நிஜம் 29
நிஜம் 29
த்வனி சோர்ந்து போய் அந்தப் பெரிய சோஃபாவில் கண் மூடியபடி சாயந்து படுத்திருந்திருக்க, அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான் விக்ரம்.
கண்மூடி சாய்ந்திருந்த த்வனிக்கு உள்ளுக்குள் ஏதோ குறுகுறுக்க, மெல்ல கண் விழுத்து பார்க்க, விக்ரம் பயந்த முகத்துடன் அவளையே பார்த்துக்கொண்டிருப்தை பார்த்து,
"டேய்... என்னடா என் மூஞ்சில என்ன இன்னும் ரிலிஸ் ஆகாத புதுப்படம் எதுமா ஓடிட்டு இருக்கு, அப்டியே வச்ச கண்ணு வாங்காம பாத்துட்டு இருக்க" என்று கேட்க, அந்தச் சோஃபா அருகில் வந்து தரையில் அவள் முகத்தைப் பார்த்தபடி அமரந்தவன், லேசாக மேடிட்டு இருந்த த்வனியின் வயிற்றைக் கலங்கிய விழிகளுடன் பார்த்தான்.
"ஏன்டி ராட்சசி… நீ ஒகே தானா… காலையில இருந்து நீ நெறய முறை வாமிட் பண்ணிட்ட, எது சாப்டாலும் உடனே உடனே வாமிட் பண்ணிடுற… ரொம்பச் சோந்து போய் வேற இருக்க… உன்ன நான் இப்டி ஓஞ்சு போய் உக்கார்ந்து பாத்ததே இல்ல… எனக்கு உன்னைப் பாக்கவே பயமா இருக்குடி, இதுனால பாப்பாக்கு ஒன்னும் ஆகாது இல்ல. அ… அது… நல்லா தானா இருக்கு… ஒடம்பு முடியாட்டி சொல்லுடி டாக்டர்கிட்ட வேணும்னா போலாம். மருந்து தின்ன பயத்துட்டு வலிய பொறுத்துட்டு இருக்காதடி" என்றவன் குரலில் எல்லைக் கடந்த ஒருவித பயம் தெரிந்தது.
த்வனி ஒரு நிமிடம் அவனையே உற்று பார்த்தவள்,
"இதெல்லாம் பிரேகன்ஸி டைம்ல ரொம்பச் சகஜம். வினு வாயித்துல இருக்கும் போது ஆஷா கூட இப்டி தான் வாமிட் பண்ணுவா, உள்ள இருக்கப் பாப்பாக்கு தலையில முடி அதிகமா இருந்தா இப்படித் தான் அடிக்கடி வாமிட் வரும்னு ஆன்ட்டி கூடச் சொன்னாங்க, உனக்குத் தான் தெரியுமே, லயாக்கு முடி அதிகம்னு" என்றவள் முகத்தில் குழந்தையை நினைத்து லேசாக புன்னகை மலர,
"நீ வாயித்துல இருக்கும் போது ஆன்ட்டிக்கு கூட இப்டி தான் இருந்துச்சாம். பாவம் ஒரு வாய்கூடச் சாப்ட முடியாதாம். சாப்பாட்டை வாய்கிட்ட கொண்டு போனாலே அவங்களுக்குக் குமட்டிட்டு வருமாம். ஆனா, பாரு அவங்க அவ்ளோ கஷ்டப்பட்டுப் உன்னைப் பெத்ததுக்கு, அவங்களை வாயத்திறந்து அம்மானு கூப்ட கூட மனசில்லாத கல்லு, நீ வந்து புள்ளைய பொறந்திருக்கு" என்ற த்வனி விக்ரமை துளைக்கும் பார்வை பார்க்க, விக்ரம் முகத்தை வேறு பக்கம் திரும்பிக் கொண்டான்.
