கன்னத்தில் காதல் முத்தம் 16
காதல் 16
காலை விடிந்ததும், முதல் வேலையாக ஷிவானியை தொடர்பு கொண்டு நேற்று ஆராத்யா அவனிடம் பேசியதை எல்லாம் சொன்னவன், "நம்ம எதுக்காக வெய்ட் பண்ணமோ அந்த டைம் வந்திடுச்சு ஷிவானி… தியா உள்ளுக்குள்ள என்மேல லவ் வந்திடுமோன்னு பயப்படுறா,
இட் மீன்ஸ் ஷீ லவ்ஸ் மீ. சோ நீ உடனே கௌதமை கூட்டிட்டு இங்க கிளம்பிவா… இப்ப தியா பக்கத்தில் நீ இருக்க வேண்டியது ரொம்ப முக்கியம். அப்டியே உன்கிட்ட இருக்க எல்லாத்தையும் எடுத்திட்டு வந்திடு" என்றவன் ஒரு நொடி பொறுத்து,
"நான் என்ன சொல்றேன்னு உனக்கு புரியுது இல்ல ஷிவானி?" என்று அழுத்தமாக கேட்க, "அஃப்கோர்ஸ் அக்னி… இதுக்கு தானே இவ்ளோ நாள் காத்திருந்தது? எல்லாத்தையும் எடுத்திட்டு வரேன்" என்றவள் சற்று தயங்கி,
"ஆரா இதெல்லாம் எப்டி எடுத்துக்குவான்னு எனக்கு புரியல அக்னி… இதுக்கு பின்னால் நான் இருக்கேன்னு தெரிஞ்சா கண்டிப்பாக அவ உடஞ்சிடுவா… எனக்கும் அவ மேல கண்டமேனிக்கு கோவமும் வருத்தமும் இருக்கு தான்… பட் அட் தீ சேம் டைம். ஐ லவ் ஹர் டூ அக்னி.
அவமேல நான் என் உயிரையே வச்சிருக்கேன். அவமேல் வச்சிருக்க அதோ அளவு அன்பு, எனக்கு ஈஸ்வர் மேலயும் இருக்கு. நான் நெனச்சு கூட பாக்கல, இப்டி ஒரு லவ் ட்ரையாங்கிள் உள்ள நாங்க சிக்குவோம்னு. அதுவும் ஆரா, ஈஸ்வர் நடுவுல நான்." என்றவள் குரலில் அப்படி ஒரு வருத்தம்.
"ப்ளீஸ் ஷிவானி… எனக்கு உன்னோட சிட்டுவேஷன் புரியுது. ஐ நோ, ஆதி உனக்கு எவ்ளோ முக்கியம்னு எனக்கு புரியுது. அப்படி இருந்தும் இந்த விஷயத்தில் நீ எனக்கு ஹெல்ப் பண்ணி இருக்க, அதுவே பெரிய விஷயம் தான்.
நான் ஏற்கனவே சொன்னமாதிரி தான் ஷிவானி, எனக்கு என்னோட தியா வேணும். தட்ஸ் ஆல்… அதுக்கு பிறகு நான் ஆதிய எதுவும் செய்யாம, சும்மா விடுறது உனக்காக மட்டும் தான். நீ மட்டும் இல்லாட்டி தியாவை தூக்கும் முன்னையே அவனை கொன்னு புதைச்சிருப்பேன். பிகாஸ் ஆஃப் யூ, ஹீஸ் ஸ்டில் அலைவ்" என்றவன் குரல் நெருப்பாய் கொதிக்க…
"ப்ளீஸ் அக்னி… அவனும் பாவம் தான். உன்னோட காதல் உன்னை இப்டி மாத்திடுச்சு…அதுமாதிரி அவனோட காதல் அவனை இந்த நிலையில் நிக்க வச்சிடுச்சு… ஏனோ சின்ன வயசில் இருந்து உங்களுக்கு ஒருத்தரை ஒருத்தருக்கு பிடிக்காம போய்டுச்சு…
இதுல என்னால யாருக்குமே ஆதரவா பேச முடியாத நிலை… அட் தீ எண்ட் ஆஃப் திஸ் பிளே… எல்லாம் நல்லபடியா முடிஞ்சா அதுவே போதும்." என்றவள் உடனே கௌதமுடன் கிளம்புவதற்கு, தேவையான அனைத்தையும் தயார் செய்தாள்.
