கன்னத்தில் காதல் முத்தம் 25

 காதல் 25


அன்று இரவு ஆராவுடனேயே ஷிவானி தங்கி இருந்தாள்.


ஏதோ யோசனையில் கைகளைக் கட்டியபடி வானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தவளுக்கு தோன்றியது ஒன்றே ஒன்று தான், 'இந்த காதல் ஏன் இவ்ளோ சுயநலம் புடிச்சதாவும் கண்மூடித்தனமாவும் இருக்கு? சின்ன வயசிலருந்து கூடவே இருந்த ஈஸ்வர் மேல வராத லவ், எப்பவோ பாத்து பழகி பிரிஞ்சு போய், இப்ப திரும்பி வந்த தேவ் மேல இவளுக்கு எப்டி வந்தது? உண்மையில் இந்த காதலுக்கு கண் மட்டும் இல்லை, அறிவும் இல்லதான் போல' என்று தனக்குள் புலம்பியவளுக்கு தெரியாது, பின்னாளில் இதே பைத்தியக்காரத்தனத்தை வலுக்கட்டாயமாக அவளும் செய்யப்போகிறாள் என்று.


தன் போக்கில் எதை எதையே யோசித்துக் கொண்டிருந்த ஷிவானிக்கு சூடான பாலை கொடுத்த ஆரா, "குடி ஷிவி" என்று சொல்ல, அவள் முகத்தை பார்த்த ஷிவானிக்கு அவள் கேட்க நினைப்பது என்ன? என்று புரிந்தது.


அவள் வந்ததில் இருந்து நூறு முறையாவது அந்த கேள்வியை கேட்டிருப்பாள், ஷிவானியும் பதில் சொல்லி சொல்லியே அலுத்து விட்டாள். இப்போது நூற்றி ஒன்றாவது முறையாக, "ஷிவி உண்மையாவே என் மேல உனக்கு கோவம் இல்ல தான?" என்று அவள் மனநிலை புரியாமல் ஆரா கேட்டுவிட, கையில் இருந்த பால் டம்ளரை விசிறி அடித்தவள்,


"இருக்குடி கோவம் இருக்கு… நிறைய இருக்கு… இன்னும் சொல்லப்போனா உன் கன்னத்தில் மாறிமாறி அறையும் அளவு கோவம் இருக்கு..‌." என்று கத்தியவள், "அப்டி என்னடி பெரிய காதல்? புடலங்கா காதல்… ஈஸ்வர் பத்தி ஒரு நிமிஷம் யோசிச்சி பாத்தியா நீ?" என்றவளை வெறித்து பார்த்த ஆரா,


"ஷிவி நா..‌. நான் வேணும்னு… நீதான சொன்ன லவ் எப்ப வரும்னு யாரும் சொல்ல முடியாதுன்னு… இப்ப இப்டி சொல்ற" என்று குழந்தை போல் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு கண்ணில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டிருந்தவளை பார்த்து, கண்களை இறுக்கி மூடிக்கொண்டி தன்னை கட்டுப்படுதியவள்,


"ஸாரி ஆரா, உன்னை காயப்படுத்த நான் நினைக்கல..‌. பட், ஈஸ்வர் பத்தி யோசிக்கும் போது, சத்தியமா உன்மேல அவ்ளோ கோவம் வருது. எப்டி பாத்தாலும் நீ அவனுக்கு பண்ணது நம்பிக்கை துரோகம். அதை எப்பவும் என்னால மன்னிக்க முடியாது தான். பட், அட் தி சேம் டைம்… என்னால உன்னையும் வெறுக்க முடியாதுடி.


