கண்ட நாள் முதல் 14

 

அத்தியாயம் 14

தேன்மொழியும், தேவியும் தனலட்சுமி அம்மாவிடம் பேசியதை கேட்ட நிலா...

"நா நினைச்சது சரியா போச்சு.!! இந்த ரெண்டு எருமைங்க பண்ண சப்போர்ட்ல தான் சந்தியா இவ்வளவு பெரிய வேலையை செஞ்சு இருக்க.! அதோட இவளுங்க சொன்னதால தான் குமாரும், அம்மாவும் இந்த கல்யாணத்தை தைரியமா நடத்தி இருக்காங்க. கூட இருந்தே இந்த ரெண்டு பிசாசுகளும், ஒன்னுமே தெரியாத மாதிரி என்னம்மா ஆக்டிங் பண்ணி இருக்குங்க" என்று கொதித்தவள், "இப்ப அத்தை கூட இருக்காங்க. இதுங்க  ரெண்டும் என்னைக்காவது, நம்ம கிட்ட வசமா சிக்கும். அப்ப வைக்கிறேன்டி உங்களுக்கு ஆப்பை" என்று சபதம் செய்தவள் எதுவும் தெரியாதது போல் வந்த தோழிகளுக்கு "ஹாய்" சொல்லி விட்டு தனம் அம்மா அருகில் அமர்ந்தாள்.

அடுத்த ஒரு மணிநேரம் வீடு அதிரும் படி பெண்கள் நால்வரும் அரட்டை அடிக்க... கலையும், தனமும் கூட அதில் இணைந்து கொண்டனர்.

அரட்டை முடிந்து நல்ல நேரம் வர... வெளியே சென்ற ராம்குமார் வந்தவுடன் அனைவரும் புடவை கடைக்கு சென்றனர்.

அது நகரத்தின் பெரிய துணிக்கடை,

"அண்ணி நீங்க தேவையான புடவை எல்லா எடுங்க நா என் மருமகளுக்கு சூப்பரா கல்யாண சேலை எடுத்துட்டு வரேன்" என்று தனலட்சுமி பட்டு செக்ஷனுக்கு செல்ல, இங்கு கலை மாத்த சடங்குகளுக்கு தேவையான புடவைகள், நிலாவுக்கு தேவையான மற்ற துணிகளை எடுக்க, தேனும், தேவியும் நிலாவிற்கு அந்த ஆடைகள் பொருந்துமா, இல்லையா என்று ஒவ்வொன்றையும் நிலா மீது வைத்து வைத்து பார்க்க கடுப்பான நிலா, "ஏய் என்னடி பண்றீங்க?? சும்மா எல்லாத்தையும் வச்சு வச்சு பாத்துக்கிட்டு. சீக்கிரம் எதாவது ஒரு முடிவுக்கு வாங்கடி."

"இரு நிலா.. ஏன் இப்படி அவசரப்படுற..??  உனக்கு எது போட்டாலும் அழக இருக்கு. எத எடுக்குறதுன்னு  ஒரே குழப்பமா இருக்கு, நீ கொஞ்சம் பொறுமையா இரு…" என்ற தேவி மீதி இருந்த ஆடைகளையும் நிலா மேல் வைத்து பார்க்க, நிலா, "அய்யோ இந்த கொசு தொல்லை தாங்கலயே" என்ற தலையில் அடித்துக் கொண்டாள்.

தனலட்சுமி கைகளில் ஐந்து அழகிய பட்டு புடவைகளுடன் வந்தவர். "என்னமா செலக்சன் எல்லாம் முடிஞ்சுதா?" என்று கேட்க.

