நிஜம் 19
நிஜம் 19
விக்ரம் முழு போதையில் ஹாஸ்டல் கிளம்பி போக, வருணும் வேறு வழியின்றி அவனுடன் சென்றான்.
ஹாஸ்டல் பின்புறம் சுவர் ஏறிக் குதித்து இருவரும் உள்ளே சென்றனர்.
அங்கிருந்த பெரிய ஹாலில் லயா, த்வனியோடு சேர்த்து இன்னும் சில பெண்கள் உட்கார்ந்து ஜாலியாக அரட்டை அடித்துக் கொண்டிருந்ததைப் பார்த்த விக்ரம் அங்குச் செல்ல, அங்கிருந்த பெண்களில் ஒருத்தி எதேச்சையாகத் திரும்ப, அப்போது விக்ரமும் வருணும் வருவதைப் பார்த்து, தன்னை மறந்து கத்தியவள், "அடியேய் லயா அங்க பாருடி?" என்று கத்த, அவள் கத்தியதில் லயா, த்வனியோடு சேர்ந்து அனைவரும் திரும்பி பார்த்தவர்கள் பதறி விட்டனர்.
"ஏய் என்னடி இது? இவனுங்க இங்க என்னடி பண்றானுங்க? என்று த்வனி கேட்க, லயா முழிப்பிதுங்கி நின்றாள்.
விக்ரம் முழுப் போதையில், தட்டுத்தடுமாறி லயா அருகில் வர, அவனைக் கீழே விழுந்து விடாதபடி பிடித்துக்கொண்டே வந்தான் வருண்.
"ஏன்டி அப்டி சொன்ன? ம்ம்ம் ஏன் அப்படி சொன்ன? உனக்கு என்னை விட இந்தச் சூன்யக்காரி தான் பெருசா போய்ட்டா இல்ல… அப்ப நான் உனக்கு முக்கியம் இல்லய ரென்யா?" என்று கேட்ட விக்ரம் கண்களில் அப்படி ஒரு ஏக்கம். தன் ரென்யாவுக்குத் தன்னைவிட அவள் தோழி தான் முக்கியம் என்ற வேதனை அவனை உள்ளுக்குள் அறித்தது.
"சொல்லு ரென்யா என்னவிட இவ தான் முக்கியமா" என்றவன் தடுமாறி விழப்போக, லயா அவனைத் தாங்கிப் பிடித்தாள்.
"ஏன்டா... நீ திருந்தவே மாட்டிய, ஏன்டா இப்படிக் குடிச்சிட்டு வந்து எம் மானத்தை வாங்குற, அதான் அன்னைக்கே உனக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லன்னு சொல்லிட்டேன் இல்ல. அப்புறம் ஏன்டா என்ன இம்ச பண்ற?" என்று தலையில் அடித்துக்கொண்டாள்.
"அதெப்படி நீ என்னை வேணாம்னு சொல்லாம். அதெல்லாம் நீ சொல்லக்கூடாது, ஏன் சொல்ற நீ?" என்று பிரகாஷ்ராஜ் போல் பேச, வருணுக்கு ஆத்திரத்தில் அடிவயிறு பற்றிக்கொண்டு எறிந்தது.
"டேய் நைட் பத்து மணி ஆகுது டா. இப்படி லேடிஸ் ஹாஸ்டல்குள்ள, ஏன்டா குடிச்சிட்டு வந்து அழுச்சாட்டியம் பண்ற? யாரும் போலீஸூக்கு ஃபோன் பண்ணி அவங்க வந்து நம்ம புடிச்சு உள்ள தள்ளும் முன்ன கிளம்புடா. எதுவானாலும் நாளைக்குக் காலையில பேசிக்கலாம். சொன்ன கேளுடா" என்று கெஞ்ச, விக்ரம் இடவலமாகத் தலையாட்டி,
"முடியாது… நான் என்னோட ரென்யாகிட்ட பேசின போலீஸ்க்கு என்னடா? அவங்க எதுக்கு என்ன உள்ள தள்ளுவாங்க, அதெல்லாம் ஒன்னு இல்ல, அப்பறம்… ம்ம்ம ஆமா... நான்குடிச்சிருக்கேன் தான். ஆனா, அதுக்கு நீ என்னைத் திட்டக்கூடாது ரென்யா செல்லம். உனக்குத் திட்டனும்னா... தோ நிக்குதே சூன்ய பொம்மை உன் பிரண்டு இதை திட்டு, இதுதான் எல்லாத்துக்கும் காரணம்"
"டேய் நீ திரும்பத் திரும்பத் தப்பு பண்ணிட்டே இருக்க, இப்ப ஏன்டா நம்ம சண்டையில் அவளை இழுக்குற?"