உங்க ரெண்டு பேர்ல யாருக்குன்னு நான் பேசுறதுன்னு தெரியாம ஒரே தவிப்பா இருக்கு ஆரா எனக்கு… அந்த தவிப்பில் எங்க உன்னை எதுவும் சொல்லிடுவேனோன்னு பயந்து தான் அமைதியா இருந்தேன். ஆனா, நீ சும்மா வந்து என்மேல கோவம் இல்லயா? கோவம் இல்லையான்னு கேக்கும் போது செம்ம கடுப்பாகுது. அதெப்படி கோவம் இல்லாம போகும்? நீயே சொல்லு…


இதே ஈஸ்வர் இந்த மாதிரி இன்னொரு பொண்ணை காதலிக்குறேன், ஆரா எனக்கு வேணாம்னு சொல்லி இருந்தா உனக்கு எப்டி இருந்திருக்கும்? அதே வலி தானாடி அவனுக்கும். உன்னை மாதிரி அவனும் என்னோட ஃப்ரண்ட்... அப்றம் எனக்கு எப்டி கோவம் வராம இருக்கும்னு நீ எதிர்பார்க்குற?" என்று மூச்சடைக்க பேச, ஆரா குற்றவுணர்வில் தலைகுனிந்து நின்றாள்.


அவளை அப்படி பார்க்க பொறுக்காது, "இங்க பாரு… நீ இப்டி ஃபீல் பண்ண கூடாதுன்னு தான் இவ்ளோ நேரம் என் கோவத்தை இழுத்து புடிச்சிட்டு இருந்தேன். நீ சும்மா இல்லாம என்ன சொறிஞ்சுவிட்ட…" என்று அவள் தலைகோதிய ஷிவானி,


"லிசன் ஆரா… நடந்த எல்லாம் உன் கன்ட்ரோல் மீறி நடந்திருக்கு… ஐ அண்டர்ஸ்டாண்ட். பட், நான் ஈஸ்வர் பத்தியும் யோசிக்கணும் இல்ல ஆரா? நான் பேசினா உன்னோட குற்றவுணர்வு அதிகம் ஆகும்னு தான் பேசாம இருக்கேன். சோ ப்ளீஸ் இனிமே இந்த கேள்விய கேக்காத…


அன்ட் நம்ம ரெண்டு பேரும் சண்டை போட இது நேரம் இல்ல… கொஞ்ச நேரம் முன்ன அம்மா யூ.எஸ்ல இருந்து ஃபோன் பண்ணி இருந்தாங்க. உனக்கும் ஈஸ்வருக்கு சீக்கிரம் கல்யாண தேதி வைக்கணும்னு, அதுக்காக ஜோசியரை பாக்க போறேன்னு உங்க அத்தை அம்மாகிட்ட சொன்னாங்கலாம்…


சோ இது இப்ப நீ செஞ்சதை நினைச்சு அழற நேரம் இல்ல. அடுத்து செய்யவேண்டியதை யோசிக்கும் நேரம்… நீ முதல்ல உன்னோட அந்த தேவ் இருக்காரு இல்ல, அவர்கிட்ட பேசு… நீயும் அவரை விரும்பறேன்னு சொல்லிட்டு அடுத்து என்ன செய்யலாம்னு யோசிங்க… உடனே சென்னை போய் வீட்ல பேசு…


நீ அமைதிய இருந்து, அப்றம் வீட்ல கல்யாணம் தேதி முடிவு பண்ணி இன்விடேஷன் அடிச்சு ஊர் முழுக்க கொடுத்துட்டா அப்றம் நிலைமை இன்னும் மோசம் ஆகிடும். சோ டூ சம்திங்" என்றவள் அங்கிருந்து சென்றுவிட, ஷிவானி சொன்ன விஷயத்தின் தீவிரத்தை உணர்ந்து அடுத்த நாள் காலையிலேயே தேவ்வை பார்க்க வேண்டும் என்று முடிவெடுத்தாள் ஆராத்யா.


அதிகாலையே ஷிவானி கிளம்பி தயாராக இருக்க, "நீ இப்பவே போகணுமா ஷிவி? என்னோட இருக்கலாம் இல்ல…" என்று கெஞ்சியவளை பார்த்து மனம் இளகினாலும் வேறு வழியின்றி அங்கிருந்து கிளம்ப முடிவு செய்தாள் ஷிவானி.


