அர்ஜூன் ஆத்யா 14

 அர்ஜூன் ஆத்யா

மெய்‌ 14




அபிராமி நடந்ததை சொல்ல, சொல்ல ஆத்யாவுக்கு இதயத்தில் கனம் கூடிப் போனது.

"எல்லா என்னால தான் அத்து, என்னால தான் என் அர்ஜூன் வாழ்க்கையே நாசமா போச்சு" என்றவர் கண்களில் இப்போது கண்ணீர் இல்லை.. அழுது அழுது அது வற்றி விட்டது.

"அர்ஜூன் பெங்களூரே கதின்னு இருந்தான். அப்போ தான் இந்த ப்ரீத்தி நாங்க நெனச்சு கூட பாக்க முடியாத காரியத்தை பண்ண துணிஞ்சிட்டா, எந்த குழந்தைக்காக அர்ஜூன் வாழ்க்கையை நாசம் பண்ணி அந்த கல்யாணத்தை பண்ணி வச்சேனோ, அந்த குழந்தையை  அவ கொல்ல துணிஞ்சிட்டா" என்றவரை அதிர்ச்சியாக பார்த்த ஆத்யா தான் மடியில் படுத்திருந்த அபிநயாவை இறுக்கி கட்டிக் கொண்டாள்.

"என்ன அத்த சொல்றீங்க, கொழந்தைய போய் எப்படி அத்த..?? ஏன்?"

"ஆமா அத்து அவளுக்கு இந்த கொழந்த பெத்துகுறதுல விருப்பமே இல்ல. அர்ஜூனை கல்யாணம் பண்ண ஒரு ஆயுதமா தான் அவளும், அவ அப்பாவும் இந்த கொழந்தைய யூஸ் பண்ணி இருக்காங்க,  வயித்துல குழந்தைய வச்சிட்டு பார்ட்டி நைட் அவுட், பப்புன்னு  சுத்திட்டு நடுராத்திரி வீட்டுக்கு வருவ, ஒரு நாள்,‌வயித்துல கொழந்தைய வச்சிட்டு, நீ இப்புடி குடிச்சிட்டு வந்தா என்ன அர்த்தம்னு கேட்டு அவகிட்ட நான் சண்டை போட்டேன். அத மனசுல வச்சிட்டு மறுநாளே குழந்தையை கலைக்க போய்ட்டா ம்மா அந்த ராட்சசி. நல்லவேள அவ போன ஹாஸ்பிடல் டாக்டர், அர்ஜூன் ப்ரண்ட்டோட வைஃப், அவங்க ஃபோன் பிண்ணக அர்ஜூனுக்கு விஷயத்தை சொல்லிட்டாங்க, அர்ஜுனும் உடனே சென்னைக்கு வந்துட்டான்.

ப்ரீத்தி கன்னம் ரெண்டு அர்ஜூன் அடித்த அடியில் சிவந்து இருக்க, அவள் தலை முடியை கொத்தாக பிடித்து, "இங்க பாருட, இந்த குழந்தைக்காக தான், உன்னையும், உன் அப்பனையும் இப்ப நா உயிரோடு விடுறேன்.  இன்னொரு முறை இந்த மாதிரி ஏதாவது செய்ய ட்ரை பண்ணேன்னு தெரிஞ்சுது. உங்க மொத்த பிஸ்னஸையும் ஒன்னு இல்லாம பண்ணி உன்னையும், உன் அப்பனையும் நடுத்தெருவுல நிக்க வச்சுருவேன் ஜாக்கிரதை. இந்த கொழந்த எங்க வீட்டு வாரிசு. அத ஒழுங்கா பெத்து கொடுக்கிறது தான் உன்னோட வேலை. பார்ட்டி, பப்புன்னு எங்கையாவது நீ போனன்னு தெரிஞ்சுது. அடுத்த நிமிஷம் நீ நடுத்தெருவுல தான் நிக்கணும்" என்று அர்ஜூன் அவளா மிரட்ட, 