"எங்க ஆன்டி உங்க மருமகளுக்கு எந்த டிரஸ் போட்டாலும் அழக இருக்கு. எதை எடுக்கிறதுனு ஒன்னுமே புரியல... பேசாம நீங்க சூர்யா அண்ணனை ஃபோன் போட்டு வர சொல்லுங்க, நாளைக்கு அவர் தானா இவள பாத்து ரசிக்க போறாரு. அவரையே வந்து அவர் பொண்டாட்டிக்கு செலக்ட் பண்ண சொல்லுங்க. எங்களால் முடியாதுப்பா" என்று சொல்ல. நிலா, தேவி தலையில் நங்கு என்று ஒரு கொட்டு வைக்க, "ஆஆஆ" என்று தலையை தடவிய தேவி, 'ஏன்டி பிடாரி என்ன கொட்டுன??" என்று முறைக்க...

"பின்ன உன்னை கொஞ்சுவாங்களாக்கும் மூடிட்டு கம்முனு இருடி" என்று திட்ட, தேவி முகத்தை "உமென்று" வைத்துக் கொண்டாள்.

இதையெல்லாம் பார்த்து வாய்விட்டு சிரித்த தனம் "இதுக்கு எதுக்குமா குழப்பம். என் மருமகளுக்கு எந்த துணி போட்டாலும் அழகாக தான் இருக்கும். பேசாம எல்லாத்தையுமே எடுத்துடுவோம்" என்று சொல்ல.

"சந்தியா போங்க அத்தை நா உங்க மேல கோவமா இருக்கேன்..?? என்று முகத்தை திருப்பிக்கொள்ள...

"என்னமா சந்தியா? இப்ப என்ன ஆச்சு?? எதுக்கு கோவம்.??"

"பின்ன என்ன அத்த?? நீங்க ஏன் ஒரே புள்ளையோட நிருத்திட்டிங்க... இன்னொரு பையனை பெத்திருந்த, நானும் அவனை கல்யாணம் பண்ணி உங்களுக்கு மருமகளா வந்து இருப்பேன். எனக்கும் இந்த மாதிரி நிறைய டிரஸ் கிடைச்சி இருக்கும்.. நீங்க எனக்கு துரோகம் பண்ணிட்டிங்க" என்று வராத கண்ணீரை துடைக்க அனைவரும் விழுந்து விழுந்து சிரிக்க, தனம், "அதுக்கென்ன சந்தியா, உனக்கு எவ்ளோ டிரஸ் பிடிச்சு இருந்தாலும் எடுத்துக்கா, யாரு வேணாம்னு சொன்னது??' என்று சொல்ல சந்தியா முகத்தில் பல்பு பளிச்சென்று எரிய. கலை, "இவள திருத்தவே முடியாதுடா சாமி. எக்கேடோ கெட்டு போ" என்று விட்டு விட்டார்.

" இந்தம்மா நிலா, இது நான் உனக்காக எடுத்த கல்யாணபுடவை புடிச்சிருக்கா பாரு" என்று புடவையை நிலா கையில் கொடுக்க, நிலா ஒரு நிமிடம் அசந்துவிட்டாள்… அது அழகிய மயில் கழுத்து வண்ணத்தில் ரோஸ் நிற பார்டரில் தங்க ஜரிகை இழையோட நிலாவுக்காகவே நெய்தது போல் அத்தனை பொருந்தமாக இருந்தது.

"சூப்பர் அத்த!!  புடவ ரொம்ப அழகா இருக்கு எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு" என்று நிலா உற்சாகமாக சொல்ல தனத்திற்கு மகிழ்ச்சி தாங்கவில்லை,  தனலட்சுமி கையோடு  தான் எடுத்து வந்த மீதி புடவைகளை தேனு, தேவி ,சந்தியா, கலையின் கைகளில் கொடுக்க நால்வரும் ஒன்றும் புரியாமல் விழித்தனர்.

"இது எதுக்கு ஆன்டி?" என்று தேனு கேட்க. தேவியும் அதையே தான் நினைத்தாள்.

"கல்யாணத்தப்ப நீங்க எல்லாரும் இந்த புடவையை தான் கட்டிக்கணும்..!! இது என்னோட ஆர்டர்" என்று சிரித்துக்கொண்டே சொல்ல.

