அர்ஜூன் ஆத்யா 20

 அர்ஜூன் ஆத்யா


மெய் 20


அர்ஜூன், ஆத்யா பற்றி யோசிக்க, யோசிக்க கௌதமுக்கு வியப்பாக இருந்தது. இருவரும் பிரிந்திருந்தாலும் அர்ஜூன், ஆத்யாவுக்கு இடையே இருக்கும் புரிதலை பார்க்க அவனுக்கு அதிசயமாக இருந்தது. இப்படி பட்ட அன்பு நெஞ்சங்களை பிரித்த கடவுள் மீது கோபம் கூட வந்தது.

"அன்னைக்கு பிறகு ஆது பேசுறதே கொறஞ்சு போச்சு அர்ஜூன். நல்ல வேலை அந்த நேரம் ஆது அவ படிப்பை முடித்து இருந்தால், என்னோட ஹாஸ்டல்லயே அவளுக்கு ஒரு வேலை வாங்கி கொடுத்து அடுத்த ஒரு மாதத்தில் அவள லண்டன் கூட்டி வந்துட்டேன். இங்க வந்து கொஞ்ச நாள் கழிச்சு தான்" என்ற கௌதமின் குரல் தாழ்ந்து விட, அர்ஜூனுக்கு புரிந்துவிட்டது கௌதம் என்ன சொல்ல வருகிறான் என்று.

"ஆது ப்ரெக்னன்ட்ட இருந்த நியூஸ் எங்களுக்கு பெரிய ஷாக் அர்ஜூன். இன்பேக்ட் ஆதுக்கு கூட இது பெரிய ஷாக் தான். ஆனா, ஸ்வீட் ஷாக். அந்த டைம் நான் கூட ஆது கிட்ட சொன்னேன், அர்ஜூனுக்கு இத பத்தி  சொல்லலாம்னு. ஆனா, அவ முடியவே முடியாதுன்னு சொல்லிட்டா, இந்த கரு உருவாகுவதற்கு முன்னையே இத உயிரா நேசித்தவன் கௌதம் அவன். அவனுக்கு என்னை விட இந்த உலகத்தில் இன்னும் பிறக்காத இந்த கொழந்த மேல  தான் உயிரையே வச்சிருந்தான். அவனோட பிரியா ஏஞ்சலே எங்களுக்கு பொண்ணா பொறக்கணும்னு அஜ்ஜூ ரொம்ப ஆசைப்பட்டான். இப்ப மட்டும் நான் ப்ரெக்னன்ட் இருக்கிறது அவனுக்கு தெரிஞ்ச, அவன் உடைஞ்சு போய்டுவான் கௌதம். என்னை பிரிஞ்ச வலிய  அவன் எப்படியோ தாங்கி கிட்டான். ஆனா, இந்த குழந்தை விஷயம் தெரிஞ்ச கண்டிப்பாக அவனால தாங்க முடியாது. உடனே என்னை தேடி வருவான். அது அவனோட மேரேஜ் லைஃப் க்கு நல்லதில்ல கௌதம். என்னால அவனுக்கு சின்ன கஷ்டம் வர்ரத கூட நான் விரும்பல" என்றவளை சலிப்பாக பார்த்தான் கௌதம்.

"நீ திருந்தவே மாட்ட ஆது. இப்பவும் நீ அர்ஜூன் பத்தி மட்டும் தான் யோசிக்கிற, இப்படி ஒரு நெலமைல உன்னை தனியா தவிக்க விட்டவனுக்கு தான் இப்பவும் நீ சப்போர்ட் பண்ற இல்ல, உன்னை என்ன சொல்றதுன்னு எனக்கு புரியல."

