காதல் 2
கதையின் லிங்க் :
காதல் 2
கல்லூரியில் முதல் நாள். அதுவும் தன் ஆசைப்பட்ட கல்லூரியில் படிக்க போகிறோம் என்ற நிறைவுடன் கல்லூரிக்குள் அடியெடுத்து வைக்க.. அங்கு காலேஜிக்குள் நுழையும் அவளையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த ஒருவனின் இதயத்திலும் அவளுக்கே தெரியாமல் அழகாய் அடியெடுத்து வைத்துவிட்டாள் மிருதுளா.
“ஆஆஆ” என்று வாய் பிளந்த படியே மிருதுவும், தனுவும் காலேஜிக்குள் வர. அங்கே ஓரிடத்தில் சீனியர் மாணவர்கள் புதிதாக வரும் மாணவர்களை படாதபடு படுத்திக்கொண்டிருந்தனர்.
அவர்களை பார்த்து தனுவும், மிருதுவும் பயந்து ஒதுக்கப் பார்க்க, சரியாக ஒரு இடத்தில் சிக்கினர்.
மிருது திரு திருவென முழித்து தனுவை பார்க்க அவளோ தைரியமாக நின்றிருந்தாள். மிருதுளா அவள் காதருகில் குனிந்தவள் "ஏய் தனு பரவாயில்லடி நீ. சீனியர்ஸ் முன்னாடி நின்னும், கொஞ்சம் கூட பயப்படாம தைரியமா இருக்கியே!! சூப்பர் டி என்றவளை, மற்றவர் பார்க்காது காலை மிதித்த தனு, “அடியேய்... நீ ஏ மூஞ்ச தானே பாத்த, காலை பார்க்கலையே” என்று ஹஸ்கி வாய்ஸில் சொல்ல. சற்று குனிந்து அவள் கால்களை பார்த்த மிருது தனுவின் கால்கள் பயத்தில் தன்னால் நடுங்கி கொண்டிருக்க. நிமிர்ந்து தனுவை பார்த்து ‘த்து’ என்று துப்ப,
“விடுறா விடுறா நானெல்லாம் வடிவேலு மாதிரி பில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ்மெண்ட் வீக். அடக்கி வாசி சீனியர்ஸ் பாக்குறாங்க.” என்ற தனு பாவமாக முகத்தை வைத்து கொண்டாள்.
"ஹலோ அமுல்பேபி என்ன அங்க குசுகுசு, சீனியரை பார்த்த வணக்கம் வைக்கணும்னு தெரியாதா?” என்று கம்பீரமாக வந்த குரலில் மிரண்டு போய் இருவரும் பார்க்க. அங்கு இவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தனர் அந்த ஐந்து பேரும். நால்வரின் கண்கள் பெண்கள் இருவரையும் இயல்பாக பார்க்க, ஒருவன் கண்கள் மட்டும் மிருதுளாவை முடி முதல் அடி வரை ரசனையோடு ரசித்துக் கொண்டிருந்தது.
அழகிய கோதுமை நிறம், வட்ட முகம், அதில் தவழும் குழந்தைத்தனம், பார்ப்பவர்களை பிடித்து கிள்ள தூண்டும் புசு புசு கன்னம், அதில் அம்சமாக விழும் குழி. காதலன் அணைத்தால் அவன் இதயத்துடிப்பு கேட்கும் அளவு உயரம், கொஞ்சம் சப்பீயான உடல்வாகு.
“ ம்ம்ம்... கல்யாணத்துக்கு அப்புறம் நமக்கு தலகாணியே தேவையில்ல, இவளையே கட்டி புடிச்சிட்டு தூங்கலாம் போல!” என்று மிருதுளாவை கண்ட உடன் கல்யாணம் வரை போய் விட்டார் நம்ம ஹீரோ ஷரவன்.
(ஷரவன், நிலவன், விஷ்வா, பரத், பிரேம் ஐந்து பேரும் கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள். இதில் ஷரவன், நிலவன், விஷ்வா சிறு வயதிலிருந்தே குடும்ப நண்பர்கள்.)
"ஏய் அப்ரசண்டிகளா என்ன லுக்கு.?? இங்க நாங்க பேசிட்டு இருக்கோமில்ல... சீனியருக்கு வணக்கம் வைக்க சொல்லி அரை மணி நேரமாச்சு. இன்னும் எங்க மூஞ்சையே பார்த்துட்டு இருக்கீங்க. ஒழுங்க வணக்கம் வைங்க" என்று பரத் மிரட்டினான்.
