நிஜம் 17
நிஜம் 17
விக்ரம், த்வனி பிரச்சனை நாளுக்கு நாள் அதிகமாக, பாவம் இவர்கள் இருவர் சண்டையில் லயா மண்டை தான் உருண்டது.
இப்போதெல்லாம் லயா வாயில் மந்திரம் போல் வரும் ஒரே டய்லாக், "எனக்கு வந்ததும் சரியில்ல, வாச்சதும் சரியில்ல, இதுங்க சண்டையில காயுது என் மண்ட" னு அவர்கள் நாட்கள் நகர்ந்தது.
த்வனி எவ்வளவுக்கு எவ்வளவு விக்ரமிடம் இருந்து லயாவை தள்ளி வைக்கப் பார்த்தாலோ, அதற்கு நேர்மாறாக லயா விக்ரமின் உண்மை அன்பில் இன்னும் இன்னும் அவனிடம் நெருங்கிப் போனாள். த்வனி நினைத்தால் அவளின் ஒரு வார்த்தையில் லயாவை விக்ரமிடம் இருந்து பிரிக்க முடியும். ஆனால், அது லயாவை காயப்படுத்தி விடும் என்ற ஒரே காரணத்திற்காக அவள் நிதானமாக லயாவின் மனதில் இருந்து விக்ரமை எடுக்கும் வழியை தேடினாள். ஆனால், அதற்குள் லயா மனது மட்டுமல்லாமல், அவள் சிந்தனையில் இருந்து உயிர் வரை விக்ரம் நிலைத்து, நிறைத்து விட்டிருந்தான். அவள் தேவ்வின் உண்மை காதலில் பெண்ணவள் மொத்தமாக முழ்கி தன்னைத் தொலைந்துவிட்டாள்.
இனி த்வனியின் நிலை என்னவாகும்?
அன்று லயா த்வனியுன் செலவிடும் ஞாயிறு, த்வனி ஞாயிறு. அது என்ன த்வனி ஞாயிறுனு கேட்டால்,
ஒரு முறை, சன்டே விக்ரம் லயாவை வெளிய போலாம்னு கூப்புட, த்வனி எப்பவும் லயா சன்டேல என் கூடத் தான் இருப்பா, உன்னோட எல்லாம் வரமாட்டா, நீ போடான்னு" சண்டைக்கு ஸ்டார்ட் புள்ளி வைக்க, பதிலுக்கு விக்ரம் கத்தி சண்ட போட்ட, மீன் மார்க்கெட் மாதிரி அந்த இடமே கந்தல் கோலம் ஆனது.
இவங்க சண்டையில் லயா காது தீஞ்சு போக, "டேய் சுகர் பேஷன்ட்டா நானு, ரெண்டு பேரும் என்னை இப்படி வச்சு செஞ்ச நான் என்னத்த பண்றது" என்று பாவமாகக் கேட்க,
"லயா நீ எப்பவும் சன்டேல என்கூடத் தானா இருப்பா, அத அந்தப் பன்னிக்கு நல்லா காதுல விழுகுற மாதிரி அடிச்சி சொல்லு" என்று த்வனி சொல்ல,
"இங்க பாரு ரென்யா, இதுவரை எப்படியோ ஆனா, இனிமே உன்கிட்ட முதல் உரிமை எனக்குத் தான். அத அந்த ராட்சசி காதை நல்லா கடிச்சு சொல்லு" என்று விக்ரம் சொல்ல,
லயாவின் மைண்ட் வாய்ஸ், "சட்ட கிழிஞ்சிருந்தா தச்சி முடிஞ்சிடலாம்.....!!!
நெஞ்சம் கிழிஞ்சிடுச்சி எங்கே முறையிடலாம்.....????"
"லயா உனக்கு நான் தான் முக்கியம்னு சொல்லு லயா" என்ற த்வனியையும், "ரென்யா உனக்கு நான் முக்கியமா இல்ல அவளா?" னு கேட்ட விக்ரமையும் மாறி மாறி பார்த்தாள் லயா.