"ஒரு வேளை நான் உங்க அம்மா இடத்தில் இருந்து, அன்னைக்கு நீ கடல் விழுந்தவன் அப்டியே ஒரேயடியா மேல போய்ச் சேர்ந்திருந்து, கையில ஒரு பைசா கூட இல்லாத நிலையில நான் நின்றிருந்தா... நான் கூட ஆன்ட்டி மாதிரி தான்டா இருந்திருப்பேன். பிகாஸ் என்னோட புள்ளை தான் என்னோட உலகம் என்னோட வாழ்க்கை. அது இந்தச் சொசைட்டில தலைநிமிர்ந்து நல்லபடிய வாழ அதுக்குத் தேவையானதை எல்லாம் செஞ்சு தரவேண்டிய கடமையும், பொறுப்பும் ஒரு அம்மாவ எனக்கு இருக்கு. அப்படி பட்ட நேரத்தில் என்னால என் புள்ளையோட டைம் ஸ்பென் பண்ணமுடியாம கூடப் போலாம். அதுக்காக எம் புள்ளை பெருசாகி அது என்னை ஒதுங்கி வைக்கிறது சரியா…? சொல்லுடா சரியா" என்று த்வனி அதட்டிக் கேட்க, விக்ரம் தலை குனிந்தபடி இடவலமாக இல்லை என்று தலையாட்டினான்.
"அப்ப என்ன டாஷ்குடா நீ உங்கம்மா கிட்ட பேச மாட்டேங்கிற… நீ கடைசிய எப்படா அவங்களை அம்மானு கூப்டன்னு? உனக்கு ஞாபகம் இருக்கடா… அப்டி என்னடா அவங்க பெரிய தப்பு பண்ணாங்க. அன்னைக்கு மட்டும் அவங்க தைரியம முன்னேறி போகாம இருந்திருந்தால் இன்னைக்கு நீ இந்த இடத்தில் இருந்திருக்க முடியுமா சொல்லுடா... தீ கிரேட் பிஸ்னஸ் மேன் விக்ரம் தேவ்னு வெளிய வெறப்ப பித்திக்க முடியுமா? சொல்லுடா சொல்லு... உன்னைப் பெத்த அம்மாவையே புரிஞ்சிகாத நீ எல்லாம் எப்டிடா பொறக்கப்போற புள்ளை நல்ல அப்பா இருப்ப? அது உன்கிட்ட இருந்து என்னத்தடா கத்துக்கும் . நேசிக்கிறவங்களை வெறுக்கவும், ஆனாவுனா தற்கொலை பண்ணிப்பேன்னு மிரட்டி அது காரியத்தைச் சாதிச்சுக்கவும் தான் கத்துக்கும்" என்று மூச்சு வாங்க கத்தியவள்,
"போடா… எந்திரிச்சு போடா... என் கண்ணு முன்னால நிக்காத… உன்னைப் பாத்தாளே எனக்கு டென்ஷன் எகுறுது" என்று கத்த, விக்ரம் பதில் பேசாமல் அங்கிருந்து எழுந்து சென்றான்.
'மூஞ்ச பாரு போன்னு சொன்னதும் உடனே எழுந்து போய்ட்டான். இங்க ஒருத்தி வாந்தி எடுத்து ரொம்ப டயர்டா இருக்காளே, எழுந்து நடக்கக்கூட முடியாம படுத்துட்டு இருக்கவளுக்குச் சாப்ட, இல்ல குடிக்க எதாவது எடுத்துக்கொண்டு வந்து தரணும்னு தோனுச்ச பாரு எரும மாட்டுக்கு' என்று புலம்பிக் கொண்டு இருக்க, அவள் முன் ஒரு பெரிய டம்ளர் நிறையச் சூடான பாலுடன் வந்து நின்றான் விக்ரம்.
