அர்ஜூன் & ஆத்யா 10

  




மெய் 10


அர்ஜூன் தன் பெட்ரூமில் கண்ணை மூடி அமர்ந்திருக்க, அவள் தோளில் யாரோ கை வைப்பதை உணர்ந்து கண் திறக்க, அவன் எதிரில் அபிமன்யு நின்றிருந்தான்.


அர்ஜூனை ஆழமாக பார்த்த அபி அவன் அருகில் உட்கார்ந்தான்.


"நீ அத்துவ விரும்புறிய அர்ஜூன்?" என்று நேராக கேட்க,


அர்ஜூன் நிமிர்ந்து அண்ணனை பார்த்தவன், சட்டென அவன் மடியில் முகம் புதைத்து கொண்டான்.


"எனக்கு தெரியலண்ணா, நான் என்னோட தியாவ விரும்புறேனான்னு எனக்கு சத்தியமா தெரியல. ஆன... ஆனா, அவள விட்டு, அவ இல்லாம என்னால இருக்க முடியாதுடா அண்ணா" என்று அழுதவன் முதுகை ஆதரவாக தடவி அவனை ஆசுவாசப்படுத்தினான் அபிமன்யு.


"ஏன்டா... வார்த்தைக்கு வார்த்தை அவ என்னோட தியான்னு உரிமையோட சொல்றீயே அப்ப அதுக்கு பேரு என்னடா?" என்றவறை அர்ஜூன் நிமிர்ந்து பார்க்க,


"டேய் லூசு தம்பி, இதுக்கு பேர் தான்டா காதல். உன்னால அவளை விட்டு இருக்க முடியாதுன்னு அழுகுற பாரு, இந்த உணர்வுக்கு, உறவுக்கு பேர் தான் காதல். நீ அத்துவ உன்னோட தியாவை காதலிக்கிற, அது இன்னுமா உனக்கு புரியல?"


எனக்கு தெரியல அண்ணா.?? இது காதலுன்னு எனக்கு தெரியல. ஆனா, எனக்கு என்னோட தியா வேணும். காலம் பூராவும் நாங்க ஒண்ணா இருக்கணும்." என்று சொன்ன அர்ஜூனை பார்க்கும் போது அபிமன்யு கண்களுக்கு அங்கு தாயுக்காக அழும் குழந்தை தான் கண்ணுக்கு தெரிந்தது. 


"நீ அத்துவ விரும்புற அர்ஜூன். ஆனா, அதை நீ இன்னும் உணரல, அதை நான் சொல்லி நீ உணரமுடியாது. நீயா தான் ஃபீல் பண்ணி புரிஞ்சுக்கணும். நான் சொல்லி அப்படியான்னு உனக்கு தோணக்கூடாது. நல்லா யோசி உன்னை நீயே கேட்டு பாரு. கண்டிப்பா உனக்கு நல்ல பதில் கிடைக்கும்." என்றவன் அவன் தோளை ஆதரவாக தட்டி விட்டு சென்றான்.


அபிமன்யு பேசியதை கேட்ட பிறகு, அர்ஜூன் இன்னும் குழம்பிப் போனான். அதோடு ஆத்யா எதுவும் சொல்லாமல் போனது வேறு அவனுக்கு கோபத்தை கிளப்ப, உடனே காரை எடுத்துக்கொண்டு அபிராமி தடுத்தும் கேட்காமல் பெங்களூர் கிளம்பிவிட்டான்.


இரவு பத்து மணிக்கு கௌதம், ஆத்யாவை அவள் பிளாட் வாசலில் இறக்கி விட்டான்.


"ஓகே ஆது நான் கிளம்புறேன்." என்றவனை தடுத்த ஆத்யா,


"ஏய் கௌதம்? என்ன இது இவ்ளோ தூரம் வந்துட்டு வீட்டு வராம போற…? உள்ள வா"


"இல்ல ஆது... டைம் ஆச்சு கொஞ்சம் சீக்கிரம் போகணும். நாளைக்கு காலையில பிளைட். இப்ப தான் அந்த ஹாஸ்பிடல்ல புதுசா ஜாயின் பண்ணி இருக்கேன். கரெக்ட் டைமுக்கு அங்க இருக்கணும். நான் கிளம்புறேன்." என்று ரெண்டாடி நடந்தவன் திரும்பி, "ஆது" என்று அவளை அழைத்தான். 