அந்தச் சம்பத்துக்கு அப்பறம், வருண் தலைமையில், லயா வாரத்துல முதல் அப்பறம், மூணாவது ஞாயிறு விக்ரமுக்கும், ரெண்டாவது நாலாவது ஞாயிறு த்வனிக்கும்னு ஆலமரம் இல்லாம ஒரு பஞ்சாயத்து நடந்து அந்தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வச்சாங்க.
அது படி இன்னைக்கு த்வனி சன்டே.
இதில் நோட் பண்ண வேண்டிய விஷயம், விக்ரமோட சன்டேல லயா விக்ரம் கூட ஊர் சுத்தப்போகும் போது, அவ அப்பா, அம்மாகிட்ட, த்வனி வீட்டுக்கு தான் போறேன்னு லயா சொல்லிட்டு வருவா, சப்போஸ் லயா வீட்ல இருந்து அவ அப்பா, அம்மா ஃபோன் பண்ணா... த்வனி லயாவை போட்டுத் தராம இருக்க, விக்ரமை த்வனி படுத்துற பாடு எல்லாம் வேற லெவல்ல இருக்கும். அவனும் பல்லகடிச்சிட்டு அவ சொல்றத எல்லாம் செய்வான். ஆனா, விக்ரம் அப்படிச் செய்யாட்டியும், த்வனி லயாவை மாட்டி விட மாட்டா, அது விக்ரமுக்கும் தெரியும்.
விக்ரம், லயாவை பத்தி லயா அப்பா, அம்மாக்கு தெரியுமா இருக்கணும்னு கதிர் சொல்லி இருந்ததால், அதுதான் சரினு த்வனிக்கும் புரிந்ததால் அவள் அமைதியாக இருந்தாள். இருந்தாலும் விக்ரமை ஆட்டிவைக்க ஒரு வாய்ப்பு கிடைக்கும் போது அத பயன்படுத்தாமல் இருக்க த்வனி என்ன தியாகிய...
அன்று த்வனி, லயா இருவரும் நல்லா ஊர் சுத்திட்டு வீட்டுக்கு திரும்பும் போது யாரோ ரெண்டு பேர், விக்ரம் அடிப்பதைப் பார்த்து லயா, "தேவ்" என்று கத்திகொண்டு ஓட, த்வனி பைக்கை அப்படியே கீழே போட்டு, "டேய் யாருடா நீங்க? விடுங்கடா அவனை" என்று சத்தமாகக் கத்தியபடி விக்ரமிடம் ஓடிவர, அவனை அடித்த அந்த ரெண்டு பேரும் அங்கிருந்து ஓடிவிட்டனர்.
விக்ரமுக்கு பெரிய அடி எதுவும் இல்லாமல் போனாலும், தலையில் பட்ட அடியால் மயங்கி விழுந்து கிடந்தான்.
லயா மயங்கி இருந்த விக்ரமை தன் மடியில் வைத்துக்கொண்டு அழுதுகொண்டிருக்க, த்வனி விக்ரம் முகத்திற்கு அருகில் சென்றவளுக்கு, அவன் குடித்திருப்பது தெரிந்துவிட, இடுப்பில் ஒரு கையும், தலையில் ஒரு கையும், வைத்து அடுத்த என்ன செய்வது என்று யோசித்தவள், விக்ரம் ஃபோனை எடுத்து அதில் இருந்த அவன் நண்பன் ஒருவனைப் பிடித்து, விக்ரம் நிலையைச் சொல்லி அங்கு வந்து, அவனை உன் வீட்டு கூட்டிட்டு போ என்று சொல்ல, அந்த உயிர் நண்பன், விக்ரமை வீட்டுக்கு கூட்டி வந்தால் அவனோட சேர்ந்து அடுத்த நிமிஷம் என்னையும் வீட்டுல இருந்து விரட்டி வுட்டுவாங்க என்ற இனிப்பான உண்மையைச் சொல்ல, த்வனி 'த்து' காறி துப்பிவிட்டு ஃபோனை வைத்தாள்.
