கண்ட நாள் முதல் 18
அத்தியாயம் 18
மறுநாள் காலை அரவிந்த் தேவிக்கு ஃபோன் பண்ண?? அது நாட் ரிச்சபுல் என்று வர.. பேசாமல் வீட்டுக்கே போய் பாத்துடுவோம் என்று கிளம்பினான்.
தேனுவுக்கு மனசு ஒரு நிலையிலேயே இல்லை... ஏதோ இனம்புரியாத ஒன்று அவளை வாட்டியது. நேற்று காரணமே இல்லாமல் தேவி மீது கோபப்பட்டது அவளுக்கே சற்று
குழப்பமாக இருந்தது.. "என் நான் தேவி மேல கோபப்பட்டேன். அரவிந்த் அவளை பிடிக்கும்னு சொன்னா, எனக்கு ஏன் கோவம் வருது. இதுக்கு முந்தி நான் இப்டி இருந்தாதே இல்லையே… என்ன ஆச்சு எனக்கு?? எதுவும் புரியலயே கடவுளே??" என்று தலையை பிடித்துக் கொள்ள காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்டு, "யாரா இருக்கும்" என்று எழுந்து சென்று கதவை திறக்க, அங்கு புன்னகை தவழும் முகத்துடன் அழகாக நின்று இருந்த அரவிந்த்தை பார்த்தவளுக்கு, தேவி மீது தனக்கு வந்தது கோபமில்லை, பொறாமை என்பது தெளிவாக தெரிந்தது. "ச்சே அப்படி எதுவும் இல்ல... அவ என் ஃப்ரண்டு நா ஏன் அவளைப் பார்த்து பொறாமை பட போறேன். இவனுக்கு அவளை புடிச்சு இருந்த எனக்கு என்ன?" என்று மறுத்து யோசித்தாலும்... அதுதான் உண்மை என்பதை அவள் மனம் அழுத்தி சொல்ல?? தேனு அரவிந்தை பார்த்துக் கொண்டு அப்படியே நின்று இருந்தாள்.
"ஹலோ?? ஏய்?? ஏய் தேனு என்ன எங்க பறந்துட்டுட்டு இருக்க..?? பூமிக்கு இறங்கி வாம்மா" என்ற அவன் குரலில் தெளிந்தவள்.
"நீ.. நீங்க எங்க இங்க?? அதுவும் இவ்ளோ காலையில்??"
அவளின் அந்த "நீங்க" என்ற மரியாதை ஏனோ அரவிந்துக்கு சுத்தமாக பிடிக்கவில்லை, "என்ன தேனு மரியாதை எல்லாம் பலமா இருக்கு??" என்றவனை பார்க்காமல் முகத்தை வேறு பக்கம் திருப்பியவள்,
"அதெல்லாம் ஒன்னும் இல்ல.?? சும்மா தான்?? என்ன விஷயமா வந்தீங்க?? சூர்யா அண்ணா எதுவும் சொல்ல சொன்னாங்களா..??" என்று தன் தவிப்பை மறைத்துக்கொண்டு கேட்க.
"அப்ப உனக்கு என் கிட்ட பேச ஒன்னுமே இல்லையா தேனு, சூர்யாவை வச்சு தான் நா உனக்கா??" என்று மனம் கசந்தவன், "இல்ல தேனு... சூர்யா ஒன்னும் சொல்லல, நா தான் சும்மா தேவியை பாக்கலாம்னு வந்தேன். அவ ஃபோன் சுவிட்ச் ஆப். அதன் நேரா வந்தேன்" என்றவன வார்த்தையில் தேனு முகம் இன்னும் வாடி விட்டது.
"அவ ஃபோன் ரிப்பேர். அவ அவங்க மாமா வீட்டுக்கு போய் இருக்க. சாயந்திரம் தான் வருவா" என்றாள் உணர்ச்சி துடைத்த குரலில்...
"ஓஓஓ அப்டியா... சரி தேனு நா அப்றமா அவகிட்ட பேசிக்கிறேன்."
"எதாவது முக்கியமான விஷயமுன்ன சொல்லுங்க அரவிந்த். அவ வந்ததும் நா சொல்றேன்.??"
