கண்ட நாள் முதல் 20
அத்தியாயம் 20
திருமணம் முடிந்து வீடு வந்த
சூர்யா தான் அறையில் இருக்க, அங்கு வந்த அரவிந்த், "ஏன்டா இங்க தனியா இருக்க, நிலா கூட போய் பேசிட்டு இருக்க வேண்டியது தானே..??"
"உனக்கு ஏன்டா இந்த நல்ல எண்ணம்... உறுமிட்டு இருக்க பெண் சிங்கத்து கிட்ட தனியா போய் மாட்ட எனக்கு என்ன கிறுக்கா புடிச்சு இருக்கு..?? போடா டேய்... நேத்தும், இன்னைக்கு நா அவகிட்ட பண்ண சேட்டைக்கு, அவ கொலைவெறியில இருப்பா. இப்ப மட்டும் நா அங்க போனேன். என்னை கொத்துகறி போட்றுவா…"
"ம்ம்ம்ம் அதுவும் சர்தான். ஏன்டா அவ்ளோ பயம் இருக்கில்ல. அப்றம் என்ன வெண்ணெய்க்கு அவகிட்ட அவ்வளவு சேட்டை பண்ண நீ??"
"ம்ம்ம்... எல்லாம் சுத்தி ஆளுங்க இருந்தாங்க அந்த தைரியம் தான். அதனால தான் அவளும் சும்மா இருந்தா., இப்ப மட்டும் நா தனியா அவ கிட்ட சிக்குனேன் அவ்ளோ தான். என்னை படக்குன்னு ஒடச்சிடுவா, நா போக மாட்டேன்ப்பா, ஆள விடு…"
"சரிடா இப்ப நீ எஸ்கேப் ஆகலாம்.. ஆனா, இன்னைக்கு நைட் உங்களுக்கு பஸ்ட் நைட் ஆச்சே அப்ப எப்படி தப்பிச்சு ஓடுவா…?"
"டேய் மச்சி... எனக்கு அடி கன்பார்ம். அது எனக்கே தெரியும். ஆனா, அடி வாங்குற நேரத்தை கொஞ்சம் தள்ளி வச்சு இருக்கேன் அவ்ளோவுதான்."
"கருமம் மானம் கெட்ட பொழப்புடா உன் பொழப்பு" என்று அரவிந்த் காறித்துப்ப… "டேய் இன்னும் கொஞ்ச நாள்ல நீயும் இதே பொழப்பு பாக்க தான் போற. கொஞ்சம் அடக்கி வாசிடி… தேனு கிட்ட மாட்டி, நீ என்ன ஆகுறேன்னு நானும் பாக்க தானே போறேன்." என்றவன் ஏதோ நியாபகம் வர. "டேய்..!! ஆமா கேக்கானுன்னு நினச்சேன்... நீயும் தேனு அப்டி அடிச்சுட்டு, ஒருத்தருக்கு ஒருத்தர் சாபம் குடுத்துட்டு இருந்தீங்க.!! திடீர்னு எப்டி சமாதானம் ஆணிங்க.? அன்னைக்கு காபி ஷாப்பில கூட அவ உன்கிட்ட சரியா பேசலையே..?? ஏன் நேத்து சாயந்திரம் வரை கூட அவ ஒரு மாதிரி மூட் அவுட்டா தான் இருந்த..?? அப்றம் திடீர்ன்னு என்னாச்சு.? ரெண்டு பேரும் லவ் பேர்ட்ஸ் ஆகிட்டிங்க. இடைப்பட்ட இந்த நேரத்துல். என்ன தான்டா நடந்தது?"
"எல்லாத்துக்கும் நம்ம தேவி தான் சூர்யா காரணம்" என்றவன். நடந்த அனைத்தையும் சொல்ல. "சூப்பர் டா நம்ம தேவி. ரொம்ப நல்ல வேலை தான் செஞ்சிருக்கு. உனக்கு தேனு தான் கரெக்ட் மேட்ச். நா மனசுல என்ன நெனச்சேனோ, அதத தேவி அப்டியே செஞ்சிட்ட. அவளை கண்டிப்பா பாராட்டியே ஆகணும்."
