இஷ்டமில்லா நிஜம் நீ - 1
இஷ்டமில்லா நிஜம் நீ
நிஜம் - 1
புதிய நாள் பொழுது விடிந்து காலை எட்டு மணி என்பதை அந்தக் கூக்குக் கடிகாரம் தன் 'கூக்கு கூக்கு' என்ற குரலில் கத்தி கத்தி தெரிவிக்க, அதைப் பார்த்தபடி படிகளில் இறங்கி வந்து கொண்டிருந்தாள் த்வனி.
ஐந்தரையடி உயரம், கவர்ந்திழுக்கும் மாநிறம், காலையில் குளித்து முடித்து விரித்துவிட்ட அவள் கூந்தல் காற்றில் பறக்க, கீழே இறங்கியபடி, கூக்கு கூவுவது சரியா என்று தன் கைக்கடிகாரத்தைப் பார்க்க, 'கூக்கு இஸ் கரெக்ட்' என்று அவள் வாட்ச் சொல்ல, தான் ஜீன்ஸ் பேன்ட் பாக்கெட்டில் இருந்து அவள் ஃபோனை எடுக்கவும், அது அடிக்கவும் சரியாக இருந்தது. ஃபோனை அட்டென் செய்து "ஹலோ" என்றவள். "ம்ம்ம் நா ரெடி தான்டி. தோ… பத்து நிமிஷத்துல அங்க இருப்பேன்" என்றவள் தன் புல்லட்டை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.
அந்த ரெஸ்டாரன்ட்டில் த்வனி எதையே தீவிரமாக யோசித்துக் கொண்டு ஜுஸ்சை குடிக்காமல் கன்னத்தில் கைவைத்து அமர்ந்திருக்க, எதிரே அவள் தோழிகள் ஆருஷியும், ஷாலினியும் ஜுஸ்சையும் த்வனியையும் மாறி மாறி பார்த்தபடி இருந்தவர்கள். "ஏய் த்வனி, இப்ப எதுக்கு இப்டி உம்முன்னு உக்காந்துட்டு இருக்க நீ? என்னமோ கப்பல் கவுந்த மாதிரி கன்னத்துல கை வேற… ச்சீ!! கைய எடு முதல்ல. இப்ப என்னடி ஆச்சு? அதான் அவனை நல்லா அடிச்சு போலீஸ்ல புடிச்சு குடுத்தாச்சே, அப்றம் என்ன? தலைக்கு வந்தது தலைமுடியோட போச்சுன்னு ஹாப்பி இல்லாம?? எதுக்குடி இப்டி இருக்க?" என்று கேட்ட ஆருஷியை நிமிர்ந்து பார்த்த த்வனி.
"நீ சொல்றது சரிதான் ஆரு. ஒரு தப்பானவன்கிட்ட இருந்து, நா தப்பிச்சுட்டேன். அது சந்தோஷம் தான். பட்,?" என்று அவள் எதையோ யோசிக்க,
"என்னடா... அந்த ஃபோன் கால் பாத்தி யோசிச்சுட்டு இருக்கீயா? என்ற ஷாலுவுக்கு "ஆமாம்" என்று த்வனி பதில் கொடுக்க, "விடு த்வனி. அவரு யாருன்னு சொல்லாம போனாலும், அவரு உனக்கு நல்லது தான் செஞ்சிருக்காரு, நியாயம இதெல்லாம் உன் அருமை அண்ணன் ஜெகன் செய்யவேண்டியது. ஆனா, அந்த ஆளுக்குத் தான் எதைப் பத்தியும் கவல இல்லயே… அந்த ஆளுக்கு உனக்குக் கல்யாணம் நடக்கணும். சொத்தை பிரிக்கணும். அதுதான் குறி, இவரெல்லாம் என்ன பிறவியிலேயே?" என்று ஷாலு எரிச்சல் பட,
