காதல் 5
காதல் 5
இங்கு லைப்ரரிக்கு வந்தவளை யாரும் இல்லாமல் அமைதியாக இருந்த லைப்ரரி பயமுறுத்த. மிருதுளா நிலவன் கேட்ட புக்கை எடுத்துக்கொண்டு சீக்கிரம் போக வேண்டும் என்று அரக்கபரக்க புக்கை தேட.(அது நா இங்க இருந்தா தானா மிருது உன் கைக்கு கிடைக்க. என்ன தான் அந்த நிலவன் பையன் மேல எடுத்து மறச்சு வச்சிருக்கானே என்று அவளை பார்த்து சிரித்தது.) மிருது புக் தேடி தேடி அலுத்து போனவள், “ச்சே எங்க போய் தொலஞ்சுது இந்த புக்கு” என்று புலம்பிக் கொண்டே திரும்பியவள் மான்விழி விரிந்து பார்த்தது பார்த்தபடி அப்படியே நிற்க, அவள் விழி பார்வை முடியும் இடத்தில் அவளையே விழுங்கும் பார்வை பார்த்தபடி நின்றான் ஷரவன்.
மிருதுளா திடீரென ஷரவனை அங்கு பார்த்ததில் மிரண்டு போய் இமைக்க மறந்து விழி விரித்து பயத்தில் நடுங்கி நிற்க, ஷரவன் மிருதுளாவின் பயத்தில், மிரட்சியில் வைரமென ஜொலித்த அவள் கண்களில் தன்னை தொலைத்து நின்றான்.
'ஐயோ கடவுளே இவரு எங்க இங்க வந்தாரு. லைப்ரரியில் வேற துணைக்கு யாருமில்ல, கடவுளே நான் என்ன பண்ணுவேன்' என்று பயந்து நடுங்கிய படி யோசித்துக் கொண்டே நிமிர்ந்தவள் தன் சுவாசம் தொடும் தூரத்தில் ஷரவனை பார்க்க பயத்தில் பின்னால் அடியெடுத்து வைக்க ஷரவன் அவள் முன் நோக்கி நகர்ந்தான். பின்னால் சென்ற மிருது சுவரில் மோதி நிற்க இனி எங்கும் போக முடியாது என்று அவள் ஷரவன் அசந்த நேரம் அங்கிருந்து ஓட பார்க்க, அவளை நகர விடாமல் தன் கரம் கொண்டு அணை போட்டான்.
"ஓய்! என்ன என் கிட்ட இருந்து தப்பிச்சு ஓட பாக்குறியா." என்று அதட்டும் குரலில் கேட்ட ஷரவனை பார்த்து பயந்து நின்றாள்.
"இல்... இல்ல சீனியர் நிலா… நிலவன் அண்ணா புக் கேட்டாங்க. எ… எடுக்க வா... வா... வந்தேன். புக் இல்ல, அதான் போ.. போறேன்." என்று நாலு வார்த்தை நன்கு கடித்து மென்று திக்கி திணறி சொல்லி முடிக்க, அந்த நாலு வார்த்தை சொல்வதற்குள் நாற்பது விதமான மாறும் அவளின் அழகு வதனத்தை ஷரவன் ரசித்துக் கொண்டிருந்தான்.
அது எதையும் கவனிக்காத மிருதுளா, தான் சொல்ல வந்ததை சொல்லி முடித்துவிட்டேன் என்பது போல் ஷரவனின் அடுத்த வார்த்தைக்காக விரிந்த விழி இமைகளுடன் ஷரவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
"நா யாருன்னு உனக்கு தெரியுமா மித்து?" என்று மென்மையாக அவன் கேட்க, பயத்தில் இருந்த மிருதுளாவுக்கு அவன் தன்னை மித்து என்று செல்லமாக அழைப்பதை கூட கவனிக்காமல் தெரியும் என்பது போல் தலையை மட்டும் மெதுவாக ஆட்டினாள்.
'நல்லவேளை நான் ஒருத்தன் இவ மேல கிறுக்கு புடிச்சு சுத்திட்டு இருக்கிறது தெரியாம, எங்க தன்னை தெரியாதுன்னு சொல்லிடுவாளோ' என்ற பயத்தில் இருந்த ஷரவனுக்கு, அவளுக்கு தன்னை தெரியும் என்று வந்த சின்ன தலையசைப்பு அத்தனை சந்தோஷத்தை தந்தது. ஆனால், அடுத்து மித்து சொன்ன வார்த்தையில் பாவம் அந்த காதல் கண்ணனின் சின்ன மனசு பொக்குனு போய்டுச்சு.
