அர்ஜூன் ஆத்யா 16
அர்ஜூன் ஆத்யா
மெய் 16
ரியாவும், அபியும் அங்கிருந்த குழந்தைகளுக்கான பிலே ஏரியாவில் விளையாடிக் கொண்டிருந்த சமயம் அபிராமி ஃபோன் அடித்தது.
"சொல்லு அர்ஜூன்" என்ற அபிராமியிடம்,
"நீங்க எங்க இருக்கீங்க சித்தி" என்று கேட்டான் அர்ஜூன்.
"நா பாப்பாவோட வெளிய வந்திருக்கேன் அர்ஜூன்"
"அய்யோ சித்தி... குழந்தைய கூட்டிட்டு தனியா எதுக்கு போனீங்க?"
"இல்லடா, நாங்க நம்ம அத்து கூட தான் இருக்கோம். அவ பொண்ணு ரியா கூட வந்திருக்கு, அவ கூட தான் அபி விளையாடிட்டு இருக்கா என்றது தான், "நீங்க இப்ப எங்க இருக்கீங்க?" என்று மட்டும் கேட்டான் அர்ஜூன்.
அடுத்த நொடி ரியாவை பார்க்கும் ஆவலில் பறந்து வந்து விட்டான் அந்த ஷாப்பிங் மாலுக்கு.
அபிராமி, ஆத்யா பேசிக்கொண்டிருக்க, அர்ஜூன் வருவதை பார்த்தாள் ஆத்யா.
"அத்த டைமாச்சு நாங்க கிளம்புறோம்" என்றவள் ரியாவை அழைக்க, அதற்குள் அர்ஜூன் ஆத்யா இருந்த இடத்திற்கு வந்துவிட்டான்.
அவன் வந்தவுடன் ரியாவை அழைத்துக்கொண்டு ஆத்யா அங்கிருந்து செல்ல அர்ஜூன் மனம் கலங்கி விட்டது.
அர்ஜூன் ரியாவையே ஏக்கமாக அவன் பார்க்க, அதை கவனித்த ஆத்யாவுக்கு, அய்யோ என்றிருந்தது. அதற்குள் ஆத்யா சட்டையை பிடித்து இழுத்த அபி "அத்தும்மா ப்ளீஸ் அபிய வித்து போகாத" (அபியை விட்டு போகாத) என்று உதடு துடிக்க அழ ஆரம்பிக்க,ஆத்யா என்ன செய்வதென்று புரியாமல் தவித்தாள்.
அபியை கைகளில் தூக்கிக் கொண்ட ஆத்யா, "இல்ல அபி குட்டி அத்தும்மா நாளைக்கு திரும்பவும் உன்ன பாக்க வருவேன்" என்று அவளை சமாதானப்படுத்த, "நிஜமா, பிரமிஸ்" என்று தன் குட்டி கையை ஆத்யா முன் நீட்டினாள் அபி. ஆத்யாவும் பிரமிஸ் என்று குழந்தை கையில் தன் கையை வைத்து அழுத்தினாள்.
ஆத்யா திரும்பி அர்ஜூனை பார்த்தவள், தன் ஃபோனை எடுத்து, "அத்த கௌதம் கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும். ஒரு டூ மினிட்ஸ் ரியா பாத்துக்கோங்க, நா இப்ப வந்துடுறேன்" என்றவள் அபியை கீழே இறக்கிவிட்டு சற்று தூரமாக செல்ல, அவள் சென்ற அடுத்த நொடி ரியாவை தூக்கிக்கொண்ட அர்ஜூன் குழந்தை கன்னம் சிவக்கும் அளவிற்கு முத்தம் கொடுத்தான். தன் பிரியா ஏஞ்சலின் மினி வெர்ஷனை பார்த்தவனுக்கு கண்கள் கலங்கி விட்டது. ரியா அவனையே விழி விரிய பார்த்தவள், அவன் கலங்கிய கண்களை பார்த்து, "அச்சோ வாட் இஸ் திஸ்.. பெரிய பிக் பாய்ய இதுண்டுட்டு பேபி மாதி அழறீங்க" என்ற தன் பிஞ்சு கரம் கொண்டு அர்ஜூன் கண்ணீரைத் துடைத்தாள்.