"நான் இப்ப யூ.எஸ் போகல ஆரா, இங்க இந்தியால தான் கொஞ்ச நாள் இருக்கப்போறேன்‌. எதுவும் பிரச்சனைனா கால் பண்ணு உடனே வந்திடுறேன். ஆனா, இப்ப அந்த மிஸ்டர். அக்னிதேவ்வை பாக்க உன்னோடு என்னால வரமுடியாது. நான் அங்க வந்த கண்டிப்பா, "ஏன்டா உனக்கு வேற பொண்ணு கிடைக்கலியா? ஏற்கனவே நிச்சயமான என் ஆரா தான் உனக்கு வேணுமான்னு கோவத்தில் அவர் சண்டையை பிடிச்சு சண்ட போட்டாலும் ஆச்சரியம் இல்ல. அப்டி நடந்தா அது உனக்கு தான் கஷ்டம். சோ நான் கிறம்புறேன்" என்றவள் தன் பெட்டியை எடுத்துக் கொண்டு ஓரடி எடுத்து வைத்தவள், மெல்ல திரும்பிப் பார்த்து, "இத நான் இப்ப சொல்றது சரியா தப்பான்னு தெரியல… பட், யூ ஆர் ஏ அன்லக்கி கேர்ள் ஆரா. ஈஸ்வர் மாதிரி ஒரு ஆளை மிஸ் பண்ற…" என்றவளுக்கு தெரியாது, அக்னி அவளுக்கு தவமின்றி கிடைத்த வரமென்று…


அதே நேரம் இங்கு எதுவும் செய்யத் தோன்றாமல், தன் உலகமே இருண்டது போல் கண்களை மூடி அமர்ந்திருந்தான் அக்னி.


'பெரிய இவன் மாதிரி சொன்னீயேடா… நீ திரும்பி வரும் போது உன்னோட ப்ரெண்ட் தேவ் உனக்காக இங்க இருப்பானு சொன்னீயேடா… இப்ப எங்கடா போச்சு அந்த வாக்கு? அவள விட்டு ஒரு மணி நேரம் கூட பிரிஞ்சிருக்க முடியாம அந்த ராத்திரியில் பைக்கை எடுத்துக்கிட்டு அவ பின்னாடியே போனியே! நீயாடா அவளுக்கு ப்ரண்டா மட்டும் இருக்கிறவன்?


உன்னால முடியாது அக்னி… உன் தியாவை விட்டு உன்னால இருக்கவே முடியாது. உன் மனசு பூரா அவதான் இருக்கான்னு உனக்கே தெரியும். இனிமே நீ என்ன பண்ணப்போற அக்னி? அவ இங்க வந்த வேலையும் முடியும்போகுது. அதுக்கு அப்பறம் அவ சென்னைக்கு போய்டுவா… அதுக்கு அப்பறம் என்ன? உடனே ஆதிக்கும் அவளுக்கும் கல்யாணம் தான்' என்று நினைக்கும் போதே அவன் நெஞ்சம் பதறிவிட,


"நோ… என்னோட தியா எனக்கு மட்டும் தான்… அவளை நான் யாருக்கும் விட்டு தரமாட்டேன" என்று கத்தியபடி கண் விழித்தவன் முன் நின்றிருந்தாள் ஆராத்யா.


கடந்த ரெண்டு நாட்களாக அவனுக்கு அடிக்கடி இப்டி தான் அவளின் உருவம் கண்முன் இருப்பது போல் தோன்றும். அருகில் சென்று பார்த்தால் அங்கு அவள் இருக்கமாட்டாள். இதுவே அடிக்கடி நடக்க, "என்னால முடியலடி… சத்தியமா முடியல..‌. ஆமா, நான் தான் சொன்னேன்… நான் நிம்மதியா வாழ உன் நினைப்பு போதும்னு. அது உண்மையும் தான்… அது என் புத்திக்கு தெரியுது… ஆனா, இந்த அறிவுகெட்ட மனசுக்கு புரியமாட்டேங்குதுடி..‌. அது நொடிக்கு நொடி பக்கத்தில் நீ வேணும்னு கேக்குதே, நீ இல்லாட்டி இந்த தேவ் வாழ்க்கையில் ஒன்னுமே இல்லைன்னு கெடந்து அடிச்சிக்குதுடி… நான் என்ன செய்றது?" என்று புலம்பியவன்,