"இல்ல கௌதம், நான் 
ப்ரெக்னன்ட் இருக்கிறது எனக்கே இப்ப தான் தெரியும். அர்ஜூனுக்கு எப்படி தெரியும் சொல்லும். ஒரு வேலை அர்ஜூனுக்கு மட்டும் இது முன்னாடியே தெரிஞ்சிருந்தா அவன் கண்டிப்பாக என்னை விட்டு போயிருக்க மாட்டான். இந்த கொழந்த மட்டும் கொஞ்ச மாசத்துக்கு முந்தி எனக்குள்ள வந்திருந்தா என்னோட அஜ்ஜூ என் கூடவே இருந்திருப்பான். ம்ம்ம் எல்லாம் வீதி கௌதம். இனி எனக்கு என் குழந்தை, என் குழந்தைக்கு நான். இப்ப எனக்கிருக்கிறது எல்லாம் ஒரே ஆசை தான் கௌதம். அஜ்ஜூ ஆசைப்பட்ட மாதிரி எங்களுக்கு பெண் குழந்தை பிறக்கணும். அதுக்கு அவன் ஆசைப்பட்ட மாதிரி ரியான்னு பேர் வைக்கணும், அவளை நல்லபடி வளக்கணும் அவ்ளோ தான் கௌதம்." 

கௌதம் சொன்னதை கேட்ட, அர்ஜூன் மனம் அனலில் இட்ட புழுவாக துடித்துக் கொண்டிருந்தது. 

"என்னோட தியா எப்பவும் என்ன பத்தி மட்டும் தான் யோசிச்சு இருக்க இல்ல கௌதம். என்னைவிட அவ தான் என்னை அதிகம நேசித்து இருக்கா, பூ மாதிரி மனசு கௌதம் அவளுக்கு நான் தான் அந்த பூவை கசக்கி எறிஞ்சிட்டு போய்ட்டேன்" என்று விரக்தியாக வந்தது அர்ஜூன் வார்த்தைகள்.

"ம்ம்ம்... விதி அர்ஜூன் வேற என்ன சொல்றது. ஆது ப்ரெக்னன்ட் இருக்கிறது தெரிஞ்சு, என்னோட அம்மாவும், அப்பாவும் அவள என்னை கல்யாணம் பண்ணிக்க சொன்னாங்க. ஆனா, ஆது… நா அர்ஜூனோட பொண்டாட்டி, அவனோட குழந்தைக்கு அம்மா, என்னோட வாழ்க்கையில அவன தவிர வேற யாருக்கும் இடமில்லை. இது என்னோட அஜ்ஜூவோட குழந்தை இதுக்கு வேற யாரோட பேரும், அப்பான்ற
இனிஷியல்லும் தேவை இல்லைன்னு பிடிவாதமா சொல்லிட்டா, அதுக்கு அப்புறம் தான் நான் திவ்யாவை விரும்புறேன்னு தெரிஞ்சு, ஆதுவே அம்மா, அப்பாகிட்ட பேசி எங்க கல்யாணத்தை முடிச்சு வச்சா. திவ்யா ரொம்ப நல்ல பொண்ணு ஆர்ஜூன். அவ ஆதுவை நல்லா புரிஞ்சுகிட்ட, எங்களுக்கு கல்யாணம் முடிஞ்சு கொஞ்ச மாசத்துல திவ்யாவும் ப்ரெக்னன்ட் ஆகிட்ட, ரியா பிறந்து நாலு மாசம் கழிச்சு பூஜா பொறந்தா, ரியாவும், பூஜாவும் வந்த பிறகு எங்க வாழ்க்கை ரொம்ப சந்தோஷமா மாறிடுச்சி, பூஜா என்னை டாடின்னு கூப்புடுறதை பாத்து ரியாவும் என்னை டாடி கூப்பிட ஆரம்பிச்ச, ஆது எவ்வளவு சொல்லியும் அவ மாறல, இதுல பூஜா வேற ரியாவை பாத்து ஆதுவ அம்மா கூப்பிட, ரெண்டு வாண்டும் யார் சொல்றதையும் கேக்கவே இல்ல, நாங்களும் அப்படியே விட்டுட்டோம். ரியா ஆதுவை விட திவ்யா கிட்ட தான் ரொம்ப கிளோஸ். இங்க நிறைய பேர் திவ்யா தான் ரியாவோட அம்மா நினைச்சிட்டு இருக்காங்க, அதே மாதிரி என்னோட பொண்ணு பூஜாக்கு ஆது தான் எல்லாமே, ஆதுவுக்கும் பூஜான்னா உயிர்."

