ஆழியின் ஆதவன் 4

 









ஆழி 4


ஆழி அந்தக் குடோனுக்குள் செல்ல, மீரா, சைத்ரா இருவரும், அந்தக் குடோன் வெளியே காரில் அமர்ந்து லேப்டாப்பில் அந்த ப்ளாக்மெயிலர் பற்றிய தகவல்களை தேடிக் கொண்டு இருந்தனர்.


ஆழி நாலாபுறமும் தன் கண்களை சுழற்றி பார்த்தபடி நடக்க, திடீரென யாரோ அவளின் பின்னந்தலையில் கட்டையால் அடிக்க வர, ஆழி சட்டென காலை இடதுபுறமாக திருப்பி வைத்து ஓரடி பின்னால் நகர்ந்து, அசால்ட்டாக அந்தக் கட்டையைப் பிடித்து, தன் முழங்கை வைத்து ஒரு அடி அடிக்க, அந்த ஒரு அடிக்கே கட்டை உடைந்து கீழே விழுந்தது.


"ம்ம்ம் செம்ம ஆழினி. ஒரு வருஷம் குழந்தைக்கு ஆயா வேலை பாக்கப்போய்ட்டியே, எங்க எல்லாத்தையும் மறந்திருப்பியோன்னு சும்மா ஒரு டெஸ்ட் வச்சு பாத்தேன். ம்ம்ம் சும்மா சொல்லக்கூடாது, நீ ஆளு சூப்பர் தான். எல்லா வகையிலும்" என்று அவளை மேலிருந்து கீழாக ஒரு மாதிரி வக்கிர பார்வை பார்த்தபடியே சிரிக்க, 


இங்கு காரில் இருந்த சைத்ரா, "ஆமா இவன் பெரிய ஹைய் ஸ்கூல் வாத்தியாரு, டெஸ்ட் வைக்குறாரு, ஃபோன்ல மெரட்ற நாய்க்கு பேச்சப் பாத்தியா மீரா"


"விடு சைத்து, சாகப்போற சனியன், சபலத்துல பேசுது. விட்டுத் தள்ளு" என்றாள் மீரா.


"நீ யார்னு எனக்குத் தெரியாது… அஃப்கோர்ஸ், உனக்கும் நான் யாருன்னு முழுசா தெரியாதுனு எனக்கு நல்லா தெரியும். சோ, டைரக்ட்டா கேட்கறேன். வாட் யூ வாண்ட்?, தென் உன்னை அனுப்புனது யாரு?" என்ற ஆழியை வியப்பாகப் பார்த்தான் அவன்‌.


"நீ ரொம்ப புத்திசாலி தான் ஆழி. ஓகே நானும் நேரா விஷயத்துக்கு வரேன். நான் யார் சொல்லி இதை செய்றேன்னு உனக்குச் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்ல. நீ, நான் சொல்ற வேலைய ஏன், எதுக்குன்னு கேக்காம ஒழுங்கா செஞ்சு முடிக்கணும்." என்றவனை அலட்சியமாகப் பார்த்தாள் ஆழினி.


"செய்ய மாட்டேன்னு சொன்னா... நீ என்ன பண்ணுவ?"


"சிம்பிள், நேரா ஆதவ்கிட்ட போய் நீ யாரு, என்னன்னு எல்லாத்தையும் சொல்லிடுவேன். தட்ஸ் ஆல்" என்றவனைப் பார்த்து நக்கலாக சிரித்தாள் ஆழி.


"ஆர் யு நட்ஸ்? லூசி நீ? ஏன்டா உனக்கே நான் யாருனு முழுசா தெரியாது. எதையோ அரைகுறையா தெரிஞ்சு வச்சிட்டு, தேவையில்லாம இதுக்குள்ள மாட்டிக்கிட்ட… இதுல நீ அந்த ஆதவ்கிட்ட என்னைப் பத்தி என்ன சொல்ல போறியா? சரி அப்படியே நீ சொன்னாலும், எனக்கென்ன… அந்த ஆதவ் என்ன எனக்குப் புருஷனா? சொந்தமா? பந்தமா? நான் அவனுக்குப் பயந்து நீ சொன்னத செய்ய?"


