கண்ட நாள் முதல் 2

 

அத்தியாயம் 2 


அடுத்த நாள்... 


அந்த காஃபி ஷாப்பில், ஒரு சில காதலர்கள் தங்களை மறந்து பேசிக் கொண்டிருக்க, காலியாக இருந்த இடத்தில் அமர்ந்த நிலானி. ஒரு கோல்ட் காபி ஆர்டர் செய்துவிட்டு அரவிந்துக்காக காத்திருந்தாள்.


அப்போது அங்கு வந்த அரவிந்த். நிலாவைப் பார்த்து "ஹாய்" என்று கையாட்ட, அவனை நிமிர்ந்து பார்த்த நிலாவின் கண்ணில் தெரிந்த கோபத்தை பார்த்தவன், "ஆஹா..!!! இவ பார்வையிலேயே நம்ல எறிருச்சுடுவ போலயிருக்கே... டேய்‌ அரவிந்த் இன்னைக்கு நீ கிரில்சிக்கன் தான்டா!" என்று எண்ணியவன். மறுபடியும் "ஹாய்" சொல்ல, சேர்ரை நோக்கி தன் கையை காட்ட. அந்த சேரில் உட்கார்ந்த அரவிந்த் நிலாவை பார்த்து சிரிக்க... அவனை விடாது முறைத்துக் கொண்டிருந்தது நிலாவின் கண்கள்.


'இது வேலைக்காகாது' என்று நினைத்த நிலா, "உங்ககிட்ட நா என்ன சொன்னேன்?  நீங்க என்ன பண்ணி வச்சிருக்கீங்க?" என்று சட்டியில் இட்ட பாப்கார்ன் போல் பொறிய... அரவிந்த் திரு திரு என முழிக்க...‌ நிலா தான் வசை மாரியை அடைமழையாக வெளுத்து வாங்கினாள். அதில் நனைத்து அரவிந்த்க்கு மூச்சு முட்ட, "பிளீஸ் நிலா கொஞ்சம் gap விடும்மா... மூச்சுமுட்டுது, சுத்தி எல்லாரும் நம்ம தான் வேடிக்க பாக்றாங்க" என்று சொல்ல. நிலா பேசுவதை நிறுத்திவிட்டு சுற்றி அந்த இடத்தை ஒரு பார்வை பார்த்துவிட்டு ஆழ்ந்து மூச்செடுத்தவள்.


"அரவிந்த் நீங்க பண்ணது உங்களுக்கே நல்லா இருக்க.? இல்ல நல்லா இருக்கன்னு கேக்குறேன்.? நா வேலமெனக்கெட்டு. இந்த வேகாதவெயிலில் வண்டிய எடுத்துக்கிட்டு உங்க ஆஃபீஸ்கே வந்து, எனக்கு இந்த கல்யாணம் வேணாம். வீட்டுல சொன்ன கேக்க மாட்டாங்க, அதனால நீங்க பொண்ணு பாக்க வராதீங்கன்னு கிளி பிள்ளைக்கு சொல்ற மாதிரி சொல்லிட்டு வந்த. நீ என்னடான்ன, நீ வந்ததும் இல்லாம, எக்ஸ்ட்ராவா உன்னோட குடும்பத்தை வேற கூட்டிட்டு வந்துட்ட.. சரி பரவாயில்லன்னு மறுபடியும்  மாடியில வச்சு மரியாதையா என்னை புடிக்கலைன்னு சொல்லிடுனு சொன்ன...  நீ என்னை புடிச்சிருக்குன்னு சொல்லிட்டு போற. உனக்கு எவ்வளவு கொலஸ்ட்ரால் இருந்த அப்டி சொல்லியிருப்ப?" என்று நிலா கத்திக்கொண்டிருக்க... அரவிந்த் எதுவும் சொல்லாமல் அமைதியாக அவளை பார்த்தபடியே இருந்தான். அதில் இன்னும் வெறியான நிலா.


"ஏன்டா டேய் இங்க ஒருத்தி காத்திட்டுருக்கேன்... நீ என்னடா? என் மூஞ்சில ஏதோ புது படம் ஓடுற மாதிரி அமைதியா பாத்துட்டிருக்கா.? டேய் அரவேக்காடு வாய தொறடா…" என்ற நிலவின் குரலில் ஜெர்க்கானவன், "என்னது டாவா..??"


"ஆமா டா"


"நிலா ப்ளிஸ் கொஞ்சம் அமைதியா பேசுங்க" என்று அரவிந்த் கெஞ்ச.


"முடியாது டா. நா அவ்வளவு சொல்லியும் கேட்காம பொண்ணு பாக்க வந்த உனக்கு மரியாதை ஒரு கேடா? போடா...''


"சரி உங்களுக்கு ஏன் இந்த கல்யாணம் புடிக்கல.? அதை சொல்லுங்க முதல்ல என்ற அரவிந்தை முறைத்த நிலா, "அத உன்கிட்ட சொல்ல வேண்டிய அவசியமில்ல!" என்று கோவமாக சொல்ல... பதிலுக்கு அரவிந்த் "அப்ப நானும் உங்க, என்றவன் சற்று நிறுத்தி  "உன் பேச்ச கேக்க வேண்டிய அவசியமில்ல போடி" என்க.


நிலா அரவிந்த்தை தீயாய் முறைத்துக்கொண்டு இருந்தாள்.


 "ஓகே நிலா, நா உன்னோட வீட்டுல இந்த கல்யாணத்தில் எனக்கு  சம்மதம்னு சொல்லிடுறேன். Bye…" என்று கிளம்ப. அவனை கொலைவெறியுன் பார்த்த நிலா, "ஹலோ என்ன நீ என்னை மிரட்டிப்பாக்குறீய" என்று கத்த.


அவன் கூலாக "ஆமாம்" என்றான்.


அதைக்கேட்டு நிலா திரு திருவென முழிக்க... அதை பார்த்து அரவிந்த் உள்ளுக்குள் சிரித்துக்கொண்டான்.


"இங்க பாரு எனக்கு இந்த கல்யாணம் வேணாம்... பிளீஸ் புரிஞ்சுக்க." என்று நிலா சற்று இறங்கி வர


"அத தான் ஏற்கனவே சொல்லிட்டியே... அதுக்கு என்ன காரணம்? அத சொல்லு. அதுக்கப்புறம் நா இந்த கல்யாணம் வேணுமா? இல்ல வேணாமனு சொல்றேன்" என்றவனை என்ன செய்வது என்று தெரியாமல் முழித்தாள் நிலா.


"இதோ பாரு நீ நினைக்கிற மாதிரி நா நல்ல பொண்ணெல்லாம் இல்ல. சொல்லிபுட்டேன் ஆமாம்."


அதற்கு அரவிந்த் ரொம்ப கூலாக. "அப்படியா? ஆனா, நா விசாரிச்ச வரைக்கும் அப்படி ஒன்னும் தெரியலயே... எல்லாரும் நீ ரொம்ப நல்லபொண்ணுன்னு தானே சொன்னாங்க…"  என்றவனை தீயாக முறைத்தவள். மனதிற்குள் அவனைத் திட்டிக்கொண்டே... 


"இதோ பாரு... யாரே உனக்கு தப்ப சொல்லி இருக்காங்க, அதெல்லாம் பொய், நம்பாத என்றவளை சிரிப்புடன் பார்த்தவன்,  "நோ வே. நா உன் பேச்ச தான் நம்பமாட்டேன். நீ தான் என்னை ஏமாத்த பொய் சொல்ற‌ மாதிரி எனக்கு தெரியுது" என்று சின்ன பிள்ளை போல் சொன்னவனை கொலைவெறியுடன் பார்த்தவள், சேரிலிருந்து கோபமா எழுந்து.


"ஏன்டா? ஊர்ல யாரோ சொல்றத நம்புவ, நீ என்ன கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்ற, ஆனா, நீ ஏன் பேச்சை நம்ப மாட்ட? அப்படித்தானே... இப்டி இருக்க உன்ன நா கல்யாணம் வேற பண்ணிக்கணு இல்ல? மரியாதையா சொல்றேன் ஒழுங்க என்ன பிடிக்கலன்னு சொல்லிட்டு ஓடிடு இல்லலலல" என்று முறைக்க..