"ஆமா ஆமா... அப்படியே சீர்வரிசை செஞ்சு, அவளுக்கு அண்ணா இருந்து அவ லவ்வர் கூட அவ கல்யாணத்தையும் முடிச்சு வச்சிடுவோம்."
"என்னடா சொல்ற நீ.? தேவி லவ் பண்றாளா…! இது எப்ப இருந்து?" என்று சூர்யா அதிர்ச்சியாக கேட்க.
"அவ ரொம்ப வருஷமாவே அவ மாமா பையனை லவ் பண்ணலாம். உன் பொண்டாட்டிக்கும், என் வருங்கால பெண்டாட்டிக்கும் பயந்து தான் இவ்ளோ நாள் சொல்லாம இருந்திருக்கா, அதனால இதுங்க ரெண்டையும் லவ்வுல கோத்து விட்ட தான் அவ ரூட் கிளியராகும்னு… நிலாவை உன்கிட்டயும் தேனுவ என்கிட்டயும் மாட்டி விட்டிருக்கடா அவ…" என்று சொல்ல
சூர்யா திறந்த வாய் முடவில்லை.
" இத்துனுண்டு இருந்துட்டு எவ்வளவு பெரிய தில்லாலங்கடி வேலை பாத்திருக்கா பாருடா அவ. வரட்டும் அவளை என்ன பண்றேன்னு பாரு" என்று செல்லமாக கோவப்பட.
"நீ என்னடா அவளை கேக்குறது. உன் பொண்டாட்டி அந்த பிசாசுக்கு மட்டும் இந்த மேட்டர் தெரியட்டும். அப்புறம் நம்ம தேவி என்ன ஆகுறான்னு மட்டும் பாரு. பாவம் அந்தபுள்ள" என்று கவலைப்பட.
"ஆமாடா நீ சொல்றது சரி தான். நிலாக்கு மட்டும் இந்த மேட்டர் தெரியாம பாத்துக்கணும்."
"அரவிந்த ஆமாடா மச்சி.. தேவி கதை இப்டின்னா. என் நிலைமை அதவிட மோசம். உன் பொண்டாட்டிக்கு என்ன கண்டாலே பிடிக்காது. இதுல தேனு கிட்ட சத்தியம் வேற வாங்கி வச்சிருகிக்க, நாளைக்கு எங்க லவ் மேட்டர் தெரியும்போது என்ன ஆகப்போகுதோ. கலை அம்மா சரியா தான் அவளுக்கு பேர் வச்சு இருக்காங்க சூர்ப்பனகை னு… என்னோட லவ்ல பூந்து என்ன சதி வேலை பண்ண போறாளோ, ஒன்னு புரியல" என்று புலம்ப.
சூர்யா, "விடு டா மச்சி எல்லாம் போக போக சரியாகிடும். என் பொண்டாட்டியா நா பாத்துக்கிறேன். யூ டோண்ட் வொறி மேன்"
இங்கு சந்தியா நிலாவுன் நடந்த கல்யாணத்தை பற்றி வேடிக்கையாக பேசிக்கொண்டு நிலாவை கலாட்டா செய்து கொண்டிருந்தவள். பேச்சு சுவாரஸ்யத்தில்..?? தேவி நேற்று அவள் காதலை பற்றியும், அவள் போட்ட பிளானை பற்றியும் உளறி வைக்க.. நிலா அதிர்ச்சியாக சந்தியாவை பார்க்க… சந்தியா, "அய்யோ அவசர பட்டு இப்படி உளறி வச்சிட்டேனே... இப்ப என்ன செய்றது?" என்று திருதிருவென முழிக்க.
"ஏய் இப்ப என்ன சொன்னா நீ?" என்று நிலா மிரட்ட... இல்லக்கா நா ஒன்னும் சொல்லல" என்று ஓட பாக்க.