"இல்ல தேனு பரவாயில்ல..!!" என்ற அர்விந்தை பார்த்து கசப்பாக சிரித்தவள், "ம்ம்ம்ம் அதுவும் சரி தான். உங்க பர்சனல் மேட்டரை என்கிட்ட எப்டி சொல்ல முடியும்" என்று முனங்க.
"என் தேனு?? எதுவும் சொன்னீயா??"
"இ.. இ… இல்ல… காபி, டி எதுவும் குடிக்கிறீங்களா ன்னு கேட்டேன்??"
"இல்ல தேனு ஒன்னு வேணாம்..!! ஆமா, நீ ஏன் ஒரு மாதிரி இருக்க?? உடம்பு ஏதும் சரியில்லயா. முகம் ஒரு மாதிரி இருக்கு, நேத்து சூர்யா கூட சொன்னான் தேனு முகமே சரியில்ல, ஏதாவது பிரச்சனையோன்னு..?? என்ன ஆச்சு தேனு.?"
"ஓஓஓஓ... சூர்யா அண்ணா சொல்லி தான் உனக்கு தெரிஞ்சு இருக்கு , உனக்க ஒன்னு தோனல.?? அது சரி எப்டி தோணும்..." என்று மனதிற்கு அவனை திட்ட.
"ஏய் தேனு என்ன? அடிக்கடி பிரீஸ் ஆகிடுறா.. என்னாச்சு உனக்கு, உடம்புக்கு முடியலைன்னா சொல்லுமா..?? ஹாஸ்பிடல் போலாம்."
"இல்ல இல்ல, நா நல்லா தான் இருக்கேன். நிலா கல்யாண வேலையில கொஞ்சம் அலைச்சல். கலை அம்மா கூட வெளிய சுத்திட்டு இருந்தேன். அதான் கொஞ்சம் உடம்பு முடியல வேற ஒன்னும் இல்ல..!! ஐ ஆம் ஆல்ரைட்.!! நா பாத்துக்குறேன். உங்களுக்கு எதுக்கு கஷ்டம்.??"
"எனக்கு எதுக்கு கஷ்டமா… அப்ப உனக்கு நான் யாரோ தானா தேனு?" என்று நினைத்தவன், "சரி தேனு டேக் கேர்.. நா கிளம்புறேன்" என்று சொல்ல. அவனின் உடைந்து வந்த குரல் தேனுவை ஏதோ செய்தது.
அரவிந்த் சென்று வெகு நேரம் ஆகியும் தேனு வாசலிலேயே நின்றவள் கண்களில் அவளையும் அறியாமல் கண்ணீர் வந்தது.
இங்கு அரவிந்த், போகும் வழியெல்லாம் தேனுவை திட்டிக்கொண்டே சென்றான், "ஹாஸ்பிடலில் போலாம் வாடின்னு சொன்ன.?? உங்களுக்கு எதுக்கு கஷ்டம்னு கேக்குற நீ? மை ஃபுட். அப்ப நா அவளுக்கு யாரோ தானா… அவளுக்கு ஏதாவதுன்னா. நா பாக்க கூடாதா? எனக்கு அந்த உரிமை இல்லையா?" என்று தனக்கு தானே புலம்பி கொண்டு இருந்தவன் தான் மொத்த கோபத்தையும் கார் ஸ்டீயரிங் மேல் கட்டினான்...
மாலைபோல் வீட்டிற்கு வந்த தேவி. அழுது முகமெல்லாம் வீங்கி போயிருந்த தேனுவை பார்த்தவள்..ன "ஏய் என்னடி ஆச்ச, மூஞ்சி இப்டி வீங்கி போய் இருக்கு? என்னாச்சு?" என்று கேக்க. அரவிந்திடம் சொன்ன அதே பொய்யை தேவியிடமும் அவிழ்த்து விட, அதை நம்பாமல் தேவி அவளை முறைக்க, அவர் பார்வையை சமாளிக்க முடியாமல், "தேவி எனக்கு உடம்பு முடியல. நா தூங்க போறேன்" என்று தன் அறையை நோக்கி செல்ல. உள்ளே நுழையும் முன், "தேவி காலையில உன்னை தேடி மிஸ்டர் .அரவிந்த் வந்திருந்தாரு" என்று சொல்லி விட்டு செல்ல...
