அர்ஜூன் ஆத்யா 22
அர்ஜூன் ஆத்யா
மெய் 22
அர்ஜூன் வீட்டில் அனைவரும் ஒரே குடும்பமாக சந்தோஷமாக இருக்க, ஆத்யா மட்டும் அர்ஜூனை விட்டு தள்ளி இருந்தது ஒன்று தான் அனைவருக்கும் குறையாக இருந்தது.
மொத்த குடும்பமும் ஆத்யாவுக்கு தெரியாமல், அவளை அர்ஜூனோடு சேர்த்து வைக்க பல பல ப்ளான்களை போட, ஆத்யாவிடம், எதுவும் செல்லாமல் போனது. யார் எந்த என்ன ப்ளான் போட்டு மாட்டிக் கொண்டாலும், ஆத்யாவிடம் அடிவாங்குவது என்னவோ கௌதம் தான். அவன் வசமாக மாட்டும்போது ஆத்யா அவளின் பழைய கோபத்தை எல்லாம் தேடித்தேடி பிடித்து அவனை அடித்து வெளுக்க, யாரும் குறுக்க வந்து கௌதமை காப்பாற்றுவது இல்லை. இதில் கௌதமின் அருமை பொண்டாட்டி திவ்யாவும் அடக்கம். சில நேரம் திவ்யா தன் சார்பாக நாலு அடியை சேர்த்து போடச் சொல்லும் ரகசிய சதிகளும் கௌதமுக்கு எதிராக நடப்பதுண்டு.
அர்ஜூன் இது எது பத்தியும் கவலைப்படமல், "நான் முதல்ல இருந்து ஆரம்பிக்க போறேன்" என்ற பெயரில் டீன் ஏஜ் பையன் போல் ஆத்யா பின்னாடி சுற்றி சுற்றி சைட் அடித்துக் கொண்டிருந்தான்.
காலையில் அவசரமாக ஹாஸ்பிடல் கிளம்பு ஆத்யாவின் கார் டயரின் காற்றை பிடிங்கிவிட்டு, அவளை தன்னோடு தன் காரில் அழைத்து செல்வான். ஹாஸ்பிடல் இருந்து டையர்டாக வீட்டிற்கு வரும் மனைவிக்கு விதவிதமான சமைத்து அசத்துவான். அவளுக்கு என்ன தேவையென்று அவள் அறியும் முன்னே அதை அர்ஜூன் செய்து முடித்திருப்பான். தன் குழந்தைகளுடன், தன்னவளையும் குழந்தைபோல் பார்த்துக்கொண்டான் அர்ஜூன்.
ஆத்யா அவன் செய்யும் எதையும் ஏற்கவும் இல்லை, மறுக்கவும் இல்லை. நடப்பது நடக்கட்டும் என்று அமைதியாக இருந்து விட்டாள். ஆனா, சில நேரம் அர்ஜூன் அரவணைப்பு அவளுக்கு அவள் தாய் பிரியாவின் ஞாபகத்தை உண்டாக்கி விட, தவித்து போவாள் பெண்ணவள்.
அது புரிந்த அர்ஜூனும், அந்த நேரங்களில் அவளை தாயாக தாங்கிக் கொள்வான். ஆத்யாவுக்கு நன்கு தெரியும் நடந்து அனைத்திலும் அர்ஜூனின் தவறு எதுவும் இல்லை என்று, சூழ்நிலை தான் அவனை அவ்வாறு முடிவெடுக்க வைத்தது என்று. ஆனால், அவள் புத்திக்கு தெரிந்த உண்மையை அர்ஜூனை உயிருக்கு உயிராக விரும்பிய மனது ஏற்க மறுக்க தவித்துப் போனாள் ஆத்யா. ஆனால், அர்ஜூன் இதுபற்றி எல்லாம் கவலைப்படாமல், ஆத்யாவை நோக்கி முன்னேறிக் கொண்டே இருந்தான்.
