Posts

அழகிய தமிழ் மகள் 29

  அழகி 29 பரதனுடன் மல்லுக் கட்டிவிட்டு ஆதித்தை பார்க்க வந்த யுக்தா அங்குக் கண்ட காட்சியில் கடுப்பின் உச்சத்திற்குச் சென்றாள். "ஓய் கெழவி உனக்கு வேற வேலையே இல்லையா? எப்பாரு இவன் கூடவே உக்காந்துட்டு இருக்க?‌ அங்க உம் புருஷன் சோறு போட ஆள் இல்லாம வெறும் தட்டை உத்து உத்து பாத்துட்டு இருக்காரு. போய் அவரைக் கவனி…" என்று அங்கு ஆதிக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்த சிவகாமி பாட்டியை இடுப்பில் கை வைத்து முறைத்தபடி சொன்னாள். பாட்டி இவளை மேலிருந்து கீழ் வரை ஒரு பார்வை பார்த்தவர், "ஏன்டி திமிர் புடிச்சவளே, அதை இங்க வந்து சொல்ற நேரத்துக்கு நீயே அந்தாளுக்குச் சோத்தை போட்டுட்டு வர வேண்டியது தானே?" என்று முறைத்தார். "எதுக்கு? இல்ல எதுக்குன்னு கேக்குறேன்? நான் அவருக்குச் சோறு போட, நீ வந்து ஏன்டி எம் புருஷனுக்குச் சாப்பாடு போடுறேன்னு என்கிட்ட சண்டை போட, அந்த கதையே வேணாம். நீயே போய் உன் புருஷனை, அந்த ஆணழகனைப் பாரு…" என்று உதட்டை சுழித்து ஒழுங்கு காட்ட, "ஏய் நான் தான் ஆதிக்கு சாப்பாடு ஊட்டிட்டு இருக்கேன் இல்ல. நீயே போடி" என்று கத்த, சிவகாமி கையில் இருந்த தட்டை வெடுக்கெ...

அழகிய தமிழ் மகள் 28

  அழகி 28 ஆதித் இருக்கும் மனநிலையில் அவன் கார் ஓட்டுவது சரியாக வராது என்று நினைத்த யுக்தா, "டேய் காரை நான் டிரைவ் பண்றேன். நீ என் லாப்டாப்ப ஓபன் பண்ணி அதுல ப்ரணவ்னு ஒரு போல்டர் இருக்கும். அதை ஓபன் பண்ணி டிராக்கரை கனெக்ட் பண்ணு…" என்றவள் காரை மின்னல் வேகத்தில் ஓட்ட, "இல்ல யுகி… ப்ரணவ் வாட்ச்ல நீ வச்சிருந்த டிராக்கிங் டிவைஸ் டிஸ்கனெக்ட் ஆகிடுச்சு. நான் டிரை பண்ணி பாத்துட்டேன். அந்த திருட்டு ராஸ்கல்ஸ் வாட்ச கழட்டி வீசிட்டானுங்க போல. இப்ப என்ன பண்றது?" என்று தவிக்க, யுக்தா அசால்டாக ஆதியை பார்த்தவள், "வாட்சை கழட்டி தூக்கிப் போட முடியும் ஆதி. ஆனா ப்ரணவ் வாய்ல இருக்கப் பல்லை அவனுங்களால புடுங்க முடியாதில்ல. டிரக்கர் ப்ரணவ் பல்லுல இருக்கு. ஒரு தடவ ப்ரணவ் கீழ விழுந்து ஒரு பல் உடஞ்சு போச்சு. புதுப்பல் செட் பண்ணும் போது அதுல ஒரு சின்ன டிராக்கிங் டிவைஸ் வச்சுச் செட் பண்ணிட்டேன். அது என்னோட லாப்டாப்ல கனெக்ட் ஆகி இருக்கு, நீ லாப்டாப்ல லாகின் பண்ணிப் பாரு…" என்க, ஆதி வேக வேகமாக லாகின் செய்ய, டிராக்கர் கரெக்டாக ப்ரணவ் இருக்கும் இடத்தைக் காட்டிக் கொடுத்தது. ராம், நிஷாவுக்கு...

