காதல் 8


காதல் 8








மறுநாள் காலை மிருதுளா வேகவேகமாக காலேஜ் கிளம்பிக் கொண்டிருக்க, அவளை பார்த்து தலையில் அடித்து கொண்டாள் தனு.


 "ஏய் லூசு இப்ப எதுக்கு இவளோ அவசர அவசரமா காலுக்கடியில் நெருப்பு புடிச்ச மாதிரி குதிச்சிட்டு இருக்க நீ?" நிலவனை பார்க்க தான் அவளுக்கு இத்தனை அவசரம் என்ற கடுப்பில் தனு கேட்க, 

மிருதுளா திரும்பி தனுவை முறைத்தாள். 


"ஏன்டி உனக்கு தெரியாதா? நான் ஏன் இவ்ளோ சீக்கிரம் கிளம்புறேன்னு, தெரிஞ்சுக்கிட்டு என்ன கேள்வி வேண்டி கிடக்கு உனக்கு" என்று அவளும் கடுப்பாகவே பதில் தந்தாள். 


" மிருது நான் சொல்றதை கேளு, நீ ஷரவனண்ணா பத்தி அந்த விசித்திர குரங்கு கிட்ட சொல்லி எந்த யூசும் இல்லைன்னு தான் எனக்கு தோணுது. ஏன்னா ஷரவனண்ணாவும் அந்த கொரங்கும் சின்ன புள்ளையில் இருந்து ப்ரண்ட்ஸ். சோ நிலவனுக்கு ஷரவன் அண்ணா உன்னை காதலிக்கிற மேட்டர் கண்டிப்பா தெரிந்திருக்கும். நான் நினைக்கறது கரெக்டா இருந்த, நேத்து அந்த கொரங்கு உன்ன லைப்ரரிக்கு புக் எடுக்க அனுபிச்சது கூட, அவங்க ப்ளானா இருக்கலாம்" என்று நிலவனை, தனு சரியாக கணித்து சொல்ல, மிருதுளாவோ அவள் சொல்வதை காதில் வாங்கவில்லை.


"ஏய் நீ பாட்டுக்கு சும்மா எதையும் சொல்லாத... நிலவன் அண்ணா எதுக்கு அப்படி செய்யனும், அவர் ஒன்னும் ஷரவன் மாதிரி இல்ல, ரொம்ப நல்லவர்" என்று மிருதுளா நிலவனுக்கு சப்போட் பண்ண தனுவுக்கு பற்றிக்கொண்டு வந்தது. 


"அடி போடி  இவளே, ஷரவன் அண்ணா மாதிரி இருக்க பசங்களை கூட நம்பலாம். ஆனா, அந்த குரங்கு மாதிரி அமுக்குனி பசங்களை நம்பவே கூடாது. சரி நீ இவ்வளவு பேசுறியே, நீயே சொல்லு நேத்து அந்த நேரம் நீ லைப்ரரியில் தான் இருந்தேன்னு, அதுவும் தனியா இருந்தேன்னு ஷரவனுக்கு எப்படி தெரியும்" என்று கேட்க மிருதுளாவுக்கும் அப்போது தான் அது உரைத்தது. 


"ஆமாம் இல்ல! அதெப்படி சரிய அந்த நேரம் பார்த்து அந்த லூசு அங்க வந்தது?" என்று யோசித்தவள், தனுவை பார்த்து "எப்படி அவன் கரெக்டா அங்கே வந்தான்? என்று கேட்க,


"ஏய் லூசு நான் கேட்டதை நீ திரும்பி என்கிட்டயே கேக்குறியா? வெளங்கிடும் போ" என்று அலுத்துக் கொண்டாள்.


