அர்ஜூன் ஆத்யா 11



அர்ஜூன் ஆத்யா 

பகுதி 11




லண்டனின் அழகிய காலைப் பொழுது, அர்ஜூனின் நினைவுகளில், இரவு தூக்கத்தை தொலைத்த ஆத்யா விடிந்த பிறகே தூங்கி இருந்தாள். 

காலையில் ஃபோன் அடித்த சத்தத்தில் தூக்கம் கலைந்து எழுந்திரிக்க பார்த்தவள், வயிற்றை இறுக்கி பிடித்திருந்தது ஒரு கை. அந்த கைகளுக்கு வலிக்காமல், அவள் மென்மையாக முத்தம் வைக்க, "ம்மா" என்ற இனிமையான மழலை மொழியில் முகம் மலர்ந்தாள்.

"குட் மார்னிங் லட்டு குட்டி" என்று தன் மகளின் கன்னத்தில் அவள் இதழ் பதிக்க, "ம்மா.!! டாடி… டாடி இன்னைக்கு தான உதுக்கு வதாரு" என்று தன் கிள்ளை மொழியில் கொஞ்ச, "ஆமா டா லட்டு. டாடி இன்னைக்கு வந்துருவாரு என்று சொன்னதும்,  குழந்தை பெட்டின் மீது துள்ளி குதித்து, "ஐய்யா டாடி வதாரு, டாடி வதாரு" என்று கத்திய குழந்தையை அனைத்த ஆத்யா, "லட்டு குட்டிய இன்னைக்கு டாடி தான் ஈவினிங் ஸ்கூலுக்கு வந்து பிக் பண்ணுவாராம். சோ பாப்பா இப்ப சீக்கிரம் குளிச்சிட்டு ஸ்கூலுக்கு ரெடியாகுங்க" என்றவள் மகளை  தயார் செய்து, தானும் ரெடியாகி குழந்தையை ப்ளே ஸ்கூலில் விட்டு விட்டு ஹாஸ்பிடல் சென்றாள்.

ஆத்யா ஹாஸ்பிடல் வந்தவள், அன்றைய நாள் தன் பார்க்க வேண்டிய நோயாளிகளை பார்த்துவிட்டு, மதியம் போல் தன் ரூமில் உட்கார்ந்து தன் லேப்டாப்பில் அடுத்து செய்ய வேண்டிய சர்ஜரி பற்றிய தகவல்களை பார்த்துக் கொண்டிருக்க, அவள் ரூமின் கதவு தட்டப்பட்டது.

"எஸ் கமின்" என்றவள் லேப்டாப்பில் இருந்து தலையை எடுக்காமலே சேரில் உட்காரும்  படி கைகாட்டி,  "எஸ் டெல் மீ வாட் யூ வான்ட்?" என்று கேட்கும்போது கூட யார் வந்தது என்று பார்க்கவில்லை. 

"ஐ வாண்ட் மை தியா பேக்"  இஸ் இட் பாசிபிள்?" என்ற வார்த்தைகளில் சட்டென திரும்பி பார்க்க, அங்கு ஆர்வமாக தன்னையே பார்த்துக் கொண்டிருந்த அர்ஜுனின் பார்வையில் ஒரு நிமிடம் தடுமாறியவள், பின் தலையை சிலுப்பி அந்த தடுமாற்றத்தை கலைத்தாள். 

அவன் சொன்ன வார்த்தைகள் அவள் கோவத்தை கிளற, "வாட்  நான்சென்ஸ் இஸ் திஸ் அஜ்ஜூ?? என்று கத்த, வெகு நாள் கழித்து அவளின் அஜ்ஜூ என்ற அழைப்பில் அவன் மனம் துள்ளி குதிக்க சிரித்த முகத்துடன் அவளை பார்த்தான்.

அவன் பார்வையின் அர்த்தம் புரிந்தவள், தன்னை நினைத்து தானே நொந்து கொண்டாள். "மிஸ்டர். அர்ஜூன் யார்கிட்ட  என்ன பேசுறிங்கன்னு யோசிச்சு பேசுங்க..?? என்றாள் காட்டமாக.