"லட்டு பாப்பாக்கு அழுத புடிக்காது, ஸ்மைல்" என்று அர்ஜூன் இதழ்களை பிடித்து இரண்டு பக்கமும் இழுக்க, அவன் மனதில் அப்படி ஒரு சந்தோஷம்.
"தியா சொன்னது உண்மை தான் சித்தி. இவ அப்படியே என்னோடு பிரியா ஏஞ்சல் தான், அவங்களுக்கும் நான் அழுத சுத்தமா பிடிக்காது. இவளும் அப்படியே அவங்கள மாதிரியே இருக்கா… என் பிரியா ஏஞ்சல் எனக்காக மறுபடியும் குட்டிய பொறந்து வந்திருக்காங்க" என்றவன் ரியாவை இறுக்கி அணைத்து கொள்ள, தூரத்தில் இருந்து இவர்களை பார்த்துக் கொண்டிருந்த ஆத்யா கண்களில் நீர் கோர்த்து இருந்தது.
ரியாவை தூக்கி கொஞ்ச வேண்டுமென்று ஆவல் அர்ஜூன் கண்ணில் அப்பட்டமாக தெரிய, தன்னை பார்த்து தான் அவன் தயங்கி நிற்பது புரிந்த ஆத்யா, ஃபோனை காரணம் காட்டி அவர்களை விட்டு தள்ளி வந்தாள்.
இரவு நேரம் ரியா ஆத்யாவை கட்டிக்கொண்டு ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, ஆத்யாவின் கண்களில் துளி உறக்கம் இல்லை.
ஷாப்பிங் மாலில் இருந்து கிளம்பும் போது, அபி ஆத்யாவை கட்டிக்கொண்டு வரமாட்டேன் என்று அழ, ரியாவோ அர்ஜூன் தோளினை இறுக்கி பிடித்துகொண்டு, "அஜ்ஜூ விட்டு வரமாட்டேன்" என்று கத்திக்கொண்டிருந்தாள்.
பார்த்த கொஞ்ச நேரத்தில் ரியாவுக்கு அர்ஜூனை ரொம்ப பிடித்துவிட, அர்ஜூனிடம் அவன் பேர் என்ன என்று அதிகாரமாக கேட்டாள்.
அவன் அவள் குறும்பை பார்த்து ரசித்து சிரித்துக்கொண்டே, "என்னோட பேர் அர்ஜூன்" என்று சொல்ல, ரியா உடனே, "ஓகே அஜ்ஜூ, டுடே ல இதுந்து நம்ம ப்ரண்ட்ஸ்" என்று அவன் கன்னத்தில் இதழ் பதிக்க, அர்ஜூன் அப்படியே உறைந்து நின்றான்.
அவன் மனதில் அந்த நிமிடம் ஆத்யாவை சந்தித்த அவர்கள் முதல் சந்திப்பு, அதன் பின் ஆத்யா அவனை செல்லமாக அஜ்ஜூ என்றழைத்தது அனைத்தும் அவன் கண் முன் வந்து போக, அவன் திரும்பி ஆத்யாவை பார்க்க, அந்த நேரம் அவர்களை நெருங்கி இருந்த ஆத்யாவும் அவனை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவளை போலவே அவள் மகளும் அவனை அஜ்ஜூ என்றழைக்க ஆத்யா நிலை தான் அந்தோ பரிதாபம்.
( எல்லா விதி… அம்மா மாதிரியே பொண்ணு.. ம்ம்ம்)..