அர்ஜூனோட பவர், பணபலம் பத்தி அவளுக்கும் நல்ல தெரியும். அதனால அதுக்கு அப்புறம் கொழந்த பொறக்கும் வரை ஒழுங்கா இருந்தா... நா கூட அவ மாறிட்டானு நெனச்சேன் ரொம்ப சந்தோஷப்பட்டேன். ஆனா, கொழந்த பெறந்த பிறகு மறுபடியும் அவ ஆட்டத்த ஆரம்பிச்சிட்ட, பச்ச கொழந்த பசியில தாய் பாலுக்கு அழுக்கும் அத்து, ஆனா, அவ அத பத்தியெல்லாம் கொஞ்ச கூட கவலபடாம வெளிய சுத்த ஆரம்பிச்சிட்டா, நா அவகிட்ட எவ்வளவு கெஞ்சி பார்த்தேன். ஆனா, அவ மாறல, அபிய அவ தொட்டு தூக்கினது கூட இல்ல அத்தும்மா. அபி குட்டிக்கு அம்மா ஸ்பரிசம் னா என்னன்னு தெரியாது. அர்ஜூன் தான் எப்பவும் கொழந்த கூடவே இருந்து பாத்துக்கிட்டான். வறண்டு போயிருந்த அவன் வாழ்க்கையில அபிநயா வந்து தான் உயிர் கொடுத்தோனே சொல்லலாம்." 

"கொஞ்ச நாள் இப்படியே போச்சு, நடந்தது எல்லாம் உங்க மாமாவுக்கு முதல்ல தெரியாது. நா அவர்கிட்ட எதுவும் சொல்லாம மறைச்சிட்டேன். அப்புறம் விஷயம் தெரிஞ்சு  அர்ஜூன் வாழ்க்கையை நீயே கெடுத்திட்டியேடின்னு என்கிட்ட கோச்சிட்டு, அவரும் என்கிட்ட பேசுறதில்ல. அது ஒரு பக்கம், கூடவே  அர்ஜூனோட நிலமைய பாக்கும் போதெல்லாம் என்னோட குற்றவுணர்வு அதிகமாச்சு, நாளுக்கு நாள் பிரச்சனை அதிகமாச்சே தவிர குறையவே இல்ல. ஒரு நாள் ப்ரீத்தி திடிர்னு வந்து டிவேர்ஸ் பேப்பர்ல அர்ஜூன் கிட்ட சைன் வேணும்னு கேட்டா, அர்ஜூன் எதுவும் பேசல உடனே சைன் பண்ணிட்டான். கேஸ் கோர்ட்டுக்கு போச்சு, அவ கொழந்த எனக்கு வேணாம்னு சொல்லிட்டா, அது நாங்க எதிர்பார்த்தது தான்.  அவ கேட்ட செட்டில்மென்ட்  பணத்தை கொடுத்து அர்ஜூன் அவளா ஒத்துக்கிட்டான்." என்று பெருமூச்சு விட்டார் அபிராமி. 

"அர்ஜூன் வாழ்க்கை அள்ளி தெளிச்ச கோலம் மாதிரி சிதறி போச்சு அத்தும்மா. டிவேர்ஸ் கொடச்ச அடுத்த வாரமே ப்ரீத்தி இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டன்னு நியூஸ் வந்துச்சு. அடுத்தடுத்து ஏற்பட்ட அதிர்ச்சியில் எனக்கு ஹார்ட் அட்டாக் வந்துச்சு, அப்பவே நா போயிருந்த நல்லா இருந்திருக்கும். விதி என்னை காப்பாத்திடுச்சு, எனக்கு ஹார்ட் அட்டாக் வந்த பிறகு தான் அர்ஜூன் திரும்ப என்கிட்ட பேச ஆரம்பிச்சான்.

"என்ன மன்னிச்சிடு அர்ஜூன். என்னோட சுயநலத்துக்காக உன்னோட வாழ்க்கையை நா அழிச்சிட்டேன். என் செத்துப்போன புள்ளையோட உயிரை காப்பாத்த, உயிரோடு இருந்த என்னோட ரெண்டு புள்ளைங்க வாழ்க்கை" என்றவர் அர்ஜூன் கைகளை பிடித்து கதற, "நடந்தது நடந்து போச்சு சித்தி. இனி அதை பத்தி பேசி ஒரு யூஸ்சும் இல்ல, விடுங்க"

"அர்ஜூன், நீ ஏன் நம்ம அத்துவ பாத்து பேசக்கூடாது. நடந்தாத எடுத்து சொன்னா அவ புரிஞ்சுக்குவ, நீ அவளா" என்றவரை போதும் என்று கையை காட்டி நிறுத்திய அர்ஜூன், 

"ப்ளீஸ் சித்தி வேணாம்.. தியாக்கும் எனக்கும் நடுவுல நீங்க வராதீங்க, எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல வர நா யாரையும் அனுமதிக்க மாட்டேன். இது என்னோட வாழ்க்கை நா பாத்துக்குறேன். ப்ளீஸ் இதுக்கு மேல நீங்க யாரும் என்னை பத்தி யோசிக்க வேண்டாம்" என்றவனை இயலாமையோடு  பார்க்க மட்டும் தான் முடிந்தது அபிராமியாள். 