"எனக்கு கண்ணு நல்லா தெரியும். என் முன்னாடி இருக்கிறது என்னோட தியான்னு நல்லா தெரிஞ்சு தான் பேசுறேன்" 

"ஸ்டாப் இட் அர்ஜூன். ஜஸ்ட் ஸ்டாப் இட்… நீங்க இப்படி பேசுறது சரியில்லை, இங்க நா டாக்டர் நீங்க என்னோட பேஷண்டோட பையன், அவ்ளோ தான் நமக்குள் இருக்க ரிலேஷன்ஷிப், மைன்ட் இட்"

"ஓஓஓ... டாக்டர்! டாக்டர். ஆத்யா…   மிஸஸ். ஆத்யா" என்றவனின் விழிகளில் அத்தனை வலி, ஏமாற்றம், அந்த மிஸஸ். ஆத்யா என்ற ரெண்டு வார்த்தை அவன் மனதை குத்திக் கிழித்தது. 

"ஓகே டாக்டர் ஆத்...  ஓஓஓஓ சாரி சாரி, டாக்டர் மிஸஸ் . ஆத்யா, என்னோட சித்தி செக்-அப்க்கு வந்து வெயிட் பண்றாங்க, இஃப் யூ டோன்ட் மைன்ட்?? நீங்க  வர முடியுமா?" என்றவனை முறைத்தபடியே அபிராமியை பார்க்க சென்றாள்.

அபிராமிக்கு செய்ய வேண்டிய அனைத்து டெஸ்ட்டையும் முடித்த ஆத்யா, மாலை அந்த  ரிப்போர்ட் வந்ததும் அதை சரிபார்த்து விட்டு அபிராமி அறைக்கு சென்றாள். 

சிரித்த முகத்தோடு உள்ளே வந்த ஆத்யா, "குட் ஈவினிங் அத்த"  என்றவள் மறந்தும் அர்ஜூனை ஒரு பார்வை கூட பார்க்கவில்லை. 

'நீ என்னை வேணும்னே அவாய்ட் பண்ற மாதிரி நடிக்கிற தியா. ஆனா, உன்னால அது முடியாதுன்னு உனக்கே தெரியும். அப்புறம் எதுக்கு இதெல்லாம்' என்று நினைத்தவன்,

"ஏன் தியா எனக்கெல்லாம் இந்த ஈவினிங் குட்டா இருக்கக்கூடாத? எனக்கெல்லாம் விஷ் பண்ண மாட்டியா" என்று வேண்டுமென்றே அவளை வம்பிழுக்க, அபிராமி முன் சண்டை வேண்டாம் என்று நினைத்தவள், "குட் ஈவினிங் அஜ்" என்றவள் டக்கென்று நாக்கை கடித்துக்கொண்டு, "குட் ஈவினிங் மிஸ்டர். அர்ஜூன்" என்க.
அவளின் தடுமாற்றத்தை எண்ணி தனக்குள்ளேயே சிரித்துக்கொண்டான் அர்ஜூன்.

"அத்த, ரிப்போர்ட்ஸ் எல்லாம் பக்காவா இருக்கு, இனி நீங்க சர்ஜரிக்கு ரெண்டு நாள் முந்தி ஹாஸ்பிடல் வந்த போதும்" என்று சொல்ல அர்ஜூன் முகம் வாடிவிட்டது.

'அய்யோ கடவுளே சித்தி தினமும் ஹாஸ்பிடல் வருவாங்க, கூட நானும் வருவேன், டெய்லி தியாவை பார்க்கலாம்னு நெனச்சேனே... இப்படி பண்ணிட்டியே? அட்லீஸ்ட் அவளை பார்க்கும் சந்தோஷம் கூட எனக்கு கிடைக்க கூடாத' என்று அவன் மனம் புலம்ப, அப்போது தியாவின் ஃபோன் அடித்தது. 

ஃபோன் ஸ்கிரீனில் தெரிந்த போட்டோவை பார்த்த அபிராமி வலியோடு அர்ஜூனை பார்க்க அவனோ கண்களில் தேக்கி இருந்த கண்ணீரை  சிந்தி விடாமல் கட்டி வைத்திருந்தான்.

