விழி வழி காதல் நுழைந்ததடி 24

விழி 24



ஒரு நிமிடம் உயிர் வரை பதறிய ஆதர்ஷன், கணநேரத்தில் தன்னைச் சுதாரித்துக் கொண்டு "தன்வி…" என்று கத்திக்கொண்டே அவளை நோக்கி ஓடியவன், அவள் குதிக்கும் முன் அவளது கையைப் பிடித்து இழுத்துத் தன் நெஞ்சோடு அணைத்தான். அடுத்த நொடி அவளைத் தன்னில் இருந்து விலக்கி கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விட, அவனது ஐந்து விரல்களும் அவளது பட்டுக் கன்னத்தில் பதிந்திருந்தது.


"ஏன்டி இப்படிப் பண்ண? சொல்லுடி, எதுக்கு இப்படி ஒரு முடிவெடுத்த? ஒரு செகண்ட் நான் லேட்டா வந்திருந்தா என்னாகி இருக்கும்? நெனச்சுப் பார்க்கவே எனக்குப் பதறுதுடி…" என்று அவள் தோள்களைப் பிடித்து உலுக்கியபடி, அடிநெஞ்சில் இருந்து கோபத்தில் கத்தியவனுக்கு, அவள் இல்லாத ஒரு வாழ்க்கையைக் கற்பனை செய்து பார்க்கக் கூட பயமாக இருந்தது. 


அவன் கோபத்திலும் பயத்திலும் கத்திக் கொண்டு இருக்க, தன்வியோ முகத்தைத் தன் கைகளால் மூடிக்கொண்டு கதறி அழுதபடி அப்படியே முட்டி போட்டுத் தரையில் அமர,


அவளது நிலை கண்டு அவளவனுக்கும் கண்களில் நீர்த் துளிகள் துளிர்க்க, அவளைத் தூக்கி நிறுத்தியவன், அவள் தலையைப் பிடித்து இழுத்துத் தன் நெஞ்சோடு சாய்த்துக்கொண்டு, தலையை மெதுவாக வருடிக் கொண்டே, "என்னடா? என்ன நடந்தது? எதுக்கு இப்படி ஒரு காரியத்தைச் செய்யப் பார்த்த? ஒரு நிமிஷம் என்னைப் பத்தி யோசிச்சியா நீ? நீ இல்லாமப் போனா நான் என்ன ஆவேன்னு ஒரு செகண்ட் கூட நீ யோசிக்கவே இல்லயாடி" என்றவனின் குரல் கரகரக்க, தன் இரு கரங்களால் அவன் இடுப்பைச் சுற்றிக் கட்டிக் கொண்டவள், "எனக்குத் தெரியாது தஷ். சத்தியமா என்ன நடந்ததுன்னு எனக்குத் தெரியாது… யா..யார்னு எனக்கு நிஜமாத் தெரியாது தஷ்" என்றவள் தேம்பித் தேம்பி அழ, ஆதர்ஷனுக்குத் தலையும் புரியவில்லை, வாலும் புரியவில்லை.


"நீ சொல்றது எனக்குப் புரியல தன்வி, என்னாச்சு?  யாரு யார்னு தெரியல?" என்று கேட்க, மேலும் அவனைத் தன்னோடு இறுக்கிக் கொண்டவள், "நான் உங்களுக்குத் துரோகம் பண்ணிட்டேன் தஷ்… எனக்கே தெரியாம தப்பு நடந்திருக்கு… நான் உங்களுக்குத் துரோகம் பண்ணிட்டேன்" என்று மீண்டும் மீண்டும் அதையே சொன்னவள், "நான் இருக்கக் கூடாது… எனக்கு வாழப் புடிக்கல, என் தஷ்க்கு நான் துரோகம் பண்ணிட்டேன். நான் சாகனும்…" என்றவள் மீண்டும் பால்கனியில் இருந்து குதிக்கப் பார்க்க, அவளை வேகமாகப் பிடித்திழுத்து மெத்தையில் தள்ளினான் ஆதர்ஷ்.