ஷரவன், "நான் யாரு?" என்று ஆர்வமாக மித்துவை கேட்க, அவளோ சற்றும் யோசிக்காமல் "நிலவன் அண்ணா ப்ரண்ட்டு தான நீங்க, எனக்கு தெரியும் நான் அண்ணா கூட உங்களை பாத்திருக்கேன்" என்று அப்பாவியாக சொல்ல, ஷரவனுக்கு நிலவன் மீது கொலை வெறி வந்தது.
'அடிப்பாவி இங்க ஒருத்தன் வேர் எவர் யூ கோ ஐ பாலோ ன்னு வோடபோன் டாக் மாதிரி இவ பின்னாடி சுத்திட்டு இருந்தா... இவளுக்கு நான் நிலவன் அண்ணன் ப்ரண்ட்டாம், அண்ணனாம் அண்ணன்... அவன் பெரிய வெண்ணெய், இருக்கட்டும் அந்த வெண்ணெய போய் உருக்கிடுறேன்' என்று உள்ளே நிலவனை வறுத்தெடுத்தான்.
'டேய் ஷரவன் அவன் தான்டா ப்ளான் பண்ணி மித்துவை இங்க வர வச்சது. நன்றி மறப்பது நல்லதல்ல சொல்லிட்டேன்' என்று ஷரவன் மனசாட்சி நிலவனுக்கு சப்போர்ட் பண்ண, 'அதெல்லாம் ஒரு பக்கம். இங்க என் மித்துக்கு நான் தான் முதல்ல. அப்புறம் தான் அண்ணன் நொண்ணன் எல்லாம்' என்று மனசாட்சியை மிரட்டி விரட்டி விட்டான்.
"ஓஓஓ அப்ப நான் நிலவன் ப்ரண்ட் அதனால உனக்கு என்ன தெரியும் அப்படி தானா?" என்று ஷரவன் கடுப்பாக, அவன் கேட்பதன் அர்த்தம் புரியாமல் மித்து குழந்தை போல் வேக வேகமாக ஆமாம் என்று தலையசைத்தாள்.
'ஐய்யோ மித்து! ஏன்டி நீ இவ்ளோ இன்னசெண்ட்ட இருக்க. நான் கடுப்புல கேக்குறேன்னு கூட தெரியாம தலையாட்டுறீயே டீ... இப்படி இருந்த நான் எப்படி உன்ன கரெக்ட் பண்ணி. காதலிக்க வச்சு கல்யாணம் பண்ணி, புள்ளகுட்டி பெத்து, அய்யோ நெனைக்கவே கண்ண கட்டுதே...! ம்ம்ம் பரவாயில்ல இந்த குழந்தை தனத்துக்கு தானே நானும் இவ கிட்ட விழுந்தேன்' என்றவன் அவளின் இந்த சின்ன பிள்ளை தானத்தில் சிரிப்பு வந்தாலும் சிரமப்பட்டு அதை இதழிலேயே சிறையிட்டான்.
தன் முகத்தை பார்க்காமல் தலை குனிந்தபடி இருந்தவள் நாடியை பிடித்து நிமிர்த்தியவன், "உன் பேர் என்ன?" என்று கேட்டான்.
அவனை நிமிர்ந்து கூட பார்க்காமல், "மி... மி... மிருதுளா!" என்று சொல்வதற்கே மிருது உதடு பயத்தில் தந்தியடிக்க தொடங்கிட, 'டேய் ஷரவன் நீ காலிடா… ஒரு பேர் சொல்லவே இவ இப்புடி தந்தியடிக்கிற! இதுல நீ இப்ப ஐ லவ் யூன்னு சொன்ன இவ என்னாவளோ! பிள்ளையாரப்பா நீதான் காப்பாத்தணும், நீ மட்டும் எனக்கு இந்த லவ் மேட்டரில் ஹெல்ப் பண்ண எங்களுக்கு பொறக்குற முதல் புள்ளைக்கு உன் கோயிலுக்கு வந்து மொட்டை போடுவேன். கூடவே அந்த வெண்ணெய் என் ஆருயிர் நண்பன், என் வருங்கால பொண்டாட்டியோட நொண்ணன், என் புள்ளையோட தாய்மாமன் நிலவன் இருக்கான் இல்ல, அவன் நாக்கில் அலகு குத்தி தீ மீதிக்க வைக்கிறேன். அது கூடவே அந்த வீணாப்போன விஷ்வாவை உருட்டியே உன் கோயிலுக்கு கூட்டி வரேன். பிரேம், பரத் பத்தி அப்புறம் யோச்சி சொல்றேன் சாமி' என்று மனசாட்சி இல்லாமல் வேண்டியவன், "மித்து என்ன பாரு" என்று அழைக்க அவள் நிமிர வில்லை, "மித்து என்ன பாரு" என்று அழுத்தி சொல்லியும் அவள் அவனை பார்ப்பதாக தெரியவில்லை.