முதல் நாள் இரவு கதவை மூடிக்கொண்ட ஆரா மறுநாள் மாலை வரை கதவை திறக்கவே இல்லை. அவளுக்கு இப்போது தனிமை தான் தேவை என்று புரிந்தாலும், நேற்று இரவில் இருந்து அவள் சாப்பிடாமல் இருப்பதை எண்ணி மதியம் போல் அவள் அறைக் கதவை தட்டி அழைத்தான் அக்னி.
"ஐ வாண்ட் டூ பீ அலோன்" என்று அவள் உள்ளிருந்து கத்த, அமைதியாக இருந்துவிட்டான் அக்னி.
இப்போது மணி இரவு ஒன்பதை கடந்திருக்க, அவள் உடல்நிலையை மனதில் கொண்டு, மீண்டும் அவள் அறைக்கதவை தட்டினான். வெகு நேரம் தட்டியும் பதில் வராமல் போக, "தியா இப்ப மட்டும் நீ வெளிய வர்ல… நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது" என்று சொல்ல அவளிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.
அக்னி அங்கிருந்த கண்ணாடி ஜாடியை எடுத்து கீழே போட்டு உடைக்க, அறைக்குள் இருந்த ஆராவுக்கு திக்கென்றது. அவள் வேகமாக ஓடிவந்து கதவை திறந்து பார்க்க, அங்கு கையில் ரத்தம் வழிய நின்றுகொண்டிருந்த அக்னி அவன் கையில் இருந்த கண்ணாடி துண்டைக் கொண்டு அடுத்த கையையும் குத்தப் பார்க்க,
"தேவ்" என்று கத்தியபடி அவன் அருகில் வந்தவள், அவன் கையில் இருந்த கண்ணாடி துண்டை பிடிங்கி தூக்கியெறிந்து விட்டு, பதட்டமாக அவன் கையை எடுத்து பார்க்க அவன் உள்ளங்கையில் ஆழமாக கண்ணாடி குத்தி இருந்ததைக் கண்டாள்.
"ஏன் தேவ் இப்டி செஞ்ச?" என்று ஆதங்கமாக கேட்டவள் கண்களில் கண்ணீர் நிற்காமல் வழிய, அதை தன் இன்னொரு கரம்கொண்டு துடைத்த அக்னி, "உன்னை வெளிய வரவைக்க எனக்கு வேறவழி தெரியலடி" என்றான் ஆற்றாமையாக.
"இப்ப நான் வெளிய வராட்டி என்ன? குடியா முழுகிடப் போகுது? கொஞ்ச நேரம் விட்டா நானே வெளிய வந்திருக்கப் போறேன்"
"அதெப்படி தியா விடமுடியும்? நீ நேத்து மதியம் சாப்டது, நைட்டும் ஒன்னும் சாப்டல, இன்னைக்கும் எதுவும் சாப்டாம நீ பட்டினியா இருக்கீயே… என்னால எப்டி சும்மா இருக்க முடியும்?" என்றவன் வார்த்தையில் கண்கள் விரிய அவனைப் பார்த்தவள், அவன் காதலின் கனம் தாங்காமல் உள்ளுக்குள் உடைந்து தான் போனாள்.
"வா" என்ற வார்த்தையில் அவன் அவள் பின்னால் செல்ல, அவனை அவன் அறைக்குள் அழைத்துச் சென்றவள், அங்கிருந்த முதலுதவி பெட்டியை எடுத்து வந்து அக்னியின் கை காயத்தை சுத்தம் செய்துவிட்டு மருந்து வைத்து கட்டிவிட்டு, 'நீ எதுவும் சாப்டியா?' என்று கேட்க வந்தவள், சற்று பொறுத்து, "நேத்துல இருந்து நீயும் சாப்டாம தான் இருக்கீயா?" என்று கேட்டவளுக்கு அதற்கான பதில் தெரிந்தே இருந்தது.
"நீ சாப்டாம இருக்கும்போது நான் மட்டும் எப்டிடி சாப்ட முடியும்?" என்றவனின் அன்பு அவளை 'அய்யோ!' என்று உள்ளுக்குள் கதற வைத்தது.
"இரு வரேன்" என்று எழுத்துச் சென்றவள் திரும்பி வரும்போது அவள் கையில் உணவு தட்டு இருந்தது. "ம்ம்ம் சாப்டு" என்று அவள் தட்டை நீட்ட, அதை வாங்காமல் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தான் அக்னி.
