கன்னத்தில் காதல் முத்தம் 5
காதல் 5
எங்கு விழுந்துவிடுவோமோ? என்ற பயத்தில், ஆராத்யா கண்களை இறுக்க மூடிக் கொண்டு இருந்தவள், சில நொடிகள் கழித்து, தான் கீழே விழவில்லை என்பதை உணர்ந்து மெல்லக் கண்களைத் திறந்து பார்த்தாள்.
பாவைப் பார்வை சென்ற இடத்தில் அவளையே விழி இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த ஆறடி உயர ஆண்மகன் நிற்பது தெரிய, சட்டென சுதாரித்த பெண்மை வெடுக்கென்று அவனைப் பிடித்திருந்த தன் கையை எடுக்கப் பார்க்க, அது அந்த ஆறடி ஆடவனின் இரும்புப் பிடியில் சிக்கிக் கொண்டிருந்தது.
"சாரி சார், எங்க கீழ விழுந்துடுவேனோன்ற பயத்தில் உங்க கையைப் புடிச்சிட்டேன். ஐயம் சாரி சார்" என்றவள் தன் கையை அவனிடம் இருந்து விடுவிக்க பார்க்க, அவன் விட்டால் தானே…
"சார் கையை விடுங்க சார் நான் இப்ப ஓகே தான். கை வலிக்கிது" என்றவள் வேகமாக கையை இழுக்க, அப்போது தான் அவள் கையை விட்டிருந்தான் அவன்.
ஆராத்யா அவனை எரிச்சலாக ஒரு பார்வைப் பார்த்துவிட்டு நகர்ந்தவள், ஷிவானிக்கு கைபேசியில் அழைத்து, காரை எடுத்துக்கொண்டு கோயில் வாசலுக்கு வரச் சொன்னபடியே நடந்து செல்ல, அவள் வழியை மறைத்துக் கொண்டு அவள் முன்வந்து நின்றான் அவன்.
ஆராத்யா அவனைப் புரியாமல் பார்க்க, அவன் அவளை உச்சி முதல் பாதம் வரை ஆழமாக ஒரு நொடி அவளை ரசித்துப் பார்த்துவிட்டு இழுத்து மூச்சு விட்டபடி, "ஐயம் அக்னிதேவ். AD குரூப் ஆஃப் கம்பெனிஸோட எம்.டி. இங்க சென்னையில் தான் இருக்கேன். அம்மா, அப்பா ரெண்டு பேரும் இப்ப இல்ல, இறந்து கொஞ்ச வருஷம் ஆகுது. பிஸ்னஸ் ஃபுல்லா நான் தான் பாத்துக்குறேன்." என்று தன்னைப் பற்றிய அனைத்து தகவல்களையும் அவளிடம் சொல்லிக்கொண்டு இருக்க,
ஆராத்யா கூட்டத்தில் தவறிய குழந்தை போல் அவனை மலங்க மலங்க விழித்துப் பார்த்தவள், "ஹலோ… ஹலோ… கொஞ்சம் நிறுத்துங்க" என்று கையை அவன் முன் காட்டியபடி, "எதுக்கு சார் உங்க மொத்தம் வாழ்க்கை வரலாறு எல்லாத்தையும் இப்ப என்கிட்ட சொல்லிட்டு இருக்கீங்க?" என்றவள் புரியாமல் அவனைப் பார்க்க, அவனோ கோபமும் குழப்பமும் கலந்திருந்த அவள் அழகு முகத்தை ரசனையோடு பார்த்துக் கொண்டிருந்தான்.
அவனின் ஆளை விழுங்கும் பார்வையில் கடுப்பான ஆரா, "ஹலோ சார்… நான் பேசிட்டு இருக்கேன். நீங்க என்ன என் மூஞ்சியையே பாத்துட்டு இருக்கீங்க? என்று பல்லைக் கடித்தபடி கேட்க, "ம்ம்ம் அது ஒன்னும் இல்ல, என்னை பத்தி எல்லாம் சொல்லிட்டேனான்னு யோசிச்சிட்டு இருந்தேன்…" என்றவனை மூக்கு முட்ட முறைத்தவள், "அதான் ஹோட்டல்ல மெனு சொல்ற மாதிரி எல்லாத்தையும் சொல்லிட்டீங்களே? இன்னும் உங்க பொறந்த தேதி, நேரம் சொல்லல… அதையும் சொல்லிட்டா ஜாதகம் எழுதிடலாம்…" என்று எரிச்சலாக சொன்னவளைப் பார்த்து, சத்தமாக சிரித்தான் அக்னி.
