நிஜம் 20
நிஜம் 20
ஆஷா கதிரிடம் பேசிய விஷயம் தெரிந்த பிறகு, கோவத்தில் ஒரு ஆட்டம் ஆடித் தீர்த்தாள் த்வனி.
"யாரை கேட்டு கதிர்க்கு ஃபோன் பண்ண ஆஷா" என்று த்வனி உச்சஸ்தாயியில் கத்த, அவள் ஆஷூ என்று அழைக்காமல் ஆஷா என்று அழுத்தி உச்சசரித்த விதமே சொல்லியது அவளின் கோவத்தின் அளவை.
"ஏன் ஆஷூ நீயும் என்னைச் சித்ரவதை பண்ற, எதுக்கு நீ கதிர்கிட்ட எல்லாத்தையும் சொன்ன? இருக்கப் பிரச்சனை போதாதுன்னு, எதுக்காகப் புதுசா ஒன்னை இழுத்து விட நெனைக்குறீங்க? ஏன் எல்லாரும் என்னை இப்படிப் போட்டு படுத்துறீக்க, ஏன் என் ஜீவனை வதைக்குறீங்க" என்றவள் கண்கள் கலங்கி இருந்தது.
"இல்ல த்வனி… லயா வந்து பேசினா விக்ரம் கேப்பான்னு நெனச்சு தான்" என்று ஆஷா மென்று முழுங்க த்வனி தீயாக அவளை முறைத்தாள்.
"உங்களுக்கு எவ்ளோ நாளா விக்ரமை தெரியும் ஹான்… சொல்லுங்க எவ்ளோ நாளா தெரியும்… மிஞ்சு மிஞ்சுப் போன ஒரு ஆறு மாசம் இருக்குமா? இதுல என்னை விட அவனை நீங்க நல்லா புரிசுக்கிட்டீங்க அப்படித் தானா? நான் ரெண்டு வருஷம் முழுசா ரெண்டு வருஷம் அவன் கூடப் பழகி இருக்குகேன். இன்னும் சொல்லப்போன அவனோட எதிரிய அவன் முன்ன நின்னு அவனை எதிரிதிருக்கேன். அப்படிபட்ட என்னை விடவ அவனை உங்ளுக்குத் தெரியும். நீங்கள ஒன்னு செஞ்சு தேவையில்லாம இப்ப எவ்ளோ பெரிய சிக்கல்ல என்னை மாட்டி விட்டிருக்கீங்க தெரியுமா" என்றவள் திரும்பி ஆரு, ஷாலுவை பார்த்தாள்.
"ஏன்டி நீங்களும் இதுக்குக் கூட்டாடி?" என்று முறைக்க,
"இல்ல த்வனி, வருண் உங்களுக்குள்ள நடந்த எல்லாத்தையும் சொன்னாரு, அதை வச்சு தான் லயா இங்க வந்த எல்லாம் சரியாகிடும்னு நெனச்சு இப்படிச் செஞ்சோம்." என்ற ஷாலு கையைப் பிசைந்து கொண்டு நின்றாள்.
த்வனி ஷாலினியை பார்த்து அசட்டையாகச் சிரித்தவள், "என்னை விட, நேத்து பாத்த வருண் சொன்னது தான் உங்களுக்குப் பெருச போச்சு இல்ல, வருண் சொன்னது எல்லாம் உண்மைனு நீங்க எப்படி நம்புனீங்க? சரி அது உண்மையாவே இருந்த கூட, என்னை ஒரு வார்த்தை கூடக் கேக்காம, எதுக்குக் கதிர்கு கால் பண்ணீங்க? நான் மயக்கத்துல தானடி இருந்தேன். ஒரேயடிய செத்து போய்டலியே… ஒரு வார்த்தை என்னைக் கேட்டுருக்கலாம் இல்ல" என்றவளை என்ன சொல்லி சமாதானம் செய்வது என்று புரியாமல் மூவரும் கலங்கி நின்றனர்.
ஆஷா எவ்வளவு சமாதானம் செய்தும் அதையெல்லாம் காதில் வாங்காமல், த்வனி வேகமாகத் தன் அறைக்குச் சென்று கதவை மூடிக்கொண்டவள், உடனே கதிருக்கு அழைத்தாள். அரைமணி பேசிய பிறகு, "ப்ளீஸ் கதிர் நானா சொல்லாம, நீங்க இங்க வரக்கூடாது, வரவே கூடாது, இது என்மேல சத்தியம்" என்று ஃபேனை வைத்து விட்டாள்.
எல்லாம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையில் அனைவரும் அவர்கள் நாட்களைக் கடத்த, ஒன்றரை மாதம் வேகமாக ஓடி இருந்தது.