"ஏய் லயா இப்ப என்ன பண்றது. இந்தப் பன்னியோட பிரண்டு வரமுடியாதுனு சொல்லிடுச்சு, இங்க வேற யாரும் இல்ல, ஹாஸ்பிடல் வேற இங்கிருந்து ரொம்பத் தூரத்துல் இருக்கு, என்ன செய்றது?"
"த்வனி தேவுக்கு ரொம்ப அடிப்பட்டு இருக்கு த்வனி, லேட் பண்ணா ரொம்பச் சிரியஸ் ஆகிடும். ரத்தம் வேற நெறய போகுடி" என்று லயா கதற,
"ஆமா கொடம் கொடமா கொட்டுது, ஒரு பக்கெட் எடுத்து புடி, எனக்குக் கண்ணு தெரியாது பாரு, நானும் பாத்துட்டு தான இருக்கேன். இப்ப என்ன பண்றதுன்னு கேட்ட, கண்டதை பேசிட்டு" என்றவள் அங்கம் பக்கம் யாரும் உதவிக்கு இருக்கிறார்கள என்று சுத்திமுத்தி பாரக்க, ஒரு ஈ, காக்காய் இல்லை.
"த்வனி தேவ்வை உன் வீட்டு கூட்டி போலாம்டி" என்ற லயாவின் குரலில் த்வனி சட்டெனத் திரும்பி அவளைத் தீயாக முறைக்க, கலங்கிய விழுயோடு இருந்த லயாவையும், தலையில் அடிப்பட்டு மயக்கத்தில் இருந்த விக்ரமையும் பார்த்தவள் மனது கேட்கவில்லை.
"சரி கூட்டி வந்து தொல" என்றவள் வண்டி எடுத்துக்கொண்டு விக்ரம் அருகில் வர, பெண்கள் இருவரும் கஷ்டப்பட்டு அவனைத் தூக்கி அந்தப் பைக்கில் உட்கார வைத்தனர்.
"த்வனி" என்று மீண்டும் லயா ஈனசுரத்தில் இழுக்க,
"இன்னும் என்னடி?"
"இல்ல தேவ் மயக்கத்துல இருக்கான். நீ வண்டி ஓட்டும்போது அவன் தவறி கீழ விழுந்துட்டா என்ன பண்றது."
"ம்ம்ம் கீழ விழுந்த கிடக்க எந்த பொருளை எடுக்கக்கூடாதுன்னு அம்மா, அப்பா சொல்லியிருக்காங்க, சோ அப்படியே ரோட்ல விட்டு போய்டுவேன்" என்றவளை லயா அழுவது போல் பார்க்க,
"ஏய் ச்சீ… மூஞ்ச அப்டி வைக்காத, என்ன செய்யணும்னு சொல்லி தொல, செஞ்சி தொலயிரேன்."
"அது நான் பின்னாடி உக்காந்து தேவ்வை கெட்டிய புடிச்சிக்குறேன். நீ… நீ… அவர" என்று இழுக்க,
"சொல்ல வந்ததை முழுசா துப்பித் தொலடி, அப்பறம் மொத்தமா உன்னைக் கவனிக்குறேன்"
"இல்ல தேவ்வை உன் முதுகுல சாய்ச்சு, அவன் கைய உன் இடுப்பை சுத்தி முன் போட்டு, என் துப்பட்டாவால கட்டிட்ட, கொஞ்ச கிரிப்ப இருக்கும்"
"ஏதே…! இப்ப நீ என்ன சொன்ன? இவன்… இந்தப் பன்னி என்னோட இடுப்பை… பிஞ்சிடும் ராஸ்கல்" என்று த்வனி கத்த, மீண்டும் லயா அழ ஆரம்பிக்க, தலையில் அடித்துக்கொண்ட த்வனி, "கட்டி தொல" என்றாள்.