ஆத்யா அர்ஜூனை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்துவிட்டு, ஃபோனை அட்டன் செய்து காதில் வைத்து, "எப்ப வந்த கௌதம்..?? என்று கேட்க,

"இப்ப தான் ஆது வந்தேன். லட்டு ஸ்கூல்ல தான் இருக்கேன். என்னோட பிரெண்ட்ஸ் சின்ன ஃபேமிலி மாதிரி டூர் போறாங்க, நம்மையும் கூப்டாங்க, அது பத்தி கேக்க தான் ஃபோன் பண்ணேன். நீ ஃப்ரீய ஆது."

"இல்ல கௌதம் வேல ரொம்ப டைட், என்னால வர முடியாது. சாரிப்பா"

"ஓகே ஆது அப்ப நான் லட்டுவை கூட்டிட்டு போறேன். நிறைய குட்டீஸ் வரங்க அவ நல்லா என்ஜாய் பண்ணுவ"

"ஓகே கௌதம். ஆனா, ஒரு கண்டிஷன், அவளுக்கு சாக்லேட், ஐஸ்கிரீம் எதுவும் வாங்கி கொடுக்க கூடாது. அவளுக்கு இப்ப தான் ஃபீவர் சரியாச்சு சொல்லிட்டேன்." 

"அவ கேட்டா கூட நா வாங்கி தர மாட்டேன். அதெல்லாம் நா ரொம்ப ஸ்ரிட்,  நீ கவலைப்படாத"

"யாரு நீ... நீ ஸ்ரிட்ட.?? அவ டாடின்னு கூப்டு, பாவமா மூஞ்ச வச்சு போது! ஐஸ்கிரீம் கடையே வாங்கி கொடுப்ப, நீ பேசுறியா"  என்றவள் பேச்சு கௌதமிடம் இருந்தாலும், அவள் பார்வை முழுதும் அர்ஜூனிடம் தான் இருந்தது. 

அவன் மதியம் என்னோட தியா என்று சொன்னதற்கு, அப்படி  ஒன்றும் இல்லை என்ற பதிலை இப்போது சொல்லாமல் சொல்லி விட்டாள் அவள். ஆனால், அந்த உண்மையை தாங்கும் சக்தி அர்ஜூனுக்கு மட்டுமல்ல, தனக்கும் இல்லை என்பதை அவளும் உணர்ந்தே இருந்தாள்.

"ஓகே, ஓகே ரொம்ப வாராத, நாலு நாள் நீ வீட்ல தனியா இருப்பிய ஆது? உனக்கு ஒன்னு ப்ராப்ளம் இல்லயே"

"ஏய் நான் என்ன சின்ன குழந்தையா? நம்ம வீட்டுல என்னால நாலு நாள் தனிய இருக்க முடியாத என்ன? ரொம்ப ஓவரா பண்ணாத. நீங்க கேர்புல்லா போய்டுவாங்க. ஐ வில் டேக் கேர் ஆஃப் மை செல்ப்"

"ஓகே ஆது, நாங்க கிளம்புறோம். யூ டேக் கேர்!! பை" என்றவன் ஃபோனை வைத்து விட்டான். 

"அத்தும்மா. கௌ… கௌதம்… இங்க தான் இருக்கானா.?? உனக்கு எதுக்கு ஃபோன் பண்றான்? அப்போ நீயும், அவனும்" என்ற அபிராமி தான் கேட்க நினைத்ததை முழுவதும் கேட்க முடியாமல் வார்த்தைகள் தடுமாறி அர்ஜூன் பார்க்க, அவன் முகத்தில் வெறுமை தான் நிறைந்து இருந்தது" 

"ஆமா அத்த, கௌதம் லண்டன்ல தான் வொர்க் பண்றாரு, ப்ரண்ட்ஸ் கூட நாலு நாள் டூர் போறாரு, குழந்தையையும் கூட போற, அத சொல்ல தான் கால் பண்ணாரு" என்றவள் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை. 

அபிராமி ஏதோ கேட்க வாயெடுக்க, கதவு திறக்கும் சத்தம் கேட்டு மூவரும் திரும்ப அங்கு அபிராமியின் கணவர் சிவா நின்றார்.