"என்ன ஆனாலும் உனக்கு கொடுத்த வாக்கை நான் மீற மாட்டேன் தியா… எந்த வகையிலும் நான் உன்னோட கல்யாண வாழ்க்கை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன். நீ சந்தோஷமாக இருந்தா அதுவே எனக்கு போதும்… நான் போய்டுறேன்… இந்த ஊரைவிட்டு… இல்ல இல்ல இந்த நாட்டைவிட்டே போய்டுறேன். ஒருவேளை நான் இங்கேயே இருந்தா என்னையும் அறியாம நான் உன்னை தேடி வந்திடுவேன்.


அப்டி நடந்தால் அது உன்னை ரொம்ப காயப்படுத்தும்… நான் போய்டுறேன்.‌‌ உடனே இங்க இருந்து போய்டுறேன்." என்று முகத்தில் வேகமாக அடித்துக் கொண்டவனின் வலிமையான கரங்கள் இரு மென்மையான கைகளில் சிறைப்பட்டு இருந்தது‌.


"நீ போய்ட்டா அப்றம் யாருடா என் கழுத்தில் தாலி கட்றது?" என்ற குரலில் தன் கண்முன் நிற்பது கற்பனை இல்லை. தன்னவள் தான், தன் முன் நிற்கிறாள் என்று உணர்ந்த, "தியா நீ… நீ வந்துட்டியா?" என்று சத்தமாக கேட்டவன், அவளை இழுத்து தான் மார்போடு அணைத்துக் கொள்ள, அவன் நெஞ்சில் ஆழமாக தன் முகத்தை புதைத்தவள் கைவிரல் நகங்கள், அவன் சட்டையையும் தான்டி அவன் முதுகில் அழுத்தமாக பதிந்து வலித்தது.


அந்த வலி கூட அவளவனுக்கு சுகமாக இருக்க, "எங்க நீ வரமாட்டியோன்னு பயந்துட்டேன்டி…" என்று அவள் கழுத்தில் மெல்லியதாக தன் இதழ்களை பதிக்க, "இனி நான் உன்னைவிட்டு போனா, இந்த தியா அப்ப உயிரோட இல்லைன்னு அர்த்தம்டா" என்றவளின் வார்த்தையில் உள்ளம் பதறியவன், "அந்த நிலையில் உன்ன பாக்க நானும் இருக்கமாட்டேன்டி" என்று மேலும் தன் அணைப்பை இறுக்கினான்.


*****


ஆரா கையை பிசைந்தபடி இருக்க, "இப்டியே எவ்ளோ நேரம் தான் இருக்கப்போற தியா… எப்ப இருந்தாலும் இந்த சிட்டிவேஷனை நம்ம ஃபேஸ் பண்ணிதான் ஆகனும். உன் ஃப்ரண்ட் சொன்னது கரெக்ட்… ஒருவேளை கல்யாண ஏற்பாடு நடந்த பிறகு விஷயம் அவங்களுக்கு தெரிஞ்சா அது இன்னும் சங்கடம் தான். சோ நீயே போய் அவங்ககிட்ட நம்மை பத்தி சொல்லிடு" என்றவனை பரிதவிப்போடு பார்த்தவள்,


"எனக்கு பயமா இருக்கு தேவ். ஷிவிக்கு என்மேல உயிரு… அவளே நேத்து நம்ம விஷயம் தெரிஞ்சு கொதிச்சிட்ட… என்ன அடிக்காதது ஒன்னு தான் குறை. அவ உன்னைப் பாக்க வராம போனது கூட, எங்க உன்னை திட்டிடுவாளோன்ற பயத்தில் தான்…


அவளே இப்டி ரியாக்ட் பண்ணா அத்தை பத்தி சொல்லவே வேணாம். அதோட அப்பாவை நினைக்கும் போது பயமா இருக்கு… ஆதிமாமாவை எப்டி?" என்றவள் கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்த அக்னி,