"ஏய் என்னை பாருடி." என்று சத்தமும், கோபமும் கலந்து வந்த ஷரவனின் குரல் அதிர்ந்தவள் சட்டென நிமிர்ந்து அவன் முகம் பார்க்க, குரலில் இருந்த கோபம் அவன் முகத்தில் இல்லாமல் அவன் கண்கள் தன்னை மென்மையாக வருடுவதை கண்டவள் மீண்டும் தலை குனிந்து கொண்டாள்.
'போச்சுடா மறுபடியும் மண்ண பாக்க ஆரம்பிச்சிட்ட, இவ கிட்ட சாஃப்ட் டா பேசுன வேலைக்காது' என்று நினைத்தவன், "இவள... ஏன்டி அப்படி கீழ என்ன தான்டி தேடுற நீ? கீழ குழி தோண்டி புதையல் ஏதும் புதச்சு வச்சிருக்கியா என்ன? எப்பாரு டக் அவுட் ஆன பேட்ஸ்மேன் மாதிரி கீழயே பாத்துட்டு இருக்க? நிமிந்து என் மூஞ்ச பாருடி." என்று அதட்ட அதில் பயந்த மிருதுளா ஷரவனை நிமிர்ந்து பார்த்தாள்.
'இவகிட்ட கோவமா பேசின தான் வொர்க் ஆகுது. ம்ம்ம்ம் நமக்கு வேற வழியே இல்ல போல' என்று நினைத்தவன், "ம்ம்ம்ம் குட் கேர்ள் இப்ப நா கேக்குற கேள்விக்கு என்னை நேர பாத்து பதில் சொல்லணும் ஓகே" என்று மீண்டும் அதட்டும் தொனியில் சொல்ல, மிருதுளாவின் இதயமோ முதன் முதலில் அவ்வளவு அருகில் நெருங்கி நின்ற ஒரு அந்நிய ஆண்மகனின் அருகமையில் வேகமாக துடிக்க, வார்த்தை வராமல் சரி என்று தலையை மட்டும் ஆட்டினாள்.
ஒரு நிமிடம் மிருதுளாவை ஆழமாக பார்த்த ஷரவன், "நீ யாரையும் லவ் பண்றியா மித்து?" என்று கேட்கும் போதே ஷரவனின் குரல் பிசிரடித்தது.
ஷரவனுக்கு நன்றாக தெரியும் மிருதுளா யாரையும் காதலிக்கவில்லை என்பது இருந்தும் அவனுக்குள் ஒரு சிறு பயம். 'கடவுளே மித்து இல்லைன்னு சொல்லணும்.!! இல்லைன்னு சொல்லணும்!!' என்று மனசுக்குள் வேண்டிக் கொண்டே மிருதுளாவை பார்த்து கொண்டிருந்தான்.
"ஐயோ சீனியர் அப்படி ஒன்னும் இல்ல, எனக்கு லவ் எல்லாம் ஒன்னும் இல்ல சீனியர்" என்று மிருதுளா அவசரமாக சொல்ல, ஷரவனுக்கு நின்ற மூச்சு அப்போது தான் வெளிய வந்து அப்பாடி என்றிருந்தது.
மித்துவோ அவன் நிலை புரியாது. "நா அப்படியெல்லாம் இல்ல சீனியர். எனக்கு என்னோட படிப்பு தான் முக்கியம் என்று வேக வேகமாக சொல்லிக் கொண்டிருக்க, ஷரவன் அப்போது தான் அவள் தன்னை சீனியர் என்றழைப்பதை கவனித்தான்.