"ஆதவ் உனக்கு யாரும் இல்ல தான். ஆனா, அவனோட அந்தக் குட்டி பொண்ணு, அது பேர் என்ன… ஹான் வெண்ணிலா, அவமேல உனக்கு ரொம்ப பாசம்னு கேள்விப்பட்டேன்‌. அந்தக் குழந்தைய எதுவும் செஞ்சா?..." என்றதும், அதுவரை இயல்பாக இருந்த ஆழினி முகம் ரௌத்திரமாக மாற ஆரம்பித்த நேரம், அவள் கையில் இருந்த வாட்சில் லைட் எரிய, அவள் தன் காதோரம் இருந்த முடியை ஒதுக்கி, அவள் காதில் இருந்த ப்ளூடூத்தை ஆன் செய்தாள்.


"சொல்லு சைத்ரா"


"சிம்பிளி வேஸ்ட் ஆழி" என்று ஒரே வார்த்தையில் சொல்ல,


"ஓகே" என்ற ஆழி நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.


"ஏய் என்ன அது? யார் கிட்ட பேசின? என்று கேட்டபடி ஆழி அருகில் வந்து அவளை அடிக்க கையை ஓங்க, ஆழி லேசாகத் திரும்பி அவன் கையை இறுக்கிப் பிடித்து, "உன்னோட எமன் கிட்ட பேசினேன்டா" என்றவள், அவன் முழங்கால் பின்புறம் தன் காலால் மிதிக்க, அவன் வலி தாங்க முடியாமல் கீழே உட்கார, ஆழிக்கு அது வசதியாகப் போக, அவன் பின்னந்தலையில் ஒரு கை, அவன் தாடையில் ஒரு கைவைத்து இறுக்கிப் பிடித்து, "குட் பை" என்றபடியே அவள் கையை திருப்ப, அடுத்த நிமிடம் கழுத்து எலும்பு முறிந்து உயிரற்ற உடலாக அவன் தரையில் விழுந்தான்.


"கைய்ஸ் கம் இன்" என்று ஆழி அழைத்த அடுத்த நிமிடம் அந்தக் குடோனுக்குள் நுழைந்தனர் மீராவும் சைத்ராவும்.


"யாரு இவன்?"


"பெருசா சொல்ற மாதிரி ஒன்னும் இல்ல ஆழி. சொந்த பொண்டாட்டியயே காசுக்காகக் கொன்னிருக்கான். ரவுடி, சரியான பொம்பள பொறுக்கி. மூணு மர்டர் கேஸ், நாலு ரேப் கேஸ், கட்டப்பஞ்சாயத்து அன்ட் எக்ஸட்ரா எக்ஸட்ரா…, போலீஸ் என்கவுன்டர் லிஸ்ட் ல இவன் இருக்கான். ஆகமொத்தம் வாழ தகுதி இல்லாத ஜென்மம் தான், சோ நோ வொரிஸ். பட், இவனுக்கு எப்படி ஆழி உன்னைப் பத்தி தெரிஞ்சிருக்கும்?"


"யானைக்கும் அடி சறுக்கும் மீரா. மே பீ எனக்குத் தெரியாம நான் எதையாது மிஸ் பண்ணி இருக்க வாய்ப்பிருக்கு."


"அப்ப அது தெரிஞ்சு வச்சிட்டு, இவன் உன்னை ப்ளாக்மெயில் பண்ண ட்ரை பண்ணி இருக்கலாம்னு சொல்றீயா ஆழி?"


"நோ சைத்ரா, இவன் வெறும் போஸ்ட்மேன் தான். ஐ மீன் வெறும் அம்பு, இது எறிஞ்சது வேற யாரோ. இப்ப இவன் உயிரோட இல்ல, சோ ஹீ மஸ்ட் டூ பீ நெக்ஸ்ட்... பாப்போம்"


"சரி ஆழி இந்த டெட்பாடிய என்ன பண்றது?"


"நம்ம ஒன்னும் பண்ண வேணாம் மீரா. இவனை அனுப்பி வச்சவன் கண்டிப்பா, இவன ஃபாலோ பண்ணி இருப்பான். இங்க இப்ப நம்ம பேசுறது கூட அவன் கேட்டுட்டு இருக்க நிறைய வாய்ப்பிருக்கு, சோ இந்தப் பாடிய அவன் பாத்துப்பான்‌. நீ அவன் ஃபோனை மட்டும் எடுத்துக்க, நம்ம கிளம்பலாம்." என்றதும் மூவரும் இறந்துக் கிடந்தவன் சட்டை பையில் இருந்த அவன் ஃபோனை எடுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினர்.


