அர்ஜூன் ஆத்யா Epilogue
அர்ஜூன் ஆத்யா
Epilogue
மெய் 25
ரியாவும் அபியும் கேட்ட கேள்வியில் ஆத்யா திகைத்து நின்றாள்.
"இந்த கௌதமுக்கு எவ்வளவு சொன்னாலும் புத்தியே வராது ?? இவன என்ன தான் செய்ரது?" என்று ஆத்யா பல்லை கடித்தாள்.
"ம்மா ஓகே சொல்லும்மா, எங்களுக்கு குட்டி பாப்பா வேணும்மா" என்று குழந்தைகள் அழுது அடம் பிடிக்க, ஆத்யா என்ன பதில் சொல்வது என்று புரியாமல் மண்டை குழம்பி நின்றாள்.
"இவங்க அப்பன் என் பக்கத்துல வர்ரதுக்கே பயந்து ஓடுறான். இதுல எங்க இருந்து புள்ள வரும். பொண்டாட்டி கோவமா இருந்தா இழுத்து கட்டி புடிச்சு, கிஸ் பண்ணி சமாதானப் படுத்துவானா, அதை விட்ட டீன் ஏஜ் பையன் மாதிரி இந்த கௌதம் கூட சேந்து வெட்டிய ப்ளான் போட்டுட்டு திரிஞ்சிட்டு இருக்கான் வெட்டிப்பய. இதுல நான் தனியா என்ன பண்ணமுடியும்" என்றவள் முகத்தில் தன்னவனை நினைத்து மெல்லிய வெட்கம் கலந்த புன்னகை மலர்ந்தது.
"ஐ ஆம் சாரிடு குட்டிஸ். நீங்க கேட்டது கெடைக்காது. உங்கப்பன் அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டான். குட்டிப் பாப்பாவும் இல்ல, ஒன்னு இல்ல ஓடுங்க இங்கிருந்து" என்று அதட்டி குழந்தைகளை அனுப்பிவள், நினைப்பு முழுவதும் அந்த குட்டிப் பாப்பா என்ற வார்த்தையை சுற்றியே இருந்தது.
" அஜ்ஜூ மாதிரி ஒரு பையன் பொறந்த எப்படி இருக்கும்" என்று அந்த முகம் அறியாத குழந்தைக்கு தான் கற்பனையில் உருவம் திட்ட தொடங்கினாள் ஆத்யா.
இங்கு கௌதம், சிவா, சங்கர் மூவரும் ரியா, அபி சொன்னதை கேட்டு விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருக்க, அர்ஜூன் கடுப்பாக மூவரையும் முறைத்துக் கொண்டிருந்தான்.
"என்ன அர்ஜூன் இது..?? ஆது உன்னை இப்படி அவமானம் செஞ்சிட்டாளே... வடிவேலு மாதிரி அதுக்கெல்லாம் நீ சரிப்பட்டு வரமாட்டேன்னு சொல்லிட்டாளே" என்ற விழுந்து விழுந்து சிரித்தான் கௌதம்.
"போதும்டா… பொறுத்தவரை போதும். போனபோது பொண்டாட்டி ஆச்சேன்னு கொஞ்சம் விட்டா, அவளுக்கு வாய் ஜாஸ்தி ஆகிடுச்சு. அவள நான் என்ன பண்றேன்னு பாருங்க" என்று வீரமாக பேசியவன் ஆத்யாவை தேடிப்போனான்.
"என்ன கௌதம், அர்ஜூன் இவ்ளோ வேகமாக போறனே... கோவத்துல ஆத்யாவை அடிச்சிடகிடிச்சிட போறான்" என்று சங்கர் பதற"
"அடப்போங்கப்பா… இவனாது ஆதுவ அடிக்கிறதாவது. அவ ஒரு பார்வை பாத்தா போதும் இவன் பொத்துன்னு விழுந்திடுவான். இவனுக்கு அவ்ளோ சீன்லாம் இல்லப்பா ப்ரீயா விடுங்க" என்றான் கௌதம்.