அவர் கையில் அழகிய ரோஜா மலர் போல் இருந்த குழந்தை "ப்பா" என்று சிரித்த முகத்துடன் அர்ஜூன் நோக்கி தன் பிஞ்சு கையை நீட்ட, ஓடிச்சென்று தன் மகளை கையில் ஏந்திக்கொண்ட அர்ஜூன், குழந்தையின் இரு கன்னத்திலும் மாறி மாறி முத்தம் வைத்தான்.

" ஐ மிஸ் யூ டா குட்டிம்மா" என்றபடியே மீண்டும் குழந்தைக்கு முத்தமிட, கொஞ்ச நாள் அப்பாவை பார்க்காமல் ஏங்கி இருந்த குழந்தையும் அர்ஜூன் கழுத்தை கட்டிக்கொண்டது.

அர்ஜூனையும் குழந்தையையும் கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் ஆத்யா.

"எப்படி இருக்க அத்தும்மா?"  என்ற சிவாவின் அழைப்பில் உணர்வு வந்த ஆத்யா, "என்… என்ன மாமா… ஹான் நா நல்லா இருக்கேன் மாமா. நீங்க எப்படி இருக்கீங்க?" என்று தட்டு தடுமாறி கேக்க,

"நா நல்லா இருக்கேன் அத்து. அபிராமி சொன்ன நீ இங்க தான் இருக்க, அவளை நல்லா பார்த்துக்குறேன்னு ரொம்ப தேங்க்ஸ் மா."

"அய்யோ என்ன மாமா இது, எனக்கு போய் தேங்க்ஸ் சொல்லிக்கிட்டு, நா எப்பவும் உங்க அத்து மாமா, அதுசரி இ... இந்த பாப்பா யா… யாரு மாமா?"

"இது அபிநயா மா, என்னோட பேத்தி, அர்ஜூன் பொண்ணு" என்று குழந்தையை அறிமுகம் செய்தார்.

"ஓஓஓ… அப்படியா! ரொம்ப க்யூட்டா இருக்க மாமா" என்று அர்ஜின் கையிலிருந்த குழந்தையின் கன்னம் வருடியவள் பார்வை அர்ஜூன் மேல் விழ, அந்த பார்வையை தாங்க முடியாமல் அவன் தலை குனிந்து கொண்டான்.

ஆத்யா அர்ஜுனிடம் இருந்து குழந்தையை தன் கையில் வாங்கி, " ஹாய் குட்டி பாப்பா, நீங்க ரொம்ப கியூட்டா இருக்கீங்க, உங்க பேர் என்ன??"

குழந்தை முதன் முதலில் ஆத்யாவை  பார்த்ததில் மலங்க மலங்க விழித்தவள்,  பயத்தில் அர்ஜூனை திரும்பி பார்த்தாள்.

"ஏய் குட்டிப் பாப்பா என்ன பார்த்து பயப்படாதீங்க, நா உங்க ப்ரண்டு தான். சோ நீங்க என்னை பார்த்து பயப்பட வேண்டாம், எனக்கு கூட உங்களை மாதிரியே ஒரு கியூட் குட்டி பாப்பா இருக்கு தெரியுமா?" என்று குழந்தையை பார்த்து சிரிக்க, அவள் கூடவே சேர்ந்து சிரித்த குழந்தை, அர்ஜூன் கையில் இருந்து ஆத்யாவிடம் தாவியது.

"ஏ பேது அபிநயா, ப்பா மத்தும் தியா கூப்புவாரு இல்லப்பா" என்று தான் அழகு குரலில் சொன்னபடியே, ஆத்யா கழுத்தை கட்டிக் கொள்ள, ஆத்யா திரும்பி அர்ஜூனை ஆழமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு குழந்தையை ஆரத்தழுவிக்கொண்டாள்.

"ஒகே அத்த டைமாச்சு நீங்க கெளம்புங்க, எனக்கும் டைமாச்சு நான் கெளம்புறேன். அப்புறம் மருந்தெல்லாம் கரெக்ட் டைம் சாப்பிடுங்க" என்றவள் குழந்தையை அபிராமியிடம் கொடுக்க, குழந்தை ஆத்யா கழுத்தை விட மாட்டேன் என்று அடம் பிடிக்க, அர்ஜூன் குழந்தையை ஆத்யாவிடம் இருந்து வாங்கிக் கொண்டான். 