ஒரு மாதம் சாவுக்கும் வாழ்வுக்கும் இடையில் போராடிய விக்ரம் ஒருவழியாக உயிர் பிழைத்து வந்துவிட்டான் இன்னொரு உயிரை பலி வாங்க.
ஹாஸ்பிடல், டாக்டர், கவுன்சிலிங் என்று அனைத்தும் முடிந்து ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு வீடு திரும்பி இருந்தான் விக்ரம்.
த்வனி தன் ப்ளாட்டுக்கு சென்றவள், ஆஷா எவ்வளவு அழைத்து அவளுடன் வீட்டுக்கு செல்ல மறுத்து விட்டாள். ஜெகனும் பலமுறை வந்து தனியாக இருக்க வேணாம் என்னோட வந்துடு என்று அழைத்தும் த்வனி அதை எல்லாம் காதில் வாங்கவே இல்லை. அவளை அந்த நிலையில் பார்த்த ஜெகனுக்கு அவளின் இந்த நிலைக்குத் தான் சுயநலம் தான் காரணம் என்று உண்மை அவனை லேசாகச் சுட்டது.
த்வனி தன் இயல்பை தொலைத்திருந்தாள். நடந்த சம்பவம் அவளை உள்ளுக்குள் செல்லாக அரித்துக் கொண்டிருந்தது. தாலி கட்டிய கணவனாக இருந்தாலும், மனைவின் விருப்பம் இல்லாமல் அவளைத் தொடுவதும் பலாத்காரம் தான். மிகப்பெரிய தவறும் கூட, அந்தத் தவறை விக்ரம் தன்னை மறந்த நிலையில் த்வனிக்குச் செய்திருந்தான். அன்று விக்ரம் மட்டும் சுயநினைவில் இருந்திருந்தால் த்வனியின் விரல் நகத்தைக் கூடத் தீண்டி இருக்க மாட்டான். மனதாலும் உடலாலும் தன் ரென்யாவுக்கு உண்மையான இருக்க வேண்டும் என்ற அவன் மனவுறுதியை, போதை அன்று மழுங்கடிக்க, கோவம் அவன் உள்ளத்தைக் கொதிக்க வைக்க, அவனையும் அறியாமல் அந்தத் தவறை செய்து விட்டது.
எவ்வளவு முயன்றும் த்வனியால் நடந்த எதையும் ஜீரணிக்க முடியாமல் போக, கெஞ்ச நாள் கிராமத்திற்குச் சென்று அவள் தாய் வாழ்ந்த வீட்டில் இருந்தவளின் மனது ஒருமாதிரி தேறி இருக்க, ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு இன்று தான் சென்னை திரும்பினாள்.
நடந்த எதையும் மாற்ற முடியாது என்ற உண்மை புரிந்த த்வனி, இனி நடக்க வேண்டியதைக் ஒழுங்க செய்யவேண்டும் என்று முடிவெடுத்து, அதன்படி தான் வாழ்க்கையை நடந்த நினைக்க, விதி அவளை வேறு வழியில் தரதரவென இழுத்து செல்ல நாள் குறித்துக் காத்திருந்தது.
தன் ஆஃபிஸில் ஒன்றரை மாதமாகத் தேங்கி கிடக்கும் வேலைகளை த்வனி முழுமூச்சாகச் செய்து கொண்டிருந்த நேரம் ஷாலினியும் ஆருஷியும் அங்கு வந்தனர்.
இருவரும் வந்தது தெரிந்தும் த்வனி அவர்களைக் கண்டுகொள்ளாமல் தன் வேலையிலேயே கண்ணாக இருந்தாள்.
"ஏய் த்வனி இன்னும எங்க மேல கோவம் போகலய உனக்கு, எத்தனை முறை சாரி கேக்குறது, எங்கள பாத்த உனக்குப் பாவமா இல்லையாடி? ப்ளீஸ்டி… நாங்க கதிர் சாருக்கு ஃபோன் பண்ணது தப்பு தான். ஏதோ அறியா புள்ளைங்க தெரியாம பண்ணிட்டேன். கொஞ்சம் பெரிய மனசு பண்ணி இந்த ஒருதடவை எங்களை மன்னிச்சிடுடி" என்று இருவரும் கொஞ்ச, த்வனி அவர்களைக் கண்டு கொள்வதாக இல்லை.
