அர்ஜூன் ஆத்யா 15

 அர்ஜூன் ஆத்யா


மெய் 15


அர்ஜூனை ஆழமாக ஒரு பார்வை பார்த்த ஆத்யா எதுவும் பேசாமல் காரில் இருந்து இறங்கி வீட்டுக்குள் செல்ல, அர்ஜூன் அவளையே கலங்கிய விழிகளோடு ஏக்கமாக பார்த்தவன், அவன் காரில் ஏறி சென்றுவிட்டான். 

வீட்டு கதவை முடிய ஆத்யா பித்து பிடித்தது போல் எதைப்பற்றியும் யோசிக்காமல் நடக்க, படிக்கட்டில் கால் தடுக்கி கீழே விழுந்தாள்.

விழுந்ததில் அவள் குர்திக்குள் இருந்த அவள் தாலி செயின் வெளியே வந்து அவள் மார்பின் மீது விழுந்தது. 

அந்த சிறிய தாலி... அந்த ஒரு நொடி அவள் நெஞ்சில் இமயமலையைப் போல் கனத்தது. தாலியை பார்த்த ஆத்யா விழிகளில் அதுவரை அடக்கி வைத்திருந்த கண்ணீர் மடைதிறந்த வெள்ளம் போல கொட்ட தொடங்கியது. கழுத்தில் இருந்த தாலியை கைகளால் இறுக்கிப் பிடித்தபடி கதறி அழுதவள் தோளை தொட்டது ஒரு கை.

தலை நிமிர்ந்து பார்த்தவள் விழிகளில் அப்படி ஒரு வலி. கௌதம் என்று கத்தியவள் அவனை இறுக்கி கட்டிக்கொண்டு அஜ்ஜூ…  அஜ்ஜூ… அஜ்ஜூ என்றவளின் கண்ணீர் கௌதம் சட்டை முழுவதையும் ஈரமாக்கியது. 

இரவு பத்து மணி, அமைதியாக தூங்கிக் கொண்டிருந்த ஆத்யா அருகில் உட்கார்ந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் கௌதம். 

கௌதமை கட்டிக்கொண்டு கதறிய ஆத்யா, அபிராமி சொன்ன அனைத்தையும் கௌதமிடம் கொட்டி அழ, ஒரு கட்டத்தில் அவளை சமாதானப்படுத்த முடியாத கௌதம் அவளுக்கு தெரியாமல் அவள் தூங்குவதற்கு ஊசியை போட்டுவிட, ஆத்யா மனதில் இருந்த கணம் மறந்து தூக்கி விட, பாவம் கௌதம் இப்போது தூக்கம் தொலைத்து உட்கார்ந்திருந்தான்.

உறங்கும் ஆத்யாவையே பார்த்துக் கொண்டிருந்த கௌதம் கண்களில் பட்டது, அவள் தொண்டை குழியில் விழுந்து கிடந்த அவள் தாலி செயின். 

தன் வழி நடக்க  மனம் விரும்ப, இங்கு விதி வழி தான் அனைத்தும் நடக்கிறது. விதி வழி மதி செல்ல, இனி வரும் காலம் யாருக்கு வசப்படுமோ.

காலை கண்விழித்த ஆத்யாவுக்கு நேற்று நடந்தது நினைவு வர மனதில் மீண்டும் வெறுமை குடிகொண்டது. மெதுவாக எழுந்து குளித்து வெளியே வந்தவள் அருகில் வந்தான் கௌதம்.

"குட் மார்னிங் ஆது.."

" I don't think so கௌதம்…" என்று கனத்த குரலில் சொல்லி அங்கிருந்து நகர,

"ஆது ப்ரேக் பாஸ்ட் ரெடி.!! வா சாப்பிடலாம். நேத்து கூட நீ சரியா சாப்பிடல, வா" என்று அவள் கையை பிடித்து இழுக்க, 

"ப்ளீஸ் கௌதம் எனக்கு பசிக்கல என்னை விடு"

"எனக்கு பசிக்குது ஆது. நேத்து மதியம் சாப்பிட்டது, எனக்கு ரொம்ப பசிக்குதுடா, ப்ளீஸ் வாம்மா.?"