"ஏய் ஏய் நிறுத்து நிறுத்து... எதுக்கு என்ன சீனியர்னு கூப்பிடுற? ஏன் எனக்கு பேர் இல்ல.?? இல்ல உனக்கு என் பேர் தெரியாத? என் பேரு ஷரவன் ஷ..ர..வ..ன்" என்று ஒவ்வொரு எழுத்தாக அழுத்தி சொல்லியவன், "எங்க சொல்லு பாப்போம் ஷரவன்" என்க.
மிருது முடியாது என்று இடவலமாக தலையாட்டினாள்.
"ஏன் ஏன் சொல்ல முடியாது.? என் பேரென்ன அவ்ளோ நீளமா இருக்க என்ன? இல்ல என் பேரே நல்லா இல்லையா?" என்று குறும்பாக கேட்க, மிருதுளா 'இல்லை' என்று தலையை ஆட்டினாள்.
"ஓஓஓ... அப்ப எங்கம்மா எனக்கு வச்ச பேரு நல்லா இல்லன்றீய நீ?" என்று மிரட்ட,
"ஐயோ நா அப்படி சொல்லல. உங்க பேரு ரொம்ப நல்லா இருக்கு. ரொம்ப ரொம்ப அழகா இருக்கு. உங்கம்மா நல்ல பேர் தான் வச்சிருக்காங்க" என்று அவள் படபடக்க, ஷரவன் தான் பாவம் வந்த சிரிப்பை அடக்க ரொம்ப கஷ்டப்பட்டான்.
"அப்றமென்ன என்னை பேர் சொல்லி கூப்புடு"
"இல்ல சீனியர் நீங்க என்னை விட வயசுல பெரியவங்க. நா எப்படி உங்களை பேர் சொல்லி கூப்பிடுறது, அது தப்பு" என்று தட்டு தடுமாறி மலங்க மலங்க விழித்து, பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு சொல்ல,
ஷரவனுக்கோ, 'அய்யோ கொல்றாளே... கொல்றாளே...! பாவி பாவி, ஏன்டி நீ இவ்ளோ கியூட்டா இருக்க. இப்படி உன்ன பாக்கும்போது என்னோட கண்ட்ரோல் மிஸ் ஆகுதுடி செல்லம். ஐயோ கடவுளே' என்று அவன் உள்மனம் புலம்பித் தவிக்க. அவனை புலம்ப வைத்தவள் எப்படி அங்கிருந்து எஸ்கேப் ஆகி ஓடுவது என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.
"நிலவனுக்கும் என் வயசு தான். நிலவனை மட்டும் பேர் சொல்லி கூப்பிடுற அது என்ன கதை?"
"அவரு எனக்கு அண்ணன் மாதிரி அதனால தான். அப்ப கூட நான் அவர நிலவன் அண்ணான்னு தான் சொல்லுவேன். வேணுன்னா உங்களையும் அண்ணன்னு…" என்று ஆரம்பிக்கும் போதே ஷரவன் வேகமாக மிருது வாயை தான் கையால் அழுத்தி மூடினான்.
"அடிப்பாவி சண்டாளி... குடி கெட்டுச்சு போ, என்ன வார்த்தைடி சொல்ல பாத்த, ஒரு நிமிஷம் மனுஷனுக்கு மூச்சே நின்னு போச்சு. நல்லவேள இந்நேரம் முதலுக்கே மோசம் ஆகியிருக்கும். இன்னொரு தடவை அண்ணா நொண்ணன்னு சொன்னா... அடுத்த வார்த்தை பேச உன் வாய் உன் கிட்ட இருக்காது, கடிச்சு எடுதுடுவேன் ஜாக்கிரதை!" என்று ஷரவன் பதற மிருதுளாவுக்கு ஒன்றும் விளங்கவில்லை.
ஷரவன் இழுத்து மூச்சு விட்டவன், "சரி இப்ப நீ என்ன சொன்ன... நிலவன் உனக்கு அண்ணன் மாதிரின்னு தான சொன்ன, ம்ம்ம் ஓகே. நிலவன் எனக்கு மச்சான், அவனோட தங்கச்சி சிந்து என்ன மாம்ஸ்னு கூப்பிடுவா, நீயும் நிலவனுக்கு தங்கச்சி. சோ ஆக்கார்டிங் டூ தட், நீயும் இனிமே என்ன மாமா ன்னு தான் சொல்லணும். எங்கே ஷரவன் மாமான்னு ஒரு தடவ சொல்லு பாப்போம்." என்று ஷரவன் ஆசையாய் கேட்க, மிருதுளாவுக்கு அதிர்ச்சியில் இழுத்த மூச்சு அவள் நெஞ்சு குழிக்குள்ளேயே சிக்கிக் கொண்டது.