அவன் பார்வையின் அர்த்தம் புரிந்து இழுத்து மூச்சுவிட்டவள், அவன் அருகில் அமர்ந்து, தட்டில் இருந்த இட்டிலியை எடுத்து முதலில் அவள் சாப்பிட்டு விட்டு, "ம்ம்ம் இப்ப சாப்டு" என்று அவன் முன் தட்டை மீண்டும் நீட்ட, அதை வாங்க நீண்ட அவன் கட்டுப் போட்டிருந்த கையைப் பார்த்த ஆராத்யா, என்ன நினைத்தாளோ!
அவளே இட்லியை எடுத்து அவன் வாயருகே கொண்டு செல்ல, அவள் செயலில் அக்னிக்கு கண்கள் கலங்கிவிட்டது. மெதுவாக அவள் கொடுத்த உணவை சாப்பிட்டவன், அவளை சாப்பிட வைக்கவும் மறக்கவில்லை.
ஆராத்யா இன்னும் அக்னி அறையில் தான் இருந்தாள், ஜன்னலில் தெரிந்த நிலாவை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவள் அருகில் வந்த அக்னி, "தியா உன்னோட டேப்லெட்ஸ்" என்று அவள் முன் மருந்தையும் தண்ணீர் டம்ளரையும் நீட்ட, அவனை ஆழமாக ஒரு பார்வை பார்த்த ஆராவுக்கு, 'அடிபட்டு இவ்ளோ பெரிய காயம் ஆகியிருக்கு, வலி கண்டிப்பா உயிர் போகும் இவனுக்கு… இந்த நிலையிலும் அவனைப் பத்தி கவலைப்படாம என்னைப் பத்தியே யோச்சிட்டு இருக்கானே!' என்று நினைத்தவள், "அப்டி என்ன தான்டா இருக்கு என்கிட்ட? ஏன் இப்டி உயிரைக் கொடுத்து என்னை பாத்துக்கிற?" என்று அவள் வாய்விட்டே கேட்டுவிட, அவளைத் திருப்பிப் பார்த்த அக்னி, "பிகாஸ் நீ என்னோட தியா…" என்றான் ஒற்றை வரியில்.
அவனின் வார்த்தைகள் செய்த மாயத்தில் ஆரா அவன் கண்களையே இமைக்காமல் பார்த்திருக்க, அவள் விழிகளோட தன் விழிகளை கலக்கவிட்ட அக்னிக்கு உள்ளுக்குள் அவனுக்கு அவனே விதித்த கட்டுப்பாட்டுகள் உடையத் தொடங்கியது.
மெல்ல அவள் அருகில் வந்து அவள் கன்னத்தை தன் கைகளில் ஏந்திவன், அவள் கன்னத்தில் அழுத்தமாக ஒரு முத்தம் பதித்திக்க, அவள் கண்கள் அதிர்ச்சியில் விரிந்து கொண்டது.
கன்னத்தின் மென்மையை உணர்ந்தவனின் உணர்வுகள் விழித்துக் கொள்ள, அதன் பிடியில் சிக்கிய ஆடவன், அடுத்த நொடி அவள் இதழ்களில் தன் இதழை ஆழமாக பதிந்திருக்க, ஆராத்யா அவனது செய்கையில் விதிர்த்து போனவள், முடிந்த மட்டும் தன் பலம் கொண்டு அவனை தள்ளப் பார்க்க, பாவம் அவளால் அவனை அசைக்ககூட முடியவில்லை.
நொடிக்கு நொடி அவன் முத்ததின் ஆழமும் வேகமும் கூடிக்கொண்டே போக, ஒரு நிலைக்கு மேல் ஆராத்யாவின் எதிர்ப்புகள் நின்று போக, அவள் இமைகள் மூடிக்கொண்டது.
அவளின் அமைதி அவனின் அவள் மீதான ஆவலை தூண்டிவிட, அவன் ஒற்றைக் கரம் அவள் கன்னத்தில் இருந்து இறங்கி, புடவை மறைக்காத அவள் இடையில் தஞ்சம் அடைந்தது. அவன் கைகளின் ஸ்பரிசத்தை தன் வெற்றிடையில் உணர்ந்தவள், உணர்வுகளும் மெல்ல ஊற்றெடுக்க, அவள் கைகள் அனிச்சையாய் அவன் முதுகை கட்டிக்கொண்டது.
