கன்னத்தில் காதல் முத்தம் 12

 காதல் 12


கடல் அலைகளின் நளின நடனத்தை பார்த்து ரசித்த அக்னியின் கொதித்துக் கொண்டிருந்த கோவம் பனித்துளியாய் குளிர்ந்துவிட, அடுத்து என்ன என்று யோசித்தவன், ஒரு முடிவோடு ஆராத்யா இருந்த அறைக்குச் சென்றான்.


கால் முட்டியில் முகம் புதைத்தபடி விசும்பிக் கொண்டிருந்த ஆராத்யாவின் குரல், தன்னை ஏதோ செய்வதை உணர்ந்த அக்னி, அவள் அருகில் போய் அமர, ஆராத்யா நிமிர்ந்து அவன் முகத்தைப் பார்த்தாள்.


"ப்ளீஸ் என்னை விட்டுடு… எனக்காக கூட இல்ல, என் வாயித்துல இருக்க குழந்தைக்காகவாது, என்னை என் மாமாகிட்ட கொண்டு விட்டுடு ப்ளீஸ்." என்று அவனை நோக்கி கையெடுத்து கும்பிட்டு கதறி அழ, அவள் கண்ணீரை காணச் சகிக்காமல்,


"போதும்டி… அழுறதை நிறுத்து. இந்த மாதிரி நேரத்தில் அழுதா அது நம்ம குழந்தையை தான் பாதிக்கும்." என்றவன் வார்த்தையில் விலுக்கென்று அவனை நிமிர்ந்து பார்த்த ஆரா, "இப்… இப்ப நீ என்ன சொன்ன?" என்று அதிர்ந்து கேட்க, "இந்த மாதிரி நேரத்தில் நீ அழுதா அது உன் வயித்தில் இருக்குற நம்ம புள்ளைக்கு நல்லது இல்லைனு சொன்னேன்டி என் ஆசைப் பொண்டாட்டி." என்று அவள் கன்னத்தை செல்லமாக தட்ட, ஆராத்யாவுக்கு உலகமே ஒரு நிமிடம் தலைகீழாக சுற்றியது போல் இருக்க, தன் தலையை இரு கைகளால் அழுத்தி பிடித்துக்கொண்டு, "பைத்தியக்காரா பைத்தியக்காரா… அடுத்தவன் புள்ளைக்கு நீ தான் அப்பன்னு சொல்ற… வெக்கமா இல்ல உனக்கு? நீ எல்லாம் என்ன ஜென்மம்டா…"


"இதுல வெக்கப்பட என்னடி இருக்கு? நீ என்னோட பொண்டாட்டி… சோ இந்த குழந்தைக்கு நீ அம்மான்னா… நான் தானா அதுக்கு அப்பா." என்றவன் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை வைத்திருந்தாள் ஆராத்யா.


"யார் புள்ளைக்கு யாருடா அப்பா? செருப்பு பிஞ்சிடும்… மரியாதையா என்னை என் மாமாகிட்ட கொண்டு விட்டுடு… இல்ல நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது" என்றவள் வார்த்தைகள் பாதியில் நின்றது அவன் அவள் கழுத்தை நெறித்ததில்.


"இங்க பாருடி… நான் தான் உன் புருஷன்… இந்த குழந்தைக்கு மட்டும் இல்ல, இனிமே உனக்கு எத்தனை குழந்தை பிறந்தாலும் அது எல்லாத்துக்கும் நான் தான் அப்பா…" என்று அவள் கழுத்தை விட்டவன், இன்னும் கொஞ்ச நேரத்தில் டாக்டர் வருவாங்க, உன்னை செக்கப் பண்ண" என்றவன் முன் மண்டியிட்டு அமர்ந்தவள், "ப்ளீஸ்… ப்ளீஸ் அக்னி… என்னை விட்டுடு… என்னால இங்க இருக்க முடியல… என்னை விட்டுடு… எனக்கு என் மாமாகிட்ட போகணும்" என்று கெஞ்ச, முட்டியை மடக்கி இவனும் அவள் முன் மண்டியிட்டு அமர்ந்தவன், அவளை அழுத்தமாக பார்த்து, "முடியாது" என்றான் முடிவாக.