தேவிக்கு ஏதோ மனதை நெருட ஆரம்பித்தது. "கடவுளே என்ன இது? எனக்கு ஒன்னும் புரியலயே.. ஏன் இவ இப்டி இருக்கா??" என்று யோசிக்க தேவிக்கு ஏதோ புரிய அவள் இதழில் குறுநகை பரவியது.
அந்த மாலை நேரத்தில் அழகிய மின்விளக்குகளில் ஜொலித்தது அந்த கல்யாண மண்டபம்.. நாளை திருமணம் இருக்க, அதற்கு முந்தைய நாள் வரவேற்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. உறவு, நட்பு என்று அனைவரும் வந்து மண்டபம் முழுவதும் நிறைந்து வழிந்தது. மணமகள் அறையில் நிலாவின் அழகுக்கு மேலும் அழகு சேர்த்துக் கொண்டு இருந்தனர் தோழிகள் இருவரும். தேனுவும், தேவியும் நேற்று நடந்த அனைத்தையும் ஒரு புறம் தள்ளி வைத்து விட்டு. தன் அன்பு தோழியின் திருமணம் நிகழ்வில் தங்களை அமர்த்திக் கொண்டனர். ஆனாலும் தேனுவின் முகம் சற்று வாடி இருப்பதை நிலா கண்டு கொள்ள, ஆனால், அதற்கு காரணம் தேட அவள் முயலவில்லை.
மணக்கோலத்தில் நிலா முழுவதும் தயாராகி இருக்க. அதை பார்த்த கலை ஒரு நிமிடம் அப்படியே நின்று விட்டார். வரவேற்பிற்கு லெகங்க எடுக்க சொல்ல, நிலா முடியவே முடியாது, நா நம்ம தமிழ் முறைப்படி பட்டு புடவை தான் கட்டுவேன்" என்று அடம்பிடித்து அழகிய பிங்க் நிறத்தில் வெள்ளி சரிகை போட்ட பட்டுபுடவையை எடுத்தவள். இன்று அந்த புடவையில் தேவதை போல் ஜொலிக்க, அவளின் அந்த அழகிய முகம் கலைக்கு யார் முகத்தையே நினைவுபடுத்தியது... கண்களில் கண்ணீர் வழிய நிலாவை கட்டி பிடித்துக் கொண்டார். என் கண்ணே பட்டும் போல என் பொண்ணுக்கு..!! அவ்ளோ அழகா மகாலட்சுமி மாதிரி இருக்கடி" என்றவர். கண்மையை எடுத்து நிலா காதுக்கு பின் திருஷ்டி பொட்டு வைத்து செல்ல..
"அக்கா... இந்த டிரஸ் எனக்கு எப்டி இருக்கு" என்று கேட்டுக்கொண்டே வந்த சந்தியா, சந்தன நிற பாவாடை, சிவப்பு தாவணியில் , தலை நிறைய மல்லிகை பூ வைத்து குட்டி ஏஞ்சல் போல் இருந்தாள். "அக்கா உன் கிட்ட தான் கேக்குறேன். நா பாக்க எப்படி இருக்கேன்?" என்று ஆர்வமாக கேட்க..
நிலா அவளை ஏற இறங்கப் பார்த்தவள். "டிரஸ் சூப்பரா இருக்கு சந்தியா" என்று சொல்ல... சந்தியா "ஐய்யா" என்று துள்ளிகுதிக்க.. அடுத்த நொடி. "ஆனா, நீ சுமாரா தான் இருக்க" என்று சொல்ல சந்தியாவிற்கு புஸ்சென்று ஆகிவிட்டது. "போடி எரும உன்னை விட நா அழக இருக்கேன்னு உனக்கு பொறாமை" என்று திட்டிக்கொண்டே போக, நிலா சிரித்துக்கொண்டே, "எரும இந்த டிரஸ்ல பாக்க அப்டியே ஏஞ்சல் மாதிரி இருக்கு. இவளுக்கு மட்டும் தான் எந்த கலர் டிரஸ் போட்டாலும் நல்லா இருக்குடி" என்று தோழிகளிடம் சொல்ல.