அதில் பயந்த மிருதுளாவின் பயம் அவள் முகத்தில் தெரிந்தது. அவள் இமைகள் படபடவென அடித்துக் கொள்ள, கண்ணில் குளம் கட்டிக்கொண்டு தண்ணீர் இப்பவோ அப்பவோ என்று வர தயாராக இருக்க.அதை கண்டு பதறினான் நிலவன்.
"ஏய் ஏய் இப்ப எதுக்கு கண்ணுல டாம் கட்ற நீ? ஒரு வணக்கம் தான கேட்டோம், தமிழ் தெரியாதுன்னா குட் மார்னிங்னு சொல்லிட்டு போவியா... அதைவிட்டு." என்று கத்தியவனை பார்த்து, தனுவிற்கு வந்ததே கோவம்,
"ஹலோ யாரை பார்த்து தமிழ் தெரியாதுன்னு சொன்னீங்க. நாங்க தமிழ்நாட்டில் பிறந்து தமிழ் காத்த சுவாசித்து தமிழ் தண்ணி குடிச்சு வளர்ந்த தமிழச்சியாக்கும், எங்களை பாத்து எவ்வளவு தைரியம் இருந்த தமிழ் தெரியாதுன்னு சொல்லுவீங்க." என்று தம் கட்டி பேச. நங்கென்று அவள் தலையில் கொட்டினான் நிலவன்.
"ஏய் வால் டியூப் எதுக்கு இப்ப இப்படி தம் கட்டுற, பேச்சை குறை" என்று சொல்ல, தனு தான் தலையை தடவிக்கொண்டே நிலவனை முறைத்தாள்.
"ஓஓய் என்ன அங்க முறைப்பு?” என்றான் நிலவன்.
"ஐய்யோ சீனியர் நா உங்களை முறைக்கல சீனியர், சும்மா பாத்தேன்” என்று அண்ட புளுகு புளுக,
"ம்ம்ம்ம் அது... அந்த பயம் இருக்கட்டும். அது சரி உங்க பேர் என்ன?" என்றான் நிலவன்.
"என் பேரு தன்யா, இவ பேரு" என்று ஆரம்பிக்க,
"ஹலோ... ஏன்?? இந்த அமுல் பேபிக்கு வாய் இல்லையா? அவ பேரை அவ சொல்ல மாட்டாளா?" என்ற விஷ்வா, "ஹலோ! அமுல்பேபி உன் பேரென்ன?" என்று அதட்டி கேட்டதும், விஷ்வாவின் அதட்டலில் பயந்த மிருதுளா தத்தி தவறி, “மி… மி… மிருதுளா” என்று சொல்லி முடிப்பதற்குள் அவள் கண்களில் இருந்து கண்ணீர் கரைபுரண்டு வந்துவிட, ஏனோ நிலவனுக்கு மிருதுளா அழுவதை பார்க்க மனசு கேட்கவில்லை.
"ஏய் ஏய் அமுல்பேபி இப்ப எதுக்கு அழுற நீ? நாங்க உன்ன ஒன்னும் செய்ய மாட்டோம். எங்களை பாத்து பயப்படாதே. கண்ணத்தொட." என்று அன்பாக சொன்ன நிலவனை, ஏனோ மிருதுளாவுக்கு பிடித்து விட, மெதுவாக சிரித்தவள் கண்களை துடைத்து கொண்டாள்.
"குட் கேர்ள்… இப்ப நீ கிளாசுக்கு போ." என்று சொன்னது தான் தாமதம் மிருது, தனு இருவரும் மின்னல் வேகத்தில் ஆங்கிருந்து ஓடி மறைந்தனர்.
"அடப்பாவிகளா காத்து மாதிரி மறஞ்சுபோய்டுச்சுங்க! நம்மை பாத்த அவ்வளவு டெரர் ரவா இருக்கு" என்று பரத் சொல்ல,
பிரேம், "ஆமா டா நம்ம பவர் இவ்வளவு நாள் நமக்கே தெரியல பாரேன்." என்றவன் நிலவனிடம் திரும்பி, "டேய்! அதென்னடா அந்த அமுல்பேபி அழுததும் அப்படியே மட்டைய மடிஞ்சுட்ட என்ன விஷயம்?" என்று குறும்பாக கேட்டான்.
