காதல் 4
https://www.amazon.in/dp/B085QLT3R6/ref=cm_sw_r_cp_apa_i_ggkCEbZ189AQH
காதல் 4
சிந்து கண்ணில் கொலைவெறியுடன் வருவதை பார்த்த ஷரவனுக்கு அப்போது தான் ஞாபகம் வந்தது. காலை மிருதுளாவை பார்க்கும் ஆவலில் சிந்துவை காலேஜ் கூட்டி வர மறந்துவிட்டு வந்தது.
'ஐய்யோ போச்சு இன்னைக்கு இந்த கொத்தவரங்கா கிட்ட நல்லா மாட்டினேன். பிரிச்சு மேய போற' என்று அவன் நினைக்கும் போதே. அவன் தலையில் சிட்டுக்குருவி பறந்து.
"ஆஆஆஆ" என்று தலையை தேய்த்து விட்டு கொண்டு சிந்துவை பார்த்தவன், "சாரி டா குட்டிமா" என்று ஆரம்பிக்கும் போதே மறுபடி தலையில் கொட்டு விழுந்து.
"எரும எரும நீயெல்லாம் ஒரு வயசு பையனடா, அழகான பொண்ணை தினமும் காலேஜ் கூட்டி போக சான்ஸ் கிடைக்கலையேன்னு அவனவன் அலையுறான். நீயென்னாடான்ன கையில் கிடச்ச சான்ஸை இப்படி வேஸ்ட் பண்ணிட்டு இருக்கீயே, லூசு லூசு." என்று அவன் முதுகில் மொத்தியவள், "என்னை பிக் பண்றத விட அப்படி என்னடா கழட்ற வேலை உனக்கு. அதுவும் எப்பவும் காலேஜ்க்கு லேட்டா வர எரும. இன்னைக்கு வாட்ச்மேனுக்கு முன்னையே வந்திருக்கேன்னு தகவல் வந்துது என்ன விஷயம்?" என்று ஷரவன் கதை திருகினாள் சிந்து.
அங்கு நடப்பதை பார்த்து விஷ்வா தலையில் அடித்துக் கொண்டவன், "அடியேய் பேயி இன்னைக்கு இல்லடி, இனிமே எப்பவுமே இப்படித்தான் நடக்கும்" என்றவனை சிந்து புரியாமல் பார்த்தாள்.
"ஏன்டா?? என்னமோ இவரு நாயகன் படத்துல வர வேலுநாயக்கர் ஆயிட்ட மாதிரி இனிமே எல்லாம் இப்புடி தான்னு டயலாக் விடுற"
"அப்டி இல்லடி பேயி… ஷரவன் நாயகன் பட கமல் ஆகல, காதல் மன்னன் கமல் ஆகிட்டான்" என்றவன் மிருதுளா பற்றி சொல்ல ஆரம்பிக்க பின்னால் இருந்து சொல்ல வேண்டாம் என்று ஷரவன் சைகை செய்வதை கூட கவனிக்காமல் அனைத்தையும் உளறி வைத்தவன், ஷரவனை திரும்பி பார்க்க, அவன் விஷ்வாவை தீயாய் முறைத்துக் கொண்டிருந்தான்.
"டேய் இப்ப எதுக்கு இவ்வளவு பாசமா என்னை பாக்குற நீ?" என்றவன், "அய்யோ சாரிடா மச்சி மறந்துட்டேன். உன் லவ் மேட்டர் சிந்துக்கு தெரிய கூடாதுன்னு சொன்ன இல்ல. சாரிடா நா தெரியாம உளறிட்டேன். சாரிடா ரொம்ப சாரி" என்றவன் எனக்கு ஒன்னும் தெரியாது என்பது போல மூஞ்சை பாவமாக வைத்துக் கொண்டு எரியும் கொள்ளியில் எண்ணெய் உற்றினான்.
"பத்தவச்சிட்டியே பரட்டை" என்று ஷரவன் தலையில் அடித்துக் கொண்டவன், "ஈஈஈ" என்று கேவலமாக சிரித்துக் கொண்டே சிந்துவை பார்க்க,
அவள் ஏற்கனவே விஷ்வா, ஷரவன் லவ் பற்றி சொன்னதை கேட்டு கடுப்பின் உச்சத்தில் இருந்தவள், இதை கேட்டு இன்னும் கொதித்து போக, "ஏன்டா டேய்... உன் லவ் மேட்டரை நீ முதல்ல என் கிட்ட தான் சொல்லி இருக்கணும். அதை செய்யல, அது மொத தப்பு, இதுல இந்த பக்கீஸ் கிட்ட, இது எனக்கு தெரிய கூடாதுன்னு வேற சொல்லி வச்சிருக்கியா நீ." என்றவள், அவனை போட்டு புரட்டி எடுத்துவிட்டு. அடுத்து தன் அண்ணன் நிலவனையும் பிடி பிடி என்று பிடித்து விட்டு விஷ்வாவிடம் யூ டார்ன் போட்டாள்.