"அஃப்கோர்ஸ்… அது தானே ரொம்ப முக்கியம்? அப்ப தான் ரெண்டு பேருக்கும் பொருத்தம் பாக்க முடியும். அப்றம் தான கல்யாண நாள் குறிக்கணும்…" என்று அவன் இயல்பாக சொல்ல, ஆராத்யா முதலில் அவன் சொன்னதின் அரத்தம் புரியாமல் முழித்தவள், பின் அதன் அர்த்தம் புரிந்து திகைத்து அவனை முறைத்துப் பார்த்தவள், "யூ ராஸ்கல், என்ன திமிருடா உனக்கு… யார்கிட்ட வந்து என்ன பேசிட்டு இருக்க நீ? கோயில்னு பாக்குறேன், இல்ல… நடக்குறதே வேற…" என்றவள் அவனைத் தாண்டி அடியெடுத்து வைக்க, அவள் கையைப் பிடித்து இழுத்து தன் முன் நிறுத்தி அவன் கண்களை ஒரு நொடி ஆழ்ந்து பார்த்தான்.
"நானா உன்கிட்ட வர்ல… கோயில்ல வச்சு முதல்ல என் கையை புடிச்சது நீதான். இன்னைக்கு நீ புடிச்ச இந்த கையை…" என்று அவள் கையைப் பிடித்திருந்த அவன் கையைக் கண்களால் காட்டி, "இந்த ஜென்மம் மட்டும் இல்ல, எந்த ஜென்மத்திலும் உன்னால விடமுடியாது. அதுக்கு நான் விடவும் மாட்டேன். நீ எனக்கு தான்… எனக்கு மட்டும் தான்" என்று கட்டளையாக சொன்னவன், அவள் கன்னத்தில் மெதுவாக தட்டி, "டைம் ஆச்சு கிளம்பு… டேக் கேர்… கூடிய சீக்கிரம் கல்யாணத்தில் மீட் பண்ணலாம்." என்று அவன் சொல்லி விட்டுச் செல்ல, போகும் அவன் முதுகையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் ஆராத்யா.
வெகு நேரம் ஆராத்யாவுக்காக கோயில் வெளியே காத்திருந்த ஷிவானி, ஆராவைத் தேடி கோயிலுக்குள் வர, அங்கு அக்னி கொடுத்த அதிர்ச்சியில் சிலையாக உறைந்த நின்ற ஆராத்யாவின் தோளைத் தொட்டு உசுப்ப அவளோ, "யாரு…" என்ற அதிர்ந்து ஓரடி பின்னால் நகர்ந்தவள், பின் அது ஷிவானி என்று தெரிந்து, "ஷிவி" என்று விசும்பியபடி தோழியைக் கட்டிக்கொண்டாள்.
"ஏய் ஆரா… என்னடி ஆச்சு? ஏன் என்னைப் பாத்து அப்டி பதறின? என்னாச்சு?" என்று கேட்க, ஆராத்யாவுக்கே என்ன நடந்தது? என்று புரியாத நிலையில் அவள் எங்கணம் அதை தோழிக்கு சொல்ல… திக்கித் திணறி ஒருவன் அவளை மிரட்டியதாக மட்டும் சொல்ல, கோவத்தில் கண்கள் சிவந்த ஷிவானி, "யாருடி அவன்? எங்க இருக்கான்? என்னை கூப்பிட வேண்டியது தானா?" என்று சுற்றும் முற்றும் அவனை யாரென்று தேடிய படியே கேட்க, ஆராத்யாவும் கோயிலை சுற்றி அக்னியை தேடி பார்வை சுழல விட்டவள், "அவன் போய்ட்டான் போல ஷிவி… இங்க எங்கேயும் இல்ல." என்று சொன்னவள், "எனக்கு ஒரு மாதிரி இருக்கு ஷிவி, வா வீட்டுக்குப் போகலாம்." என்றதும் மீண்டும் ஒருமுறை கோயிலை சுற்றி ஒரு பார்வைப் பார்த்தபடியே ஆராத்யாவை அழைத்துக் கொண்டு வெளியே வந்தாள் ஷிவானி.