"ஆன்டி  நிலா, சந்தியா, கலை அம்மாக்கு சரி... எங்களுக்கு எதுக்கு ஆன்டி" என்று தேவி இழுக்க.

"இது என்னம்மா கேள்வி, அவங்களை மாதிரி தாம்மா நீங்களும் எனக்கு… வாய் நிறைய சூர்யாவை அண்ணான்னு சொல்றீங்க, அப்ப நீங்க ரெண்டு பேரும் எனக்கு பொண்ணு மாதிரி தானா.. அப்போ உங்க அண்ணன் கல்யாணத்துக்கு உங்களுக்கு புடவை எடுத்து தரணும் தானே? அது தானா முறை" என்று அவர் உள்ளத்தில் இருந்து வந்த அந்த பரிசுத்தமான அன்பில் அனைவரும் சற்று ஆடி தான் போனார்கள்.

நிலாவிற்கு வார்த்தையே வரவில்லை. தன்னோடு தான் அனைத்து உறவு, நட்பு என்று அனைத்தையும் ஒன்றுபோல் நேசிக்கின்ற தன் அத்தையின் அன்பில் நிலா மூழ்கி போய் விட்டாள் என்று தான் சொல்ல வேண்டும்.

தேவியும், தேனும் கண்கலங்கி நிற்க..!! தனம், "இதோ பாருங்கமா எனக்கு பொம்பளை புள்ளைங்க அழுத சுத்தமாக பிடிக்காது. முதல்ல கண்ண துடச்சிட்டு புடவை புடிச்சு இருக்கான்னு பாருங்க" என்றதும், தோழிகள் இருவரும் சிரித்தபடி, கண்களை துடைத்து கொண்டே  புடவையை பார்க்க நிலாவுக்கு எடுத்த மாதிரியே அவ்வளவு அழகாய் அவர்களுக்கு பொருத்தமாக இருந்தது அந்த புடவைகள்.

"ரொம்ப சூப்பரா இருக்கு ஆன்டி. சூப்பர் செலக்சன்!" என்று தேவி சொல்ல. சந்தியாவும் "ஆமா அத்த… என் புடவையும் சூப்பரா இருக்கு!" என்று புடவையை தன் தோளில் போட்டுக் காட்ட தனம் அவள் கன்னத்தை கிள்ளி, "அழகா இருக்கடா" என்றவர், "நிலா நீயும் போய் இந்த புடவையை கட்டிட்டுவா டா, எப்டி இருக்குன்னு பாப்போம்" என்று சொல்ல. நிலா புடவையை எடுத்து கொண்டு டிரஸ்ஸிங் ரூமிற்கு சென்றாள்.

இங்கு கலை, 'அடுத்து எங்க அண்ணி?? என்று கேட்க.

"புடவை எடுத்து முடிச்சுட்டுட்டு, அப்டியே நகைகடைக்கு போய்டலாம் அண்ணி. கல்யாணத்துக்கு தேவையான எல்லா நகையையும் எடுத்துடலாம்" என்று சொல்ல கலையும் சரி என்றார்.

நிலா புடவையை கட்டி முடித்து எல்லாம் சரியாக இருக்க என்று பார்த்து விட்டு, தலையை குனிந்தபடி  புடவையை சரி செய்தவரே கதவை திறந்து வெளியே வந்தவள், யார் மீதோ மோதி நின்றவள், "ஏங்கபாத்து வரக்கூடாதா" என்று சத்தம் போட்டபடி நிமிர்ந்து பார்க்க… அங்கு அவளை அந்த புடவையில் பார்த்து மெய் மறந்து, இரு கண்களால் அவளை பருகிக்கொண்டு இருந்தான் சூர்யா. அவனை திடீரென அங்கு கண்ட  நிலா கண்கள் விரிய அவனையே இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தாள்.