அழகிய தமிழ் மகள் 27

 அழகி 27 மறுநாள் ஹாஸ்பிடல் சென்று அனுவின் தங்கைக்கு நன்றாகப் பூஜை நடத்திய யுக்தா கைகளைப் பிடித்து, அனு அழுதே விட்டாள். "ரொம்பத் தேங்க்ஸ் யுகி. நீ மட்டும் இல்லைன்னா, இந்நேரம் நாங்க என்ன பண்ணி இருப்போம்னே தெரியல?" என்று கண்கலங்கிய அனுவை யுக்தாவும், நிஷாவும் சமாதானம் செய்ய, "அக்கா அந்த மந்திரி பெத்த பொறுக்கி நாய என்னக்கா பண்ணீங்க?" என்று அனுவின் தங்கை ஆவலாகக் கேட்க, நிஷா, யுக்தாவை பார்த்து சிரித்தவள், "அதை ஏம்மா கேக்குற… சில கேஸ்ல நாங்க தனிபட்ட முறையில், ஆம்பளைங்க கிட்ட இருந்து உண்மையை வர வைக்க ஒரு டிரிக் ஒன்னு யூஸ் பண்ணுவோம். அதைத் தான் யுகி அந்தப் பையனுக்குச் செஞ்சிட்டா. எங்களுக்குத் தெரிஞ்ச நாலு பசங்ககிட்ட அந்தப் பையனை செமத்தியா கவனிக்கச் சொல்லி இருக்கா. அவனுங்களும் இவனை ஒரு வழி பண்ணிட்டாங்க...‌இனி ஜென்மத்துக்கும் அவனுக்கு யார் மேலயும் கை வைக்கிற தைரியமே வராது!" என்று நிஷா சிரித்தாள். "இனி அவன் உடம்பை அவன் தொடவே அவ்ளோ அருவெறுப்பா ஃபீல் பண்ணுவான். விருப்பம் இல்லாதவங்களை அத்து மீறி தொட்டா அது எப்படி வலிக்கும்னு இப்ப அவனுக்குப் புரிஞ்சு இருக்கும். நாலு ஆ...

அழகிய தமிழ் மகள் 26

  அழகி 26 யுக்தா அமைதியாகத் தட்டில் இருந்த பூரியை குருமாவில் மிதக்க விட்டு அப்படியே வாயில் கவுத்துக் கொண்டிருக்க, வேகமாய் வீட்டிற்குள் நுழைந்த பரதன், இடுப்பில் கை வைத்து யுக்தாவை முறைத்தபடி நின்றார். "கயல் அண்ணி உங்கப்பா செம்ம பசியில வந்திருக்காரு போல. என் பூரியயே குறுகுறுன்னு பாக்குறாரு? பாவம், மீதி இருந்தா அவருக்கு ரெண்டு பூரி குடுங்க. பிச்சி போட்டுக்கட்டும் பாவம்!" என்றவள் தன் தட்டிலேயே கவனமாக இருந்தாள். "நீ அடங்கவே மாட்டியா டைகர்? சென்னை வந்து இன்னும் முழுசா ஆறு மாசம் ஆகல… அதுக்குள்ள உன் வேலைய ஆரம்பிச்சிட்ட இல்ல. நீ என்ன செய்றன்னு புரிஞ்சு தான் செய்றியா? இப்ப நீ போலிஸ் இல்ல, அது உனக்கு ஞாபகம் இருக்க இல்லையா?" என்று அர்ச்சனை செய்து கொண்டிருக்க, ஆதி யுக்தாவையும், பரதனையும் மாறி மாறி பார்த்தவன் எதுவும் பேசாமல், தன் தட்டுக்கும் வாய்க்கும் பாலம் போட்டுக் கொண்டு இருந்தான். "என்ன ஆச்சு மாமா? எதுக்கு இப்படிக் காலங்காத்தால அவளுக்கு அர்ச்சனை பண்ணி தீபாராதனை காட்டிட்டு இருக்கீங்க?" என்ற வெற்றியை முறைத்த பரதன், "நீ எல்லாம் என்ன ஐ.ஏ.எஸ். ஊர்ல நடக்குறது தான் தெ...

