நிஜம் 27
நிஜம் 27
விக்ரமை ஹாஸ்பிடலில் காணும் என்று தேடி திரிந்த வருண், என்ன செய்வது என்று புரியாமல், ஷாலினிக்கு ஃபோன் அடித்தான்.
முந்தைய நாள் இரவு வரை ஹாஸ்பிடல் இருந்த ஆருஷியும், ஷாலினியும் விக்ரம் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று தெரிந்த பின்னர், இரவு ஒரு மணிக்கு தான் த்வனி வீட்டுக்கு திரும்பி வந்தனர்.
பத்து நாட்களாக விக்ரம் தேடித் திரிந்து, இந்த ரெண்டு நாட்களில் அவன் பிழைப்பபானா மாட்டானா என்று பலவிதமான யோசனையில் இருந்து விலகி நிம்மதியாக உறங்கிக்கொண்டிருந்த ஷாலினி தூக்கத்தை காலை வேலையிலேயே அவள் ஃபோன் சிணுங்கி அவள் தூக்கத்தைக் கெடுத்தது. அதில் கடுப்பின் உச்சத்திற்குச் சென்ற ஷாலினி, யார் அழைத்தது என்று கூடப் பார்க்காமல் ஃபோன் எடுத்துக் காதில் வைத்து, "ஏவன்டா அது நடுராத்திரியில கால் பண்ற பரதேசி" என்று கத்திவிட,
"ஏய் பாத்து பேசு… மணி ஆறகுது, இது உனக்கு நடுராத்திரிய?" என்று வருணும் கடுப்பானான்.
"ஏன்டா எரும டைம் சொல்ல தான் கால் பண்ணிய, கருமம் புடிச்சவனே… என்கிட்ட பெரிய வால் கிளாக் இருக்கு அதுல நான் டைம் பாத்துக்கேன். நீ மூடிட்டு ஃபோன் வைடா நாதாரி" என்றவள் ஃபோன் அனைத்து விட்டு மீண்டும் இழுத்துப் போர்த்திக்கொண்டு உறங்கிவிட,
"பைத்தியம்... தூக்க கலக்கத்தில் யாரு பேசுறதுனு கூடத் தெரியம பேசுது போல" என்று தலையில் அடித்துக்கொண்டே, மீண்டும் அவளுக்கு அழைத்தான்.
மீண்டும் ஃபோன் மணி அடித்ததில் கடுப்பான ஷாலி விருட்டென எழுந்து அமர்ந்தவள், ஃபோன் எடுத்து பார்க்க, வருண் தான் அழைத்திருந்தான்.
"டேய் என்ன தான்டா உங்க பிரச்சனை, இப்ப தான் ஒருத்தன் ஃபோன் பண்ணி டைம் என்னன்னு சொல்லி தூக்கத்தைக் கெடுத்தான். இப்ப நீயா..." என்று ஷாலினி பாவமாகக் கேட்க, வருணுக்கும் அவளை நினைத்துக் கஷ்டமாகத் தான் இருந்தது.
"ஏய் லூசு, முதல்ல கால் பண்ணதும் நான் தான். நீதான் யார் ஃபோன் பண்றண்ணு கூட பாக்காம கண்டதை பெனத்திட்டு இருந்த..."
"ஏம்பா உனக்கும் உன் நண்பனுக்கும் எங்க தூக்கத்தைக் கெடுக்குறதில் அப்டி என்னப்பா ஒரு அல்ப சந்தோசம். நேத்து வரை ஹாஸ்பிடலே கதின்னு இருந்துட்ட இப்ப தான் வீட்டுக்கு வந்து கொஞ்ச நேரம் தூங்கலாம் படுத்தோம். அது புடிக்கலய உனக்கு… இப்ப எதுக்கு இவ்ளோ காலையில கால் பண்ணிருக்க?" என்று சொருகும் கண்களைக் கசக்கியபடி கேட்டவள், வருண் சொன்ன செய்தியில், "ஏதேய்" என்று கத்தியே விட்டாள்.