"இல்ல கௌதம் நீ போய் சாப்பிடு, எனக்கு வேணாம்."

"நோ… நீ சாப்பிடாம நான் சாப்பிட மாட்டேன்" என்று அவன் பிடிவாதம் பிடிக்க, வேறு வழி இல்லாமல் ஆத்யா டைனிங் டேபிள் சென்றாள்.

ஆத்யாவுக்கு உணவை எடுத்து வைத்தவன், தனக்கும் வைத்துக்கொண்டு அமர்ந்தான். 

"லட்டு எங்க கௌதம்?? அவளை என் ப்ரண்டு அவன் பசங்களோட ஷாப்பிங் கூட்டி போயிருக்கான். இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துவாங்க" என்றதற்கு, ஆத்யா விடம்” ம்ம்ம்” என்ற சத்தம் மட்டும் பதிலாக வந்தது. 

அதன் பின் இருவரும் அமைதியாக தங்கள் ப்ளேட்டில் கவனமாக இருக்க‌, "அபிராமி ஆன்ட்டி இப்ப எப்படி இருக்காங்க ஆது?" என்ற கௌதமை நிமிர்ந்து புருவம் சுருங்கி ஒரு பார்வை பார்த்தவள், "ஷி இஸ் ஓகே. நெக்ஸ்ட் வீக் சர்ஜரி" என்றவள் மீண்டும் தன் ப்ளேட்டில் கவனத்தை செலுத்தினாள்.

கௌதம் இவ்வளவு நாளும் அர்ஜூன் மீது கொலைவெறியில் இருந்தவன், அவன் எந்த சூழ்நிலையில் இந்த கல்யாணத்தை செய்து கொண்டான் என்று தெரிந்த பிறகு  அபிராமியை நினைத்து சற்று கோபம் வந்தாலும் அபிமன்யுவின் அம்மா என்ற முறையில் அவர் எடுத்த முடிவை தவறென்று அவனால் சொல்ல முடியவில்லை. அதே சமயம் அர்ஜூனை நினைத்து அவனுக்கு கஷ்டமாக தான் இருந்தது. அவன் ஆத்யாவை எந்தளவு நேசித்தன் என்று கௌதமுக்கு ஒரளவுக்கு தெரியும். "விதி இவங்க வாழ்க்கையில ரொம்ப விளையாடிடுச்சு, என்ன செய்யுறது… விதியை நெனச்சு வாய மூடிட்டு போக வேண்டியதுதான். ம்ம்ம்" என்று பெருமூச்சு விட்டவன், அதன் பிறகு எதுவும் பேசவில்லை.

அமைதியாக மூன்று நாட்கள் கடந்தது.

அன்றைக்கு பிறகு ஆத்யா அர்ஜூனை பற்றி எதுவும் பேசவில்லை. கௌதமும் அவளை மேலும் எதுவும் கேட்டு  காயப்படுத்த வேண்டாம் என்று அமைதியாக இருந்தான்.

காலையில் வந்த ஃபோனை நினைத்துக்கொண்டே ஆத்யா அமைதியாக கண்மூடி சோபாவில் உட்கார்ந்திருந்தாள். எப்போதும்  ஞாயிற்றுக்கிழமை ஆத்யா, ரியாவை அழைத்துக்கொண்டு வெளியே ஊர் சுற்றுவது அவள் வழக்கம். ஆனால், இன்று மனது சரியில்லாமல் இருந்தவள். ஞாயிற்றுக் கிழமையாக இருந்தும் ரியாவுடன் எங்கும் வெளியே செல்லாமல் வீட்டிலேயே இருந்தாள்.