"டேய் இப்ப நீ மீதி வாங்க போற பாரு... பாவம் அந்த பொண்ணு சத்தமா பேசுனதுக்கே கண்ணுல தண்ணி வந்து முகம் வாடி போச்சு. அதான் போக சொன்னேன். அதோட அந்த பொண்ணு முகத்தை பாக்க சிந்து மாதிரியே இருக்கு, அதான் மனசு கேக்கல"
(சிந்து நிலவனின் தங்கை அதே கல்லூரியில் முதலாமாண்டு மாணவி).
"டேய் உனக்கும் அப்படி தான் தோணுச்ச? எனக்கு கூட அந்த பொண்ணை பார்க்கும் போது சிந்து ஞாபகம் தான் வந்து. என்ன இந்த பொண்ணு அப்பாவி, ஆன, உன் தொங்கச்சி படுபாவி." என்று பரத்தும், பிரேமும் சொல்லி சிரிக்க,
நிலவன், ''டேய் உங்க நல்ல நேரம் அவ இங்க இல்ல. அவ மட்டும் நீங்க சொன்னதை கேட்டிருந்த உங்க நிலைமை என்னாகும் தெரியுமில்ல?"
"தெய்வமே தயவுசெஞ்சு இங்க நடந்தது நமக்குள்ளேயே இருக்கட்டும் அவகிட்ட எதுவும் சொல்லிடாத." என்று பரத், பிரேம் இருவரும் சரண்டர் ஆகினார்.
நிலவன் "ம்ம்ம்ம் அது! அந்த மரியாதை எப்பவும் மனசுல இருக்கட்டும்."
"ஓஓஓ கதை அப்படி போகுதா. அப்போ இனி அந்த மிளகுத்தூளும், தனியாதூளும் நமக்கு தங்கச்சியா நிலவன்?" என்று விஷ்வா கேட்க,
" எது மிளகா, தனியா வா.?? டேய் என்ன டா உலர்ர நீ?"
"ஆமா அந்த அமுல்பேபி பேரு மிளகா தூள், வால் டியூப் பேரு தனியான்னு தானே சொல்லுச்சிங்க?” என்ற விஷ்வா தலையில் கொட்டிய பிரேம்,
" அட கருமம் புடிச்சவனே... அது மிளகா, தனியா இல்லடா... மிருதுளா, தன்யா டா எரும."
"ஓஓ அத அப்படியும் சொல்லலாமோ?" என்று விஷ்வா சொல்ல,
நிலவன், "ம்ம்ம்ம் அப்படி தான்டா சொல்லணும். அதோட நா அந்த அமுல் பேபியை மட்டும் தான் தங்கச்சி மாதிரின்னு சொன்னேன். அந்த வால்டியூப்ப இல்ல... சப்பிப்போட்ட ஐஸ்குச்சி மாதிரி இருந்துட்டு என்ன வாய் அதுக்கு, ஏதோ அமுல்பேபி கூட வந்தால் தப்பிச்சா? மறுபடியும் என்கிட்ட தனியா மாட்டட்டும் அப்ப இருக்கு கச்சேரி அவளுக்கு." என்று சொல்லி திரும்பியவன் அப்போதுதான் ஷரவனை பார்த்தான்.
முகம் முழுவதும் ஒரு மந்தகாசப் புன்னகையுடன் ஷரவன் மெய்மறந்து அமர்ந்திருக்க,
விஷ்வா, "டேய் டேய்! ஷரவன்." என்று அவனை உலுக்க. நிகழ்வுக்கு வந்தான் ஷரவன்.
"ஏன்டா எரும.?? எதுக்கு இப்ப என்ன கூப்பிட்ட??" என்று கடுப்புடன் கேட்க,
"ஏன்டா சொல்ல மாட்ட. இங்க நாங்க ஒரு பாசவலையே பின்னிட்டு இருக்கோம். நீயென்னாடான்ன இப்படி புடிச்சு வச்ச பிள்ளையார் மாதிரி இருக்க.??"
"எது பாசவலையா? என்னடா உளறுற?"
“அதுடா இப்ப இங்கிருந்து போச்சே அந்த அமுல்பேபி மிருதுளா, அதை இன்னைக்கு இருந்து நாங்க எல்லாரும் எங்க தங்கச்சியா தத்தெடுத்துக்குட்டோம்." என்று சொல்ல, நண்பர்களை ஒரு மாதிரி பார்த்த ஷரவன்,
"ஐம் சோ ஹாப்பிடா.. இவ்வளவு நாள் நீங்க எனக்கு பிரண்ட்ஸ் சா இருந்தீங்க... இனி நீங்க நாலு பேரும் எனக்கு மச்சான் ஆகப் போறீங்க."என்றான் குறும்பு கொஞ்சமும் குறையாத குரலில்.