"என்ன கௌதம்?" 


"நீ அர்ஜூனை விரும்புறிய ஆது?" என்று கேட்டவனை வியப்பாக பார்த்த ஆத்யா தலையை குனிந்துபடி, இடவலமாக தலையை ஆட்டி, "தெரியல கௌதம். நிஜமா எனக்கு தெரியல. ஆனா, அவனை விட்டு என்னால இருக்க முடியாது, அது மட்டும் உண்மை" என்றவளை பார்த்து சன்னமாக சிரித்தான்‌ கௌதம்.


"நீ வீட்டுக்குப் போய் கண்ணாடி முன்னாடி நின்னு, நான் இப்ப உன்கிட்ட கேட்ட கேள்விய உன்னை பாத்து, நீயே கேட்டு பாரு ஆது. ஒருவேளை உனக்கு பதில், ம்ம்ம்… இல்ல, உண்மை புரியும்" என்று அவள் கன்னத்தை மெதுவாக தட்டி, "ஓகே ஆது நான் கிளம்புறேன். பட், ஒன்னு மட்டும் எப்பவும் ஞாபகம் வச்சுக்கோ, உனக்கு எப்ப, எந்த உதவி தேவைப்பட்டாலும், உனக்காக கௌதம்னு ஒருத்தன் இருக்கணும் மறந்துடாத" என்றவன் காரை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டான். 


கௌதம் கேட்டது ஆத்யவை வெகுவாக தக்க, அவளால் நிற்க கூட முடியவில்லை. கால்கள் துவண்டு விட தட்டுதடுமாறி படி ஏறிய வந்தவள், திரும்பி அர்ஜூன் வீட்டை பார்த்தாள்.


அபிராமி அவன் பெங்களூர் சென்றுவிட்டான் என்று சொன்னது நினைவு வர, அவன் வீட்டு கதவில் கை வைக்க, 'அந்த லூசு அர்ஜூன் என்ன பூட்ட மறந்துட்டான்' என்பதுபோல் திறந்து கொள்ள, ஆத்யா வீட்டிற்குள்ளே சென்றவள் வீட்டை பார்த்து திகைத்து நின்று விட்டாள். 


வீடு முழுவதும் கண்டபடி பொருட்கள் சிதறி கிடந்தது.


அந்த வீடு இருந்த இருப்பே சொன்னது அர்ஜூனின் கோபத்தின் அளவை. ஏற்கனவே கௌதம் சொன்னதில் குழம்பி இருந்த ஆத்யா, அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் மெல்ல அர்ஜூன் அறைக்கு போக, அங்கு மூடிய கண்களில் கண்ணீர் முத்துக்கள் திரண்டு உருண்டு, பக்கவாட்டில் வழிந்து கொண்டிருக்க, அவள் ஃபோட்டேவை மார்போடு அணைத்தபடி படுத்திருந்தவனை பார்த்த ஆத்யா முகத்தில் மெல்லிதான புன்னகை பரவியது.


மெல்ல அவன் அருகே சென்று அவன் தலை முடியை கோதிவிட, அந்த ஸ்பரிசத்திலேயே அது யாரென்று உணர்ந்த அர்ஜூன், அவள் கையை தட்டிவிட்டான்.


"ஏன்டி இங்க வந்த? உன்னை யாரு இங்க வரச் சொன்னது? போடி... போய் உங்க மாமா , மாமி கிட்டயே கெஞ்சிட்டு இரு" என்று கோபத்தில் முகத்தை திருப்பிக் கொண்டான். 


"ஓஓஓ…!! நான் போகணுமா? இப்ப நான் இங்க இருந்து போகனுமில்ல…" என்றவள் அர்ஜூன் முகத்தை பார்த்தபடி, 


"சரிடா நான் போறேன்" என்று எழுந்து கொள்ள, அர்ஜூன் சட்டென அவள் கையை பிடித்து இழுக்க, ஆத்யா தடுமாறி அவன் மார் மீது வந்து விழுந்தாள்.