"எது எப்படியோ தனு நான் நிலவன்  அண்ணாவை நம்புறேன் அவர்கிட்ட அந்த லூசு பத்தி சொல்லத்தான் போறேன். அதுக்கு அப்புறம் அண்ணா அந்த ஷரவனை கூப்ட்டு மிரட்டுற மிரட்டுல, அந்த லூசு என் பக்கம் கூட திரும்பி பாக்க மாட்டான் பாரு" என்று நடக்கப் போவது தெரியாமல்  நம்பிக்கையாக சொல்ல,


 "தனு பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே இந்த மரமண்டைய காப்பாத்து" என்று மேலே பார்த்து  வேண்டிக்கொள்ள, அவள் முதுகில் நாலு போட்ட மிருது,  "வாயை மூடிட்டு கிளம்புடி" என்று எழுந்தவர் கல்லூரி வந்து நிலவன் எங்கே இருக்கிறான் என்று தேடினார்கள்.



இங்கு நிலவனும், விஷ்வாவும் ஷரவனை பிடித்துக் கொண்டனர், "டேய் நேத்து அமுல்பேபி கிட்ட லவ் சொன்னியே, அதுக்கப்புறம் என்ன ஆச்சுன்னு ஒரு வார்த்தை ஃபோன் பண்ணி சொன்னியடா நீ, நைட் பூராவும் நாங்க என்ன ஆச்சுன்னு குழம்பிட்டு கிடந்தோம். என்னடா ஆச்சு நேத்து? அமுல் பேபி உனக்கு ஓகே சொல்லிடுச்ச?" என்று விஷ்வா ஆர்வமாக கேட்க,


"ம்க்கும்… யாரு? அவ உடனே ஓகே சொல்லிட்டாலும்? ஏன்டா நீ வேற, என்ன பார்த்த உடனே பயத்துல அவளுக்கு ஜன்னி வந்து மாதிரி காலும், கையும் நடுங்க ஆரம்பிச்சுருச்சு" என்று சலித்துக் கொண்டான்


"அடப்பாவமே அப்ப நாங்க கஷ்டப்பட்டு பிளான் பண்ணி அமுல்பேபிய தனிய லைப்ரரிக்கு அனுப்புனது எல்லாம்  வேஸ்ட்ட" என்று நிலவன்  ஷரவனை கலாய்க்க,


 "டேய் டேய் ரொம்ப ஆணவத்தில் ஆடாதடா... என்ன என்னன்னு  நெனச்ச? நானெல்லாம் முன்னே வச்ச காலை பின்ன வைக்கிறவன் இல்ல. நேத்தே மித்துகிட்ட என் லவ்வை சொல்லிட்டேன்" என்று சட்டை காலரை தூக்கி விட்டு கெத்தாக சொல்ல, நண்பர்கள் இருவருக்கும் திறந்த வாய் மூடவில்லை. 


"டேய் என்னடா சொல்ற? உண்மையாவா!" என்று ஆச்சரியப் பட. ஷரவன் கர்வமாய் புன்னகைத்தான். 


"டேய் டேய் என்னடா நடந்துச்சு, கொஞ்சம் விவரமா சொல்லுடா" என்று விஷ்வா, ஷரவனை நச்சரித்தான். 


ஷரவன் நேற்று மிருதுளாவிடம் அவன் தன் காதலை சொல்லிய விதத்தைப் பற்றி சொல்ல, நிலவன் விழுந்து விழுந்து சிரித்தான்.


"டேய் இந்த உலகத்தில் எவனும் இந்த மாதிரி லவ்வை சொல்லி இருக்க மாட்டான்டா" என்று சிரித்துக்கொண்டே சொன்னவன், "ஏன்டா லவ்வை சொல்ல சொல்லி அனுப்பி வச்ச, இப்படி அந்த பிள்ளைய மிரட்டிட்டு வந்திருக்கியே" என்று மறுபடி சிரிக்க,


விஷ்வாவிற்கு மட்டும் சின்ன வருத்தம். அது அவன் முகத்தில் தெரிய, "டேய் விஷ்வா என்னடா என்ன ஆச்சு? ஏன் முகம் ஒருமாதிரி இருக்கு?" என்று ஷரவன் கேட்டான்.