ஆத்யா நிலை இங்கு இப்படி இருக்க, அர்ஜூன் மனதோ என்னவென்று சொல்லமுடியாத உணர்வில் தவித்தது. ரியாவை பார்த்து, தொட்டுத் தூக்கிய நிமிடத்தில் இருந்து அவன் உள்ளம் அவன் வசமில்லை. தன் தாய் ஸ்தானத்தில் இருந்த அவன் ப்ரியா ஏஞ்சலின் பிரதி பிம்பமாக இருந்தவளை தன் கண் முன் கண்ட அந்த ஒரு நொடி அவன் வாழ்க்கையின் மொத்த துக்கமும் தூர விலக்கி போன நிம்மதி அவனுக்குள். அலைகள் இல்லாத ஆழ்கடல் போல் அப்படி ஒரு அமைதி அவன் இதயத்தில். வாழ்நாள் முழுவதும் 'ரியா' தன்னோடு இருந்து விடமாட்டாளா? என்று அவன் மனம் ஏங்கி தவிக்க ஆரம்பித்துவிட்டது.
'ம்ம்ம் இவ்ளோ நாள் அம்மா என் தூக்கத்தை கெடுத்த, இப்போ அந்த வேலைய குட்டி ஏஞ்சல் பாக்க ஆரம்பிச்சிட்ட, அம்மாக்கும் பொண்ணுக்கும் எதுல ஒத்துப்போகுதோ இல்லயே, இதுல நல்லா ஒத்துப்போகுது' என்று நினைத்தவன் தன் ஃபோனை எடுத்து ரியா, அபியுடன் அவன் சேர்ந்து எடுத்துக்கொண்ட செல்பியை பார்த்தவன் உதடுகள், வருடம் பல வருடங்களுக்கு பின், இன்று தான் புன்னகை என்ற எல்லையை தட்டு தடுமாறி தொட்டது. ஃபோனில் தெரிந்த ரியா ஃபோட்டோவை வருடியவன், ஒரு நிறைவோடு அபியை அணைத்துக்கொண்டு பலநாள் கழித்து நிம்மதியாக தூங்கினான்.
அதிகாலையிலேயே ஆத்யா பூஜை ரூமில் கண்மூடி நின்றிருக்க, அவள் உதடுகள் மட்டும் ஏதோ முனுமுனுத்துக் கொண்டிருந்தது.
கௌதம் அதிசயமாக அவளை பார்த்தவன், "ஆதும்மா போதும்டா. நீ இப்படி விழுந்து விழுந்து சாமி கும்புடுடுறத பார்த்த எனக்கு பகீருங்குது. என்னைக்கும் இல்லாத திருநாளா நீ சாமிக்கு இப்புடி சோப்பு போடுற? நீ வேணும்னா பாரு மழை கொட்டோ கொட்டுன்னு கொட்ட போகுது. நீயும் நானும் ஹாஸ்பிடல் போகணும், அம்மா, அப்பா வேற இன்னைக்கு கண்டிப்பா வந்துடுவேன்னு சொல்லி இருக்காங்க, மழை பேஞ்ச கஷ்டம்டா. போதும் சாமிய விட்டு' என்று கையெடுத்து கும்பிட்டவனை செல்லமாக முறைத்தாள் ஆத்யா.
'டேய் என்ன கொழுப்பா? உன் பொண்ணு வீட்டுல இல்லான்ற திமிர்ல பேசுறியா? அவ வந்ததும் ஒரு வார்த்தை டாடி அம்மாவை திட்டுனான்னு சொல்லி மூஞ்ச கொஞ்சம் பாவமா வச்சிக்கிட்ட போதும், அப்புறம் உன் கதி அதோகதி தான்" என்று மிரட்ட, கௌதம் மொத்தமாக ஆஃப் ஆகி விட்டான்.
"என்ன கௌதம் போச்சயே காணும்?" என்று இவள் வேண்டுமென்றே வம்பிழுக்க.