ரியா அவளிடம் வந்து, "அம்மா துதோ சண்டே ம்மா. ம்மாவும் லத்துவும் வெளிய போதம்" என்று தன் மழலை குரலில் கேட்க,

"சாரிடா லட்டு குட்டி, அம்மாக்கு உடம்பு சரியில்லை. அம்மா லட்டுவ இன்னொரு நாள் வெளியே கூட்டி போறேன்" என்று கொஞ்ச,

"ம்மா ஒனக்கு உதம்பு சதியில்லயா ம்மா.. என் ஆச்சி ம்மா" என்று தன் பிஞ்சு கரத்தை தன் தாய் நெற்றியில் வைத்து ஜுரம் இருக்கிறதா என்று பார்த்த ரியா அக்கறையாக கேட்க, கண்கலங்கிய ஆத்யா. தன் மகளின் கைகளில் முத்தமிட்டவள். "இல்லடாம்மா அம்மாக்கு ஒன்னு இல்ல. ஜஸ்ட் சின்ன தலைவலி தான், பெருசா ஒன்னு இல்லடா" என்று மகளை சமாதானம் செய்தாள்.

" சதிம்மா நீ லத்து மதியிலா பத்துக்கோ, நா ம்மா தலய பிரஸ் பண்தேன், ம்மாக்கு வதி போய்டும்" என்ற மகளை ஆத்யா இறுக்கி கட்டிக் கொண்டாள்.

"நீ எனக்கு அம்மா தான்டி.. என்னோட பிரியா அம்மா தான் உன்னோட உருவத்துல என்கிட்ட திரும்பி வந்திருக்காங்க... என் செல்ல லட்டு குட்டி" என்று குழந்தை கன்னத்தில் முத்தம் வைத்து, "அம்மாக்கு ஒன்னு இல்ல, நீங்க போங்க, போய் உங்க ப்ரண்ட்ஸ்  கூட விளையாடுங்க" என்று மகளை அனுப்பியவள் கண்கள் அவள் விதியை நினைத்து கலங்கியது.

கௌதம் இவ்வளவு நேரம் ஆத்யாவையே தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

'ஆது ப்ளீஸ் கிளம்பும்மா, நீ அதையே நெனச்சிட்டு இருந்த தலைவலி தான் வரும். நீ கிளம்பி போ, அப்போ தான் உன் மைன்ட் ப்ரீயாகும். அவங்க அவ்வளவு தூரம் ரெக்வஸ்ட் பண்ணி கூப்பிடும் போது, நீ இப்படி பண்றது சரியில்ல... ஓகே நான் தான் சொன்னேன் அர்ஜூன் கிட்ட இருந்து விலகி இருன்னு, பட் அபிராமி ஆன்ட்டி என்ன பண்ணுவாங்க சொல்லு. உனக்கு அவங்களை எவ்வளவு பிடிக்கும்னு எனக்கு நல்லா தெரியும். பிரியா அத்த இடத்துல வச்சு தான் நீ அவங்கள பாக்குற,  அப்றம் அந்த பாப்பா அபி, அவள நெனச்சு பாரு, பாவம் இல்ல அவ. நீதான சொன்ன அந்த குழந்தைக்கு அம்மா பாசம்னா என்னனு தெரியாது பாவம் அவ ன்னு, அந்த குழந்தைக்காவது யோசி ஆது" என்றதும் ஆத்யா மனது அபியை நினைத்து கலங்கியது.

"ப்ளீஸ் ஆது கிளம்பி போ... பாவம் அந்த ஆன்ட்டி, புது ஊர்ல அந்த குழந்தைய வெச்சிட்டு, எப்படி தனியா வெளிய போ வாங்க, அவங்களுக்கு உடம்பு வேற சரியில்ல,  நீ போடா அவங்க ஆசையா தானா ரியாவ பாக்கனும்னு கேக்குறாங்க" என்றவனை ஆத்யா தீயாக முறைத்தாள். 

