அழகிய தமிழ் மகள் 29
அழகி 29
பரதனுடன் மல்லுக் கட்டிவிட்டு ஆதித்தை பார்க்க வந்த யுக்தா அங்குக் கண்ட காட்சியில் கடுப்பின் உச்சத்திற்குச் சென்றாள்.
"ஓய் கெழவி உனக்கு வேற வேலையே இல்லையா? எப்பாரு இவன் கூடவே உக்காந்துட்டு இருக்க? அங்க உம் புருஷன் சோறு போட ஆள் இல்லாம வெறும் தட்டை உத்து உத்து பாத்துட்டு இருக்காரு. போய் அவரைக் கவனி…" என்று அங்கு ஆதிக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்த சிவகாமி பாட்டியை இடுப்பில் கை வைத்து முறைத்தபடி சொன்னாள்.
பாட்டி இவளை மேலிருந்து கீழ் வரை ஒரு பார்வை பார்த்தவர், "ஏன்டி திமிர் புடிச்சவளே, அதை இங்க வந்து சொல்ற நேரத்துக்கு நீயே அந்தாளுக்குச் சோத்தை போட்டுட்டு வர வேண்டியது தானே?" என்று முறைத்தார்.
"எதுக்கு? இல்ல எதுக்குன்னு கேக்குறேன்? நான் அவருக்குச் சோறு போட, நீ வந்து ஏன்டி எம் புருஷனுக்குச் சாப்பாடு போடுறேன்னு என்கிட்ட சண்டை போட, அந்த கதையே வேணாம். நீயே போய் உன் புருஷனை, அந்த ஆணழகனைப் பாரு…" என்று உதட்டை சுழித்து ஒழுங்கு காட்ட,
"ஏய் நான் தான் ஆதிக்கு சாப்பாடு ஊட்டிட்டு இருக்கேன் இல்ல. நீயே போடி" என்று கத்த,
சிவகாமி கையில் இருந்த தட்டை வெடுக்கெனப் பிடிங்கியவள், "அதெல்லாம் நான் பாத்துக்குறேன். நீ போய் உம் புருஷனை கவனி." என்றவள்,
"எப்ப பாரு எம் புருஷன் பின்னாடியே சுத்திட்டு. அதான் கல்யாணம் பண்ணி வச்சாச்சு இல்ல. பேசாம ஊருக்கு போக வேண்டியது தானே, இங்கயே இருந்து சும்மா உசுர வாங்குது…" என்று வாய்க்குளேயே முணங்க, அதைக் கேட்டு ஆதித் சிரிக்க, பாட்டி இருவரையும் முறைத்தவர்.
"எனக்கு வேணும் டி... நல்லா வேணும்…" என்று தலையில் அடித்துக் கொண்டார்.
"டைனிங் டேபிள்ல திங்குறதுக்கு எல்லாம் இருக்கு, வேணும்னா போய்க் கெட்டிக்க… அப்படியே முத்து டார்லிங்குக்கும் எதாவது மிச்சம் மீதி இருந்தா போடு…" என்ற யுக்தா தலையில் நங்கெனக் கொட்டிய பாட்டி, சிரித்துக் கொண்டே அறையை விட்டு வெளியேறினார்
"ஏன்டி எப்ப பாரு பாட்டிக்கிட்ட வம்பு பண்ணிட்டே இருக்க?" என்ற ஆதியை கோவமாகப் பார்த்தவள்,
"நீ சும்மா இரு டா. அந்தக் கெழவி பத்தி உனக்குத் தெரியாது. நான் அது புருஷன் கிட்ட சும்மா ஒரு ரெண்டு வார்த்தை சிரிச்சுப் பேசுனா போதும். திருப்பரங்குன்றம் கழுகு மாதிரி வந்து, உனக்கு என்ன டி எம் புருஷன் கிட்ட பேச்சும், சிரிப்பும் வேண்டிக் கெடக்குன்னு என்னைத் திட்டும். இப்ப இது மட்டும் எம் புருஷனுக்குச் சோறு ஊட்டி விடுமாம், நான் பாத்துட்டு சும்மா இருக்கனுமாம்!" என்றவள் சாதத்தை ஆதி வாய் அருகே கொண்டு செல்ல, அவன் கண்கள் குறும்பாக இவளையே வருடிக் கொண்டிருந்தது.