அவள் அணைப்பில் தன்னிலை இழந்து அக்னி, அவளை தன்னோடு சேர்த்து இறுக்கிக் கொண்டபடியே கட்டிலில் சரிந்த போதும் ஆரா கண் திறக்கவில்லை.
அவள் இதழ்களில் தொடங்கி ஒரு ஊசி முனை அளவுகூட இடம் விடாமல் அவள் முகம் முழுவதும் முத்தத்தால் கவிதை எழுதியவன், அவள் கழுத்து வளைவில் முகம் புதைக்க, அவளின் மூச்சு காற்றின் வெப்பம் அக்னியின் அடர்ந்த தேசத்தை வருடிச்செல்ல, அவள் விரல்கள் அவன் முடியை இறுக்கிப் பற்றி, தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டது.
தன்னைப் போல் அவளும் உணர்ச்சியின் பிடியில் கட்டுண்டு கிடக்கிறாள் என்று உணர்ந்த அக்னி, நிமிர்த்து அவள் காதோரம், "ஐ லவ் யூ தியா… இது… இது உனக்கு ஓகே தானா?" என்று கிசுகிசுப்பான குரலில் கேட்க,
சட்டென்று கண்விழித்த ஆராத்யாவுக்கு அப்போது தான் என்ன செய்துக்கொண்டு இருக்கிறோம்? என்ற உணர்வே வந்தது. வேகமாக அவனைப் பிடித்து தள்ளிவிட்டு எழுந்தவள், விலகி இருந்த தன் புடவை முந்தானையை எடுத்து தன் மார்போடு அணைத்துக் கொண்டு அழுதபடியே அந்த அறையில் இருந்து வெளியேறி விட,
அவள் தள்ளிவிட்டு சென்றதில், சட்டென உணர்வுகள் அறுபட்ட நிலையில் எதையும் யோசிக்க முடியாமல் கொஞ்ச நேரம் அப்படியே அமர்ந்திருந்த அக்னிக்கு சில நிமிடங்கள் கழித்தே இயல்புநிலை திரும்ப, தன்னைத் தானே தலையில் அடித்துக் கொண்டான்.
"என்ன காரியம் செஞ்சிட்ட அக்னி நீ? ஏற்கனவே குழப்பத்தில் இருக்க பொண்ணுகிட்ட இப்டி நடந்துக்க உன்னால எப்படிடா முடிஞ்சிது? ச்சீ… இவ்ளோதான் உன்னோட செல்ஃப் கண்ட்ரோல்லா? டாமிட்… அடிபட்ட உனக்கு உதவி செய்ய வந்தவளை போய் நீ… ச்சீ" என்று சுவரில் வேகமாக ஓங்கி குத்திய அக்னிக்கு, உள்ளுக்குள் சட்டென பயம் பரவியது.
"அய்யோ… எனக்கே இப்டி இருந்தா, அப்ப அவ இந்த சிட்டுவேஷன் எப்டி ஹேண்டில் பண்ணுவா? ஷிட்…" என்று கத்தியவன் அவள் அறையை நோக்கி ஓட, அங்கு அந்த அறைக்கதவு திறந்தே இருந்தது. அவன் உள்ளே சென்று பார்க்க அங்கு அவள் இல்லை… வீடு முழுவதும் தேடி அவள் எங்கும் இல்லாமல் போக, அக்னிக்கு உள்ளுக்குள் பயம் கவ்விக்கொண்டது.
"எங்கடி போன?" என்று வாய்விட்டு புலம்பியவனுக்கு கண்டிப்பாக அவள் வீட்டுக்கு வெளியே சென்றிருக்க வாய்ப்பில்லை என்று புரிய, அடுத்த நொடி அவன் கால்கள் மொட்டை மாடிக்கு விரைந்தது. மேலே சென்றவன், அங்கு கண்ட காட்சியில் உயிர் ஒடுங்கி நின்றான்.
மாடியின் மதில் சுவரின் மேல் குதிக்க தயாராக நின்றவளை பார்த்து ஒரு நிமிடம் உறைந்து நின்றவன், சட்டென சுதாரித்து, "தியா" என்று அலறியபடி அவளை நெருங்கி அவள் கையை பிடிக்கவும், அவள் குதிக்கவும் சரியாக இருந்தது.