ஆராத்யா அவனை எரித்து விடுவது போல் பார்க்க, அவள் கன்னத்தை பிடித்து தன் முகத்தை நோக்கி இழுத்தவன், "டாக்டர் வர்ர நேரம்… எழுந்து போய் முகத்தை கழுவிட்டு வாடி" என்று கட்டளையாக சொல்ல, அதில் எரிச்சலானவள், "முடியாது" என்றாள் அழுத்தமாக.


"ஏய் விளையாடாத… எழுந்து வா" என்று அவள் கையைப் பிடிக்க, அதை தட்டிவிட்டவள், "டாக்டரும் வேணாம் ஒரு மண்ணும் வேணாம்… நீ முதல்ல இங்கிருந்து வெளிய போடா" என்று கத்த, அக்னி எழுந்து நின்றவன் அவள் இரு தோளையும் பிடித்து எழுப்பி நிற்க வைத்தவன், "ம்ம்ம் ஓகே.. இப்ப டாக்டர் வேணாம்… பட்" என்றவன் பார்வை, ஆடை மூடியிருந்த அவள் வயிற்றில் நிலைக்க, "என்னோட பேபியை தொட்டுப் பாக்கணும்னு எனக்கு ஆசையா இருக்கு…." என்றவனை அவள் திகைத்து பார்த்துக் கொண்டிருக்க, அவனோ இரு உள்ளங்கைகளையும் சேர்ந்து தேய்த்தபடி, "சோ…" என்று அவள் வாயிற்றில் கைவைக்க வர, அவன் கையைத் தட்டிவிட்டு ஓரடி பின்னால் சென்ற ஆரா, அவன் முன் ஒற்றை விரல் நிட்டி, "டோன்ட் டச் மீ " என்று சீறினாள்.


"ஏய் நான் ஒன்னும் உன்னை தொடல, என் புள்ளையை தான் தொடப்போறேன்… பட் அன்பார்ச்சினேட்லி என் புள்ள உனக்குள்ள இருக்கு… சோ டெக்னிகலி பாத்தா நான் உன்னைத் தொடுற மாதிரி தான் இருக்கும். பட் அது தப்பு… நான் என் பேபியைத் தான் தொடுறேன்" என்றவன் அவள் வயிற்றை நோக்கி கையை எடுத்து செல்ல…


"ஸ்டாப் இட்… அதெல்லாம் உள்ள ஒன்னும் இல்ல… ஐ ஆம் நாட் ப்ரெக்னென்ட்" என்று அலறியபடி கண்களை இறுக்கிக் மூடிக்கொள்ள, அக்னி வந்த சிரிப்பை இதழ்களுக்குள் மறைத்துக்கொண்டு, 'அப்டி வாடி வழிக்கு. யார்கிட்ட? இந்த அக்னிகிட்டையே உன் வேலையை காட்றியா? உன்னோட ஒவ்வொரு அசைவுக்கும் என்ன அர்த்தம்னு எனக்கு தெரியும்டி… உனக்குள்ள எதாவது நடந்தா, அது உனக்கு தெரியும் முன்னையே, எனக்கு புரிஞ்சிடும்டி…


அந்த அளவு உன்னை இன்ச் பை இன்ச் தெரிஞ்சி வச்சிருக்கவன்டி நான்… என்கிட்டயே ப்ரெக்னென்ட்னு பொய்யா சொல்ற நீ? இதுல வாந்தி வர்ரது என்ன? மயக்கம் போட்டு விழுறது என்ன! அப்பாடி… இருடி இதுக்கு உன்னை வச்சு செய்யல நான் அக்னி இல்லடி… ' என்று தனக்குள் பேசியவன், அவளை நெருங்கி வந்து, "ஏய் என்னடி சொல்ற? உண்மையா நீ ப்ரெக்னென்ட் இல்லையா? அப்ப நமக்கு பாப்பா வராதா? என்னை அப்பான்னு கூப்பிடாதா?" என்று அப்பாவி போல் கேட்டவன், "என்னை ஏமாத்திட்டீயேடி பாவி" என்று அப்பட்டமாக நடிக்க, அவனை முடியும் வரை முறைத்தாள் ஆராத்யா.


