அழகிய தமிழ் மகள் 32
அழகி 32
அந்த ஆள் நடமாட்டம் இல்லாத அண்டர் கன்ஸ்ட்ரக்ஷன் பில்டிங்குக்குள் யுக்தா வேகமாக நுழைய, அவள் கழுத்தில் ஏதோ சுருக்கென்று குத்தியதை உணர்ந்தாள்.
கழுத்தை பிடித்துக் கொண்டு அப்படியே கீழே முட்டி போட்டு உட்காந்து திரும்பி பார்க்க, அங்குக் கையில் மருந்து இல்லாத காலி சிரஞ்சி ஊசியைக் கையில் பிடித்த படி, குரூரமாகச் சிரித்துக் கொண்டிருந்தாள் ப்ரீத்தி.
யுக்தா கண்கள் செருகும் நிலையிலும் ப்ரீத்தியை தீயாய் முறைத்துக் கொண்டிருக்க, "என்ன மிசஸ் சம்யுக்தா ஆதித்தன். கண்ணு செருகுதா? உடம்பெல்லாம் ஒரு மாதிரி இருக்குமே? நரம்புங்க எல்லாம் சுண்டி சுண்டி இழுக்குதில்ல? ம்ம்… அப்படித் தான் இருக்கும். உனக்காகவே ஆப்பிரிக்கா காட்டுல இருந்து வர வச்ச பயங்கர விஷம் இது யுக்தா! நீ எப்படி என்னோட உதய்யை விஷ ஊசி போட்டு கொன்னியோ, அதே மாதிரி நீயும் ஒவ்வொரு நிமிஷமும் துடிச்சு துடிச்சு சாகணும். நீ உதய்க்கு குடுத்த விஷத்தை விட, இது செம்ம ஸ்ட்ராங்கான டோஸ்!" என்று சிரித்தவள்,
"நான் இங்க வந்ததே, உன்னையும், உன் ஃப்ரண்ட்ஸ் நிஷா, ஜானவி, ராஷ்மி எல்லாரையும் கொல்லனும்னு தான் டி வந்தேன். இங்க வந்த பிறகு தான் தெரிஞ்சுது, நீ இன்னொரு கல்யாணம் பண்ணி சந்தோஷமா இருக்குறதும், என்னோட உதய்யோட குழந்தை உன் கிட்ட வளருதுன்னும். அதைக் கேக்கும் போது எனக்கு அப்படியே வெறியே புடிச்சு போச்சு டி! என் உதய்யை கொன்னுட்டு நீ மட்டும் நல்லா இருப்பியா? அவன் இருந்த இடத்துல இன்னொருத்தனா?" என்று பல்லை கடித்தவள்,
"நானும் உதய் அப்பன் கிட்ட ப்ரணவ்வை கேளுன்னு நெறய முறை சொன்னேன். ஆனா அந்தக் கெழவன், நீயும் உன் புதுப் புருஷன் அந்த ஆதித்தனும் ப்ரணவ்வை நல்லா பாத்துக்குறீங்க, ப்ரணவ் உங்க கூட இருக்குறது தான் அவனோட எதிர்காலத்துக்கு நல்லதுன்னு சொல்லிட்டான் அறிவு கெட்டவன். உதய் குழந்தை உன்கிட்ட இருக்கக் கூடாதுன்னு தான் அவனைக் கடத்துனேன். ப்ரணவ்வை நானே வச்சிக்கலாம்னு நெனச்சேன். ஆனா அந்த முட்டாள் சேதுவை கூட்டுச் சேர்த்தது தான் தப்பா போச்சு. என்னோட ப்ளான் எல்லாம் நாசமா போச்சு. அந்த இன்சிடென்ட்க்கு பிறகு நீயும் உன் புருஷனும் சுதாரிச்சிட்டீங்க… நான் எவ்ளோ டிரை பண்ணியும் உன்னோட ஃப்ரண்ட்சை தொட கூட முடியல. சரி உன்னைப் போட்டுத் தள்ள நெனச்சா? உன்னோட புருஷன் இருபத்தி நாலு மணி நேரமும் உன்னை வாட்ச் பண்ண ரெண்டு பேரை உனக்கே தெரியாம போட்டிருந்தான். ம்ம்ம்… போலிஸ்காரிக்கே பாதுகாப்புக்கு ரெண்டு பேர்!" என்று அலட்சியமாகச் சிரித்தவள்,
"உன்னை நேரடியா எதுவும் செய்ய முடியாதுன்னு தான் நான் உன்னோட விக்னஸ்ல அடிச்சேன். எனக்குத் தெரியும், சின்ன வயசுல இருந்தே உன்னோட குடும்பம் தான் உன்னோட பெரிய வீக்னஸ்னு! அதான் உன்னோட அருமை அண்ணன் பசங்களைத் தூக்கிட்டேன்." என்று சொல்லி சிரித்தாள்.
