அர்ஜூன் ஆத்யா 24

 அர்ஜூன் ஆத்யா



மெய் 24


இரவு அர்ஜூனை கட்டிக்கொண்டு அபியும் ரியாவும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, மகள்கள் இருவரின் கை அணைப்பில் அர்ஜூனும் நன்கு உறங்கி இருந்தான். உறங்கும் மூவரையும் இதழில் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்த ஆத்யா மனதில் அப்படி ஒரு நிறைவு அந்த காட்சியில்.

குழந்தைகள் இருவரும் அடம்பிடித்து ஆத்யாவை அர்ஜூன் ரூமுக்கு இழுத்து வந்துவிட்டனர். உறங்கும் அர்ஜூன் அருகில் உட்கார்ந்து அவன் தலைமுடியை மெதுவாக வருடியவள், "சாரிடா அஜ்ஜூ, இவ்ளோ நாள் உன்னை தள்ளி வச்சு கஷ்டப்படுதினதுக்கு ரொம்ப சாரி, என் மனசுல உன் மேல நிறைய கோபமும், வருத்தமும் இருந்துது அஜ்ஜூ, எங்க நான் உன்னை நெருங்கி வந்தா என்னையும் மீறி என்னோட கோவத்தை உன் மேல காட்டிடுவேனோ, என்னையும் அறியாம உன்னை காயப்படுத்திடுவேனோன்னு   பயந்து தான் உன்னை விட்டு தள்ளியே இருந்தேன். ஆனா, இன்னைக்கு கௌதம் சொன்னது எல்லாம் கேட்ட பிறகு உன் மேல இருந்த எல்லா கோபமும் இருந்த இடம் தெரியாம எங்கயோ ஓடி போச்சுடா, உனக்கு ஒன்னு தெரியுமா அஜ்ஜூ.? நான் உன்னை விட்டு தள்ளி இருந்தாலும் நீ செஞ்ச எல்லாதையும் நான் கவனிச்சிட்டு தான் இருந்தேன். உண்மையை சொல்லனும்னா நான் உன்னோட ஒவ்வொரு சேட்டையையும் ரசிச்சிட்டு இருந்தேன் அஜ்ஜூ. இந்த கொஞ்ச நாள்ல என்னோட பழைய அஜ்ஜூவை திரும்ப பாத்த மாதிரி இருந்துதுடா உன்னோட ஒவ்வொரு சேட்டையும். உன்னை போய் ரெண்டு குழந்தைக்கு அப்பன்னு சொன்னா சத்தியமா யாரும் நம்ப மாட்டாங்க, என்னோட மனச மாத்த கௌதம் கூட சேந்து என்னென்ன சேட்டை செஞ்ச நீ" என்றவள் முகத்தில் வெட்கம் கலந்த சிரிப்பு ஒளிர, உனக்கு என்னை அவ்ளோ புடிக்குமாடா எரும, எனக்கு கூட உன்ன ரொம்ப புடிக்கும்டா, இனிமே நம்ம ரெண்டு பேருக்கும் நடுவுல எந்த பிரிவும், பிரச்சனையும் வராது அஜ்ஜூ, இனி நான் உன்ன எப்படி பாத்துக்குவேன்னு வார்த்தையால இல்ல, இனி வர்ர ஒவ்வொரு நாளும் நான் வாழ்ந்து அதை உனக்கு புரியவைப்பேன்" என்றவள் அவன் நெற்றியில் தன் அன்பை மொத்தமாக முத்தமாக பதிக்க, அவளின் ஸ்பரிசத்தை தூங்கும் அவளின் அன்பு அஜ்ஜூ உணர்ந்தனோ என்னவோ மெதுவாக புரண்டவன் அவள் மடிமீது தலை வைத்து படுத்துக் கொண்டான்.

அவள் வயிற்றில் முகம் புதைத்து அவள் இடையை சேர்த்து அணைத்துக் கொண்டான் அவன். அவன் அணைப்பில் மனம் மகிழ்ந்த ஆத்யா அவனை தன்னோடு சேர்த்து அணைத்தபடியே தூங்கிப் போனாள்.