"ம்க்கும் பேசுறாங்க..!? அட போம்மா, நான் ஏதாவது பேசிட்டு அப்புறம் யார் அந்த வாண்டு கிட்ட கடி வாங்குறது. என்னை பெத்ததும் சரி, நா பெத்ததும் சரி, ஒன்னு கூட எனக்கு சப்போர்ட் இல்ல, எல்லாம் உனக்கு தான் ஜிங்சாக் போடுதுங்க, என்ன செய்ய எல்லாம் விதி" என்று
தன் தலையில் அடித்துக் கொண்டு, "நா வாயை மூடிக்கிட்டேன். இனி ஒரு வார்த்தை பேசினா என்ன என்னன்னு கேளு, நீ சீக்கிரம் சாப்பிட்டு ஹாஸ்பிடல் கிளம்பு" என்றவன் பின் மெதுவாக, "அபிராமி ஆன்ட்டிக்கு இன்னைக்கு தான சர்ஜரி" என்று கேட்க, ஆத்யா முகத்தில் அதுவரை இருந்த புன்னகை மறைந்து இறுக்கம் குடிகொண்டது.
"ஆமா" என்று மெதுவாக தலையாட்ட, அவள் தலையை மென்மையாக தடவி கௌதம், "அதுக்காக தான இவ்ளோ நேரம் சாமி கும்பிட்ட" என்றவனை ஆத்யா நிமிர்ந்து பார்த்தாள்.
நீ சாமி ரூம் பக்கம் வந்து எத்தனை வருஷம் ஆகுது தெரியுமா ஆது? இன்னைக்கு அபிராமி ஆன்ட்டிகாக உன்னோட பிடிவாதத்தை விட்டு கடவுள் கிட்ட அவங்களுக்காக வேண்டிட்டு இருக்க இல்ல, யு டோன்ட் வொரி ஆது, எல்லாம் நல்லபடி முடியும். அதோட நானும் ஆன்ட்டி ரிப்போர்ட்ஸ் பாத்தேன்..ன இது ஒரு சின்ன சர்ஜரி தான், பெரிய ரிஸ்க் எதுவும் இல்ல. சோ யூ டோன்ட் வொரி, நீ சாப்பிட்டு கிளம்பு, அவங்க சர்ஜரிக்கு முன்ன ரியாவை பாக்கனும்னு கேட்டாங்கன்னு சொன்ன இல்ல, நான் பத்து மணிக்கு லட்டுவ ஹாஸ்பிடல் கூட்டி வரேன்" என்று அவளுக்கு தைரியம் சொல்லி ஹாஸ்பிடல் அனுப்பி வைத்துவிட்டு, ஹாலில் உட்கார்ந்து இருந்த கௌதம் மனது ஒரு நிலையில் இல்லாமல் அலைபாய்ந்தது கொண்டிருந்தது.
சின்ன வயதில் இருந்து கௌதம் பார்த்து பழகிய ஆது வேறு, லண்டன் வந்ததில் இருந்து அவன் பார்க்கும் ஆத்யா வேறு. காலம் அவளை முழுதாக மாற்றி இருந்தது. ஒரு சில நேரம் கௌதமே அவளை கண்டு வியந்தது உண்டு. வேலையிலும், சரி வீட்டு விஷயங்களிலும் சரி அவள் எடுக்கும் எந்த முடிவும் அவ்வளவு துல்லியமாகவும் தெளிவாகவும் இருக்கும். லண்டன் வந்த இத்தனை நாட்களில் சின்னதான தடுமாற்றத்தை கூட அவன் அவளிடம் பார்த்ததில்லை. பெரிய பெரிய ஹார்ட்
டிரான்ஸ்பிளான்ட் கூட அசால்ட்டாக முடிப்பவள், இன்று ஒரு சின்ன சர்ஜரிக்கு போய் பயப்படுகிறாள். தன் இத்தனை வருட பிடிவாதத்தை விட்டு கடவுளிடம் சரண்டர் ஆன ஆத்யாவை பார்த்து கௌதமுக்கும் வியப்பு தான்.