'என்னமோ இவன் புள்ளைய நான் வேணும்னே அபார்ஷன் பண்ண மாதிரி இல்ல எஃபெக்ட் குடுக்குறான்… மூஞ்சையும் மொகரயையும் பாரு' என்று மனதில் அவனை வறுத்தெடுத்தவள், "ஏய் ரொம்ப ஓவரா பெர்ஃபார்மன்ஸ் பண்ணாத… என்னமோ உன் குழந்தையே போன மாதிரி இல்ல ஆக்டிங் பண்ற?" என்றவள் கையைப் பிடித்து இழுத்து தன் கைவளைவுக்குள் கொண்டு வந்தவன், "ஏன்டி பொய் சொன்ன?" என்று கேட்க, அவள் அமைதியாக இருந்தாள்.


"சொல்லுடி ஏன்டி பொய் சொன்ன?" என்று கேட்டவன் பிடி இறுக, அவன் குரல் ஆராத்யாவை பயமுறுத்தியது.


"எ… எனக்கு வேற வழி தெரியல… அப்டி சொன்னாலாச்சும் பாவம் பாத்து நீ என்னை விட்டுவேன்னு நினச்சேன்" என்று பாவமாக சொல்ல, "நீ அப்டி சொன்னதும், உன்னை வேணாம்னு நினச்சு விட, நான் ஒன்னும் சாதாரணமான ஆள் இல்லடி" என்றவனை பக்கவாட்டில் திரும்பி பார்த்தவள், "ஆமா தான். அப்டி செய்ய நீ சாதாரண மனுஷன் இல்ல தான்…ஏன்னா நீ தான் சைக்கோவாச்சே"


"நான் சைக்கோவாடி… நான் சைக்கோவாஆஆஆ…" என்று அவளை இன்னும் தன்னோடு சேர்த்து இறுக்கியவன், "ஆமாடி நீ சொன்ன மாதிரி நான் சைக்கோ தான்… இனிமே இந்த சைக்கோ உன்னை என்ன பண்றான்னு மட்டும் பாருடி… இனி ஒவ்வொரு நிமிஷமும் அடுத்து என்ன நடக்குமோன்னு நீ பதறிட்டே இருப்ப… பாருடி…" என்றவன் அவளை தன் பிடியில் இருந்து விடுவித்து, "ஆனா ஒன்னுடி..‌. சும்மா இருந்த என்னை, குழந்தை ஆசைகாட்டி நீ என்னை ஏமாத்தினதுக்கு கண்டிப்பா உனக்கு பனிஷ்மென்ட் இருக்கு… லெட்ஸ் வெய்ட் ஆன் வாட்ச் " என்று விரல்களை சுடுக்கி சொன்னவன் அங்கிருந்து செல்ல, ஆராத்யாவுக்கு நெஞ்சில் நீர் வற்றிப்போனது.


"ஐய்யோ சாமி… சும்மா இருந்தவனை நானே சொறிஞ்சி விட்டேனா?... என்னமோ பனிஷ்மென்ட் அது இதுன்னு சொல்லிட்டுப் போறானே… பயம்மா இருக்கே, சாமி நீதான் என்னை இந்த சைக்கோ கிட்ட இருந்து காப்பாத்தனும்…" என்று வேண்டியபடி அப்படியே தொய்ந்து அமர்ந்தவள் அதன் பின் அவள் அறையை விட்டு வெளியே வரவே இல்லை.