ஆழி தன் முன் இருந்த காஃபி கப்பின் விளிம்பை விரலால் வருடியபடி இருக்க, "ஆர் யூ ஓகே ஆழி?" என்ற மீராவை பார்த்துச் சின்னதாகச் சிரித்த ஆழி,


"எஸ். மீரா ஐயம் ஓகே. சரி மீரா நீங்க ரெண்டு பேரும் எப்ப கிளம்புறீங்க?"


"எங்க கிளம்பணும்னு சொல்ற நீ? என்று கேட்டாள் சைத்ரா.


"ம்ம்ம்... எங்க இருந்து வந்தீங்களோ அங்க" என்ற ஆழிக்கு மறுப்பாக இடவலமாகத் தலையாட்டிய பெண்கள் இருவரும், "இந்த ப்ராப்ளம் முடியும் வரை நாங்க எங்கயும் போக மாட்டோம். இங்க தான், உன் கூடத் தான் இருப்போம்" என்று இருவரும் உறுதியாகச் சொல்ல, ஆழி "ப்ச்சு" என்று சலிப்பாக இருவரையும் பார்த்தாள்.


"ஏய் என்ன இது விளையாட்டு? முதல்ல கிளம்புங்க, நம்ம ப்ளான் படி ஆறு மாசம் கழிச்சு மீட் பண்ணலாம்."


"நோ வே ஆழி… நாங்க எங்கயும் போக மாட்டோம். இந்தப் பிரச்சனைய சால்வ் ஆனதும் நம்ம மூணு பேரும் சேர்ந்து வேற எங்கயாவது போலாம். எப்படியும் அந்தப் பாப்பா நிலாக்கு ஒரு வயசு மேல ஆகிடுச்சு, மிஞ்சிப் போனா இன்னும் கொஞ்ச நாள் தான நீ இங்க இருக்கணும். அதோட உன் நன்றிக்கடனும் முடிஞ்சிடும். அப்புறம் நம்ம மூணு பேரும் ஒன்னாவே போய்டலாம். சிம்பிள்." என்று சைத்ரா கண்ணடிக்க,


"இட்ஸ் நாட் தட் சிம்பிள் சைத்ரா. இவனுக்கு என்னைப் பத்தி தெரிஞ்ச மாதிரி இன்னும்‌ யார் யாருக்கு தெரியுமோ? எல்லா நேரமும் நமக்குச் சாதகமா இருக்கும்னு சொல்ல முடியாது. இப்ப வரை என்னை மட்டும் தான் டார்கெட் பண்ணி இருக்காங்க, உங்க ரெண்டு பேர் பத்தி அவங்களுக்கு எதுவும் தெரியல… அது அப்படியே இருக்கட்டும். எது நடந்தாலும் என்னோட போகட்டும். யூ கைட்ஸ் ப்ளீஸ் லீவ்" என்றாள் கட்டளையாக.


"நீ பேசி முடிச்சிட்டியா? சரி இப்ப நான் கேக்குறதுக்கு பதில் சொல்லு? நாங்க யார் உனக்கு?" என்ற சைத்ராவை சலிப்பாகப் பார்த்த ஆழி, "என்ன சைத்து இது? எனக்கு ஃபேமிலினு ஒன்னு இருக்குன்னா அது நீங்க ரெண்டு பேர் மட்டும் தான். அதான் சொல்றேன். ஜஸ்ட் கெட் அவுட் ஃப்ரம் ஹியர்…"


"நோ" என்று இருவரும் ஒரே குரலில் சொல்ல, அதற்கு மேல் இருவரும் தன் பேச்சை கேட்க மாட்டார்கள் என்று‌ புரிந்த ஆழி, "தென் யுவர் விஷ்" என்று வெளியே செல்ல,


"அந்தப் பாப்பா எப்படி இருக்கு ஆழி?" என்ற மீரா கேள்வியில் அப்படியே நின்றாள் ஆழி.


"உனக்கே தெரியாம‌ நீ அந்தப் பாப்பாகிட்ட ரொம்ப நெருங்கிட்டு இருக்க ஆழி. இது சரியா வருமான்னு யோசிச்சியா?"


