நிஜம் 28






 நிஜம் 28


த்வனி விக்ரம் வீட்டுக்கு வந்து அமைதியாக (அடிதாடியாக) ஒரு வாரம் சென்றிருந்தது.


த்வனி முன்பு விக்ரம் வீட்டில் இருந்த போது இருந்த அறையிலேயே தங்க நினைக்க, விக்ரம் எக்காரணம் கொண்டும் நீ மாடிப்படி ஏறி இறங்க கூடாதென்று பிடிவாதமாகக் கீழே இருந்த பெரிய அறையில் அவளை இருக்க வைத்தான். அதற்கே எரிச்சலின் உச்சிக்கு சென்ற த்வனி, அடுத்து அவனும் அந்த அறையில் அவளுடன் தான் தங்குவேன் என்று சொல்ல, அவள் சாமியாடிவிட்டாள்.


"ஏது நீ என் கூட… நீயும் நானும் ஒரு ரூம்ல… ஏன்டா உனக்கு உன் உயிர் மேல ஆச இல்லயா… ஒழுங்க சொல்றேன் இத்தோட இதெல்லாம் நிறுத்திக்கோ இல்லேன்னு வை" என்று அவள்‌ கையை முறுக்க,


"என் ரென்யா என் கைக்கு வர்ர வரை நான் உன்னோட, ச்சீ இல்ல… நீ என்னோட தான் இருந்து ஆகணும். என்ன கேட்ட உயிர் மேல ஆசை இல்லயன்னு தானா கேட்ட… அதுக்குப் பதில் உனக்கே நல்லா தெரியும். அண்ட் நீ ஒருவேளை நமக்குள்ள நடந்ததை மனசுல வச்சிட்டு இப்படிச் சொல்றீன்னா… பார் யூர் இன்பர்மேஷன், அன்னைக்கு மட்டும் நான் போதையில் இல்லாம இருந்திருந்தால் அந்தத் தப்பு நடந்தே இருக்காது. அது உனக்கும் தெரியும். உனக்கு என்னையும், எனக்கு உன்னையும் சுத்தமா புடிக்காது தான். பட், நம்ம ரெண்டு பேருக்கும் ஒருத்தரை பத்தி ஒருத்தருக்கு நல்லாவே தெரியும். சோ, அதை நெனச்சு நீ யோசிக்க வேணாம்." என்ற மீண்டும் அந்த நாளை த்வனிக்கு நினைவு படுத்த, புகைந்து கொண்டிருந்த அவள் கோவம் எரிமலையாக வெடித்தது.


வேகமாக அவன் அருகில் வந்து அவன் சட்டையைப் பிடித்து அவள் கைகள் வலிக்கும் மட்டும் அவன் கன்னத்தில் மாறிமாறி அறைந்தவள், "எவ்ளோ ஈசியா சொல்லிட்ட போதையில அப்டி பண்ணிட்டேன். எப்டிடா… எப்டி இத சொல்ல முடியாது உன்னால‌… அன்னைக்கு, அந்த நைட்… ஒவ்வொரு நிமிஷமும் எனக்கு" என்றவள் கால்மடிக்கி கீழே அமர்ந்து விட்டாள்.


"ஒரு பொண்ணோட விருப்பம் இல்லாட்டி அவன் புருஷனவே இருந்தாலும் அவளைத் தொடக்கூடாதுடா. அதுதான் ஆம்பளைத்தனம். நீ என்னடான்ன போதையில் பண்ணிட்டேன்னு எவ்ளோ அசல்ட்டாகச் சொல்ற… அன்னைக்கு எனக்கு எப்டி இருந்துச்சு தெரியுமா… எதிர்த்து போராடா கூட தெம்பு இல்லாம இருந்தவகிட்ட போய் நீ" என்றவள் வரவா வேண்டாமா என்று இமைகள் ஓரத்தில் பதில் எதிர்பார்த்து நின்ற‌ கண்ணீர் துளிகளை, இவனுக்கு முன்னால நான் அழ மாட்டேன். இப்ப உங்களுக்கு இங்க வேலை இல்லை" என்று த்வனி அவள் கண்ணீருக்குத் தடைப் போட்டாள்.