நேரம் நிற்காமல் நகர இரவு வந்துவிட்டது. இரவு உணவுக்காக அவளை அழைத்தவன், வழக்கம்போல் ஆராத்யாவுக்கு பிடித்த உணவாக சமைத்து வைத்திருந்தான். அதை அவளுக்கு பரிமாறவிட்டு தனக்கும் வைத்துக்கொண்டு அமர்ந்தவன் அமைதியாக தட்டை பார்த்து சாப்பிட்டுகொண்டிருக்க, அவனின் அந்த அமைதி பெண்ணவளை வெகுவாக பயமுறுத்தியது.


"கடவுளே எப்பவும் ஏதாவது பேசி வம்பிழுத்து என்னை கத்தவச்சிட்டே இருப்பான். இன்னைக்கு என்னமோ இப்டி அமைதியா இருக்கானே! இது புயலுக்கு முன் அமைதியா? இல்ல பின் அமைதியான்னு ஒன்னும் புரியலயே!" என்று குழம்பியபடியே உணவைக் கொறித்து கொண்டிருக்க,


அதை பார்த்த அக்னி, "தட்ல வச்சது மொத்தமும் காலியாகி இருக்கணும். நீ நல்லா சாப்ட்டு தெம்ப இருந்தா தான் என்னோட பனிஷ்மென்ட்டை தாங்க முடியும்" என்று ஒரு மாதிரி குரலில் சொன்னவன், சாப்பிட்டு முடித்து எழுந்துக் கொள்ள, அவன் சொன்னதில் ஆராத்யாவுக்கு உடல் மொத்தமும் நடுங்கத் தொடங்கியது.


எப்படியோ தட்டுத்தடுமாறி ஒரு வழியாக சாப்பிட்டு முடித்த ஆராத்யா, கையைக் கழுவி விட்டு வேக வேகமாக அவளுக்காக ஒதுக்கி இருந்த அறையை நோக்கி செல்ல, அவள் கையைப் பிடித்து நிறுத்திய அக்னி, "எங்க போறீங்க மேடம்?" என்று நக்கலாக கேட்க, மலங்க மலங்க அவனைப் பார்த்தவள், "து… தூக்கம் வருது, ரூ..‌. ரூம்கு போறேன்" என்றாள் தவிப்பாக.


"இன்னைக்கு நீங்க இந்த ரூம்ல படுக்க முடியாது மேடம்… ம்ம்ம் அப்றம் இன்னைக்கு உங்களால தூங்கவும் முடியாது, நீங்க மேல ரைட் சைடுல இருக்க ரூம்க்கு போங்க மேடம்" என்றவனை பார்த்து எச்சிலை விழுங்கியபடியே, "ஏன்? எதுக்கு? எதுக்கு நான் அங்க போகணும்?" என்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கேட்க, "ம்ம்ம்… மேல போய் பாரு உனக்கே புரியும்" என்று சொல்ல அவளோ, "முடியாது, நான் அங்க எல்லாம் வரமாட்டேன்" என்று அடம்பிடித்தவள், அடுத்த வினாடி அக்னியின் கரத்தில் இருந்தாள்.


"டேய் விடுடா..‌. என்னை கீழ இறக்கி விடு" என்று அவன் மார்பில் அவள் பட்டுபட்டென்று அடிக்க, அது அவனுக்கு மென் காற்று மார்பை தழுவுவது போல் இருக்க, "ஏய் சும்மா இருடி, பேலன்ஸ் மிஸ்ஸாகி படியில் இருந்து கீழ போட்ற போறேன்" என்றதும் பயத்தில் அவன் சட்டைக் காலரை இறுக்கிப் பிடித்துக்கொண்டவள், "ப்ளீஸ்டா என்னை கீழ இறக்கி விடு" என்று கெஞ்ச, கண்கள் சுருக்கி அவளை முறைத்து பார்த்தவன், "அதெப்படி டி டக்கு டக்குன்னு மாறிமாறி பேசுற நீ?! இப்ப தான் டேய் விடுடான்னு கத்தின, உடனே டப்புன்னு ப்ளீஸ் விடுன்னு கெஞ்சிர… சரியான அந்நியன்டி நீ" என்றவன் அவளை இறக்கி விட, நெஞ்சைப் பிடித்தபடி கீழே இறங்கி நின்றவள், அந்த அறையை பார்த்த அடுத்த நொடி, "அய்யோ" என்று அலறியபடி மீண்டும் தன் நெஞ்சில் கை வைத்துக் கொண்டாள்.