"ஏய் லூசு, முதல்ல என்ன நடந்துச்சின்னு சொல்லித் தொலடி… எதையும் சொல்லாம இப்படிச் சாகப் போறேன்… சாகப் போறேன்னு சொன்னா நான் என்னடி பண்றது? சொல்லுடி என்னாச்சு?" என்று கோவத்தின் உச்சத்தில் அவன் வார்த்தைகள் அனலாக வந்து விழ, அவனது முகத்தை நிமிர்ந்து பார்க்க முடியாது தலைகுனிந்து இருந்த தன்வி தயங்கித் தயங்கி, "டா…டாக்டர் ஆன்ட்டி வந்தாங்க… அவ…அவங்க, நா…நான் பிரெக்னென்டா இருக்கேன்னு சொல்லிட்டாங்க" என்றவள் சொல்ல வந்ததை முழுதாகச் சொல்ல முடியாது வாயை மூடிக்கொண்டு கதற, ஆதர்ஷனுக்கு அவள் என்ன சொன்னாள் என்று கிரகிக்கவே சில நொடிகள் எடுத்தது.


அப்போது தான் அவன் வீட்டுக்குள் நுழையும் போது அவர்கள் குடும்ப டாக்டரின் கார் வீட்டில் இருந்து வெளியேறியது அவனுக்கு நினைவு வந்தது. 


உடனே அவள் முன் மண்டியிட்டு அமர்ந்து கண்கள் மின்ன அவளது முகத்தையே பார்த்தவன், "நீ… நீ உண்மையாவா சொல்ற தன்வி? அப்…அப்ப  நீ பிரெக்னென்டா இருக்கியா?" என்று ஆர்வமாகக் கேட்க, அவள் இருந்த நிலையில் அவனின் ஆர்வமும், ஆசையும் அவள் கருத்தில் பதியாமல் போக, ஆமாம் என்று தலையாட்டியவள், 


"சத்தியமாச் சொல்றேன் தஷ்… இ…இது எப்படின்னு எனக்கே தெரியல. நான் மனசால உங்களுக்கு எந்தத் துரோகமும் பண்ணல தஷ். இந்த மனசும், உடம்பும் உங்க ஒருத்தருக்கு மட்டும் தான் சொந்தம். ஆ…ஆனா எனக்கே தெரியாம" என்றவள் மீண்டும் கதற, அப்போது தான் அவள் சொன்னதின் அர்த்தமே ஆதர்ஷனுக்குப் புரிந்தது.


"ஷிட்" என்று தலையில் அடித்துக் கொண்டவன், "அன்னைக்கே எல்லா உண்மைகளையும் சொல்லி இருக்கணும். நான் பண்ண தப்பு இப்ப உன் உயிருக்கே ஆபத்தா வந்திடுச்சு" என்று முணுமுணுத்தவன், திரும்பி தன்வியைப் பார்க்க அவள் இன்னமும் அழுது கொண்டு இருந்தாள்.


இழுத்து மூச்செடுத்த ஆதர்ஷ், அவள் முகத்தில் இருந்த கைகளை விலக்கியவன், "நீ எந்தத் துரோகமும் பண்ணல தன்வி… உன்னால யாருக்கும் துரோகம் செய்யவும் முடியாது. யூ ஆர் அன் ஏஞ்சல்டி" என்றவனைக் கலங்கிய விழிகளோடு பார்த்தவள், "இல்ல தஷ், நான் ஏஞ்சல் இல்ல… நான் எனக்கே தெரியாமத் தவறிட்டேன், நான் வேணாம் உங்களுக்கு…" என்றவள் வலியோடு குனிந்து தன் வயிற்றைத் தொட்டுக் காட்டி, "என்னோட வயித்துல இருக்க இந்தப் பாப்பா யாருதுன்னு கூட எனக்குத் தெரியல, தஷ்.‌.." என்று சொல்ல ஆதர்ஷனுக்கோ செருப்பால் அடி வாங்கிய உணர்வு.


