Posts

Showing posts from November, 2023

விழி வழி காதல் நுழைந்ததடி 24

விழி 24 ஒரு நிமிடம் உயிர் வரை பதறிய ஆதர்ஷன், கணநேரத்தில் தன்னைச் சுதாரித்துக் கொண்டு "தன்வி…" என்று கத்திக்கொண்டே அவளை நோக்கி ஓடியவன், அவள் குதிக்கும் முன் அவளது கையைப் பிடித்து இழுத்துத் தன் நெஞ்சோடு அணைத்தான். அடுத்த நொடி அவளைத் தன்னில் இருந்து விலக்கி கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விட, அவனது ஐந்து விரல்களும் அவளது பட்டுக் கன்னத்தில் பதிந்திருந்தது. "ஏன்டி இப்படிப் பண்ண? சொல்லுடி, எதுக்கு இப்படி ஒரு முடிவெடுத்த? ஒரு செகண்ட் நான் லேட்டா வந்திருந்தா என்னாகி இருக்கும்? நெனச்சுப் பார்க்கவே எனக்குப் பதறுதுடி…" என்று அவள் தோள்களைப் பிடித்து உலுக்கியபடி, அடிநெஞ்சில் இருந்து கோபத்தில் கத்தியவனுக்கு, அவள் இல்லாத ஒரு வாழ்க்கையைக் கற்பனை செய்து பார்க்கக் கூட பயமாக இருந்தது.  அவன் கோபத்திலும் பயத்திலும் கத்திக் கொண்டு இருக்க, தன்வியோ முகத்தைத் தன் கைகளால் மூடிக்கொண்டு கதறி அழுதபடி அப்படியே முட்டி போட்டுத் தரையில் அமர, அவளது நிலை கண்டு அவளவனுக்கும் கண்களில் நீர்த் துளிகள் துளிர்க்க, அவளைத் தூக்கி நிறுத்தியவன், அவள் தலையைப் பிடித்து இழுத்துத் தன் நெஞ்சோடு சாய்த்துக்கொண்டு, தலை...

விழி வழி காதல் நுழைந்ததடி 23

விழி 23 முந்தைய நாள் குடித்ததின் போதை தெளியாமல் மதியம் ஒரு மணி வரை உறங்கிக் கொண்டிருந்த மனைவியின் முகத்தையே ஆழ்ந்து பார்த்துக் கொண்டு இருந்தான் அவள் கணவன். "நீ வார்த்தையால் என்மேல இருக்கற காதலைச் சொல்லனும்னு தான்டி நான் இவ்ளோ நாள் வெயிட் பண்ணேன். பட், இப்படி ஒரு சிட்டுவேஷன்ல, உன்னை நீயே மறந்த நிலையில் வலியோட உன் காதலைச் சொல்லுவன்னு நான் நெனச்சுக் கூடப் பார்க்கல..‌. போதும் தன்வி, நீ பட்ட கஷ்டம் எல்லாம் போதும்… இனிமே எதையும் உன்கிட்ட மறைக்க எனக்கு விரும்பம் இல்ல, இன்னைக்கே எல்லா உண்மையும் உன்கிட்டச் சொல்லிடுறேன்‌. அதுக்குப் பிறகு என்ன செய்யணும்னு நீயே முடிவு பண்ணு" என்றவன் அவள் துயில் கலைவதற்காகக் காத்திருந்தான். அவன் நினைத்ததெல்லாம் நடந்து விட்டால் பின் அங்கு விதிக்கு என்ன வேலை? கொஞ்ச நேரம் கழித்து தன்வியிடம் அசைவு தெரிந்தது. உடனே எழுந்து அவள் அருகில் சென்றவன், "தன்வி… தன்வி" என்று அவள் முகத்தைக் கையில் தாங்கியவன், "ஆர் யூ ஓகே?" என்று தவிப்போடு கேட்க, அவளோ செருகும் கண்களைச் சிமிட்டி சிமிட்டி அவனைப் பார்த்திருந்தாள்.  "ஏய் தன்வி, உன்னைத் தான்டி கேக்குறே...