"தெரியல மீரா. இப்ப வரை நான் எதை பத்தியும் யோசிக்கல, இப்ப என் நினைப்பு பூராவும்" என்று தன் நெஞ்சின் மீது கை வைத்தவள், "ஆஷாவும் அவங்க பொண்ணு நிலாவும் தான் இருக்காங்க" என்றவள் தோளில் கை வைத்த சைத்ரா,


"எங்களுக்குப் புரியுது ஆழி. பட்…"


"விடு சைத்ரா. இன்னும் கொஞ்ச நாள் தான பாத்துக்கலாம்".


"இப்ப உன்னோட ஹெல்த் எப்டி இருக்கு ஆழி? ஆர் யூ ஓகே. ஏற்கனவே ஆப்ரேஷன் பண்ண‌ உடம்பு, உனக்கு வேற டிரக்ஸ் சுத்தமா ஆகாது. கண்டபடி உளற ஆரம்பிச்சுடுவ, எதும் ப்ராப்ளம் இல்லயே, இப்ப எப்டி இருக்க, ஆர் யூ ஓகே?"


"ம்ம்ம் நல்லா தான் இருக்கேன், ஆதவ் கரெக்ட் டைம்க்கு‌ ஹாஸ்பிடல் கொண்டு போய்ட்டாரு. சோ பெருசா ஒன்னும் ஆகல..." என்ற ஆழினி முகத்தை சைத்ரா ஒரு நிமிடம் உற்றுப் பார்க்க,


"என்ன சைத்து? எதுக்கு அப்டி பாக்குற?"


"இல்ல ஆழி, நீ அதிகமா உன்னோட ஃபீலிங்க வெளிய காட்ட மாட்ட. ஆனா, ஆறுமாசம் முன்ன அந்தப் பாப்பா நிலா, அவ அம்மா ஆஷா பத்தி பேசும்போது உன் முகத்துல சின்னதா ஒரு சேஞ்ச் வந்தது. ஐ மீன் ஃபீல் பண்ண. பட், அந்த ஆள் ஆதவ் பத்தி பேசும்போது நீ ஏதோ செடி, கொடி பத்தி பேசுற மாதிரி தான் உன்னோட ரியாக்ஷன் இருந்தது. பட், இப்ப நீ அந்த ஆதவ் பேர் சொல்லும் போது உன் ஃபேஸ்ல ஒரு சேஞ்ச் தெரியுது. இஸ் எவ்ரிதிங் ஓகே?"


"இல்ல சைத்து. எதுவும் ஓகே இல்ல, அந்தக் கடத்தல் மேட்டர்க்கு அப்புறம் ஆதவ் ஆக்டிவிட்டீஸ்ல நெறைய‌ மாற்றம் தெரியுது." என்றவள் ஆதவ் நடவடிக்கைகளைச் சொன்னாள்.


"ஆதவ்க்கு உன்ன புடிக்க ஆரம்பிச்சு இருக்கும்னு நீ நெனைக்கிறியா ஆழி?"


"மே பீ மீரா, அவருக்குக் குழந்தை மேல உயிரு, அவளுக்கு என்மேல பாசம்‌ அதிகம். சோ லைஃப் லாங் இந்த ரிலேஷன்ஷிப்பை கொண்டு போலாம்னு அவர் யோசிக்க சான்சஸ் உண்டு. வெண்மதி அம்மாக்கு கூட அந்த எண்ணம் இருக்கு."


"நீ ஆதவ் பத்தி என்ன நினைக்கிற ஆழி?"


"ஆதவ் பத்தி யோசிக்க என்ன இருக்கு சைத்து… என்னைப் பொருத்தவரை ஹி இஸ் ஜஸ்ட் நிலா'ஸ் ஃபாதர், அவ்ளோதான், நத்திங் எல்ஸ்"


"பட் ஆழி" என்ற மீராவை நிறுத்திய ஆழி, "போதும் மீரா, இதுக்கு மேல வேணாம். செத்தவன் ஃபோன் வச்சு அவனை அனுப்பி வச்சது யாருன்னு கண்டு பிடிக்கணும். வீ ஹேவ் வெரி லெஸ் டைம்." என்றதும், சைத்ரா அவன் ஃபோனை தன் லேப்டாப்புடன் இனைத்து அதை அக்குவேறு ஆணிவேராக பிரித்து மேய்ந்தவள், ஆச்சரியத்தில் கண்களை விரித்தபடி, "ஆழி, மீரா கம் ஆன் சீ திஸ்!" என்று கத்த, ஆழியும் மீராவும் லேப்டாப் ஸ்கிரீனை கொஞ்ச நேரம் உற்றுப் பாக்க, பெண்கள் மூவர் வாயில் இருந்தும் ஒரே நேரத்தில் வந்த வார்த்தை "போலீஸ்".