மெல்லத் தன் கரத்தை எடுத்து அவள் வயிற்றின் மேல் இருந்த கரத்தின் மீது வைத்து அழுத்தியவன் கலங்கிய குரலில், " இ…இது நம்ம குழந்தை தன்வி… எ…என் குழந்தை… நம்ம ரெண்டு பேர் காதலுக்குக் கிடைச்ச கிஃப்ட்டுடி இது" என்று உடைந்த குரலில் சொல்ல, தன்வி சட்டென அவனை ஏறிட்டுப் பார்த்தவள் கண்களில் அவன் சொன்னதைக் கொஞ்சமும் நம்பவில்லை என்பது அப்பட்டமாக அவனுக்குத் தெரிந்தது.


"நீங்க பொய் சொல்றீங்கன்னு எனக்குத் தெரியும். நான் சாகக் கூடாதுன்னு நீங்க பொய் சொல்றீங்க" என்றவளுக்கு என்ன சொல்லித் தன்னைப் புரிய வைப்பது என்று தவித்தான் அவள் கணவன்.


"இல்லடி… நான் பொய் சொல்லல, இது நம்ம குழந்தைடி, என் குழந்தை" என்று பாவமாகச் சொல்ல, அவள் மறுப்பாகத் தலையாட்ட, "ப்ச்ச்! என்னை நம்புடி, நம்ம பீச் ரெசார்ட் போயிருந்த அன்னைக்கு நீ நைட் தண்ணி போட்டுக் கலாட்டா பண்ண, ஞாபகம் இருக்கா? அன்னைக்கு தான் நமக்குள்ள" என்று தயங்கியவன், "அன்னைக்கு நான் கன்ட்ரோல்ல தான்டி இருந்தேன். நீ உனக்கு என் மேல இருக்கற காதலைச் சொன்ன அப்புறம் எனக்கு அப்படியே வானத்தில் பறக்குற மாதிரி இருந்துச்சுடி… அப்படியே உன்னைக் கட்டிப் புடிச்சி, நீ போதும் போதும்னு சொல்ற வரை என் காதலை என்னோட முத்தத்தால் உனக்குச் சொல்லனும்… காத்து கூட நுழையாதபடி அப்படியே உன்னை இறுக்கிக் கட்டிப் புடிச்சிக்கனும், இன்னும் என்னென்னமோ பண்ணனும்னு என்னோட ஒவ்வொரு நரம்பும் துடிச்சிது தெரியுமா? ஆனா, போதையில் இருக்கற உன்கிட்ட அத்து மீறக் கூடாதுன்னு என்னை ரொம்பக் கன்ட்ரோல் பண்ணிக்கிட்டேன்." என்றவன் நிமிர்ந்து அவளை ரசனையாகப் பார்த்தவன், "ஆனா, நீ விட்டா தானே, நான் செய்ய நினைச்சது எல்லாத்தையும் நீயே செஞ்சிட்ட, ஒரு ஸ்டேஜ்க்கு மேல என்னால என்னோட பீலிங்ஸைக் கன்ட்ரோல் பண்ண முடியாம" என்று தலை குனிந்தவன், " மார்னிங் நீ முழிச்சதும் எல்லாத்தையும் உன்கிட்டச் சொல்லிட்டு மன்னிப்புக் கேக்க தான் நினைச்சேன்… அப்ப தான்,  நீ பேசினதை வச்சு முந்தின நாள் நடந்த எதுவும் உனக்கு நினைவு இல்லைன்னு எனக்குப் புரிஞ்சிது. அது தெரிஞ்ச செகண்ட் எனக்கு ரொம்ப கில்டி ஆகிடுச்சுடி… சரின்னு  நடந்ததைச் சொல்ல வந்த நேரம்" என்றவன் கண்களை அழுத்தி மூடித் திறந்து, "என்னை நம்புடி… நான் அன்னைக்கே நடந்ததைச் சொல்லி இருக்கணும், சொல்லாதது என்னோட தப்பு தான்…" என்றவன் அவள் வயிற்றில் கை வைத்து, "இது என் குழந்தை தன்வி" என்று கலங்கிய குரலில் சொல்ல, தன்வியின் முகத்தில் குழப்பம்.


