அர்ஜூன் ஆத்யா‌ 23

 அர்ஜூன் ஆத்யா



மெய் 23


"ப்ளீஸ் ஆது இங்க நாங்க  எல்லாரும் நீயும், அர்ஜூனும் சேர்ந்து வாழனும்னு ஆசப் படுறோம். அதோட உன்னோட மனசும் இப்ப முன்ன மாதிரி இல்ல, இப்ப நீ நிறைய மாறி இருக்க, அதுவும் எங்களுக்கு புரியுது. ஆனா, முழுசா நீ மனசு மாறி ஆத்யால இருந்து அர்ஜூனோட தியாவ மாறனும்னு நாங்க ஆசப் படுறோம் ஆது. எனக்கு தெரியும் உன்னோட முழு வருத்தமும் அபிராமி ஆன்ட்டி மேல தான் இருக்குன்னு ஆனா, நீ அவங்களையே மன்னிச்சு ஏத்துக்கிட்ட, அப்படி இருக்க பாவம் நம்ம அர்ஜூன் சூழ்நிலை கைதி தான, அவன ஏன்டி நீ மன்னிக்க கூடாது. உன்னோட மனசுல அர்ஜூன் மேல கோபமே, வெறுப்பே துளி கூட இல்லை,  அப்படி இருந்தும் நீ ஏன் இன்னும் அவன விட்டு விலகியே இருக்க? உனக்குள்ள ஏதோ ஒன்னு உன்னை டிஸ்டர்ப் பண்ணுது ஆது. அது என்னன்னு சொல்லு ஆது. நம்ம பேசி சரி பண்ணலாம். அத விட்டு நீ இப்படி விலகி இருந்த என்ன அர்த்தம். நீ அபி, ரியாக்கு அம்மாவ தான் இருக்கியே தவிர அர்ஜூனுக்கு பொண்டாட்டியா இருக்க தயங்குற, அர்ஜூனும் பாவம் என்னென்னவோ செஞ்சு உன்னோட மனச மாத்த ட்ரை பண்றான். நீ அதெல்லாம் தெரிஞ்சும் தெரியாத மாதிரியே இருக்க, எதுக்கு இந்த கண்ணாமூச்சி" என்றவன் ஆத்யா பார்க்க, அவள் கண்களில் வலியுடன் கௌதமை பார்த்தாள்.

அவள் அந்த நிலையில் பார்த்து அதிர்ந்த கௌதம், "ஏய் ஆதும்மா என்னடா இது? ஏன் இப்ப அழுகுற நீ?" என்றவன் அவளை இழுத்து தன் மார்பில் சாய்த்துக் கொள்ள,   தாய்மடி சேர்ந்து குஞ்சை போல் கௌதம் மார்பில் சரணடைந்தால் ஆத்யா.

"எனக்கு அஜ்ஜூ மேல எந்த கோவமும் இல்ல கௌதம், ஆனா…"என்று அவள் இழுக்க, 
கௌதம் ஆதரவாக அவள் தலையை வருட, அதில் நிம்மதி கொண்டவள், "நான் எப்ப அஜ்ஜூவை நெனச்சாலும், அவனோட நான் இருந்த அழகான தருணங்கள் தான் கௌதம் என்னோட நெனப்புல வரும். ஆனா, அவன் என்னை விட்டு போன அப்புறம், அஜ்ஜூ நெனப்பு  வரும்போதெல்லாம் அவன் என்னை விட்டு போன அந்த நிமிஷம் தான் என்னோட நியாபகத்துல வருது கௌதம். ஒரு வார்த்த கூட சொல்லாம என்னை அப்படியே விட்டு போனதை நினைக்கும் போதெல்லாம் எனக்கு நெஞ்சு வலிக்கு கௌதம். உயிரே போற மாதிரி இருக்கு, உனக்கே தெரியும் நான் எவ்வளவு பெரிய கஷ்டத்தையும் தாங்கிப்பேன். ஏன்.?? பிரியா அம்மா என்னை விட்டு போனதுக்கு பிறகு கூட இனி எனக்கு நான் தான் துணைன்னு நானே என்னை தேத்திக்கிட்டேன். ஆனா, அர்ஜூன் என்னை விட்டு போனதை மட்டும்   என்னால தாங்கிக்கவே முடியல கௌதம். என்னோட மொத்தமும் அவனோடவே போய்டுச்சு கௌதம். இன்பேக்ட் எனக்கே அப்ப தான் நான் அவனா எந்த அளவு விரும்பி இருக்கேன் புரிஞ்சுது. அஜ்ஜூ இல்லாம என்னோட வாழ்க்கையே இல்லன்னு அப்ப கௌதம் முழுசா உணர்ந்தேன். எப்புடி கௌதம் எப்படி அஜ்ஜூவால, என்னை பிரிஞ்சு" என்றவள் சொல்ல வந்ததை முடிக்க முடியாமல் அவன் மார்பிலேயே புதைந்து விரும்பினாள். 