அவனையே இமை கொட்டாமல் பார்த்து கொண்டிருந்த நிலாவை ரசித்த சூர்யா, அவள் முகத்திற்கு முன்பு விரல்கள் கொண்டு சொடுக்கி, "செம்மயா இருக்கடி" என்று கண்ணடிக்க, அதில நிகழ்வுலகிற்கு வந்த நிலா, "அடியேய் நிலா என்னடி இது? அறிவு கெட்டுபோய் இப்டி அவனை உத்துப் பாத்துட்டு இருக்க நீ? நீ அவன் மேல கோவமா இருக்கடி. இப்ப நீ அவனை பாத்து முறைக்கணும்டி… அத விட்டு இப்டி ஐஸ் வண்டிய பாத்த குழந்தை மாதிரி அவனையே விடாம பாத்துட்டு இருக்கியே லூசு..??" என்று தனக்குள்ளேயே புலம்பியவள், "அய்யோ கடவுளே எனக்கு என்ன ஆச்சு..?? கிறுக்கு எதும் புடிச்சுடுச்சுபோச்ச? இப்டி உள்ளுக்குள்ள பேசிட்டு இருக்கேன்" என்று தன்னை தானே திட்டிக்கொண்டே, அங்கிருந்து நகர போக, புடவை தடுக்கி கால் தவறி கீழே விழ போனவளை தாங்கி பிடித்து தன்னோடு சேர்த்து இழுத்து அனைத்தான் சூர்யா.

திடீரென அவன் செய்த இந்த காரியத்தில் நிலா முழுதாய் தன் நிலை இழந்து அவன் கை அணைப்பில் மயங்கி நிற்க,
சூர்யாவும் கிடைத்த இந்த சான்ஸ்சை விட மனது இல்லாமல், அப்படியே அவளை அணைத்தபடியே நிற்க நொடிகள், நிமிடங்களாய்  தொடர… சூர்யாவின் லவ் பூஜையில், கரடி சந்தியா உருவில் வந்தது.

"அத்தாடி..!!  மாம்ஸ் என்ன நடக்குது இங்க.??" என்று சந்தியா கத்த, கூட வந்த தேவியும், தேனுவும் வாய் பிளந்து நின்றனர். சந்தியாவின் சத்தத்தில் சுய உணர்வுக்கு வந்த நிலாவுக்கு அப்போது தான் அவள் இருந்த நிலை புரிந்தது. சட்டென்று சூர்யாவை விட்டு விலகியவள் அங்கிருந்து ஓடிவிட…

"இங்க என்ன நடக்குது அண்ணா?" என்று தேவி கேட்க. "ம்ம்ம்ம் புளியோதரையும், பொங்கலும் குடுக்குறோம் வந்து வரிசையில நின்னு வாங்கி கொட்டிக்கோங்க" என்றான் கடுப்பாக.

"என்ன அண்ணா? என்ன ஆச்சு எதுக்கு இப்டி கடுப்பு ஆகுறீங்க..??"

"ம்ம்ம்… ஏன் கேக்க மாட்ட,  நல்ல ரொமான்டிக் சீனுக்கு நடுவுல வந்து அத அநியாயமா முடிஞ்சு வச்சிட்டு, கேள்வி வேற கேக்குற நீ. இது உனக்கே நல்லா இருக்க" என்று புலம்பியவன்,  சந்தியா தலையில் வலிக்காதபடி மெதுவாக கொட்டி, "ஏன்டி கரடி..!! உன்னை யாருடி இப்ப இங்க வர சொன்னது. எனக்கே இவ்வளவு நாள் கழிச்சு  இப்பதான் ஒரு ரொமான்டிக் சீன் செட் ஆச்சு… அது புடிக்கலய உனக்கு? அய்யோ இனி எப்ப இப்டி ஒரு வாய்ப்பு கிடைக்கும்... கிடைக்குமா..??, கிடைக்காதான்னு கூட தெரியலயே என்று முனங்க, பெண்கள் மூவரும் அவனை பார்த்து சிரிக்க… சூர்யா பொய்யாக அவர்களை முறைத்தவன். "என்ன சிப்பு வேண்டிக்கிடக்கு?? அதான் வந்த வேலை சிறப்பா முடிஞ்சுது இல்ல, வாங்க போலாம்" என்று அவர்களை அழைத்து கொண்டு தனம், கலை இருக்கும் இடத்திற்கு சென்றான். (நோட் திஸ் பய்ண்ட் மக்களே. அங்க தான் நிலாவும் இருக்க.. ஹீரோ சார் அவளை பாக்க தான் இப்டி அவசரமா போறாரு)