அழகிய தமிழ் மகள் 25

  அழகி 25 ஆதித், யுக்தாவின் ஒவ்வொரு விடியலும் அவர்கள் வாழ்க்கையை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து செல்லுமா என்று வீட்டில் உள்ள அனைவரும் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு வேவு பார்க்க, இவர்கள் இருவரும் எப்ப சான்ஸ் கிடைக்கும் ஒருவரை ஒருவர் பிறாண்டி வைக்கலாம் என்று, பாம்பை பார்த்த கீரி மாதிரி சுத்திக் கொண்டு இருந்தார்கள். "ஏன் பாட்டி ஊர்ல இல்லாத தகடுதத்தோம் செஞ்சு அவங்களுக்குக் கல்யாணம் செஞ்சு வச்ச இல்ல? இப்ப இதுங்க இரண்டும் இப்படித் தயிர்சாதம், மொளகாப்பொடி மாதிரி பேட் காம்பினேஷனாவே இருக்குதுங்களே… இதயெல்லாம் நீ கண்டுக்க மாட்டியா?” என்று ஜீவா, சிவகாமி காதைக் கடிக்க, அவனைக் கேவலமாக ஒரு லுக் விட்ட பாட்டி, "டேய் நீ என்ன என்னன்னு நெனச்சே... நான் என்ன இங்க புருஷனையும் பொண்டாட்டியையும் பேட்சிங் செய்து வைக்கப்படும்னு போர்டா போட்டு வச்சிருக்கேன். இல்ல நான் ஆல் இன் ஆல் அழகுராஜாவா எல்லாத்துக்கும் ஐடியா கொடுக்க? இதெல்லாம் சொல்லிக் குடுத்தா வராது டா. தானா உள்ள இருந்து பொங்கி வரணும். அது ஆதிக்கு வந்துடுச்சு. உன் ஆசை தொங்கச்சிக்கு தான் செல் ஃபோன் சிக்னல் மாதிரி விட்டு விட்டு வருது…" "விட்டு...

அழகிய தமிழ் மகள் 24

அழகி 24 ஆதித், யுக்தா கல்யாணம் முடிந்து அனைவரும் கிளம்பிவிட, யுக்தா எதுவும் பேசாமல் ராம் வீட்டிற்குச் சென்று அமைதியாகப் படுத்துக் கொண்டாள். ஹாலில் உட்கார்ந்து சிவகாமி பாட்டி எதையோ படு சீரியஸாக யோசித்துக் கொண்டிருக்க, அதை பார்த்து வீட்டில் இருந்த அனைவருக்கும் வயிற்றில் மீண்டும் புளி கரைத்து, ரசம் கொதித்து. "இப்ப வரை இந்தக் கெழவி செஞ்சதுக்கே என்னோட பொண்டாட்டி திமிரழகி ரியாக்ஷன் என்னன்னு தெரியல? இதுல இந்தக் கெழவி யோசிக்கிற ஸ்டைல பாத்தா, ஏதோ பெருசா ப்ளான் பண்ணுது போலயே! கயல், மது அக்காவை கூப்பிட்டு காதுல ஏதோ ரகசியம் வேற பேசுது…" என்று ஆதித் பேய் முழி முழிக்க ஜீவா, ராம், வினய், வெற்றி, விஷ்ணு நிலையும் அதே தான். "டேய் அண்ணாஸ்… டேய் அண்ணாஸ்…" என்று ஜீவா வெற்றியையும், ராமையும் ஹாஸ்கி வாய்ஸில் கூப்பிட, "டேய் என்ன டா? எதுக்கு எங்க சிந்தனைய கெடுக்குற?" என்று எரிந்து விழுந்தான் வெற்றி. "ஆமா பெரிய சிந்தனை சிற்பி இவரு… மூஞ்சப்பாரு… டேய் அண்ணா நம்ம தாய் கெழவி மறுபடி ஏதோ ப்ளான் பண்ற மாதிரி தெரியுது.‌ ஐ திங் கயல் அண்ணி, மது அண்ணியும் இதுல கூட்டுன்னு நெனைக்கிறேன். நீயு...