நிஜம் 25
நிஜம் 25
"என்னம்மா சொல்றீங்க நீங்க.? இதெல்லாம் த்வனிய உங்ககிட்ட சொன்ன?" என்று வருண் கேட்க,
"இல்ல வருண். இவளாது சொல்றதாது. அப்படி சொல்றவளா இருந்தால், இதோ இவன் இவளுக்கு செஞ்ச கொடுமைக்கெல்லாம், என்னைக்கே நடந்த உண்மைய இவன்கிட்ட சொல்லி இருப்பாளே… அப்டி செஞ்சிருந்த இவன் செத்திருப்பான். இவளும் நிம்மதியா இருந்திருப்பாளே. செஞ்சாளா இவ… இல்லயே..." என்று தன் மடியில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த த்வனியின் முகத்தை ஒரு நிமிடம் பார்த்து, இழுத்து மூச்சு விட்டு,
"லயா ஊரைவிட்டு போனாதை கேள்விப்பட்டப்பவே எனக்கு என்னமோ தப்பா தெரிஞ்சுது. ஏதோ பெரிய பிரச்சனை இருக்கும்ன்னு மனசுக்குள்ள ஒரு மணி அடிச்சிது. அப்ப விக்ரம் லயா பத்தி விசாரிச்சுட்டு இருந்தான். பட், லயா யூ.எஸ் போனான்றதை தவிர அவனுக்கு வேற ஒன்னும் தெரியால… சோ நான் அமெரிக்கால என்னோட பிஸ்னஸ் சர்க்கிள்ல விசாரிச்சேன். அதுலயும் எனக்கு எதுவும் பெருச தெரியல. அதனால் பிஸ்னஸ் விஷயம அமெரிக்கா போறேன்னு பொய் சொல்லிட்டு, நானே அங்க போய் விசாரிச்சேன். அப்ப தான்" என்றவர் கண்களில் கண்ணீர் பெருகியது.
"அம்மா ப்ளீஸ் அழதீங்க… ப்ளீஸ்" என்று வருண் அவர் கண்களை துடைத்துவிட, அவர் பெற்ற பிள்ளையே பிரம்மை பிடித்தவன் போல், அங்கு மாட்டி இருந்த லயா புகைப்படத்தையே வெறித்து பார்த்துக்கொண்டிருந்தான்.
"லயா பத்திய உண்மை தெரிஞ்ச அந்த நிமிஷம் நான் சுக்குநூறா ஒடஞ்சுட்டேன் ஆஷா. என் பையனுக்குன்னு இந்த உலகத்தில் இருந்த கடைசி வாழ்வாதாரத்தையும் அந்த கடவுள் பாதியில் பறிச்சிக்டானேன்னு கதறி அழுதேன். அந்த நிமிஷம் என் உயிர் போய்ட கூடாதன்னு இருந்துமா எனக்கு. அதுவும் லயா இறந்த பிறகு, விக்ரமுக்கு எதுவும் ஆகிட கூடாதுனு, அவ செஞ்சு வச்சிருந்த எல்லாத்தையும் கேட்ட பிறகு" என்றவர் வாய்விட்டு அழுதார்.
"இப்படி ஒரு பொண்ணு என் வீட்டுக்கு மறுமகள வர்ர பாக்கியத்தை அந்த கடவுள் எனக்கு குடுக்கலயே" என்று லயா கையை பிடித்து கொண்டு கதறிய சௌந்தர்யாவை பார்த்து லயாவும் அழுக ஆரம்பித்தாள்.
"ஆன்ட்டி ப்ளீஸ் அழதீங்க… நீங்க அழறதை பாத்து லயாவும் அழறா… அது அவ உடம்புக்கு நல்லது இல்ல. ப்ளீஸ் கண்ட்ரோல் யுவர் செஃப். ரெண்டு பேரும் அழுகுறதை நிறுத்துங்க" என்று த்வனி அதட்ட இருவரும் கண்களை துடைத்துக்கொண்டனர்.