"நா உங்க மாமாவை விட்டு உன்னை தேட முயற்சி பண்ணேன் அத்து. ஆனா, நீ பெங்களூர் வீட்டை வித்துட்டு போயிட்டான்னு சொன்னாங்க. நீ எங்க இருக்கேன்னு யாருக்கும் தெரியல. அப்படியே இத்தனை வருஷம் ஓடிப்போச்சு, கடைசி உன்னை பார்த்துட்டேன். ஆனா, நீ இப்போ" என்றவருக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை.

ஆத்யா கால்களுக்கு நடக்கக் கூட தெம்பில்லை. இதுவரை வாசலில் நின்றிருந்த அர்ஜூன் ஆத்யா தட்டுத்தடுமாறி நடந்து வருவதை பார்த்து அவளின் நிலை புரிந்து. அவளை தோளோடு சேர்த்து அணைத்தபடி அழைத்து வந்து, அவள் காரில் உட்கார வைத்து, அவன் டிரைவரை அவனை காரில் பின் தொடர சொல்லி விட்டு , ஆத்யாவுன் கிளம்பினான்.

ஆத்யா எதுவும் பேசாது பொம்மை போல் அவனுடன் சென்றாள். காரில் கண்மூடி உட்கார்ந்தவள் நினைவுகள் பின்னோக்கி சென்றது.



அர்ஜூன், ஆத்யா உறவு ஆலமரம் போல் வேர் பிடித்து விழுது விட்டு வளர்ந்தது இருந்த அழகான நாட்கள் அது .

அபிமன்யு நிச்சயதார்த்தத்திற்கு ஒரு வாரம் முன்பு ஆத்யா மெடிக்கல் கான்ஃபெரென்ஸ் கிளம்ப ரெடியாகிக் கொண்டிருந்தாள்.  

அர்ஜுனும் சென்னைக்கு கிளம்பி தயாராக இருந்தான்.

"என்னடி.?? இன்னைக்கு நம்ம ஆத்யா மூஞ்சில பல்பு பீஸ் போன மாதிரி இருக்கு, என்ன விஷயம்?" என்று அவள் வீட்டில் அவள் கூட தங்கி இருந்த ப்ரண்ட் ஷாலினி கேலி செய்ய,

"ம்ம்ம்ம், இன்னும் ஒரு பத்து நாள் அர்ஜூண்ணாவ அம்மாவாள பாக்க முடியாதில்ல. அதான் ஹீரோயின் மூஞ்சி இஞ்சி தின்ன குரங்கு மாதிரி இருக்கு" என்று இன்னொரு தோழி உமாவும் அவள் பங்கிற்கு ஆத்யா காலைவாரினாள். 

"ஏய் ரெண்டு பேரும் இப்ப என் கிட்ட நல்லா வாங்க போறீங்க பாரு... சும்மா கிண்டல் பண்ணிட்டு, நானே அஜ்ஜூவ பாக்காம, எப்புடிடா பத்து நாள் ஓட்ட போறேன்னு பீலிங்ல இருக்கேன், நீங்க வேற, போங்கடி அந்தான்ட…"

"ஏன்டி பத்து நாள் தானாடி, அது வர அண்ணாவ பாக்காம உன்னால இருக்க முடியாதோ… ம்ம்ம் அமர காதல் தான் உங்க காதல் போ" என்று கிண்டலடிக்க,

"எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல காதல் இருக்குன்னு உனக்கு யார் சொன்னது ஷாலு?" என்ற ஆத்யாவை அதிர்ச்சியாக பார்த்த தோழிகள்.

" ஏய் என்னடி சொல்ற... அப்போ நீயும், அவரும் லவ் பண்ணலய??" என்று முட்டை கண்ணை திறந்து முழிக்க.

"ஏய் ஏய் பாத்துடி கண்ணு முழி பிதுங்கி வெளிய வந்துடப்போகுது...!?"

"அது விழுந்தா விழட்டும்.  நீ சொல்லு, இப்ப சொன்னதுக்கு என்ன அர்த்தம்?? அத சொல்லு முதல்ல" என்ற ஷாலினியை பார்த்து மென்மையாக சிரித்த ஆத்யா,