"கார்ல உக்காரு ஆரா." என்றவள் காரை சுற்றிக்கொண்டு வந்து ஓட்டுனர் இருக்கையில் அமர, "ஏய்… ஏய் ஷிவி… அவன் தான்டி… அவன் தான்." என்று ஆராத்யா, அவர்கள் காருக்கு முன்னால் கொஞ்ச தூரத்தில் இருந்த அக்னியை பார்த்துக் கத்த, ஷிவானி சட்டென்று காரில் இருந்து இறங்கி அக்னி அருகில் செல்வதற்குள், அவன் காரில் ஏறி வேகமாக அங்கிருந்து சென்றுவிட, ஷிவானி அவன் வண்டி எண்ணை மனதில் குறித்துக் கொண்டாள்.
அன்று கோயிலில் நடந்த சம்பவம் ஆராத்யாவை வெகுவாக பயமுறுத்தி இருந்தாலும், அக்னியால் தன்னை எதுவும் செய்துவிட முடியாது என்ற தைரியத்தில் இருந்தவள், அடுத்த சில நாட்களில் அக்னி பற்றி சுத்தமாக மறந்துப் போயிருந்தாள்.
அந்த நேரம் பல்லவி கல்யாண விஷயமாக வெளியூருக்கு சென்றிருக்க, ஆதியும் வேலை விஷயமாக வெளியே சென்றுவிட, ஆராத்யா தனியாக வீட்டில் இருக்க பிடிக்காமல் ஷிவானியுடன் ஊர் சுற்ற கிளம்பி இருந்தாள்.
சென்னையில் இருந்த அந்த பிரபலமான மால், அன்று வாரநாள் என்பதால் ஆட்கள் அதிகம் இல்லாமல் சற்று காலியாக இருந்தது. அங்கு அவர்களுக்கு பிடித்த படம் ஒன்றையும் பார்த்துவிட்டு, தோழிகள் இருவரும் ஒரு இடம் விடாமல் சுற்றித்திரிந்து விட்டு, உணவகத்திற்கு வரும் போது மணி மதியம் ரெண்டாகி இருந்தது.
"ஷிவி, நீ ஃபுட் ஆர்டர் பண்ணிட்டு இரு, நான் ஆதிமாமாக்கு ஃபோன் பண்ணிட்டு வரேன்" என்றவளை முறைத்த ஷிவானி, "ஏய்… நீ என்னடி? சும்மா சும்மா ஃபோன் பண்ணி எங்க இருக்கேன்னு அப்டேட் பண்ணிட்டு இருக்க? நீ என்ன குழந்தையா? தனியா வெளிய போக கூட உனக்கு ஃப்ரீடம் இல்லயா? இல்ல உன்னை வெளிய கூட்டி வந்த எனக்கு, உன்னை திரும்ப ஒழுங்கா வீட்டு கொண்டு சேர்க்க தான் தெரியாத என்ன?" என்று எரிச்சலாக கேட்க,
"நீ நினைக்கிற மாதிரி இல்ல ஷிவி? ஜஸ்ட் நான் சேஃப்பா இருக்கேன்னு மாமாக்கு தெரிஞ்சா ஹீ ஃபீல் பெட்டர். அதான் நான் எங்க இருக்கேன்னு அப்டேட் பண்றேன். அதோட லஞ்ச் டைம் ஆச்சு, ஃபோன் பண்ணி நான் சாப்டேன்னு சொன்னா தான் மாமா சாப்டுவாரு…" என்று சொல்லி விட்டு சென்ற ஆராத்யாவை பார்க்க பார்க்க ஷிவானிக்கு எரிச்சல் தான் வந்தது.
அங்கு ஃபோன் சிக்னல் இல்லாததால் ஆராத்யா ஷிவானியை விட்டு கொஞ்சம் தூரம் தள்ளி ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் நின்று பேசிக்கொண்டு இருந்த ஆரா, ஆதியுடன் பேசிவிட்டு திரும்பியவள் விழிகள் அதிர்ச்சியில் விரிய, அவள் அதிர்ந்த விழிகளை ரசித்தபடி அவள் முன் நின்றிருந்தான் அக்னிதேவ்.
அக்னியை பார்த்த அதிர்ச்சியில், என்ன செய்வது? என்று புரியாத ஆராத்யா எச்சிலை கூட்டி விழுங்கியபடியே அங்கிருந்து நகரப் பார்க்க, அவள் கை அக்னியின் பிடியில் சிக்கி இருந்தது.