கௌதம் அவள் முதுகில் ஆதரவாக தடவி கொடுத்து அவளை சமாதானப் படுத்தியவன்,‌ "நீ சொல்றது எனக்கு புரியுது ஆது. உன்னோட மனசுல அவனோட பிரிவு ஆறாத ரணம பதிச்சு போச்சு, உன்னால அதையும் மறக்க முடியல, உன்னோட அஜ்ஜூவையும் மறக்க முடியல, எங்க அர்ஜூனை நெருங்கி போன உன்னோட இந்த வலி கோவமா மாறி அவன் மேல திரும்பிடுமோன்னு நீ பயப்படுற அப்படித்தான?" என்ற கௌதமின் கேள்விக்கு, ஆத்யாவின் தலை தானாக ஆமாம் என்று மேலும் கீழும் ஆடியது. 

"ஒரு வேள அர்ஜூன் உன்கிட்ட வந்து அவன் கல்யாணத்த பத்தி சொல்லி இருந்த அதை நீ தாங்கியிருப்பிய ஆது, அந்த கல்யாணத்துக்கு ஒத்துட்டு இருப்பியா?" என்ற கௌதமை பார்த்து ஆத்யா இதழ் ஓரமாக சிரித்தாள்.

"அதை தாங்குற சக்தி அப்ப எனக்கு இருந்துதா? இல்லியன்னு எனக்கு தெரியல கௌதம். அப்ப நா கன்சீவ்வ இருந்தேனு எனக்கு தெரியாது. சோ அபிராமி அத்தைக்காக நான் அர்ஜூனை விட்டுக் கொடுத்திருப்பேன். இது அவனுக்கும் தெரியும். அப்படி இருந்தும், என்கிட்ட எதுவும் சொல்லாம, ஒரு வார்த்த கூட கேட்காம என்ன விட்டு போயிட்டானே கௌதம், அதான் என்னால தாங்க முடியல" என்றவள் கண்கள் மீண்டும் நீரால் நிறைந்திருந்தது.

"அபிராமி ஆன்ட்டி சர்ஜரி முடிஞ்சதுக்கு அப்புறம் நான் அர்ஜூன் கிட்ட உன்னை பத்தியும், ரியா பத்தியும் பேச போனேன். அன்னைக்கு நீ இப்ப கேட்ட இதே கேள்வி தான் நானும் அர்ஜூன் கிட்ட கேட்டேன். அதுக்கு அவன் என்ன பதில் சொன்னான் தெரியுமா ஆது? உன்னை விட்டு போற வலியை தாங்கும் சக்தி இருக்க அவனோட மனசுக்கு, நீ அவனை வேணாம்னு சொல்லி வலிக்க வலிக்க உன்னோட  வாழ்க்கையை இன்னொருத்திக்கு விட்டுக் குடுத்து போறதை பாக்கும் சக்தி  இல்லைன்னு சொன்னான். அந்த நேரம் உன்னோட மொகத்த ஒரு நிமிஷம் பார்த்தாலும் அடுத்த நிமிஷம் அபிராமி ஆண்ட்டிக்கு கொடுத்த சத்தியத்தை மீறி, உன்னோடவே இருந்திருப்பனாம். அதனால தான் உன்னை பாக்க வர்லன்னு சொன்னான்." என்ற 
கௌதம் இமைக்காமல் உற்று பாத்த ஆத்யாவின் மனதில், அவன் சொன்ன ஒவ்வொரு ஒரு வார்த்தையும் நேராக அவளின் இதயத்தில் சென்று தாக்கிவிட அப்படியே நின்று விட்டாள்.