அவள் காதை பிடித்து திருகிய நிலா, "ஏய் மரியாதையா சொல்லு என்ன நடந்தது. இப்ப சொல்லப் போறியா இல்லையா?" என்று மிரட்ட.
சந்தியாவோ, ""அய்யோ பாவம், எப்ப பாரு தேவி அக்காவை எனக்கே தெரியாம மாட்டி விட்டுடுறேனே, இது என்ன மாயமோ மந்திரமோ தெரியலயே" என்று நொந்தவள். தேவி நேற்று சொன்னதை சொல்ல.
நிலா அவளை முறைத்து விட்டு, "ஒஒஒஒஒஒஒஒ... அப்டிய சங்கதி. அடியேய் நீ போய் தேவிய நா இங்க வர சொன்னேன்னு சொல்லு.. நீ என்கிட்ட சொன்னத பத்தி அவகிட்ட மூச்சு விடக்கூடாது. போடி" என்று விரட்டி விட்டவள். "ஒன்னும் தெரியாத பச்சபுள்ள மாதிரி இருந்துகிட்டு, இந்த ஊமகொட்டான் என்ன வேலை பாத்து இருக்கு. எங்களுக்கு தெரியாம லவ் பண்றது மட்டும் இல்லாம.. எனக்கும் சூர்யாக்கும் சேட்டிங் வேற பண்ணி இருக்கலாம். வரட்டும் அந்த மூட்டப்பூச்சிய இன்னைக்கு நசுக்கிறேன்" என்று புகைந்து கொண்டு இருக்க.
சந்தியா தேவியிடம் சென்றவள், யக்கா தேவியக்கா…. தேவி அக்கோவ்" என்று கத்த..
"ஏன்டி பிடாரி இப்டி காது கிட்ட வந்து கத்துற, என்ன வேணும் உனக்கு..??"
"அக்கா உங்களுக்கு என்ன பிடிக்கும் தானா? நா உங்க செல்ல தங்கச்சி தானே??" என்று அப்பாவியாய் முகத்தை வைத்துக்கொண்டு கேக்க.
தேவி அவளை சந்தேகமாக பார்த்தவள். "இவ எதுக்கு இப்படி கேக்குற. இப்டி இவ பாசமா பேச வாய்ப்பே இல்லயே.? ஒருவேளை நமக்கு ஆப்பு எதும் சீவி வச்சிட்டு வந்து இருக்காளோ..??" என்று யோசித்தவள், "என்னடி?? என்ன ஆச்சு உனக்கு?? எதுக்கு திடீர்னு இப்டி கேக்குற..?? எனக்கு எதுவும் பள்ளம் தோண்டி வச்சிருக்கியா என்ன?? என்று கேட்க.
"அக்கா யாரா பாத்து என்ன வார்த்தை சொல்லிட்டீங்க..?? என்னை பாத்து, உங்க பாசமலரை பாத்து இப்டி சொல்லிடீங்களே" என்று அழுக.. அழுவது போல் நடிக்க.
"அடியேய் அடியேய்… நீ யார்னு எனக்கு தெரியும் நா யார்னு உனக்கு தெரியும். நம்ம ரெண்டு பேரும் யார்னு இங்க இருக்க எல்லாருக்கும் தெரியும். மரியாதையா சொல்லு என்ன பிராடு வேலை செஞ்சுட்டு இங்க வந்து பெர்ஃபார்மன்ஸ் பண்ணிட்டு இருக்க நீ? சொல்லுடி" என்று மிரட்ட
"அடச்சே.. இவ்வளவு ஹெவி பெர்ஃபாமன்ஸ் பண்ணியும் இந்த அக்கா நம்ப மாட்டேங்குது… சரி எப்டியே இன்னைக்கு எனக்கு தேவி அக்கா கிட்ட மீதி கன்பார்ம். விடு சந்தியா எவ்வளவோ பார்த்தாச்சு, இத பாக்க மாட்டோமா" என்று தனக்கு தானே சொல்லிவிட்டு, "தேவி அக்கா நிலா உங்களை கூப்ட்ட, போய் என்னன்னு கேளுங்க" என்று சொல்ல.