"அய்யோ சைத்தான் பார்வை நம் மேல் படுதே" என்றவன் திரும்பி பார்க்க பரத்தும், பிரேமும் அங்கிருந்து எஸ்ஸாகி இருந்தனர்.
'இதான் இவனுங்க கிட்ட இருக்க கெட்ட பழக்கம். கூடவே இருப்பானுங்க, அடின்னு வந்த வெறிநாய் தொறத்துற மாதிரி ஓடிடுவாங்க' என்று மைண்ட் வாய்ஸ் சில் புலம்பியவன் காதுகளை சிந்துவின் அர்ச்சனை நிறைத்தது.
"டேய் பன்னி நீயெல்லாம் ஒரு லவ்வர்ர டா. அவன் தான் என்கிட்ட சொல்ல கூடாதுன்னு சொல்லுச்சின்னா, நீயென்ன செஞ்சிருக்கணும்... உடனே எனக்கு ஃபோன் பண்ணி இது இது இப்படி இப்பிடின்னு மேட்டரை புட்டு புட்டு வச்சிருக்க வேணாம்? உன்னை எல்லாம் நம்பி நான் எப்படிடா கல்யாணம் பண்றது." என்றவள், வன்முறை கையில் எடுத்து விஷ்வாவை வெளுத்து வாங்க.
ஷரவனும், நிலவனும், "குட் கேர்ள். பாரபட்சம் பார்க்காம திட்டுற" என்றவர் திரும்பி விஷ்வாவை பார்த்து, "ஒய் ப்ளட் சேம் ப்ளட்" என்று hi-fi அடித்துக்கொள்ள சிந்து பார்த்த பார்வையில் கப்சிப்பென்று வாயை மூடிக்கொண்டனர்.
"ஏன் மாம்ஸ் நான் தானா உன் செல்லம். அப்ப நீ என்கிட்ட தானா உன் லவ்வை முதல்ல சொல்லி இருக்கணும். ஏன் மாம்ஸ் மறச்ச? அப்ப நா உன் செல்லம் இல்லையா" என்று வருத்தமாக கேட்க,
"ஏய் சிந்து குட்டி அப்படியெல்லாம் இல்லடா. எப்பவும் நீ தான்டா என் செல்லம். மித்துக்கு இன்னும் நான் அவளை லவ் பண்ற மேட்டர் தெரியாது. நா மட்டும் உன்கிட்ட மித்து பத்தி சொல்லி இருந்த, நீ உடனே அவளை பார்க்கனும்னு கேப்ப, அவகிட்ட நா அவளை லவ் பண்றது பத்நி சொல்லிட்டு தான் அடுத்த வேலை பாப்ப, அதான் உன்கிட்ட சொல்லல, என்னோட காதலை நான் தான்டி அவகிட்ட சொல்லணும். அவ முகத்த பாத்து, நேருக்கு நேர் அவ அழகான கண்ணை பார்த்து சொல்லணும். அத கேட்கும்போது அவ முகத்தையும், அதுல வர மற்றதை ரசிக்கணும்டா. அதனால தான் உன்கிட்ட சொல்லல." என்று சிந்துவை சமாதானப்படுத்த, (பாவம் ஷரவன் அறிய மாட்டான் ஷரவன் காதலை சொல்லும் தருணம் மிருதுளா முகத்தில் பயம், குழப்பம், சந்தேகம் மட்டும் தான் இருக்க போகிறது என்று.) ஷரவன், சிந்துவிடம் சொன்னதை கேட்க கூடாத இரண்டு செவிகள் கேட்டுவிட்டது.
ஷரவன் எப்போதோ செய்த சிறு தவறு அவன் காதலில் பெரும் சூறாவளியை ஏற்படுத்த போகிறது.
