஒலித்தது. அதில் நிலா உருகி போய் கிடக்க. சூர்யாவும் பாதி கண்ணை திறந்து நிலாவின் அழகு முகத்தை ரசித்து கொண்டு இருந்தவன்.. அவளை இன்னும் தன்னோடு இருக்கி அணைத்துக் கொண்டான்.


அவனின் அந்த அணைப்பில் நிலா தன்னை முழுவதும் இழந்தவள். அவனின் இரும்பு கைகள் இறுக்கி அணைத்ததில், அவளின் பூ போன்ற உடல் வலிக்க தொடங்க, தன்னிலை உணர்ந்தவள். தன் தளிர் கரங்களை அவன் மார்பில் வைத்து தள்ளியவள்.. விடுங்க..!!! என்ன விடுங்க..!!" என்று துள்ளி எழுந்தவள், கட்டிலை விட்டு இறங்கி நின்றாள்.


சூர்யா கட்டிலில் எழுந்து அமர்ந்தவன்.. நிலாவை பார்த்து, "என்ன நிலானி செல்லம் காலையிலேயே புருஷன் மேல காதல் பொங்கி வழியுது போல. இப்டி வந்து மேல விழுந்து கட்டிப்பிடிக்கிற?" என்று கண்ணடித்து குறும்பாக சொல்ல.


அவனை மூக்கு முட்ட முறைத்தவள். "மண்ணங்கட்டி காதலும் இல்ல ஒரு கண்றாவியும் இல்ல. அத்தை உங்களுக்கு காபி கொடுக்க சொன்னாங்க. போன போகுதுன்னு எடுத்துக்கிட்டு வந்த.. இப்டியா  பண்றது" என்று தட்டு தடுமாறி தந்தி அடித்து அவள் வார்த்தைகள் வெளியே வர. 


சூர்யா எழுந்து அவள் அருகில் வந்தவன். "நா என்ன செஞ்சேன் நிலானிகுட்டி?" என்று அப்பாவியாக கேட்க. அவனை விட்டு தள்ளி நின்றவள் "எதுக்கு என்ன இழுத்து கட்டிப்புடிச்சிங்க" என்று அனல் பறக்கும் குரலில் கேட்க.


"அடியேய்… நியாயமா இத நா கேக்கணும்டி. தூங்கிட்டு இருந்தவன் மேல வந்து விழுந்து கட்டிப்புடிச்சது நீ. காலங்காத்தால ஒரு அப்பாவி பையன் மனச கெடுத்துவிட்டுட்டு.. இப்ப பழிய என் மேலயே போடுறியாடி பிராடு." 


"யாரு நீ... நீ... அப்பாவி. இது அண்ட புழுகு டா சாமி. ஏன் இப்டி காலங்காத்தால பொய் சொல்றீங்க.?"


"யாரு நானாடி பொய் சொல்றேன். நீ தானடி என மேல வந்து விழுந்த" என்று சொல்லி அவளை மேலும் வெறுப்பேத்த. 


"வேணாம் மறுபடி மறுபடி அப்படி சொல்லாதீங்க. நா உங்களை எழுப்ப தான் பக்கத்துல வந்தேன்.. நீங்க தான் கைய புடிச்சு இழுத்தீங்க."


"சரி சரி விடு.. நா நம்பிட்டேன்.. நீ எதுவும் செய்யல, எல்லாம் தானா நடந்துது போதுமா" என்று சொல்ல. நிலா அவனை வெட்டவா, குத்தவா என்று பார்க்க.‌.. சூர்யா தன் டவலை எடுத்துக்கொண்டு பாத்ரூமுக்கு சென்றவன். திரும்பி நிலாவின் பட்டு கன்னத்தில் ஒரு முத்தத்தை வைத்து விட்டு ஓடிவிட. நிலா ஆஆவென வாயை பிளந்து அப்படியே நின்று விட்டாள்.


நிலா அறையை விட்டு வெளியே வர. அங்கு நின்றிருந்தது மூன்று வானரங்களும். "அய்யோ இதுங்க இங்க தான் இருக்கா?. நல்லா மாட்டிக்கிட்டேனே. இவர் வேற முத்தம் தந்துட்டு போய்டாரு. ஒருவேள உள்ள நடந்ததை இதுங்க பாத்திருக்குமே..!? பேசாம அப்டியே எஸ்கேப் ஆகி ஓடிடுவோம்? என்று நழுவ பாக்க.. அவளை வழிமறித்த தேனு, "ஹலோ நிலா மேடம்... என்ன  எஸ்கேப்பா..?? அதுதான் நடக்காது மகளே...‌ மரியாதையா சொல்லு..

?? உள்ள என்ன நடந்தது? ஏன் இப்படி பேயறைஞ்ச மாதிரி இருக்க.?? என்ன மேட்டர்?" என்று கண்ணடிக்க. 


"ஆமா தேனு அன்னைக்கு துணிக்கடையில அடிச்ச அதே பேய் தான் மறுபடியும் நிலா வா அடிச்சுடுச்சு..!! இல்ல நிலா என்று தேவி இழுக்க… நிலாவிற்கு வெட்கம் பிடுங்கி தின்றது. "ஏய் சும்மா இருங்கடி. நீங்க நினைக்கிற மாதிரி ஒன்னு இல்ல. சும்மா போங்கடி" என்று வெட்கப்பட்டு தலைகுனிய. 


"இப்ப புரியுத தேவிக்கா. நா ஏன் மாமஸ்கு காபி குடுக்க போகமாட்டேன்னு சொன்னேன்னு" என்று சந்தியா அவள் பங்கிற்கு நிலாவை மேலும் சிவக்க வைக்க.. 


"ஏய் இப்ப நீ வாங்கப்போற பாரு என்றவள். மூவரும் அசந்த நேரம் பார்த்து அங்கிருந்து ஓடி விட்டிருந்தாள்.. நிலாவின் முகத்

தில் சந்தோஷத்தை பார்த்த மூவரும் நாம் செய்தது சரிதான் என்ற மனநிறைவுடன் கீழே சென்றனார்.