"யூ ராஸ்கல் எவ்ளோ தைரியம் இருந்தா என் கையை புடிப்ப? விடுடா என் கையை…" என்று அவள் கத்த, அக்னி காதில் அது எதுவும் விழுந்ததாக கூட தெரியவில்லை. நொடிக்கு நொடி அவள் முகத்தில் தெரியும் மாற்றங்களை ரசித்தபடியே அவள் முகத்தை நோக்கி அவன் நெருங்க, ஆராத்யாவுக்கு நெஞ்சில் நீர் வற்றி விட்டது.
"ஒழுங்கா என் கையை விட்டுடு, இல்ல கத்தி ஆளுங்களை கூப்டுடுவேன். அப்றம் உனக்கு தர்ம அடிதான் கிடைக்கும். ஏற்கனவே என் ப்ரண்ட் அன்னைக்கு நீ கோயில்ல பண்ணதுக்கு உன்மேல கொல காண்டுல இருக்கா… இப்ப மட்டும் நீ என் கையைப் புடிச்சது அவளுக்கு தெரிஞ்சுது… நீ அவ்ளோதான். ஒழுங்கு மரியாதையா என் கையை விடு" என்று அவள் கெஞ்சலும் கோவமும் கலந்து கத்திக்கொண்டு இருக்க,
அவள் கெட்ட நேரம் அவர்கள் நின்ற இடம் ஆட்கள் அதிகம் இல்லாத இடமாக போக, அது இன்னும் அவளுக்குள் பயத்தை கூட்ட, அக்னி மேலும் அவள் முகத்திற்கு அருகில் வர, ஆரா பயத்தில் கண்களை இறுக்கி மூடிக்கொண்டாள்.
"எப்ப நம்ம கல்யாணத்தை வச்சிக்கலாம்?" என்று அவன் கம்பீரமான குரல் அவள் செவி மடலுக்கு அருகில் கேட்க, பட்டென கண்களை திறந்து அவனை அதிர்ந்து பார்த்தாள் ஆராத்யா.
"சொல்லுடி கல்யாணத்தை எப்ப வச்சிக்கலாம்? எனக்கு என்னைக்குன்னாலும் ஓகே தான். இந்த செகண்ட் நீ சரி சொன்னாலும், எனக்கு ஓகே தான். உடனே கல்யாணம் பண்ணிக்கலாம்." என்றவனை ஆழ்ந்து பார்த்த ஆரா, "ஐ ஆம் அல்ரெடி மேரிட் " என்று அழுத்தமாக சொல்ல,
அக்னி சட்டென அவன் பிடியில் இருந்த அவள் கையை விட்டு விட்டு ஓரடி பின்னால் நகர்ந்தவன், ஒரு முழு நிமிட நேரம் அவளை உற்று பார்த்து தன் தலைமுடியை அழுத்தி கோதிக்கொண்டவன், "ம்ம்ம் நைஸ் ட்ரை... பட் நீ சொல்றதை நம்ப நான் ஒன்னும் முட்டாள் இல்லயே" என்றவனை தீயாக முறைத்தாள் ஆராத்யா.
"உண்மையை நம்ப புத்திசாலிய இருக்கணும்னு அவசியம் இல்ல…" என்றாள் கோபமாக.
"கரெக்ட் தான்… பட் நீ சொல்றது பொய் ஆச்சே மை டியர்" என்றவனின் 'டியர்' என்ற வார்த்தையில் கடுப்பான ஆரா, "ஹவ் டேர் யூ? டோண்ட் கால் மீ தட்" என்று பொரிந்தவள், எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு இனிமே என் பின்னாடி வராத… அவ்ளோதான் சொல்லிட்டேன்." என்றபடி அவள் நகரந்த நேரம் அவள் கையைப் பிடித்து இழுத்து அங்கிருந்த சுவரில் சாய்த்து அவள் நகர முடியாதபடி தன் இரண்டு கைகளாலும் அணைக் கட்டி இருந்தான் அக்னி.
"ஏய் என்ன பண்ற நீ? என்ன விடுடா…" என்று அவன் நெஞ்சில் கைவைத்து அவனை தள்ள பார்க்க, அவள் பிஞ்சு கைகளால் அவனை ஒரு இன்ச் கூட அவளால் தள்ள முடியாமல் போக, அவளுக்கு நெஞ்சம் பதறியது .