இங்கு அர்ஜூன் புயல் போல் ரூமுக்கு வந்தவன், "ஏன்டி உனக்கு எவ்ளோ திமிர் இருந்தா அப்படி சொல்லி இருப்பா? ஏதோ நம்ம பொண்டாட்டி தான, கொஞ்ச
பொறுத்து போலன்னு பாத்த நீ ரொம்ப ஓவரா துள்றா... நான் அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டானா.?? காட்டட்டுமாடி... நான் எதுக்கு சரிப்பட்டு வருவேன்னு காட்டட்டுமா... இப்ப நான் என்ன செய்றேன்னு பாருடி" என்றவன் அவள் தோள்களை பிடித்து தான் புறம் இழுத்து நிறுத்தி அவள் முகத்தையே பார்த்து நின்றான்.
ஆத்யா அவன் கண்களை நேருக்கு நேர் பார்த்து, "என்னடா பண்ணுவ என்று புருவம் உயர்ந்தி குறும்பும் திமிருமாக கேட்க, ஆர்ஜுன் ஒரு நிமிடம் அவளை தீயாக முறைத்தவன், அடுத்த நொடி,
"ப்ளீஸ்டி... என்ன பாத்தா உனக்கு பாவமாவே இல்லையா? ப்ளீஸ்டி இனி நான் ஒரு தப்பும் செய்ய மாட்டேன்டி. good boy ய இருப்பேன், உன்னை விட்டு எங்கயும் போக மாட்டேன். ப்ளீஸ்டி ப்ளீஸ்…" என்று குழந்தை போல் கொஞ்ச, அவனை ஒரு நிமிடம் ஆழமாக பார்த்த ஆத்யா, அடுத்த நொடி, காற்று கூட புகாதபடி இறுக்கமாக அவனை தன் நெஞ்சோடு சேர்த்து இறுக்கி அணைத்தாள்.
₹ஐ ஆம் சாரி அஜ்ஜூ… ஆம் ரியலி வெரி சாரி… நான் வேணும்னு எதுவும் செய்யலடா, எங்க என்னோட கோவம் உன்னை காயப்படுத்திடுமோன்னு பயந்து தான்டா உன்ன விட்டு தள்ளி" என்றவள் குரல் தாழ்ந்து விட, அதில் அவள் அழுகிறாள் என்று உணர்ந்த அர்ஜூன், அவள் முகத்தை நிமிர்த்தி அவள் கண்ணை பார்க்க, அதில் துளியாக நீர் கசிந்து இருந்தது.
"ஏய் தியா" என்று அதட்டி, அவள் கன்னங்களை தன் கைகளில் ஏந்தியவன், அவள் விழி நீரை துடைக்க, இதற்குமேல் என்னால முடியாது என்பது போல் கணவன் மார்பில் சரணடைந்தாள் ஆத்யா.
தன்னால் முடிந்தவரை அவனை இறுக்கி அணைத்துக் கொண்டாள். "நான் என்னோட அஜ்ஜூவ ரொம்ப கஷ்டப் படுத்திட்டேன் இல்ல... சாரிடா அஜ்ஜூ, ரொம்ப சாரி" என்று இன்னும் தன் அணைப்பை இறுக்கினாள்.
"என்னோட தியா வால யாரையும் கஷ்டப்படுத்த முடியாது. அதுவும் அவ அஜ்ஜூவை கஷ்டப்பட்டுத்தவே முடியாது" என்றவன் அவள் நெற்றியில் தன் முத்தத்தை பதித்தான்.
"நான் உன்ன ரொம்ப காயப்படுத்திட்டேன் அஜ்ஜூ, உனக்கு ரொம்ப வலிச்சிருக்கும் இல்ல..?" என்று அழுதவள் நாடியை பிடித்து தூக்கி தன்னை முகத்தை பார்க்க செய்த அர்ஜூன்,
"நீ என்னோட உயிர் தியா. அதோ மாதிரி தான் நான் உனக்கு. உன்னால என்னை வெறுக்கவும் முடியாது, மறக்கவும் முடியாதுன்னு எனக்கு நல்ல தெரியும்" என்றவன் அழகான சிரிப்போடு அவள் கன்னத்தை வருடி, அவள் இதழில் தன் இதழை இணைத்து கொண்டான் அந்த காதல் கள்வன் அவன்.