லயா தன் இறுதி நாட்களில் இருந்த சமயம். இனி அவளை காப்பாற்ற முடியாது என்று தெரிந்துவிட, அனைவரும் நொறுங்கி போயினர்.
"த்வனி நான் ஒன்னு சொன்ன செய்வீயா…?" என்றவள் சற்று நிறுத்தி, " நான் சொல்றதை செஞ்சு தா" என்று கேட்டாள்.
கலங்கிய விழிகளுடன் "என்னடி வேணும்?" என்று கேட்டாள் த்வனி.
"எனக்கு வீட்டுக்கு போகணும்" என்று அழுத்தமாக சொல்ல, அதில் வீட்டுக்கு போயே ஆகணும் என்ற உறுதி தெரிந்தது.
"ம்ம்ம் சரி, போலாம்" என்ற த்வனியின் கையை பிடித்து, அவள் கண்களை பார்த்து, "நான் சொன்ன வீடு உன் வீடு த்வனி. உன்னோட கிராமத்து வீடு. உங்க அம்மா, அப்பாவோட நீ சந்தோஷமா வாழ்ந்த வீடு. நீயும் நானும் ஒவ்வொரு லிவுக்கும் போய் ஓடி விளையாடின வீட்டுக்கு போகணும். என்னை கூட்டிட்டு போ" என்று சொல்ல, த்வனி அவளை ஒரு நிமிடம் ஆழமாக பார்த்தவள், "போலாம்" என்ற அவள் ஒரு வார்த்தையில் லயா நிம்மதி கொண்டாள்.
கதிர் உட்பட அனைவரும் தடுத்த போதும், த்வனி அதையெல்லாம் காதில் வாங்காமல் லயாவை வெகு பாதுகாப்பாக தனி விமானத்தில் இந்தியா அழைத்து வந்து தன் கிராமத்து வீட்டு கூட்டி வந்துவிட்டாள். இதில் த்வனிக்கு அதிகம் உதவியது சௌந்தர்யா தான்.
லயா தன் தாய், தந்தையை அவர்கள் வீட்டுக்கு கட்டயப்படுத்தி அனுப்பி வைத்தாள். அவர்கள் அங்கு சென்றால், விக்ரம் கண்டிப்பாக வீட்டுக்கு வந்து தன்னை பற்றி விசாரிப்பான் என்று தெரிந்து, அப்படி அவன் வந்து கேட்டால், தனக்கு கதிருடன் திருமணம் முடிந்துவிட்டது என்றும், அதை அவனை நம்ப வைக்க, லயாவின் யூ.எஸ் ஃபோன் நம்பரையும் கொடுக்க சொல்லி இருந்தாள் லயா. அவள் சொன்னதை அவள் தந்தை அப்படியே செய்ய, விக்ரம் லயாவுக்கு தொடர்பு கொள்ள, ஏற்கனவே திட்டமிட்டபடி விக்ரமிடம் தனக்கு கல்யாணம் ஆகிவிட்டது, இனி என் வாழ்க்கையில் வராதே என்று சொன்னவள், அவளும் கதிரும் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படங்களை விக்ரமுக்கு அனுப்பி வைத்தாள். விக்ரம் எப்போதாவது லயா நம்பருக்கு தொடர்பு கொண்டால், அவள் குரல் கேட்கும் படி, ஆன்சரிங் மெஷினில் தன் குரலை பதிவு செய்து வைத்தாள் லயா. இது அத்தனையும் சௌந்தர்யா கண்முன் தான் நடந்தேறியது.
லயா கட்டிலில் படுத்திருக்க, த்வனி அவள் தலையை மெதுவாக வருடிக்கொண்டு இருந்தாள்.
"த்வனி"
"ம்ம்ம் சொல்லு லயா" என்று த்வனி லயா முகம் பார்க்க,
"எனக்கு ஒரு சத்தியம் வேணும்" என்ற லயாவை விழி உயரத்தி பார்த்தாள் த்வனி.
"என்ன?" என்று கேட்க,
"இனி நான் பொழைக்க மாட்டேன். இனிமே எனக்கு தேவை எல்லாம் நிம்மதியான மரணம் மட்டும் தான்" என்ற லயாவை முறைத்த த்வனி,
"இப்ப எதுக்கு இப்படி பேசிட்டு இருக்க நீ. பேசாம அமைதிய தூங்கு.?"