"நிலா எதுக்கு டி இப்ப என்னை கூப்பிடுறா.??"
"எனக்கு தெரியாதுக்கா.?? என்று சந்தியா முகத்தை பாவம் போல் வைத்துக்கொள்ள,
"அடியோ பிடாரி நம்பர் டூ... உன் போக்கே சரியில்ல. வந்ததும் என்னை உங்களுக்கு புடிக்குமான்னு கேட்ட, இப்ப நிலா கூப்பிடுற ன்னு சொல்ற… அடியேய்... எதாவது ஏடாகூடமா பண்ணி வச்சிருந்தா சொல்லுடி.. நா இப்டியே எஸ் ஆகி ஓடிடுறேன்.
"அது சரி நீங்க எஸ் ஆகி ஓடிட்ட.. அந்த பிடாரி கிட்ட நா இல்ல மொத்து வாங்கணும்" என்று நினைத்தவள். அதெல்லாம் ஒன்னும் இல்லக்கா. அவ ரூம்ல தனியா இருக்க இல்ல, அதான் சும்மா பேசிட்டு இருக்க கூப்புடுற, நீங்க போங்க்கா. நா தேனு அக்காகிட்ட போறேன்" என்று சொல்லி விட்டு ஓடி விட.
தேவி நிலாவின் அறையை( தன் கெட்ட நேரத்தை) நோக்கி சென்றாள்.
தேனு, அரவிந்த், சூர்யா மூவரும் ஏதோ பேசிக்கொண்டிருக்க. அங்கு ஓடி வந்த சந்தியா, "மாம்ஸ்… மாம்ஸ்... தேவி அக்காவை காப்பாத்துங்க.. காப்பாத்துங்க" என்று மூச்சு வாங்கிய படி சொல்ல,
"ஏய் என்னடி ஆச்சு..?? தேவி என்ன? எங்க அவ?" என்று தேனு கேட்க..
"தேனக்கா, மாம்ஸ், அரவிந்த் மாமா, நா உளறிட்டேன், மறுபடியும் நா உளறி தேவி அக்காவை மாட்டி விட்டுட்டேன்." என்று பதற...
"அது நீ எப்பவுமே பண்றது தானே... இப்ப என்ன புதுசா பண்ணி தொலச்ச அத சொல்லுடி?" என்று தேனு கத்த...
"தேனக்கா நேத்து தேவி அக்கா சொன்னத நா வாய் தவறி நிலாகிட்ட சொல்லிட்டேன் க்கா" என்று பெரிய குண்டை தூக்கி போட.
"அடிப்பாவி சண்டாளி... ஏன்டி இப்டி பண்ண. எப்பபாரு தேவிய மாட்டிவிடுறதை நீ பொழப்பாவே வச்சுட்டு சுத்துறியேடி" என்று தலையில் அடித்து கொண்டவள், "இப்ப தேவி எங்கடி.??" என்று கேட்க
அவளை நிலாவிடம் அனுப்பி வைத்ததை சந்தியா சொல்ல... அடிப்பாவி ஏன்டி இந்த கொலைவெறி உனக்கு..??"
"நா வேற என்ன பண்றதுக்கா" என்று மூஞ்சியை பாவமாய் வைத்துக்கொள்ள, "அடிங்கு மவளே… பண்றத பண்ணிட்டு மூஞ்ச பாவமா வச்சு நடிக்கிற நீ" என்று அரவிந்த் அவள் தலையில் கொட்ட.
"ஏய் ஒரு நிமிஷம்... நேத்து நடந்ததுன்னா..?? அப்போ நானும் அரவிந்தும் லவ் பண்றதயும் நிலா கிட்ட போட்டுக் குடுத்திட்டியா என்ன..?? தேனு பதற….