"இந்த இப்போதைக்கு இத குடி. ஹெவிய எதுவும் சாப்ட மறுபடியும் உனக்கு வாமிட் வரும்னு பயமா இருக்கு." என்று அங்கிருந்த சின்ன டேபிள் மீது பால் டம்ளரை வைக்க, த்வனி அவனையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
"வாமிட் நிக்க டேப்லெட் எதுவும் வேணுமா? நான் வேணும்னா ஷாலினிக்கு ஃபோன் போட்டு கேக்கவா?" என்றதும் த்வனி வேண்டாம் என்று தலையாட்டி,
"ஆணியே புடுங்கவேணாம். உன் நம்பரை பாத்தாலே அவ தெறிச்சு ஓடுற… உனக்குப் பயந்து இப்ப எல்லாம் அவ என்கிட்ட கூட ரெண்டு நிமிஷம் மேல பேச மாட்டேங்குற… எல்லாம் உன்னால தான்" என்று முகத்தைத் திருப்பிக் கொள்ள,
"அதெல்லாம் வேணாம், இது நார்மல் தான். இதை எல்லாம் டேப்லெட் போட்டு ஸ்டாப் பண்ணக்கூடாதுனு" என்ற சௌந்தர்யாவின் குரல் கேட்க, விக்ரமும் த்வனியும் திரும்பி பார்க்க, அங்குச் சூட சூட இருந்த சாம்பாரில் இட்லிகள் மிதக்க அதை தட்டில் வைத்து எடுத்துக் கொண்டு சௌந்தர்யா வர விக்ரம் சட்டென முகத்தைத் திரும்பிப் கொண்டான்.
அவன் முக்ததைத் திரும்பியதை பார்த்த சௌந்தர்யா உள்ளுக்குள் உடைந்து போக, த்வனிக்குப் பற்றிக்கொண்டு வந்தது.
"இந்த மாதிரி நேரத்தில் இதெல்லாம் நார்மல் தான், இந்த டைம்ல சும்மா சும்மா கண்ட டேப்லெட் எல்லாம் எடுக்கக்கூடாது விக்ர…" என்று தொடங்கியவர்,
"டேப்லெட் எல்லாம் வேணாம் த்வனிமா. நீ ஹெல்திய சாப்டு அதுவே போதும்… இந்த இந்த இட்லிய மெதுவாகக் கொஞ்ச கொஞ்சம சாப்டு, வெறும் வாயிற இருக்காத" என்றவர் முகம் வாடி இருக்க, த்வனி விக்ரமை கண்கள் சுருக்கி முறைத்து பார்த்துக் கொண்டிருந்தாள்.
'எரும எரும… இதெல்லாம் திருந்தவே திருந்தது. மூஞ்சப்பாரு நல்லா சப்பாத்தி கள்ளி மாதிரி' என்று முனுமுனுக்க, விக்ரமுக்கு த்வனி தன்னைத் திட்டுகிறாள் என்று நன்றாகப் புரிந்தது.
"எனக்கு முக்கியமான கால் பேசணும் நா… நான் போறேன்" என்றவன் வேகமாக அங்கிருந்து ரெண்டடி எடுத்து வைத்தவன், நின்று மெதுவாகத் திரும்பி பார்த்து,
"எ… என… எனக்கும் சாம்பார் இட்லி வேணும்… " என்றதை சத்தமாகச் சொன்னவன் கடைசியாக, "எடுத்து வைங்க ம்மா" என்றதை மட்டும் வாய்க்குள் முனங்கிவிட்டுப் போக, அது சௌந்தர்யா, த்வனி காதில் தெளிவாக விழுந்தது.
சட்டெனப் போகும் அவனைத் திரும்பி பார்த்த சௌந்தர்யா,
"த்வனி…"
"த்வனி…"
"அ…"
"அவன் இப்ப ம்மானு சொன்னான் இல்ல… உனக்குக் கேட்டுச்ச?? என்னை அம்மானு சொன்னான் த்வனி… அம்மானு சொன்னான்" என்ற சௌந்தர்யாவின் முகம் முழுவதும் சிரிப்பில் மலர்ந்து இருக்க, அவர் கண்களில் இருந்து கண்ணீர் மடை திறந்த வெள்ளம் போல் கெட்டியது. அவரின் மகிழ்ச்சியைப் பார்த்த த்வனிக்கும் உள்ளுக்குள் அத்தனை நிறைவு.