ஷாலுவின் அலறல் சத்தம் கேட்டு அடித்துப் பிடித்து எழுந்த ஆரு, "ஏய் என்னடி ஆச்சு? எதுக்கு நைட் நேரத்தில் இப்டி கத்துற, த்வனி பிரக்னன்ட்டா இருக்க மறந்துபோச்ச? நீ இப்படிக் கத்தி அவ என்னமோ ஏதோன்னு பயந்து அலற போறா" என்று ஷாலினியை திட்ட, ஷாலினி திரும்பி ஆருவை பார்க்க, பேய் அறைந்தது போல் முழித்து முழித்துப் பார்த்துக் கொண்டிருந்த ஷாலினியை பார்த்து ஆருஷி பயந்தே விட்டாள்.
"ஏய் என்னடி… ஏன் உன் மூஞ்சு இப்டி கெடக்கு… என்னடி? என்று ஆரு பதற,
"மேட்டரை சொன்ன நீயும் இப்டி தான் பேய் அறஞ்ச மாதிரி முழிப்ப" என்ற ஷாலினி, "விக்ரமை ஹாஸ்பிடல் காணுமாம்" என்று சொல்ல ஆருஷிக்கு தலை சுற்றியது.
"என்ன கெடுமைடி இது. இப்ப தான் பத்து நாளா தெருத்தெருவ, ரோடு ரோட, சந்து பொந்தெல்லாம் விக்ரமை தேடிட்டு திரிஞ்சோம். நேத்து தான் அவருக்கு ஒன்னு இல்லனு கொஞ்சம் நிம்மதிய இருத்தோம். அதுக்குள்ள எல்லாக் கோட்டை அழிச்சிட்டு முதல்ல இருந்த போட்ட எப்படிடி… இனிமே தேடி திரிய சென்னையில் ஒரு இடம் கூட இல்லயே" என்று ஆரு புலம்ப,
"நீயே இப்படிச் சொன்ன என்னோட நெலமய யோச்சு பாருடி. வரவர நான் டாக்டர்னுறதே எனக்கு மறந்துடும் போல இருக்கு, முழுநேரமும் ரியாலிட்டி ஷோ ப்ரொடியூசர் மாதிரி அடுத்து என்ன பிரச்சனை, அடுத்து என்ன பிரச்சனைனு போகுதுடி என் மைண்ட்… முடியல" என்று வாய்விட்டு புலம்பி ஷாலினி, "சரி எழுந்துவா, த்வனிகிட்ட சொல்லிட்டு வருணை பாக்க போவோம்." என்றவள்,
"எங்கே செல்லும் இந்தப் பாதை யாரோ யாரோ அறிவாரே" என்று பாடிக்கொண்டே த்வனி அறைக்குச் செல்ல, அந்த அறை காலியாக இருந்தது.
"ஏய் இவ எங்கடி போனா… அதுவும் இவ்ளோ காலையில அவ முழிச்சிருக்க வாய்ப்பே இல்லயே. நைட் நான் குடுத்த மாத்திரைக்கு அவ எப்டிம் குறைஞ்ச பத்து மணி வரைக்குமில்ல தூங்கிட்டு இருக்கணும்." என்ற ஷாலினி ஆருவை பார்க்க,
"ஏய் ஷாலு அங்க பாருடி மெயின் டோர் திறந்து கெடக்கு" என்றதும் இருவருக்கும் உள்ளுக்குள் பயம் பற்றிக் கொண்டது.
ஷாலினி ஆஷாவுக்கு ஃபோன் போட்டு த்வனி அங்கு வந்தாளா என்று கேட்க, "எது வந்தாளாவ… அப்ப அவ அங்க இல்லயா?" என்று பதறிய ஆஷா அடுத்த ஐந்து நிமிடத்தில் ஜெகனை இழுத்துக்கொண்டு த்வனி வீட்டுக்கு வந்தவள், விக்ரமையும் காலையில இருந்து காணும் என்று தெரிந்ததும், " மறுபடியுமா... ஷப்பா…முடிலடா சாமி…" என்று அமர்ந்துவிட்டாள்.