அறை முழுவதும் ரோஜாப் பூக்களால் அலங்கரிக்கப் பட்டிருக்க, 'பெர்ஃப்யூம் கேண்டில்' எனும் வாசணை மெழுகுவர்த்திகள் அந்த அறையை மெல்லிய நறுமணத்தால் நிறைத்திருக்க, கட்டிலில் போடப்படிருந்த புத்தம்புதிய படுக்கை விரிப்பில் துணியே தெரியாத அளவுக்கு மல்லிப்பூக்கள் கொண்டு மூடியிருந்தை பார்த்த ஆராத்யாவுக்கு இதயம் ஒரு நிமிடம் நின்று துடிக்க, கண்கள் முழுவதும் பயத்தினால் கண்ணீர் திரண்டிருக்க, மெல்ல திரும்பி அக்னியை பார்த்தாள்.


அவன் அவளை ரசனையாக பார்த்தபடி ஒற்றைப் புருவத்தை உயர்த்தி, "எப்டி டி இருக்கு நம்ம ஃபர்ஸ்ட் நைட் செட்டப்?" என்று மயக்கும் குரலில் கேட்க, அவ்வளவு தான் ஆராவுக்கே மூச்சே நின்றுவிட்டது.


"ஏய்… ஏய் நீ… நீ… சும்மா தானே சொல்ற? அப்டி எல்லாம் எதுவும் பண்ண மாட்ட தான?" என்று இதழ்கள் பிதுங்கி அழும் குரலில் கேட்க, அவளை நெருங்கியவன், "ஏன்டி என்னைப் பாத்த என்ன லூசு மாதிரி இருக்கா? இவ்ளோ கஷ்டப்பட்டு டெக்கரேஷன் எல்லாம் பண்ணி, அதுக்கு தகுந்த மாதிரி ரொமான்டிக் மூடையும் மைண்ட் ல செட் பண்ணி வச்சிட்டு, உன்னையும் இங்க தூக்கிட்டு வந்த பிறகும் ஒன்னும் பண்ணாம இருக்க! சும்மா இருக்க எதுக்குடி இவ்ளோ செட்டப்?" என்றவனை வெறித்துப் பார்த்தவள், "நீ… நீ பொய் தானா சொல்ற?" என்று மீண்டும் கேட்க, அக்னிக்கு பொறுமை போய்விட்டது.


"ஏன்டி என்னைப் பாத்த உனக்கு கேணப்பய மாதிரி இருக்காடி? இல்ல கேணை மாதிரி தெரியுறேனான்னு கேக்குறேன்… இவ்ளோ ஏற்பாட்டையும் பண்ணது ஒன்னுமே பண்ணாம சும்மா படுத்து தூங்கவாடி… சும்மா இருந்த என்னை குழந்தை ஆசைகாட்டி ஏமாத்தினதுக்கு உனக்கான தண்டனை இதுதான்…


இன்னும் எண்ணி பத்து மாசத்தில் எனக்கு புடிச்ச மாதிரி ஒரு பொண்ணு பெத்து குடுக்கணும். அடுத்த புள்ளை உன் ஆசப்படி பையனா பெத்துக்கலாம்." என்று கண்ணடித்தபடியே அவன் அவளை நெருங்கி வர, ஆராத்யாவுக்கு இருந்த கடைசி நம்பிக்கையும் தூள் தூளாக சிதறிவிட்டது.