"உங்க விஷயத்தில் காலம் தான் ஆது உண்மையான குற்றவாளி.  இதுல வேற யாரையும் குற்றம் சொல்ல முடியாது. எல்லார் பக்கமும் அவங்க அவங்க நியாயம் இருக்கத்தான் செய்யுது. சோ இதுல அர்ஜூன் மேல தான் முழு தப்புன்னு சொல்ல முடியாது. நீங்க ரெண்டு பேரும் பிரிந்து இருந்தாலும் மனசால, இப்பவும் சேந்து தான் இருக்கீங்க. இங்க நீங்க ரெண்டு பேரும் பிரிந்து சேரனும்குறது கடவுள் எழுதிய விதி போல, அதான் ப்ரீத்தி கூட கல்யாணம் நடந்தும் அர்ஜூன் அவ கூட வாழல, நீயும் இப்பவரை, இனியும் அவனை மட்டும் தான் நெனச்சிட்டு இருப்பா, சோ நீ உன்னோட எல்லா பழைய கசப்பையும் ஒதுக்கி வச்சிட்டு, கெடச்சிருக்கா இந்த அழகாக வாழ்க்கைய முழு மனசோட ஏத்துக்கிட்டு வாழ பாரும்மா" என்ற கௌதமை இமைக்காமல் பார்த்த ஆத்யா கௌதம் தோளில் சாய்ந்து கொண்டாள். 

"நீ யாரு கௌதம் எனக்கு?? 
எப்பவும் நீ என்னை பத்தி மட்டும் தான் யோசிப்பியா..?? முதல்ல அர்ஜூனை பத்தி நான் குழப்பத்தில் இருக்கும்போது, என்னோட மனச எனக்கே புரிய வச்சதும் நீதான், அர்ஜூன் என்னை விட்டு போய்ட்டா ன்னு தெரிஞ்சு அவனை கொல்ற அளவு வெறுப்பில் இருந்தது நீதான். இப்ப அஜ்ஜூ மேல எந்த தப்பும் இல்லைன்னு தெரிஞ்சு அவனுக்காக என் கிட்ட இவ்வளவு தூரம் கெஞ்சிட்டு இருக்குறதும் நீதான்? சின்ன வயசுல இருந்து இப்ப வரை நீதான் எனக்கு எல்லாமாவும் இருக்க கௌதம். ஒரு குழந்தை மாதிரி என்னோட சேத்து ரியாவை நீ பாத்துக்கிட்ட, ரியாக்கு மட்டும் இல்லடா நீ எனக்கும் அப்பா தான். இதுக்கெல்லாம் நான் உனக்கு என்னடா செய்யப்போறேன்" என்று உணர்ச்சி மிகுதியில் பேசியவளின் கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்த கௌதம், 

"எனக்கு நீ வேற ஒன்னும் செய்ய வேணாம். உன்னையும்  அந்த அர்ஜூனையும் சேக்க ப்ளான் போட்டு போட்டு அடி வாங்கி வாங்கி என்னால முடியல ஆது. நீ சீக்கிரம் அர்ஜூன் கூட சேந்திடு அது எனக்கு போதும். என்னால அடி தாங்க முடியலடி" என்று முகத்தை பாவம் போல் வைத்து சொன்னவனை பார்த்த ஆத்யா வெடித்து சிரித்தாள். 

"சாரி கௌதம் ஐ ஆம் வெரி சாரி. இந்த ஜென்மத்தில் உன்னோட அந்த ஆசை மட்டும் நடக்கவே நடக்காது. அஜ்ஜூக்காக இல்லாட்டியும், வேற எதுக்காகவும் நீ என் கிட்ட அடி வாங்கிட்டு தான் இருப்ப, அது உன்னோட தலையெழுத்து" என்று அவன் தலையில் கொட்டியவள் சிரித்த முகமாக துள்ளி குதித்து வீட்டிற்குள் ஓட,  தெளிந்திருந்த ஆத்யா முகத்தை பார்த்த கௌதம் கூடிய சீக்கிரம் அர்ஜூன், ஆத்யா சேர்ந்து விடுவார்கள் என்ற நிம்மதியோடு வீட்டிற்குள் சென்றான்.