முதலில் இதையெல்லாம் பார்த்து கடுப்பான ஆத்யாவுக்கு போகப்போக இதெல்லாம் பழகிவிட்டது. அர்ஜுனின் சேட்டைகளில், அவன் அருகாமையில் சில சமயம் அவள் தன்னை தொலைத்து விடுவாள். அதோட வீட்டில் மற்றவர்களின் கோமாளித்தனமான ப்ளான்கள், இதில் சில நேரம் ரியா, அபியை விட்டு தாங்க ப்ளானை எக்ஸிக்யூட் பண்ணப் பார்க்க, அதில் குழந்தைகள் தவறி மாட்டிக் கொண்டால், தெளிவாக, "கௌதம் டாடி தான் இப்புடி செய்ய சொன்னாரு" என்று தெளிவாக போட்டுக் கொடுக்கும் சம்பவங்களும் நடக்கும்.
இப்படியே நாட்கள் அடிதடியோடு நகர, கௌதம் தான் அடுத்த ப்ளானை தொடங்கினான்.
ஆத்யா அர்ஜூன் வீட்டிற்கு வந்தாலும் அவன் அறையில் தாங்காமல் வேறு அறையில் தங்கிக் கொண்டாள்.
ரியா அப்பாவோட தான் இருப்பேன்னு, அர்ஜூன் ரூமுக்கு சென்று விட, அபி அம்மா தான் வேணும்னு ஆத்யா ரூமுக்கு போய்ட்டா.
'என்னடா இது?? இப்படியே ரெண்டு பேரும் தனியா இருந்த, இவங்க பிரச்சினை எப்படி தீரும். ஒன்ன இருந்த தான? ஒருத்தரை ஒருத்தர் பார்த்து, மனசு விட்டு பேசி, பழைய கோபத்தை மறந்து, ஏதாவது கெமிக்கல் ரியாக்ஷன் நடந்து, ரெண்டு பேரும் ஒன்னு சேர முடியும். இதுங்க இப்படி ஈஸ்ட்டு, வெஸ்ட்னு இருந்தா எப்படி? இதுங்க பிரச்சனை எப்ப தான் முடியர்து?' என்று யோசித்து மண்டையை பிய்த்துக் கொண்ட கௌதம், அர்ஜூனோடு சேர்த்து ரியாவையும் அபியையும் வைத்து ஒரு மாஸ்டர் ப்ளான் போட்டான்.
( டேய்… நீ அடங்கவே மாட்டிய டா )
"இங்க பாருங்க க்யூட் குட்டீஸ், இப்ப நீங்க ஆதுகிட்ட போய், இனிமே நாங்க அம்மா, அப்பா ரெண்டு பேர் கூடவும் ஒன்ன தான் இருப்போம், அதனால அம்மாவும், அப்பாவும் ஒரே ரூம்ல தான் இருக்கணும்னு, அம்மா கிட்ட சொல்லி கை, கால உதச்சு நல்லா அழுது அடம் புடிங்க, நீங்க கத்துற கத்துல உங்கம்மா உடனே பெட்டிய கட்டிட்டு உங்கப்பன் ரூம்முக்கு வந்திரணும், புரரிஞ்சித குட்டீஸ்" என்று சொல்லிக் கொடுத்து ஆத்யாவிடம் அனுப்பி வைத்தான்.
ரியா "ம்மா நானு, நீ, ப்பா, அபி எல்லா ஒதே ரூம்ல இதுக்கலாம் ம்மா. நானும், அபியும் உன்னை, ப்பாவையு இறுக்கி கட்டி புதிச்சிட்டு தூங்குவோம்" என்று ஆவலாக கேட்க, ஆத்யா ஒரு நிமிஷம் அதிர்ந்து முழித்தாள்.
