அழகிய தமிழ் மகள் 28

 அழகி 28


ஆதித் இருக்கும் மனநிலையில் அவன் கார் ஓட்டுவது சரியாக வராது என்று நினைத்த யுக்தா, "டேய் காரை நான் டிரைவ் பண்றேன். நீ என் லாப்டாப்ப ஓபன் பண்ணி அதுல ப்ரணவ்னு ஒரு போல்டர் இருக்கும். அதை ஓபன் பண்ணி டிராக்கரை கனெக்ட் பண்ணு…" என்றவள் காரை மின்னல் வேகத்தில் ஓட்ட,


"இல்ல யுகி… ப்ரணவ் வாட்ச்ல நீ வச்சிருந்த டிராக்கிங் டிவைஸ் டிஸ்கனெக்ட் ஆகிடுச்சு. நான் டிரை பண்ணி பாத்துட்டேன். அந்த திருட்டு ராஸ்கல்ஸ் வாட்ச கழட்டி வீசிட்டானுங்க போல. இப்ப என்ன பண்றது?" என்று தவிக்க,


யுக்தா அசால்டாக ஆதியை பார்த்தவள், "வாட்சை கழட்டி தூக்கிப் போட முடியும் ஆதி. ஆனா ப்ரணவ் வாய்ல இருக்கப் பல்லை அவனுங்களால புடுங்க முடியாதில்ல. டிரக்கர் ப்ரணவ் பல்லுல இருக்கு. ஒரு தடவ ப்ரணவ் கீழ விழுந்து ஒரு பல் உடஞ்சு போச்சு. புதுப்பல் செட் பண்ணும் போது அதுல ஒரு சின்ன டிராக்கிங் டிவைஸ் வச்சுச் செட் பண்ணிட்டேன். அது என்னோட லாப்டாப்ல கனெக்ட் ஆகி இருக்கு, நீ லாப்டாப்ல லாகின் பண்ணிப் பாரு…" என்க,


ஆதி வேக வேகமாக லாகின் செய்ய, டிராக்கர் கரெக்டாக ப்ரணவ் இருக்கும் இடத்தைக் காட்டிக் கொடுத்தது. ராம், நிஷாவுக்குத் தகவல் கொடுத்து விட்டு, அடுத்தப் பத்து நிமிடத்தில் அங்கு இருந்தனர் ஆதியும், யுக்தாவும்.


விடியற்காலை மூன்று மணி


யுக்தாவின் மொத்த குடும்பமும் ஆப்ரேஷன் தியேட்டர் முன்பு கண்ணீர் வழியும் விழிகளோடு உட்கார்ந்திருக்க, ஜீவா ஆப்ரேஷன் தியேட்டரை விட்டு வெளியே வந்தான்.


அவனைச் சூழ்ந்து கொண்டது முழுக் குடும்பமும். அவன் சொல்லப் போகும் ஒரு வார்த்தைக்காக அனைவரும் தவிப்போடு அவனையே பார்க்க, கண்ணில் நீர் வடிய சிரித்த முகத்தோடு தன் கட்டை விரலை அவன் உயர்த்திக் காட்டிய பின் தான், அங்கிருந்தவர்களுக்குப் போன மூச்சு திரும்பி உடலுக்குள் வந்தது.


"சாம் எங்க பாட்டி?” என்ற ஜீவாக்கு பாட்டி கையை நீட்டிக் காட்ட, தூரமாக அழுது அழுது ஓய்ந்த ப்ரணவ் அம்மா மடியில் தலை வைத்து உறங்கி இருக்க, ப்ரணவ் தலையில் கை வைத்து தடவிய படி சுவற்றில் சாய்ந்து கண்கள் மூடி அமைதியாக உட்கார்ந்திருந்தாள் யுக்தா.