அது ஏன் என்று அவளுக்குப் புரிய மெதுவாகத் தலை கவிழ்ந்தவள், "டைம் ஆகுது ஆதி சீக்கிரம் சாப்புடு…" என்றவள் பாட்டி விட்ட வேலையை முடித்து வைத்தாள்.
சாப்பாடு ஊட்டி முடித்து ஆதிக்கு வாயை துடைத்து விட. அவளின் ஒவ்வொரு செயலையும் ஆதித் நிதானமாக ரசித்துக் கொண்டிருந்தான்.
"அந்தச் சேதுவ என்ன டி பண்ண?" என்ற ஆதித் கேள்வியில் அவனைத் திரும்பி பார்த்தவள்,
"எதுக்கு உடனே ஃபோன் பண்ணி உங்க சித்தப்பு கிட்ட இது இது இப்படின்னு போட்டுக் கொடுக்கவா?"
"ஏய் இல்ல டி. நீ எப்படியும் அவனை உயிரோட விட்டிருக்க மாட்ட. அது அவருக்கும் தெரியும். எனக்கும் தெரியும். பட் நீ அவனை என்ன செஞ்சேன்னு தெரிஞ்சுக்கணும் டி. ரொம்பக் கியூரியசா இருக்கு யுகி, ப்ளீஸ் டி சொல்லேன்…" என்று கண்ணைச் சுருக்கி அழகாய் கெஞ்சும் அவள் அழகனின் கேள்விக்கு, அவன் அழகியால் பதில் சொல்ல முடியாது என்று சொல்ல முடியுமா என்ன?
"என் நிழலை தொட்டவனையே நான் உயிரோட விட்டதில்லை ஆதி. அந்த சேது என் உசுர தொட்டுட்டான். அவனை அவ்ளோ ஈசியா ஒரு நிமிஷத்தில் சாக விட்டுவேனா என்ன?" என்றவள் கண்ணில் கோவம் அக்னியாக ஜொலித்தது.
"அவனை என்ன டி செஞ்ச? இப்ப அவன் உயிரோட இருக்கானா? இல்லயா?" என்று கேட்ட ஆதித்தை பார்த்து ஒற்றைக் கண்ணை அடித்துக் காட்டியவள்,
"உயிர் இருக்கு ஆனா..." என்று இழுத்தவள், "உயிர் மட்டும் தான் இருக்கு" என்றபடி ஆதித் அருகில் அமர்ந்து,
"உனக்கு டாக்டர் வினோ தெரியுமா?" என்று கேட்க
"ம்ம்ம் தெரியும். உன்னோட ப்ரண்ட் ராஜியோட அப்பா தான?" என்க
அவன் உதய் பேரை சொன்னாள் எங்குத் தனக்குக் கஷ்டமாக இருக்குமோ என்று அவன் பேரை தவிர்த்து, ராஜீயின் அப்பா என்றதும், அவன் தன் மீது வைத்திருக்கும் அன்பை எண்ணி நெகிழ்ந்தவள்,
"ம்ம்ம் அவரே தான். அவர் பாய்சன்ஸ் பத்தி ஒரு ரிசர்ச் பண்ணிட்டு இருந்தாரு… இப்ப அதை அவரோட ஜுனியர் வருண் கன்டினியூ பண்றாரு… அந்தப் பாய்சன்ஸ் ரொம்ப ஹெவி தெரியுமா? அது மட்டும் சக்சஸ் ஆச்சு. நெறய நோய்க்கு மருந்தாக யூஸ் பண்ணலாமாம். பட் அதை வச்சு டெஸ்ட் பண்ண தான் யாரும் கெடைக்கல. ப்ச்… சோ சேட் ஆதி. அந்தப் பாய்சனை யார் மேலயாவது டெஸ்ட் பண்ணா அவங்க கதை அவ்ளோ தான். அணு அணுவா சாகணும். ஆசிட்ல முக்குனா மாதிரி உள்ளுக்குள்ள உடம்பு எல்லாம் அப்படியே பத்திட்டு எரியும், கண்ணு தெரியாம போய்டும், காது அவுட், பேச வராது, கை, கால் சுருங்கி போய்டும்!" என்று அவள் அடுக்கிக் கொண்டே போக,
"ஏய்… ஏய்… நிறுத்து, நிறுத்து. நீ சேதுவை என்ன செஞ்சேன்னு எனக்குப் புரிஞ்சு போச்சு!" என்று அர்த்தமாய்ச் சிரித்தான்.