'இது அந்த கௌதம் கொரங்கு வேலையா தான் இருக்கும்' என்று தெரிந்து, கீழே குனிந்து குழந்தைகள் இருவரையும் அணைத்துக் கொண்ட ஆத்யா, "ஓகேடா குட்டீஸ் அம்மா நீங்க சொன்னதை கேக்குறேன். ஆனா, இப்ப நீங்க என்கிட்ட சொன்னத உங்களுக்கு யாரு சொல்லிக்கொடுத்து, என் கிட்ட கேக்க சொன்னாங்கனு நீங்க அம்மாகிட்ட சொன்னா தான், நீங்க கேட்டதுக்கு அம்மா ஓகே சொல்வேன்" என்று சொல்ல, ரியாவும் அபியும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து விட்டு, "கௌதம் டாடி தாம்மா சொல்லி தந்தாங்க" என்று கோரஸாக கௌதமை தெளிவாக போட்டுக் கொடுக்க, பாவம் கௌதம் அவனுக்கு என்ன ஆச்சுன்னு என் வாயால என்னால சொல்ல முடியல.
ஆத்யா கௌதமை வீடு முழுவதும் துரத்தி துரத்தி கையில் கிடைத்தது எல்லாத்தையும் தூக்கி அடிக்க, திவ்யாவும் பூரணியும், இது வழக்கமா நடக்கிறது தானா என்று அசால்ட்டாக டிவி பார்த்துக் கொண்டிருக்க இருந்தனர்.
"அடாபாவிகளா... நீயெல்லாம் ஒரு அம்மாவா, போயும் போயும் உன்ன லவ் பண்ணி கட்டிக்கிட்டேன் பாரு என்னை செருப்பால அடிக்கணும். ராட்சசி… ராட்சசி... புருஷன் அடி வாங்குறான், வந்து காப்பாத்துடி" என்று திவ்யாவை பின்னாடி சென்று ஒளிய, "அட போங்க, உங்களுக்கு வேற வேலை இல்ல" என்றவள் அவனை ஆத்யா பொறுப்பில் விட்டு விட்டு செல்ல, ஆத்யா கௌதமை பிழி பிழியென்று பிழிந்து எடுத்து விட்டாள்.
"ஏன்டா, அறிவிருக்கடா உனக்கு? உன்னோட மெக்க ப்ளானா எக்ஸிக்யூட் பண்ண குழந்தைகள போய் யூஸ் பண்ற, லூசு, எரும, பன்னி" என்று கண்டபடி பாராட்டியவள், அபிராமி வந்து தடுத்தாலும், அதிகமாக டையர்டு ஆனா காரணத்தாலும் போய் தொலடா என்று அவனை விட்டு சென்றாள்.
கௌதம், "ரொம்ப தேங்க்ஸ் ஆன்ட்டி, நீங்களாது வந்து என்னை காப்பாத்துனீங்களே" என்றவன் திரும்பி பூரணியையும் திவ்யாவையும் முறைத்து விட்டு தட்டு தடுமாறி நடந்து வந்தவன், அர்ஜூனோடு டைனிங் டேபிள் மேல், மூன்று குழந்தைகளும் ஐஸ்கிரீமை ரசித்து சாப்பிட்டுக் கொண்டிருப்பதை பார்த்து அங்கு சென்றான்.
"லட்டு குட்டி, உங்கம்மா யாரு உங்கள என்கிட்ட அனுப்பி விட்டதுன்னு கேட்டப்ப, ஏன்டா உங்கப்பன் பேர சொல்லல? அவனும் தான இந்த ப்ளான்ல நம்ம கூட இருந்தான்" என்று அப்பாவியாக கேட்க,
"அதுவ டாடி, ம்மா, ப்பா மேல ஆங்கிரிய இருக்கா தான... நாங்க ப்பா பேத சொன்ன ம்மா, ப்பா மேல இன்னு ஆங்கிரி அவா தான, அதான் சொல்லல" என்று சொல்லி அழகாக சிரிக்க, கௌதம் ரியா சொன்னதை கேட்டு பேயறைந்தது போல் நிற்க, அர்ஜூன் சிரிப்பை அடக்க முடியாமல் விழுந்து விழுந்து சிரித்தான்.