"டேய் ஆது ப்ளீஸ் டா, ப்ளீஸ், ப்ளீஸ் என்று கெஞ்சி கூத்தாடி, ஒருவாறு ஆத்யாவை சமாதானப்படுத்தி ரியாவுடன் அவளை அபிராமியுடன் போக சம்மதிக்க வைத்தான். 

காலையில் இருந்து மனசு சரியில்லாமல் வீட்டில் இருந்த ஆத்யா, ஃபோன் அடிக்க எடுத்து பார்க்க அபிராமி தான் அழைத்திருந்தார்.

"குட் மார்னிங் அத்த. என்ன இவ்வளவு காலையில ஃபோன் பண்ணி இருக்கீங்க, உடம்புக்கு ஏதுமில்லயே" என்று கேட்டவள் தான் இயல்பாக இருக்கிறேன் என்று அபிராமியிடம் காட்டிக்கொள்ள முயல, அவள் குரலை வைத்து அதை புரிந்துகொண்ட அபிராமி,

"அத்தும்மமா, அபி இங்க வந்த நாள்ல இருந்து வீட்டுலயே இருக்காம்மா, பாவம் கொழந்த வெளிய கூட்டிப் போக சொல்லி கேட்டுடே இருக்கா, உங்க மாமாவும், அர்ஜூனும் வேல விஷயமா நேத்து வெளிய போனவங்க இன்னும் வர்லடா, எனக்கு தெரியாத ஊர்ல அபியை தனிய வெளிய கூட்டிப்போக பயமயிக்கும்மா. நீ ஃப்ரீயா இருந்தா எங்க கூட வரியா அத்து. அதோட எனக்கு உன் பொண்ணு ரியாவ பாக்கணும்னு ஆசையா இருக்குடா, அவளையும் அழச்சிட்டு வரியா" என்று கெஞ்சும் குரலில் கேட்க, ஆத்யாவுக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை.

"இல்ல அத்த, எ…  எனக்கு…. கொஞ்சம் தலைவலிய இருக்கு அத்த. என்னால வரமுடியாது" என்று சொல்லிவிட, அபிராமியிடம் இருந்து ஃபோனை பிடிங்கிய குழந்தை அபி, "அத்தும்மா நீங்க ஏ அபிய பாக்க வதல, நா அத்தும்மாவ பாக்குனும் சீக்கிதம் வா_ என்று அழும் குரலில் பேச, அதற்கு மேல் ஆத்யாவினால் தன் அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் ஃபோனை கட் செய்து விட்டாள்.

போக மாட்டேன் என்று அடம்பிடித்த ஆத்யா வை கௌதம் தான் ஐஸ் வைத்து, அபிநயாவின் பேரை சொல்லி கவுத்து அனுப்பி வைத்தான்.

ஆத்யா அபிராமி வீட்டுக்கு செல்ல விரும்பாமல், ஒரு ஷாப்பிங் மாலின் பெயரை சொல்லி, அபிராமியையும், குழந்தையையும் டிரைவருடன் அங்கு வரச்சொல்லி விட்டு ரியாவை அழைத்துக்கொண்டு அங்கு சென்றாள்.

ஷாப்பிங் மாலில் நுழைந்த ஆத்யா, அபிராமிக்கு ஃபோன் செய்து, "எங்க இருக்கீங்க அத்த?? நா மாலுக்கு வந்துட்டேன்" 

அபிராமி "நாங்க இங்க ரெஸ்டாரென்ட் ல இருக்கோம் அத்து" என்றதும், ஆத்யா ரியாவுடன் ரெஸ்டாரென்ட் சென்றாள்.

மூன்று நாட்கள் கழித்து ஆத்யாவை பார்த்த அபி ஓடிவந்து ஆத்யா காலைக் கட்டிக்கொண்டாள்.