கீழே குதித்தவளின் கையை அக்னி பிடித்திருக்க, அவள் மாடியின் தடுப்புச்சுவருக்கு அந்தப்பக்கம் தொங்கிக் கொண்டு இருந்தாள்.
"தியா கையை கெட்டியா புடிச்சிக்கோ" என்று இவன் உயிரைப் பிடித்துக் கொண்டு கத்த, "நான் சாகணும்… என் கையை விடு தேவ்" என்று அவள் உயிரைவிடும் முடிவோடு கத்தினாள்.
"அய்யோ…ப்ளீஸ் தியா… நான் செஞ்சது தப்பு தான்… ஏதோ ஒரு எமோஷன்ல அப்டி நடந்துக்கிட்டேன். அதுக்கு நீ என்னை செருப்பால் கூட அடி டி நான் வாங்கிறேன்… தயவுசெய்து இந்த மாதிரி பண்ணாத… ப்ளீஸ் என் கையை கெட்டியா புடி" என்றவன் தன் முழு பலத்தையும் பிரயோகித்து அவளை மேலே தூக்கியவன் அவளை தன்னோடு சேர்த்து இறுக்கிக் கொள்ள, அவளோ அவனைத் தள்ளிவிட்டு மீண்டும் அங்கிருந்து குதிக்கப் பார்த்தாள்.
அவன் எவ்வளவு தடுத்தும் மீண்டும் மீண்டும் அவள் தற்கொலை செய்ய முயல, பொறுத்து பார்த்த அக்னி, "பளார்" என்று அவள் கன்னத்தில் ஒரு அறை விட்டவன், அவளை அப்படியே தோளில் தூக்கிப் போட்டுக்கொண்டு கீழே வந்தான்.
"ஏன் டா என்னை இப்டி சித்திரவதை பண்ற? என்னை நிம்மதியா சாகவாது விடுடா… இனிமே நான் உயிரோட இருக்க கூடாது… நான் சாகனும்… என் மாமாக்கு நான் துரோகம் பண்ணிடேன். நானெல்லாம் உயிரோட இருக்கவே கூடாது…"என்று முகத்தில் அடித்துக்கொண்டு அழுதவளை இமைக்காமல் பார்த்த அக்னி முகத்தில் அத்தனை அழுத்தம்.
"அப்ப நான் உன்னை தொட்டதுக்காக தான் நீ தற்கொலை செய்ய பாத்தியா? நான் தொட்டதாலயா நீ சாகப்போன?" என்று கேட்டவன் குரல் கரகரக்க, அவனை விருட்டென்று நிமிர்ந்து பார்த்த ஆரா,
"நீ தொட்டதுக்காக இல்ல… நீ தொடும் போது நான் அமைதியா இருந்தேனே அதுக்காக… நீ தொட்டதும் உருகி குழைந்தேனே அதுக்காக… நீ உனக்கு ஓகே வான்னு கேக்கும் வரை உன்னோட படுத்துக் கிடந்தேனே, ஒருவேளை நீ அமைதியா இருந்திருந்தால் கண்டிப்பாக நமக்குள்ள அதுக்கு மேலையும் எல்லாம் நடந்திருக்கும்…" என்றவளுக்கு, 'எப்படி அந்த அளவுக்கு தன்னை மறந்து… தன் நிலை மறந்து.. அக்னியின் தொடுதலில் மயங்கி, தன்னையே கொடுக்கும் அளவு துணிந்தோம்?' என்று அவளுக்கும் விளங்கவில்லை.
அவள் பேசியதைக் கேட்டு அவளை அடிபட்ட பார்வை பார்த்த அக்னி, "அப்ப நீ சாகப்போனக்கு நான் தான் காரணம் இல்ல தியா…" என்று கேட்க, "இல்ல… நீ காரணம் இல்ல… இன்னொருத்தன் பொண்டாட்டியா இருந்துட்டு, உன்னை என்னை நெருங்க விட்ட, நான் தான் என் சாவுக்கு காரணம்.." என்று கத்தியவள் அங்கிருந்த சுவரில் தலையை வேக வேகமாக மோதியவள் கைப்பிடித்து, தூர இழுத்த அடுத்த நொடி மீண்டும் அவள் கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விழுந்தது. ஆனால் இந்த முறை அவளை அடித்தது அக்னி அல்ல ஷிவானி.