அர்ஜூன் அவளை எழுப்பி தன்னருகில் அமர்த்திய, "ஏய் என்னடி நெனச்சிட்டிருக்க? இல்ல என்னதான் நெனச்சிட்டிருக்கன்னு கேக்குறேன்? போன்னு சொன்ன உடனே போய்டுவியா? நான் உன் மேல கோவமா இருக்கேன். அதான் சும்மா அப்படி சொன்னேன். இதுதான் சாக்குன்னு நீயும் போற, நியாயமா நீதான்டி என்ன சமாதானப்படுத்தனும். அத விட்டு என்னமோ முறுக்கிட்டு போற" என்று அவளை முறைத்தான். 


"ஏன்டா அஜ்ஜூ அப்படி கேட்ட?" என்று அவள் கேட்ட ஒரு கேள்வியில் அர்ஜூன் முகம் வாடிவிட்டது. 


அவன் கன்னத்தை தன் கைகொண்டு தாங்கி ஆத்யா, "நீ என்னை லவ் பண்றியா அஜ்ஜூ?" என்று அவன் கண்ணை பார்த்து கேட்க, அர்ஜூன் அவளை தன்னோடு சேர்த்து இறுக்கி அணைத்து கொண்டான்.


"தெர்ல தியா, நிஜமா எனக்கு தெரியல. ஆனா, நீ இல்லாம என்னால முடியாது. சத்தியமா முடியாது. நீ என் கூடவே இருக்கணும். அது… அதான்… உன்னை கல்யாணம் செஞ்சுக்க நெனச்சேன்" என்று படபடத்தவனை தன்னிடம் இருந்து விலக்கி உட்கார வைத்தாள் ஆத்யா.


"இங்க பாரு அஜ்ஜூ, நம்ம ரெண்டு பேருக்கும் நடுவுல இருக்குற இந்த உறவுக்கு என்ன பேர் சொல்றதுன்னு எனக்கு தெரியல. ஆனா, இது வெறும் நட்பு மட்டும் இல்லனு மட்டும் சொல்லலாம். நட்பையும் மீறி ஒரு நெருக்கம் நமக்குள்ள இருக்கு, அதுதான் உண்மை... அன்ட் ஐ அக்செப்ட் இட். நீ இல்லாம நானும், நா இல்லாம நீயும் இருக்கமாட்டோம்னு சொல்றதுக்கு பேரு நட்பு இல்ல. அட் த சேம் டைம். நமக்குள்ள காதல் இருக்கான்னு கேட்டா, அதுக்கும் நம்ம கிட்ட பதில் இல்லையே அஜ்ஜூ. நான் இப்ப உன்கிட்ட கேட்ட இதே கேள்விய கௌதம் என்கிட்ட கேட்டான். நான் உன்னை லவ் பண்றேனான்னு?? அதுக்கு நானும் தெரியலன்னு தான் சொன்னேன். இப்ப நீயும் அதை நான் சொல்ற, நீ நம்ம ரெண்டு பேர் ஒன்ன இருக்கணும்னு, அந்த ஒரே காரணத்துக்காக மட்டும் என்னை கல்யாணம் செஞ்சுக்க நெனச்சா?? ப்ளீஸ் அஜ்ஜூ உன் முடிவை மாத்திக்கோ" என்றவளை பாவமாக பார்த்தான் அர்ஜூன். 


"ஏன்டி அப்படி சொல்ற? உனக்கு என்னை பிடிக்கலயா?" என்றவன் குரலில் கோபத்தோடு ஆதங்கமும் கலந்திருக்க, 


"ப்ளீஸ் அஜ்ஜூ புரிஞ்சிக்க... ஒரு காரணத்துக்காக கல்யாணம் பண்ணக்கூடாது. நீ நினைக்கிற மாதிரி கல்யாணம் ஒன்னும் வெளயாட்டில்ல, கல்யாணம் ஒரு புனிதமான பந்தம். மனசலையும், உடம்பலயும் ரெண்டு பேரும் ஒட்டி இணைந்து வாழணும்." 


"அதெல்லாம் எனக்கு தெரியாது... எனக்கு என்னோட தியா வேணும், அவ்ளோ தான்." என்று அவன் சிறுபிள்ளை போல் அடம்பிடிக்க, ஆத்யா அதுவரை கட்டி வைத்திருந்த அவள் பொறுமையை இழந்தாள்.