அப்படியே மண்டியிட்டு அவன் முன் அமர்ந்தவள், "வேணாம் அக்னி ப்ளீஸ், என்னை எதுவும் செஞ்சிடாத… நான் செஞ்சது தப்பா இருந்தா அதுக்கு நீ வேற என்ன தண்டனை வேணும்னாலும் கொடு, நான் தாங்கிக்குறேன். ஆ… ஆனா இது வேணாம் அக்னி… ப்ளீஸ்… நீ வேற என்ன சொன்னாலும் செய்றேன். ஐ ப்ராமிஸ்" என்று கையெடுத்து கும்பிட்டவள், வாய்விட்டு கதறி துடிக்க, அழும் அவளை பார்த்து, "எழுந்திரி" என்று சொல்ல, அவள் தலையை குனிந்தபடி அழுதுகொண்டே இருந்தாள்.


"எந்திரிடி" என்று அவன் கத்திய சத்தம் அவள் காதை பிளக்க, சட்டென்று எழுந்து நின்றவள் உடலெல்லாம் பயத்தில் நடுநடுங்கியது.


"நான் வேற என்ன சொன்னாலும் செய்வியா?" என்று அழுத்தமாக கேட்க, அவள், "ம்ம்ம்" என்று தலையாட்ட, அடுத்து அவன், "சத்தியமா?" என்று கேட்க,


"ம்ம்ம் சத்தியமா… நீ வேற என்ன சொன்னாலும் செய்றேன்" என்றாள்.


அக்னி அவனை கூர்மையாக பார்த்தபடி, "நீ உன்னோட ஆதிமாமாவை கொல்லணும், செய்வீயா?" என்றான் அழுத்தமாக.


அவன் சொன்ன வார்த்தையின் அர்த்தத்தை கிரகிக்க முடியாது ஒருநிமிடம் தடுமாறிய ஆராத்யா, "இப்… இப்ப நீ என்ன சொன்ன?" என்று அவன் சொன்னதை நம்பமுடியாமல் கேட்க,


"உன் காதில் சரியாதான் விழுந்துது… நீ உன் கையால் உன்னோட ஆதிமாமாவை கொல்லணும். முடியுமா உன்னால?" என்று மீண்டும் அதையே சொல்லி அவள் நெஞ்சில் நெருப்பை அள்ளிக் கொட்ட, அவளோ இடவலமாக தலையை ஆட்டியபடியே பின்னால் சென்று சுவரில் மோதியவள், அப்படியே தரையில் தொய்ந்து அமர்ந்து விட, மெல்ல அவள் அருகில் வந்த அக்னி, "எனக்கு செஞ்ச சத்தியத்தை காப்பாத்த உன்னால முடியாதுல்ல?" என்று கேட்க, அவனை அடிப்பட்ட பார்வைப் பார்த்தவள், கலங்கிய கண்களோடு இடவலமாக, 'இல்லை' எனும் படி தலையாட்ட, அவளைப் பார்த்து வெறுமையாக சிரித்தவன்,


"இது ஒன்னும் உனக்கு புதுசு இல்லயே. அப்பவும் சரி இப்பவும் சரி, நீ எனக்கு பண்ண சத்தியத்தை காப்பாத்தினதே இல்லடி… நீ மட்டும் அப்டி செஞ்சிருந்ததா, நமக்குள்ள இந்த இடைவெளி வந்திருக்காதே… அறியாத வயசுல, வாழ்க்கை முழுக்க உன் கூட இருக்கேன்னு சொல்லி சத்தியம் பண்ணிட்டு பாதிலயே என்னை தனிய தவிக்க விட்டு போய்டியே தியா?" என்றவனின் தியா என்று வார்த்தையில் விலுக்கென்று நிமிர்ந்து அவன் முகத்தைப் பார்த்தாள் ஆராத்யா.


இதற்கு முன் இருமுறை அவன் அவளை, "தியா" என்றழைத்தது இப்போது அவள் ஞாபகத்தில் வர, "நீ… நீ?" என்று தடுமாறியவள், "டேய் தேவ் நீயா!!" என்று கண்கள் விரிய அவள் கேட்க, அக்னி உதட்டில் கசப்பான புன்னகை.