"எனக்கும் அஜ்ஜூக்கும் நடுவுல இருக்க உறவை காதல்னு ஒரு வார்த்தையில் சொல்ல முடியாது ஷாலு. காதல்ல சுயநலம் இருக்காது. ஆனா, எங்க உறவுல அது உண்டு. என்னோட அஜ்ஜூ எனக்கு மட்டும் தான். அஜ்ஜூவோட அன்பு முழுசும் எனக்கு மட்டும் தான்ற சுயநலம் எனக்கு நிறைய இருக்கு ..!! காதலிக்கிறவங்களுக்கு பிடிவாதம் இருக்காது. ஆனா, எங்களுக்கு அது உண்டு. என்னை அஜ்ஜூவும், அஜ்ஜூவை நானும் தவிர வேற யாரும், அஜ்ஜூவோட அம்மா, சித்தி, சித்தப்பா, என்னோட மாமா, மாமி, கௌதம், இன்னும் எல்லாரும் உட்பட யாரும் அதிகமா நேசிக்க முடியாதுன்ற பிடிவாதம் இருக்கு. காதல்ல பொசசிவ்னஸ் இருக்கும் ஆனா, எங்களுக்கு நடுவுல வெறும் அன்பு மட்டும் தான் நெறஞ்சு இருக்கு. காதலிக்கிறவங்க ஒருத்தரை ஒருத்தர் விட்டுக் கொடுக்க மாட்டாங்க. ஆனா, என்னை விட என்னோட அஜ்ஜூவை இன்னோருத்தர் நல்லா பாத்துக்குவாங்கன்னு தெரிஞ்சா, அவனுக்காக, அவன் சந்தோஷத்துக்காக, அவனோட நிம்மதிகாக நான் அவனையே விட்டு குடுப்பேன். என்னோட அஜ்ஜூவோட சந்தோஷத்தை விட எனக்கு இந்த உலகத்தில் வேற எதுவும் பெருசு இல்ல, எங்க உறவுக்கு என்ன பேர் சொல்றதுன்னு எனக்கு தெரியல.‌ ஆனா, வெறும் காதல்ன்ற ஒத்த வார்த்தையில அத அடக்கமுடியாது" என்ற ஆத்யாவை விசித்திரமாக பார்த்த ஷாலினி.

"உண்மை தான் அத்து உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல இருக்க உறவை காதல்னு சொல்ல முடியாது. இது அன்பு… இல்ல இல்ல இது பேரன்புடி.. நீங்க ரெண்டு பேரும் லைஃப் லாங்க இப்படியே இருக்கணும்" என்ற உமாவும், ஷாலினியும் ஆத்யாவை கட்டிக்கொள்ள… (பாவம் ஆத்யாவிற்கு அப்போது தெரியவில்லை. அவனுக்காக  அவள் அவனையே ஒருநாள் விட்டுக் கொடுக்க வேண்டி வருமென்று. அந்த நாள் வரும்போது அவனுக்காக அதையும் அவள் செய்தாள்.)

வாசலில் காலிங் பெல் அடிக்க
உமா கதவை திறந்தாள்.

"ஹாய் அண்ணா குட் மார்னிங்.. உள்ள வாங்க அண்ணா" என்றவள் அர்ஜூனை வரவேற்க, ஆத்யா அர்ஜூனை பார்த்து உதட்டை சுழித்து ஒழுங்கு காட்டி விட்டு, மூஞ்சை தூக்கி வைத்துக் கொண்டாள்.

"என்ன ஷாலு..?? டாக்டரம்மா மூஞ்ச மூணு கிலோமீட்டருக்கு தூக்கி வச்சிட்டு இருக்காங்க? என்ன மேட்டர்?" என்று வேண்டுமென்றே அவளை வம்பிழுக்க, 

"அதுவா அண்ணா... நாங்க எல்லாம் மெடிக்கல் கான்ஃபெரென்ஸ் க்கு போயிட்டு அங்கிருந்து மெடிக்கல் கேம்ப் போறோம் இல்ல. ஒரு பத்து நாள் மேடமால  உங்கள பாக்க முடியாது. அதான் வயலின் எடுத்து சோக கீதம் வாசிக்கிற" என்றவள் உமா கையில் hi-fi அடிக்க, 

"ஏய் வேணா... ஏற்கனவே நான் கடுப்புல இருக்கேன். மூனு பேரும் வாய மூடிட்டு போங்க இல்ல... மதிய சோத்துல வெசத்த வச்சுடுவேன் சொல்லிட்டேன்"  

"அதுக்கு எதுக்கு பேபி தனியா  வெசம் வைக்கணும்..?? நீ ரசம் வச்சாளே போதுமே, எங்க கதை முடிஞ்சுடும்" என்ற அர்ஜூன் சிரிக்க, அவன் தலைமுடியை பிடித்து ஆத்யா உலுக்க, 

"ஏய் ஷாலு வந்துடுடுடி...  இனி இங்க இருந்தா நம்ம சின்ன மனசு கெட்டு போய்டும்" என்ற உமா, ஷாலினியை இழுத்துக் கொண்டு வெளியே போய்விட, தன் தலையை பிடித்திருந்த ஆத்யா கையை பிடித்து அர்ஜூன் இழுக்க, இழுத்த வேகத்தில் அவனின் மடியில் வந்து விழுந்தாள் ஆத்யா.