ப்ரணவ்வை மெதுவாக அவள் மடியில் இருந்து தூக்கிக் கொண்ட ஜீவா, "ஓய் எரும… உம் புருஷனோட‌ கெட்ட நேரம், காலம் முழுக்க உன் கூடக் குப்பை கொட்டணும்னு இருக்கு போல. பொழச்சிக்கிட்டான்…" என்ற ஜீவாவின் குரலில் சட்டெனக் கண் திறந்தவள், வேகமாக எழுந்து ஜீவாவை இறுக்கி அணைத்து அவன் முகம் பார்த்துக் கண்களை மூடித் திறந்தவள், அங்கிருந்து ஆப்ரேஷன் தியேட்டர் நோக்கி ஓட,


"ஏய்… ஏய்… சாம் நீ உள்ள போகக் கூடாது. ஒரு ஒன் ஹவர் வெய்ட் பண்ணு, நார்மல் ரூம்க்கு ஷிஃப்ட் பண்தும் போய்ப் பாரு…" என்க,


கண்ணாடி கதவு வழியே ஆதி முகம் தெரிகிறதா என்று யுக்தா எட்டி எட்டி பார்க்க, 'ம்ஹூம்' வெள்ளை நிற கர்டென் தான் அவள் கண்ணில் பட்டது.


இழுத்து பெரு மூச்சு விட்ட யுக்தா அப்போது அங்கு வந்த நிஷாவை பார்க்க, நிஷா தலையை மெதுவாக ஆட்ட, யுக்தா கண்கள் சிவந்தவள்,


"பாட்டி நான் வர்ற வரைக்கும் எம் பையனையும், உள்ள இருக்க எம் புருஷனையும் பாத்துக்கோ. எனக்கு முக்கியமான வேலை இருக்கு." விறுவிறுவென்று செல்லும் யுக்தாவிடம் அவள் எங்குச் செல்கிறாள் என்று கேட்கும் தைரியம் யாருக்கும் இல்லை. அவள் எங்குச் செல்கிறாள் என்றது அனைவரும் அறிந்தது தானே.


ஒரு மணி நேரம் ஒரு நொடியாகக் கரைய, ஆதித் கண் விழித்துப் பாக்கும் போது அவன் கண்ணின் மணிகளில் விழுந்தாள் ப்ரணவை கையில் ஏந்தியபடி அவன் கண்மணி. ஆதி கண் விழித்ததும் ப்ரணவ்வை தான் தேடுவான் என்று தெரிந்து குழந்தையை உள்ளே அழைத்து வந்திருந்தாள் யுக்தா.‌


தலையிலும், வலது தோள்பட்டையிலும் பெரிய பெரிய கட்டுப்போட்டு படுத்துக் கிடந்தவனைப் பார்த்து யுக்தாவிற்கு இதயம் அடைத்தது.


ஆதி கண்களால் ஏதோ பேச வர, "ப்ரணவ்வுக்கு ஒன்னும் இல்ல…" என்றவள் சற்று பொறுத்து, "எனக்கும் தான்." என்று ஆதியை இமைக்காமல் பார்த்தாள்.


திரும்பி குழந்தையைப் பார்க்க, ப்ரணவ் ஆதித் கன்னத்தில் முத்தமிட்டவன், "அப்பா" என்றழைக்க ஆதித்தின் மொத்த வலியும் அந்த ஒற்றை முத்தத்திலும், அவன் அப்பா என்று அழைத்ததிலும் மறைந்து தேய்ந்து விட இதழ்கள் இன்பத்தில் லேசாக வளைந்தது.


சற்று நேரம் முன்


ப்ரணவ் இருக்கும் இடம் தெரிந்து அங்குச் சென்ற யுக்தாவும், ஆதித்தும் அந்த வீட்டை ஒரு முறை சுற்றி பார்த்தவர்கள், மெதுவாக அந்த வீட்டிற்குள் நுழைந்து ஃபோன் டார்ச் வெளிச்சத்தில் ப்ரணவ்வை தேட, குழந்தை எங்கும் தென்படவில்லை.


"யுகி டிராக்கர் இந்த லொகேஷன் தான் காட்டுது. ஆனா ப்ரணவ் இங்க இல்லயோ? ஒரு வேளை பயத்துல எங்கயாது ஒளிஞ்சுட்டு இருக்கானோ?"