நிலா பதட்டமாக தனலட்சுமி, கலை இருந்த இடத்திற்கு வர. அவள் முகத்தை பார்த்த தனம், "என்னடா?? என்ன ஆச்சு.?? முகம் ஏன் பேயறைஞ்ச மாதிரி இருக்கு?? என்று பதற,
"அதெல்லாம் ஒன்னும் இல்ல அத்த" என்று நிலா தட்டு தடுமாறி சொல்ல. அங்கு வந்த தேவி "ஆமாம் ஆன்டி… பேய் தான் அறஞ்சிருச்சு" என்றவள் நிலா காதருகில் சென்று அறஞ்ச பேய் பேரு சூர்யா தானே?" என்று கிண்டல் செய்ய?? நிலா அவள் இடுப்பை பலமாக கிள்ளி தேவி "ஆஆஆவென" கத்திவிட, அதை கண்ட தேனு, "தேவையாடி இது உனக்கு?" என்று சிரிக்க,  "போ டீ எரும" என்று தேவி முகத்தை திருப்பி கொண்டாள்.

அங்கு இவ்வளவு சண்டை நடக்க, சூர்யா தான் கடமையில் கருத்தாய் இருந்தான். என்னன்னு பாக்குறீங்களா… நிலாவ சைட் அடிக்கிறது தான்.

நிலா தப்பி தவறி கூட சூர்யாவை நிமிர்ந்து பார்க்கவில்லை, மனதிற்குள், 'என்ன நிலா இது.?? வீட்ல மனசாட்சி கிட்ட வீர வசனம் எல்லாம் பேசிட்டு. இங்க அவனை பாத்ததுக்கே இப்டி ஆஃப் ஆகிட்ட. அதுவும் அவன் உன்னை கட்டி புடிச்சுட்டிருக்கான். ஆனா, நீ.?? எதுவுமே சொல்லாமல் நிக்குறீயே? இதெல்லாம் போதாதுன்னு இந்த சூனியம் பொம்மை வேற இதெல்லாம் பாத்து தொலச்சுடுடுச்சு. வீட்ல என்ன பண்ண காத்திருக்காளோ? தெரியலயே?? கடவுளே, நீதான் காப்பாத்தனும்' என்று கண்டதையும் நினைத்து மனதிற்குள் புலம்ப...

சூர்யாவையும், தலை குனிந்தபடியே இருந்த  நிலாவின் முகத்தை பார்த்த கலைக்கு, ஏதோ நடந்திருக்கு என்று மட்டும் புரிய மேலே எதுவும் கேட்காமல் சந்தியா, தேனு, தேவி முகம் பார்க்க மூவரும் விஷமாய் சிரிக்க அவருக்கு ஓரளவு விஷயம் புரிந்தது.

"டேய் சூர்யா..?? நிலா கட்டி இருக்கிறது தான் கல்யாண புடவை. எப்டி இருக்கு.. நல்லா இருக்கன்னு பாத்து சொல்லுடா" என்று தனலட்சுமி கேக்க…

"ம்ம்க்கும்... அவரு ஏற்கனவே அவள அந்த புடவையில பாத்து விழுந்தவாரு, இன்னும் எந்திரிக்கல, இதுல நீங்க மறுபடி வேற பாக்க சொல்றீங்க... என்ன கொடுமை சரவணன் இது" என்று புலம்ப, சூர்யா அவள் கால்களை மிதித்து, "ஏய் பிசாசு, கொஞ்சம் என் மானத்தை வாங்காம, சும்மா இரு" என்று கெஞ்ச, சந்தியா சிரித்துக்கொண்டே இரு கைகளால் வாயை மூடிக்கொண்டாள்.