"இல்லடா!! நீ அமுல் பேபிய லவ் பண்றது ஓகே. அது உன் விருப்பம். ஆனா, அதுக்காக மிருதுவ நீ வேற யாரையும் லவ் பண்ண கூடாதுன்னு சொல்றது எந்த விதத்தில் நியாயம் சொல்லு. அது அவ தனிப்பட்ட உரிமை, அவளோட பர்சனல், அதை தடுக்க நீ யாரு? சரி ஒருவேளை மிருது மனசுல ஏற்கனவே வேற யாராவது இருந்திருந்தா அப்ப நீ என்னடா செய்வ" என்று சற்று கோபமாகவே கேட்டான்.


ஷரவன் சன்னமான சிரித்தவன், "ஒருவேளை என் மித்து ஏற்கனவே யாரையாவது விரும்பி இருந்த அவன் நல்லவனா, மித்துவை சந்தோஷமா பாத்துக்குவான்ற பட்சத்தில், நா மித்துவை விட்டு விலகி தள்ளி நின்னு அவ சந்தோஷத்தை பார்த்துட்டே இருந்துடுவேன்டா. எந்த வகையிலும் அவளை நான் தொந்தரவு பண்ணியிருக்க மாட்டேன். இன்னொருத்தனை விரும்புற பொண்ணை அடைய நினைக்கிறவன் நல்ல ஆம்பளையே இல்ல. நான் ஆம்பளடா. எனக்கு மித்து சந்தோஷமா இருந்த மட்டும் போதும். ஆனா, மித்து மனசுல இப்ப வரை யாரும் இல்ல. இனியும் யாரும் வந்துடக் கூடாதுன்னு தான் நான் அப்படி சொல்லிட்டு வந்தேன். அதோட அவ என்னோட மித்து என்னால மட்டும் தான் அவளை கடைசி வரை சந்தோஷமா பாத்துக்க முடியும்" என்ற ஷரவனை கட்டிக்கொண்டான் விஷ்வா.


" நீ கிடைக்க அமுல்பேபி கொடுத்து வச்சிருக்கனும்டா" என்று சந்தோஷமாய் சொல்ல, நிலவனும் அதையே தான் நினைத்தான். 


"அது சரி ஏற்கனவே மிருது உன்ன பார்த்தாலே ஓடும். நீ லவ்வை சொல்றேன்னு இப்படி மிரட்டிட்டு வேற வந்திருக்க இனி என்னடா ஆகும்?"


"ம்ம்ம்ம் நா மித்துவ புரிஞ்சு வச்சிருக்கிறது கரெக்ட்ட இருந்த இந்நேரம், அவ நொண்ணன்" என்று நிலவனை கொலைவெறியுடன் முறைத்தவன், "உன்கிட்ட என்ன பத்தி குற்றப்பத்திரிகை வாசிக்க வந்துட்டு இருப்பா" என்று சொல்லி முடிக்கும் முன் அவர்கள் இருந்த இடம் நோக்கி தனுவுடன் வந்து கொண்டிருந்தாள் ஷரவனின் இதயராணி.


"இதோ வந்துட்டா இல்ல, உன் தொங்கச்சி,

டேய் நா இருந்தா அவ பேச மாட்டா, நான் ஒளிஞ்சுக்கிறேன்" என்று அவன் மறைவாக  நின்று கொள்ள. மித்து அவர்கள் அருகில் வந்தாள். 


"குட் மார்னிங் நிலா ண்ணா, குட் மார்னிங் விஷ்வா ண்ணா" என்று மலர்ந்த முகமாய் சொல்ல, "குட் மார்னிங் அமுல் பேபி" என்ற நிலவனின் பார்வை முழுவதும்  தனு மேல் தான் இருந்தது. 


அவள் இதழை சுழித்து ஒழுங்கு காட்டியவள், "குட் மார்னிங் விஷ்வா அண்ணா என்று விஷ்வாவிற்கு மட்டும் சொன்னவள், நிலவனை திரும்பி கூட பார்க்கவில்லை.