விக்ரம் மொட்டை மாடியில் வானத்தை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தவன் சிந்தனை முழுவதிலும் த்வனி சொன்ன வார்த்தைகளே ஓடியது.
"அவ சொன்னது உண்மைதான். அப்பா இல்லாம, எல்லாமும் போய், கையில் குழந்தைய இருந்த, என்னையும் வச்சிட்டு அவங்க தனிய எல்லாத்தையும் எதிர்த்து நின்னு இந்த நிலைமைக்கு வந்திருக்காங்க. சின்ன வயசில் நான் அவங்களை மிஸ் பண்ண மாதிரி தானா அவங்களும் என்னை மிஸ் பண்ணி இருப்பாங்க. இருந்தும் எனக்காக எல்லாத்தையும் செஞ்சாங்களே. என்னோட எதிர்காலம் நல்லா இருக்கணும்னு தானா ஓடி ஓடி உழைச்சு இன்னைக்கு என்னை இந்தச் சொசைட்டில இந்த இடத்தில் உக்காரு வச்சிருக்காங்க… எனக்காக ஒவ்வொன்றையும் பாத்து பாத்து செஞ்சிருக்காங்க. கடைசிக்கு எனக்காக அந்த ராட்சசி வீடு தேடி போய் ரென்யாவை எனக்குக் குடுக்கச் சொல்லி கேட்டு கெஞ்சி இருக்காங்க, ரென்யாவை தேடி யூ.எஸ் வரை போயிருக்காங்க, த்வனி இங்க வந்ததும் எங்க உண்மை தெரிஞ்சு எனக்கு எதாவது ஆகிடுமோன்னு ஒவ்வொரு நாளும் துடிச்சிட்டு இருந்திருக்காங்க… அப்டிபட்டவாங்களுக்கு நான் திருப்பித் தந்தது எல்லாம் வெறும் கோபமும், வெறுப்பு தான். பாவம் அவங்க நான் அவங்களைக் கண்டுக்காம உதாசீனப் படுத்தும் டைம் எல்லாம் எப்டி ஃபீல் பண்ணி இருப்பாங்க... ஏன் இவ்ளோ நாளா எனக்கு இதெல்லாம் புரியாம போச்சு. அந்த ராட்சசிக்கு புரிஞ்சது கூட எனக்குப் புரியலயே என்று நினைக்க நினைக்க விக்ரமுக்கு தன்மேலே கோவம் கோவமாக வந்தது.
அடுத்தடுத்து வந்த நாட்களில் விக்ரம் அதிகமாகச் சௌந்தர்யாவுடன் பேசவிட்டாலும், அவரைப் பார்க்கும் போது சிரித்தான இல்ல என்று சந்தேகம் வரும் அளவுக்கு உதட்டை சுழித்து வைத்தான். அவனின் அந்தச் சின்ன முயற்சியே சௌந்தர்யாவுக்கு அப்போதைக்கு போதுமானதாக இருந்தது. எடுத்த எடுப்பிலேயே விக்ரம் முழுதாக இறங்கி வருவது கஷ்டம் என்று த்வனியும் இப்போதைக்கு இது போதும் என்று விட்டு விட்டாள்.
அன்று ஃபோனில் த்வனி கத்தி பேசிக்கொண்டிருக்க அந்தப் பக்கம் எந்தப் பதிலும் இல்லை.
"ஏய் பேசுடி… இப்டி வாயமூடிட்டு இருந்த என்ன அர்த்தம்? நான் கொஞ்ச நாள் உன்னைக் கண்டுக்காம விட்டதும், உனக்குக் கொம்பு மொளச்சிடுச்சு இல்ல… வந்தேன்னுவை உன்னையும் அவனையும் சேர்த்து தூக்கிப் போட்டு மிதிப்பேன். ஒழுங்க வீட்ல சொல்ற மாப்பிள்ளையைக் கட்டிக்கிட்டு நல்லா வாழ்ற வழிய பாரு… இல்ல அந்த மண்டையில கலர் அடிச்ச பரதேசிய தான் கட்டிப்பேன், இல்லாட்டி அவன் செத்துடுவான்னு கதை பேசிட்டு இருந்தேன்னு வையேன்... அவன் என்ன சாகுறது வெங்காயம்... நானே ஆள் செட் பண்ணி அவனைப் போட்டுத் தள்ளிடுவேன் பாத்துக்க... ஒழுங்க அப்பாகிட்ட கல்யாணத்துக்குச் சம்மதம்னு சொல்லு இல்ல நடக்குறதே வேற… உனக்கு ரெண்டு நாள் தான் டைம்" என்று த்வனி மிரட்ட, ஆருஷி தன்னை த்வனியிடம் போட்டுக்கொடுத்த ஷாலினியை முறைத்தபடி உர்ரென அமரந்திருந்தாள்.
"ஏய் நான் பேசிட்டு இருக்கேன். அங்க என்னடி சத்தத்தையே காணும்"
"உன்கிட்ட போட்டுக்குடுத்துட்டேன்னு, என்னை மொறச்சிட்டு இருக்க த்வனி இவ"
"அடிங்கு இவ பண்றது பூரா தப்பு இதுல உன்னை மொறக்கிறாளா… அடியேய் ஆரு… ஒருவேளை அவ இத என்கிட்ட சொல்லாம விட்டிருந்த மட்டும் எனக்கு விஷயம் தெரியாம போய்டுமா என்ன… சும்மா ஷாலுவ மொறச்சிட்டு திரியாம… ஒழுங்க நான் சொல்றதை கேளு. இல்ல பிச்சிடுவேன்."
"நான் இல்லாடி அவன் செத்துடுவேன்னு சொல்றான்டி…" என்ற ஆருஷி புலம்ப,
"செத்து தொலையட்டும் சனியன்… ஒன்னும் குடி முழுகி போய்டாது. அது செத்த இந்த நாட்டுக்கு அவன் வீட்டுக்கு, உனக்கு எல்லாத்துக்கும் நல்லது. ஆனா, அந்த நாய் அந்த மாதிரி நல்ல காரியம் எல்லாம் செய்யாது. நீ தேவையில்லாம அவன் பத்தி யோசிக்காத. உனக்கு ரெண்டு நாள் தான் டைம். ஒழுங்க நிச்சத்துக்கு ஒத்துக்க… அப்பா என்ன உன்னை முன்னபின்ன தெரியாத யாரயோவ கட்டிக்கச் சொல்றாரு… அவர் உன் காலேஜ் சீனியர். உனக்கும் அவரை நல்லா தெரியும். நல்லா ஜாப்ல இருக்காரு, நான் விசாரிச்ச வரைக்கும் ரொம்ப நல்லா மனுஷடி அவரு. உன்னோட கேனத்தாம லவ்வை சொன்னாப்ப கூட ஆருக்கு எவ்ளோ சாப்டான மனசுனு சொன்னாரு தெரியுமா… அவரைக் கட்டிக்க உனக்குக் கசக்குது… உனக்கெல்லாம் எனக்கு வாச்ச மாதிரி ஒருத்தன் வரணும்டி அப்ப தான் உனக்கெல்லாம் புத்தி வரும்." என்றவள்,
"ஏய் ஷாலு என்னால கத்த முடியல, மூச்சு வாங்கது. நீ அவளைப் பாத்துக்க… எனக்கு நாளைக்குச் செக்-ஆப், அது முடியட்டும். நான் அந்தக் கலர் மண்டையனை கவனிக்குறேன்." என்றவள் ஃபோனை வைத்தாள்.
த்வனி கன்னத்தில் கை வைத்தபடி ஆருஷியை பார்த்துக் கொண்டிருக்க, ஷாலினி சின்னச் சிரிப்போடு த்வனி, ஆருவை பார்த்துக் கொண்டிருந்தாள்.
"எப்டிடி? எப்ப இதெல்லாம் நடந்தது?" என்று த்வறி ஆச்சரியமாகக் கேட்க,
"எல்லாம் உன்ற வூட்டுகாரர் செய்த மாயம் தான்" என்ற ஆருஷியை முறைத்தாள் த்வனி.
"இன்னொருவாட்டி அப்டி சொன்ன வாய ஒடச்சிடுவேன் பக்கி. ஒழுங்க நடந்ததைச் சொல்லுடி"
"அது ஒன்னு இல்ல த்வனி, நீ அன்னைக்கு எங்க கூடப் பேசிட்டு இருந்நது, அதுல நீ டென்ஷன் ஆகி கத்தினது எல்லாத்தையும் விக்ரம் அண்ணா கேட்டிருப்பாங்க போல" என்ற ஷாலினியை டக்கென்று நிமிர்ந்து பார்த்த த்வனி,
"ஏதே!! விக்ரம் அண்ணாவா… இதென்னடி புதுசா… எப்ப இருந்து இது?" என்ற த்வனியை பார்த்து ஷாலினி, ஆருஷி இருவரும் கிண்டலாகச் சிரித்து,
"எப்ப அவரு உன்னைக் கட்னரே அப்பல இருந்து தான். இது தானா ஒலக வழக்கம்" என்று இருவரும் கண்ணடிக்க, த்வனி அவர்கள் இருவர் தலையிலும் நங்கென்று குட்டு வைத்தாள்.
"ஒழுங்க நடந்ததைச் சொல்லிட்டு எழுந்து ஓடிடுங்க... இல்ல காபில பேதி மாத்திரை கலந்து தரச் சொல்லிடுவேன்" என்று செல்லமாக மிரட்ட,
"இல்ல த்வனி நீ டென்ஷனா கத்தினதப் பாத்து அவர் உடனேயே எனக்கு ஃபோன் பண்ணி வரச் சொன்னாரு. நானும் இவள கூட்டிட்டு விக்ரமை ஆபிஸுக்கு போனேன்."
விக்ரம், வருண் இருவரும் அமரந்திருக்க, ஷாலினியும் ஆருவும் அவர்களுக்கு எதிரில் அமர்ந்திருந்தனர்.
"என்ன ஷாலினி என்ன பிரச்சனை? அவ ஏன் ஃபோன்ல அவ்ளோ டென்ஷன கத்திட்டு இருந்த… இந்த மாதிரி நேரத்தில் அவ இப்டி டென்ஷனாகக் கூடாதுன்னு உங்களுக்குத் தெரியாத?" என்று குற்றம்சாட்டும் பார்வை பார்க்க, ஷாலினி திரும்பி ஆருவை முறைக்க, ஆரு தலையைக் குனிந்து கொண்டாள்.
"என்னம்மா என்ன ப்ராப்ளம்… எதுவா இருந்தாலும் எங்ககிட்ட சொல்லுங்க… அவளை டென்ஷன் பண்ணாதீங்க" என்ற விக்ரமின் குரலில் இருந்தது வேண்டுகோளா, இல்லை உத்தரவ என்று பெண்களுக்குப் புரியவில்லை.
"ஏய் ஷாலு அவன் தான் கேட்டு இருக்கான் இல்ல… பதில் சொல்றதுக்கு என்ன… ஏன் ரெண்டு பேரும் வாயமூடிட்டு இருக்கீங்க… புள்ளதாச்சி பொண்ணைப் போய் ஏன் டிஸ்டர்ப் பண்றீங்க… இவன் ஒருத்தன் அவள இம்ச பண்றது பார்த்ததா… நீங்க வேற அந்த லிஸ்ட்ல சேரப்போறீங்களா" என்று வருண் சேம் சைடு கோல் போடா, விக்ரம் வருணை முறைக்க, ஷாலிக்குச் சிரிப்பு வந்துவிட்டது.
"அது ஒன்னு இல்ல சார்" என்று ஷாலினி இழுக்க,
"சார்னு எல்லாம் கூப்டாத ஷாலு, பேர் சொல்லி கூப்டு, இல்ல அண்ணானு கூப்டு" என்றவனை ஆச்சரியமாகப் பார்த்த ஷாலு, ஆருஷி பற்றி அனைத்தையும் சொல்லி முடிக்க, அனைத்தையும் கேட்ட, விக்ரமும் வருணும் ஒரு நிமிடம் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தவர், அடுத்த நொடி பக்கெனச் சிரிந்துவிட்டனர்.
"இவளுக்கு மட்டும் எப்டி தான் எல்லாப் பிரெண்ட்ஸும் ஒரே மாதிரி இருக்காங்களே" என்று விக்ரம் சிரிக்க, முதல் முதலில் அவனைச் சிரிப்பதை பார்த்த ஷாலு, ஆருவுக்கு அது புதிதாக இருந்தது.
"இங்க பாரு ஆரு… நீ லவ் பண்ணவன் மத்தவங்களு தப்ப இருந்தாலும், உனக்கு மட்டும் கரெக்ட்ட, உன்னை உண்மைய லவ் பண்றவன இருந்த கண்டிப்பா அவ இதுக்குத் தடை சொல்லி இருக்கமாட்ட… அதுக்கு நானும் ரென்யாவுமே பெரிய ஆதாரம். நான் ரென்யாவ உண்மைய விரும்புகிறேன்னு தெரிஞ்ச அப்புறம், அவளுக்கு என்னைச் சுத்தம புடிக்காட்டியும், அவ ஃப்ரண்ட் சந்தோஷத்துக்காக எங்க லவ்வை எத்துக்கிட்டவ அவ… பட், அவ நெனச்ச மட்டும் போதுமா… நானும் நெனைக்கனுமேன்னு அந்தக் கடவுள் எங்கள பிரிச்சிட்ட" என்றவன் கண்களில் கண்ணீர் வழிய, அதைத் துடைத்தபடி ஆருவை பார்த்தவன்,
"ஐ நோ ஹெர் வெரி வெல் ஆரு. இதுல அவ சொல்றது தான் சரிய இருக்கும். அதை நான் இப்பவே ப்ரூஃ பண்றேன்… வாங்க" என்று ஷாலு ஆருஷியை இழுத்துக்கொண்டு ஆருவை லவ் பண்றேன் என்று சுத்தும் அந்தக் கலர் மண்டையன் முன் வந்து நின்றனர் நால்வரும்.
"டேய் விக்ரம், த்வனி இவனை வேணாம்னு சொல்றதுல தப்பே இல்லாடா… அவனும் அவன் தலமுடியும். கலர் கலரா பாக்கவே கன்றாவியா இருக்குடா விக்ரம். இந்த ஆருக்கு போயும் போயும் இவனைய புடிச்சிருக்க… ச்சை மட்டமான டேஸ்ட் டா இவளுக்கு" என்ற வருண் ஆருஷி முறைக்க,
"ஒய் என்ன முறைப்பு வேண்டி இருக்கு உனக்கு… பைத்தியக்காரன் மாதிரி மண்ட பூரா கண்ட கலரையும் அடிச்சி கலர் குருவி மாதிரி இருக்கான். இவனை வேற என்னனு சொல்றது." என்ற விக்ரம் அந்தக் கலர் குருவியின் கன்னத்தில் அழுத்தமாக ஒரு அறை ஒரே ஒரு அறை தான் விட்டான். மேட்டர் சால்வ்.