தனலட்சுமி, "சரி சூர்யா, நாங்க போய் மாத்த துணி எல்லாம் எடுத்துட்டுவதிடுறோம். நீ போய் உனக்கு தேவையான எல்லாம் செலக்ட் பண்ணு" என்று சொல்ல, "நீங்க கவலையே படாதீங்கம்மா... அதான் நா வந்துட்டேன் இல்ல" என்று குரல் வந்த திசையில் அரவிந்த் வர.

"வாடா நல்லவனே, இதுதான் வர நேரமா"  என்று சூர்யா அவன் கையை முறுக்க, " நா என்னடா பண்றது… வழியில கார் மக்கர் பண்ணிடுச்சு, அதான் லேட்" என்று சொல்ல,

"அட பாவமே! நீதான்  சரியில்லன்னு பாத்தா, காரும் அப்டியே வா இருக்கும்" என்று தேன்மொழி, அரவிந்த் காலை வார.

"ஆமா டி…  நீயும், உன் ஃபரண்டும் எப்டி ஒரே மாதிரியே, அப்டி தான் நானும் என் காரும்... அவ பிசாசு, நீ கொள்ளிவாய் பிசாசு" என்று வாய்க்குள்ளேயே முனங்க, தேனுக்கு வந்ததே கோபம், "டேய் என்னை மறுபடியும் கொள்ளிவாய் பிசாசுன்னா சொன்னா, உன்னை…" என்று சண்டையை ஆரம்பிக்க.

அரவிந்தும் பதிலுக்கு அப்டி தான்டி சொல்லுவேன். என்னடி பண்ணுவ? என்று வரிந்து கட்டிக்கொண்டு சண்டைக்கு போக.

தனலட்சுமி, "டேய் அரவிந்த் என்னடா இது..?? பொது இடத்துல்" என்று  அதட்ட..?? கலையும் தேனுவை தலையில் ஒரு கொட்டு கொட்ட இருவரும் அமைதி ஆகினார்.

(இதுல ஒரு பியூட்டி என்னன்னா, இங்க இவ்வளவு ரணகளம் நடக்குது ஆனா, ஒருத்தன் மட்டும் என்னமோ இன்னைக்கே உலகம் முடிஞ்சுடும் மாதிரி நிலாவையே நாய் பிஸ்கட்டை பாக்குற மாதிரி வாயில ஜொள்ளோட பாத்துட்டு இருக்கான்.)

அரவிந்த் சூர்யா தோளை பிடித்து இழுத்தவன், "ஏன்டா துரோகி, இங்க ஒருத்தி. உன் உயிர் நண்பனை உறிச்சு எடுத்துட்டிருக்க. நீ என்னடான்னா இங்க சின்சியரா சைட் அடிச்சிட்டு இருக்க" என்று  அவனிடம் சண்டைக்கு போக. சூர்யா, "நிகழ்வுலகிற்கு வந்தவன், "என்னடா மச்சி?? என்ன ஆச்சு?? டிரஸ் எல்லாம் எடுத்து முடிச்சச்ச கிளம்பலாமா" என்று சம்பந்தம் இல்லாமல் கேட்க... அரவிந்த் அவனை கொலைவெறியுடன்  முறைக்க, நிலாவுடன் சேர்த்து மாற்ற அனைவரும் சிரித்து விட்டனர்.