'ஓஓஓ… மேடம் என்னை பாக்க மாட்டீங்களோ! இருடி இரு நேத்து மாதிரி என் கிட்ட தனியா சிக்குவே இல்ல அப்ப இருக்குடி உனக்கு. அந்த சுளிக்கிற உதட்டுக்கு' என்று நினைத்தவன், அடுத்த நொடி தான் என்ன நினைத்தோம் என்பது புரிய, உண்மையில் அதிர்ந்து விட்டான். 


'இவகிட்ட மட்டும் ஏன் என்னால் இயல்பா இருக்க முடியல' என்று யோசித்தவனுக்கு பாவம் வழக்கம் போல் பதில் தான் கிடைக்கவில்லை. (அடப்போடா உன்னோட பெரிய தொல்லையா போச்சு)


இது எதையும் கவனிக்காத விஷ்வா. "என்ன அமுல்பேபி காலையிலயே அண்ணாக்களை பார்க்க வந்திருக்க, ஏதும் சொல்லனுமா" என்று மறைந்திருந்த ஷரவனை ஒரு பார்வை பார்த்துக் கொண்டே கேட்க,  மித்து 'ஆம்' என்று தலையாட்டினாள்.


மிருதுளா சுற்றி முற்றி ஷரவன்  எங்கும் இருக்கிறானா என்று உத்து உத்து பார்த்துவிட்டு, அவன் எங்கும் இல்லை என்ற தைரியத்தில், நேற்று ஷரவன் தன்னிடம் நடந்து கொண்டதை சொல்லி, "நீங்க தான் அண்ணா அவங்களை கூப்பிட்டு மிரட்டி வைக்கனும்" என்று படு சீரியஸ்சாக சொல்ல. நிலவனும், விஷ்வாவும் வந்த சிரிப்பை அடக்க பெரும் பாடுபட்டனர். ஆனாலும் ஷரவன் மிருதுளாவை இந்த அளவு தெரிந்து வைத்திருப்பதை நினைத்து, ஷரவன் மிருதுளாவை கடைசிவரை நன்றாக பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கை வந்தது இருவருக்கும்.


நிலவன் தனக்கு எதுவும் தெரியாது என்பது போல், "என்ன அமுல் பேபி! இவ்வளவு நடந்திருக்கு? அந்த ஷரவன் பையன் உன்னை அவ்வளவு மெரட்னானா? அவன நான் சும்மா விடப் போறதில்ல. அவனுக்கு எவ்வளவு தைரியம் இருந்தா உன்ன மெரட்டி இருப்பான். அவனை நான் என் பண்றேன் பாரு" என்று சட்டை கையை ஏற்றி விட்டவன்,


"டேய் ஷரவன் இங்க வாடா" என்று குரல் கொடுக்க மிருதுளாவுக்கு மொத்த உடலும் அடிவிட்டது.


"ஐயோ சாமி இந்த கடுவம் பூனை இங்க தான் இருக்கா. அச்சோ இது தெரியாம உலறிட்டோமே" என்று மலங்க மலங்க முழிக்க. ஷரவன் மிருதுளாவை குறும்பாக பார்த்த படியே நிலவன் அருகில் வந்து நின்று, மிருதுளாவை பார்த்து கண்ணடிக்க, மிருதுளாவுக்கு தூக்கிவாரிப் போட, பட்டென தலையை குனிந்து கொண்டாள். 


மிருதுவையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த ஷரவன் முதுகில் நிலவன் ஓங்கி அடித்து, "டேய் நேத்து என்னமோ நீ மிருதுவை லைப்ரரி வச்சு மெரட்டினியாமே? உனக்கு எவ்வளவு திமிர் இருந்தா என் அமுல் பேபி  பயமுறுத்தி இருப்ப... கேக்க ஆள் இல்லைன்னு நெனச்சியா" என்று கஷ்டப்பட்டு கோபமாக கேட்பது போல் நடிக்க, மிருது மனதில் ஏக குஷி, திரும்பி தனுவை அலட்சியமாக பார்த்து இல்லாத காலரை தூக்கி விட்டு கொண்டாள்.