"ஏய் இதெல்லாம் ரொம்ப ஓவர்டி, நீ மட்டும் உன் ஃப்ரண்ட் லயா வாழ்க்கை நல்லா இருக்கணும்னு என்னென்ன செஞ்ச, அதே மாதிரி தான நாங்களும் நீ நல்லா இருக்கணும்னு நெனச்சு லயாவை இங்க வரச்சொல்லி கூப்டோம். அதுல என்ன தப்பிருக்கு, உனக்கு வந்த ரத்தம் எங்களுக்கு வந்த மட்டும் டொமேட்டோ சாஸா என்ன? நீரடிச்சு நீர் வெலகுமா? கஞ்சிப்போன நதியெல்லாம் வத்தாத ஜீவாவை..." என்று ஆரம்பித்த ஆரு, "அடியேய் ஷாலி டைலாக் மறந்து போச்சு, அந்த ரிவர் பேரு ஜீவான்னு தான வரும்." என்ற ஆருவை த்வனி முறைத்து பார்க்க,
ஆரு, ஷாலு இருவரும் கண்களாலேயே நலந்தானா வாசிக்க, த்வனிக்கு லேசாகச் சிரிப்பு வந்துவிட்டது.
மெதுவாகக் கண்மூடி திறந்த த்வனி, "மறுபடியும் இந்தத் தப்பை பண்ணதீங்க. திஸ் இஸ் தீ ஃபர்ஸ்ட் அண்ட் லாஸ்ட் வாரிங் ஃபார் யூ கைஸ். இதுக்கு அப்பறம் எனக்கும் விக்ரமுக்கும் இடையில நடக்கும் இந்தப் பிரச்சனைக்குள்ளும் நீங்க யாரும் வராதீங்க. ப்ளீஸ் ஸ்டே அவுட்" என்றபடியே இருக்கையில் இருந்து எழுந்தவளுக்கு, கால்கள் தரையில் நிற்காமல் துவளா, அந்த அறையே சுற்றுவது போலிருக்க, தலையைப் பிடித்துக்கொண்டு அப்படியே சேரில் மெத்தென்று விழுந்தவள் முழுவதுமாக மயங்கி இருந்தாள்.
ஷாலினி அவசரமாக அவள் நாடியை பிடித்துப் பாரத்தவள், "ஆரு பல்ஸ் நார்மலா இல்ல, உடனே ஹாஸ்பிடல் போகணும், தூக்கு இவளை" என்றதும் ஆரு, ஷாலு இருவரும் த்வனியை தூக்கி தங்கள் காரில் போட்டுக்கொண்டு ஹாஸ்பிடல் விரைந்தனர்.
த்வனி கண்களில் கண்ணீர் நிற்காமல் வழிந்து கொண்டிருக்க, அவள் கைகள் அவள் அடிவயிற்றைத் தடவிக்கொண்டிருந்தது.
அவளின் உயிர் அவளுக்குள் சூழ் கொண்டு ஒன்றரை மாதங்கள் ஆகியிருந்தது.
விரும்பாத உறவில், வஞ்சத்தால் இணைந்து, இருவருமே விரும்பாமல் காலத்தால் ஏற்பட்ட விபத்தில் தனக்குள் உருவான உயிரை பற்றிச் சொன்னால் த்வனி எப்படி எடுத்துக்கொள்வாள் என்று பயந்த ஷாலினி தயங்கி தயங்கி விஷத்தை சொல்ல, த்வனிக்கு ஒரு நிமிடம் தன் காதுகளைக் கைக்கொண்டு நன்றாகக் கசக்கியவள், "நீ சொன்னது எனக்குச் சரியா கேக்கல ஷாலு, மறுபடியும் சொல்லு" என்று கேட்க,
"யூ ஆர் பிரக்னன்ட் த்வனி, சிக்ஸ் வீக்ஸ் ஆகுது" என்ற ஷாலினியை கண்கள் விரிய பார்த்த த்வனி கைகள் எங்கு உள்ளிருக்கும் உயிருக்கு வலித்துவிடுமே என்று பயந்து மெதுவாக ரொம்பவும் லேசாக வயிற்றை அழுத்தி பார்க்க, அவளும் அறியாமல் அவள் கண்களில் வழிந்த கண்ணீர் அவள் கன்னம் தொட்டு, கழுத்து தாண்டி, நெஞ்சைத்தை நிறைத்தது.
விஷயம் தெரிந்தால் த்வனி எப்படி அதை எடுத்துக்கொள்வாள் என்ற பயத்தில் இருந்த ஆருஷி, ஷாலினிக்கு த்வனியின் கண்களில் தெரிந்த சந்தோஷத்தை பார்த்து வியப்பாக இருந்தது. இது பெண்களுக்கே உரிய தாய்மையின் வெளிப்பாடு என்று தோழிகள் இருவரும் நினைக்க, அவள் சந்தோஷத்தின் உள்ளர்த்தம் என்னவென்று த்வனி ஒருத்திக்கு மட்டும் தான் தெரியும்.
விக்ரம் வீடு திரும்பியவன் தன் ப்ரைவேட் ரூமை விட்டு வெளியே வரவே இல்லை. லயாவின் கல்யாண ஃபோட்டோவின் முன் அமர்ந்து லயாவின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான்.