நாட்கள் அதன் போக்கில் நகர மிருதுளா காலேஜ் சேர்த்து ஒரு மாதம் ஓடி இருந்தது. கலாட்டா, ராகிங் என்று காலேஜ் அமர்க்கள பட. நிலவன் மிருதுளாவிடமும், தனுவிடமும் யாரும் வம்பு செய்ய கூடாதென்று ஏற்கனவே ஜூனியர் மாணவர்களிடம் சொல்லி இருந்ததால் யாரும் மிருதுளா, தனு பக்கம் கூட வருவதில்லை. அதோடு ஷரவன் அவளை காதலிப்பது காட்டு தீ போல் காலேஜ் முழுவதும் பரவி இருந்தது. பாவம் தெரிய வேண்டியவளுக்கு தான் இன்னும் அது தெரியவில்லை.
மிருதுளா, தனுவும் படிப்பில் கவனமாக இருந்தாலும் அவர்கள் சேட்டையிலும் எந்த குறையும் இல்லை. இந்த ஒரு மாதத்தில் சிந்து, மிருது, தனுவுக்கு இடையில் நல்ல நட்பு பூத்தது. சிந்து தவறி கூட ஷரவனை பற்றி மிருதுவிடம் வாய் திறக்கவில்லை. ஒருவேளை சிந்து ஷரவனை பற்றி மிருதுவிடம் பேசி இருந்தால் பின்பு வர இருக்கும் பிரிவை தடுத்திருக்கலாமோ என்னவோ, சிந்து நிலவனின் தங்கை என்ற ஒரே காரணம் மிருது, தனுவை சிந்துவிடம் நெருங்க வைத்தது.
பழகிய பிறகு சிந்துவின் குறும்பு நிறைந்த குணம் பிடித்துவிட மூவரும் சில நாட்களிலேயே உயிர் தோழிகள் ஆகிவிட்டனர்.
மிருதுளாவுக்கு ஷரவன், நிலவன், விஷ்வா,பரத்,பிரேம் எல்லோரும் நண்பர்கள் என்றும் பெரிய பணக்கார குடும்பத்தில் பிறந்தவர் என்பதோடு, அவர்கள் வைத்தது தான் இந்த காலேஜில் சட்டம், அனைவருக்கும் இவர்களை கண்டால் பயம் என்பது வரை காலேஜ் சேர்ந்த ரெண்டு, மூனு நாளிலேயே தெரிந்து. கூடவே ஷரவனுக்கு கேர்ள் ப்ரண்ட்ஸ் அதிகம் என்பதும், இந்த காலேஜின் அனைத்து பெண்களின் கனவு கண்ணன் அவன் தான் என்பது வரை தெரிந்தது.
நிலவனிடம் பாசம் வைத்த மிருதுளா, அவனிடமும் விஷ்வாவிடமும் நன்கு ஒட்டிக்கொண்டாள். ஆனால், தவறி கூட ஷரவனை ஒரு பார்வை கூட பார்ப்பது இல்லை. ஷரவனிடம் தள்ளியே இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள். ஆனால், அவளின் நிழல் கூட இனி ஷரவனின் நிழலுக்குள் அடங்க போவது அவளுக்கு தெரியாது.
மிருது நிலவனிடம் பேசும் போது ஷரவன் தள்ளி நின்று அவளின் குழந்தை தனமான பேச்சு, செய்கையென அனைத்தையும் ரசித்து பார்ப்பான். தவறியாவது மித்துவின் பார்வை தான் மேல் படுமா என்று அவன் கண்கள் ஏங்கி தவிக்க, அவளின் நகக்கண் கூட அவன் புறம் திரும்பவில்லை.
இந்த ஒரு மாத காலத்தில் ஷரவன்
மித்துவிடம் தன்னை முழுதாக தொலைத்து விட்டிருந்தான்.
அவளின் குறும்பு, சேட்டை, அவள் சிறு அசைவுகள் கூட ஷரவனுக்கு அவ்வளவு சந்தோஷத்தை தந்தது. இனி அவள் முகம் காணாது தன் விடியல் இல்லை, அவள் இல்லாத வாழ்க்கை தேவையில்லை என்ற அளவுக்கு முழுவதும் அவனுள் மித்து வந்துவிட்டாள்.
நிலவன் "டேய் ஷரவன் எப்போ தான் நீ உன் லவ்வை மிருதுளா கிட்ட சொல்ல போற... எப்ப பாரு தள்ளி நின்னு அவளை திருட்டு சைட் தான் அடிச்சுட்டு இருக்க, எப்போ தான்டா லவ்வ அவ கிட்ட சொல்ல போற நீ?"