டாக்டர் வந்து விக்ரமை பார்த்துவிட்டு மருந்து கொடுத்துவிட்டு செல்ல, மருந்து மயக்கத்தில், த்வனி அறையில் படுத்திருந்தான் விக்ரம்.
லயா அவனையே பார்த்துக்கொண்டிருக்க, அவள் ஃபோன் அடித்தது.
"த்வனி ஊர்ல இருந்து அத்த, மாமா வந்திருக்காங்கலாம். அம்மா நம்ம ரெண்டு பேரையும் வர சொல்லுறாங்கடி, விக்ரமை இப்டி விட்டு நம்ம போகமுடியாதே, இப்ப என்ன பண்றது."
"என்னை ஏன்டி கேக்குற, என்ன கேட்ட லவ் பண்ண… நீயா லவ் பண்ண, அதும் இந்தப் பக்கிய, இப்ப எதுக்கு என்கிட்ட என்ன செய்யன்னு கேக்குற? உன் இஷ்டம்"
"த்வனி" என்று வழக்கம்போல் லயா தன் கொஞ்சல் மொழியில் அவளைக் கரைக்க, "சரி சரி ரொம்பச் சோப் போடாத, நா காலையிலேயே குளிச்சிட்டேன். நீ இப்ப வீட்டுக்கு போ, அம்மாகிட்ட எனக்கு முக்கியமான ப்ராஜெக்ட் இருக்கு, அப்றமா வரேன்னு சொன்னேன்னு சொல்லு, நீ கெளம்பு"
"தேவவிட்டு எப்டி த்வனி நான் போறாது"
"ஓஓஓ அப்டிங்கள மேடம், அப்ப ஒன்னு பண்ணுங்க, அப்பாக்கு ஃபோன் பண்ணி என்னால தேவ் விட்டு வரமுடியாது. அத்த, மாமாவ கூட்டிட்டு நீங்க இருங்க வாங்கன்னு சொல்லிடேன். மூஞ்சப்பாரு மூஞ்ச, மூடிட்டு கெளம்புடி, இன்னும் கொஞ்ச நேரத்துல நீ அங்க போல, அப்பா உன்னைத் தேடிட்டு இங்க வந்துரு வாரு, ஒழுங்க போய்டு" என்றதும், லயா வேறு வழி இல்லாமல் சரி என்று தலையாட்டினாள்.
"நா வரேன்டி, டாக்டர் வந்தா, என்ன சொன்னாங்கன்னு எனக்கு ஃபோன் பண்ணி சொல்லு, அப்றம் தேவ் கண்ணு முழிச்சு என்ன கேட்ட, நா காலையில வரேன்னு சொல்லு, அப்றம்" என்று அவள் ஏதோ சொல்ல வர, "என்ன இவன் மேல இருக்கக் கோவத்தயெல்லாம் காட்டாம, இவனை நல்லா பாத்துக்கணும் அதான?" என்ற த்வனியை பார்த்து லேசாகச் சிரித்த லயா,
"அதுக்கு அவசியமே இல்ல, என் த்வனி மனசு எனக்குத் தெரியும். அது ரொம்பச் சாஃப்ட், அவளால யாரையும் கஷ்டப்பட்டுத்த முடியாது. அதுவும் நா விரும்புற ஒருத்தனை நிச்சயமாக அவளால காயப்படுத்த முடியாதுனு எனக்குத் தெரியும். என்னவிட என்னோட தேவ்வை நீ நல்லா பாத்துக்குவன்னு எனக்குத் தெரியும். அந்த நம்பிக்கை தான் நா போறேன், நா சொல்ல வந்தது அது இல்ல, நீ இவனைப் பாத்துட்டு அப்டியே இருந்திடாம, ஒழுங்க சாப்டுன்னு தான் சொல்ல வந்தேன். டாடா நா கெள்மபுறேன் பை" என்றவள் தேவ்வை ஒரு முறை பார்த்துவிட்டு செல்ல, த்வனி போகும் லயாவையே மனம் நிறைந்த சிரிப்போடு பார்த்துக்கொண்டிருந்தாள்.