"விடு ஷாலு எனக்குப் பழகிப்போச்சு, அவன் சின்னவயசுல இருந்தே அப்டித்தான். நா அவன்கிட்ட இதுவரை எதுவும் எதிர்பார்த்து இல்ல, இனிமேவும் எதிர்பார்க்க மாட்டேன். எனக்கு ப்ராபர்டி பத்தி கவல இல்ல. பட், கிராமத்தில் இருக்க அம்மாவோட அந்தச் சின்ன வீடும், நிலமும் எனக்கு கண்டிப்பா வேணும். அந்த இடம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். நா என் வாழ்க்கையில சந்தோஷமா இருந்த வருஷத்தை விரல்விட்டுக் கவுண்ட் பண்ண விரல் மீதி இருக்கும். அந்த வருஷங்கள்ல சில நாள் அந்த வீட்டுக்கு சொந்தமானது. இப்ப அந்த வீடு, நிலம் ரெண்டும் ஜெகன் பேர்ல இருக்கு. அது விவசாய நிலம்டி. எங்க அவன் அங்க லே-அவுட் போட்டு ரியல் எஸ்டேட் ஆளுங்களுக்குத் தந்திடுவானேன்னு எனக்குக் கவலையா இருக்க. அதான் எனக்குச் சேரவேண்டிய சொத்துல இருந்து பாதியை அவனுக்குக் குடுத்து அந்த வீடு, நிலம் ரெண்டையும் நா எடுத்துக்கலாம்னு முடிவு செஞ்சேன். பட், எனக்குக் கல்யாணமான அப்றம் தான் சொத்த பிரிக்க முடியும்னு லாயர் சொல்லிட்டார். அம்மா, அப்பா அப்டி தான் எழுதி வச்சிருக்காங்க. அதான் என் கல்யாணத்துல ஜெகனுக்கு இவ்ளோ அவசரம். எனக்கும் கல்யாணத்துல இன்டர்ஸ்ட், எக்ஸ்பாடேஷன் ரெண்டுமே இல்ல. அதான் அவன் பாத்த மாப்ளைக்கு நானும் ஓகே சொன்னேன். அது இப்டி ஆகிடுச்சு… என்ன பண்றது. ஜெகன்கிட்ட இதைத் தான் எதிர்பார்க்க முடியும். சோ இதுல அவனைப் பத்தி பேசி நோ யூஸ்... விடு" என்றவளை முறைத்த ஆரு, "என்னடி?! அவள் அப்டித்தான், இவன் இப்டிதான்னு படம் பேரு சொல்லிட்டு இருக்க நீ!! மத்ததெல்லாம் கூடப் பரவாயில்ல த்வனி… ஆனா, இது உன்னோட கல்யாண விஷயம்?? உன்னோட வாழ்க்கை…!! இதுல எப்டிடி ஜெகனால இவ்ளோ கேர்லெஸ்ச இருக்க முடிஞ்சுது. முதல்ல அந்தக் கெழவி. ஊர்ல யார் யாருக்கோ கொராணா வருது. அந்தக் கெழவிக்கு ஒரு கேடு வரமாட்டேங்குதே… அந்தக் கெழவிக்கு உங்க அண்ணனை தான் புடிக்கும். உன்னைக் கண்டாளே அதுக்கு ஆகாது. அது சாகுறதுக்குள்ள உனக்குக் கல்யாணம் பண்ணி பாக்கணும்னு ஒரு சென்டிமெண்ட் பிட்ட போட்டிருக்கு... அதை நீயும் நம்பிட்ட... அது சொல்லுச்சுன்னு ஜாதகம் அது இதுன்னு, உன்னை ஏற்கனவே கல்யாணமான ஒருத்தனுக்கு மேரேஜ் பண்ண நெனச்சதே தப்பு, இதுல அவனைப் பத்தி எதுவும் விசாரிக்காம இருந்திருக்காரு அந்த மனுஷன். என்ன ஆளுடி உன் அண்ணன்?? கொஞ்சம் கூடத் தங்கச்சி சென்டிமென்ட் இல்லாத ஜென்மம். சரி உங்க அண்ணியாவது நீங்க பண்றது தப்புன்னு புருஷனுக்கு எடுத்துச் சொல்லவேணாம். அவங்களுக்கு உன்மேல பாசம் இருந்தும். புருஷன் சொல்றதுக்கு எல்லாம் ஆமாசாமி போட்டுட்டு இருக்கு. என்ன ஃபேமிலியோ போ..."