இதை கேட்ட அரவிந்தும், "அய்யோ அப்டி ஒன்னு இருக்கு இல்ல" என்று அவனும் பதற.
"அடியேய் சொல்லுடி எல்லாத்தையும் உளறிக்கொட்டிய என்ன..??
"இல்லக்கா.. நல்லவேள அதுக்குள்ள சுதாரிச்சுட்டேன். உங்களை பத்தி நான் எதுவும் சொல்லலக்கா…"
"அப்பாடி..!! அந்த மட்டும் சந்தோஷம்டி... எங்களா பத்தி சொல்லி இருந்த..?? அவ்ளோதான் இன்னைக்கு சாவு நாளைக்கு பால்னு ஆகி இருக்கும்." என்று நிம்மதி பெருமூச்சு விட… அரவிந்தும் சூர்யாவும் நிம்மதி கொண்டனர்.
"அதுசரி இப்ப தேவி அக்காவை அந்த பிடாரி கிட்ட இருந்து யாரு காப்பாத்துறத" என்று சந்தியா கேக்க.
"அடியேய்... சூனிய பொம்மை, பண்றத பண்ணிட்டு. இப்ப வந்து எப்டி காப்பாத்துறதுன்னு கேக்குற நீ?" என்று அவளை முறைக்க..
"இப்ப என்னதம்மா பண்றது..??
"இப்ப ஒன்னும் பண்ண முடியாது சூர்யாண்ணா. அவ தலையெழுத்து யாரும் ஒன்னும் பண்ண முடியாது. வாங்கி கட்டிட்டு வரட்டும். நா அவளை ஹாஸ்பிடல் கூட்டி போறேன். வேற எதுவும் பண்றதுக்குக்கில்ல" என்று சொல்ல. நால்வரும் கன்னத்தில் கை வைத்துக் கொண்டு அமர்ந்து விட.
"டேய் சூர்யா… நிலாகிட்ட நீ வாங்க வேண்டிய அடி.. பாவம் இப்ப தேவி வாங்கிக்கட்டிக் போகுது.. உன் மேல இருக்க மொத்த ஆத்திரத்தையும். நிலா அந்த புள்ள மேல காட்டப் போற. ம்ம்ம்ம் என்ன செய்ய எல்லாம் அந்த பொண்ணோட கெட்ட நேரம்."
தேவி நிலாவின் அறைக்குள் செல்ல.
நிலா, "வாடி என் செல்லம்.. வா வா… உன்ன தான் எதிர் பார்த்துட்டு இருந்தேன். வாடா இப்டி கிட்ட வா…"
"என்ன இவ கூப்புடுற தோரணையே சரியில்லயே.! என்னவா இருக்கும்?" என்று யோசித்தவள், "ரைட்டு அந்த சூனிய பொம்மை மறுபடியும் அதோட நாரதர் வேலையா காட்டிடுச்சு போல… ஆனா, மேட்டர் என்னன்னு புரியலயே? கடவுளே என்னை ஏன் இந்த பிடாரி சிஸ்டர்ஸ் கிட்டயே மாட்டி விட்டு வேடிக்கை பாக்குற நீ. வெறி பேட் யூ நோ" என்று புலம்பியவள். "நிலாம்மா இன்னும் என்ன தாமதம். உன் வேலையை ஆரம்பி"
நிலா தேவி அருகில் வரவும். தேவி கண்களை இருக்கிமுடிக்கொண்டு அடி வாங்க தயாராக நிற்க..?? சிறிது நேரம் கழித்து அடி எதுவும் விழாமல் போக.. கண்களை திறந்து பார்க்க. அங்கு நிலா கட்டிலில் உட்கார்ந்து அழுது கொண்டிருக்க... தேவி ஒரு நிமிடம் பதறியவள், "ஏய் நிலா என்னடி?? என்ன ஆச்சு?? எதுக்கு இப்ப இப்டி அழுகுற??" என்று அவள் அருகில் சென்று அவள் கண்களை துடைத்து விட. "உனக்கு என்னை புடிக்கலயா தேவி??" என்று வேதனையுடன் வந்த நிலாவின் வார்த்தையில் உண்மையில் தேவி உடைந்துவிட்டாள்.
"என்னடாம்மா?? இப்டி ஒரு வார்த்தை கேட்டுட்டா. நீன்னா எனக்கு உசுருடா. உன்னையா போய் எனக்கு பிடிக்காதுன்னு சொல்லிட்டியே.. ஏன்டா அப்டி சொன்னா?" என்று வழியும் தன் விழி நீரை துடைத்து கொண்டே கேட்க.
"அப்றம் ஏன்டி நீ லவ் பண்ற விஷயத்தை என்கிட்ட மறச்ச.?? உனக்கு ஒரு நல்லது நடக்குதுன்னா. அத நெனச்சு நான் சந்தோஷபடாம, உன் காதலை கடிச்சுடுவேன்னு நெனச்சிட்டே இல்ல நீ... நா உனக்கு அவ்ளோ வேண்டாதவளா போய்டேன் இல்ல. அதான் நீ அகிட்ட சொல்லல இல்ல" என்று விசும்ப.
எங்கிருந்து தான் தேவிக்கு அவ்வளவு கோவம் வந்ததோ, தேவி விட்ட அறையில் நிலா ஒரு நிமிடம் ஆடி போய்விட்டாள்.
"லூசாடி நீ.? என்ன பேச்சு பேசுற. தெரிஞ்சு தான் பேசுறியா? இல்ல கிறுக்கு எதும் பிடுச்சுடுச்ச?' என்று தேவி கத்த.
"எனக்கு ஒன்னும் கிறுக்கு புடிக்கல.. உனக்கு தான் என்னை புடிக்காம பேச்சு" என்று நிலாவும் கத்த, "ஏய் மறுபடியும் அப்டியே சொல்ற நீ" என்று மீண்டும் அடிக்க கை ஓங்கியவள். நிலாவின் அழுது வடியும் முகத்தை பார்த்து ஓங்கிய கையை இறக்கி, ஒரு நிமிடம் தன்னை நிதானித்து, "இல்லடா நிலா. அப்டி எதுவும் இல்ல. நா உங்ககிட்ட எதையும் மறைக்கனும்னு நினைக்கலடா. உங்களுக்கும் ஒரு நல்ல லைப் கிடச்ச பிறகு சொல்லலாம்னு நினைச்சேன். ஆனா, உனக்கும் தேனுக்கும், இந்த காதல், கல்யாணம் மேல எல்லாம் இன்ட்ரஸ்ட்டே இல்ல. உங்களுக்கு உங்க எதிர்காலத்த பத்தி எந்த சிந்தனையும் இல்லாமயே போச்சு. நீ என்னடான்ன எப்ப பாரு வர மாப்பிள்ளை எல்லாம் விரட்டி அடிச்சுட்டு இருந்த, அந்த தேனு எரும இந்த காதல் கல்யாணம் எல்லாம் சுத்த வேஸ்ட் ன்னு சொல்லிக்கிட்டு இருந்த. அதனால தான் உனக்கும் தேனுக்கும் ஒரு நல்ல வாழ்க்கை அமைந்த பிறகு என்னோட காதலை சொல்லலாம்னு முடிவு செஞ்சு இருந்தேன்" என்று தன் நிலையை விளக்க.
"லூசாடி நீ? எங்களுக்கு காதல் பிடிக்காதுன்னு நாங்க எப்ப சொன்னோம். நா கல்யாணம் வேணாம்னு சொன்னதுக்கு வேற ஸ்ட்ராங்கான ரீசன் இருக்கு. அப்டியே இருந்தாலும் அதுக்கும் உன்னோட லவ்வுக்கும் என்னடி சம்பந்தம்.?"
"இருக்குடி, சம்பந்தம் இருக்கு... என்னோட லவ் மேட்டர் உங்களுக்கு தெரிஞ்ச, நீங்க முதல் வேலையா எனக்கு கல்யாணம் பண்ணி வச்சிட்டு தான் மறு வேலை பாப்பீங்க. அப்றம் நான், என்னோட வாழ்க்கை, என்னோட குடும்பம்னு செட்டிலாகிடுவேன். அதுக்கு அப்றம் உங்க கூட இருக்க முடியாதில்ல. அப்றம் உங்க ரெண்டு பேரையும் யாரு கட்டி மேய்கிறதாம். அதான் நா கல்யாணம் ஆகி போறதுக்கு முந்தி உங்க ரெண்டு பேருக்கும் ஒரு நல்ல லைப் பார்ட்னர் கிடைக்கனும்னு ஆசைப்பட்டேன். அது தப்பாடி? என்னோட ரெண்டு ஃப்ரண்ஸ்சும் நல்லா வாழனும்னு நினைச்சேன், அது தப்பா" என்று கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்து கொண்டே கேட்க. நிலா பாய்ந்து வந்து தேவியை இறுக்கி கட்டிக்கொண்டாள்.
"சாரிடா தேவிகுட்டி ரொம்ப சாரி. ஏற்கனவே என்னோட கல்யாண விஷயத்துல நீங்க ரெண்டு பேரும் பண்ண வேலையில நா மனசு ஒடஞ்சு போயிருந்தேன். இப்ப இந்த லவ் மேட்டர் கேள்வி பட்டு எனக்கு இன்னும் ரொம்ப வேதனையா போச்சுடா செல்லம். அதான் அப்படி பேசிட்டேன்… சாரி" என்று சிறுபிள்ளை போல் அழ.
"பரவாயில்ல நிலா நீ அழத.?? என்றவள். ஆமா நிலா உன் மனசு கஷ்டப்படுற மாதிரி நாங்க என்ன பண்ணோம்?" என்று புரியாமல் கேட்க.
நிலா கண்களை துடைத்துக் கொண்டு, "முதல்ல நா கேக்குற கேள்விக்கு பதில் சொல்லு... உங்க ரெண்டு பேருக்கும் என்னோட வாழ்க்கை பத்தி முடிவெடுக்குற உரிமை இருக்க? இல்லயா தேவி?" என்று கேட்க.
"ஏய் என்னடி உளர்ற.. உன்னோட அப்பா, அம்மாக்கு உன்மேல எவ்ளோ உரிமை இருக்கோ, அதோ அளவு உரிமை எங்களுக்கு இருக்குடி..!!"
"இருக்குதானா… அப்ப ஏன்டி சூர்யா பத்தி என்கிட்ட சொல்லல?" என்று கேட்க. தேவியாள் அதற்கு பதில் சொல்ல முடியவில்லை.
"பதில் இல்ல இல்ல தேவி. அதுதான்... அதுதான்டி என்னை வேதனை படுத்துன விஷயம். உங்களுக்கு நல்லா தெரியும். குமாரும் அம்மாவும் சொன்னத, நா எப்டி மீற மாட்டேனே... அப்டிதான் உங்க ரெண்டு பேர் பேச்சையும் மீறி நா நடக்க மாட்டேன்.
நீங்க ரெண்டு பேரும், நீ சூர்யாவை தான் கட்டிகாணும்னு ஒரு வார்த்தை சொல்லி இருந்த. நா கண்டிப்பா உங்க பேச்சை மீறி இருக்க மாட்டேன்டி. அப்டி இருக்க, ஏன்டி எனக்கே தெரியாம என் கல்யாணத்தை ஏற்பாடு பண்ணீங்க" என்று உடைந்த குரலில் கேட்ட நிலாவுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் தவித்தாள் தேவி.