"சிரிடா சிரி... உன்னோட பொண்ணுங்க மத்த விஷயத்தில் எப்படியே டா தெரியல ஆனா, உன்னை சேவ் பண்றதுல அப்படியே உன் பொண்டாட்டிய கொண்டிருக்கும் போல. என்ன தெளிவ என்னை மட்டும் மாட்டீவிட்டிருக்குங்க, ஒன் பிக் ராட்சசி, டூ லிட்டில் ராட்சசிஸ், அதெப்படி குழந்தைங்க கூட நம்ம இப்படி வச்சு செய்யுது" என்று புலம்பி படி கௌதம் செல்ல, ஓரமாக இருந்து நடந்ததை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ஆத்யா கஷ்டப்பட்டு தன் சிரிப்பை அடக்கினாள்.
இவ்வளவு பட்டும் புத்தி வராமல் கௌதம் அடுத்தடுத்து என்று குடும்பத்துடன் சேர்த்து ப்ளான்களை போட்டுக் கொண்டே இருக்க, ஆத்யா இப்போதெல்லாம் இதை பார்த்து கடுப்பாகாமல், இவர்களின் செய்கையை
ரசிக்கத் தொடங்கி விட்டிருந்தாள்.
அர்ஜூன் சேட்டைகள், குழந்தைகளின் மகிழ்ச்சி, அனைவரும் ஒரே குடும்பமாக இருக்கும் நிறைவு, தனக்கான யோசிக்கும் உறவுகள் என்ற ஒவ்வொரு விஷயமும், இந்த கொஞ்ச நாட்களில் ஆத்யா மனதில் பலவித மாற்றங்களை கொண்டு வந்திருந்தது.
இத்தனை வருடம் தனிமை என்னும் சிறையில் வாழ்ந்து காயப்பட்டிருந்த ஆத்யாவின் மனதில் அர்ஜூனும் அபியும் தங்கள் அன்பு என்ற மருந்தை தடவிக் கொண்டிருந்தனர்.
ஆத்யா அபியை உயிராக நேசிக்க, அபி தன் அம்மா தான் தன் உலகம் என்று ஆத்யாவையே சுற்றி வந்தாள். ரியா அர்ஜூனின் ஏஞ்சலாக உலா வர, பூஜாவும், ரியா, அபி போல அப்பா, அப்பாவென்று அர்ஜூனோட நன்றாக ஒட்டிக் கொண்டாள்.
அழகாக உறவுகளோடு அன்பாக நாட்கள் கழிந்தது.
கண்மூடித் திறக்கும் முன் இரண்டு மாதம் ஓடிவிட்டது.
அனைவருக்கும் இப்போது ஆத்யாவின் மனம் சற்று மாறி இருக்கிறது என்று தெரிந்தாலும், எப்போது அவள் முழுமையாக மனம் மாறி, அர்ஜூனின் மனைவியாக அவனோடு சேர்ந்து தன் வாழ்க்கையை தொடங்குவள் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருந்து கொண்டு தான் இருக்கிறது.
இப்படியே போனா சரிப்பட்டு வராது என்று நினைத்த கௌதம், ஒஒஒ ஒரு தென்றல் புயலாகி வருதே என்பதுபோல் ஆத்யாவிடம் சென்றான்.
ஆத்யா வீட்டு கார்டனில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக்கொண்டு இருக்க, வேகமாக அங்கு வந்த கௌதம் 'ஆது' என்று சத்தமாக கத்தி அழைத்தான்.