"ப்ளீஸ் புரிஞ்சிக்கோங்க எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு. என்னை போக விடுங்க… ப்ளீஸ்" என்று அவள் சொல்லும் போதே அவள் விழிகள் லேசாக கலங்கவிட, அவள் கலங்கிய விழிகளை கண்டவனுக்கும் நெஞ்சம் ஒரு நொடி தவித்து தான் போனது.
ஆனால், அடுத்த நொடி தவிப்பை தவிர்த்து, "நீ மறுபடியும் பொய் சொல்றீயே டியர்" என்க, அவனை தவிப்போடு பார்த்தவள், " நான் எந்த பொய்யும் சொல்லல… உன்கிட்ட நான் ஏன் பொய் சொல்லணும்? நிஜமா எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு" என்றாள்.
"ம்ம்ம் நீ கல்யாணம் ஆகிடுச்சின்னு சொல்ற, பட் அதுக்கான எந்த எவிடன்ஸும் உனக்கிட்ட இல்லயே…" என்றவன்
அவள் கழுத்தைக் காட்டி, "பாரு உன் கழுத்தில் தாலி இல்ல, கால்ல மெட்டி இல்ல, அட்லீஸ்ட் நெத்தியில குங்குமம் கூட இல்லயே... அப்றம் எப்டி நீ சொல்றதை நான் உண்மைனு நம்புறது? என்னை அவாய்ட் பண்ண நீ பொய் சொல்றீயோன்னு எனக்கு தோணுதே டியர். "என்றது தான், ஆராவுக்கு எங்கிருந்து அவ்வளவு பலம் வந்ததோ, தன் முழு பலத்தையும் திரட்டி அவனைத் தன்னை விட்டு தள்ளிவிட்டவள்,
"டேய் உனக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா? லூசு மாதிரி பண்ணிட்டு இருக்க… கல்யாணம் பண்ணதுக்கு எவிடன்ஸ் கேக்கும் மூஞ்சி பாரு. நீ யாருடா அதை கேக்க? புடிக்கலைன்னு சொன்னா போகவேண்டியது தான... அதவிட்டு தாலி எங்க? மெட்டி எங்கன்னு? 80's 90's டயலாக் எல்லாம் பேசிட்டு." என்றவள் அவன் முகத்திற்கு முன் தன் ஆட்காட்டி விரலை நீட்டி, "உனக்கு இதுதான் லாஸ்ட் வார்னிங், இன்னொரு முறை என் பின்னாடி லவ்வு, எழவுன்னு சொல்லிட்டு வந்த… அவ்ளோதான் சொல்லிட்டேன்" என்றபடி அங்கிருந்து சென்றாள்.
'நீ எங்க போனாலும் விடமாட்டேன்டி. நீ எனக்கு தான். எனக்கு மட்டும் தான், உனக்கு கல்யாணமே ஆனாலும் ஐ ஜஸ்ட் டோண்ட் கேர்..'என்று மனதில் நினைத்தவன் போகும் அவளை ஒரு மென்புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
அந்த சம்பவத்திற்கு பிறகு ஆராத்யா வெளியில் செல்வதை வெகுவாக குறைத்துக் கொள்ள, இன்று கல்யாணத்திற்கு தேவையானதை வாங்க அவள் சென்றிருந்த இடத்திற்கு சொல்லி வைத்தது போல் அக்னி வந்துவிட்டான்.
நடந்ததை எல்லாம் நினைத்து பார்த்துக் கொண்டிருந்த ஆராத்யாவுக்கு புரிந்தது ஒன்றே ஒன்று தான். முதலில் அக்னிக்கு தன்னை பற்றி தெரியாமல் பின்னாடி வருக்கிறான் என்று நினைத்தாள். ஆனால் இப்போது அவனுக்கு அவள் திருமணமானவள் என்று தெளிவாக தெரிந்திருக்கிறது என்று புரிந்தது. இருந்தும் அவள் தான் வேண்டும் என்று பிடிவாதமாக இருக்கிறான் என்பது ஆராவுக்கு தெளிவாக புரிய, இவனால் கல்யாணத்தில் எதாவது பிரச்சனை வருமே என்று உள்ளுக்குள் பயந்துதான் போனாள். ஆனால் தன்னைப் பற்றி எல்லா தகவல்களும், அக்னிக்கு எப்படி கிடைக்கிறது? என்று யோசித்தவளுக்கு தவறியும் தன் தோழி மீது சந்தேகம் வராது போனது, ஆராவின் துரதிர்ஷ்டம் தான்.