"இல்ல த்வனி, என்கிட்ட டைம் ரொம்ப கம்மிய இருக்கு, நான் எல்லாத்தையும் சீக்கிரம் சொல்லணும்" என்று பிடிவாதம் பிடிக்க,
"சரி சொல்லு… என்ன சத்தியம்" என்றவள் முன், லயா தன் கையை நீட்ட, த்வனி அவளை முறைத்தபடியே அவள் கையின் மேல் தன் கையை வைக்க, லயா சின்னதாக சிரித்தவள்,
"நீ கல்யாணம் செஞ்சுக்கணும் த்வனி. இது நீ உயிர நினைக்கும் உன் லயா மேல சத்தியம்" என்று சொல்ல, த்வனி லயாவை வேதனையோடு பார்த்தவள், தலையை இடவலமாக ஆட்டினாள்.
"ஐ நோ த்வனி. உனக்கு காதல் கல்யாணம் இதெல்லாம் புடிக்காதுனு எனக்கு நல்லா தெரியும். இருந்தாலும் நீ எனக்காக கல்யாணம் செஞ்சு தான் ஆகணும்." என்று சற்று இடைவெளி விட்டு, "இது கூட உனக்காக இல்ல த்வனி. இதுவும் எனக்காக தான். நீ என் சொல் போச்சு கேட்டு கல்யாணம் செஞ்ச நான் உனக்காக ஒன்னு செய்வேன்" என்ற லயாவை த்வனி புரியாமல் பார்த்தாள்.
"என்னன்னு பாக்குறிய?" என்றவள் த்வனி வயிற்றில் கைவைத்து, "நான் செத்தப் பிறகு என்னோட த்வனி வயித்துல வந்து புள்ளைய பொறப்பேன். இது நான் உனக்கு பண்ற சத்தியம்" என்ற லயாவை கட்டிக்கொண்டு த்வனி கதற… இதை பார்த்துக்கொண்டிருந்த சௌந்தர்யாவுக்கு நெஞ்சமெல்லாம் வலித்தது.
"சொல்லு த்வனி நீ எனக்கு அம்மாவ இருப்ப தானா? எனக்கு உன்னை விட்டு இருக்க முடியாதுடி. நான் உனக்கு குழந்தைய பிறந்து, உன் மடியில் தவழணும், நீ என்னை குளிப்பாட்டணும். நான் உன் இடுப்புல உக்காந்துக்கணும், நீ எனக்கு சோறு ஊட்டி விடணும். ட்ரஸ் போட்டு விடணும், தலைவாரி விடணும், எனக்கு ஹோம்வெர்க் செஞ்சு தரணும். நான் உன் கூடவே உன் புள்ளைய இருக்கணும் த்வனி." என்ற லயாவை கட்டிபிடித்தபடியே, த்வனி தலையை மேலும் கீழும் ஆட்டி சம்மதம் சொல்ல, லயா மென்மையாக சிரித்தவள்,
"இன்னும் ஒன்னு" என்று ஆரம்பிக்க, த்வனி நிமிர்ந்து லயா முகம் பார்த்து "என்ன?" என்று கேட்ட, லயா இடவலமாக தலையாட்டி,
'நான் சொன்ன நீ செய்வனு எனக்கு தெரியும்டி. ஆனா, அது உன்னையும், உன் உணர்வையும் நான் கொல்றதுக்கு சம்ம. அதை கேட்டு என் த்வனிய நான் கஷ்டப்பட்டுத்த மாட்டேன். எனக்கு நெனவு தெரிஞ்சு, நான் யாருக்கும் எந்த தப்பும் செஞ்சது இல்ல. அது உண்மைய இருந்த அந்த கடவுள், நான் நெனச்சதை நிறைவேத்தி வைக்கட்டும்' என்று மனதில் நினைத்தவள், த்வனி கன்னத்தில் முத்தமிட்டு, தன் கன்னத்தில் விரல் வைத்து, "எனக்கு" என்று குழந்தை போல் கேட்க, த்வனி சிரித்தபடி லயா கன்னத்தில் இதழ் பதிக்க, அதுவே அவர்களின் கடைசி முத்தமாகி போனது. த்வனியை அணைத்தபடியே லயா உயிர் இந்த உலகத்தில் இருந்து பிரிந்திருந்தது.