"ப்ச்ச்… இப்ப பிரச்சனை அண்ணா, அண்ணி இல்லடி, அந்த மாப்ள மதன் பத்தி எனக்குச் சொன்ன அந்த ஃபோன் கால் ஆளு தான். அந்த மதன் தான் அவனோட வைஃப் சாவுக்குக் காரணம்னு எனக்கு ஃபோன் பண்ணவனுக்கு எப்டி தெரிஞ்சுது?? சரி அவனுக்குத் தெரிஞ்சுது. அதைப் போலீஸ்கிட்ட சொல்லவேண்டியது தானா?? எனக்கு எதுக்குச் சொல்லணும்?? அந்தக் கொலைக்கான எவிடன்ஸை எல்லாத்தையும் எனக்கு எதுக்கு அனுப்பனும்?" என்று குழம்பியவளை புரியாமல் பார்த்த தோழிகள், "இது என்னடி கேள்வி? அந்த நாய் மதன் கூட உனக்குக் கல்யாணம் பேசியிருக்குனு அந்த ஃபோன் ஆளுக்குத் தெரிஞ்சிருக்கலாம்? சோ... உன்னை அலர்ட் பண்ண நெனச்சு இருக்கலாம். அந்த எவிடன்ஸ் வச்சு தானா, நம்ம அவனைப் போலீஸ்ல மாட்டிவிட்டோம். வாட்ஸ் ஏ பிக் டீல் த்வனி." என்ற ஷாலுவை விழி உயர்த்திப் பார்த்தவள். "இது முதல் தடவையா இருந்த, நீ சொன்ன மாதிரி தான் நானும் யோசிச்சு இருப்பேன். அந்த ஆளுக்குப் பெரிய கும்புடுபோட்டு நன்றி கூடச் சொல்லியிருப்பேன். பட், இது முதல் முறை இல்ல, இட் வாஸ் ஏ தோட் டைம், அதான் நா இப்டி மண்டையா போட்டு ஒடச்சிட்டிருக்கேன்" என்றவள் பதிலில் தோழிகள் அதிர்ந்து இருக்க, "என்ன சொல்ற த்வனி.??? இதெல்லாம் எப்ப நடந்துச்சு?? நெஜமா தான் சொல்றீயா?"
"ஆமா ஆரு, உண்மை தான். ஒரு ஆறு மாசம் முன்ன, ஒரு மேரேஜ் ப்ரப்போசல் எனக்கு வந்துது. அப்பவும் இதே மாதிரி... அந்த ஆள் எனக்கு ஃபோன் பண்ணி, எனக்குப் பாத்த பையன் ஏற்கனவே ஒரு பொண்ணை லவ் பண்ணி அவளை ஏமாத்திட்டு, பணத்துக்காக என்னை மேரேஜ் பண்ண பாக்குறான்னு சொன்னான். முதல்ல நா அந்த ஃபோன் காலை அனானிமஸ் கால்னு நெனச்சு விட்டுட்டேன். அப்றம் எதுக்கும் இருக்கட்டும்னு நம்ம பிரைவேட் டிடெக்டிவ் சிவாகிட்ட அந்த மாப்ள பையன் பத்தி டீடைல்ஸ் கேதர் பண்ண சொன்னேன். அந்த ஃபோன் கால் ஆளு சொன்னது 100% உண்மைனு அப்றம் தான் தெரிஞ்சுது. அடுத்து ஜெகன் ஃப்ரண்டோட தம்பி ஒருத்தன் கூட எனக்குக் கல்யாணம் பேச்சு நடந்தது. அப்பவும் இதே ஆள் ஃபோன் பண்ணி அந்தப் பையனுக்கு நெறய கெட்ட பழக்கம் இருக்கு, அவன் சரியான பொறுக்கி, டிரக் அடிக்ட்னு சொன்னான். பதிலுக்கு நானும், முதல்ல நீ யாருன்னு சொல்லு? உனக்கு எப்டி இதெல்லாம் தெரியும்? எதுக்கு எனக்கு ஹெல் பண்றேன்னு கேட்டேன்." என்றவளை பார்த்த தோழிகள் "அதுக்கு அவன் என்ன த்வனி சொன்னான்?" என்று ஆர்வமாகக் கேட்க… இழுத்து பெருமூச்சு விட்ட த்வனி, "உன்னோட வெல்விஷர்னு நினைச்சுக்கோனு சொல்லிட்டு ஃபோன் கட் பண்ணிட்டான்" என்று சொல்ல, மூவருக்கும் குழப்பம் பற்றிக்கொண்டது.