"ஏய் மித்து! என்ன காது கேக்கலையா, என்ன மாமான்னு கூப்பிட சொன்னேன், கூப்பிடு." என்று ஆர்வமாக கேட்டான்.
'ஐய்யோ புள்ளையாரப்பா! என்ன இது? ஏன் இவரு என்கிட்ட இப்புடி பேசுறாரு, என்ன சோதனை இது, ஏன் என்ன இப்படி மாட்டி விட்டு வேடிக்கை பாக்குற நீ? இவர்கிட்ட இருந்து என்ன காப்பாத்து புள்ளையாரே.' என்று மனதிற்குள் வேண்டியவள் கண்கள் கலங்கி விட்டது.
ஷரவன் அவள் கலங்கிய விழிகளை பார்க்க முடியாமல்,
"ஏய்...ஏய்… அழாத, எதுக்கு இப்ப நீ அழுகுற." என்றவன் அவள் கண்களை துடைத்து விட. திடீரென ஷரவன் தொட்டதும் மிருதுளா ரெண்டு அடி பின்னால் நகர்ந்து விழிகளை தாழ்த்தி கொள்ள, ஷரவனும் 'இன்னைக்கு இது போதும். இதுக்கு மேல இவள பயமுறுத்த வேணாம். இவ தாங்க மாட்டா' என்று நினைத்தவன்,
"மித்து என்ன பாரு" என்று மென்மையாக அழைக்க. இவ்வளவு நேரம் அதிகாரமாக வந்த ஷரவனின் குரல் இப்போது மலரின் இதழ் மோதும் மென் காற்றை போல் வந்த குரலில் இருந்த மற்றதை உணர்ந்தவள் பயம் மறந்து நிமிர்ந்து ஷரவனை பார்த்தாள்.
ஷரவன் மெதுவாக அவள் காதருகில் குனிந்தவன், "இனி உன் கிட்ட யாராவது நீ யாரையும் லவ் பண்றியானு கேட்ட ஆமாம்னு சொல்லு, உன் லவ்வர் பேர் என்னன்னு கேட்டா ஷரவன்னு சொல்லு" என்று கட்டளை போல் சொன்னவன். அவளை விட்டு சற்று விலகி, "இதுவரைக்கும் நீ யாரையும் லவ் பண்ணல, இனியும் நீ என்ன தவிர வேற யாரையும் லவ் பண்ண கூடாது, புரியுதா... அப்படி நீ யாரையும் லவ் பண்றது இல்ல, அப்படி ஒரு யோசனை வந்தாலே அடுத்த நிமிஷம் அவன் இருக்க மாட்டான். இந்த ஜென்மத்துல நீ எனக்கு தான், எனக்கு மட்டும் தான். அத நீ நல்லா மனசுல பதிய வச்சுக்க." என்றவன் அங்கிருந்து சில அடி நகர்ந்து பின் திரும்பி, மித்து கன்னத்தில் அழுத்தி முத்தமிட்டான்.
"இந்த முத்தத்தை நாளைக்கு நீ என்ன பாக்கும்போது திருப்பி வாங்கிக்கிறேன். அதுவரை பத்தரமா வச்சிக்க" என்றவனின் வசீகரமான புன்னகைக்கு மிருதுவிடம் எந்த ரியாக்ஷனும் இல்லை. காலேஜில் இருக்கும் அனைத்து பெண்களும் ஷரவனின் அந்த வசீகரமான சிரிப்புக்கு அடிமை என்று சொல்லலாம். அந்த ஒரு சிரிப்புக்கு அவனை சுற்றும் பெண்கள் பலர் இருக்க, அந்த சிரிப்புக்கு சொந்தக்காரன் மனதில் சிம்மாசனமிட்டு உட்கார்ந்து இருப்பாள் மனதை மட்டுமல்லாமல், அவள் கண்களில் கூட அந்த அழகிய புன்னகையை பதிவிடாமல் கண்ணீர் திரை போட்டு இருந்தது.
ஷரவன் லைப்ரரி கதவை திறந்து வெளியே வந்தவன், "ஹாஸ்டலுக்கு பத்திரமா பாத்து போ மித்து. டேக் கேர்." என்றவன் குரலில் இருந்த அந்த அக்கறையை உணரும் நிலையில் கூட மிருதுளா இல்லை.