வருண் தவ்னியை வீட்டில் காணும் என்று ஷாலினி சொன்னதைக் கேட்டவன், "எது அவளையும் காணுமா?" என்றவன் புருவம் சுருங்க, "ஷாலு நீங்க எல்லாரும் விக்ரம் வீட்டு வந்துடுங்க" என்றவன் ஃபோனை கட் செய்துவிட்டு சௌந்தர்யாவுக்கு அழைக்க, அவர் மருந்து மயக்கத்தில் நல்லா உறக்கத்தில் இருந்தால் ஃபோனை எடுக்கவில்லை.
காலை ஒன்பது மணிபோல் அயந்து உறங்கிக்கொண்டிருந்த த்வனி புரண்டு படுக்க, அவள் வாயிற்றில் கனமாக எதையே உணர்ந்தவள் விழுந்து பார்க்க, அவள் முகத்துக்கு நேராக, அவள் தலையணையில் கை வைத்தபடி, கட்டில் ஓரத்தில் தரையில் அமர்ந்தபடியே, ஒருகை த்வனி வாயிற்றில் போட்டுக் கொண்டு உறங்கும் விக்ரமின் முகம் தெரிந்தது.
த்வனிக்கு முதலில் தன் கனவு எதுவும் காணுகிறேனே என்ற குழப்பம் வர, அவள் கண்களை நன்றாகத் திறந்து பார்த்தவளுக்கு உள்ளுக்குள் பற்றிக்கொண்டு வந்தது. பட்டென அவள் மேல் இருந்த அவன் கை தட்டிவிட, அதில் கண்விழித்தான் விக்ரம்.
த்வனி கோவமா கட்டில் இருந்து குதித்து இறங்க, "ஏய்" என்று கத்தியபடி எழுந்து நின்ற விக்ரம் அவள் கையை இறுக்கிப் பிடித்தான்.
"கொஞ்சமாச்சும் அறிவிருக்காடி உன்ககு… இப்டி சட்டுன்னு எழுந்துக்குற… உள்ள இருக்க ரென்யாக்கு வலிக்காது… மெதுவா இறங்க என்ன கேடாம் உனக்கு… மரியாதைய உன்னோட எல்லாத் திமிருதனத்தைம் மூட்டைகட்டி குப்பைல போட்டுட்டு ஒழுங்க இரு… இதுமாதிரி நீ இன்னொரு தடவை குதிக்குறது இல்ல, வேகமாக நடக்குறதை பாத்தாலும்… நான் என்ன செய்வேன்னு எனக்குத் தெரியாது" என்றவனைக் கண்கள் சுருக்கி தீயாக முறைத்தாள் த்வனி.
"அடிங்கு… எங்க வந்து யாரை மெரட்டறடா நீ? என்னைக் கேள்விக் கேக்க நீயாரு டா ராஸ்கல்… உனக்கு எவ்ளோ திமிர் இருந்த என் பெட்ரூம்குள்ள வந்திருப்பா, நான் உன்னைக் கொல்றதுக்கு முன்ன ஒழுங்க வெளிய ஓடி போய்ட்டு" என்று அடி தொண்டையில் இருந்து கத்தியவள் முன் தண்ணீர் பாட்டிலை நீட்டியபடி நின்றான் விக்ரம்.