"இழுப்பேன்… அப்படித்தான்டி இழுப்பேன். அவ மட்டும் என் லவ்ல மண்ணள்ளி போட பாக்குறளே… அதை என்னன்னு கேட்டிய நீ? என்னை மட்டும் திட்ற… அப்படி நான் என்ன பெரிய தப்பு பண்ணிட்டேன்." என்றவனை லயா தீயாக முறைக்க,
"ஓகே தப்பு தான் பண்ணிட்டேன். அதுக்காக என்ன விட்டு போயிடுவீயா நீ? நீ இல்லாட்டி நான் செத்துப் போய்டுவேன்னு உனக்கு தெரியுமில்ல… அப்புறம் ஏன்டி இப்படி பேசுற?" என்றவன் கலங்கிய முகத்தைப் பார்த்து அங்கிருந்த அனைவருக்குமே ஒரு மாதிரி ஆகிவிட்டது.
"தேவ் ப்ளீஸ்… நான் ஏற்கனவே உன்மேல செம்ம கோவத்தில் இருக்கேன். நீ மேலும் மேலும் இப்படிப் பண்ணி அதைக் கொலைவெறிய ஆக்காத… ஒழுங்க சொல்றேன், மரியாதைய இங்கிருந்து போய்டு, இனிமே என் மூஞ்சிலயே முழிக்காத" என்ற லயா கோவத்தில் முகத்தை வேறு பக்கம் திரும்பிக் கொள்ள, லயா பின்னால் நின்றிருந்த த்வனியை அக்னி பார்வை பார்த்தான் விக்ரம்.
"சந்தோஷமாடி, நீ நெனச்சசது நடந்திடுச்சு. இப்ப உனக்குச் சந்தோஷமா? அப்படியே உள்ள கூலு கூலுன்னு இருக்குமே… விடமாட்டேன்டி, உன்னை விடமாட்டேன். என்னை ரென்யாவை என்கிட்ட இருந்து பிரிக்க யாராலும் முடியாது. இனிமே நீ எங்க ரெண்டு பேரை எப்படிப் பிரிக்குறேன்னு நானும் பாக்குறேன்" என்ற விக்ரம் தன் பேன்ட் பாக்கெட்டில் இருந்து எதையே எடுத்து லயா முகத்திற்கு முன் நீட்ட, அவன் கையில் தொங்கிய தாலியை பார்த்து லயா, த்வனி, வருணோடு சேர்த்து அங்கிருந்த அனைவரும் பதறி விட்டனர்.
"இதை உன் கழுத்துல கட்டிட்டால், இனிமே இந்த ராட்சசியால, உன்னை என்கிட்ட இருந்து பிரிக்கவே முடியாதோ..." என்ற படியே லயா கழுத்தில் தாலியை கட்ட அவன் முன்னேறினான்.
"டேய் விக்ரம் என்னடா பண்ற? இதெல்லாம் தப்புடா" என்று வருண் ஒரு பக்கம் கத்த,
"டேய் லூசு ஒழுங்க தாலிய கீழப்போட்டு, இல்ல உன்னை என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது" என்று த்வனி ஒரு பக்கம் மிரட்ட,
எதையும் காதில் வாங்காமல் லயா கழுத்தில் விக்ரம் தாலியை கட்டப்போக, அதுவரை பயத்தில் உறைந்து நின்ற லயா, விக்ரம் அருகில் வரணும், சட்டென விலகிவிட, அதை எதிர்பார்க்காத விக்ரம், லயா பின்னால நின்றிருந்து த்வனி கழுத்தில் தாலியை கட்ட போய்விட்டான்.