அன்று நடந்தது அவளுக்கு நினைவில்லாமல் போனாலும் அன்றைய நாள் காலை அவள் உடல் வெகு சோர்வாக ஏதோ போல் இருந்ததை அவள் உணர்ந்து தான் இருந்தாள். ஆனால், அப்போது அது குடித்ததால் ஏற்பட்ட அசதி என்று நினைத்தவளுக்கு இப்போது அதற்கான காரணம் புரிந்தாலும் அதை நம்பத்தான் அவளால் முடியவில்லை.


"நீ…நீங்க உண்மையா தான் சொல்றீங்களா?" என்று கேட்டாள்.


அவன் ஆமாம் என்று தலையாட்ட அவளோ, "ஆனா..‌. இதெப்படி நடக்கும்? நீங்க… உங்களால தான் அது முடியாது இல்ல?" என்று தயங்கித் தயங்கிச் சொல்ல, முதலில் அவள் சொன்னதின் அர்த்தம் புரியாமல் விழித்த ஆதர்ஷனுக்கு, சில நொடிகள் கழித்தே அவள் சொன்னதின் பொருள் விளங்க, "ஏய்" என்று கர்ஜித்தான் ஆதர்ஷன்.


அவனது குரலின் மாற்றத்தில் பயந்து அதிர்ந்தவள், "நா…நான் உண்மையைத் தானே சொன்னேன். உ…உங்களுக்கு என் மேல பீலிங்ஸ் வரச் சான்ஸ் இல்லயே, உங்களுக்கு ஆலனைத் தானே பிடிக்கும்" என்றவளுக்கு அவள் நினைப்பதை முழுதாகச் சொல்லும் தைரியம் இல்லை.


"ஸ்டாப் இட் தன்வி! இன்னொரு முறை அந்த மாதிரிச் சொல்லாத… நான் தான் சொல்றேன் இல்ல, இது நம்ப குழந்தை! அவ்ளோதான்." என்று மீண்டும் கர்ஜித்தான்.


"இல்ல நீங்க பொய் சொல்றீங்க… நான் நம்ப மாட்டேன்" என்றவளை அழுத்தமாகப் பார்த்தவன், "ப்ரூவ் பண்ணா நம்புவியா?" என்று கேட்க, அவளோ, "என்ன? டி.என்.ஏ டெஸ்ட் (DNA) எடுக்கப் போறீங்களா?" என்று கோவமாகக் கேட்டாள்.


அவன் மெதுவாக இல்லை என்று இடவலமாகத் தலையாட்டி, "அதைவிட பெஸ்ட் வே (best way) ஒண்ணு இருக்குடி" என்றவன் அவள் சுதாரிக்கும் முன், அவளை இழுத்து அணைத்து அவள் இதழ்களைச் சிறை செய்தவன், அவளை முழுதாக ஆட்கொள்ளத் தொடங்கி இருந்தான். 


முதலில் அவனின் தீடிர் தாக்குதலில் பதறியவள், கொஞ்ச கொஞ்சமாக அவனிடம் விரும்பியே தஞ்சம் புகுந்தாள். அன்று போதையில் அவனுடன் கலந்தவள், இன்று சுயவுணர்வோடு, முழு மனதோடு தன்னவனிடம் தன்னை முழுதாக ஒப்படைத்தாள்.


என்னதான் அவள் சொன்னதில் கோவம் கொண்டு அவளுக்குத் தன்னை நிரூபிக்க நினைத்து அவன் அவளை ஆட்கொள்ளத் தொடங்கி இருந்தாலும், முதல் முறை இருந்த வேகம் இப்போது அவனிடம் சுத்தமாக இல்லை. கருவறையில் தன்னுயிரைச் சுமப்பவளை தேனீ பூவில் இருந்து தேனை எடுப்பது போல் மென்மையாகக் கையாண்டான் அந்தக் காதல் கள்வன்.


என்னதான் அவன் மென்மையைக் கையாள நினைத்தாலும் தன்னவளின் ஸ்பரிசத்தில் தன்னிலை இழந்தவன், காதல் தாண்டிக் காமத்தில் அடியெடுத்து வைக்க, எங்கு தன்னுள் இருக்கும் தன்னவன் உயிருக்கு வலித்து விடுமோ என்று அவள் தாயுள்ளம் தவிக்க, "தஷ், பாப்பா…" என்றாள் தவிப்போடு. 