"ஏதோ என்னால முடிஞ்ச நல்லா காரியம். நாட்டுக்கு நானும் ஏதாவது செய்யனுமில்ல. ஆனா அவன் செஞ்சதுக்கு இது கொஞ்சம் கம்மி தான் டா. அந்த நாய் என்கிட்ட மோதி இருந்தா பாவம் பார்த்து ஒரே புல்லட்ல அவனை முடிச்சிருப்பேன். ஆனா, அவன் என் குடும்பத்த தொட்டிருக்கக் கூடாது!" என்றவள் முகம் சட்டென ரௌத்திரமாய் மாறிவிட, கொஞ்ச நேரம் கண்ணை மூடி எதையோ யோசித்தவள்
"நீ தூங்கு ஆதி எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு." என்று எழுந்து கொண்டாள்.
"உனக்கு ப்ரணவ்னா உயிர் இல்ல யுகி? அவனைத் தூக்கினனால தான சேதுக்கு இந்தத் தண்டனை?" என்றவன் குரலில் கதவின் கைப்பிடியை பிடித்தபடி ஒரு நிமிடம் அசையாமல் நின்றவள் இதழ்கள் மெல்லியதாக விரிய,
"ம்ம்ம் ஆமா… ஆனா, ப்ரணவ் மேல மட்டும் இல்ல…" என்றவள் திரும்பி அவனை இதமாகப் பார்க்க அவள் கண்ணில் அவள் மனது அப்பட்டமாகத் தெரிந்தது.
ஆதித் அவள் கண்ணையே ஆர்வமாக, ஆசையாகப் பார்ப்பதை கண்டவள் கன்னம் வெட்கத்தில் சிவக்க அவள் அங்கிருந்து ஓடி விட, அவள் மனதில் தனக்காக இடம் என்னவென்று அவள் சொல்லாமல் சொன்னதைக் கேட்ட அவள் கணவன் உடல் வலி அனைத்தும் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போனது.
"நீ எங்க போற? என்ன செய்யப் போறேன்னு எனக்கு நல்லா தெரியும் டி. நான் எதிர்பாக்குறதும் அதைத் தான். நீ என்ன செஞ்சாலும் நான் உனக்குத் துணையா இருப்பேன். இது இன்னைக்கு நீ மனசார உன்னோட புருஷனா ஏத்துக்கிட்ட, இந்த ஆதித்தனோட சத்தியம் டி!" என்றவன், அவள் வார்த்தையின் இனிமையில் தனிமையாக உறங்கி போனான்.
பரதன் யாரிடமும் எதுவும் பேசாமல் 'உர்ர்' என்று உட்கார்ந்திருக்க, "என்ன கயல்? உங்கப்பா எப்பவும் வந்தவுடனே, எங்க அந்தத் திமிர் புடிச்சவன்னு கேட்டுட்டு தான் மத்ததையே பேசுவாரு. இன்னைக்கு என்ன வந்து கம்முன்னு உக்காந்திருக்காரு? இது புயலுக்கு முன் அமைதியா? இல்ல சாம் எதாவது செஞ்சு இவரு அடிச்சு ஓஞ்சு போயிருக்காரா? புயலுக்குப் பின் அமைதியா தெரியலயே?” என்ற வெற்றியை முறைத்த கயல்,
"டேய் தைரியம் இருந்தா இத அவர் கிட்ட போய்க் கேளு? இங்க எதுக்கு என் காதை கடிக்கிற?"
வெற்றி, "யாரு உங்கப்பன் கிட்ட? நானு? அப்படியே பேசிட்டாலும் போடி இவளே…"
"தெரியுது இல்ல. அப்ப மூடிட்டு இரு. அந்தப் பிசாசு தான் வெளிய ஏதாவது செஞ்சிருக்கும், அது வீட்ல இல்லைனு தெரிஞ்சு தான் அப்பா கம்முன்னு இருக்காரு. அவ வந்ததும் இரண்டு பேரும் நீயா, நானா ஷோ நடத்துவாங்க. நம்ம எல்லாரும் வேடிக்கை பாப்போம். இப்ப நீ சும்மா இரு…" என்றதும் வெற்றி வழக்கம் போல வாயை மூடிக் கொண்டான்.
பரதன் முகத்தைப் பார்த்து யாராலும் எதுவும் புரிந்து கொள்ள முடியாமல் போக, பாட்டி ராம்க்கு கண்ணைக் காட்ட, அவனும் எனக்கு எதுவும் தெரியாது என்று இதழ் பிதுக்க,
ஜீவா, விஷ்ணு, வினய் மூவரும் தங்கள் வீட்டம்மாக்களின் முகம் பார்க்க, மூன்றும் திருட்டு முழி முழித்துக் கொண்டு வாசலையே பார்த்துக் கொண்டிருக்க,
"ரைட்டு… நாலும் சேர்ந்து தான் ஏதோ பண்ணி இருக்குங்க. அதுக்குப் பேயோட்ட தான் மாமா வந்திருக்காரு. இவரு இதுங்களை ஓட்டுறாரா? இல்ல அந்தச் சாம் பிசாசு இவர ஓட்டப் போகுதான்னு தான் தெரியல?" என்று மூவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க,
"லெட்ஸ் வெய்ட் அண்ட் வாட்ச்." என்று வினய் சொல்ல, அங்கு பின் ட்ராப் சைலென்ஸ்.
நேரம் இறக்கை கட்டி பறக்க வீட்டில் உள்ள அனைவரும் பரதனையே தவிப்போடு பார்த்திருக்க, பரதன் வாசலையே பார்த்திருக்க, அவர் பார்வையில் தீடிரென மின்னல் கீற்று போல் வெளிச்சம் தோன்றி மறைய, அனைவரும் திரும்பி வாசலைப் பார்க்க அங்கிருந்தவர்களின் மொத்த கண்களில் தெரிந்த வெளிச்சத்தில், அந்த வீடே சூரிய மண்டலமாய் ஜொலித்தது!
அடங்காத கூந்தலை அள்ளி அழகாய் கொண்டை போட்டு, சிறிதும் மேக்கப் இல்லாத முகத்தில் சின்னதாகச் சிவப்பு நிற பொட்டு மட்டும் நடு நெற்றி மையத்தில் இருக்க, இடது கையில் வாட்ச்சும், காலில் காக்கி ஷூ வும் போட்டு, அடங்காத ஜல்லிக்கட்டு காளை பெண்ணாகப் பிறந்தது போல் காக்கி சட்டையில், மிடுக்காக நடந்து வந்தவளை பார்த்து அவள் மொத்த குடும்பமும் மகிழ்ச்சியில் மிதக்க, பரதன் தன் மகிழ்ச்சியைக் கோவம் என்ற பொய் போர்வைக்குள் ஒளித்து வைக்கப் பெரும்பாடு பட்டுக் கொண்டிருந்தார்.
யுக்தா கம்பீரமாக நடந்து வந்தவள். கொஞ்சமும் அசராமல் புருவம் உயர்த்திப் பரதனை பார்த்து, "இது வீடு, உங்களுக்கு நான் சல்யூட் வைக்க வேணாம்னு நெனைக்குறேன். ஐ ஆம் மிசஸ். சம்யுக்தா ஆதித்தன். அசிஸ்டென்ட் கமிஷ்னர், ஸ்பெஷல் ரெக்யுட்" என்று திமிராகச் சொன்னவள்,
"இப்ப அந்தக் கேஸ் ஃபைல்ஸ் எல்லாம் குடுக்குறீங்களா மிஸ்டர் கமிஷ்னர் சார்? பிகாஸ் நான் இப்ப வெறும் போலிஸ்காரன் பொண்டாட்டி மட்டும் இல்ல, இந்தக் கேஸ்காகவே திரும்பி வந்திருக்கச் சம்யுக்தா ஐபிஎஸ்!" என்று மிடுக்காகச் சொன்னவள் தன் கையை நீட்ட,
பரதன் அவளை முறைப்பது போல் நடித்துக் கொண்டே கேஸ் ஃபைல் அனைத்தையும் அவள் கையில் திணிக்க "தட்ஸ் குட் மை டியர்" என்று பரதன் கன்னத்தைக் கிள்ளியவள்,
"வர்ட்டா மாமா?" என்று கண்ணடித்து விட்டு நகர, "ஏய் உன்ன?" என்று பரதன் அவளைப் பிடிக்கும் முன் அங்கிருந்து ஓடி இருந்தாள்.
பாட்டி கண்ணில் கண்ணீர் நிற்கவே இல்லை. எத்தனை நாள் ஆசை! அவளைக் காக்கி சட்டையில் பார்த்துக் குடும்பம் மொத்தமும் ஆனந்த கண்ணீரில் நனைய, பரதன் மட்டும் ஏதோ போல் இருந்தார்.
"என்ன பரதா? நீ ஏன் ஒரு மாதிரி இருக்க? உன்னோட, எங்ளோட எவ்வளவு நாள் ஆசை இப்ப நடந்திருக்கு. ஆனா, உன் முகம் சரியவே இல்லயே? ஏன்? அவ மறுபடி போலிஸ்ல சேர்ந்தது உனக்குப் புடிக்கலயா" என்று சிவகாமி கேட்டார்.
"அவ மறுபடி யூனிபார்ம் போட்டதுல என்னை விட வேற யாருக்கும்மா சந்தோஷம் இருக்க முடியும். ஆனா இந்தக் கேஸ் அவளுக்கு வேணாம்மா. எனக்கு மனசுக்கு சரியா படல.அதனால தான் அவளை இதுல இருந்து தள்ளி வச்சேன். ஆனா அவ ஹோம் மினிஸ்டர் கிட்ட பேசி போஸ்டிங் வாங்கி இந்தக் கேசை டேக்கோவர் பண்ணிட்டா…" என்றார்.
"ஏன் மாமா? இந்தக் கேஸ்க்கு என்ன? அப்படி என்ன பெரிய கேஸ் இது? இத விட அவ எவ்ளோ ரிஸ்க்கான கேஸ்ல எல்லாம் இருந்தப்போ கூட நீங்க இப்படிச் சொன்னதில்லயே? இப்ப என்ன வந்துச்சு?" என்று வெற்றிப் புரியாமல் கேட்க,
"ஏன்னா இந்தக் கேஸ் என்னோட இறந்த காலத்தோட, இறந்து போன உதய்பிரதாப்போட, ப்ரணவ் கூடக் கனெக்ட் ஆகி இருக்கு வெற்றிண்ணா… அதான் மாமா தயங்குறாரு…" என்ற யுக்தா வார்த்தையில் அனைவருமே குழம்பி நின்றனர்.
யுக்தா இழுந்து மூச்சு விட்டவள், "ஆமா… ப்ரணவ் கடத்தலோட டார்கெட் ஆதி இல்ல. முதல் டார்கெட் ப்ரணவ். அடுத்து நான். என்னை கொன்னுட்டு ப்ரணவ்வை தூக்கத் தான் இதெல்லாம் நடக்குது. அதனால தானே என்னை இந்தக் கேசை விட்டு தள்ளி வச்சீங்க?" என்ற யுக்தாவின் கேள்வியில் பரதன் அதிர்ந்து நின்றார்.
மீண்டும் அந்த வீட்டில் ஒலித்த உதய்யின் பெயர், யுக்தா உயிருக்கு ஆபத்து என்ற செய்தி, அந்த மொத்த வீட்டையும் பதற வைத்தது.
யுக்தா மெதுவாகப் பரதன் அருகில் வந்தவள், அவர் காலுக்குக் கீழே உட்கார்ந்து அவரை ஆழமாக ஒரு பார்வை பார்த்தவள், "நான் அந்த நாய் உதய்யை மறக்க முடியாம ஓடி போல மாமா. அவன் செத்த அடுத்த நிமிஷமே எல்லாமே முடிஞ்சு போச்சு. இனிமே எதுவுமே இல்லனு நான் முடிவு பண்ணிட்டேன். என்னைப் பொறுத்தவரை உதய் ஒரு அக்யூஸ்ட் அவ்ளோ தான்
நடந்த கசப்பான விஷயங்களை மென்னு முழுங்கி தொலைக்க எனக்கு டைம் தேவைப்பட்டுச்சு. அதான் தனியா போனேனே தவிர, அந்தப் பொறுக்கி உதய்க்காக இல்ல. அதான் இப்ப எல்லாரும் சேர்ந்து ஒரு மிட்டாய் கடையையே என் தலையில கட்டி வச்சுக் கசப்பை முறிச்சிட்டீங்களே. அப்பறம் என்ன? அப்ப நான் வெறும் சம்யுக்தா. ஆனா இப்ப நான் மிசஸ் சம்யுக்தா ஆதித்தன். ஆதித்தன் பொண்டாட்டி, இந்தக் கமிஷ்னர் பரதனோட மருமக. எனக்கு வேற எதைப் பத்தியும் அக்கறை இல்ல மாமா… என் குடும்பம், எம் புருஷன், என் ஃப்ரெண்ட்ஸ், என் பையனை தவிர…" என்றவள் பரதன் கையை அழுத்தினாள்.