த்வனிக்கு ஒரு நிமிடம் உயிரே போய்விடும் போல் ஆகிவிட்டது.
"தேவ்… தேவ்" என்று லயாவும்,
"டேய் விக்ரம்… நிறுத்து டா" என்று கத்திக்கொண்டே வருணும் விக்ரமிடம் ஓடும் முன்,
தீடீரென நடத்தத் சம்பவத்தில் ஒரு நிமிடம் அதிர்ந்து நின்ற, த்வனி உடனே தன்னைச் சமாளித்து, தன் பலம் முழுவதையும் சேர்த்து விக்ரமை பிடித்து அப்படியே கீழே தள்ளி விட்டாள்.
ஒரு நிமிடம் தவறி இருந்தாலும் விக்ரம் த்வனி கழுத்தில் தாலியை கட்டி இருப்பான். நல்லவேளையாக த்வனி சுதாரிக்க, விபரிதம் எதுவும் அன்று நடக்கவில்லை. (ஆனா, விதி வலியது. அன்னைக்கு நடக்காமல் போனத அதுக்கு பிறகு நடத்தி வச்சு தான் சதி வேலையை விதி சரியா செஞ்சிடுச்சு…)
நடந்த சம்பவத்தில் அனைவருக்கும் ஒருநிமிடம் இதயம் வாய்வழியாக வெளியே வந்துவிடும் போல் ஆகிவிட்டது.
கீழே விழுந்து கிடந்த விக்ரமை வருண் தூக்கி நிறுத்த, த்வனி அதிர்ச்சியில் பித்துப் பிடித்துப் போல் அசையாமல் அப்படியே நின்றிருந்தாள்.
விக்ரம் கன்னத்தில் ஓங்கி ஒரு அறைவிட்ட லயா, "நீயெல்லாம் திருந்த மாட்ட, திருந்தவே மாட்ட டா. உன்னைப் போய்க் காதலிச்சேனே, என் புத்திய செருப்பால அடிக்கணும். அவ படிச்சி படிச்சி சொன்னா, உன்னை நம்ப வேணாம்னு, நான் கேக்கலயே… அதுக்குத் தான் இப்ப அனுபவிக்கிறேன். ச்சீ… இப்ப சொல்றேன். ஐ ஹேட் யூ, ஹேட் யூ ஃப்ரம் தீ கோர். போ… வெளிய போ… என் வாழ்க்கைய விட்டு வெளிய போ…" என்று கதறி அழுதவள் அப்டியே கால்மடக்கி உட்கார்ந்து விட்டாள்.
ஆஷா, ஷாலினி, ஆருஷி மூவரும் வருணையே பார்த்திருக்க,
"அன்னைக்குத் தான் நாங்க லயாவை பார்த்து கடைசி, அதுக்கு அப்புறம் நாங்க அவளைப் பாக்கவே இல்ல, பொறுத்து பொறுத்து பார்த்து ஒரு நாள் விக்ரமும் நானும் லயா வீட்டுக்கே போய்டோம். ஆனா, அங்க யாரும் இல்ல, அவங்க எல்லாரும் யூ.எஸ் போட்டாங்கன்னு, திரும்பி வர ஒரு வருஷம் ஆகும்னும் அக்கம்பக்கத்துல சொன்னாங்க, லயாவை பத்தி தெரிஞ்சிக்க, விக்ரம் அவன் ஈகோவை விட்டு த்வனி வீட்டுக்கு கூடப் போனான். ஆனா, அவளும் லயாவோட யூ.எஸ் போயிருக்கான்னு தெரிஞ்சுது. அதுக்கு அப்புறம் ஒவ்வொரு நாளும் விக்ரம் லயா வருவா வருவான்னு எதிர்பார்த்து எதிர்பாத்து காத்திருந்தான்."