"ஏய் என்னடி உன் பிரச்சனை? எதுக்கு என் முடிய பிடிச்சு இந்த உலுக்கு உலுக்குற... நீ இப்படி பண்ண நாளைக்கு நம்ம கல்யாண ஆல்பத்துல நா சொட்டைய தான் நிக்கணும்" என்றவன் செல்லமாக அவள் ஆப்பிள் கன்னத்தை கடித்தான். 

"டேய் எரும?? பசிச்சா போய்  பிரிஜ்ல பாலும், முட்டையும் இருக்கு, அத தின்னு. என் கன்னத்தை ஏன்டா கடிக்கிற எரும" என்றவள் தன் கன்னத்தை தடவிக் கொள்ள,

"நா என்ன பாம்பா டி முட்டையும், பாலும் திங்க, விட்ட அத தின்னுட்டு புத்துல போய் படுக்க சொல்லுவ போல..?"

"நீ எங்கேயோ போய் படு ?? எனக்கென்ன?? என்று மீண்டும் முறுக்கிக்கொள்ள,

"அஸ்க்கு புஸ்க்கு நா ஏன்டி எங்கேயோ போகணும். புசுபுசுன்னு என்னோட தியா இருக்கும்போது, அழகா அவ மடியில படுத்துக்குவேன்" என்ற அவளை அணைத்தபடி அவள் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டான். 

"ஏன்டா தியா?? என்ன ஆச்சு இப்ப?? எதுக்கு இப்புடி மூஞ்சிய தூக்கி வச்சிட்டு இருக்க?"

"நானும் உன் கூட அபி அண்ணா நிச்சயத்துக்கு வரேனே அஜ்ஜூ.. ப்ளீஸ் டா..??" என்று ஆத்யா கெஞ்ச,

"என்ன தியா இது சின்ன புள்ள மாதிரி... இது வெறும் நிச்சயம் தான்.. கல்யாணத்துக்கு கண்டிப்பா நீயும், நானும் ஜோடியா போலாம். அதோட இந்த மெடிக்கல் கான்ஃபெரென்ஸ் ரொம்ப இம்பார்டென்டுன்னு நீதான சொன்ன, அப்றம் எதுக்கு அத மிஸ் பண்ணனும் சொல்லு, என்னோட தியா பெரிய கார்டியலஜிஸ்ட் ஆகணும். வேர்ல்ட் வொய்ட் எல்லாரும் என்னோட தியா தான் பெஸ்ட்னு சொல்லணும்டி. அதான் என்னோட ஆசை. அதுக்கு நீ இந்த கான்ஃபெரென்ஸ் அட்டன் பண்றது ரொம்ப முக்கியம். அதான் உன்ன மும்பை போகச் சொல்றேன்" என்று செல்லமாக கெஞ்சியவனை நெஞ்சோடு சேர்த்து அணைத்தாள் ஆத்யா.

"நா போறேன் அஜ்ஜூ, எனக்குள்ள பெரிய கார்டியலஜிஸ்ட் ஆகணுன்ற கனவை வெதச்சது நீ தான். என்ன ஆனாலும் நான் அத நிறுத்துவேன். உன்னோட ஆசையை நிறைவேத்துறது தான்டா என்னோட லட்சியம்" என்றவள் அவன் நெற்றியில் தன் இதழை பதித்தாள்.

அர்ஜூன் ஆசையை ஆத்யா நிறைவேற்றிவிட்டாள். இன்று அவள் பேர் சொன்னால் தெரியும் அளவு பெரிய கார்டியலஜிஸ்ட். ஆனால், விதி அதை கூட இருந்து பார்க்கத்தான் அவள் அர்ஜூனுக்கு கொடுத்து வைக்கவில்லை.

அர்ஜூன் போட்ட சடன் பிரேகில் நிகழ்வுக்கு வந்த ஆத்யா திரும்பி அர்ஜூனை பார்க்க, எந்த அர்ஜூனை உயிருக்கு மேலாக நேசித்தளோ... எந்த அர்ஜூன் சந்தோஷத்திற்காக எதையும் செய்ய துணிந்தளோ,  அந்த அர்ஜூன் வாழ்க்கை இன்றுதான் கண்முன்னே வறண்ட பாலைவனமாக இருக்கிறது.. நினைக்கவே அவள் நெஞ்சம் கலங்கியது.