இருவரும் ஒரு அழகாக தருணத்தில் சிக்கி தங்களை இழந்து நிற்க, அவர்கள் இடையே இருந்த அனைத்து தடைகளும் விலகி, அழகிய வாழ்க்கை அவர்களை கை நீட்டி வரவேற்றது.
"ஒன்றரை வருடத்திற்கு பிறகு"
கௌதம் மடியில் அமைதியாக தூங்கிக் கொண்டிருந்தான் ஆத்யா, அர்ஜூனின் ஒரு வயது மகன் ஆர்யன், "என் பொண்ணுங்க தான் டாடி டாடின்னு உன் பின்னாடி சுத்துன்னா, இப்ப என்னோட பையனும் உன் கட்சில சேந்துட்டான்" என்று அர்ஜூன் சொல்லிக்கொள்ள,
"ஆமாடா பூஜாவ பெத்த அப்பா நானு... என் பேச்ச அவ கேக்குறதே இல்ல, அப்பா அப்பான்னு உன்கிட்டயே ஒட்டிட்டு திரியுது, அது கூட பரவாயில்ல, ஆறு மாசம் முந்தி பொறந்த இந்த சின்ன குட்டி ஆதினி... நீ தூக்குனா அமைதியா இருக்கா, நான் தூக்குனா விச்… விச்சுன்னு கத்தி ஊரையே கூட்ற, அது மாதிரி தான் இதுவும். போடா டேய் பொறாமை புடிச்சவனே, என்று திட்டிய கௌதம் முதுகில் ஒரு அடியை போட்ட அர்ஜூன், திவ்யா கையில் அழுதுகொண்டிருந்த ஆதினியை வாங்கி தன் தோளில் போட்டுக்கொண்டு தட்டிக்கொடுக்க, அவன் அணைப்பில் அமைதியாக உறங்கினாள் கௌதம், திவ்யாவின் செல்லமகள் ஆதினி.
இந்த ஒன்றரை வருடத்தில் அர்ஜூனின் அம்மா அருந்ததி இறந்துவிட, சொத்து முழுவதும் அர்ஜூன் பெயருக்கு வந்து விட்டது. ஆத்யா இந்தியாவில் செட்டில் ஆக வேண்டும் என்று விருப்பப்பட, அர்ஜூன் தன் மொத்த பிஸ்னஸையும் மீண்டும் பெங்களூர்க்கு மாற்றிக்கொண்டான். குழந்தைகளை பிரிக்க விரும்பாமல் அர்ஜூன், கௌதம் குடும்பத்தையும் பெங்களூர் வர சொல்லி கேட்க, கௌதமும் அதற்கு சம்மதித்து, மொத்த குடும்பமும் பெங்களூர் வந்து செட்டில் ஆகினர்.
அபிராமியும் சிவாவும் ஊட்டியில் இருக்க ஆசைப்பட்டு அங்கே இருந்து விட பூரணியும் சங்கரும் அவர்களுடன் ஊட்டியிலேயே இருந்து விட்டனர்.
அர்ஜூன், பிரியா பெயரில் ஒரு மருத்துவமனையை தொடங்கி ஆத்யா, கௌதம் பொறுப்பில் விட்டு விட்டான்.
ஏழை மக்களுக்கு நல்ல மருத்துவம் இலவசமாக கிடைக்க, கொஞ்ச நாட்களில் அந்த மருத்துவமனை பிரபலமானது. திவ்யாவும் அபி, ரியா, பூஜா படிக்கும் பள்ளியில் டீச்சராக சேர்ந்துவிட்டாள்.
வாரநாட்களில் ஹாஸ்பிடல், பிஸ்னஸ், ஸ்கூல் என்று சுற்றும் இளையவர்கள், வாரம் கடைசியில் குழந்தைகளுடன் ஊட்டியில் ஆஜர் ஆகிவிடுவர்.
அன்பான உறவுகள், மனம் நிறைந்த வாழ்க்கை, ஆசைக் குழந்தைகள் என்று அவர்கள் வாழ்க்கை அமுதம் போல் இனித்தது. இவர்கள் வாழ்க்கை எப்போதும் இப்படியே இனித்து இருக்க நாமும் இறைவனை வேண்டுவோம்.
…………………… முற்றும் …………………..