தலையில் அடிப்பதில் விக்ரம் மயக்கத்தில் இருக்க, கூடவே அவனுக்குக் காய்ச்சல் வேறு அதிகமாக இருந்தது. த்வனி அவனை அருகில் இருந்து பார்த்துக்கொண்டாள். அத்தை, மாமா வந்திருந்ததால் லயாவால் வீட்டைவிட்டு வரமுடியாமல் போக, நொடிக்கு நூறு முறை ஃபோன் செய்து, விக்ரம் பற்றிக் கேட்டு த்வனியை ஒரு வழியாக்கி இருந்தால் லயா.
முழுதாக இரண்டு நாட்கள் கழித்துக் கண்விழித்த விக்ரம் முதலில் தான் எங்கிருக்கிறேன் என்று புரியாமல் மெதுவாக எழுந்து பெட்டில் அமரந்தவன், தலையைப் பிடித்தபடி திரும்பி பார்க்க, அங்குச் சிங்கிள் சோஃபாவில் கை, காலை குறுக்கிக்கொண்டு தூங்கிக்கொண்டிருந்த த்வனி தான் தெரிந்தாள்.
"இந்த பிசாசு இங்க என்ன பண்ற? இது யார் வீடு?" என்று யோசித்த விக்ரம், கஷ்டப்பட்டு அங்கிருந்த குட்டி தலைகாணியை எடுத்து தூக்கும் அவள் மீது எறிந்தான்.
"லயா குட்டி, ப்ளீஸ்டா இன்னும் கொஞ்ச நேரம் என்னை தூக்கிவிடு" என்று தூக்கத்தில் புலம்பியவள், பின் பட்டென கண்ணைத் திறந்த பார்க்க, அங்கு விக்ரம் இவளையே பார்த்தபடி உர்ரென்னு உட்கார்ந்திருந்தான்.
"தேங் காட்… கண்ணு முழிச்சிட்டிய? அப்பாடி" என்றபடி எழுந்தவள், "அங்க பாத்ரூம் இருக்கு, போய் ஃப்ரெஷ் அப் பண்ணிட்டு வந்து டிபன் இருக்கும், அத கொட்டிக்கிட்டுக் கெளம்பு" என்றவளை முறைத்தான் விக்ரம்.
"நா எப்டிடி இங்க வந்தேன்.?" என்று கேட்க, த்வனி அவனை அலட்சியமாகப் பார்த்தவள், நடந்ததைச் செல்ல, "நீ ஏன்டி உன் வீட்டு தூக்கிட்டு வந்த, என் ஃப்ரண்ஸூக்கு கால் பண்ண வேண்டியது தானா… அவங்க அடுத்த நிமிஷம் வந்து என்ன கூட்டிட்டு போயிருப்பாங்க" என்று சொல்ல, த்வனி வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரித்தாள்.
"டேய் சும்மா காமெடி பண்ணிட்டு, எனக்கு என்ன தலையெழுத்த உன்ன இங்க கூட்டி வந்து சேவ செய்ய, நா முதல் உன் ஃப்ரண்டுக்கு தான் கால் பண்ணேன். அந்தக் கொரங்கு, உன்ன வீட்டுக்கு கூட்டி வந்த அவங்க வீட்ல செருப்பாலயே அடிப்பாங்கன்னு சொல்லி காட் பண்ணிடுச்சு, அடுத்து அடுத்து எல்லாப் பக்கியும் எதோ காரணம் சொல்லி எஸ்சாகிடுச்சு, அந்த வருண் மட்டும் தான், நா ஊரல் இல்ல, தயவுசெய்து நா வர்ர வரை அவனைக் கொஞ்சம் பத்திரமா பாத்துக்கோன்னு சொல்லுச்சு, நேத்து நைட் கூட ஃபோன் பண்ணி நீ எப்டி இருக்கான்னு கேட்டான், ஊரல் இருந்து கெளம்பி வந்துட்டு இருக்கேன்னு சொன்னான், எப்படியும் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவான், அவன் கூட நீ போலாம்."