ஆத்யா அர்ஜுனையும், குழந்தையையும் ஒரு அழுத்தமான பார்வை பார்த்துவிட்டு கிளம்பினாள். 

போகும் ஆத்யாவையே வெறித்த அர்ஜூன் விழிகள் கலங்கி இருக்க, இங்கு ஆத்மாவின் மனமோ, 'ஏன் அர்ஜூன் விதி நம்ம ரெண்டு பேர் வாழ்க்கையையும் இப்படி புரட்டி போட்டு வேடிக்கை பாக்குது.' என்று மனதில் புலம்பிய ஆத்யா மனம் முழுவதும் கனத்துடன் சென்றாள்.

அர்ஜூனை பார்த்த பிறகு ஆத்யாவின் ஒவ்வொரு ஒரு இரவுகளும் தூக்கம் தொலைந்த இரவாகி போனது. விடிந்த பின்பே உறங்க தொடங்கியவள் உறக்கத்தை கலைத்தது அவள் ஃபோன்.

அரை தூக்கத்தில் ஃபோனை எடுத்து காதில் வைத்து, "ஹலோ" என்க.

"குட் மார்னிங் ம்மா" என்ற தன் மகளின் குரலில் அவள் இதழ்களில் புன்னகை மலர்ந்தது.

"குட் மார்னிங் டா லட்டு" என்றபடியே வாரி சுருட்டி எழுந்து உட்கார்ந்தாள். 

"குட்டிம்மா என்ன பண்றீங்க? பிரஷ் பண்ணிடிங்களா?? பால் குடிச்சிங்களா?" என்று கேட்க,

"ஏய் ஆது என்னடி ஆச்சு உனக்கு? மணி பத்தாகுது, லட்டு பிரேக்- பஸ்ட் முடிச்சிட்டு ஒரு ரவுண்டு விளையாடிட்டே வந்துட்டா இப்ப போய் பிரஷ்  பண்ணியா?? பால் குடிச்சியான்னு கேக்குற?? என்ற கௌதம் கேள்வியால் அதிர்ந்த ஆத்யா,  "என்ன மணி பத்தாச்ச?! என்று அதிர்ந்து, திரும்பி கடிகாரத்தை பார்க்க அது கௌதம் சொன்னது உண்மை தான் என்றது.

"சாரி கௌதம், தூக்க கலக்கத்துல ஏதோ உலரிட்டேன்."

"ஏய் ஆது, நீ இன்னும் ஹாஸ்பிடல் போகல? என்னடா ஆச்சு? உடம்பு ஏதும் சரியில்லையா?? நாங்க வேணும்னா கிளம்பி வரட்டுமா"

"இல்ல கௌதம். ஐம் ஆல்ரைட், நைட்டு தூங்க லேட்டாயிடுச்சு அதான். எனக்கு ஒன்னு இல்ல, நீங்க டூர் முடிச்சே வாங்க, நான் பாத்துக்குறேன்.." 

"ஆது உண்மையா தான சொல்ற, நிஜமா உனக்கு ஒன்னு இல்லையே, முடியலன்னா சொல்லு டி, நாங்க வந்துடுறோம். டூர் முக்கியமில்ல, அப்புறமா நம்ம எல்லாம் சேர்ந்து டூர் அரேஜ் பண்ணி போயிட்ட போகுது" 

"ஐய்யோ எனக்கு ஒன்னு இல்ல டா, கொஞ்ச நேரம் தூங்கிட்டேன், அதுக்கு போய் ஏன்டா இப்படி ஓவரா ரியாக்ட் பண்ற, நான் டாக்டர் டா. அது உனக்கு நியாபகம் இருக்க இல்லையா?" என்று அவள் சிரிக்க,  

"ம்ம்ம் சரி... நீ ஏதோ சொல்ற, நானும் நம்புகிறேன். ஆனா, உனக்கு கஷ்டமா இருந்த சொல்லிடு, நாங்க வந்துடுறோம். எனக்கு நீ தான் முக்கியம் ஆது" என்று கௌதம் அக்கறையாக சொல்ல, அவன் அன்பில் உள்ளம் உறுத்த,  இதற்கு மேலும் அவனிடம் உண்மையை மறைக்க விரும்பாமல்,

" கௌ.."