விக்ரம் அவளுக்கு எதிரில் அமரந்து, ஒரு நிமிடம் அவளையே உற்று பார்த்தவன், "கற்புன்றது பொண்ணுங்களுக்கு மட்டும் தான் இருக்குனு, எல்லாரையும் போலத் தான் நீயும் நினைக்கிறீய… ம்ம்ம்... இல்லடி அது உண்மை இல்ல. அன்னைக்கு நீ எதை இழந்தியே, எது உனக்கு நடந்ததுன்னு நெனச்சு நீ இப்டி உக்காந்துட்டு இருக்கீயே, அதேதானடி எனக்கும் நடந்துச்சு…" என்றனை தவ்னி அழுத்தமான ஒரு பார்வை பார்த்தாள்.


"நான் சொல்றது மத்தவங்களுக்குப் புரியாது. ஆனா, கண்டிப்பா உனக்குப் புரியும். நான் சொல்றது உண்மைனு உனக்குத்தான் நல்லா தெரியும். பிகாஸ் என்னைப் பத்தியும், என்னையும் ரென்யாவை பத்தியும் எங்களைவிட அதிகம தெரிஞ்சு வச்சிருக்குறது நீதான். என்னோட மனசும், உடம்பும் அவ ஒருத்திக்கு தான்னு இருக்கவன்டி நான். அப்டி இருக்க, அன்னைக்கு நடந்தது உன்னை எந்த அளவுக்குப் பாதிச்சு இருக்கோ, அதே அளவு என்னையும் அந்தச் சம்பவம் நொடிக்கு நொடி கொன்னுட்டு தான் இருக்கு," என்றவன் அவளை நிமிர்ந்து பார்த்து,


"அன்னைக்கு நடந்தது நம்ம ரெண்டு பேருக்குமே சொல்லமுடியாத வேதனை தான். அதை நினைச்சு ரெண்டு பேருமே உள்ளுக்குள் துடிச்சிட்டு தான் இருக்கோம். பட்…" என்று அவளை ஆழ்ந்து பார்த்தவன், "அதோட விளைவை நினைச்சு, டூ பி ஹானஸ்ட் நம்ம ரெண்டு பேரும் சந்தோஷப்படுறோம். இத நீயும் இல்லனு சொல்ல மாட்ட" என்ற விக்ரமை நிமிர்ந்து பார்த்த த்வனியின் கண்களின்‌ இமைகள் மூடிக்கொள்ள, அவள் கைகள் அந்த இரவின் விளைவை சுமக்கும் தன் கருவறையை ஆசையாகத் தடவிப் பார்த்து.


விக்ரம் எழுந்து சென்று அங்கிருந்த டேபிளில் டிராயரில் இருந்து மருந்தை எடுத்து வந்து, அவனை அடித்துச் சிவந்திருந்த, அவள் கைகளில் தடவ பார்க்க, த்வனி கைகளைப் பட்டெனப் பின்னால் இழுத்துக்கொண்டாள்.


"ஏய் அறிவுகெட்டவளே, இப்டி வேகமாகக் கைய இழுக்குறீயே, தப்பித்தவறி கை வாயித்தில இடிச்ச என்னடி ஆகுறது. கொஞ்ச மாச்சும் உனக்கு அறிவிருக்க" என்றவனை த்வனி முறைக்க,


"என்னடி முறைப்பு வேண்டி இருக்கு… நான் கூட இருக்கும் போதே இனி இந்தக் குதி குதிகிகுற… நான் மட்டும் இல்லாட்டி நீ என்னென்ன செய்வ… உன்னை எல்லாம் நம்பமுடியாது. நீ இங்க தான் இருக்கணும்"


"டேய் உனக்கு இது தான் லிமிட்… விட்ட பேசிட்டே போற நீ… எம் புள்ளைய‌ பாத்துக்கு எனக்குத் தெரியாத… வெளிய இருந்து பாக்குற உனக்கே இவ்ளோ அக்கறை இருக்குதுன்னா, நான் எனக்குள்ளயே உசுர சுமக்குறேன். எனக்கு எவ்ளோ இருக்கும்" என்று த்வனியும் சண்டைக்கு நிற்க, கடைசியில் மீண்டும் விக்ரம் அவன் கழுத்தில் கத்தியை வைக்க,‌ த்வனி இருந்து தொலைக்குறேன் என்று அந்த அறையில் விக்ரம் கூடவே தங்கினாள்.


அன்று காலை விக்ரம் தட்டில் இருந்த தோசையை ரசித்து ருசித்து ஒரு வெட்டு வெட்டிக்கொண்டிருக்க… கையில் கிடைத்தால் அவன் நாக்கை இழுத்து வைத்து வெட்டும் வெறியுடன் அவனுக்கு எதிரில் அமர்ந்தனர் த்வனியும் வருணும்.


"டேய் உன் மனசுல என்ன தான்டா‌ நெனச்சிட்டு இருக்க நீ?" என்ற வருணை நிமிர்ந்து கூடப் பார்க்காமல்,


"சாம்பார் நல்லா இருக்கு இன்னும் ரெண்டு தோசை போட சொல்லலாம்னு நினைக்குறேன் மச்சான்" என்றவனை வெட்டவ குத்தவா என்பது போல் பார்த்த வருண், திரும்பி த்வனியை பார்த்து,


"இவனுக்கு நீதான் கரெக்ட். நீயே இந்தப் பரதேசி கிட்ட பேசு… என்னால எல்லாம் இவன் கூடப் பேசமுடியாது"


"கண்ட பரதேசி கிட்ட பேச தான் நான் இருக்கேனா என்ன? நீயே பேசாமட்டான்ன நான் மட்டும் எதுக்குப் பேசுணுமாம். எந்தப் பரதேசியோ, அவன் கம்பெனியோ எப்டி போன எனக்கென்ன" என்ற த்வனியை புருவம் உயர்த்திப் பார்த்த விக்ரம் மீண்டும் தோசையில் கவனமாக, த்வனி‌ அதில் காண்டானவள், அங்கிருந்த மொத்த சாம்பாரையும்‌ எடுத்து அப்படியே அவன் தட்டில் கொட்டினாள்.


"தின்னுடா நல்லா தின்னு… இனிமே இப்டி எல்லாம் தின்ன முடியுமோ இல்லயோ...‌நீ பண்ற‌ வேலைக்கு இன்னும் கொஞ்ச நாள்ல உன் கம்பெனிய‌ இழுத்து மூட வேண்டியது தான். அப்புறம் இப்டி வளச்சுகட்டி திங்க முடியாது" என்று த்வனி கத்த,


"ஏய் உனக்கு நெறய டைம் சொல்லி இருக்கேன். இப்டி கத்ததன்னு… நீ அமைதியான மனநிலைல இருக்கணும்னு டாக்டர் சொன்னது மறந்து போச்ச?" என்று விக்ரம் த்வனியை முறைத்தான்.


"எங்க… எங்கடா‌ என்னை நிம்மதி இருக்க வீட்றீங்க… நாள் முழுக்க‌ உன்‌ மூஞ்சையே பாத்துட்டு இருக்கேனே அது ஒன்னு போதாது என் பிபீய எகுற வைக்க… சரி வீட்ல தான் உன் தொல்லைனு ஆபிஸ் போனா… நீ அங்கயும் வந்து நிக்குற… அது பத்ததுன்னு நீ உன் கம்பெனிக்கு போகாம என் ஆபிஸுக்கு நீ வர்ரதுனால உன்னோட கம்பெனில பெரிய பெரிய பிராப்ளம் வருதுன்னு வருணும் ஆன்ட்டியும் சொல்றாங்க? ஏன்டா இப்படிப் பண்ற… நீ உன் கம்பெனிக்கு தான் போய்த் தொலையேன்." என்று‌ மூச்சு வாங்க பேசிய த்வனியின் முகத்தைப் பார்த்தபடி கையைக் கழுவிவிட்டு எழுந்து சென்ற விக்ரம், ஆரஞ்சு ஜூஸை எடுத்து வந்து அவள் முன் வைத்து,


"உனக்கு மூச்சு வாங்குது, மெதல்ல இத குடி, அப்புறம் நீ கேட்டதுக்கு நான் பதில் சொல்றேன்." என்றவனைத் தீயாக முறைத்த த்வனிக்கு அப்போது அந்த ஜூஸ் தேவைப்பட, அவன் கையில் இருந்ததைப் பிடிங்கி மடமடவெனக் குடித்து முடித்தாள்.


"ம்ம் குட். நீ கேட்டதுக்குப் பதில் இப்ப சொல்றேன். டாக்டர் உன் உடம்பு ரொம்ப வீக்கா இருக்கு, நீ ரொம்பக் கவனமா இருக்கணும், இல்லாட்டி பேபி அபோஷன் ஆக நெறய சான்ஸ் இருக்குனு" என்று சொல்லும்போதே விக்ரம் குரலில் அப்பட்டமாக அவன் பயம் தெரிய, அது த்வனிக்கும் நன்கு புரிந்தது.


"உன்ன வீட்ல இருக்கச் சொன்ன நீ கேக்கமாட்ற… ஆபிஸ் போவேன்னு அடம்புடிக்கிற… எத்தனை வாட்டி தான் கழுத்துல கத்தி வச்சு வச்சு உன்னை மெரட்றது. அப்புறம் நீயே ஒருநாள் டென்ஷன் ஆகி அந்தக் கத்திய‌ புடிங்கி என்னைக் குத்தினாலும் குத்திடுவா" என்று விக்ரம் சொல்லும் போது, அன்று ரூமில் அவன் இதைச் சொல்லி அவளை மிரண்டு போது அவள்‌ மைன்ட் வாய்ஸில் பேசியதை அவன் அப்படியே சொல்ல, முதல் முறையாக விக்ரமை நினைத்து த்வனியின் இதழோரம் லேசாக வளைந்தது.


"எனக்கு உன்னைத் தனிய ஆபிஸ் அனுப்ப பயமா இருக்கு, அதான் என்னோட கம்பெனிய வருணை பாத்துக சொல்லிட்டு நான் தினமும் உன்னோட ஆபிஸ் வந்து உன்னைப் பாத்துட்டே இருக்கேன்" என்று குழந்தைத்தனமாகப் பேசுகிறவனை என்ன சொல்வதென்று புரியாமல் வருணும், த்வனியும்‌ ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.


த்வனி கொஞ்ச நேரம் அமைதியாகக் கண்மூடி இருந்தவள், "நீ இன்னைக்கு இருந்து உன் கம்பெனிக்கு போ… நான் வீட்லயே இருக்கேன். வொர்க் ஃபார்ம் ஹோம் எடுத்துக்குறேன். என்னால வீட்ல இருந்தே என்னோட வேலைய‌ பாத்துக்க முடியும்‌." என்றபடி எழுந்தவள்,


"நீ ஒன்னும் என்னைக் கவனிச்சிக்க வேண்டிய அவசியம் இல்ல. என்னை பாத்துக்க எனக்கு தெரியும். மெதல்ல நீ உன்‌ கம்பெனிய கவனி" என்று அவள்‌ தன் அறைக்குச் செல்ல, விக்ரம் முகத்தில் அப்படி ஒரு நிம்மதி. ஏற்கனவே சௌந்தர்யா த்வனியை கவனிக்க, அவரின் மொத்த பொறுப்பை விக்ரமிடம் கொடுத்துவிட்டு வீட்டிலேயே இருந்ததால், இனி அவர் த்வனியை‌ பார்த்துக் கொள்வார் ‌என்ற நிம்மதியில் விக்ரம் கம்பெனிக்கு கிளம்ப, வருண் த்வனி விக்ரம் இடையே நடிக்கும் நிகழ்வுகளின்‌ உள்ளர்த்தம் புரிந்தும் புரியாமல் குழம்பினான்.