"லயா திரும்பி வந்தாங்கல வருண்?" என்ற ஆருஷியை பார்த்து இல்லை என்று தலையாட்டி வருண்,
"லயா வர்ல, அவ அப்பா, அம்மா மட்டும் வீட்டு திரும்பி வந்தாங்கன்னு நியூஸ் வந்துது. உடனே நான் விகரம்கிட்ட கூடச் சொல்லாம நிலைமை என்னன்னு தெரிஞ்சிக்க, அவங்க வீட்டுக்கு போனேன். லயா காலேஜ்மேட்னு சொல்லி லயா பாத்தி கேட்டேன்." என்ற வருண் குரல் கம்மிவிட,
"அவங்க என்ன சொன்னாங்க வருண்?"
"லயாக்கு அவ மாமா கதிர் கூடக் கல்யாணம் ஆகிடுச்சுன்னு சொன்னாங்க," என்ற அமைதியாக விட்டான்.
"என்ன வருண் இது? எப்படி லயா இப்படி ஒரு துரோகத்தை விக்ரம்கு செஞ்சாங்க, இப்பவே இவ்ளோ வயலெண்ட்ட இருக்க, விக்ரம் அப்ப லயா மேரேஜ் பத்தி தெரியும் போது, என்னென்ன பண்ணி இருப்பாரே!!? கடவுளே நினைக்கவே பயம இருக்கு" என்றாள் ஆஷா.
"அங்கதாங்க டுவிஸ்ட்டே நடந்தது. முதல்ல நான் விஷயத்தைச் சொல்லும் போது விக்ரம் நம்பவே இல்ல. என்ன போட்டு பொறட்டி எடுத்துட்டான். அவனுக்கு எப்படியும் உண்ணையப் புரியவைக்ணும்னு. லயா அப்பாகிட்ட இருந்து வாங்கின, லயாவோட யூ.எஸ் நம்பரை அவன்ட்ட குடுத்து பேச சொன்னேன். அவனும் உடனே கால் பண்ணான்."
"லயா விக்ரம் கிட்ட பேசினாங்கள வருண்?"
"ம்ம்ம் பேசிச்சு ஷாலு, எனக்கும் என் மாமாக்கும் கல்யாணம் ஆகிடுச்சு, நான் என் மாமா கூட ரொம்ப ஹாப்பிய இருக்கேன்னு சொன்னா, ஆனா விக்ரம் அதை நம்பவே இல்ல, உனக்கு எதாவது ப்ராப்ளம் இருந்து சொல்லு ரென்யா. எல்லாத்தையும் நான் சால்வ் பண்றேன். சொல்லு உனக்கு எதுவும் பிரச்சனைய, அந்த ராட்சசி எதுவும் பிரச்சனை பண்றாளன்னு இவன் கேட்க, அந்தப் பொண்ணு டென்ஷனாக்கிடுச்சு. ஏன்டா மறுபடி மறுபடி த்வனிய இதுல இழுக்குற… அவ ஒன்னும் பண்ணால, எனக்குப் புடிச்சி தான் நான் என் மாமாவ கட்டிக்கிட்டேன். நீ நம்பாட்டி, நான் என் மேரேஜ் ஃபோட்டோஸ் அனுப்பி வைக்கிறேன் பாரு, இனிமே தயவுசெஞ்சு எனக்கு ஃபோன் பண்ணி பேச ட்ரை பண்ணாத, எனக்குக் கிடைச்சிருக்க நல்ல வாழ்க்கைய கெடுத்துறாதன்னு சொல்லிட்டு. அடுத்த ரெண்டு நிமிஷத்துல அவளோட கல்யாணம் ஃபோட்டோஸ் விக்ரம்கு அனுப்பி வச்சிது. அதைப் பாத்து அப்புறம் அவன் என்ன பண்ணுவானோன்னு நான் பயத்துட்டே இருந்தேன். ஆனா, ஃபோட்டோவ பாத்த அப்புறம் விக்ரம் ரொம்ப அமைதியாகிட்டான். என்னால என்னைக்கும் உனக்கு எந்தப் பிரச்சனையும் வராது ரென்யா. இது உன்மேல சத்தியம்னு சொல்லிட்டு ரூமுக்கு போய்ட்டான். காலையில நான் எழுந்து பாக்கும் போது விக்ரம் அங்க வீட்ல இல்ல. அப்ப தான் சௌந்தர்யா ஆன்ட்டி ஃபோன் பண்ணி விக்ரம் அங்க சென்னைக்கு வீட்டுக்கு வந்துட்டத சொன்னாங்க. அதுக்கு அப்பறம் ஒரு தடவை நான் அவனை இங்க சென்னைக்கு வந்து பாத்துட்டு போனேன். அதுக்குப் பிறகு மேல் படிப்பு, வேலை அப்படி இப்படின்னு நான் விக்ரமை பாக்கவே இல்ல, நீ ஃபோன் பண்ணி, அவனுக்குப் பிளட் குடுக்க வந்தப்பா தான் நான் அவனை மறுபடியும் பாத்தேன்." என்று வருண் விகர்ம, லயா, த்வனி பற்றி அவனுக்குத் தெரிந்தது அனைத்தையும் சொல்லி முடித்தான்.