அவளை இன்னும் தன்னோடு சேர்த்து இறுக்கிக் கொண்டவன், "குழந்தைக்கு ஒண்ணும் ஆகாதுடி" என்று அவள் காதில் கிசுகிசுத்தவன், அவளுக்கு முழுதாகத் தன் ஆண்மையின் வீரத்தைத் தெரிய வைத்த பிறகே அவளை விட்டு விலகிப் படுத்தான். 


அந்த அறை முழுவதும் அவர்கள் இருவரின் மூச்சுக் காற்றின் சத்தமே நிறைந்திருந்தது. அவளின் ஆடைகள் அனைத்தும் மூலைக்கு ஒன்றாகச் சிதறிக் கிடக்க, போர்வை கொண்டு தன் தேகத்தை மூடியிருந்தவள், கண்கள் இரண்டும் விட்டத்தை வெறித்தபடியே இருந்தது. 


மெல்லப் பக்கவாட்டில் திரும்பி கையில் தலையை ஊன்றியபடி அவளை ரசித்தபடி இருந்த ஆதர்ஷ், "என்னடி பொண்டாட்டி… இப்ப நம்புறியா என்னால முடியுமா? முடியாதான்னு? இப்பச் சொல்லுடி, இது என்னோட குழந்தைன்னு ஒத்துக்குறயா?" என்று குறும்பாகக் கேட்க, மெல்லக் கண்களை சிமிட்டியபடியே தன்னை ரசிக்கும் அந்த இரு கருவிழிகளையும் ஆழ்ந்து பார்த்தவள், "என்கிட்ட ஏதாவது சொல்லணுமா தஷ்?" என்று கேட்க, ஆதர்ஷ் முகத்தில் இருந்து குறும்பு ஸ்விட்ச் போட்டது போல் மறைந்து போனது.


மெல்ல அவள் தலையை வருடிக் கொடுத்தவன், அவள் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டுவிட்டு கட்டிலில் இருந்து எழுந்து, தன் ஆடைகளை எடுத்துக்கொண்டு குளியல் அறைக்குள் நுழையப் போனவன், "நாளை மறுநாள் ஃபிளைட்ல நீ, நான், தாத்தா மூணு பேரும் யூ.எஸ் போறோம். உன்னோட எல்லாக் கேள்விகளுக்கும் பதில் அங்க கிடைக்கும். வேண்டியதைப் பேக் பண்ணிடு. நான் டாக்டர் கிட்ட நீ டிராவல் பண்றது பத்திக் கேட்குறேன்" என்றவன் குளியலறைக்குள் சென்று விட, தன்விக்கு மனதில் ஏதோ ஒரு அழுத்தம். அவளுக்கு முழுதாக இல்லா விட்டாலும், ஏதோ புரிவது போல் இருந்தது. ஆதர்ஷ் தன்னிடம் வாங்கிய சத்தியத்தோடு இன்று நடந்த நிகழ்வு வேறு அவளை யோசிக்க வைத்தது. கண்களை மூடி ஆழ்ந்து மூச்செடுத்தவள், என்ன நடந்தாலும் அதைச் சமாளிக்கத் தன் மனதைச் சமநிலைப் படுத்திக்கொண்டாள். 


டாக்டர் அவள் பயணம் செய்வதில் எந்தவிதப் பிரச்சினையும் இல்லை. ஆனால் கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று மட்டும் அறிவுறுத்தி இருந்தார். 


அதனால் பயணத்தைத் தள்ளிப் போட விரும்பாமல் “இதற்கு மேல் உண்மையை மறைக்க முடியாது” என்று நடந்ததைத் தெளிவாக எடுத்துச் சொன்னவன், தாங்கள் மூவரும் அமெரிக்கா வரும் தகவலையும் தெரிவித்தான். 


இனித் தன் வாழ்க்கை தன்னவளின் முடிவில் தான் என்ற எண்ணத்துடன்  தன்வி, தாத்தாவுடன் தன் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் பாதையை நோக்கிப் புறப்பட்டான் ஆதர்ஷ்.