"பாத்தியாடி என் அண்ணாவை எப்படி அந்த கடுவன்பூனை மிரட்டுறாங்க, என்ன நெனச்ச என் அண்ணாவ பத்தி" என்று தனு காதை கடிக்க. 


அவளோ, "ம்ம்ம்ம் பார்த்துட்டு தான்டி இருக்கேன். இப்ப தானே ஸ்டார்ட் ஆகி இருக்கு. உன் நொண்ணானோட ஃபினிஷிங் எப்படி இருக்குன்னு இனிதான் பாக்கணும்" என்று திமிராக சொல்ல. மிருது அவளை முறைத்து விட்டு திரும்பி நிலவனை பார்க்க, அவன் இன்னும் ஷரவனை மிரட்டுவது போல் நடித்து கொண்டிருந்தான். 


 "டேய் இது ரொம்ப ஓவர்டா. நேத்து வந்த உன் தங்கச்சிக்காக உன் ஆருயிர் நண்பனை இப்படி அடிக்கிறியே, இது நியாயமா, அடுக்குமா, ஏன்டா என்னை பத்தி உனக்கு தெரியாது. உன் நண்பன் அப்படியெல்லாம் செய்வனா, நா அவளை மிரட்டவே இல்ல டா... அவ பொய் சொல்ற டா" என்று அழுவது போல் குரலை வைத்துக் கொண்டு சொல்ல, 


அதை பார்த்த மிருதுளா, 'அட அண்டா புழுகா. இப்படி பொய் சொல்றாரே இவரு' என்று நினைத்தவள். அப்பாவியாக நிலவனை பார்க்க, அவனோ, "என்ன மிருது இது? அவன் உன்ன மிரட்டாவே இல்ல, நீ தான் பொய் சொல்றேன்னு சொல்றான், என்னம்மா இதெல்லாம்"


  "அய்யோ இல்ல அண்ணா அவங்க தான் பொய் சொல்றாங்க. நேத்து அவங்க என்னை எப்படி பயமுறுத்தினாங்க தெரியுமா?" என்று கண்கள் படபடக்க, சின்ன பிள்ளை போல் கைகளை உதறிக் கொண்டு கடகடவென்று வார்த்தைகளை கொட்ட, ஷரவனுக்கு அவளின் இந்த செயல் அவனுக்குள் குறுகுறுப்பை ஏற்படுத்த, அப்படியே அவளை இறுக்கி அணைத்து கொள்ள வேண்டும் போல் உள்ளே ஆவல் தோன்றியது.  


" டேய் அமுல்பேபி பொய் சொல்ல மாட்டா. நீதான் அவளை மிரட்டி இருக்க" என்று நிலவன் முறைக்க,


"டேய் நா ஒன்னும் அவளை மிரட்டல, நான் உன்ன லவ் பண்றேன். இனி உன்னை யார் கேட்டாலும் உன் லவ்வர் பேரு ஷரவன்னு சொல்லுன்னு மட்டும் தான்டா சொன்னேன். ஒரு இளைஞன் ஒரு இளஞ்சி கிட்ட லவ் சொல்றது தப்பா" என்று முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு கேட்க, நிலவன் திரும்பி மிருதுளாவை ஒரு பார்வை பார்த்தவன், ஷரவனிடம் திரும்பினான்.



"டேய் அப்போ நீ அமுல் பேபிய  லவ் பண்றியா? என்று என்று கோபமாக கேட்க, ஷரவன் வேக வேகமாக ஆம் என்று தலையாட்டினான்.


"டேய் அவ என் தங்கச்சி, நீ பாட்டுக்கு இப்ப லவ் பண்றேன்னு சொல்லிட்டு, நாளைக்கு வந்து இது செட்டாக, எங்களுக்குள்ள ஒத்து வராது, அப்படி இப்படின்னு ஏதாவது சொன்னா நாங்க என்னடா செய்றது? உன் ஸ்டேட்ஸ் வேற அவ ஸ்டேட்ஸ் வேற? இது சரிப்பட்டு வருமா? இது என் தங்கச்சி வாழ்க்கை பிரச்சனை" என்று அவளின் அண்ணன் ஸ்தானத்தில் இருந்து உண்மையான அக்கறையோடு கேட்டான் நிலவன்.