"டேய் எரும மாடு கொஞ்சமாச்சும் புரிஞ்சு பேசுறியா நீ? சரி நீ சொல்ற மாதிரி நம்ம கல்யாணம் பண்ணிக்கிறோம்னு வை, என்னை உன்னால முழுசா பொண்டாட்டிய ஏத்துக்க முடியுமாடா? சொல்லுடா முடியுமா...? காதலை விடுடா, உனக்கு என் மேல சின்ன ஈர்ப்பு கூட இல்லை, அப்புறம் என்ன கூந்தலுக்கு இந்த கல்யாணம்?? ஹான் எதுக்கு..?? உன் மூஞ்ச நானும் என் மூஞ்ச நீயும் கடைசி வரை பார்த்துக்கிட்டு இருக்க வா? சொல்லுடா, பதில் சொல்லு... காதல், கல்யாணம், தாம்பத்தியம் இதெல்லாம் நீ நினைக்கிற மாதிரி விளையாட்டு இல்ல அஜ்…" என்று ஆரம்பித்தவள், சொல்ல வந்ததை சொல்லி முடிக்க விடாமல், தன் இதழ் கொண்டு தன்னவளின் இதழில் தன் ஆளுமையை காட்ட தொடங்கி இருந்தான் அந்த காதல் கள்ளன். 


அத்துமீறிய தீண்டால்... காமமும், தோழமை துளியும் இல்லாத, காதல் உணர்வுடன் மட்டுமே வெளிப்பட்ட முத்தம். முதன் முதலில் அர்ஜூனை நண்பன் அல்லாது, ஒரு முழுமையான ஆண்மகன் என்பதை அவளுக்கு உணர்த்திய முத்தம். 


அர்ஜூனின் திடீர் முத்தத்தில் ஆத்யா நிலைகுலைந்து நிற்க, அர்ஜூன் அவள் தாடையில் கைவைத்து அவள் முகத்தை நிமிர்த்தி, அவளை குறும்பாக பார்த்தவன்,


"யாருக்குடி உன் மேல ஈர்ப்பு இல்ல. ம்ம்ம் யாருக்கு இல்ல, எனக்காடி? எனக்கா இல்ல, அடி போடி லூசு, நான் முழுசா உன்கிட்ட விழுந்து ரொம்ப நாள் ஆச்சு, அன்னைக்கு அந்த கௌதம் கொரங்கு உன்னை வர்ணிச்சானே" என்று பல்லை கடித்தவன் வார்த்தைகளை மென்று துப்பினான். 


"அன்னைக்கே உன் மேல இருந்த என்னோட பார்வை மாறிடுச்சு தியா, உன் மரமண்டைக்கு தான் அது புரியல... அப்கோர்ஸ் அப்ப எனக்கும் அது புரியல தான். அதுக்கு பிறகு அன்னைக்கு உன்னை கோயில்ல முதல் முதல்ல உன்னை சேலையில பார்த்தேனே, ஸ்ப்பா…!! சொல்ல வார்த்தையே இல்லடி, அதுவும் நீ என்ன பார்த்து வெட்கப்பட்ட பாரு... ம்ம்ம்…!! உசுரே போச்சுடி, உன் நல்ல நேரம் அது கோயில போச்சு, அதனால நீ தப்பிச்ச, இல்லேன்னு வையேன்" என்று கண்ணடித்து ஒரு மாதிரி குரலில் சொன்னவனை புரியாமல் பார்த்த ஆத்யா, பின் அவன் சொன்னதின் அர்த்தம் புரிந்து கன்னம் சிவந்தாள்.


"ச்சீ பொறுக்கி... பேச்ச பாரு பேச்ச.?? உன்னை என்ன பண்றேன் பாரு??" என்று அவனை அடிக்க ஓங்கிய கையை பிடித்து இழுத்து தன் மார்போடு சேர்த்து அணைத்து, அவள் காதருகில் குனிந்த அர்ஜூன், "இப்ப சொல்லுடி… கல்யாணம் பண்ணிக்கலாமா?" என்று குழைந்த குரலில் கேட்டு, மீசையால் அவள் கன்னத்தில் உரச... அவன் அணைப்பில் மயக்கத்தில் இருந்தவள், கைகள் அவனை இறுக்கி தன்னோடு அணைத்துக் கொள்ள, அவள் தலை தானாக சம்மதம் என்று ஆடியது.