"என்ன இது? ஒரே கன்பூஷன்? யாரு அந்த ஆளு? நீ சொல்றது வச்சு பாத்த, அவன் ஆறு மாசமாவே உன்னைச் சுத்தி என்ன நடக்குதுன்னு வாச் பண்ணிட்டு இருக்கான் போலயே ?" என்று ஷாலு சொல்ல… "ஏன்டி த்வனி ஒருவேளை அந்த ஆள் உன்னை லவ் பண்றான் போல?? அதான் இப்டி உன்னை ஃபாலோ பண்ணிட்டு இருக்கான்!?" என்ற ஆருவுக்கு இடவலமாகத் தலையாட்டி "இல்லை" என்றவள். "அப்டி இருந்த, அவன் அதை என்கிட்ட சொல்லியிருப்பான் ஆரு… எனக்கு மேரேஜ் ப்ராபோசல் வரும்போது மட்டும் தான் அவன் எனக்குக் கால் பண்றான். மத்தபடி அவன்கிட்ட இருந்து எனக்கு ஒரு கால் கூட வந்ததே இல்ல."
"அந்த நம்பர் வச்சி தேடிப் பாத்திய த்வனி?"
"ம்ம்ம் டிரை பண்ணேன் ஷாலு. பட் எதுவும் கண்டுபிடிக்க முடியல, அது ஒரு பிரைவேட் நம்பர். சோ!!" என்று பெருமூச்சு விட்டவள். "அவனுக்கு உன்கிட்ட என்ன வேணும்னுனே தெரியலயேடி. அவனை எப்டி தான்டி கண்டுபுடிக்குறது?"
"அதுக்கு ஒரே வழி என்னோட கல்யாணம் தான் ஷாலு. இதுவரை எனக்குப் பாத்த மாப்ள மூனு பேரும் பக்கா பொறுக்கிஸ். சோ, மேரேஜ் நடக்கல, அடுத்து வர்ர மாப்ள கரெக்டா இருந்தா, அப்ப தெரியும். அந்த ஃபோன் ஆளோட உண்மையான இன்டென்ஷன் என்னென்னு…!! ஒரு தப்பான ஆள்கூட எனக்குக் கல்யாணம் நடக்கக்கூடாதுனு நெனைக்குறான? அப்டி இருந்தா அது ஏன்? அவனுக்கு ஏன் என்மேல இவ்ளோ அக்கறை?? இல்ல எனக்குக் கல்யாணமே நடக்கக்கூடாதுன்னு நினைக்கிறானா? அப்டி இருந்த அதுக்கு ரீசன் என்ன?"
"உனக்கு மேரேஜ் நடக்கக்கூடாதுனு யார்டி நெனைக்கப் போற?? அப்கோர்ஸ், தப்பானவன் கூட உன் கல்யாணம் நடக்கக் கூடாதுனு நாங்களும் தான் நினைக்கிறோம். அது உன்மேல இருக்க அக்கறையில தான். மத்தபடி நீ நல்லபெண். உனக்கு யார் கெடுதல் நெனைக்கப்போறாங்க?? எங்ளுக்குத் தெரிஞ்சு, அப்டி ஒரு எதிரி யாரும் உனக்கு இல்லயே" என்ற அடுத்த நொடி த்வனி மனக்கண்ணில் வந்து நின்றான் அவன்.
'யார் சொன்ன எனக்கு எதிரி இல்லனு. இந்த நிமிஷம் நா அவன் கண்முன்னால இருந்தா, லட்சம் துண்டா என்னை வெட்டி கூறுபோடுற வெறியோட ஒருத்தன் இருக்கான். அவனுக்கு என் மேல இருக்கறது கோவமோ, வெறுப்போ இல்ல. அது வஞ்சம்... தீராத வஞ்சம்… தீக்க முடியாத வஞ்சம்' என்று யோசிக்கும்போதே த்வனி உடல் லேசாக அதிர, கேட்டதற்குப் பதில் சொல்லாமல் எதையோ யோசித்துக் கொண்டிருந்த த்வனி கைபிடித்து உலுக்கி ஆரு, "ஏய் என்னடி தீடிர்னு சைலன்ட் ஆயிட்ட? என்ன ஆச்சு?"