பரத், " டேய் என்னடா சொல்ற நீ? இதுக்கு என்ன அர்த்தம்? எனக்கு ஒன்னும் புரியல." என்று முழித்தான்.
ஷரவன் ஸ்டைலாக தன் கூலரை எடுத்து மாட்டியபடி, "ம்ம்ம்ம்ம் உங்க தொங்கச்சி அந்த அமுல் பேபி தான் என்னோட வருங்கால பொண்டாட்டின்னு அர்த்தம்." என்றவன். தன் பைக்கில் ஏறி சென்று விட, நண்பர் நால்வரும் கொஸ்டின் பேப்பர் பார்த்த பிள்ளை போல் பேயறைந்தத முகத்துடன் நின்றிருந்தனர்.
நிலவனுக்கு மட்டும் மனதில் ஒரு சின்ன நெருடல் இருக்க, இன்று ஷரவனுடன் இதைப்பற்றி பேச வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டான்.
கல்லூரியின் முதல் நாள் எந்தவித பெரிய தொல்லையும் இல்லாமல் முடிய மிருது, தனு நிம்மதியாக ஹாஸ்டல் வந்து சேர்ந்தனர்.
இங்கு ஷரவன் மிருதுளாவை நினைத்து கற்பனையில் அவளுடன் டூயட் பாடிக் கொண்டிருக்க, அவன் டூயட்டில் மண் அள்ளிப் போட வந்தான் நிலவன்.
"டேய் ஷரவன்!" என்ற நிலவனின் குரலில் கற்பனை கலைந்த, "ஏய் நிலவா வாடா, என்ன அதிசயம் ரொம்ப நாள் கழிச்சு வீட்டுக்கு வந்திருக்க, பிரியா அத்தை, சிந்து குட்டி எல்லாம் வந்திருக்காங்களா?" என்று ஆவலாய் கேட்க,
"இல்லடா நா மட்டும் தான் வந்தேன். உன்கிட்ட கொஞ்சம் பேசணும் அதான்" என்று இழுக்க... அவனை பார்த்து அர்த்தமாக சிரித்த ஷரவன். "என்னடா உன் புது தங்கச்சி மிருதுளா பத்தி பேசணுமா?" என்று நிலவன் மனதை சரியான கனிந்து சொல்ல, நிலவன் ஆச்சரியம்.
"ஆமாடா அமுல்பேபி பத்தி தான் பேசணும்." என்று தயங்கி தயங்கி சொல்ல, ஏனோ ஷரவனுக்கு நிலவன் மிருதுளாவை அமுல் பேபி என்று செல்ல பெயர் வைத்து அழைப்பது பிடிக்கவில்லை. அவனை தவிர வேறு யாரும் மிருதுளா செல்லமாக கூப்பிடுவது, அவளிடம் உரிமை எடுத்துக்கொள்வதும் அவனுக்கு பிடிக்கவில்லை. அதை ஷரவனின் முகபாவமே அப்பட்டமாக சொல்ல. அதை புரிந்து கொண்டான் நிலவன்.
"டேய் அவ எனக்கு தங்கச்சி மாதிரிடா. அவளை பாக்கும் போது எனக்கு சிந்து தான்டா ஞாபகம் வர." என்று தான் நண்பன் மனதை புரிந்து நிலவன் சொல்ல. அதில் மனம் நிறைந்த ஷரவன், "ஓகே நிலவா இப்ப சொல்லு மித்துவ பத்தி என்ன சொல்ல வந்." என்ற ஷரவனின் வார்த்தையில் நிலவன் ஒரு நிமிடம் சிலையாய் நின்று விட்டான்.
ஏனென்றால் இதுவரை ஷரவன் சிந்துவை தவிர எந்த பொண்ணையும் இப்படி உரிமையோடு செல்ல பெயர் வைத்து அழைத்ததே இல்லை. ஒரு முறை பிரேம் ஷரவனிடம் இதுபற்றி கேட்க, “நா சிந்துவை தவிர்த்து, எந்த பொண்ண மனசார விரும்புறேனே அவள மட்டும் தான் செல்லமா கூப்பிடுவேன். அவளுக்கு மட்டும் தான் அந்த உரிமை இருக்கு, வேற எவளுக்கும் அந்த உரிமை கிடையாது” என்ற ஷரவன் இன்று மிருதுளாவை உரிமையோடு மித்து என்றழைக்க நிலவனுக்கு மேலும் குழப்பம்.