காலை அர்ஜுனுக்கு முன்போ விழித்த ஆத்யா, அவன் தூக்கம் கலையாதபடி அருகில் இருந்த தலையணையில் படுக்க வைத்துவிட்டு குளிக்க சென்றவள், குளித்து முடித்து வெளியே வரும்போது அர்ஜூன் பெட்டில் உட்கார்ந்தபடி எதையோ யோசித்துக் கொண்டிருந்தான். 

'ஓஓஓ சார் முழிச்சிட்டாரா… என்ன என்னமே டீப்பா திங்க் பண்ணிட்டு இருக்கான். நம்ம கவுக்க அடுத்து அந்த கௌதம் எரும கூட சேந்து ஏதும் புது ப்ளான் போட்டிருக்கான?' என்று யோசித்தபடியே, தன் ஈரத்தலையை துவட்டி கொண்டிருக்க, மெதுவாக தியா அருகில் வந்தான் அர்ஜூன்.

"தியா" என்று அவன் அழைக்க,

"ம்ம்ம்" என்றாள் இவள்,

"நேத்து நைட்??" என்று அவன் இழுக்க,

"ம்ம்ம்... என்ன நேத்து நைட்?? என்றவள் நெற்றியில் பொட்டு வைத்த படியே கேட்டாள்.

"இல்ல தியா, நேத்து நைட் நீ எனக்கு பக்கத்துல இருந்த மாதிரியும் நா உன்னோட மடியில படுத்து தூங்குன மாதிரியும் தோணுது. உன்னை இருக்கி கட்டி புடிச்சிட்டு இருந்த மாதிரி கூட தோணுது" என்று அவன் அப்பாவியாக சொல்ல, ஆத்யா சட்டென அவனை திரும்பி பார்த்தாள்.

'அடப்பாவி அசந்து தூங்கிட்டு இருக்கும்போதே, உனக்கு இவ்ளோ ஞாபகம் இருக்கா?' என்று வியந்த ஆத்யா, அவள் இதழில் தவழ தயாராக இருந்த சிரிப்பை அடக்கி, அர்ஜுனை முறைத்தபடியே, "தோணும்டா தோணும். உனக்கு மட்டும் தான் இப்படி எல்லாம் தோணும். அந்த சீன் எல்லாம் இங்க நடக்காது… நெனப்பு தான் பொழப்ப கெடுக்குமாம். போடா போய் ஆபீஸ் கெளம்புற வழிய பாரு" என்றவள், குங்கும சிமிழில் இருந்து குங்குமத்தை எடுத்து அவள் நெற்றியில் உச்சியில் வைக்க போக, அவசரமாக அவள் கையை பிடித்தான் அர்ஜூன்.

"ப்ளீஸ்டி நான் வச்சி விடுறேனே" என்று கண்களால் கொஞ்சியபடி ஏக்கம் நிறைந்த குரலில் கேட்க, ஆத்யா விழிகள் லேசாக கலங்கியது. அவனை ஆழ்ந்த ஒரு பார்வை பார்த்து, மெதுவாக இமைகளை மூடிக் கொள்ள, அவளில் சம்மதத்தை அந்த மூடிய விழிகள் அமைதியாக அவனுக்கு சொல்லியது. 

'குங்குமத்தை தன் இரு விரல் கொண்டு எடுத்தவன் அவளின் நெற்றி உச்சியில் அதை அழுத்தி வைத்துவிட, அந்த அழுத்தம் அவன் அவளின் கணவன் என்ற உரிமையை அவளுக்கு அழுத்தி சொல்லுவது போல் இருந்தது. அவர்கள் இருவரின் இடையே இருந்த எல்லா தடைகளும் அந்த நொடி குறைந்து, மறைந்து, முற்றிலும் அழிந்தது போல் இருந்தது இருவருக்கும். மூடிய விழிகளில் ஓவியம் போல் தான் முன் நிற்கும் தன் மனைவியை அர்ஜூன் ரசிக்க, ஆத்யா விழி மூடி அந்த தருணத்தை தன்னை மறந்து ஆழ்ந்து உணர்ந்து ரசித்து மயங்கி இருந்தாள். 