"ஏன்டி? இத அவகிட்ட சொன்னா உனக்கு என்னவாம்? பாவம் புள்ள எவ்ளோ ஆசைய கேட்டுது.?? என்ற தேவியை லேசாக முறைத்தவள்,
"அடி போடி, இத மட்டும் நா அவ கிட்ட சொன்னா. அவ்ளோ தான் அதுக்கு தலையில ரெண்டு கொம்பு முளைச்சிடும்" என்று சொல்ல.. இதையெல்லாம் வெளியே நின்று கேட்டு கொண்டு இருந்த சந்தியாவிற்கு "இனி இது மாதிரி அக்கா கூட சண்ட போட முடியாது?? நாளைக்கு அக்கா கல்யாணம் ஆகி வேற வீட்டுக்கு போய்டுவா" என்ற எண்ணம் வர அவள் கண்களில் நீர் கோர்த்து கொண்டது.
இங்கு மணமகன் அறையில் சூர்யா ஒயிட் கலர் சட்டை அதற்கு மேல் பிளாக்கலர் கோட், அதே நிறத்தில் பேன்ட் என்று ஆணழகனாய் தயார் ஆகி இருக்க, வரவேற்பு நிகழ்ச்சி தொடங்கியது. நிலா எப்போது வருவாள் என்று சூர்யா கண்கள் மணமகள் அறை வாசலிலேயே தவம் கிடக்க. அவன் கண்களின் ஏக்கத்தை அகற்ற அவனின் அழகு தேவதை வெளியே வந்தாள். அவளை பார்த்தவன் கொக்கி போட்டது போல் கண்கள் அவளைவிட்டு இம்மியும் அசையவில்லை.
சூர்யா அருகில் வந்த அரவிந்த், "டேய் பரதேசி வாயில ஜொள்ளு கொட்டுது பாரு. முதல்ல அதை மூடு, எல்லாரும் பாக்குறாங்க... மானம் போகுது" என்று சொல்ல. "போடா டேய்... அவ என் பொண்டாட்டி நா பாக்குறேன்..?? உனக்கு என்ன??"
"அதை தான்டா நானும் சொல்றேன் அவ உன் பொண்டாட்டி தான் வாழ்க்கை முழுசும் நீ சைட் அடிக்க தான் போற. இப்ப கொஞ்சம் குறைச்சிக்கடா. எல்லாரும் உன்னை தான் பாக்குறங்க. கெத்தை மென்டென் பண்ணு…"
"சரி சரி... நிலா வர்ர., நீ போடா அங்கிட்டு" என்று அரவிந்த்தை விரட்டி விட. நிலா, சூர்யாவின் அருகில் வந்து நின்றாள். பார்த்தவர்கள் அனைவரும் நல்ல ஜோடி பொருத்தம் என்று சொல்லிவிட்டு போக.. பெரியவர்கள் அனைவரின் மனமும் நிறைந்து போனது.
இங்கு மேடையில் சூர்யா நிலாவை சீண்டி கொண்டே இருக்க?? நிலாவிற்கு கன்னங்கள் சிவந்து விட்டது. அவளின் பின்னலை பிடித்து இழுப்பது, அசந்த நேரம் பார்த்து அவள் இடுப்பை கிள்ளுவது என்று அவன் லீலைகள் தொடர.. நிலாவிற்கு என்ன செய்வது என்று புரியவில்லை. பொறுத்து பொறுத்து பார்த்தவள். தன் செருப்பு காலை அவன் ஷூ காலின் மீது வைத்து பலமாக அழுத்த. சூர்யா வலி தாங்க முடியாமல் "ஸ்ஸ்ஆஆஆ" என்று கத்த, "இன்னொரு முறை வாலாட்டினா மகனே… நிக்க கால் இருக்காது" என்று அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் முகத்தை சிரித்த மாதிரியே வைத்துக் கொண்டு சொல்ல...
"ராட்சசி... எப்டி சிரிச்சுட்டே மிரட்டுறா பாரு. இருடி மறுபடியும் என் கிட்ட சிக்காமயா போய்டுவா, அப்ப பாத்துக்குறேன்டி உன்னை" என்று சூர்யா முறைக்க, "அதையும் பாக்கலாம்" என்று உதட்டை சுழித்து ஒழுங்கு காட்டி விட்டு திரும்பி கொண்டாள் நிலா.
வரவேற்பு நல்லபடி முடிந்து சொந்தங்கள் அனைவரும் சென்று விட நெருங்கிய நண்பர்கள் மட்டுமே இருக்க ஆட்டம், பாட்டம் என்று மண்டபம் ரெண்டு பட்டது…
சந்தியா, சூர்யாவையும் நிலாவையும் ஆட அழைக்க??
சூர்யா, "மாட்டுனீயாடி மகளே. என் காலை மீதிச்ச இல்ல. இருடி இரு…" என்று நிலாவை பார்த்து கொண்டே சிரிக்க. நிலா "அடிபாவி சூனிய பொம்மை இப்படி பழி வாங்கிட்டியேடி. ஐய்யோ இவன் வேற இப்டி பாக்குறானே. தள்ளி தள்ளி நிக்கும் போதே, அவ்ளோ சேட்டை, இப்ப இவன் கூட ஆடுன அவ்ளோ தான்" என்று நினைத்தவள், "ஐய்யோ என்னால முடியாது, நா ஆட மாட்டேன்." என்று சொல்ல, அனைவரும் ஆடியே ஆக வேண்டும் என்று கத்த, வேறு வழி இல்லாமல் நிலா, சூர்யாவுடன் ஆடுவதற்கு ஒத்துக்கொண்டாள்.
பாடல் ஒலிக்க சூர்யா இதுதான் சான்ஸ் என்று நிலாவின் இடுப்பை பிடித்து இறுக்கி அணைத்து ஆட, நிலாவிற்கு உடல் முழுவதும் மின்சாரம் பாய்ந்தது போல் ஒரு உணர்வு. ஒரு கண்ணில் ஒருவர் கலந்துவிட, கொஞ்ச நேரத்தில் இருவரும் தன்னை மறந்து சேர்த்து ஒன்றாக கலந்து, ஒருவரில் ஒருவர் கரைந்து ஆட... அனைவரும் அவர்கள் இருவரின் ஆட்டத்தையும் பார்த்து வியந்து விட்டனர்.
பாட்டு முடிந்தது இருவரும் ஒருவரை விட்டு ஒருவர் விலகாமல் அணைத்தபடியே இருக்க...
"ஹலோ, ஹலோ, அடியேய் அக்கா ஆடியோ கட்டாகி அரை நாள் ஆச்சு" என்று சந்தியா கத்த!! அதில் சுய உணர்வுக்கு வந்த நிலா. தான் நின்ற நிலையை நினைத்து வெட்கம் வர அங்கிருந்து ஓட பார்க்க, சந்தியா நிலாவை ஓடவிடாமல் பிடித்துக்கொண்டவள், "இங்க யாரோ ஒருத்தங்க, நானெல்லாம் ஆட மாட்டேன்னு சொன்னாங்களே, அந்த மானஸ்தியா யாராவது பாத்தீங்களா?" என்று கிண்டல் செய்ய.. நிலா அவள் தலையில் நறுக்கென்று கொட்டி விட்டு சென்று தேனு அருகில் அமர்ந்து கொண்டாள்.
"ஓகே ஓகே அடுத்து யாரு ஆட போறீங்க?" என்று சந்தியா கேட்க,
" ஏய் தேனு நீ தான் நல்லா ஆடுவியே போடி என்று தேவி உசுப்ப??
"ஆமா தேவி, அரவிந்த் கூட நல்லா ஆடுவான் ரெண்டு பேரும் சேர்த்து ஆடட்டும்" என்று சூர்யா சொல்ல.
"சூப்பர் மாமா, அப்ப ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு ஆட்டத்தை போடுங்க"
"இல்ல சந்தியா... எனக்கு இப்ப ஆடுற மூட் இல்ல ப்ளீஸ் வேணாம்" என்ற தேன்மொழி அங்கிருந்து சென்று விட. அவள் தன்னுடன் ஆடச் சொன்னதால் தான், முடியாதுன்னு போயிட்டா என்று நினைத்த அரவிந்துக்கு கோபமும் ஏமாற்றமும் சேர்த்து வந்தது.
இங்கு நிலாவும் தேனுவை பற்றி தான் யோசித்து கொண்டிருந்தாள்.
"என்ன தேவி? என்ன ஆச்சு இந்த தேனுக்கு?? ஏன் ஒரு மாதிரி இருக்க?? உடம்பு எதுவும் சரியில்லையா என்று சூர்யா அக்கறையுடன் கேட்க.
"அதை ஏன்ண்ணா என்கிட்ட கேக்குறீங்க.?? உக்காந்திருக்காளே உங்க அருமை பொண்டாட்டி, அவகிட்ட கேளுங்க. என்னைக்கு தேனுகிட்ட இவ சத்தியம் வாங்குனாளோ, அப்ப இருந்து தேனு மந்திரிச்சு விட்ட மாதிரி தான் திரியுது" என்று பொறிய.
"என்ன சத்தியம்?? இவ எதுக்கு சத்தியம் வாங்குனா?? எனக்கு புரியல தேவி கொஞ்சம் விளக்கமா சொல்லு மா" என்று சூர்யாவிடம் தேவி நடந்ததை சொல்ல,
அதை கேட்ட சூர்யாவிற்கு நிலா மேல் அளவு கடந்த கோபம் வந்தது. "ஏய் லூசாடி நீ. யாராவது இப்படி ஒரு சத்தியம் கேப்பாங்ளா?" என்று கத்த.
"ஹலோ… மிஸ்டர். புருஷன், அது எனக்கும் என் ஃப்ரண்டுக்கு இடையில இருங்க டீல் அத பத்தி நீங்க பேச வேணாம்" என்று இருவரும் முட்டிக்கொள்ள.
அரவிந்துக்கோ தேனு மேல் கொலைவெறி வந்தது. "இன்னைக்கு இவகிட்ட பேசியே ஆகணும்" என்று முடிவு செய்தவன். தேனுவை தேடி சென்றான்.
தேனு மண்டபத்தின் மாடியில் தனியாக நின்று கொண்டிருக்க. அவள் கண்கள் கலங்கி இருந்தது. "ஏய் உன் மனசுல என்னடி நினைச்சிட்டிருக்க? என்று திடீரென்று வந்த சத்தத்தில். திடுக்கிட்டு அவள் திரும்பி பார்க்க, அங்கு தீயாய் அவளை முறைத்துக்கொண்டிருந்த அரவிந்தை பார்த்தவள். ஒரு நிமிடம் பயந்து தான் போனாள்.
"இவன் எதுக்கு இங்க வந்தான். எதுக்கு இப்படி முறைச்சிட்டு இருக்கான்" என்று யோசிக்க..??"
"ஏய் உன்னை தான்டி கேக்குறேன்" என்னடி நினைச்சிட்டிருக்க. உன் மனசுல? எதுக்குடி அப்டி ஒரு சத்தியம் பண்ணி தந்த?? நிலா தான்
கேட்டான்னா உனக்கு எங்கடி போச்சு புத்தி, யாரை கேட்டு இப்டி ஒரு சத்தியத்தை பண்ண? என்று அரவிந்த் கத்திகொண்டே போக..!! முதலில் அவன் பேசுவது புரியாமல் அவனையே பார்த்த தேனு. பின் எதை பற்றி பேசுகிறான் என்று புரிய.
"அதை கேக்க நீங்க யாரு? அது நிலாக்கு எனக்கு நடுவுல இருக்க விஷயம். அதை பத்தி பேச நீங்க யாரு? அதுவும் என்னை கேள்வி கேக்க உங்களுக்கு என்ன உரிமை இருக்கு?? என்று அவளும் கத்த,
அரவிந்தின் கோபம் எல்லை கடந்தது. "ஏய் யாருக்குடி உரிமை இல்ல. மனச தொட்டு சொல்லுடி.. நா உனக்கு யாரும் இல்லைன்னு.?? எனக்கு உன்கிட்ட எந்த உரிமையும் இல்லைன்னு" என்று அவள் தோள்களை பிடித்து உலுக்க. தேனுவுக்கு என்ன சொல்வதென்று ஒன்றும் புரியவில்லை.
"ஏய் உன்கிட்ட தான்டி கேக்குறேன்? நாளைக்கே நிலா வேற எவனையாவது காட்டி அவனை தான் கட்டிக்கணும்னு சொன்னா, நீ அவனை கல்யாணம் செஞ்சுகுவியா?" என்று ஆத்திரத்தில் கேட்க,
தேனுவும் கோபமாக "ஆமாடா கட்டிக்குவேன். அது என் இஷ்டம். அதை கேக்க நீ யாரு" என்று சொல்லி முடிக்கும் முன் அரவிந்த் அடித்த அடியில் இரண்டடி தள்ளி கீழே விழுந்து கிடந்தாள்.
என்ன நடந்ததென்று புரியாமல் தேனு வலிக்கும் தன் கன்னத்தை பிடித்து கொண்டு, அவனையே பார்த்துக் கொண்டிருக்க. தன் கை கொண்டு அவளை எழுப்பி நிறுத்தி, அவள் தோளை இறுக்கி பிடித்தவன். "ஏன்டி உனக்கு எவ்ளோ தைரியம் இருந்த என்கிட்டயே இன்னொருத்தனை கட்டிக்குவேன்னு சொல்லுவா? நீ இன்னொருத்தனை கல்யாணம் பண்றத, பாத்துட்டு நா சும்மா இருப்பேன் நினைச்சியா நீ. நீ வேற கல்யாணம் பண்ணிவீன்னா, அப்ப நான் யாருடி உனக்கு?" என்று கத்தியவன் முழுதாக உடைந்து நின்று விட... தேனுவுக்கு அவன் சொல்வதின் அர்த்தம் புரிந்தாலும், நம்ப முடியாமல் அவனை பாக்க.
"உன்னை பாத்த அன்னையில் இருந்து, உன்னை பத்தி மட்டும் தான்டி நா யோச்சிட்டு இருக்கேன். உன் கூட சண்டை போடுறதே சந்தோஷம்னு இருந்தேன்டி நா. அப்ப அதுக்கு என்ன அர்த்தம்னு எனக்கு புரியல... அன்னைக்கு கல்யாண புடவை எடுத்தப்போ சூர்யா கேட்டான். தேனுக்கும் உனக்கும் நடுவுல என்னடா நடக்குதுனு? அப்ப தான் எனக்கே ஏதோ வித்தியாசம் தெரிஞ்சது. அதுக்கு அப்றம் உங்களை வீட்ல விட வந்தப்போ, தேவி என்கிட்ட பேசனுன்னு சொன்னா?? அவ தயங்கினது பார்த்து, எங்க அவ என்கிட்ட ப்ரொபோஸ் பண்ண போறாளோனு பயந்து போய்ட்டேன். என்னா நா அவளை என்னோட தங்கச்சிய தான் பாத்தேன். அதான் உள்ளுக்குள்ள ஒரு பயம் வந்துச்சு… ஆனா, அவ என் கிட்ட என்ன சொன்னா தெரியுமா..??"
"உங்களுக்கு தேனுவ புடிச்சிருக்க அரவிந்த் அண்ணான்னு கேட்ட… ஒரு நிமிஷம் நா அப்டியே ஆடி போய்டேன் தேனு. ஒரு பக்கம் தேவி என் மனசுல இருந்ததை அப்டியே சொன்னது. அடுத்து அவ என்னை அண்ணான்னு சொன்னது. அன்னைக்கு எனக்கு அவ்ளோ சந்தோஷமா இருந்துது தேனு. ஆனா, தேவி கிட்ட நா எதையும் காட்டிக்கல. அப்றம் தேவியே சொன்னா என்றவன் அன்று நடந்ததை சொல்ல ஆரம்பித்தான்.
"ஆமா அண்ணா எனக்கு தேனு பத்தி நல்ல தெரியும். அவ அவ்ளோ சீக்கிரம் யார்கிட்டயும் பேச மாட்ட, பழக மாட்ட, அப்டியிருக்க, உங்கிட்ட அவ உரிமைய சண்ட போடுறா. உங்ககிட்ட அவ ரொம்ப கம்ஃபர்டபுல்வ பீல் பண்ற. எனக்கு என்னாவோ அவளுக்கு உங்களை பிடிச்சிருக்குன்னு தோணுது. அப்டியிருந்து, அவ காதலை உங்ககிட்ட சொல்லி..?? ஒருவேளை உங்களுக்கு அவளை மேல அப்டி ஒன்னும் இல்லாம போய் நீங்க மறுத்துடிங்கன்னா..?? சத்தியாம அதை அவ தாங்க மாட்ட அண்ணா. அதனால தான் நானே உங்க கிட்ட கேட்டுட்டேன். இப்ப சொல்லுங்க உங்களுக்கு தேனை பிடிச்சிருக்க?" என்று கேட்ட தேவி விழி விரிய அவன் முகம் பார்த்துக் கொண்டிருக்க.
அரவிந்த் தேவியை அழமாக பார்த்தவன். "எனக்கு தேனுவ ரொம்ப பிடிச்சிருக்குமா, அதைவிட அதிகமாக என்னோட இந்த குட்டி தங்கச்சி தேவிய ரொம்ப பிடிச்சு இருக்கு" என்று சொல்ல, தேனுக்கு அப்போது தான் அன்று அரவிந்த் தேவியை பிடிச்சிருக்கு என்று சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வர. தன் தோழியை தவறாக நினைத்ததும், தன் மனதை சொல்லாமலே புரிந்து கொண்டவளை நினைத்து கண்ணீர் முட்ட. கதறி அழுதாவள் அப்படியே உட்கார்ந்து விட. அவளின் கண்ணீர் அரவிந்த ரொம்பவே வதைத்தது.
"ப்ளீஸ் தேனு அழத… ப்ளீஸ்டா, நா தேவி சொன்னத வச்சு நீயும் என்னை விரும்புறேன்னு நெனச்சு தான் இப்டி நடந்துகிட்டேன். சாரி தேனு, ரியலி வெரி சாரி" என்று புலம்ப அவள் அழுவதை நிறுத்தவே இல்லை.
"ஏய்! ஏன்டி இப்டி அழுகுற என்னை வதைக்கிற. அதான் நீ என்னை விரும்பலனு தெரிஞ்சு போச்சே. அப்றம் நீ அழுக என்ன இருக்கு. நா தான் அழுகணும்" என்று விரக்தியாக சொன்னவன், "நீ நிலா சொல்ற பையனை கல்யாணம் பண்ணிக்க. நா எங்க வீட்ல சொல்ற பொண்ணை கல்யாணம் பண்ணிக்குறேன். நீ என்னை நெனச்சு பயப்பட வேணாம். நானும் ஒரு நல்ல பொண்ணு வயித்துல பொறந்தவன் தான், விருப்பம் இல்லனு சொல்ற பொண்ணை கட்டாயப்படுத்துற அளவுக்கு பொறுக்கி இல்ல. நா இனி உன்னை தொந்தரவு பண்ண மாட்டேன் போதுமா? இனி நீ இருக்க பக்கம் கூட தலை வச்சு படுக்க மாட்டேன்." என்று சொல்லி முடிக்கும் முன் தேனுவின் கை அரவிந்த் கன்னத்தை பதம் பார்த்திருந்தது.
"காதலில் வலியும் சுகம்தான்...
காதலியின் அடியும் சுகம்தான்…"
ஆனா, பாவம் அரவிந்தால் அ
ப்படி சொல்ல முடியவில்லை. "ஏன்னா அடி அவ்வளவு பயங்கரம். பின்ன?? இருந்த மொத்த கோவத்தையும் அவன் கன்னத்தில் இல்ல காட்டி இருக்க பாவி மக… ஹாஹாஹா…