"எல்லாம் நல்லபடி தான் இருந்தது ஆர்ஜூன். ரியா என்னோட அப்பா எங்கம்மான்னு ஆதுவ கேக்கு வரை. ரியா கேட்ட கேள்வியில ஆது ரொம்ப நொறுக்கி போய்ட்டா, அவ அழுகுறத பாத்து ரியாக்கு என்ன புரிஞ்சிதோ என்னமோ, அன்னைக்கு பிறகு அவ உன்னை பத்தி கேக்குறதே இல்ல. அப்பா பத்தி பேசினால் அம்மா அழுவாங்க ன்னு நெனச்சு, அந்த குழந்தை அதுக்கு பிறகு அப்பா எங்கன்னு கேக்கவே இல்ல அர்ஜூன்." 

அவ்ளோ தான் ப்ளாஷ்பேக் முடிந்தது வாங்க எல்லாரும் கௌதம் வீட்டுக்கு போலாம். ம்ம்ம் அங்க என்ன கூத்து நடக்கப்போகுதோ ஆண்டவா…??

நடந்த அனைத்தையும் கேட்ட அபிராமிக்கு பேச்சே வரவில்லை. தன் சுயநலத்துக்காக செய்த ஒரு காரியம், அர்ஜூன், ஆத்யா வாழ்க்கையோடு சேர்த்து ஒன்றும் தெரியாத ரியாவின் வாழ்க்கையையும் பாதித்து இருக்கிறது என்று நினைக்கும் போதே அபிராமிக்கு நெஞ்சடைத்து போனது. 

"ஏன் அர்ஜூன்… அன்னைக்கே ஒரு வார்த்தை உனக்கும், அத்துக்கும் கல்யாணம் ஆகிடுச்சுன்னு சொல்லி இருந்திருக்கலாம் இல்லடா?"

"நா சொல்ல வந்தேன் சித்தி ஆனா, நீங்க சொன்னீங்களே உண்மையாவே நீ என்னை உன்னோட அம்மா நெனைக்குறது நிஜம்னா? நா சொல்றத செய்யுன்னு. அந்த வார்த்தை கேட்ட அடுத்த நிமிஷம் நா செத்துட்டேன் சித்தி. அதுக்கு மேல என்னால என்ன சொல்ல முடியும். ஒருவேளை நான் எங்க கல்யாணம் பத்தி உங்ககிட்ட சொல்லி இருந்தாலும், நீங்க ஒத்துட்டு இருக்க மாட்டிங்க, என்கிட்ட கேட்ட அதே கேள்வியை தியா கிட்ட கேட்டிருப்பீங்க. அந்த வார்த்தையை நான் தாங்கிட்டேன், ஆனா, என்னோட தியாக்கு அதை தாங்கும் சக்தி இல்ல சித்தி. ஏன்னா அவ உங்களை பிரியா ஆன்ட்டியோட இடத்துல வச்சிருக்க, அதனால தான் நான் எங்கள பத்தி எதுவும் சொல்லல" என்ற அர்ஜூனை கண்ணீரோடு பார்த்த அபிராமிக்கு எதுவும் பேச தோன்றவில்லை. 

"நீ சொல்றது நெஜம் தான் அர்ஜூன். அப்ப எனக்கு அபிமன்யு குழந்தை மட்டும் தான் கண்ணுக்கு தெரிஞ்சது. அத தவிர வேறு எதுவும் எனக்கு அப்ப புரிஞ்சிருக்காது தான்" என்று ஆழ்ந்து மூச்சு எடுத்தவர்,

"எல்லாம் விதி அர்ஜூன், நடக்க கூடாதது எல்லாம் நடந்து போச்சு, ஏதோ இப்பவாது அந்த கடவுள் கண் திறந்து அத்துவை நம்ம கிட்ட கொண்டு வந்து சேர்த்திருக்காரு, இனி நீயும் அத்துவும்" என்று அபிராமி ஏதோ சொல்ல வர, "அத்த" என்ற ஆத்யாவின் குரலில் திரும்பியவர், அவளின் முக மாறுதலை கண்டு எதுவும் பேசாமல் அமைதியாக விட்டார்.