"அம்மா" என்ற அபியின் அழைப்பில் இந்த உலகிற்கு வந்த இருவருக்கும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க முடியாதபடி ஏதோ ஒன்று தடுக்க, ஆத்யா வெட்கத்தில் கன்னம் சிவந்து தலை குனிந்தபடி, அபியை தூக்கிக் கொண்டு அங்கிருந்து ஓடிவிட்டாள்.

அவளின் மனமாற்றத்தை புரிந்து கொண்ட அர்ஜூனும் துள்ளி குதிக்காத குறையாக தான் சந்தோஷத்தை கௌதமிடம் சொல்ல ஓடினான்.

கௌதமும், அர்ஜூனும் வேலை முடிந்து வீட்டிற்குள் நுழைய, அந்த வீட்டின் அழகு குட்டி தேவதைகள் மூவரும் வாசலிலேயே கன்னத்தில் கை வைத்து சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு உட்கார்ந்து இருந்தனர். 

"என்னாச்சு எங்க குட்டி ஏஞ்சல்ஸ்க்கு? ஏன் இப்படி சோகமா உக்காந்துட்டு இருக்கீங்க" என்று கேட்டபடி கௌதமும், அர்ஜினும் குழந்தைகள் அருகில் வந்தனர். 

"ப்பா நம்ம ஆப்போசிட் வீட்ல, எங்க ப்ரண்ட் ஸ்வீட்டி இருக்கா இல்ல, அவளுக்கு ஒரு தம்பி பாப்பா பொறந்திருக்கு பா. அந்த பாப்பா ரொம்ப குட்டிய, கியூட்டா இருக்குப்பா, அவ அந்த பாப்பா கூட ஜாலியா விளையாடிட்டு இருக்காப்பா... எங்களுக்கும் அந்த மாதிரி ஒரு கியூட் குட்டி பாப்பா வேணும் ப்பா. ப்ளீஸ் ப்பா" என்று ரியாவும் அபியும் கொஞ்ச, பூஜாவும், "ஆமா டாடி எங்களுக்கு குட்டி பாப்பா வேணும் டாடி" என்றாள். 

குழந்தைகள் சொன்னதை கேட்ட கௌதம், அர்ஜூனை பார்க்க… அர்ஜூன், "என்ன கொடுமை கௌதம் இது? எனக்கு மட்டும் ஏன் டிசைன் டிசைனா பிராப்ளம் வருது. நானே அவள கரெக்ட் பண்ண தெரியாம.‌‌.. நாயா, பேயா அலையுறேன். இப்ப தான் அவளும் ஏதோ கொஞ்சம் என் கிட்ட பேச ஆரம்பிச்சு இருக்கா, இப்ப போய் கொழந்தைங்க சொன்னது அவ காதுல கேட்டுச்சின்னு வச்சிக்கோ... அவ்ளோ தான். இது நம்ம ரெண்டு பேர் சேந்து போட்ட ப்ளான்ல ஒரு பார்டர்னு நெனச்சு, என்ன வெரட்டி வெரட்டி வெளுப்ப, உன்னை தொறத்தி தொறத்தி அடிப்பா"  என்று தலையில் கை வைத்துக்கொண்டான். 

அவனை பார்த்து கௌதம் சத்தமாக சிரித்தவன், பாவம்டா நீ. கட்டுன பொண்டாட்டியை கரெக்ட் பண்ண இவ்ளோ கஷ்டப்பட்டுட்டு இருக்கடா... அய்யோ அய்யோ… இதோ பாருங்க குட்டிஸ்... நீங்க கேட்ட குட்டி பாப்பா மேட்டர் எங்களுக்கு ஓகே தான். நீங்க இப்ப என்ன பண்றீங்கன்னா... நேரா உங்க மம்மிஸ் கிட்ட போய் இப்ப எங்க கிட்ட கேட்டாதை, அப்டியே அவங்க கிட்ட கேளுங்க, அவங்க மட்டும் ஓகே சொல்லிட்டா போதும். உங்களுக்கு குட்டிப்பாப்பா கன்ஃபர்ம். போங்க போய் உங்க அம்மா கிட்ட கேளுங்க" என்று கௌதம் குழந்தைகளை அனுப்ப ரியாவும் அபியும் ஆத்யாவிடம் ஓட, பூஜா நேராக திவ்யாவிடம் ஓடினாள்.