"கௌதம்"

" நா…"

"நான் "

உன்கிட்ட ஒன்னு சொல்லனும்_ என்று இழுக்க..??

"ம்ம்ம் சொல்லு ஆது."

"அது கௌதம்" 

"அது வந்து..." 

"நா…?? "  

"நான்" என்று சொல்ல வந்ததை சொல்ல முடியாமல் அவள் தவிக்க, 

"ஏய் ஆது, என்ன ஆச்சு உனக்கு.?? நீ இப்படியெல்லாம் தயங்க மாட்டியே?? என்னடா ஆச்சு?? என்கிட்ட பேச தயங்குற, இதென்ன புதுசா இருக்கு?!" 

"அது கௌதம்"

"நான் அஜ்… இல்ல அர்ஜூனை இங்க லண்டன்ல பாத்தேன்" என்றவளுக்கு அதற்கு மேல் பேச முடியாமல் அமைதியாகி விட்டாள்.

"அவன எங்க பாத்த ஆது?? என்று கேட்டவன் குரலில் அனல் அடித்தது. 

"அபிராமி அத்தைக்கு ஹார்ட் பிராப்ளம் கௌதம். சர்ஜரி பண்ணும், என்னோட ஹாஸ்பிடல்ல தான் டிரீட்மென் எடுக்குறாங்க.. அவங்க கூட தான் அர்ஜூன்" என்றவளுக்கு அதற்கு மேல் வார்த்தை வரவில்லை.

"ஓஓஓ...  ஓகே ஆது, அவங்க பேஷன்ட், நீ டாக்டர். அந்த எல்லையோட நிறுத்திக்கோ, அதுதான் எல்லாருக்கும் நல்லது. உன் மனசுல லட்டுவும், நம்ம குடும்பமும் மட்டும் தான் இருக்கணும். உன்னோட நெனப்புல கூட அவன் வர்ரது எனக்கு புடிக்கல, உனக்கு புரியும்னு நினைக்கிறேன்."

"அதில்ல கௌதம், அர்ஜூன்" என்று அவள் ஏதோ சொல்ல வர..

''ஸ்டாப் இட் ஆத்யா? தட்ஸ் எனாஃப்.  இதுக்கு மேல இத பத்தி பேச வேண்டாம். இன்னு ரெண்டு, மூணு நாள்ல நாங்க வந்துடுவோம். நீ சீக்கிரம் ஹாஸ்பிடல் கிளம்பு, டேக் கேர்" என்றவனின் குரலில், நான் சொன்னதை மட்டும் செய் என்ற உத்தரவு இருந்தது."

கௌதம் பேசியது ஆத்யாவுக்கு கஷ்டமாக இருந்தாலும், அவன் சொல்றதும் சரிதான் என்று நினைத்தவள், குளித்துவிட்டு  மனமே இல்லாமல் ஹாஸ்பிடல் வந்தாள். 

மாலை தன் வேலைகளை முடித்து தன் ரூமிற்கு வந்தவள், ஃபோனை எடுத்து  பார்க்க அதில் அபிராமியிடம் இருந்து நான்கு, ஐந்து மிஸ்டு கால் வந்திருந்தது. திரும்பி அவரை அழைக்க நினைக்க. அவள் ஃபோன் அடித்தது.

"ஹலோ அத்த, உடம்புக்கு எதுவும் இல்லையே,?? இத்தனை தடவை ஃபோன் பண்ணி இருக்கீங்க?" என்று பதற, 

"எனக்கு ஒன்னு இல்ல அத்து, அபிக்கு தான் காலையில இருந்து ஒரே பீவரா இருக்கு, அம்மா, அம்மான்னு அனத்திட்டே இருக்கா, எனக்கு பயமா இருக்கு அத்து, நீ இங்க கொஞ்சம் வந்து அபிய பரேன்."

"இதோ கிளம்பிட்டேன் அத்த.. பைவ் மினிட்ஸ்" என்றவளுக்கு காலையில் கௌதம் சொன்னது அனைத்து மறந்து போனது.

