இடுகைகள்

செப்டம்பர், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இறுதி அத்தியாயம்

  இறுதி அத்தியாயம்  மாலைப்பொழுது வீடு திரும்பிய சந்தியாவுக்கு வீட்டுக்குள் யுக்தாவின் குரல் கேட்க, ‘அய்யோ கடவுளே! யுக்தா அக்கா குரல் கேக்குது… இந்நேரம் அவங்க மேட்டரைப் போட்டு உடைச்சிருப்பாங்க… எல்லாப் பிசாசும் சேர்ந்து என்னை ஓட்டு ஓட்டுன்னு ஓட்டப்போகுது. நீதான் காப்பாத்தனும்’ என்று வேண்டிய படியே உள்ளே சென்றாள். அமைதியாக நல்லபிள்ளை போல் முகத்தை வைத்துக்கொண்டு இருந்த சந்தியாவையே கூர்ந்து பார்த்த யுக்தா, “சோ… மேடம் வேலையை ரிசைன் பண்ணிட்டீங்க, ம்ம்ம்… அடுத்து என்ன செய்யப்போறதா உத்தேசம்?” என்று கேட்க, சந்தியா திருதிருவென விழித்தபடி இருந்தாள்‌. அவள் அருகில் வந்த தேவி, “வேற என்ன? சீக்கிரம் தேவாவைக் கல்யாணம் பண்ணிட்டு புள்ளை குட்டின்னு செட்டில் ஆகிடுவா…” என்று சொல்ல, சந்தியாவின் கன்னங்கள் சிவந்த விட்டது. “அக்கா ப்ளீஸ், சும்மா இருங்க…” என்றவளின் கன்னத்தைக் கிள்ளிய தேனு, “ஏய்… ஏய் இங்கப் பாருங்கடி, நம்ம பிடாரிக்குக் கூட வெக்கம் எல்லாம் வருது.” என்றுச் சொல்ல, “அக்கா…” என்று சிணுங்கிய சந்தியா, “மாமா, பாருங்க உங்க பொண்டாட்டிய?” என்று அர்விந்தைத் துணைக்கு அழைத்தாள். அவனோ, “சாரிடா… இது உங்க ...

உன் விழியில் கைதானேன் 23

  விழி 23 ஒரு பக்கம், தான் தேவாவுடன் சேர்ந்து வாழ்ந்தால் பின்னாளில் தன் வேலையில் அதை வைத்து மற்றவர்கள் தன் நேர்மையைச் சந்தேகப் படுவார்கள் என்று நினைத்து மறுகியவள், தன் குடும்பத்திற்கும் அவனைப் பிடிக்கவில்லை என்று தெரிந்த பிறகு மொத்தமாக உடைந்து விட்டாள். நடந்த கல்யாணத்தால் ஏற்கனவே தன் குடும்பம் பட்ட கஷ்டமும் அவமானமும் போதும் என்று நினைத்தவள், தன் காதலைத் தன்னுள்ளேயே புதைத்துக் கொண்டவள், இனித் தன் வாழ்க்கையில் தேவாவைத் தவிர வேறு யாருக்கும் இடமில்லை என்பதையும் முடிவு செய்து கொண்டாள். நாள்கள் அதன் போக்கில் செல்ல, மீண்டும் ஒரு கேஸூக்காகச் சந்தியா பெங்களூர் போய்விட, அந்த நேரம் தேவாவும் விடுதலையாகி வெளியே வந்திருந்தான்.  சென்னையில் அருள் தொழில் தொடங்கியது தெரிந்து, “உங்களை யாரு மாமா இங்க பிசினஸ் ஸ்டார்ட் பண்ணச் சொன்னது.” என்றவனுக்கு இங்கே இருந்தால் எங்கே தன் கட்டுப்பாட்டையும் மீறிச் சந்தியாவைப் பார்க்கச் சென்று விடுவோமோ என்ற பயமிருக்க, முதலில் அருள் மேல் கோபம் கொண்டவன், குறைந்தபட்சம் அவளிருக்கும் ஊரில் இருக்கும் நிமமதியாவது தனக்குக் கிடைக்கட்டும் என்று நினைத்தவன் அதன் பிறகு அமைதியாகி...