"என்ன நிலவா? என் முகத்தை பார்த்துட்டே இருக்க, மித்து பத்தி ஏதோ பேசணும்னு சொன்னீயே?? என்ன அது?? சொல்லு"
"இல்ல ஷரவன்! அது அது வந்து." என்று நிலவன் இழுக்க,
"டேய் நீ என்ன சொல்ல வரேன்னு உன் முகத்தை பார்த்தாலே தெரியுது. இன்னைக்கு மித்துவ என் பொண்டாட்டினு சொன்னதை பத்தி தான கேக்க வந்த?"
"ஆமாடா உன்ன பத்தி எனக்கு நல்ல தெரியும். பாவம் அந்த பொண்ணு பார்த்த அப்பாவியா தெரியுது. நீ பாட்டுக்கு பொண்டாட்டி அது இதுன்னு சொல்லிட்டு போய்டுவ, அப்புறம் அந்த அமுல்பேபி நிலைமை என்னாகும்" என்ற நிலவனை ஷரவன் முறைதான்.
"டேய் டேய் கோச்சிக்காதடா. நீ நல்லவன் தான், நா இல்லைன்னு சொல்லல. ஆன, நீ."என்று அதற்கு மேல் சொல்ல முடியாமல் நிலவன் பேச்சை நிறுத்த,
"புரியுது நிலவா, நா நிறைய பொண்ணுங்க கூட பழகுறது, அவங்க கூட ஊர் சுத்துறது பத்தி தான நீ சொல்ல வர.எங்க மித்துவும் பத்தோட பதினொன்னா ஆகிடுவளோன்னு உனக்கு பயம், அப்படி தானே." என்று நிலவனின் மன ஓட்டத்தை ஷரவன் சரியாக கணிக்,. நிலவனும் ஆம் என்று மெதுவாக தலையாட்டினான்.
"டேய் என் வாழ்க்கையில பல பொண்ணுங்க வந்து போயிருக்காங்க தான், நா இல்லன்னு சொல்லல. ஆனா, அவங்க எல்லாம் என்னோட அழகுக்கு, பணத்துக்கு தான் என் பின்னாடி சுத்துறாங்க. நானும் சும்மா ஒரு ஜாலிக்கு அவங்க கூட பழகினேன் அவ்ளோ தான். ஆன, அந்த பொண்ணுங்க இடம் என் பெட்ரூம் வாசல் வரைக்கும் தான்டா. அதை தாண்டி இதுவரை ஒருத்தியும் இந்த ரூமுக்குள்ளயும் வந்தது இல்ல, என் மனசுக்குள்ளயும் வந்ததில்ல. என் வாழ்க்கையில் நா விரும்பின முதல் பொண்ணும் மித்து தான், கடைசியும் அவ தான். இந்த ஜென்மத்தில் அவ ஒருத்தி மட்டும் தான்டா எனக்கு பொண்டாட்டி." என்று ஷரவன் தீர்க்கமாக சொல்ல, நிலவனுக்கு அப்போது தான் உயிரே வந்தது.
"ரொம்ப சந்தோஷம் ஷரவன் நீ சொன்னாத கேட்ட பிறகு தான் மனசு நிம்மதியா இருக்கு, ஆனாலும் ஒரு சின்ன சந்தேகம் இருக்குடா ஷரவன்."
"இன்னும் என்னடா சந்தேகம்?”
"இன்னைக்கு காலையில் தான் அமுல்பேபிய பார்த்தே, அதுக்குள்ள எப்படிடா இப்படி ஒரு லவ்வு. அதுவும் கல்யாணம் பண்ணிக்கிற அளவுக்கு." என்று நம்பமுடியாமல் ஷரவனை பார்க்க, ஷரவன் நிலவனை பார்த்து மென்மையாக சிரித்தான்.
"டேய் மித்துவை நான் இன்னைக்கு தான் முதல் முறையா பாத்தேன்னு நெனச்சியா.?? நான் அவளை இதுக்கு முன்னையே பாத்திருக்கேன் டா.”
"அப்படி போடு... எப்படா நடந்தது இது? அதுவும் எங்களுக்கு தெரியாம, முதல் முதல்ல அமுல்பேபிய எப்போ, எங்கே பாத்த நீ" என்று ஆர்வமாக கேட்க,
ஷரவன் கண்முன் மிருதுளாவை முதன் முதலில் பார்த்த அந்த அழகிய நாள் விரிந்தது.