அதில் அவள் மனவுறுதியை உணர்ந்த பரதன், எங்கு இந்தக் கேஸ் யுக்தாவின் பழைய காயத்தைக் கிளறி விடுமோ என்று பயந்து தான் தயங்கினார்.
ஆனால் இப்போது யுக்தா பேச்சில் கவலை மறைய, "சீக்கிரம் இந்தக் கேஸ்ச முடிச்சிட்டு வந்து சேரு… நெறய கேஸ் பென்டிங்ல இருக்கு." என்க,
"இதோ பாரு டா! அதெல்லாம் முடியாது, நான் இந்தக் கேஸ்சை முடிச்சிட்டு மறுபடி டெல்லிக்கு போறேன்." என்று முறுக்கிக் கொண்டாள்.
"யாரு நீ? போடி போடி, சும்மா காமெடி பண்ணிட்டு… நீயாது உம் புருஷனை விட்டு போறதாது. போடி போய் கேஸ்ல உன்கிட்ட சிக்கி இருக்க ஆட்டை எப்படி குழம்பு வைக்குறதுன்னு யோசி டி. ஆதி உன்னை இந்த டிரெஸ்ல பாத்த ரொம்பச் சந்தோஷப்படுவான் சீக்கிரம் போ…" என்று பாட்டி விரட்டினார்.
யுக்தா ஆதி ரூம்க்கு போனாள். அவளை முதல் முதலில் புடவையில் பார்த்தப் போது எப்படி மயங்கி நின்றானோ, அதை விட இப்போது காக்கி சட்டையில் பார்த்து கிறங்கி விழுந்தே விட்டான் ஆதித்.
கண்களால் அவளைத் தன் அருகில் அழைத்தவன் "செம்ம அழகா இருக்கடி… சான்ஸ்சே இல்ல… சூப்பரா இருக்கத் திமிரழகி!" என்றவனை இயல்பாகப் பார்த்தவள்,
"இது உனக்குப் பெரிய சர்ப்ரைஸ் இல்ல இல்ல டா? நான் இதைத் தான் செய்வேன் உனக்கு நல்லா தெரியுமில்ல?” என்றவளை பார்த்து அழகாய் சிரித்தவன்,
"நீ வாய் திறந்து பேச வேணாம் டி. உன் ஒரு பார்வை போதும். உன்னோட எண்ணத்தை நான் படிக்க… எம் பொண்டாட்டிய பத்தி எனக்குத் தெரியும் டி." என்றவனைக் காதலாகப் பார்த்தவள், மனைவியாக அவனை அணைக்கும் ஆசை உள்ளுக்குள் எழுந்தாலும், ஏதோ தயக்கம் அவளைத் தடுக்க அங்கிருந்து எழுந்து கொண்டாள்.
ஆதித் சட்டென அவள் கையைப் பிடித்து இழுத்தவன் அவள் கன்னத்தில் இதழ் பதித்து, "நீ நெனச்ச நான் செஞ்சுட்டேன் பாத்தியா?" என்று கண்ணடிக்க,
"நான் ஒன்னும் கிஸ் பண்ண நெனைக்கல… ஹக் பண்ண தான் நெனச்சேன்." என்றவள் சட்டென நாக்கை கடித்துக் கொண்டு அங்கிருந்து ஓடி விட்டாள்.
ஆதித் வாய்விட்டு சிரித்தவன், "சீக்கிரம் கேசை முடிச்சிட்டு வாடி… உம் புருஷன் உனக்கு ஹக் மட்டும் இல்ல, அது கூடவே ஒரு அழகான குட்டி பாப்பாவ குடுக்கவும் வெய்ட்டிங்." என்று கத்தியவன் நிம்
மதியாக உறங்கி விட்டான்.
அன்றில் இருந்து கேசுக்காக அலைந்த யுக்தாவின் பொழுதுகள் அனைத்தும் உறக்கம் தொலைத்த நாட்களாகிப் போனது.