"கத்துனா கத்துல தொண்ட வறண்டிருக்கும் இந்த இத குடி…" என்றதும், ஏற்கனவே உள்ளுக்குள் எரிந்து, காதில் புகை விட்டுக் கொண்டிருந்தவளுக்கு, எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றுவது போல் விக்ரம் தண்ணி பாட்டிலை நீட்ட அதைத் தட்டிவிட்டு நகர,
விக்ரம் அவள் கையைப் பிடித்துத் தன் புறம் இழுத்து, "நீ கேட்ட முதல் கேள்விக்குப் பதில் நான் உன்னை இப்ப வரை மிரட்ட எல்லாம் இல்ல, ஜஸ்ட் உனக்குச் சொல்லிட்டு இருக்கேன் அவ்ளோதான். ஒருவேள நீ நான் சொல்றதை கேக்காம போன, அப்ப மிரட்டுறது மட்டும் இல்ல, உன்னை வழிக்குக் கொண்டு வர என்ன செய்யணுமோ அத செய்வேன். உனக்கே தெரியும் நான் நெனச்சது நடக்க, நான் எந்த லெவலுக்கும் போவேன்னு, தென் நெக்ஸ்ட் கொஸ்டின் உன்னைக் கேள்வி கேக்க நான் யாரு…" என்று அவளை ஊற்று பார்த்தவன், அவள் நைட் ட்ரெஸுக்குள் இருந்த தங்க செயினில் கோர்த்திருந்த, தாலியை எடுத்து வெளியில் போட்டு, "ஆக்கார்டிங் டூ திஸ், ஐ ஆம் யூவர் லிகலி வெட் ஹஸ்பண்ட். அடுத்தக் கேள்வி உன் வீட்ல இருந்து வெளிய போன்னு சொன்ன,.. தட்ஸ் ராங். இது உன் ஃப்ளாடும் இல்ல உன்னோட ரூமும் இல்ல" என்றதும் த்வனி வெகுவாக அதிர்ந்தவள், கண்களை ஒரு உருட்டு உருட்டி பார்க்க, அது அவள் ரூம் இல்லை. ஆனா, அது யார் வீடென்றும் அவளுக்கு விளங்க வில்லை.
"டேய் என்னை எங்கடா தூக்கிட்டு வந்திருக்க?" என்று அவன் சட்டையைப் பிடிக்க, விக்ரம் இழுந்து மூச்சு விட்டு, "இது என்னோட வீடு, நீ இப்ப நிக்குறது என்னோட பர்சனல் பெட் ரூம்" என்றது தான் த்வனிக்கு தூக்கிவாரி போட்டது.
அவள் கொஞ்ச நாள் அந்த வீட்டில் இருந்திருக்கிறாள் தான், ஆனால் இதுவரையில் அவள் விக்ரம் அறைக்குச் சென்றது இல்லை. அவள் மட்டும் அல்ல, சௌந்தர்யா கூட அந்த அறைக்குள் சென்றது இல்லை. ஒரே ஒரு வேலையாள் மட்டும் அந்த அறைக்குள் வந்து சுத்தம் செய்துவிட்டு போக மட்டுமே அனுமதித்து இருந்தான் விக்ரம்.
"ஏது உன் ரூம்ம… யாரை கேட்டுடா என்ன இங்க கூட்டிட்டு... ச்சீ இல்ல தூக்கிட்டு வந்த..." என்றவள் அப்போது தான் கவனித்தால் நேற்று இரவு அவள் போட்டிருந்த நைட் டிரஸுடன் அவள் இருப்பதை.
"டேய் ஆமா, நான் எப்டிடா இங்க வந்தேன். நேத்து நைட் என் ரூம்ல தானே தூங்கிட்டு இருந்தேன். இப்ப இங்க இருக்கேன். எப்படா என்னைத் தூக்கிட்டு வந்த?" என்று அவள் முறைக்க,
"இன்னைக்குக் காலையில மூணு மணிக்கு" என்று அவன் அசல்ட்டாகச் செல்ல, த்வனிக்குப் உள்ளே பற்றிக்கொண்டு எரிந்தது.
"டேய் நீ மனுஷன் தானாடா… உனக்கு மனசாட்சியே இல்லயா… கர்ப்பமா இருக்கப் பொண்ணுகூடப் பாக்கமா இப்டி நடுராத்திரியில வீடுபுந்து தூக்கிட்டு வந்திருக்கீயே… எனக்கோ பாப்பாக்கோ எதாவது ஆகி இருந்த என்னடா ஆகுறது?" என்று சட்டை பிடித்து இழுத்து அவன் கன்னத்தில் அடி வெளுக்க, கொஞ்சமும் அசராமல் நின்றான் விக்ரம்.
"அதெப்படி எதாவது ஆகும். உன் வீட்ல இருந்து இங்க வரை, உன் தூக்கம் கலையக்கூடாதுனு, நான் பத்திரமா உன்னை என் கைலயே தானா தூக்கிட்டு வந்தேன். அப்டி இருக்க உங்க ரெண்டு பேருக்கும் எப்டி எதுவும் ஆகும்." என்றவனை அதிர்ச்சியில் விழி விரிய பார்த்தாள் த்வனி.