"ப்ரணவ் ரொம்பத் தைரியசாலி ஆதி. அதோட புத்திசாலியும் கூட. அவனுக்கு நாம அவனைத் தேடி வருவோம்னு நல்லா தெரியும். நீ ரொம்ப யோசிக்காத. நாம கீழ போய்த் தேடுவோம் வா…" என்றவள் முன்னே செல்ல ஆதி அவளைத் தொடர்ந்தான்.


போகும் போது அங்கிருந்த அடியாள் ஒருவன் யுக்தாவை பார்த்து விட்டு அவளை அடிக்க வர, ஆதி அவன் கையைப் பிடித்து இழுத்து முறுக்கி இன்னொரு கையால் அவன் வாயைப் பொத்தியவன், அவன் கழுத்தை இறுக்கியபடி திருப்ப அவன் கழுத்து எலும்பு முறிந்து கீழே விழ, யுக்தா ஆதியை ஒருநிமிடம் மலைத்துப் பார்த்தாள்.


ஆதி புருவம் உயர்த்தி அவளைத் திமிராகப் பார்த்தவன் 'எங்களுக்கும் இதெல்லாம் வரும்மில்ல' என்பது போல் பார்த்தான்.


யுக்தா அவனை முறைத்து விட்டு நகர, 'வந்து என்னைப் பிரியாணி போடு' என்பது போல் சாவதற்கு இன்னொரு ஆடு யுக்தா முன்பு வர, தலை முடியை பிடித்து இழுத்தவள் அப்படியே அவனைத் திரும்பி தன் தோளில் போட்டுப் பின் பக்கம் இழுத்து அவன் குரல்வளையில் தன் முழங்கையால் ஒரு போடு போட, அவன் கதை 'இட்ஸ் ஒவர்' ஆனது.


அதோ போல் வழியில் குறுக்க வந்த அனைவரையும் யுக்தாவும், ஆதியும் சத்தமே இல்லாமல் அவர்கள் சங்கதியை முடித்து வைக்க, கீழே ஏதோ பேசும் குரல் கேட்டு இருவரும் கீழே இறங்கி வர அங்கு ப்ரணவ்வை ஒரு கையில் பிடித்து வைத்துக் கொண்டு இன்னொரு கையில் துப்பாக்கியுடன் நின்றிருந்தான் சேது.


ஆதித் எந்தக் கேஸ்க்காகக் கூர்க் சென்றானோ, அந்த போதைப் பொருள் கேஸ்சில் இறந்து போன குற்றவாளியின் தம்பி தான் இந்தச் சேது. அண்ணன் இறந்த பின் அந்தத் தொழிலை இவன் கையில் எடுக்க, ஆதித்தின் கழுகு பார்வையில் சிக்கிக் கொண்டான்.


அவன் கதையை முடிக்க ஆதித் நாள் பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்த சேது, ப்ரணவ்வை வைத்து ஆதியை அழிக்கத் திட்டமிட்டு, குழந்தையை வைத்து ஆதியை கொல்ல பார்க்க, ஆதியும் யுக்தாவும் இவ்வளவு சீக்கிரம் இந்த இடத்தைக் கண்டுபிடித்து வருவார்கள் என்று அவன் கனவிலும் நினைக்கவில்லை.


ஏதாவது ட்ராக்கிங் டிவைஸ் இருக்கும் என்று பயந்து தான், ப்ரணவ் கட்டி இருந்த வாட்ச்சைக் கூட வரும் வழியில் தூக்கி வீசி இருந்தான். அப்படி இருக்க, இவர்கள் எப்டி சரியாக அங்கு வந்தார்கள் என்று பதறிய சேது, ப்ரணவ் நெற்றி பொட்டில் துப்பாக்கியை வைத்தான்.