அவனைப் பார்க்க பார்க்க சௌந்தர்யாவின் மனது ரணமாக வலித்தது. என்ன செய்து மகனை தேற்றுவது என்று புரியாமல் அந்தத் தாயுள்ளம் தவித்துக் கிடக்க, விக்ரம் பைத்தியம் போல் எந்த நேரமும் லயாவின் புகைப்படத்தின் முன் உட்கார்ந்து கொண்டு, "நான் தப்புப் பண்ணிட்டேன் ரென்யா, தப்புப் பண்ணிட்டேன். இந்த ஜென்மத்தில் உன்னைத் தவிர யாருக்கு நான் சொந்தம் இல்லான்னு மனசால உனக்கு நான் செஞ்ச சத்தியத்தை நானே ஒடச்சிட்டேன். அந்த ராட்சசிகிட்ட நான் மறுபடியும் தோத்துப் போய்டேன் ரென்யா. உனக்குச் சொந்தமான என்னோட எல்லாத்தையும் நான் அவகிட்ட தொலச்சிடேன். நான் தப்புப் பண்ணிட்டேன்" என்று அவள் ஃபோட்டோ முன் உட்கார்ந்து உலறியபடியே சோறு, தண்ணி இல்லாமல், தளர்ந்த உடலும், இருண்ட கண்களுமாக இருந்தவனை அந்த நேரம் த்வனி பார்த்திருந்தால், அவளும் கூட ஒரு நிமிடம் அவனுக்காக வருந்தி இருப்பாள், அப்படிபட்ட நிலையில் இருந்தான் விக்ரம்.
கற்பு என்பது பெண்ணுக்கு மட்டும் இல்லை, அது ஆண்களுக்கு உண்டு. விரும்பிய உள்ளங்கள் விருப்பத்தோடு இணைவது தான் தாம்பத்தியம். அப்படி இல்லாமல் கட்டப்படுத்தி, விருப்பம் இல்லாமல் ஒரு உறவு நடக்கும்போது, அங்குப் பெண்கள் மட்டும் அல்ல அந்த நேரத்தில், அந்த இடத்தில் ஒரு நல்லா ஆண்மகனும் தன் கற்பை இழக்கக் தான் செய்கிறான் என்பதை விக்ரம் அனைவருக்கும் உணர்த்தி இருந்தான்.
ஹாஸ்பிடல் இருந்து வந்து அந்த அறைக்குள் விக்ரம் நுழைந்து ரெண்டு நாட்கள் ஆகிவிட்டது. சௌந்தர்யா அவனைப் பார்த்து கண்கலங்கி நிற்க, அந்த நேரம் அவர் ஃபோன் ஒலித்தது. ஆஷா தான் அழைத்திருந்தாள்.
"சொல்லுமா ஆஷா, த்வனி எப்படி இருக்கா? கிராமத்தில் இருந்து வந்துட்டான்னு மெசேஜ் பண்ணி இருந்த, இப்ப எப்படி இருக்க" என்று கேட்க, அந்தப் பக்கம் ஆஷா சொன்ன விஷயத்தைக் கேட்டவர் அப்படியே உயிருள்ள சிலையாக நின்றார்.
"ஆஷா நீ… நீ… நீ இப்ப என்ன சொன்ன? திரும்பச் சொல்லு" என்று சௌந்தர்யா ஆர்வமாகக் கேட்க,
"த்வனி கர்ப்பம இருக்கம்மா, நீங்க பாட்டியாகப் போறீங்க" என்று ஆஷா சொல்ல சௌந்தர்யா அடுத்தப் பத்து நிமிடத்தில், ஹாஸ்பிடல் பறந்து வந்தவர் த்வனின் கைகளில் முகத்தைப் புதைத்தபடி கதறி அழுதுகொண்டிருந்தார்.
"ஏய் ஷாலு என்னடி இது? விஷயம் தெரிஞ்ச த்வனி அழுவ, கதறுவன்னு நம்ம நெஞ்ச, அவ என்னமோ ஒரு கோடிக்குக் கிஃப்ட் கூப்பன் கெடச்ச மாதிரி ரொம்பச் சந்தோஷமா இருக்கா. ஆனா, இந்த ஆன்ட்டி இப்படி ஹாஸ்பிடல் பெட் நனையுற அளவுக்குக் கண்ணீர்வுட்டுட்டு இருக்காங்க, இங்க என்னதான் நடக்குது. எல்லாம் உல்டா புல்டாவ இல்ல இருக்கு" என்று ஷாலினி காதைக் கடிக்க, ஷாலினி ஓங்கி ஆருஷி காலை மிதிக்க, அதற்குப் பிறகு ஆரு அடுத்த வார்த்தை பேசுவாள். நோ சான்ஸ்…