"அவ மனசு பயங்கராம குழம்பி இருக்கு, அவளோட இந்த புது குழப்பத்துக்கு காரணம் அர்ஜூன். அர்ஜூனை பார்த்ததில் இருந்து தான் அவ இப்படி ஆகிட்ட, இத இப்படியே விட்ட சரிபட்டு வராது, மறுபடியும் அர்ஜூனால ஏதாவது பிரச்சனை வந்தால் அது எங்க குடும்பத்தை தான் பாதிக்கும். நோ... நோ வே விடமாட்டேன், அதுக்கு நா ஒருநாளும் விடமாட்டேன்" என்று தனக்கு தானே சொல்லிவிட்டு, அர்ஜூனை பார்த்து பேசி முதல்ல இது எல்லாத்துக்கும் ஒரு முடிவு கட்டணும் என்று நினைத்தவன், பத்து மணி போல் அவன் அப்பா, அம்மா வந்துவிட, கௌதம் அம்மா பூரணி அபிராமியை பார்க்க வேண்டுமென்று சொல்ல, ரியாவையும் அம்மாவையும் அழைத்துக்கொண்டு ஹாஸ்பிடல் கிளம்பினான் கௌதம்.
அபிராமியை பார்த்த ரியா பாத்தி (பாட்டி) என்று அவர் கட்டிக்கொண்டாள்.
"லட்டும்மா, பாட்டிக்கு உடம்பு சரியில்ல, இப்படி அவங்க மேல விழக்கூடாது, கீழ இறங்கு" என்று பூரணி சொல்ல, "ஓகே பாத்தி" என்று இறங்கி கீழே நின்றாள் ரியா.
"பாத்தி யூ டோன் வொரி, நா சாமிகிட்ட வேந்தி இதுக்கேன், சோ பாத்திக்கு ஒன்னு ஆகாது" என்றவள் தன் இதழை அபிராமி கன்னத்தில் பதித்து, "பாத்தி நீஙக சதியாகி வந்ததும் நானு, அபி நீங்க ஐஸ்கிரீம் சாப்பிட போலாம், ஓகே வா? ஓகே தானா அஜ்ஜூ" என்று திரும்பி அர்ஜூனை பார்க்க அவன் முகம் கொஞ்சம் வாடி இருந்தது.
ரியா அவன் அருகில் சென்றவள் அவன் பேண்ட்டை பிடித்து இழுக்க, அர்ஜூன் குனிந்து கீழே பார்த்தான்.
ரியா, ''அஜ்ஜூ என்ன தூக்கு" என்று தன் இரு கைகளையும் தூக்கி காட்ட, அவளை தூக்கிக் நெஞ்சோடு அணைத்துக் கொண்டான் அர்ஜூன்.
"அஜ்ஜூ பாத்திக்கு ஒன்னு ஆகாது. அம்மா குட் டாக்டர், பாத்திக்கு சரியாகிடும்" என்று ஆறுதலாக அர்ஜூன் கன்னத்தை வருடி விட, அங்கிருந்த அனைவருக்கும் மனம் கரைந்து விட்டது.
ஆத்யா கூட லேசாக கண்கலங்க, அர்ஜூன் அவளை இன்னும் இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.
இதையெல்லாம் பார்த்த கௌதம் தன் இறுகி போய் நின்றிருந்தான்.
ஆது குழந்தைங்க இங்க இருக்க வேண்டாம், ஆபரேஷன் முடிய எப்படியும் டூ, த்ரீ ஹவர்ஸ் ஆகும் , ரியா, அபிய அம்மா கூட வீட்டுக்கு அனுப்பிடலாம்" என்ற கௌதம், பூரணியோடு குழந்தைகளை அனுப்பிவைக்க, பூரணி அபிராமியிடம் சொல்லிக்கொண்டு குழந்தைகளோடு கிளம்பினார்.