"ஒன்னு இல்ல அத்த, ப்ளைட்ல வந்தது அவளுக்கு ஒத்துக்கல போல, ஜெட் லாக் தான். மருந்து கொடுத்திருக்கேன், நல்லா தூங்கினா சரியாகிடும்" என்று அபியின் தலையை கோதி கொடுத்தவள், "ஓகே அத்த டைமாச்சு நா கிளம்புறேன்" என்று எழ, அபி ஆத்யாவின் குர்தி முனையை  பிடித்துக்கொண்டு கண்ணில் கண்ணீரோடு ஏக்கமாக அவளை பார்த்தாள்.

"அய்யோ அபிக்குட்டி, எதுக்கு  இப்ப அழறீங்க" என்று குழந்தையின் கண்ணைத் துடைக்க, குழந்தை அவள் கழுத்தை இறுக்கி கட்டி கொண்டு, "அத்தும்மா அத்தும்மா போவத, ஏ குத இது" என்று தன் மழலை குரலில் கெஞ்சினாள்.

அபிராமியும், சிவாவும் அவளை அத்தும்மா என்றழைப்பதை கேட்டு குழந்தையும் அவளை அத்தும்மா என்றழைக்க, ஆத்யாவின் கண்கள் கலங்கி விட்டது. 

ஒரு குழந்தைக்கு தாயான ஆத்யாவை அபியின் அழுகை அசைத்து ஒன்னும் அதிசயம் இல்லை.

"குட்டிம்மா அடம்பிடிக்க கூடாது. அவங்க ரொம்ப பிஸியான டாக்டர் அம்மா. அவங்களுக்கு நிறைய வேலை இருக்கும். அவங்க போகட்டும் விடு, அப்பா குட்டிம்மா கூடவே இருக்கேன்" என்ற அர்ஜூனை முறைத்த ஆத்யா, குழந்தையிடம் திரும்பி, 

"அபிக்குட்டிக்கு இப்ப என்ன, நான் உங்க கூட இருக்கணும், அவ்ளோ தான, நான் உன் கூடவே இருப்பேனாம், குட்டிப்பாப்பா இப்ப அமைதியா தூங்கு வாங்கலாம்" என்று அவளை பெட்டில் படுக்க வைக்க குழந்தை,

"அத்தும்மா நா உ மதியில பதுக்கவா?"  என்று கேட்க, தன்னையறியாமல் ஆத்யா கண்கள் அர்ஜூனை பார்க்க, அவனும் அவளை தான் வலியோடு பார்த்துக்கொண்டு இருந்தான். 

அர்ஜுனுக்கு சின்னதாக உடம்பு சரியில்லாமல் போனாலும் ஆத்யாவுக்கு தான் திண்டாட்டம். அவள் மடியில் தான் படுப்பேன், சாப்பாடு ஊட்டி விட்டால் தான் சாப்பிடுவேன் என்று அவன் செய்யும் அட்டகாசத்துக்கு அளவே இருக்காது. இப்போது அபியை பார்க்கும்போது ஆத்யாவுக்கு அர்ஜூன் செயல் தான் நினைவு வந்தது.

குழந்தையை தன் மடியில் படுக்க வைத்துக் கொண்டு, மெதுவாக அவள் முதுகை  தட்டிக் கொடுக்க, அபி அமைதியாக உறங்கினாள். 

காலையில் இருந்து அதிகமாக வேலை பார்த்த அலுப்பில் ஆத்யாவும் கட்டில் ஓரம் தலை சாய்ந்து உறங்கிவிட, அபியை பார்க்க வந்த அர்ஜூன் குழந்தைபோல் அசந்து தூங்கும் ஆத்யாவை மெதுவாக தூக்கி சரியாக படுக்க வைத்து, போர்வையை எடுத்து இருவருக்கும் போர்த்தி விட்டு அபியின் நெற்றியில் கை வைத்து ஃபீவர் குறைந்து விட்டதா என்று பார்த்துவிட்டு திரும்பி ஆத்யா பார்த்தான்.  

"ரெண்டு பேர்ல யாரு குழந்தையின்னே தெரியால தியா. இன்னும் நீ அப்படியே டெட்டி பியர் மாதிரி தான் இருக்க, உனக்கு ஒரு பொண்ணு இருக்குன்னு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க" என்றவன் குரலில் அப்படி ஒரு ஆதங்கம், "ம்ம்ம்" என்று பெருமூச்சு விட்டு அந்த ரூம் கதவை மூடி விட்டு சென்றான்.