"வாட் இஸ் திஸ் நிலா? பர்பாமென்ஸ் ரொம்ப கம்மியா இருக்கு. இன்னும் பெட்டரா ட்ரை பண்ணுமா.. இது ரொம்ப சப்பையா இருக்கு நிலா" என்றவனை வெறித்துப்பார்த்தவள். அப்படியே இருக்கையில் அமர்ந்து, தலையில் கையை வைத்துத்கொண்டாள். 


நிலா மனதில், 'பயபுள்ள எந்த ball போட்டாலும். நோ ball ஆக்குறனே, இவன என்ன செய்றதுனு ஒன்னு புரியலயே' என்று குழம்பியவாள். 'வேறவழியே இல்ல… உண்மைய சொல்ல தான் வேணும் போல. ரைட்டு அதுதான் சரி! உண்மைய சொல்லிடுவோம். அப்புறம் இவனே இந்த மாதிரி ஒரு லூசு பொண்ணு வேணாம்னு. பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓடிடுவன்…' என்று மனதில் ஒரு கணக்கு போட்டவள். அரவிந்திடம் பேச ஆரம்பிக்க.


"என்ன நிலா.. எல்லா ball லும். No ball ஆகிடுச்சே. அடுத்து லவ் இருக்கு. இல்ல எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சு, அப்படி இப்படின்னு ஏதும் சொல்லப்போறீய" என்று நக்கலாக சொன்னவன், "இதோ பாரு நிலா, நீ என்னோட ஆபீஸ் வந்து, எனக்கு இந்த கல்யாணம் புடிக்கல.. நீங்க பொண்ணு பாக்க வராதீங்கன்னு சொன்னான அப்பவே, நா உன் வீட்டுக்கு வர வேண்டாம்னு முடிவு பண்ணிட்டேன். ஆனா,  என்று சற்று நிறுத்தி நிலா முகம் பார்த்தவன். "உங்களை என்னோட அப்பா, அம்மாவுக்கு ரொம்ப பிடிச்சு இருந்துது. அதோட உங்களை பத்தி விசாரிச்சப்போ. எல்லாரும்  சொன்ன ஒரே பதில். நீங்க ரொம்ப நல்ல பொண்ணு‌... குடும்பத்துமேல உங்களுக்கு பாசம் அதிகம்.. எல்லாரையும் மதிச்சு நடக்குற அன்பான பொண்ணு. அதோடு உங்களுக்கு லவ் ஏதுவும்  இல்லைன்னும் தெரிஞ்சுது." என்றவன்  முகத்தையே நிலா இமைக்காது பார்த்துக் கொண்டிருக்க, அரவிந்த் மீண்டும் தொடர்ந்தன். 


"உன்ன மாதிரி ஒரு பொண்ணை மிஸ் பண்ண எனக்கு மனசு வரால நிலா. உனக்கு மட்டும் லவ் எதும் இருந்திருந்த. சத்தியம நா  உன்னை டிஸ்டர்ப் பண்ணியிருக்க மாட்டேன். நீ வேற ஏதோவொரு காரணத்தை வச்சு தான் கல்யாணம் வேணாம்னு சொல்ற. உன்கிட்ட பேசி அதை சரி பண்ணலாம்னு‌ தான், நா அன்னைக்கு உங்க வீட்டில அப்படி சொன்னேன்." என்று தான் நிலையை விளக்கியவன் நிலாவின் முகம் பார்க்க...


அவள் முகத்தை வைத்து எதையும் அவனால் உணர முடியவில்லை.


நிலா அரவிந்தை நிமிர்ந்து பார்த்தவள். எந்த ஒரு சலனமும் இல்லாமல்,  "நா ஏற்கனவே ஒருத்தர லவ் பண்றேன்" என்றாள் எந்த உணர்ச்சியும் இன்றி…


அதை கேட்டு எரிச்சலான அரவிந்த். சற்று கோபமாகவே,‌ "ஏன் நிலா? நான் இவ்ளோ சொல்லியும் மறுபடியும் பொய் சொல்றீயே? எனக்கு உன்ன பத்தி தெரிஞ்ச வரை. நீ காலேஜ்லயும் சரி, இப்ப ஆபீஸ்லயும் சரி யாரையும் லவ் பண்ணல… அண்ட் நீ வீடு விட்ட ஆபீஸ், ஆபீஸ் விட்ட வீடுன்னு தான் இருக்க. அப்படி இருக்க நீ லவ் பண்றேன்னு சொன்ன., அத நம்ப நான் என்ன முட்டாள நிலா"  என்றான் அடக்கிய கோபத்துடன்.


நிலா மிகவும் அமைதியாக,  "நீங்க நம்பினாலும் சரி, நம்பாட்டியும் சரி அது தான் உண்மை'' என்றாள்‌ வெறுமையான ‌குரலில்...


"ஓஓஓ அப்படியா? அப்ப நீ எப்ப லவ் பண்ண ஆரம்பிச்ச அத சொல்லு பாப்போம்?" என்று திமிராக கேட்டவனுக்கு அவள் "என்னோட பதினாறு வயசில்" என்று சொன்ன வார்த்தையில் தூக்கிவாரிப்போட்டது.


"வாட் யூ மீன்.? அப்ப நீ ஸ்கூல் படிக்கும்போதே லவ் பண்ண ஆரம்பிச்சுட்ட அப்டி தான?? என்றான் நக்கலாக,


"ஆமா அப்டிதான். இப்ப அதுக்கென்ன?" என்றாள் கோபாமாக.


அவள் முகம் பார்க்க, அவள் பொய் சொல்வதாக தெரியவில்லை. மூளையே குழம்பி விடும்போல் ஆகிவிட்டது அவனுக்கு. 


சற்று யோசித்த அரவிந்த்


"சரி நிலா.‌ அப்ப உன் லவ்வர் பேர் என்ன? சொல்லு" என்க


நிலா, "தெரியாது" என்றாள் தலையை குனிந்தபடியே.


"ஹலோ மேடம். என்னை பார்த்த உனக்கு லூசு மாதிரி தெரியுத?  இல்ல நீ லூசா" என்றவனை நிலா  முறைக்க.


"ஓய் என்ன லுக்கு? நீ  சொல்றத பார்த்த அப்டிதான் தோணுது. நீ பதினாறு வயசிலிருந்து லவ் பண்ற, கிட்டதட்ட ஒம்பது வருஷம் லவ்வு. ஆனா, லவ்வர் பேர் மட்டும் தெரியாது அப்டிதான??" 


"ஆமா... அப்டியே தான். நா தான் உண்மையான காரணத்தை சொல்லிட்டேன் இல்ல... ஜஸ்ட் லீவ் இட். அண்ட் லீவ் மீ, இனி என்னை டிஸ்டர்ப் பண்ணாதீங்க" 


"அதெல்லாம் நடக்காது நிலா.. நா இந்த கல்யாணத்துக்கு ஓகே தான் சொல்லுவேன்.. நீ என்ன பண்றீயே பண்ணிக்கோ"


"டேய் நீ என்ன.?? என்னை பிளாக்மெயில் பண்றீய?" என்று கத்த


"அப்கோர்ஸ் நிலா" என்ற அரவிந்த் ‌பதிலில் நிலா தான் தலையில் அடித்துக்கொண்டவள், "இப்ப என்ன தான் டா வேணும் உனக்கு? எதுக்கு இப்டி ஏழரய இழுக்ற? நான் என்ன சொல்லனும்னு சொல்லித் தொலடா..?? சொல்லிட்டு நா போய் என்  பொழப்பை பாக்குறேன்." 


"உன்னோட லவ் ஸ்டோரிய சொல்லு.. அப்பதான் நா  நம்புவேன்." என்றான் ‌அரவிந்த்.


'இவன் ரொம்ப உஷாரா இருக்கானே' என்று சற்று யோசித்தவள். "வேற வழியில்லை. இந்த லூசுகிட்ட எல்லாத்தையும் சொல்லிடலாம்... அப்பதான் இந்த மரவேதாளம் நம்ம தோளைவிட்டு இறங்கும்" என்று நினைதவள் தன் காதலின் முதல் பக்கத்தை புரட்டினாள்.


ஒன்பது வருடத்திற்கு முன்


எல்லா பக்கமும் இருள் சூழ்ந்த அந்த அறையின் மூலையில் கைகள் கட்டப்பட்ட நிலையில் இருந்தாள் நிலா. கண்களை திறந்து பார்த்தவளுக்கு அங்கு ஒன்றும் தெரியவில்லை. தட்டுதடுமாறி எழுந்தவள். அப்படியே நடக்க இருட்டில் அவளுக்கு ஏதுவும் புரியவில்லை. சுற்றும் முற்றும் பார்த்தவள். ஒரு இடத்தில் சிறு வெளிச்சம் வர அந்த இடத்தை நோக்கி மெல்ல  நடந்தாள். அப்போது அங்கே பேச்சுக்குரல் கேட்க அதை உற்று கவனித்தாள் நிலா.


"டேய்! அந்த பொண்ண பத்திரமா பாத்துக்கோங்க, நாளைக்கு காலையில அந்த ஆள் வந்துடுவான்.‌ பணத்தை வாங்கிட்டு அவன்கிட்ட இந்த பொண்ணை ஒப்படைக்கணும்   புரிஞ்சுத? அதுவரைக்கும் ஒழுங்க இருங்க. எவனாவது குடிச்சுட்டு ஏதும் ஏழரய கூ ட்டி வச்சீங்க? கட்டயால அடிச்சு மண்டய  உடைச்சிடுவேன். ஜாக்கிரதை!!" என்றவன் அங்கிருந்து கிளம்ப. அவன் சென்ற அடுத்த நிமிடமே கையில் பாட்டிலுடன் உக்காந்து குடிக்க ஆரம்பித்துவிட்டனர் அந்த இருவரும்.


"டேய் அந்த ஆளு குடிக்க கூடாதுன்னு சொல்லிட்டு போய் இருக்காருடா… நம்ம. அந்த ஆள் போன‌ அடுத்த செகண்ட் டே ஆரம்பிச்சிடோம். இதைமட்டும்  அந்த தர்பூசணி தலையன் பாத்தான் அவ்ளோதான்." என்றான்‌ ஒருவன்.


"அந்த சொட்டமண்டயன் மறுபடி வரமாட்டான், நீ பேசாம குடி.'' என்றான்‌ அடுத்தவன்.


''இல்லடா அந்த பொண்ணு உள்ள இருக்கு, நாம குடிச்சு மட்டை ஆனதும். ஈது தப்பிச்சு  ஓடிட்ட  என்ன பண்றது? அந்த பொண்ண  பல லட்சம் விலை பேசி. இருக்கான் அந்த டாப்ப தலையன்.‌ அதான் யோசிக்கிறேன்" 


"அதெல்லாம் ஒன்னும் ஆகாது… நம்ம மீறி அவ எங்கயும் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது. நீ பேசாமல் இரு"


"ஆமா... இவரு பெரிய உலகநாயகன். டைலாக்  விடுறாரு போடா டேய்..."


"டேய் ஒன்னு மூடிட்டு குடி. இல்லய எந்திரிச்சு போ. சும்மா சாவ சாவன்னுட்டு.." 


"அஸ்க்கு எல்லதையும் தனிய ஆட்டய போட பாக்குறிய. அது தான் நடக்காது. மரியாதையா எனக்கும் உத்து" என்று அந்த ஆட்கள் பேசிக்கொண்டிருக்க, இவர்கள் பேசியதை கேட்டுக்கொண்டு இருந்த நிலாவிற்கு, இவர்கள் பெண்களை விற்கும் கும்பல் என்று புரிய பயத்தில் உறைந்தாள்.


"அய்யோ கடவுளே? இப்ப என்ன பண்றது.. இங்க இருந்து எப்டி  தப்பிக்கிறது" என்று யோசித்தவள்.. அவர்கள் பேசியதில் இருந்து அவர்கள் குடித்தது நியாபகம் வர. மெதுவாக சுவற்றை தடவிக் கொண்டே‌ செல்ல அவளுக்கு கதவு தட்டுப்பட்டது.


நிலா தான் கையில் கட்டப்பட்டிருந்த கயிற்றை பற்களால் கடித்து அவிழ்த்தாள்… பின் கைகளை வைத்து பலம் கொண்ட‌ மட்டும் அந்தஸகதவை திறக்கப்பார்க்க, அந்த பழைய கதவு பொசுக்குன்னு திறந்துவிட்டது. நிலா வெளியே எட்டிப்பார்க்க... அந்த இரண்டு நீர் யானையும் தண்ணீரில் மிதந்து கொண்டிருக்க.. இதுதான் சான்ஸ் என்று நிலா அங்கிருந்து எஸ்கேப் ஆகி வெளியே ஓடி வர. அவ கெட்ட நேரம், அந்த நேரம் பாத்து வீட்டுக்கு போன அந்த லூசு  ச்சே இல்ல அவனுங்க பாஸ்சு தர்பூசணி தலையன் திரும்பி வந்தவன் நிலாவை பார்த்துவிட்டான். வீட்டை நோக்கி "டேய் எருமங்கள" என்று தொண்டைகிழிய கத்த. உள்ளே மட்டையாக கிடந்த நீர்யானைங்களின் காதில் அது விழுந்து தொலைக்க, அதுங்க வெளியே ஓடி வந்தது. இத பாத்த நிலா வேகமாக ஓட. அத பாத்த அந்த மூனு பன்னிகளும் அவளை துரத்த, சேசிங் ஸ்டார்ட் ஆக… அய்யோ அப்டின்னு நா மூச்சு வாங்க,  ப்ச்ச் முடிலடா சாமி.


நிலா ஓட… அந்த மூனு கிட்நாப் ஆளுங்க அவளை துரத்த. அப்ப பாத்து ஜோனு மழை பெய்ய ஆரம்பித்தது. நிலா லைட் வெய்ட் அதனால ஸ்பீடா ஓட.ன. அந்த கிட்நாப் தடியன்ஸ்  தின்னு தின்னு உப்பி உதிபோய் இருக்கவும். அவங்களால ஓட முடியல. நிலா பின்னங்கால் பிடறியில் அடிக்க தெறித்து ஓடிப்போய் ஏது மேலயே மோதி நின்றவள், நிமிர்ந்து பார்க்க அங்கு ஆறடி உயரத்தில் ஒரு ஆள். 

மழையில் நிலா அவனின் முகத்தை கூட சரியான பார்க்காமல், அவனிடம் "ப்ளீஸ் என்னை காப்பாத்துங்க ..மூனு தடியங்க என்னை துரத்துறாங்க காப்பாத்துங்க" என்று தட்டுதடுமாறி சொல்ல,


அந்த ஆறடி ஆள் பின்னாடி திரும்பி பார்த்தவன். அங்கு மூனுபேர் ஓடி வருவதை கண்டான். உடனே நிலாவின் கரம்பற்றி இழுத்து அருகில் இருந்த பெரிய மரத்தின் பின் மறைந்து கொண்டான். அவன் இழுத்த வேகத்தில் அவன் மார் மீது மோதி அவள் கீழே விழப்போக அவளை  இழுத்து தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான் அவன்.


அந்த மூன்று தடிமாடுகளும்  வருவதை பார்த்தவன்.  அவர்கள் பேசுவதை கவனிக்க, அவர்கள் பெண்களை விற்கும் கும்பல் என்று அவனுக்கும் புரிந்தது. திரும்பி அவன் நிலாவை பாக்க அவள் பயத்தில் நடுங்கி நிற்கவும், அவளை காப்பாற்ற நினைத்தவன்,  அவளை  இழுத்துக் கொண்டு ஓட நினைக்க. இருவரையும் அந்த தடியன்கள் பார்த்துவிட்டு,   அவர்களை பிடிக்க ஓடி வர, அந்த ஆறடி ஆள் அந்த மூன்று பேர் மூஞ்சி, மூக்கு, கை" என்று எல்லா இடத்திலும் தான் கைவரிசையை காட்ட,  ஏற்கனவே ஃபுல் போதையில் இருந்த ரெண்டு பேரும், அடிவாங்கியதில் டக்குன்னு கீழே விழுந்து விட. அந்த பாஸ் கத்தியெடுத்து நிலாவை குத்த வர, அந்த ஆறடி ஆள் நிலாவிற்கு முன்னாடி வந்து நிற்க அவன் கையில் கத்தி பட்டு ரத்தம் வர.  நிலா "அய்யோ ரத்தம்" என்று கத்தியே விட்டாள்.