டாக்டர் த்வனியின் மனநிலையைச் சீராக வைக்க, காலையில் சின்னச் சின்ன யோகாசனங்களைச் செய்யச் சொல்லி இருக்க, காலையில த்வனியை எழுப்பி, அவளை யோகா செய்ய வைத்து, அது முடிந்ததும், வீட்டின் தோட்டத்தில் கொஞ்ச நேரம் அவளை நடக்க வைத்து, அவள் குளித்து முடித்து, காலை உணவை அவள் உண்டு முடித்ததும், அவளுக்குத் தேவையான மருந்துகளை அவன் கையால அவள் வாயில் திணித்த பிறகே விக்ரம் கம்பெனிக்கு செல்வான். த்வனிக்கு மருத்து மாத்திரை என்றாலே பிடிக்காது. உடம்பு சரியில்லாமல் போனால் கூட மருந்தைப் எடுக்கமாட்டாள். லயாவின் அம்மாவை பார்த்தால் திட்டு விழும் என்று பயந்து, ரூமின்‌ இன்டு இடுக்குகளில் மருந்தை ஒளித்து வைப்பாள் என்று லயா ஒருமுறை விக்ரமிடம் சொல்லி இருக்க, விக்ரம் அதை நினைவில் வைத்து, மருந்தை அவள் வாயில் போட்டு அவள் அதை முழுங்கினாள் என்று தெரிந்த பிறகே அங்கிருந்து நகர்வான்.


மதியம் பதினொரு மணிக்கு ஃபோன் செய்து த்வனி ஜூஸ் குடித்தாலா என்று கன்ஃபார்ம் செய்து கொள்பவன், வொர்க் ஃபார்ம் ஹோமில் எங்கு அவள்‌‌ சரியாகச் சாப்பிடாமல் இருந்துவிடுவாளே, என்று சரியாக ஒரு மணிக்கு வீட்டுக்கு வந்து த்வனியை‌ சாப்பிட வைத்துச் சின்னதாக ஒரு வாக் அழைத்துச் சென்றுவிட்டு தான் மீண்டும் தன் கம்பெனிக்கு செல்வான் விக்ரம்.


இதில் அவளை மன்த்லி செக்கப்புக்கு அழைத்துச் சென்றான் என்றாள் அவ்வளவு தான். டாக்டரிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டு டாக்டரை தெறித்து ஓட வைப்பான். அதோட ஷாலினிக்கு வேறு அந்த ரிப்போர்ட்டை அனுப்பி, அது என்ன இது என்ன என்று கேட்டு அவளைக் கொலையாகக் கொன்று விடுவான். இப்போதெல்லாம் ஷாலினி விக்ரம் நம்பரை ஃபோன் திரையில் பார்த்தாலே அலறியடித்துக் ஓடுகிறாள்.


இப்போதெல்லாம் த்வனியின் உடலோடு சேர்த்து அவளின் மனநிலை நன்றாகத் தேறி வந்தது. அதற்குக் காரணம் விக்ரம் தான் என்று சொன்னால், த்வனியின் உதடுகள், "அப்டி எல்லாம் ஒன்னு இல்லை" என்று கெத்தாகச் சொன்னாலும் அவள் உள்ளம் அதை ஒத்துக்கொள்ளத் தான் செய்யும்.


கண்ணில் இமைபோல் இல்லை, கருவில் உயிரைப் போல் த்வனியை‌ பார்த்துக்கொண்டான்‌ விக்ரம்.


த்வனி விக்ரம் வீட்டுக்கு வந்து முழுதாக மூன்று மாதங்கள் சென்று விட்டது.


ஊர்‌ உலகிற்கு அவர்கள் இருவரும் கணவன், மனைவி. பிறக்கப்போகும் குழந்தைக்குத் தாய், தந்தை… ஆனால் உண்மையில் இவர்கள் இருவருக்கும் இடையில் இருக்கும் இந்த உறவுக்குப் பெயர் தான் என்ன… குழந்தை தான் இவர்களை இணைக்கிறது என்றால், குழந்தை பிறந்த பின் என்னாகும். குழந்தையின் வரவு இவர்கள் உறவை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்து சொல்லுமா???