"எனக்கு இப்பவரை உறுத்துற விஷயமே அதான்டி… ஒருவேளை நீங்க என்கிட்ட பாசம் இருந்த அளவுக்கு நான் உங்ககிட்ட பாசமவும், அன்பவும் இல்லயோ? அதனால தான் நீங்க அப்டி பண்ணிட்டிங்ளோன்னு என் மனசுக்கு ரொம்ப கஷ்டமா போச்சுடி. அதனால தான் அன்னைக்கு சந்தியா மூலமா உண்மை
தெரிஞ்சப்பே, கோவத்தை கண்ட்ரோல் பண்ண முடியாம உங்க ரெண்டு பேரையும் அடிச்சுட்டேன்…" என்று அழுபவளை பார்த்த தேவி, மொத்தமாக உடைந்து விட்டாள். தன் தோழியின் மனம் புரியாமல் எவ்வளவு பெரிய தவறு செய்துவிட்டோம் என்று கலங்கியவள்.
"சாரி நிலா ரொம்ப சாரி. எங்க நீ சூர்யா அண்ணாவை வேணாம்னு சொல்லிடுவீயோன்னு பயந்து தான் அப்டி பண்ணிட்டோம்" என்றவள் தன் கைகளாலே தன் கன்னத்தில் மாறி மாறி அடித்து கொள்ள.
"ஏய் லூசு என்ன பண்றநீ?" என்று தேவியின் கைகளைப் பிடித்த நிலா, "நா ஏதோ ஒரு மூடுல அப்டி சொல்லிட்டேன். அதுக்கு இப்டி அடிச்சுக்குவியா லூசு… நீங்க என்ன எனக்கு கெட்டாத பண்ணிங்க.. நா நல்லா இருக்கணும்னு தானே அப்டி பண்ணிங்க. ஒரு பிரச்சனையும் இல்ல. இதுக்கு போய் சின்ன குழந்தை மாதிரி அழுதுட்டு" என்று அவள் கண்களை துடைத்து விட.. தேவி அவளை கட்டிகொண்டவள். "கடவுளே என்னோட காதல் விஷயம் தெரிஞ்சே இவ இப்படி ஆகிட்ட.. இன்னும் தேனு, அரவிந்த் அண்ணா லவ் மேட்டர் தெரியும் போது இவ எப்டி தாங்கிக்க போறாளோ?" என்று தவிக்க.
"ஏய் என்னடி சிலை மாதிரி நிக்குற உன் மாமா கூட டூயட்டா?" என்று சீண்ட.
"ச்சி அதெல்லாம் ஒன்னு இல்ல" என்று தேவி வெட்கப்பட்டு தலைகுனிய. அவள் சிவந்த கன்னத்தை கிள்ளியவள். "ஏய் உன் மாமா அந்த கருவாயன் கிட்ட சொல்லி வை. கல்யாணத்துக்கு அப்றம் உன்னை கண்கலங்காம பாத்துக்கனும்னு.. இல்ல இந்த நிலா இன்னும் கையை உடைக்கிற வித்தையை மறக்கல" என்று கையை முறுக்கி காட்ட.
"போடி பிடாரி... அதெல்லாம் என் மாமா என்னை நல்லா தான் பாத்துப்பாரு. இன்னும் சொல்லப்போனா மாமா தான் உனக்கு, தேனுக்கு நல்லபடி கல்யாணம் முடிஞ்ச பின்னாடி நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொன்னாரு தெரியுமா... அவருக்கு என் மேல அம்புட்டு லவ்வக்கும்" என்றவள் நிலாவின் கன்னத்தில் முத்தமிட்டு விட்டு ஒரே ஓட்டாமாய் ஓடிவிட்டாள்.
நிலாவிற்கு நெடுநாட்களாக தன் மனதை வருத்திக்கொண்டு இருந்த விஷயம் இன்று ஒரு முடிவுக்கு வர.. அழுது வடிந்த தன் முகத்தோடு சேர்ந்து தன் மனக்கவலைகளையும் அழுத்தி துடைத்து எறிந்து விட்டாள்.