தியா, "திவ்யா நீ கொஞ்ச குழந்தைகளை மேல இருக்க ரூம்ல விட்டுட்டு வயேன்" என்றதும் அபி, ரியா, பூஜாவை மேலே போய் விளையாட சொல்ல, திவ்யா குழந்தைகளை மேலே அழைத்து சென்றாள்.

"ம்ம்ம் இப்ப சொல்லுங்க அத்த.?? ஏதோ சொல்ல வந்தீங்களே…" என்று தன் கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு கேட்டாள்.

"இல்ல அத்தும்மா, நீயும், அர்ஜூனும் மறுபடி சேர்ந்த, உங்க வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் கிடைக்கும். ரியாக்கு அவளோட அப்பா கிடைப்பான், அபிக்கும் உன்னை மாதிரி ஒரு நல்ல அம்மா கிடைப்ப, அதோட உங்கள நான் தான் பிரிச்சேன்ற என்னோட குற்றவுணர்ச்சி, எனக்கும் குறையும் என்ற வரை உணர்ச்சி இல்ல பார்வை பார்த்தாள் ஆத்யா. 

"சாரி அத்த..!! எனக்கு இதுல விருப்பம் இல்ல. ரியா அர்ஜூனோட பொண்ணு தான் அதை நான் மறுக்கல. ஆனா, அந்த ஒரே காரணத்துக்காக அவனுக்கு பொண்டாட்டியா இருக்க என்னால முடியாது" என்று  ஆத்யா உறுதியாகச் சொல்லிவிட, அனைவரும் அவளை புரியாமல் பார்க்க, அர்ஜூன் மட்டும் அவள் இதைத் தான் சொல்வாள் என்று தெரிந்து அமைதியாக இருந்தான்.

"ப்ளீஸ் அத்தும்மா நடந்த தப்பு எல்லாத்துக்கும் நான் தான் காரணம். அர்ஜூன் பாவம்டா, அவனுக்கு என் மேல இருந்த பாசத்தை நான் தான் தப்பா யூஸ் பண்ணிட்டேன். என்னை மன்னிச்சு, நீ அர்ஜூனா ஏத்துக்க அத்தும்மா" என்று அவள் கையை பிடித்து அபிராமி கெஞ்சினார். 

"இல்ல அத்த... ஒரு அம்மாவா நீங்க செஞ்சது சரிதான். அதை நான் ஒருநாளும் தப்புன்னு சொல்ல மாட்டேன். நானும் ஒரு அம்மா தான் உங்கள என்னால புரிஞ்சுக்க முடியுது. ஆனா, உங்களோட இந்த அம்மா பாசம் நீங்க பெத்த புள்ள மேல மட்டும் தான் வருமா அத்த? நானும், அர்ஜூனும் கூட உங்கள அம்மாவ தான அத்த பாத்தோம். நீங்களும் அபிமன்யு அண்ணா மேல எந்த அளவு அன்பு வச்சிருந்தீங்கலோ அதோ அளவு எங்களையும் நீங்க நேசிச்சிங்களே அத்த... அப்படி இருக்க நானும், அஜ்ஜூவும் எந்த அளவு ஒருத்தரை ஒருத்தர் விரும்புறோம்னு தெரிஞ்சும் எப்படி அத்த உங்கள அப்படி செய்ய முடிஞ்சுது" என்ற ஆத்யாவின் கேள்வி அபிராமியை நிலைகுலைய செய்தது. அவரால் பதில் சொல்ல முடியாது அப்படியே கீழே சரிந்து உட்கார்ந்து விட்டார். 