அந்த வீட்டோ புயல் அடித்து ஓய்ந்தது போல் அமைதியாக இருந்தது. அங்கிருந்த அனைவரின் பார்வையும் ஒரு மிரட்சியோடு, உறங்கும் த்வனி மீது பதிந்திருந்தது.
எங்களுக்கு நல்லா தெரியும், லயா கல்யாணம் பத்தி தெரிஞ்ச, அதோட முழுக்கோவமும், விக்ரம்கு த்வனி மேல தான் திரும்பும்னு. அப்டி எதுவும் நடந்து, ஒரு சந்தர்ப்பத்தில் த்வனி எங்க தன்னையும் மீறி உண்மைய சொல்லிடுவாளோன்னு பயந்து தான், அவ ஊரைவிட்டு போனா, லயா எக்காரணம் கொண்டும் விக்ரம்கு தன்னை பத்தி தெரியக்கூடாதுனு த்வனிகிட்ட சத்தியம் வாங்கி இருந்தா… அதுக்கு தான் த்வனி விக்ரம் கண்ணுல படாமல் எங்கயோ போய்ட்ட. ஆனா, விட்டானா இவன் தேடி புடிச்சு இவளை கல்யாணம் பண்ணி, இப்ப கடைசில நானே எல்லாத்தையும் சொல்ற மாதிரி வச்சிட்டான்"
"அப்ப அன்னைக்கு நாங்க கதிர்கு ஃபோன் பண்ணும்போது எங்ககிட்ட பேசின பொண்ணு யாரு ஆன்ட்டி?" என்று ஷாலினி கேட்டாள்.
"அது லயாவோட சித்தப்பா பொண்ணு லாவண்யா. அவளை தான் கதிர் கல்யாணம் பண்ணிட்டு இருக்கான். அந்த கல்யாணத்தை செஞ்சு வச்சதும் இவ தான். பிடிவாதம் புடிச்சு, கதிருக்கு அந்த பொண்ணை கல்யாணம் செஞ்சு வச்சா… லாவண்யாக்கு த்வனிய ரொம்ப புடிக்கும். அவளுக்கு நடந்தது எல்லாம் தெரியும். அவங்களை பாக்க தான், இவ வருஷ வருஷம் யூ.எஸ் போற"
அனைத்தையும் சொல்லி முடித்த சௌந்தர்யா நிமிர்ந்து மகனை பார்க்க அங்கு விக்ரம் இன்னமும் சிலையாக அமர்ந்திருந்தான். ஆனா, இப்போது அவன் பார்வை முழுதும் த்வனி மேல் திரும்பி இருந்தது.
"ஆஷா இவ ரொம்ப நேரமா இப்டி சோஃபால குறுகிப் படுத்துட்டு இருக்க, அது வயித்துல இருக்க புள்ளைக்கு நல்லது இல்ல. ஏற்கனவே காலையில் இவ மயங்கி விழுந்துட்டா.. டாக்டர் வேற இவ ரொம்ப வீக்கா இருக்க, ரொம்ப கேர் ஃபுல்ல இவளை பாத்துக்கணும்னு சொல்லி இருக்காங்க. இவ கொஞ்சம் ஸ்ட்ரெஸ் ஆனாலும் குழந்தை அபார்ட் ஆக வாய்ப்பிருக்குன் வேற பயமுறுத்துறாங்க, இந்த நேரம் பாத்து இவன் இங்க வந்து பிரச்சனை பண்ணி, இவ்வளவு நடந்து போச்சு, பாவம் இவ… இவளும் என்னனென்ன கஷ்டத்தை தான் தாங்குவ" என்று சௌந்தர்யா மறுமகளுக்காக வருந்தினார்.