"இங்க பாரு ஆதி. நீ என்னை எதாவது செய்ய நெனச்ச? நான் குழந்தைனு கூடப் பாக்க மாட்டேன். இவனை எதுவும் செய்ய மாட்டேன்னு குடுத்த வாக்கையும் மீறி, இவனைச் சுட்டு கொன்னுடுவேன். மரியாதையா என்னை இங்க இருந்து போக விடுங்க... நீ உன் வேலையை ரிசைன் பண்ணிட்டு, எனக்கு எதிரா இருக்க எல்லா எவிடன்சையும் என்கிட்ட கொடுத்துடு. அப்ப தான் உங்க பையன் உங்களுக்குக் கிடைப்பான். இல்ல…" என்று அவன் தொடங்கும் போதே, அவன், “அய்யோ” என்று அலறியபடி தலைப் பிடித்துக்கொண்டு கீழே விழ, ப்ரணவ் அடுத்த நொடி யுக்தாவிடம் ஓடினான்.


சேது பேசிக் கொண்டிருக்க, யுக்தா ஆதிக்கு கண்ணடித்து ஏதோ சிக்னல் செய்து கீழே கண்ணைக் காட்ட, ஆதித் காலுக்குக் கீழே இருந்த இரும்பு கம்பியை பார்த்தவன், சேது அசந்த நேரம் கம்பியின் மேல் ஒரு காலை வைத்து, அதை இழுக்க அது ஆதித் இன்னொரு காலின் மேல் வந்தது. பட்டெனக் குறிபார்த்து அதைத் தூக்கி எறிய, அது சரியாகச் சேது மண்டையை உடைத்தது.


யுக்தா சேது அருகில் வந்தவள், "நான் தான் அப்பவே சொன்னேனே டா… எம் புருஷன், புள்ளையைப் பத்தி நீ கவலைப்படாத. முடிஞ்சா உன் உசுரை காப்பத்திக்கோன்னு… கேட்டியா நீ? இல்லயே…" என்று உச்சு கெட்டியவள்,


"இனி உனக்கு நடக்கப் போற எதுக்கும் நான் பொறுப்பில்ல…" என்று நகர, சேது பாதி மயக்கத்தில் இருந்து மெதுவாக எழுந்தவன், அவன் அருகில் இருந்த இரும்பு சுத்தியலை ப்ரணவ்வை நோக்கி ஓங்கினான்.


ஆதி குறுக்கே வந்து ப்ரணவ்வை அனைத்தபடி நின்றவன், தலையில் பலமாக மோதியது அந்தச் சுத்தி. ஆதித் தன் தலையை அழுத்தி பிடித்தபடி சேதுவை எட்டி உதைக்க, கீழே விழுந்த சேது கையில் அவன் தவற விட்ட துப்பாக்கி கிடைக்க, அதை எடுத்து ஆதியை சுட, அந்தக் குண்டு ஆதித்தின் தோளை உரசி சென்றது.


இமைக்கும் பொழுதில் நடந்த இந்த நிகழ்வை உள்வாங்கவே யுக்காவிற்குச் சில நொடிகள் பிடித்தது. ப்ரணவ்வின், "அப்பா" என்று அலறலில் இயல்பிற்கு வந்த யுக்தா, தன் காலை மடக்கி தன் ஜீன்ஸ் பேன்ட்க்குள் மறைத்து வைத்திருந்த சிறிய துப்பாக்கியை எடுத்தவள், சேதுவின் இரண்டு முழங்காலிலும் சுட, அவனோடு சேர்ந்து ஆதியும் மயங்கி சரிந்தான்.


ப்ரணவ் "அப்பா" என்று அழைத்ததும் ஆதியின் இதயம் ஒரு ஆணுக்குள் இருக்கும் தாய்மை உணர்வை அந்த நொடி உணர்ந்தது.


கலங்கிய விழிகளோடு யுக்தாவை பார்க்க, "அவனோட அம்மா சாவுறதை நேர்ல பார்த்த அதிர்ச்சியில போன குரல், இப்ப அவனோட அப்பாவுக்காக, உன்னால திரும்பி வந்திருக்கு! உனக்குப் புல்லட் பட்டதைப் பார்த்ததும், அவனையும் மீறி அப்பான்னு கத்திட்டான்." என்று ஒரு பூரிப்புடன் சொன்னாள்.


ஆதித் ப்ரணவ், யுக்தாவை ஒரு நிறைவோடே மாறி மாறி பார்த்தவன் கண்கள் மீண்டும் மயக்கத்தில் மூடிக்கொண்டது.