ஆஷா இழுந்து பெருமூச்சு விட்டவள், "எனக்கு என்ன சொல்றதுனே புரியல வருண். இதுல யார் தப்பு, யார் சரின்னு சொல்ல முடியல. அவங்க அவங்க வழியில் அவங்க பண்ணது கரெக்ட் தான். இதுல நிஜமா யார் மேலயாது தப்புன்னா அது அந்தக் கடவுள் மேல தான்."
"உன்னைத் தான் அண்ணி. த்வனி ப்ரண்டு வாழ்க்கை நல்லா இருக்கணும்னு நெனச்சிருக்க, விக்ரம் அவர் லயா அவருக்கு வேணும்னு நெனச்சிருக்காரு, இதுல யாரையும் எதுவும் சொல்றதுக்கு இல்ல. இவ்வளவு தெரிஞ்ச பிறகு, இனிமே த்வனியோட லைஃப் என்னாகும் அண்ணி?" என்று ஷாலினி உண்ணை அக்கறையில் கேட்டாள்.
"எனக்கும் ஒன்னும் புரியல ஷாலு. இவங்களுக்குள்ள சண்டைய இருந்த பேசி புரிய வச்சுச் சமாதானம் பண்ணலாம். ஆனா, இவங்க கதையே வேறய இல்ல இருக்கு, இதுல நம்ம என்ன செய்யமுடியும்னு எனக்கும் புரியல" என்று ஆஷா தலையில் கைவைத்து கொண்டாள்.
"அண்ணி எனக்கு ஒரு ஐடியா தோணுது" என்ற ஆருஷியை மூவரும் திரும்பி பார்த்து, "என்ன ஐடியா" என்று கோரஸாகக் கேட்ட,
"இல்ல... வருண் சார் சொல்றதுல இருந்து விக்ரம்கு லயாவை எவ்ளோ புடிக்கும் நல்லா தெரியுது. நம்ம ஏன் பேசாம அவங்களைக் கூப்டு விக்ரம், த்வனிகிட்ட பேச வைக்கக்கூடாது. எனக்கென்னமே அவங்க வந்து பேசின எல்லாம் சரியாகிடும்னு தோணுது" என்று சொல்ல, மற்ற மூவருக்கும் அவள் சொல்வது சரியென்றே பட்டது.
"ஆரு சொல்றதும் கரெக்ட் தான் அண்ணி. லயா வந்து விக்ரம், த்வனிகிட்ட பேசின இந்தப் பிரச்சனைக்கு எதாவது ஒரு சொல்யூஷன் கிடைக்கும். ஒன்னு... ரெண்டு பேரும் எல்லாத்தையும் மறந்து புது லைஃப் ஸ்டார்ட் பண்ணட்டும். இல்லயா, இந்த ரிவென்ச் ப்ராசஸை விட்டுட்டு, அவங்கவங்க வாழ்க்கைய பாத்துட்டு, தனித்தனி வழியில போகட்டும். இது ரெண்டுல எது நடக்கணும்னாலும் லயா இங்க வந்தே ஆகணும்."