சூர்யா எதுவும் புரியாமல், "என்னடா? என்ன ஆச்சு" என்று கேட்க

"ஆஹான்... இங்க உன் ஃப்ரண்டோட  மானம் கப்பல் ஏறி போச்சுடா" என்று பல்லை கடிக்க. சூர்யா, "சரிஇஇஇ, அதுக்கு நா என்ன செய்யணும் கப்பல நிறுத்துமா" என்று கேட்க. மீண்டும் அனைவரும் விழுந்து விழுந்து சிரிக்க.. அரவிந்த் பல்லை கடித்து கொண்டு "ஆணியே புடுங்க வேணாம் போடா அந்தாண்ட" என்று திரும்பிக் கொண்டான்.

தனம் கலையிடம், "அண்ணி இதுங்க கிட்ட நம்மால போராட முடியாது. வாங்க நம்ம போய் நம்ம வேலையை பார்ப்போம்" என்று நகர…

"அய்யோ!! அம்மாவும், அத்தையும் போய்ட்டா, இதுங்க கிட்ட நம்ம ஒத்தையில இல்ல மாட்டிக்குவோம். அப்றம் நம்ம நிலைமை... அய்யோடா இப்ப என்ன பண்றது?? பேசாம அம்மா, அத்தை கூட போய் எஸ்கேப் ஆகிட வேண்டியது தான்' என்று நினைத்தவள், "அம்மா நானும் உங்க கூட வரேன்" என்று சொல்ல, கலை மற்றவர் முகத்தை பார்த்து கேலியாக சிரித்து விட்டு, "சரி வாடி" என்று அவளையும் உடன் அழைக்க, "அம்மாடி கலை... எனக்கு அம்மாவ இருந்து, நீ எனக்கு பண்ண முதல் நல்ல விஷயம் இது தான்" என்று நினைத்தவள் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓட..!! அரவிந்தை தவிர மற்ற அனைவரும் சிரிக்க.

"அடியேய் அக்கா... இப்ப நீ எஸ்சாகி ஓடலாம். ஆனா, மறுபடி எங்க கிட்ட மாட்டாமய போய்டுவ. அப்ப இருக்குடி உனக்கு" என்று சந்தியா சொல்ல. தேனுவும், தேவியும் "இதை நாங்கள் வழிமொழிகிறோம்" என்று சூர்யாவை பார்க்க அவன்,  "ப்ளீஸ்டா செல்லங்களா, என் பொண்டாட்டி பாவம். கொஞ்சம் பாத்து கம்மிய செய்ங்கடா"

"யாரு அவளா,??அவளா மாமஸ் பாவம்?? அவளா பாவம்??" என்று சந்தியா குதிக்க.

"ஏய்!! இருமா… இரு... எதுக்கு இப்ப நீ சந்திரமுகிய மார்ற? எமோஷன குறை" என்று சூர்யா அவளை சமாதானப்படுத்த, "பின்ன என்ன மாம்ஸ்..? உங்க கல்யாணம் முடிஞ்ச அன்னைக்கு என்னை, என்ன அடி அடிச்ச தெரியுமா? உங்க வீட்டாடி, எங்க வீட்டாடி இல்ல... ஊர்பட்ட அடி, அவளை போய் நீங்க  பாவன்னு சொல்றீங்க... இது நியாயமா? அடுக்குமா? என்று முகத்தை பாவமாக வைத்துக்கொள்ள. சூர்யாவுக்கு தான் சிரிப்பை அடக்க முடியாமல் சத்தம் போட்டு சிரிக்க, சந்தியா அவனை முறைக்க., "சாரிடா... சாரி சத்தியமா சிரிப்பை அடக்க முடியல சாரி" என்று சூர்யா சிரித்தபடி அரவிந்தை பார்க்க...

அவன் தன் நெற்றியை தோய்த்து எதையோ பஷமாக யோசித்தவன்,  "இல்லயே... அப்டி இருக்க வாய்ப்பில்லயே.. அதெல்லாம் நடக்க சான்சே இல்லயோ" என்று தனக்கு தானே  புலம்பிக் கொண்டிருந்தான்.