 "டேய் யாரா பார்த்து என்ன வார்த்தை சொன்னா? இந்த ஜென்மம் மட்டுமில்ல, இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் மித்து ஒருத்தி தான்டா எனக்கு பொண்டாட்டி. இது எங்க அம்மா மேலயும், இவ பேர சொல்லி எனக்குள்ள துடிக்குதே இந்த இதயத்துமேலயும் சத்தியம்" என்று தன் இதயத்தில் கை வைத்து சொல்ல, அந்த வார்த்தையில் மிருதுளாவுமே ஒரு நிமிடம் உருகி விட்டாள். 


தனுவோ இங்க என்னடா நடக்குது என்று ஒன்றும் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தாள். 

 

"ம்ம்ம்ம் ரொம்ப சந்தோஷம். நீ என் தங்கச்சியை உண்மையா லவ் பண்றேன்னு எனக்கு புரிஞ்சுருச்சு, என் தங்கச்சி படிக்கிற பொண்ணு, அவ படிப்பு முடிஞ்சதும் பெரியவங்க கிட்ட பேசி  கல்யாணத்தை முடிச்சிடலாம். அதுவரைக்கும் ஒழுங்கா இருக்கணும். என்ன ஓகே வா" என்று ஷரவனை பார்த்து நிலவன் கண்ணடிக்க, அவனும் "நீங்க சொன்ன சர்தான் மச்சான்" என்று கையை கட்டிக்கொண்டு நல்ல பிள்ளைபோல் சொல்ல,


"ம்ம்ம் அது அந்த பயம் இருக்கணும்" என்ற நிலவன் மிருதுளாவிடம் திரும்பி, "அமுல்பேபி எல்லாம் ஓகே மா, இனி நீ பயப்பட வேணாம் சரியா... படிப்பு முடிஞ்சதும் உங்க கல்யாணம். அதுக்குள்ள இவன் உன்கிட்ட ஏதாவது சேட்டை பண்ண என்கிட்ட வந்து சொல்லு, நா இவனை பாத்துக்குறேன்,  நீ தைரியமா போடா அண்ணா இருக்கேன்" என்று மிருது கன்னத்தில் அன்பாக தட்டியபடியே, தனுவை ஒரு மாதிரி விழுங்கும் பார்வை பார்த்து விட்டு ஷரவன் தோளில் கைபோட்டு, "வாங்க மாப்பிள்ளை நம்ம போலாம்" என்று அவனையும் விஷ்வாவையும் அழைத்துக் கொண்டு சென்று விட, மிருதுளாவும் தனுவும் ஷாக் அடித்தது போல் நின்றனர்.


"ஏய் தனு இப்ப இங்க என்ன நடந்துது?" என்று மிருதுளா புரியாமல் கேட்க, தனு அவள் தலையில் நங்கெனா கொட்டியவள், "போடிங்கு இவளே! மூதேவி… மூதேவி நா அப்பவே சொன்னேன் அந்த கொரங்க நம்பதேன்னு கேட்டிய? இப்ப பாரு உன்  நொண்ணன் உனக்கும், ஷரவன் அண்ணாக்கும் கல்யாணம் பேசி முடிச்சுட்டு போறான் டி, எரும எரும" என்று அவளை இன்னும் மொத்தியவள், "நா அப்பவே சொன்னேன் அந்த நிலவனை நம்பாதே நம்பாதே,ன்னு தல தலையா அடிச்சுக்கிட்டேன் கேட்டியா... கேட்டியா… இப்ப என்ன நடந்துச்சுன்னு பாரு" என்று தனு கத்த,  மிருது ஏதோ சொல்ல வாய் எடுக்க, தனு திரும்பி பார்த்த பார்வையில் கப் என்று வாயை மூடிக்கொண்டாள்.