"என்ன சொன்ன அங்க இருந்து இங்க வரை என்னைக் கையில் தூக்கிட்டு வந்திய!?" என்று உள்ளே சென்ற குரலில் கேட்க,
"ஆமா தூக்கிட்டு தான் வந்தேன். நான் உயிரோட இருக்க வரை என்னோட ரென்யாக்கு எதுவும் ஆக விடமாட்டேன். மறுபடியும் நான் அவள இழக்க மாட்டேன்" என்றவன் குரல் கணீர் என்று ஒலிக்க, த்வனிக்கு மீண்டும் ஒரு முறை அவன் லூசு தான் என்பது கன்ஃபார்ம் ஆனது.
"டேய் ஏன்டா? ஏன் இப்டி லூசு மாதிரி பண்ற… அங்க இருந்து இங்க கிட்டத்தட்ட மூணு கிலோமீட்டர் இருக்குமேடா… நைட் நேரத்துல அசல்ட்டாகத் தூக்கிட்டு வந்தேன்னு சொல்றீயே… நீ எப்பவும் இப்டி தான் இருப்பீயா, நார்மல் மனுஷன் மாதிரி எல்லாம் பிஹேவ் பண்ணவே மாட்டிய" என்று தலையில் அடித்துக் கொண்டாள்.
"நீ எக்கேடோ கெட்டு போ… என்னை எதுக்குடா இங்க தூக்கிட்ட வந்த?"
"நான் தான் சொன்னேனே, யூ ஆர் மை லிகலி வெட் வைஃப். சோ நீ என்கூடத் தான் இருக்கணும்" என்றவனை முறைத்தவள், "இத நான் நம்பணும் இல்ல" என்று திமிராகக் கேட்ட,
"அஃப்கோஸ் நாட்… அதை நீ நம்ப வேணாம். பட், எனக்கு என்னோட ரென்யா வேணும். அதுக்கு நீ வேணும். சோ நீ இங்க என் கண்பார்வையில் தான் இருக்கணும்" என்க,
அவனை அலட்சியமாகப் பார்த்தாள் த்வனி.
"ரியாலி… ஒரு விஷயத்தை நீ சொல்லி நானோ, நான் சொல்லி நீயோ அதைக் கேட்டுட்ட… இந்த உலகமே அழிஞ்சிடும்டா" என்று கதவை நோக்கி நடந்தவள், "இவன் கூட நான் இருக்கணும்… டாமிட், மை ஃபுட். இவன் சொல்றத நான் கேப்பேன்னு வேற நினைக்கிறான் பாரு" என்றபடி அவள் நகர,
"கண்டிப்பா கேப்ப, கேட்டு தான் ஆகணும்" என்றவன் குரல் இப்போது வேறு மாதிரி இருக்க, த்வனி சட்டென நின்றவள், மெதுவாகத் திரும்பி பார்க்க, அவன் கையில் இருந்த ஃபோனில், லயாவின் தாய், தந்தையை அவர்கள் வீடிலேயே கட்டிப்போட்டு வைத்திருக்கும் காட்சி படமாக ஓடியது.
த்வனி தீயாக விக்ரமை முறைத்தபடி அவன் அருகில் வ்நது, "ஏன்டா நீ திருத்தவே மாட்டிய… ஏற்கனவே அவங்க லயாவை இழந்து தவிச்சிட்டு இருக்காங்க, அது போதாதுன்னு இப்ப என்னை நினைச்சு வேற அவங்க மனவருத்தப்படணுமா… நான் உன்னை மாதிரி ஒருத்தனை கட்டிட்டு இருக்கேன்னு தெரிஞ்சலே அவங்க நிம்மதி போய்டும். இதுல கட்டிப்போட்டு வேற அவங்களை இம்சிக்குறீயா நீ… இப்டி எல்லாம் பண்ண நான் பயந்துவேன்னு வேற உனக்கு நெனப்பு… நீ லயா சம்பந்தப்பட்ட எதையும் எதுவும் செய்யமாட்டானு எனக்கு நல்லா தெரியும். நம்ம ரெண்டு பேரும் ஒத்துப்போற ஒரே விஷயம் அதான். சோ இந்தப் பூச்சிகாட்ற வேலை எல்லாம் என்கிட்ட வேணாம்" என்றவள் மீண்டும் திரும்பி நடக்க,
"உண்மை தான்… லயா சம்பந்தப்பட்ட எதையும் நான் எதுவும் செய்யமாட்டேன்…" என்றவன் அங்கிருந்த கத்தியை எடுத்து தன் கழுத்தில் வைத்து, "லயாவோட கடைசி ஆசை நான் உயிரோட இருக்கணும்குறது. இப்ப இந்த ரூம் வாசலை தாண்டி நீ ஒரு அடி வெளிய எடுத்து வச்சாலும், அடுத்த நிமிஷம் அவ ஆச நிராசை ஆகிடும்." என்று த்வனியை நேருக்கு நேர் பார்த்தவன்,
"நவ் தீ சாய்ஸ் இஸ் யூவர்" என்று சொல்ல, த்வனி செய்வதறியாது நின்றாள்.