"ஆஷா ஒரு கை புடிம்மா, இவளை பெட்ரூமில் படுக்க வச்சிடலாம்." என்க.
"அம்மா இருங்க" என்ற வருண் தூங்கிக்கொண்டிருந்த தவ்னியை, அவள் தூக்கம் கலயாதபடி மெதுவாக தன் கைகளில் தூக்கிக்கொண்டு போய் அவள் அறையில் படுக்க வைத்து, ஒரு நிமிடம் உறங்கும் த்வனி முகத்தையே அழுத்தமாக பார்த்தான்.
"இனிமே எப்பவும் உனக்கு ஒரு நல்லா அண்ணான நான் உன் கூடவே இருப்பேம்மா. உனக்கு எந்த பிரச்சனை வந்ததாலும் உனக்கு துணைய இந்த அண்ணன் இருக்கான்ற நிம்மதியோட தூங்கு" என்றவன் த்வனி நெற்றியில் வருடி, கலங்கமில்லாத அன்பை அவள் நெற்றியில் முத்தமாக பதித்து தன் அண்ணன் ஸ்தானத்தை உறுதி படுத்திக்கொண்டான்.
வருண் திரும்பி நடக்க, அங்கு கைகளை கட்டிக்கொண்டு கதவில் சாய்ந்தபடி வருணையே பார்த்துக்கொண்டிருந்தாள் ஷாலினி.
வருண் அவளை கடக்கும்போது, "இப்பவாது நம்புறீங்கள மிஸ்டர். வருண். என் ஃப்ரண்ஸ் ரொம்ப நல்லவன்னு" என்று அவன் அன்று ஹாஸ்பிடலில் த்வனியை தவறாக பேசியதை நினைவுபடுத்தி கேட்க, வருண் திரும்பி உறங்கும் த்வனியை பார்த்து, "அவளை பத்தி பேச கூட ஒரு தகுதி வேணும். எனக்கு அந்த தகுதி இல்ல ஷாலு" என்றவன் சௌந்தர்யாவின் "வருண்" என்ற சத்தத்தில் ஹாலுக்கு ஓடினான். அவன் பின்னே ஷாலினியும்.
"வருண் விக்ரமை காணும் வருண். எனக்கு பயமா இருக்கு வருண்" என்று சௌந்தர்யா கதற, வருணும் மற்றவரும் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து நின்றனர்.
வருண், சௌந்தர்யா, ஜெகன் ஒரு பக்கம் விக்ரமை தேடித் திரிய… ஷாலினி, ஆருஷி ஒரு பக்கம் அவனை தேடி அலைந்தனர்.
பத்து நாட்களாகியும் விக்ரம் பற்றி எந்த தகவலும் இல்லாமல் போக, சௌந்தர்யா நெஞ்சைப் பிடித்து கொண்டு கதறினார்.
"கடைசில என் புள்ளைக்கு நானே எமனாகிட்டேனே… உண்மைய சொல்லி அவனை நானே கொன்னுட்டேனே" என்ற கதற,
"அவனுக்கு ஒன்னும் ஆகாது" என்று அழுத்தமாக வந்த த்வனியின் வார்த்தையில் சௌந்தர்யா அவளை நிமிர்ந்து பார்க்க, "உங்க புள்ளைக்கு ஒன்னு ஆகி இருக்காது. அவன் வந்துடுவான்." என்ற த்வனி அவள் அறைக்கு செல்ல,
"த்வனி வாக்கு பளிச்சு விக்ரமுக்கு ஒன்னும் ஆகாம இருக்கணும்" என்று அனைவரும் வேண்டிக்கொள்ள, வருண் ஃபோன் அடித்தது.
அதில் வந்த சேதியை கேட்க மறுபடி ஒருமுறை அனைவரும், "கடவுளே இன்னும் எங்க மேல உனக்கு கருணை வர்லிய? இன்னும் எவ்ளோ கஷ்டத்தை தான் எங்களுக்கு கொடுப்ப," என்று அனைவரும் மனமுடைந்து போயினர்.