ஒரு வாரம் கழித்து ஆதித் ஹாஸ்பிடலில் இருந்து இன்று தான் வீடு வந்தான்.


அவனுக்குத் தலையில் பலமாக அடிப்பட்டு இருப்பதால் அவன் நரம்பு மண்டலம் பாதிக்கப் பட்டிருப்பதாகவும், அவன் பழையபடி சரியாக இன்னும் ஆறுமாதம் ஆகும் என்றும் ஜீவா சொல்லி இருக்க, அதுவரை ஹாஸ்பிடலில் இருக்கப் பிடிக்காமல் ஆதித் வீட்டுக்குப் போகலாம் என்று அடம்பிடித்து வீட்டுக்கு வந்துவிட்டான்.


யுக்தா ஆதியை கண்ணும் கருத்துமாகக் கவனித்துக் கொண்டாள். நடுநடுவில் அடிக்கடி வெளியே எங்கேயோ சென்று வந்தாள். பரதன் வெளியூர் சென்றிருந்தவர், ஆதியை பற்றித் தெரிந்ததும் பதறி அடித்து ஓடி வந்து விட்டார்.


பரதன், யுக்தாவை முறைத்தபடி இருக்க யுக்தா பரதனை தன் பார்வையால் எரித்துக் கொண்டிருந்தாள்.


"இப்ப நீ சொல்லப் போறியா இல்லையா?" என்று பல்லைக் கடிக்க


"நான் கேட்டதுக்கு முதல்ல நீங்க பதில் சொல்லுங்க… அப்பறம் நான் சொல்றேன்." என்று யுக்தா திமிராகப் பதில் சொல்ல, பரதன் பொறுமை இழந்தவர்,


"அதெல்லாம் உன் கிட்ட சொல்ல முடியாது. அது போலிஸ் டிபார்ட்மெண்ட் சீக்ரெட். அதை எல்லாம் வெளியாள் உன்கிட்ட சொல்லனுமா? நீ ஒன்னும் இப்ப போலிஸ் இல்ல. ஒரு போலிஸ் ஆபிசர் பொண்டாட்டி மட்டும் தான் அது நினைவிருக்கட்டும்." என்று காட்டமாகச் சொன்னார்.


யுக்தா அவரைத் தீர்க்கமாகப் பார்த்தவள் இழுத்து மூச்சு விட்டு, தொடையில் கை ஊன்றி மெதுவாக எழுந்து நின்று, "அப்ப நானும் உங்க கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை கமிஷனர் சார். ஒரு போலிஸ்காரன் பொண்டாட்டி என்ன செய்யணுமோ அத நான் செய்வேன். உங்களால ஆனதை பாத்துக்கோங்க…" என்றுவிட்டு அங்கிருந்து சென்றாள்.


ஆதிக்கு அடி படவும் ராம், வினய், நிஷா, ராஷ்மி அங்கு வரவும் சரியாக இருந்தது. ராம், வினய்யோடு ஆதித்தை கூட்டிக்கொண்டு ஹாஸ்பிடலில் கிளம்பிய யுக்தா நிஷா, ராஷ்மிக்குக் கண் ஜாடை காட்ட அது புரிந்த நிஷாவும், ராஷ்மி தலையாட்டிட, யுக்தா ஹாஸ்பிடல் சென்றாள்.


நிஷாவும், ராஷ்மியும் அடிபட்டு கிடந்த சேதுவை அவர்களது வழக்கமான இடத்தில் அடைத்து வைத்தனர்.


பரதன் சேது எங்கிருக்கிறான் என்று யுக்தாவை கேட்க, யுக்தா ஆதித் கடைசியாகப் பார்த்த கேஸ் பைஃல், அதோடு சேது சம்பந்தப்பட்ட கேஸ் டீடெயில்சை பரதனிடம் கேட்டாள்.


இருவருக்

கும் குடுமிப்பிடி சண்டை நடந்து இருவரும் முறைத்துக் கொண்டு செல்ல அங்கிருந்தவர்களின் மண்டை வலித்தது.