"வீ ஹவ் நோ அதர் வே தியா. உன் கடமை நீ உன்னோட மனசையும் முடிவையும் அவங்ககிட்ட சொல்லிடு. அதுக்கு பிறகு அவங்க என்ன சொல்றாங்கன்னு பாத்து நம்ம என்ன செய்யலாம்னு யோசிக்கலாம்" என்று அவளுக்கு தைரியம் சொல்லி அனுப்பிவனுக்கு தெரியாது. இனி திரும்பி அவளை அவன் பார்க்கும் நேரம் அவள் நிலை என்னவாக இருக்கும் என்று.


அந்த வீடே கதிகலங்கி போயிருந்தது. பல்லவியின் குரல் அடுத்த தெருவரை கேட்க, ஆரா வாய் பொத்தி அழுதுக் கொண்டிருக்க, ஆதி உணர்வுகள் மொத்தமாக எரிந்த நிலையில் நொறுங்கிப் போய் சிலையாக அமர்ந்திருந்தான்.


"என்ன ஆரு இது? என்ன காரியம் செஞ்சிருக்க நீ? உனக்கு ஏன் புத்தி இப்டி போச்சு. இப்ப மட்டும் உங்கம்மா உயிரோட இருந்திருந்தால் உன்னை வெட்டியே போட்டிருப்பா" என்று அவள் தந்தை அவளை வசைபாட,


"அவகிட்ட என்ன அண்ணா பேச்சிட்டு இருக்கீங்க, "என்றபடி ஆராவின் முடியை கொத்தாக பிடித்த பல்லவி, "அப்டி என்னடி என் பையன்கிட்ட காணாததை அவன்கிட்ட பாத்துட்டா? என் பையன் எந்தவிதத்தில் கொறஞ்சு போய்ட்டான்? சொல்லுடி சொல்லு…


என்ன அந்த பையன் என் புள்ளைய விட பணக்காரனா அதான் மயங்கிட்டியா?" என்று கண்டபடி அவளின் நடத்தையை கொச்சைப்படுத்தி நாக்கில் நரம்பில்லாமல் பேச, துடிதுடித்து போய்விட்டாள் ஆரா.


"அத்தை" என்று அவள் வாய்திறக்கும் முன், "பல்லவி" என்று அதட்டியபடி வந்தது ஆராவின் தந்தையின் குரல்.


"எதுவா இருந்தாலும் பேசுறதுக்கு முன்ன ஒருமுறை யோசிச்சு பேசு பல்லவி. யாரை பத்தி என்ன பேசறா நீ? என் பொண்ணை தப்ப பேச உனக்கு என்ன தைரியம் இருக்கும்? அவ பண்ணது தப்புதான். அதுக்கு அத்தையா அவளை அடி, கண்டி… நான் ஒன்னும் சொல்லமாட்டேன். ஆன, ஒரு வார்த்தை… ஒரு வார்த்தை அவளை பத்தி தப்பா பேசினா… நான் மனுஷனாவே இருக்க மாட்டேன்." என்றவர், "பாத்தியா ஆரு… நீ செஞ்ச வேலை உன்னை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்குன்னு பாத்தியா" என்க,


"அப்பா" என்று கதறியபடி ஓடிவந்து அவர் காலைக் கட்டிக்கொண்டு, "ஸாரிப்பா… ஸாரி… நா… நான் வேணும்னு செய்யல ப்பா… என்… என்னையும் அறியாமல் என் மனசு அவனை விரும்பிடுச்சு ப்பா… எப்டின்னு சொல்லத்தெரியல… ஆனா, தேவ் இல்லாம என்னால வாழமுடியாது ப்பா… உங்களுக்கு பிடிக்காட்டி நான் அவனை கல்யாணம் செய்யமாட்டேன் பா… ஆனா, அவனைத் தவிர வேற யாரையும் என்னால கல்யாணம் பண்ண முடியாது." என்றவள் தோளில் யாரோ கையை வைக்க, அவள் நிமிரந்து பார்க்க, அது ஆதிதான். அவளுக்கு அவனைப் பார்க்கவே குற்றவுணர்வாக இருக்க, தலையை குனிந்து கொண்டாள்.