"ஒன்னு தேவையில்ல, எனக்கே போகத் தெரியும்." என்றவன் ஒரு அடியெடுத்து வைக்க, அடுத்த அடி நிற்க முடியாமல் தள்ளாடியபடியே பெத்தெனக் கட்டில விழு, "இதுக்குத் தான் ரொம்ப ஆடக்கூடாதுனு சொல்றது. நா ஒன்னும் உன்மேல இருக்க அக்கறையில உன்ன இங்க கூட்டி வர்ல, லயா சொன்ன ஒரே காரணத்துக்காகத் தான் நீ இங்க இருக்க, இந்த டவல், போய் ஃபேஸ் வாஷ் பண்ணிட்டு வந்து கொட்டிக்க, அதுக்குள்ள வருண் வந்துடுவான். நீ போலாம். அப்பறம் இந்த உன்னோட மெடிசன்ஸ், அன்ட் ஃபோன், லயாக்கு கால் பண்ணி நீ ஓகேன்னு சொல்லிடு" என்று மாத்திரைகள் இருந்த கவரையும் அவன் ஃபோனையும் அவன் கையில் கொடுத்துவிட்டு சென்றாள்.
"என்ன தான் த்வனிக்கு விக்ரமை புடிக்காம இருந்தாலும் லயாக்காக அவர பாத்துட்டு இருக்க இல்ல, ஷி இஸ் ஏ நைஸ் கேர்ள் இல்ல வருண்" என்ற ஷாலினியை பார்த்து தலையாட்டி வருண்.
"லயா விஷயத்தில் த்வனி எப்பவும் அப்படித்தான். எனக்கு அவளைப் புடிக்காட்டியும் நானும் அதை ஒத்துக்கத் தான் வேணும்."
"ஏன் வருண், த்வனி லயாமேல இவ்ளோ பாசமா இருக்கும் போது, லயாவோட லவ் மட்டும் அவளுக்கு எப்படிப் புரியாம போச்சு, ஏன் அவ விக்ரமை புரிஞ்சுக்க ட்ரையே பண்ணல? ஏன் அவளுக்கு அவங்க லவ் புரியால?" என்ற ஆருஷியை பார்த்த வருண்,
"யார் சொன்னா? த்வனிக்கு அவங்க லவ் புரியலான்னு, அவங்க லவ் எவ்ளோ ஆழமானதுன்னு எல்லாரையும் விட அவளுக்குத் தான் தெரியும்"
"அப்பறம் ஏன் அவ அவங்கள பிரிக்க ட்ரை… இல்ல பிரிச்ச லயாவை வேற மேரேஜ் பண்ண வச்சா?" என்று ஆஷா கேட்க,
"அதுதாங்க விதி. லயாமேல அவ வச்ச பாசம் தான் அவளை அப்டி செய்ய வச்சிருக்கணும். எங்க லயாக்கு எதுவும் ஆகிடுமோனு தப்ப நெனச்சு, அந்தப் பயந்துல தான் அவ இப்டி செஞ்சிருக்கணும். அதோட அவ இப்டி செய்ய இன்னும் ரெண்டு பேர் கூட காரணம்..."
"என்ன சொல்றீங்க வருண்? ரெண்டு போறா? ஒன்னு லயாவோட மாமா கதிர், ஓகே. ரெண்டாவது யாரு?" என்ற ஷாலினியின் கேள்விக்குத் தலைகுனிந்த வருண்,
"சௌந்தர்யா ஆன்ட்டி" என்று சொல்ல மூவரும் அதிர்ந்தனர்.