"அதுவும் சரிதான். த்வனி ஃபோன்ல லயா இல்ல கதிர் நம்பர் இருக்கும். உடனே கால் பண்ணு பேசுறேன்" என்ற ஆஷா த்வனி ஃபோனில் இருந்து கதிர் என்ற பெயரில் இருந்த நம்பருக்கு அழைத்தாள்.
நாலைந்து ரிங் போன பிறகு அழைப்பு ஏற்கப்பட்டது.
"ஹாய் த்வனி டார்லிங் எப்படிடி இருக்க, ஏன் இப்பெல்லாம் நீ ஃபோன் பண்றதே இல்ல, நான் உன்னை ரொம்ப மிஸ் பண்றேன் த்வனி. நீ கடைசிய யூ.எஸ் வந்துபோய் ஒரு வருஷம் மேல ஆகுது தெரியுமா. சரி எப்ப நீ எங்களைப் பாக்க வர!" என்று ஆஷாவை பேசவிடாமல் எதிர்முனையில் ஒருத்தி பேசிக்கொண்டே இருக்க... சட்டென, "த்வனி ஒரு நிமிஷம், பாப்பா அழுகுது, நீ அவர்கிட்ட பேசிட்டு இரு, நான் தோ வந்துடுறேன்" என்றவள், "மாமா த்வனி லைன்ல இருக்க, நீங்க பேசுங்க, நான் தோ வந்துடுறேன்." என்று ஃபோன் கதிரிடம் தந்துவிட்டு போனாள்.
"ஹாய் த்வனி? எப்படிமா இருக்க?" என்று வந்த ஆண்குரலில் அது கதிர் என்று புரிந்துகொண்ட ஆஷா, "சார் நான் த்வனி இல்ல, அவ அண்ணி ஆஷா பேசுறேன். உங்ககிட்ட ஒரு உதவி கேட்டு தான் ஃபோன் பண்ணேன்" என்று சொல்ல, கதிர் ஒரு நிமிடம் யோசித்தவன்,
"ம்ம்ம் சொல்லுங்க" என்று சொல்ல, ஆஷா நடந்த அனைத்தையும் ஒரே மூச்சில் சொல்லி முடித்தாள்.
"என்ன சொல்றீங்க…!! த்வனி, விக்ரமை கல்யாணம் பண்ணிக்கிட்டாளா?! இது எப்படி நடக்கும். அவ எப்படி இதுக்குச் சம்மதிச்சா!? இவ்ளோ நடந்திருக்கு ஏன் அவ எனக்கு ஒரு ஃபோன் கூடப் பண்ணி விஷயத்தைச் சொல்ல?" என்று பதறினான்.
"மே பீ உங்களைத் தொல்ல பண்ணவேணாம்னு நினைச்சிருப்ப போலச் சார். இப்ப கூட நாங்க ஃபோன் பண்றது அவளுக்குத் தெரியாது. நாங்கள தான் லயாவும் நீங்களும் இங்க வந்தால், இந்த ப்ராப்ளம்கு எதாவது சொல்யூஷன் கிடைக்கும் ஒரு நம்பிக்கையில ஃபோன் பண்றோம்" என்றாள் ஆஷா.
"கண்டிப்பா நாங்க வரோம். அவ எனக்குத் தங்கச்சி மட்டும் இல்ல, அவ எனக்குப் பொண்ணு மாதிரிம்மா. அவ வாழ்க்கையில ஒரு பிரச்சனை வந்த, நான் கண்டிப்பா த்வனிக்கு துணைய நிப்பேன். முடிஞ்ச வரை நாங்க சீக்கிரம் இந்தியா வரோம்." என்று கதிர் உறுதியாகச் சொன்ன பிறகு தான் மூன்று பெண்களும் நிம்மதி வந்தது.
லயா இங்கு வந்துவிட்டால் அனைத்து பிரச்சினைகளுக்கும் முடிவுக்கு வந்துவிடும் என்று அனைவரும் நிம்மதியில் இருக்க, அனைவரின் நிம்மதியோடு சேர்த்து த்வனியின் கடைசிச் சந்தோஷத்தையும் குழிதோண்டி புதைக்கும் காரியத்தைத் தயங்காமல் செய்தான் விக்ரம்.