விக்ரம் வீட்டு ஹாலில் அனைவரும் கூடி இருக்க, த்வனி விக்ரமை பார்வையால் வறுத்து எடுத்துக்கொண்டு இருந்தாள்.
"காலையில இவனை பெட்ல காணும்னு நான் எவ்ளோ பதறிபோய்ட்டேன் தெரியுமாம்மா… அந்த ஹாஸ்பிடல் பூர நாய் மாதிரி சுத்தி சுத்தி இவனைத் தேட்டிட்டு இருந்தேன். என்ன பண்றதுன்னு தெரியாம ஷாலுக்கு ஃபோன் போட்ட, அவ த்வனிய வீட்ல காணும்னு இன்னொரு குண்டை தூக்கிப் போடுறா… எனக்கு மண்டையே வெடிக்குற மாதிரி ஆகிடுச்சு… அப்றம் தான் ஒருவேளை இவன் த்வனி தூக்கிட்டு வந்திருப்பானோன்னு டவுட் வந்து ஷாலுவ எல்லாரையும் கூட்டிடு இங்க வரச்சொல்லி சொன்னேன். கடைசிய நான் நெனச்சது சரிபோச்சு" என்றவன் விக்ரமை முறைக்க, விக்ரம் அமைதியாக நின்றிருந்தான்.
"இது கொஞ்சம் கூடச் சரியில்ல விக்ரம், இப்டியா வீட்ல தூங்கிட்டு இருக்கப் பொண்ணை நடுராத்திரியில், சொல்லாம கொள்ளாம தூக்கிட்டு வர்ரது. புள்ளதாச்சி பொண்ணு தீடிர்ணு அவளைக் காணும்னு சொன்னது ஒரு நிமிஷம் எங்களுக்கு உயிரே போய்டுச்சு" என்ற ஆஷா அருகில் வந்தான் விக்ரம்.
"நீங்க, ஷாலினி, ஆருஷி அப்புறம் இவன்" என்று வருண் அருகில் சென்று அவன் கையைப் பிடித்து,
"உங்க எல்லாருக்கும் சாரி. நான் உங்க எல்லாரையும் ரொம்பவே கஷ்டப்படுத்து இருக்கேன். அதுக்குச் சாரி. அண்ட் தேங்க்ஸ்… ஒரு கஷ்டமான நேரத்தில் நீங்க எல்லாரும் என்கூட நின்னதுக்கு… இவங்க என்னைப் பொத்ததுக்கு, இவன் என்னோட பழகின பழக்கத்துக்கு என்னோட இருந்தாங்க. அது ஒருவகையில் அவங்க கடமை. பட், நீங்க மூணு பேரும்… அதுவும் நான் இவளுக்குப் பண்ணது எல்லாம் தெரிஞ்ச பிறகும் கூட, எனக்கு ஒன்னுங்கும் போது நீங்க மூணு பேரும் வந்தீங்க… அது ஏன்னு இப்ப வரை எனக்குப் புரியல." என்ற விக்ரம் ஆஷா, ஷாலினி, ஆருஷி மூவருக்கும் நன்றி சொல்ல,
"உங்க நன்றியும் வேணாம் பன்றியும் எங்களுக்கு வேணாம். ப்ளீஜ் சார். இனிமேயாச்சு, இன்னைக்கு மாதிரி சொல்லாம கொள்ள இப்டி அதிர்ச்சி வைத்தியம் எல்லாம் தரதீங்க பாஸ்... சத்தியமா முடியல… நாக்கு தள்ளளுது. அப்புறம் இனிமே எங்கயாது போறத இருந்த ஃபோன்ல லொகேஷனை ஆன் பண்ணி வைங்க சாமி., தேடி அலஞ்சு மாலல" என்ற ஆருஷியை பார்த்து அனைவரும் சிரக்க, விக்ரம் மட்டும் அவள் சொன்னதில் இருந்த வருத்தத்தைப் புரிந்துகொண்டு, "டோன்ட வொறி இனிமே இப்டி நடக்காது" என்றான்.