விழி வழி காதல் நுழைந்ததடி 22

விழி 22  அன்று மாலை வேளையில் தான் பார்ட்டி நடைபெற இருந்தது. காலையில் இருந்து மாலை வரை அறையில் அடைந்து கிடக்க வேண்டாம் என்று, அந்த ரிசார்ட்டைச் சுற்றி இருந்த இடங்களை ஒரு சுற்று சுற்றிவிட்டு வரலாம் என்று நினைத்து ஒரு காரை வரவழைத்திருந்தான் ஆதர்ஷ். அந்தக் காரில் தான் இருவரும் பயணித்துக் கொண்டிருந்தனர். அந்த ரிசார்ட்டைச் சுற்றி இருந்த இடங்கள் அனைத்தையும் முடிந்த வரை சுற்றிப் பார்த்தனர். சில இடங்களில் காரை ஒதுக்கி விட்டு, கைகோர்த்தபடி பேசிக் கொண்டு நடந்தனர். அவள் கேட்டது மட்டும் இல்லாது அவள் நினைத்ததைக் கூட அவளுக்காக வாங்கிக் குவித்தான் அவள் ஆசைக் கண்வன். மதியம் போல் அங்கிருந்த சிறிய உணவு விடுதியில் இருவரும் அரட்டை அடித்தபடி உண்டு முடித்து மீண்டும் தங்கள் பயணத்தைத் தொடங்கினர். ஒருவர் அருகாமையை ஒருவர் உணர்ந்து உள்ளுக்குள் ரசித்து அந்த நேரத்தின் நிமிடங்கள் ஒவ்வொன்றையும் உள்ளத்துள் பொக்கிஷமாகச் சேர்த்து வைத்தனர் இருவரும். ஒரு வழியாக அவர்களின் நகர்வலம் அழகாக முடிய நேரத்தோடு ரிசார்ட்டுக்கு வந்து பார்ட்டிக்குத் தயாராகி வெளியே வந்தவர்கள் ஒருவரைப் பார்த்து ஒருவர் மயங்கி நின்றனர். கறுப்பு நிற டி...

விழி வழி காதல் நுழைந்ததடி 21

விழி 21 ஆதர்ஷ், தன்வி இருவரும் ஒரு தொழில் சார்ந்த மீட்டிங்கில் கலந்து கொள்ள ஒரு பீச் ரெசார்ட்டுக்குச் செல்ல வேண்டியிருந்தது. திருமணம் முடிந்து இருவரும் எங்கும் இதுவரை தனியாகச் செல்லவில்லை என்பதால் வீரராகவன் தொழில் விவகாரம் முடிந்ததும் அங்கேயே ஒரு வாரம் தங்கிவிட்டு வரச் சொல்லி சொல்ல ஆதர்ஷனுக்கு முக்கியமாக செய்து முடிக்க வேண்டிய வேலைகள் சிலது இருந்ததால் தயங்கினான்.  அதைத் தவறாகப் புரிந்து கொண்டாள் தன்வி. 'நம்ம கூட வெளிய தங்குறது இவருக்குப் புடிக்கல போல… அதான் தாத்தா சொல்லியும் கேக்க மாட்டேங்குறாரு' என்று மனதில் நினைத்தவள், "இல்ல தாத்தா, அவர் சொல்றது சரிதான். இங்க நிறைய வேலை பெண்டிங்ல இருக்கு, அதையெல்லாம் முடிக்காமல் எப்படி எங்களால் போக முடியும்? அதெல்லாம் வேணாம் தாத்தா" என்றவளின் குரலே சொன்னது அவளின் மன உணர்வுகளை. அதைப் புரிந்து கொண்ட ஆதர்ஷ், "பரவாயில்ல தன்வி… வேலை எப்பவும் இருக்கும் தான். அதெல்லாம் பார்த்தா நம்ம எப்ப தான் ஒண்ணா டைம் ஸ்பென்ட் பண்றது? தாத்தா சொன்னதும் கரெக்ட் தான். மார்னிங் மீட்டிங், இருக்கு, அடுத்த நாள் ஈவ்னிங் ஒரு பார்ட்டி இருக்கு… நம்ம மீட்டிங் ம...