"ஏன் அத்தும்மா என்ன பாக்கவதல" என்று வாடிய முகத்துடன் கேட்க ஆத்யாவுக்கு ஏதோ போல் ஆகிவிட்டது.

கீழே அபி உயரத்திற்கு குனிந்தவள், "இல்லடா பட்டுக்குட்டி, எனக்கு கொஞ்சம் வேல இருந்துது,அதான் அபி பாப்பா வை பாக்க வரல என்று சமாதானம் சொல்ல, ரியா அபியையே பார்த்துக்கொண்டிருந்தாள். 

"ம்மா இந்த க்யூட் பேபி யாதும்மா" என்று தன் கருந்திராட்சை  விழிகளால் அபியை பார்த்தபடியே கேட்டாள்.

"லட்டும்மா இது அபிநயா. உங்க கூட  விளையாட புது ப்ரண்ட் என்றதும், உடனே அபி, "அத்தும்மா இந்த பாப்பா யாது?" என்று ரியாவை பார்த்து கேட்க,

ஆத்யா ரியா தோள் மீது கை போட்டு அணைத்தபடி, "இது என்னோட செல்ல லட்டு குட்டி. என்னோட பொண்ணு ரியா" என்று அழகாக சிரிக்க.

அபி வாடிய முகத்துடன், "அப்ப அபி உங்க செல்லம் இல்லிய அத்தும்மா" என்று இதழ் பிதிக்கி அழுகையோடு கேட்க, ஆத்யாவுக்கு உயிரே பதறி விட்டது.

அபியை கட்டிபிடித்து, "அச்சோ அப்படி எல்லாம் இல்லடா, நீயும் எனக்கு செல்லம் தான்" என்று அபி கன்னத்தில் இதழ் பதிக்க, உடனே ரியா,‌ "ம்மா..!! லட்டுக்கு' என்று தன் பட்டுக் கன்னத்தை காட்டினாள்.

ஆத்யா இதழ் பிரித்து பெரிதாக சிரித்தவள், ரியா கன்னத்திலும் முத்தமிட, ரியா ஆத்யவோடு சேர்த்து அபியை தன் பிஞ்சு கரம் கொண்டு அணைத்துக் கொண்டாள்.

பின் அபியை பார்த்து, "ஹாய் க்யூட் பேபி, மை நேம் ரியா. நீ ஏ குத ப்ரண்ட இதுக்கிய" என்று தன் மலர் கரத்தை அபி முன் நீட்ட, அபி நிமிர்ந்து ஆத்யா முகம் பார்த்தாள்.

ஆத்யா ஆமா என்று கண்ணசைக்க, அபி மலர்ந்த முகத்துடன் ரியா கையை பிடித்த "ஓகே" என்று சொல்ல குழந்தைகள் இருவரும் ஆரத்தழுவிக்கொண்டனர்.

இவர்கள் மூவரையும் பார்த்த அபிராமியின் கண்களில் ஆனந்த கண்ணீர் பெரு, ஆத்யா தோளை தொட்டவர், "நீ சொன்னது உண்மை தான் அத்து. உன் பொண்ணுக்கு அப்படியே பிரியா மாதிரி எல்லாரையும் நேசிக்கிற குணம்ம்மா. பிரியா மாதிரி நீ, உன்ன மாதிரி உன் பொண்ணு என்று ரியாவை தூக்கிக்கொண்டு, அவளை முகத்தை முத்தத்தில் குளிப்பட்ட,  ரியா குட்டி இவங்க தான் உன்னோட புது பாட்டி. அபிராமி பாட்டி என்று ஆத்யா அறிமுகப்படுத்தினாள்.

ரியா அபிராமி கன்னத்தில் முத்தம் வைத்து, "ஹாய் பாட்டி" என்று அவர் கழுத்தை கட்டிக்கொண்டாள்.