"அட போடா நீ வேற வயித்தெரிச்சலை கிளப்பிட்டு, உங்ககிட்ட பேசவே பொறந்த மாதிரி நல்லா வாய் அடிக்கிற... என்னை பாத்தவுடனே கப்புன்னு சைலண்ட் மோடுக்கு போய்டுவா, அட்லீஸ்ட் ஒரு பார்வை, சின்ன சிரிப்பு ம்ம்ம் எதுவுமில்லை, ம்ம்ம்ம் உங்க சுமார் மூஞ்சி எல்லாம் பாத்து சிரிச்சு சிரிச்சு பேசுற, அதுவும் இந்த நிலவன் எருமைய அண்ணா அண்ணா கூப்பிட்டு பின்னாடியே சுத்துற. ஆனா, என்னை மட்டும் பார்க்கவே மாட்டேங்கிற." என்று புலம்பினான்.
" அதுக்கெல்லாம் ஒரு முகராசி வேணும் டா." என்ற பரத்தை எட்டி உதைத்தான் ஷரவன்
"அடி செருப்பால... கற்கால கடைசி ஆதிவாசி மாதிரி இருந்துட்டு முகராசியாம். வந்தேன் தூக்கி போட்டு மிதிச்சிருவேன் பாத்துக்க, ஆல்ரெடி நான் செம காண்டுல இருக்கேன். மேற்கொண்டு ஏதாவது பேசி என்னை கடுப்பேத்துன அவ்வளவு தான் சொல்லிட்டேன்"
"நோடா மச்சி இப்படி எல்லாம் கடுப்பாக கூடாது, ப்ரெண்ட்ஸ் நாங்க இருக்கும்போது உனக்கு என்ன கவலை." என்ற விஷ்வாவை தீயாக முறைத்த ஷரவன், " நீங்க இருக்கிறது தான்டா கவலையே."
நிலவன் "டேய் என்னடா இப்படி சொல்லிட்ட? நாங்க ஒன்னுமே செய்யலயே டா?" என்று அப்பாவியாக சொல்ல,
"ஆமாடா நீங்க எதுவும் செய்யல அதுதான் இப்ப பிரச்சனை. மித்துகிட்ட என்ன பத்தி நல்லதா ஒரு நாலஞ்சு பிட்டு போட்டு, அவ மனசுல என் பேரு நச்சுன்னு பதியும் மாதிரி ஏதாவது செஞ்சீங்களா நீங்க? துரோகிகளா" என்றான் ஷரவன்.
"அட போடா என்னன்னு தெரியல, உன் பேரை சொன்னாலே அந்த பொண்ணு ஏதாவது காரணத்தை சொல்லிட்டு அங்கிருந்து ஓடுது. அது நின்னு கேட்டாளாவது, நீ நல்லவன் வல்லவன்னு மனசாட்சிய கொன்னு குழிதோண்டி புதைச்சிட்டு பொய் சொல்லாம். அவதான் ஷஷஷ ன்னு தொடங்கின உடனே ஓடிடுறவ, உன் பேரை முடிக்கும் போது அவ ஹாஸ்டல்ல நிக்கிற. நாங்க என்ன செய்ய… நீ பேசாம உடனே உன் லவ்வை அவகிட்ட சொல்லிடு, எனக்கு என்னமோ அதுதான் சரின்னு தோணுது. இப்படி திருட்டு சைட் அடிச்சிட்டு நாளை வேஸ்ட் பண்ணாத அம்புட்டு தான் சொல்லிட்டேன் ஆமா."
"நீ சொல்றதும் கரெக்ட் தான் விஷ்வா, இதுக்கு மேல என்னால அவள தள்ளி வச்சு பாக்க முடியாது. எனக்கு அந்த பொறுமை இல்லடா. இன்னைக்கு அவகிட்ட என் லவ்வை சொல்ல போறேன், ம்ம்ம்ம்... இனி மித்துவ திருட்டுத்தனமா சைட்டடிக்க தேவையில்லை, என்ன இருந்தாலும் திருட்டுதனமா சைட்டடிக்கிறது ஒரு தனி பீலிங் தான்டா." என்று ரசித்து சொல்ல, ஏனோ நிலவனுக்கு தனுவின் முகம் கண் முன்னே வந்து சென்றது. கொஞ்ச நாளா நிலவன் சின்சியரா தனுவை திருட்டு சைட் அடிச்சிட்டு இருக்காருன்னு ஒரு செய்தி காத்துவாக்குல காதுல விழுந்தது.