"எங்களுக்கு உங்க நன்றி எல்லாம் வேணாம் விக்ரம். நாங்க மூணு பேரும் உங்களுக்காக வந்ததுக்கு ரெண்டு காரணம் இருக்கு. ஒன்னு நாங்க மனிதாபிமானம் உள்ள மனுஷங்க, கண் முன்னாடி ஒரு ஜீவன் கஷ்டப்பட்டும் போது, எங்களுக்கு என்னன்னனு எல்லாம் எங்களால ஒதுங்கிப்போக முடியாது. தென் நெக்ஸ்ட் ரிசன்," என்று த்வனியை பார்த்து,
"நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழ விருப்புறீங்க இல்லன்றது உங்க ரெண்டு பேர் பர்சனல் இஸ்யூ, அதுல நாங்க தலையிட முடியாது. பட் ஃபார் காட்செக், இனிமேயாச்சும் அவளை நிம்மதியா இருக்க விடுங்க. இதை நான் வெறும் அவ ஃப்ரண்ட்ட மட்டும் சொல்லல, ஒரு டாக்டராவும் சொல்றேன். இப்ப அவளோட ஹெல்த் கண்டிஷனோட அவ மெண்டல் கண்டிஷனும் ஸ்டேபுள்ல இருக்கிறது ரொம்ப முக்கியம். சோ ப்ளீஸ்" என்று ஷாலினி விக்ரமை கையெடுத்து கும்பிட, விக்ரம் திரும்பி த்வனியை பார்த்தான்.
"சொந்த உறவுகள் விஷயத்தில் நீ ரொம்ப அன் லக்கி தான். பட் ஃப்ரண்ஸ் விஷயத்தில் நீ ரொம்ப லக்கிடி ராட்சசி" என்றவனை த்வனி ஒரு கர்வத்தோடே பார்க்க, விக்ரம் திரும்பி ஷாலினியை பார்த்து, "அவ வாயித்துல இருக்குறது என்னோட ரென்யா டாக்டர் மேடம். கஷ்டம், கவலை இல்ல, ஒரு துரும்பு கூட அவ பக்கத்துல போக விடமாட்டேன். யூ கேன் டிரஸ்ட் மீ"
"ம்ம்ம் வீ நோ விக்ரம். நீங்க ரெண்டு பேருமே ரென்யாவை கண்டிப்பா நல்லா பாத்துப்பீங்க, அது எங்களுக்கு நல்லா தெரியும். பிகாஸ் உங்க ரெண்டு பேருக்கும் ரென்யா முக்கியம். பட், எங்களுக்கு எங்க த்வனி தான் முக்கியம். எங்களுக்கு அவளா தான் தெரியும். அவளை மட்டும் தான் தெரியும். அவதான் எங்களுக்கு முக்கியம். அதையும் மனசுல வச்சிக்கோங்க" என்ற ஆஷா எழுந்து கொள்ள, வருண் அருகில் வந்த விக்ரம் அவனை இறுக்கி அணைத்துக் கொண்டான்.
இவ்வளவு நடக்கும் போதும் விக்ரம் சௌந்தர்யா அம்மாவிடம் மட்டும் எதுவும் பேசாமல் அவரைத் தவிர்க்க, த்வனி அதைக் கவனித்தாள்.