ஆத்யா திடீரென்று வந்த சத்தத்தில் பயந்து கையில் இருந்த தண்ணீர் பைப்பை கீழே போட்டுவிட்டு திரும்பி கௌதமை தீயாக முறைத்து, "ஏன்டா எரும அதான் இவ்ளோ பக்கத்துல வந்துட்ட இல்ல... மெதுவா கூப்பிட வேண்டியது தான, எதுக்குடா இப்புடி காது கிழியுற மாதிரி கத்துற" என்று திட்ட, கௌதம் ஈஈஈ என்று இளித்தவன், பின் தன் தலையில் தட்டிக்கொண்டு,
"டேய் கௌதம் இப்ப நீ அவள திட்டி, உருட்டி, மிரட்ட வந்திருக்க. அத மறந்து தொலைச்சிட்டு வழக்கம்போல அவ கிட்ட திட்டு வாங்கிட்டு இருக்க நீ. நீ இப்ப அர்ஜூன்பத்தி பேச வந்திருக்க, நெனவுல வச்சிக்க" என்று அவன் மூளை அவனை எச்சரிக்க, உடனே வில்லனாக மாறினான் கௌதம்.
"இங்க பாரு ஆது நான் உன் மேல ரொம்ப கோவமா இருக்கேன். உன்கிட்ட பேச எனக்கு சுத்தமா விருப்பமில்ல" என்று கைகளை கட்டிக்கொண்டு விரைப்பாக நிற்க,
ஆத்யா அவனை மேலும் கீழும் ஒரு பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.
சட்டென அவள் கையை பிடித்து நிறுத்திய கௌதம், "ஏய்…!! இங்க ஒருத்தன் மலமாடு மாதிரி நின்னுட்டு இருக்கேன். நீ பாட்டுக்கு எனக்கென்ன என்ற மாதிரி அப்படியே போற.?
? என்ன நெனச்சிட்டு இருக்க நீ.?" என்று முறைக்க ஆத்யா அவனை வித்தியாசமாக பார்த்தாள்.
"டேய் லூசடா நீ.?? இல்ல லூசான்னு கேக்குறேன். இப்ப நீதானா நீ என்னோட பேச உனக்கு பிடிக்கலைனு சொன்ன, அப்புறம் என்ன வெண்ணெக்கு, நான் இங்க இருக்கணும்" என்று அவளும் பதிலுக்கு முறைதாள்.
"ஏன்டி அகராதிக்கு பொறந்தவளே... ஒரு மனுஷன் ஒரு பேச்சுக்கு ஒன்னு சொல்லக்கூடாத, உன்னோட பேச வராட்டி நான் எதுக்கு இங்க வர போறேன். இங்க காத்துல அலையுற பேய், பிசாசு கிட்ட பேசுறதுக்கு தான் வந்தனா பிசாசே..?"
"யாருக்கு தெரியும்... நீ ஒரு வேள அதுக்கு கூட வந்திருக்கலாம்" என்று ஆத்யா தோளைக் குலுக்க, அவள் தலையில் கொட்டினான் கௌதம்.
"பிசாசு பிசாசு வார்த்தைக்கு வார்த்தை பதில் பேசிட்டு இரு, நான் இங்க எதுக்கு வந்தேன்னு தெரியுமா உனக்கு.??
"ம்ம்ம்… வேற எதுக்கு வந்திருக்க போற, உடம்பு ஊறல் எடுத்திருக்கும், மறுபடி ஏதாவது ப்ளான் போட்டு என்கிட்ட அடி வாங்க வந்திருப்ப, அதனா" என்றவள் கிண்டலாக சிரிக்க,
அவளை நிதானமாக பார்த்தான் கௌதம்.
"இல்ல ஆது நான் இப்ப இங்க வந்தது அர்ஜூன் பத்தியும் உன்னை பத்தியும் பேச தான்" என்றதும் இதுவரை கௌதமை நேருக்கு நேர் பார்த்த ஆத்யா விழிகள் தாழ்ந்து பூமியை பார்த்தது.