சிவா ஆத்யா அருகில் வந்தவர், "அபிராமி பண்ணது தப்பு தான் அத்து, அதுக்கு நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன், உங்க ரெண்டு பேர் பத்தி எனக்கு முன்னமே தெரிஞ்சிருந்தா, நான் அந்த கல்யாணத்தை நடக்க விட்டிருக்க மாட்டேன். என்ன செய்ய இவ என் கிட்ட எல்லாத்தையும் மறைச்சிட்டா, அர்ஜூனும் எங்க மேல இருந்த பாசத்துல ப்ரீத்திய கல்யாணம் பண்ணிக்கிட்டான். ஆனா, ஒரு நாள் கூட அவங்க சேந்து வாழல அத்தும்மா. அர்ஜூன் மனசலயும், உடம்பலயும் இன்னைக்கும்  உனக்கு உண்மையா தான் இருக்கான். அபிராமிக்காக இல்லாட்டியும் அர்ஜூன், அபி, ரியாவுக்காகவாது, நீங்க சேர்ந்து வாழனும் அத்தும்மா" என்றவரை வெறுமையான பார்வை பார்த்தாள் ஆத்யா. 

"நீங்க சொல்றத நான் ஒத்துக்கிறேன் மாமா. ஆனா, நான் கேக்குற ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் நீங்க பதில் சொல்லுங்க,  ஒருவேளை ப்ரீத்தி நல்லவளா இருந்திருந்தால்?? ப்ரீத்திக்கு அர்ஜூன் மேல காதல் வந்திருந்தால்?? உங்களுக்கு நல்ல மருமகளா, அபிக்கு நல்ல அம்மாவா, அர்ஜூனுக்கு நல்ல வைஃப்ப இருந்திருந்தால்? அன்பு எல்லாரையும் மாத்தும் மாமா, பை சான்ஸ் ப்ரீத்தி உண்மையான அன்பை அர்ஜூன் மேல வச்சிருந்தால், ஒரு ஸ்டேஜ்ல அர்ஜூன் கூட மனசு மாறி அவ கூட சேர்ந்து வாழ முயற்சி பண்ணி இருப்பான் தானா மாமா, என்ற ஆத்யாவை அவசரமாக தடுத்தார் சிவா.

"அத்தும்மா அர்ஜூன் உன்னை மட்டும் தான் விரும்பினான், விரும்புவான். அர்ஜூன் அப்படி பட்டவன் இல்லம்மா" என்று  ஆரம்பிக்கும் போதே அவரை கைகாட்டி நிறுத்தினாள் ஆத்யா.

"நம்ம எல்லாரும் சாதாரண மனுஷங்க தான் மாமா. அர்ஜூனும் மனுஷன் தான் அதுவும் அன்புக்கு ஏங்கும் மனுஷன். ஒருவேள ப்ரீத்தி கிட்ட அந்த உண்மையான அன்பு அவனுக்கு கிடைச்சிருந்த அவன் அதை ஏத்துக்க நிறைய வாய்ப்பு இருந்திருக்கும் தான? அப்படி ஒன்னு நடந்திருந்தா? அப்ப நீங்க எல்லாம் என்ன பத்தி யோசிச்சு இருப்பீங்கள மாமா? சொல்லுங்க.? அப்போ என்னோட, ரியாவோட நெலம என்ன மாமா.? இப்ப எங்க ரெண்டு பேருக்கும் குழந்தை இருக்கு, நானும் தனியா இருக்கேன், அர்ஜூனுக்கு டிவேர்ஸ் ஆயிடுச்சு, அவன் லைஃப்ல இப்போ ப்ரீத்தி இல்லயின்ற காரணத்தை வைச்சிட்டு, நான் மறுபடியும் அர்ஜூன் கூட சேர்ந்த, பெரியவங்க ஒரு பழமொழி சொல்வாங்களே! அண்ணன் எப்ப சாவான் திண்ணை எப்போ காலியாகும்னு, அது மாதிரி இல்ல மாமா இருக்கும்" என்ற  அவள் கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை.