கண்ட நாள் முதல் 9

 அத்தியாயம் 9


இங்கு வீட்டில் கலை "அய்யோ மணி 6 ஆகுதே? அந்த பிடாரி வந்துட்டு இருப்பாளே. இப்ப நா என்ன பண்றது? அய்யோ... ஏய் சந்தியா! இங்க வாடி, சீக்கிரம் வாடி" என்று கத்த.


" இப்ப எதுக்குமா இப்படி கத்துற?" என்று கேட்டுக்கொண்டே சந்தியா வர அவளை பார்த்த கலை, "ஏய் என்னடி இது, கையில பேக்? எங்க போற நீ?" என்று கேட்க... 


"என்னமா தெரியாத மாதிரி கேக்குற..? இன்னும் கொஞ்ச நேரத்துல, உன் பொண்ணு அந்த கொள்ளிவாய் பிசாசு வீட்டுக்கு வந்துடும்.  அதுக்குள்ள நா கிளம்புறேன். இன்னைக்கு நா பூஜா வீட்ல, இருந்துட்டு நாளைக்கு காலையில இல்ல இல்ல சாயங்காலம் வந்துடுறேன்" என்று கிளம்பியவளை நிறுத்திய கலை. "அடியேய் என்னடி? என்ன மட்டும் தனிய அந்த பிடாரி கிட்ட கோத்து விட்டு, நீ எஸ்கேப் ஆக பாக்குறியா? என்று கத்த. "பின்ன வேற என்ன பண்ண சொல்ற..?? உன்னையாவது திட்டுறதேட விட்டுவா... என் நெலமய யோசிச்சி பாரும்மா. அடி பின்னிடுவா" என்று சந்தியா முகத்தை பரிதாபமாக வைத்து சொல்ல. "அதுவும் சரிதான்" என்று கலை தலையில் கை வைத்து "இப்ப என்னதான் டி பண்றது?" என்று புலம்ப.


அங்கு வந்த ராம்குமார் "ஏய் என்ன? ரெண்டு பேரும் இப்டி பயந்து சாகுறீங்க. நிலா அப்டி எல்லாம் எதுவும் பண்ண மாட்ட" என்று சொல்ல தாயும் மகளும் பார்த்த பார்வையில் வாயை மூடி கொண்டார்.


அப்போது தான் வீட்டிற்குள் நுழைந்த நிலா. ராம்குமாரை பார்த்து, "குமாரு நீ கொஞ்சம் வெளிய காத்தாட நடந்துட்டு வா. எனக்கு அம்மா கிட்டயும், சந்து கிட்டயும் கொஞ்சம் வேலை இருக்கு" என்று சொல்ல கலை, சந்தியா முகத்தில் திகில் பரவியது.


சந்தியா, "இல்ல பா நீங்க போகாதீங்க ப்பா. இவகிட்ட எங்களை தனிய விட்டு போகாதீங்க ப்ளீஸ்" என்று கெஞ்ச. கலையும் "ஆமா இந்த நேரத்துல் நீங்க வெளியே போக வேண்டாம். இங்கேயே இருங்க அது தான் எங்க உயிருக்கு பாதுகாப்பு" என்று சொல்ல.. ராம்குமார் திரு திரு என்று முழிக்க, "குமார்ர்ர்… நா உன்னை போக சொன்னேன்" என்று அழுத்தமாக நிலா கத்த ராம்குமார் இடத்தை காலி செய்துவிட்டு வெளியே நகர... நிலா வாசல்  கதவை இழுத்து மூடினாள்.


ம்ம்ம்... கலை, சந்தியா நிலை இன்னும் 24 மணி நேரம் கழித்து தான் சொல்ல முடியும். இப்ப நாம போய் கடந்த ஒரு மாதத்தில் என்ன நடந்தது. சூர்யா எப்டி நிலா வாழ்க்கையில் வந்தான். இதுல யார் யாருக்கு தொடர்பு இருக்குன்னு பார்த்துட்டு வந்துடுவோம். வாங்க போலாம்...



நிலாவை காஃபி ஷாப்பில் அரவிந்த் பார்த்து பேசி மூன்று நாட்கள் ஓடி விட்டது. 


ஒரு நாள் சூர்யா அரவிந்திடம், ஏதோ முக்கியமாக பேச வேண்டும் என்று ஆபீசுக்கு வர சொல்ல, அரவிந்த் சூர்யாவின் ஆஃபீசுக்கு வந்தவன்.


"என்ன டா மச்சி ஏதோ முக்கியம  பேசனும்னு வர சொன்ன., என்ன விஷயம் டா?"  என்று அரவிந்த் கேட்க...


"நீ நிலாவைப் பத்தி என்ன முடிவு பண்ணி இருக்க அரவிந்த்?" என்று கேட்ட சூர்யாவை ஒரு மாதிரி பார்த்த அரவிந்த், "அதான் ஏற்கனவே சொன்னேனே டா. அவளை கல்யாணம் பண்ண இஷ்டம் இல்லயின்னு சொல்லிட்டேன்." 


"அப்ப உனக்கு நிலா மேல எந்த ஃபீலிங்கும் இல்ல? அப்டி தானே? என்று கேட்க, அவனை சந்தேகமாக பார்த்த அரவிந்த், "டேய் இப்ப எதுக்கு நீ அரைச்ச மாவையே திரும்ப அரைச்சுட்டு இருக்க? நா தான் தெளிவா சொன்னேனே, அப்புறம் திரும்ப திரும்ப கேக்குறியே, என்ன விஷயம் டா. என் னகிட்ட ஏதாவது சொல்லனும?" என்று அரவிந்த் கேட்க.. 


"சமத்து டா நீ சொல்லாமலே புரிஞ்சுக்கிட்ட பாரு. அதுதான் என் அரவிந்த்" என்று புகழ, "டேய் டேய் நிறுத்துடா. உன்னை பத்தி எனக்கு நல்லாவே தெரியும். ஓவரா சீன் போடாம விஷயத்தை சொல்லு…" என்ற அரவிந்தை பார்த்து "ஈஈஈஈஈ" என்று சூர்யா பல் இளிக்க. "என்னடா புது டூத் பேஸ்ட் எதுவும் யூஸ் பண்ணிய? அத சொல்ல தான் என்னை வர சொல்லி இப்படி ஈஈஈ ன்னு பல்லை காட்டுறியா?" என்று அரவிந்த் கலாய்க்க...


"டேய் என்னடா?" என்று சூர்யா பரிதாபமாக பார்க்க. "டேய், டேய் நீ யாருன்னு எனக்கு தெரியும். நா யாருன்னு உனக்கு தெரியும். சும்மா நடிக்காத, என்ன விஷயம்னு ஓபனா சொல்லு…"  


சூர்யா சத்தமாக சிரித்து விட்டு, "ஓகே டா… ஜோக்ஸ் அபார்ட், நா விஷயத்துக்கு வரேன்.  நீ அன்னைக்கு சொன்ன இல்ல, அந்த நிலானி உனக்கு ஃப்ரண்ட்ட இல்ல வெல்விஷரா காலம் முழுசும் வந்த எனக்கு சந்தோஷம் ன்னு."


"ஆமாடா, இப்ப அதுக்கு என்ன?" என்ற அரவிந்தை அசடு வழிய பார்த்த சூர்யா, " ஏன்டா, ஒருவேளை அந்த நிலா உனக்கு தங்கச்சிய! வந்த நீ சந்தேஷாப்படுவ தானே மச்சான்…?" என்று மச்சானை அழுத்தி சொல்ல... 


அரவிந்த் ஒரு மாதிரி சூர்யாவை பார்த்து விட்டு..!! சூர்யாவின் மனதை  புரிந்தவனாய், வேண்டுமென்றே, "என்னடா உலர்ரா…? அவ எப்டி எனக்கு தங்கச்சியாக முடியும்.? ஓஓஓ!! ஒருவேளை நீ அவளை எங்க வீட்டு பொண்ண தத்து எடுக்க சொல்றியா.?? ம்ம்ம்… அதுவும் நல்ல ஐடியா தான். ஆனா, இதுக்கு அவங்க வீட்டுல சம்மதிக்க மட்டாங்க சூர்யா. அவ அப்பா, அம்மா கூட பரவாயில்ல, அவ தங்கச்சிக்கு மட்டும்  இந்த விஷயம் தெரிஞ்சது, என்ன நல்லா பொன்னிறம எண்ணெயில் வறுத்து, தொட்டுக்க சாஸ் கூட இல்லாம கடிச்சு தின்னுடுவா... அம்புட்டு பாசம் அந்த குட்டி பிசாசுக்கு. அவ அக்கா மேல" என்று சிரிப்பை அடக்கிக் கொண்டு சொல்ல... சூர்யா அவனை முறைத்தவன். "டேய் நா எப்படா அவளை தத்து எடுக்க சொன்னேன். நீயே கேள்வி கேட்டு? நீயே பதிலும் சொல்லிக்கிற லூசுபயலே" என்று சூர்யா திட்ட...


"எது லூசு பயல" என்று அரவிந்த் முறைக்க... 


"ஆமாடா, லூசு இல்லாம என்ன? நிலானிய தத்தெடுத்த மட்டும் தான் அவ உனக்கு தங்கச்சி ஆக முடியுமா? வேற வழியே இல்லயா என்ன? என்று சூர்யா கேட்க.  


"வேற என்ன வழி டா இருக்கு" என்று அரவிந்த் புரியாது போல் நடிக்க.


சூர்யா "அய்யோ அய்யோ... சாகடிக்கரனே என்னையா…? டேய் ஏன்டா இப்டி படுத்துற. உனக்கு உண்மையாவே புரியலய? இல்ல நடிக்கிறியா?" என்று புலம்ப.


"டேய் எனக்கு தான் புரியலன்னு தெரியுதில்ல. நல்ல புளி போட்டு விளக்க வேண்டியது தானா.. சும்மா எதுக்கு இப்படி சுத்தி சுத்தி பேசுற?" என்ற அரவிந்த் முறைத்த சூர்யா,

"டேய் நா உனக்கு யாருடா? என்று படு சீரியஸாக கேட்க, அரவிந்த் டக்கென,  "என்னோட மூன் ஜென்ம பாவம். வேற‌ என்ன" என்று சொல்ல... 


"டேய்... இப்ப உன்னை மிதிக்க போறேன் பாரு..!" என்று சூர்யா கத்த.


"டேய் நீ தானடா கேட்ட.??  பதில் சொன்ன இப்டி டென்ஷன் ஆகுற? உண்மை சில நேரம் கசக்க தான் செய்யும் மச்சி."


"அய்யோ" என்று புலம்பிய சூர்யா டக்கென்று ஏதோ தோன்ற. "டேய் இப்ப நீ என்னை எப்டி கூப்பிட்ட?"


"என்னடா இது? புதுச கேக்குற..??"


"கேட்டதுக்கு பதில் சொல்லு அரவிந்த்" என்று சூர்யா சொல்ல அரவிந்த் வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு, "ம்ம்ம்ம் மச்சின்னு கூப்டேன். இப்ப அதுக்கு என்ன..??"


"அதான்டா... அதேதான். நா உனக்கு மச்சான் முறைன்னா, நாளைக்கு எனக்கு கல்யாணமான என் பொண்டாட்டி உனக்கு என்ன முறை வேணும்.?" 


"அப்டி வாடி மாப்பு வழிக்கு. இப்ப தான் 

மீன் தூண்டிலில் வாய் வைக்குது" என்று நினைத்த அரவிந்த்,  "இது என்னடா கேள்வி..?? உனக்கு பொண்டாட்டின்ன, எனக்கு தங்கச்சி முறை வேணும்" என்றன் அரவிந்த்.


"அதே தான்டா.. இப்ப நா நிலாவை கல்யாணம் பண்ணிக்கிட்ட அவ ஆட்டோமேட்டிக்க உனக்கு தங்கச்சியாகிடுவ இல்ல" என்று ஆர்வமாக சொன்ன சூர்யாவை பார்த்த அரவிந்த், "என்ன இந்த திடீர் முடிவு. உனக்கு தான் இந்த காதல், கல்யாணத்தில் எல்லாம் இண்ட்ரஸ்ட் கிடையாதே, இப்ப மட்டும் ‌வொய் மேன்?"


"இல்ல டா மச்சி... எனக்கும் வயசாகுது. அம்மா வேற வீட்ல ஒரே தொல்ல, கல்யாணம் பண்ணிக்க சொல்லி.. அதான்டா…" என்று இழுக்க


அரவிந்த். "அது சரிடா... ஆனா, நிலாவை எதுக்கு கல்யாணம் பண்ணனும்..?? வேற பொண்ணே கிடைக்காதா என்ன.??" 


"டேய் நீதானே சொன்ன, அவ ரொம்ப நல்ல பொண்ணு, எப்பவோ நடந்ததை நெனச்சு வாழ்க்கையை வேஸ்ட் பண்ற. அவளுக்கு கல்யாணம் நடந்த நா சந்தோஷப்படுவேன், அப்டி இப்டின்னு சொன்ன.?? அதுதான் நானே அவளை கல்யாணம் பண்ணிக்கலாம்னு" என்று வார்த்தையை மென்று முழுங்க...


அவனை முறைத்த அரவிந்த்.. அது மட்டும் தான் காரணமா சூர்யா? வேற உனக்கு எந்த உள்நோக்கமும் இல்லயா உனக்கு?" என்று அவனை துளைக்கும் பார்வை பார்த்து கேட்க..??


"டேய் அரவிந்த் என்னடா? என்ற சூர்யாவை நிறுத்திய அரவிந்த், "சூர்யா நா கேக்குற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு… உனக்கு நிலா யாருன்னு இதுக்கு முந்தியே தெரியும் தானே.? நா அவளை பத்தி  சொல்லாம விட்ட விஷயம் உனக்கு தெரிஞ்சு போச்சு அப்படி தானே? என்றவனை பார்த்து சூர்யா ஒரு பெருமுச்சு விட்டவன், "உன் கிட்ட இருந்து என்னால் எதையும் மறைக்க முடியாது டா.. ஆமா நீ நிலானி பத்தி  எனக்கு தெரியும்"


"டேய் மச்சி.. அவ வேணுன்னு எதுவும் பண்ணல டா.. அவ அவளோட ஃப்ரண்டோட அப்பா பிஸ்னஸ்க்கு  ஹெல்ப் பண்ண, அது உனக்கு ஆப்பா அமைஞ்சு போச்சு. அதுனால உனக்கு கிடைக்க வேண்டிய காண்ட்ராக்ட் மிஸ் ஆயிடுச்சு. அதுக்கு அவ என்னடா பண்ணுவ. உனக்கு அவ பிஸ்னஸ் ஐடியா புடிச்சு இருந்த, வேணுன்னா அவள நம்ம ஆபீசில் வேலைக்கு வைச்சிகோ. அத விட்டு  நீ அவளை கல்யாணம் பண்ணி பழிவாங்க நெனக்கிறது எல்லாம் ஓவர் டா. சுத்தமா சரியில்லை சூர்யா..."


"டேய் லூசு பக்கி, பிஸ்னஸ்ல இதெல்லாம் சாதாரணமான விஷயம்னு எனக்கு தெரியாதா? ஆனா, நீ சொன்னது உண்மை தான் நிலானி மேல எனக்கு இந்த விஷயத்தில் கோபம் இருந்தது தான். அதோட அவ நம்ம ஆபீசில வேலை பார்த்த நல்லா இருக்குன்னு கூட தோனிச்சு... ஆனா, நீ சொன்னியே அவ ஃப்ரண்டுக்காக அவ அப்பாவுக்கு உதவி பண்ணனு, அவரே இவள மாசம் ஒரு லட்சம் சம்பளம் தரேன் என்னோட ஆபீசில்ல ஜாயின் பண்ணுமான்னு சொல்லியும், நா உங்க பொண்ணுக்காக தான் உங்களுக்கு ஹெல்ப் பண்ணேன். மத்தபடி உங்க கிட்ட வேளை செய்ய எனக்கு விருப்பமில்லைனு சொல்லிட்ட டா‌, அப்படிப்பட்ட அவ நான் இரண்டு லட்சம் தரேன்னு சொன்னாலும், இங்க வேலைக்கு வரமாட்ட"  என்று சொல்ல. 


"ஓஓஓ… அப்ப உன்னோட பிஸ்னஸ்காக, அதோட உன்னை தோக்கடிச்சதுக்கு பழிவாங்க தான் இந்த கல்யாணம சூர்யா..?? 


"சத்தியாம இல்ல அரவிந்த். நிலானிய பழிவாங்க நா அவள கல்யாணம் பண்ண நினைக்கல. எனக்கு அவளை நிஜமாகவே ரொம்ப பிடிச்சு இருக்கு டா. நீ அவளை பத்தி சொன்ன ஒவ்வொனும் எனக்கு புடிச்சி இருந்துது. உன் மாதிரி அழக, படிச்ச, பெரிய இடத்து பையன் கெடச்சும் வேணான்னு சொல்லிட்டு... எப்பவோ பாத்த ஒருத்தனுக்காக இப்ப வரை காத்து கிடக்க அவளோட சுத்தமான மனசு. உன்னை மிரட்டுன, அவளோட திமிரு, துணிச்சல், பேசும்போது உன்கிட்ட மாட்டுன பின்னாடி சரண்டர் ஆனா, அவளோட அப்பாவிதனம், குறும்பு  இதெல்லாம் எனக்கு ரொம்ப புடிச்சு இருக்கு டா.. அதனால தான் நா இந்த முடிவு எடுத்தேன்" என்று சூர்யா சொல்ல.. 


"அப்ப நிலா ஓட, அந்த காதல் பத்தி உனக்கு எந்த உறுத்தலும் இல்லய சூரியா?" என்று அரவிந்த் கேட்க.. 


சூர்யா அழகாய் சிரித்தவன், "அந்த காதல் தான்டா எனக்கு அவகிட்ட பிடிச்ச முக்கியமான ஒன்னு" என்றவனை புரியாமல் பார்த்த அரவிந்த், "நீ சொல்றது எனக்கு புரியல சூர்யா" என்றவனை பார்த்து மீண்டும் சிரித்தவன், "என்னை பொறுத்த வரை அவளுக்கு அந்த பையன் மேல இருக்கிறது முழுமையான நம்பிக்கை, புனிதமான அன்பு, அதுக்கு அவ காதலனு பேரு வச்சு இருக்க, அவ்ளோ தான். நா அவளோட அவ சொல்ற அந்த காதலையும் காதலிக்கிறேன் டா" என்று தோள்களை குலுக்க...


அரவிந்த் சூர்யாவை இறுக்கி கட்டிப்பிடித்தவன், "ரொம்ப சந்தோஷம் டா. உன்னை பத்தி எனக்கு நல்ல தெரியும். நீ நிலாவை கண்டிப்பா சந்தோஷமா பாத்துக்குவ. அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு டா. ரொம்ப நல்ல முடிவு சூர்யா. உனக்கு கல்யாணம் நடக்கிறது சந்தோஷம்.. அதை விட நிலாவை நீ கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னது எனக்கு டபுள் சந்தோஷம் டா" என்று அரவிந்த் துள்ளிக்குதிக்க...


"அதெல்லாம் சரிதான் டா அரவிந்த்... ஆனா, நிலானி இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்குவாளா?? என்று கேட்க... 


"ஆமா இல்ல... நா அத மறந்தே போயிட்டேனே" என்ற அரவிந்த் சேரில் அமர்ந்து தலையில் கை வைத்து கொண்டான்.


"டேய் என்னடா தலையில் கை வச்சுட்ட. ஏதாவது ஐடியா குடு டா" என்று சூர்யா கேட்க. 


"ஏன்டா? நீ என்ன பீட்சா வா கேட்ட, ஆர்டர் பண்ணி அரைமணி நேரத்தில் கையில்ன கொடுக்க... நீ கேக்குறது பிசாசை டா, கொஞ்சம் யோசிக்க விடு" என்றவன் யோசனையில் மூழ்கி நெற்றியில் விரலை வைத்து தேய்த்து யோசிக்க. சூர்யா, "பாத்துடா... நீ தேய்க்கிற தேய்யில் உள்ள இருக்க களிமண் வெளிய கெட்டிட போகுது" என்று கிண்டலடிக்க…


அரவிந்த் அவனை கண்களை சுருங்கி முறைத்தவன், "உனக்கு கொழுப்பு அதிகம்டா. போடா போ, நா கிளம்புறேன். நீயே யோசிச்சு அந்த பிசாச கரெக்ட் பண்ணிக்க. நான் போறேன்" என்று கிளம்ப. 


"டேய் டேய் நா சும்மா உல்லுலாய்க்கு சொன்னேன் டா, நீதான் அறிவாளி ஆச்சே… என்னையும், உன் தங்கச்சியையும் சேத்து வைடா. ப்ளிஜ் ஹெல்ப்  மீ டா மச்சி" என்று பாவமாய் முகத்தை வைத்துக்கொள்ள.


"அட ச்சீ... பரதேசி பாக்க சகிக்கல மூஞ்சிய ஒழுங்கா வை டா எரும என்று துப்ப. சூர்யா உடனே ஈஈஈஈ என்று இளிக்க, "அட த்தூ" என்று அரவிந்த் மீண்டும் துப்ப. "அரசியல்ல இதெல்லாம் சகஜம் அப்பா" என்று சூர்யா சொல்ல... இருவரும் சிரித்து விட்டனர்.


"சரி சரி சிரிச்சது போதும். ஐடியா யோசிடா" என்று சூர்யா சொல்ல.


" இதபாரு சூர்யா, இது ஒன்னும்  சாதாரணமான விஷயம் இல்ல. நல்லா பிளான் பண்ணி தான் பண்ணனும்" என்று வடிவேலு மாதிரி சொல்ல.


சூர்யா, "டேய் நேரம் கெட்ட நேரத்துல காமெடி பண்ணிக்கிட்டு… ஒழுங்க ஏதாவது சொல்லுடா, ஏன்டா  நம்ம ஏன் அவ வீட்டுல போய் பேசக்கூடாது என்று  சூர்யா கேட்க.


"இல்லடா வேணாம். அது சரியா வரும்னு எனக்கு தோணல. அவ 

வீட்ல அவ விருப்பத்தை மீறி அவங்க அப்பா எதுவும் செய்யமாட்டார். சோ இதுக்கு ஒரே ஒரு வழிதான் இருக்கு சூர்யா..."