"மம்மி.. மம்மி" என்று ஓடி வந்த பூஜாவை தூங்கிய திவ்யா, "என்ன பட்டுக்குட்டி ஏன் இப்படி ஓடி வர்றீங்க?" 

"மம்மி நான் டாடிகிட்ட வெளயாடா குட்டிப்பாப்பா வேணும்னு கேட்டேன். டாடி நீ போய் மம்மி கிட்ட கேளு, அவளுக்கு ஓகேன்னா எனக்கும் ஓகே ன்னு சொன்னாரு மம்மி. ப்ளீஸ் மம்மி ஓகே சொல்லு மம்மி. எனக்கு கியூட்ட ஒரு குட்டிப்பாப்பா வேணும் மம்மி" என்று பூஜை அம்மாவின் கன்னத்தை பிடித்து கொஞ்ச, முதலில் குழந்தை சொன்னது புரியாமல் பார்த்த திவ்யா, பின் அவள் சொன்னதின் அர்த்தம் புரிந்து கன்னம் சிவந்தாள்.

"பூஜா குட்டிக்கு கண்டிப்பா குட்டி பாப்பா வேணுமா?" என்று செல்லமாக கேட்க, பூஜா வேகமாக "ஆமாம்" என்று தலையாட்ட, பூஜா குட்டி கேட்டது அம்மாவுக்கு ஓகே தான்" என்று குழந்தை கன்னத்தில் முத்தம் வைக்க, பூஜா துள்ளி குதித்து கீழே இறங்கியவள், "டாடி மம்மி குட்டி பாப்பாக்கு ஓகே சொல்லிட்டாங்க" என்று கத்திக்கொண்டே கௌதமை தேடி ஓடினாள்.

"இந்த கௌதமுக்கு கொஞ்ச கூட புத்தியே இல்ல, ஆத்யா அவனா அடிக்கிறது தப்பே இல்ல, குழந்தைகிட்ட போய் இதெல்லாம் கேக்க சொல்லி இருக்கான் பாரு" என்று தலையில் அடித்துக் கொண்டவள் வார்த்தையில் கோபம் இருந்தாலும் முகம் வெட்கத்தில் சிவந்திருந்தது. பின்னால் இருந்து அவள் இடையை இரு கைகள் இறுக்கி அணைத்து, அவள் காதோரம், "அப்போ பூஜாக்கு தம்பி இல்ல தங்கச்சி பாப்பா கன்ஃபர்ம் தானே திவி" என்று குறும்பாக கேட்ட கௌதமை, திவ்யா திரும்பாமல் அவன் தலையில் மெதுவாக கொட்டியவள், "ஏன்டா உனக்கு தூது அனுப்ப பூஜா தான் கெடச்சால? லூசு… லூசு…" என்று திட்ட, திவ்யா தோளில் தன் தாடையை வைத்து அழுத்தி, அவள் கன்னத்தில் தன் கன்னம் உரசியவன், "பின்ன இதுல நான் தனியா என்ன செய்ய முடியும். பூஜா எதிர் வீட்டுல பாப்பா இருக்கு, எனக்கும் கூட விளையாட ஒரு பாப்பா வேணும்னு கேட்டா, நானா பெத்து தர முடியும். அந்த பவர் என் கிட்ட இல்லயே, அதான் பவர் இருக்க உன்கிட்ட கேக்க சொன்னேன், நீயும் ஓகே சொல்லிட்டா, இனி என் பொண்ணு கேட்டதை செஞ்சிட்டு தான் அடுத்த வேலை" என்று மனைவியை நெஞ்சோடு சேர்த்து அவன் இறுக்கி அணைக்க, "ஆச,  தோச போடா… அதெல்லாம் முடியாது" என்று அவனை தள்ளி விட்டு திவ்யா ஓட, இவன் தூரத்த,  அடுத்த குழந்தைக்கு ப்ளான் ரெடி. 

"சரி இதே கேள்விக்கு  இந்த ஆத்யா என்ன பதில் சொன்னன்னு பாப்போம்.. பாவம் இந்த அர்ஜூன் பையன் ம்ம்ம்ம்ம்ம்…"