"ஒன்னு இல்ல ஆரு. சீக்கிரமே அவன் யாருன்னு கண்டுபுடிக்கணும். அதுக்கு ஒரு வழிய பாப்போம். லெட்ஸ் வெயிட் அண்ட் சீ" என்றவள் எழுந்து கொள்ள மூவரும் அங்கிருந்து சென்றனர்.
ஒரு மாதம் கழித்து த்வனி அம்மாவின் தோழியின் மகன் மாதவனுக்கும் அவளுக்கும் திருமணப் பேச்சு எழ. த்வனியும் அவள் தோழிகளும் மாதவன் பற்றி முழுவதும் விசாரித்து, அவன் நல்லவன் என்று தெரிந்த பிறகே கல்யாணத்திற்குச் சம்மதம் தெரிவித்தாள். அவளுக்கும் மாதவனுக்கு நிச்சயதார்த்தம் முடிந்து அடுத்த இரண்டு மாதத்தில் கல்யாணம் என்று முடிவானது. இந்த இடைப்பட்ட காலத்தில் த்வனி, மாதவன் இருவரும் நல்லா நட்போடு பழகி ஒருவரை பற்றி ஒருவர் தெரிந்து கொண்டனர். அந்த ஃபோன் கால் ஆசாமியும் த்வனியை எந்த வகையிலும் தொடர்பு கொள்ளவில்லை.
ஆபீஸ், வீடு, திருமண ஏற்பாடு என்று த்வனி நிற்காமல் ஓட, அவளும் அந்த ஃபோன் கால் பற்றி ஓரளவு மறந்திருந்தாள்.
சாதாரணப் பெண்கள் போல் இல்லாமல், த்வனி திருமணம் குறித்து எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வெகு இயல்பாகவே இருந்தாள். தனக்குக் காதல் வர வாய்ப்பில்லை என்று த்வனிக்கு நன்றாகத் தெரியும். அவள் கடந்த காலம் அவளுக்குள் காதலிக்கு எண்ணம் கூட வரவிடாது, அவள் மனதை இரும்பை போல் இறுக்கி இருந்தது. அதை அவள் மாதவனிடமும் மறைக்காமல் சொல்லி இருந்தாள். மாதவனுக்கு அவள் ஏன் இப்டி இருக்கிறாள் என்ற காரணம் தெரியாமல் இருந்தாலும், அவள் மனதைப் புரிந்துகொண்டு தனக்கு ஒரு நல்லா தோழியாக, நல்லா துணையாக இருந்தால் போது, காலப்போக்கில் காதல் இயல்பாக வரட்டும் என்று சொல்லிவிட. த்வனி முழுமனதுடன் திருமணத்திற்குத் தயாரானாள்.
நாட்கள் வேகமாக நகர நாளை விடிந்தால் கோவிலில் த்வனி, மாதவன் திருமணம்.
நாளை அவள் வாழ்க்கையை அழிக்கப்போகும் சூறாவளி அவளை சுழட்டியடிக்க எதிர்கொண்டு காத்திருக்க... இன்று இரவோட தன் உறக்கம் பறிபோகப் போகிறது என்று தெரியாமல் அமைதியாக உறங்கிக்கொண்டிருந்தாள் த்வனி.
"விடமாட்டேன்டி… உன்னை நிம்மதியா இருக்க விடமாட்டேன்" என்று கர்ஜித்தபடி கையில் இருந்த கத்தியை தூக்கி எறிய, சுவற்றில் அழகாய் சிரித்தபடி தொங்கிகொண்டிருந்த த்வனியின் ஃபோட்டோவில், கத்தி சரியாக சென்று குத்தி நின்றது. "இன்னைக்கு உன் ஃபோட்டோ இருக்க இடத்தில் ஒருநாள்... நீ இருப்படி..." என்று அவள் ஃபோட்டோவை கொலைவெறியோடு பார்த்துக்கொண்டிருந்தான் அவன்.