உன் விழியில் கைதானேன் 22

  விழி 22 அந்த வீடே அமைதியாக இருந்தது. அடுத்து என்ன என்று யோசிக்க முடியாத நிலையில் ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் சொல்லிக் கொண்டு இருந்தனர் அனைவரும். கலைவாணி மட்டும் அழுதுகொண்டே இருந்தவர், “இப்படி ஆகிடுச்சே… இனி இவ வாழ்க்கையை எப்படிச் சரிபண்ணப் போறேன்.” என்று அழுது புலம்பியபடியே இருந்தவரை யாராலும் தேற்ற முடியவில்லை. அன்றைய தினம் திடீரென வீட்டுக்கு வந்த ஆகாஷ் குடும்பத்தைப் பார்த்து ஒரு நிமிடம் தடுமாறிய சூர்யா, அடுத்த நொடி தன்னைச் சுதாரித்துக் கொண்டு, “வாங்க… வாங்க ஆகாஷ்.” என்று அவர்களை வரவேற்று அமர வைத்தவன், “நானே உங்களை வந்து பார்த்துப் பேசணும்னு நினைச்சிட்டு இருந்தேன்‌.” என்று சொல்ல, “இனி அதுக்கு எந்த அவசியமும் இல்ல.” என்றான் ஆகாஷ் இறுகிய குரலில். அவன் சொன்னதைக் கேட்டு உள்ளுக்குள் அதிர்ந்த கலைவாணி, “அது மாப்பிள?” என்று ஏதோ சொல்லவர போதும் என்பது போல் கை காட்டிய ஆகாஷ், “எனக்கு நடந்த எல்லா விஷயமும் தெரியும்.” என்றவன், “நாங்க இப்ப இங்க வந்ததே இனிமே இந்தக் கல்யாணம் நடக்காதுன்னு சொல்லிட்டுப் போகத்தான்.” என்று சொல்ல அனைவருக்கும் நெஞ்சம் பதறியது என்றால், சந்தியா மட்டும் ஆகாஷை நிதானமாகப் பார்த்த...

உன் விழியில் கைதானேன் 21

 விழி 21 மாலை வேளையில் காவல் நிலையத்தின் முன் அந்த ஊரே கூடி இருந்தது. தேவாவை விடுதலை செய்ய வேண்டும் என்று அங்குப் பிரச்சனை நடக்க, அந்த நேரம் அங்கு வந்த சந்தியாவை அங்கிருந்த மக்கள் வாய்க்கு வந்தபடி வசைபாடத் தொடங்கினார். “தாலி கட்டின புருஷன்னு கூடப் பார்க்காம கூட இருந்தே குழி வெட்டிட்டாளே…” என்று அவளைத் தப்பு தப்பாகப் பேச அதையும் கேட்டவள், எதுவும் பேசாமல் காவல் நிலையத்தின் உள்ளே சென்றாள். நேராக தேவா இருந்த அறைக்கு வந்தவள், “இந்தக் கேஸ் பத்தி எனக்கு சில டீடைல்ஸ் வேணும்.” என்று கேட்க அவளை நிமிர்ந்து பார்த்த தேவா, “எனக்கு உன்கிட்ட ஒன்னு கேக்கணும். கேக்கலாமா?” என்று கேட்க, அவன் என்ன கேட்கப் போகிறான் என்று கணித்தவள், “ம்ம்ம்” என்றாள் அமைதியாக. “எல்லாமே பொய்தானா?” என்று அவன் கேட்ட அந்த ஒருவரி அவளை மொத்தமாக உலுக்கி இருந்தது. “நான் இந்தக் கேஸுக்காகதான் இந்த ஊருக்கு வந்தேன். எம்.எல்.ஏ கேஸ்ல உங்க மேல சந்தேகம் இருக்குன்னு அவரோட வைஃப் கம்ப்ளைன்ட் கொடுத்து இருந்தாங்க. அதைப்பத்தி இன்வெஸ்டிகேட் பண்ணதான் இங்க வந்தேன். இந்த ஊருக்குள்ள வந்த உடனேயே உங்களைப் பார்த்தேன். சாதரணமாய் உங்க கூடப் பழகினேன். கொ...

உன் விழியில் கைதானேன் 20

 விழி 20 சந்தியா, தேவாவின் இடையே கணவன், மனைவி என்ற உறவு இல்லாமல் இருந்தாலும், இருவருக்கும் ஒருவரின் மீது ஒருவருக்கு அன்பும், அக்கறையும் அதிகமாகவே இருந்தது. சந்தியா எவ்வளவு முயன்றும் அவன்பால் ஈர்க்கப்படும் தன் மனதை அவளால் தடுக்க முடியாமல் போக, பாவம் பெண்ணவள் தனக்குள் மருகித்தான் போனாள். அன்று சந்தியா, தேவாவைத் தங்கள் குலதெய்வக் கோயிலுக்கு அழைத்துச் சென்றிருந்தாள் ஆர்த்தி. பூஜைகள் அனைத்தும் நிறைவாக முடிந்து வீட்டுக்குத் திரும்பும் வேளை, எங்கிருந்தோ வேகமாக வந்த நடுத்தர வயதுப் பெண் ஒருத்தி தேவாவின் சட்டையைப் பிடித்தவர், “எம் புருஷன் எங்கடா? அவரை என்ன செஞ்ச நீ? எங்கடா அவரு?” என்று அவன் சட்டையைப் பிடித்து உலுக்க, அந்த இடமே கலவரம் ஆனது.  வேகமாக ஓடிவந்த ரகு, அந்தப் பெண்ணைப் பிடித்து இழுத்துத் தள்ளி நிறுத்த, அங்கு என்ன நடக்கிறது என்று புரியாமல் நின்ற சந்தியா அந்தப் பெண்ணின் அருகில் வந்தவள், “அவங்களை முதல்ல விடுங்க” என்று சொல்ல, அந்தப் பெண்ணின் கையை விட்டான் ரகு. “யாரு நீங்க? உங்களுக்கு என்ன வேணும்?” என்று கேட்க, அந்தப் பெண்ணோ “எனக்கு என் புருஷன் வேணும்” என்றார் கோவமாக தேவாவைப் பார்த்தப...