"நீ உள்ள போ ஆரா… இதைப்பத்தி அப்றம் பேசலாம். இப்ப யாரும் சரியான மனநிலையில் இல்ல… நீ போ… உன் ரூம்க்கு போ" என்றவன் "மாமா நீங்களும் போங்க. ஏற்கனவே உங்க ஹெல்த் கண்டிஷன் சரியல்ல. போங்க மாமா" என்றவனை அவர் கலங்கியபடி பார்க்க, அவர் கண்களில் அத்தனை வலி.


"ஆதி இவ…" என்று ஆரம்பித்தவரை கைகாட்டி போதும் என்று நிறுத்தியவன், "இப்ப இத பத்தி பேசா வேணாம் மாமா ப்ளீஸ்…" என்று கெஞ்சிகேட்டவன். "அம்மா நீயும் உள்ள போ…"என்று சொல்ல,


ஏதோ பேச வந்த பல்லவியை கண்களால் அடக்கிவன், "உள்ள போம்மா" என்று அழுத்திச் சொல்ல, அவர் உள்ளே சென்றுவிட, ஆராவும் தன்னறைக்கு சென்றவள், நடந்ததை எல்லாம் அக்னிக்கு அழைத்து சொன்னவள், அடுத்து ஷிவானிக்கு அழைத்து நடந்ததை சொன்னாள்.


"இது எதிர்பார்த்து தான் ஆரா… ஆன, உன் அத்தை பேசினது கொஞ்சம் அதிகம் தான். ஆன, அவங்க இடத்தில் இருந்து பாக்கும் போது ஒன்னும் சொல்ல முடியல..."


"ஆமா ஷிவி… அத்தை அப்டி சொல்லும்போது எனக்கும் கஷ்டமாதான் இருந்தது. ஆனா, நான் செஞ்ச தப்பு என்னால எதுவும் பேச முடியல… பேசும்போது கேட்டாங்க உனக்கு இந்த விஷயம் தெரியுமா… நீ இதுக்கு சப்போட்டான்னு… நான் இது பத்தி அவகிட்ட நான் சொல்லல…


அவளுக்கு தெரிஞ்சா என்னை வெறுத்திடுவான்னு பயந்து நான் ஷிவிகிட்ட எதுவும் சொல்லலைன்னு சொன்னேன். அதுக்கும் ஒரே திட்டு… எல்லாம் திட்டம் போட்டு தான் செஞ்சிருக்கான்னு" என்ற ஆரா குரல் கரகரக்க,


"ஏய் ஆரா அழாத… இதெல்லாம் நம்ம எதிர்பார்த்தது தானா… அவங்களுக்கு அவங்க பையன் வாழ்க்கையை நினைச்சு கோவம். அதான் அப்டி பேசுறாங்க. அதான் அப்பா உனக்காக பேசினாரு இல்ல, விடு… ஆதி கண்டிப்பா ஒரு நல்ல முடிவு தான் எடுப்பான். நீ இன்னொருத்தனை விரும்புறேன்னு தெரிஞ்ச பிறகு உன்னை கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணா மாட்டான். உங்க அத்தை வோணும்னா அப்டி செய்ய பாப்பாங்க. பட். ஆதி ஜென்டில்மேன், கண்டிப்பா அந்த மாதிரி கேவலமான வேலையெல்லாம் பண்றது பத்தி யோசிக்க கூட மாட்டான்."


"ஆமா ஷிவி… அந்த நம்பிக்கையில் தான் நானும் இருக்கேன். மாமா ரொம்ப நல்லவரு, கண்டிப்பா என் மனசை புரிஞ்சிக்குவாரு. ஹீ இஸ் மை லாட்ஸ் ஹோப்…" என்றவளுக்கு அடுத்தடுத்து அவள் வாழ்க்கையில் நடக்கப்போகும் விபரீதங்கள் தெரிந்தால் பாவை அவள் தாங்குவாளா?