"என்ன இது? எப்டி இது ஆழி?"


"எனக்கும் புரியல மீரா…" என்று கொஞ்ச நேரம் கண் மூடி யோசித்த ஆழி, "ஓகே, சைத்ரா‌ அவன் நம்பர் குடு" என்றதும் சைத்ரா அவளை முறைத்தாள்.


"லூசா ஆழி நீ? இப்ப எதுக்கு நீ அவனுக்கு ஃபோன் பண்ற?"


"இதை விட பெட்டர் ஐடியா உன்கிட்ட இருக்கா, சைத்து?" என்றதும் சைத்ரா அமைதியாகிவிட, "நம்பரைக் குடு" என்ற ஆழி அந்த நம்பருக்கு அழைத்தாள்.


"ஹலோ யாரு?" என்று அந்தப் பக்கம் கேள்வி வர,


"ரியலி... நான் யார்னு உங்களுக்குத் தெரியலயா? என்ன சார் இது, சென்னையை கையில வச்சிருக்க டெப்டி கமிஷனர் நீங்க, நீங்க போய் இப்டி சொல்லலாமா" என்று நக்கலாகக் கேட்ட ஆழி, "நீ என்னை ப்ளாக் மெயில் பண்ண அனுப்பி வச்ச ஆள் இனி வரமாட்டான். இனிமே ஆள் அனுப்ப வேண்டிய அவசியமும் இல்ல… எங்க மீட் பண்ணலாம்?" என்று நேரடியாக ஆழி கேட்ட, எதிர் பக்கம் சற்று நேரம் அமைதியாக இருந்தது.


"சண்டே ஈவினிங்" என்றுவிட்டு ஃபோன் கட்டானது.


"என்‌ன‌ ஆழி இது? ஒரு டெப்டி கமிஷனர், ஒரு ரவுடி கூட கூட்டு சேர்ந்து உன்னை ப்ளாக் மெயில் பண்ணி இருக்காரு, எனக்கென்னமோ இது சின்ன விஷயமா தெரியல, ஏதோ பெருசா ப்ளான் பண்றாங்க போல" என்றாள் சைத்ரா.


"எனக்கும் அப்படித்தான் தோணுது ஆழி. நம்ம கொஞ்சம் கேர்ஃபுல்லா இருக்கணும்" என்ற மீரா ஆழினியைப் பார்க்க, அவள் முகம் தீவிர யோசனையில் இருந்தது.


"ஏய் ஆழி என்னாச்சு?" என்று மீரா அவள் தோளைப் பிடித்து உலுக்க, நிகழ்வுக்கு வந்த ஆழி, சட்டென அங்கிருந்த, பேப்பர் பேனாவை எடுத்து எதையோ எழுதினாள்.


"சைத்ரா இந்த பேப்பர்ல இருக்க ஃபோன் நம்பர், மெயில் ஐடில இருந்து எல்லா டீடெயில்ஸூம் எடு" என்க அதில் இருந்த நம்பரை பார்த்த சைத்ரா, "ஏய் ஆழி இதுல உன்னோட நம்பரும் இருக்கே?" என்று ஆச்சரியமாகக் கேட்க, ஆழி மெதுவாகத் தலையாட்டியவள். "ம்ம்ம் நான் நெனைக்குறது சரின்னா, இந்த எல்லாமும் என்கிட்ட இருந்து தான் தொடங்கி இருக்கணும்."


"இட்ஸ் இம்பாசிபிள் ஆழி… நம்ம மூணு பேரோட ஃபோன் செக்யூரிட்டி ஃபயர்வால்லும் செம்ம ஸ்ட்ராங், யாராலையும் ஹேக் பண்ண முடியாது" என்று சைத்ரா உறுதியாகச் சொல்ல, ஆழி இடவலமாகத் தலையாட்டி, "நான் மறுபடியும் சொல்றேன், யானைக்கும் அடி சறுக்கும். நான் சொன்னதச் செய்." என்றவள் அங்கிருந்து கிளம்பினாள்.