யுக்தா அவளைப் பார்த்து அலட்சியமாகச் சிரித்தவள், "உனக்கு ஸ்கூல் டேஸ்ல இருந்தே என்னைத் தெரியும்னு எனக்கு நல்லா தெரியும் டி. ஆனா எம் புருஷனை பத்தி உனக்குத் தெரியாதே?" என்று ஏளனமாகச் சிரித்தவள்,
"நீ சொன்ன மாதிரி என்னோட குடும்பம் தான் என்னோட பலகீனம். அட் தி சேம் டைம்,அது தான் டி என்னோட பெரிய பலம். எனக்குத் தெரியும். நீ என் பக்கமே வர மாட்டேன்னு. என்னோட குடும்பத்தைத் தான் டார்கெட் பண்ணுவேன்னு… ஆனா என்னை மீறி நிஷா, ஜானவி, ராஷ்மி நிழல கூட உன்னால தொட முடியாது. எம் புருஷனை மீறி உன்னோட மூச்சு காத்து கூட எம் மேல படாது. ராம், வினய், வெற்றி, ஜீவா, விஷ்ணு இருக்கத் தெச பக்கம் போன கூட, நீ உயிரோட திரும்ப முடியாது. அது உனக்கும் தெரியும். சோ நீ என் வீட்டுக் குழந்தைங்களைத் தான் தூக்குவேன்னு தெரிஞ்சு தான் டி, அவங்களைத் தனியா ஸ்கூலுக்கு அனுப்பினேன். நீ என்னை ஃபாலோ பண்றன்னு தெரிஞ்சு தான் டி, உன்னைப் புடிக்கிற… ச்சே! உன்னை முடிக்கிற வேலையை எம் புருஷன் கிட்ட விட்டுட்டேன்." என்று கர்வமாகச் சிரித்தாள்.
"ம்ம் நீ சொன்னது எல்லாம் சரிதான் யுக்தா. ஆனா, பாரு உன்னோட அந்த அருமை புருஷனால இப்ப உன்னையும் காப்பாத்த முடியாது. அந்தக் குழந்தைங்களையும் காப்பாத்த முடியாது. நீ இருக்க இடம் அவனுக்குத் தெரியாது. தென் அந்தக் குழந்தைங்களை நான் ஒரு சீக்ரெட் ப்ளேஸ்ல மறச்சு வச்சிருக்கேன். அவங்களைச் சுத்தி பத்து ரவுடிகளைப் பாதுக்காப்புக்கு வச்சிருக்கேன். சோ எல்லாம் முடிஞ்சு போச்சு யுக்தா…" என்று சிரித்தவள்,
"உதய்கிட்ட இருந்து நீ எடுத்த பணம் அந்த நிஷாகிட்ட தானே இருக்கு? அவளுக்கு அவ புருஷனை விட நீ தான முக்கியம். நீ உயிரோட வேணும்னா பணத்தை எடுத்துக்கிட்டு ஜானவி, ராஷ்மிய கூட்டிட்டு இங்க வான்னு சொன்ன அடுத்த நிமிஷம் அவங்க மூனு பேரும் இங்க இருப்பாங்க. அடுத்த நிமிஷம் உங்க நாலு பேரையும் கொன்னுட்டு, ப்ரணவ்வை கடத்திட்டு நான் இந்த நாட்ட விட்டே போய்டுவேன்" என்று திமிராகச் சொன்னாள்.
யுக்தா தன் உடல் வலியை பொறுத்துக் கொண்டு பலமாகச் சிரித்தவள், "அடியேய் நீயெல்லாம் இன்னும் வளரவே இல்லயே டி? அதுக்குள்ள ரிவெஞ்சு எடுக்குறேன்னு கெளம்பிட்ட? ஒரு குழந்தை புள்ள எல்லாம் எனக்கு எதிரி? அய்யோ! அய்யோ! இத வெளிய சொன்னா வெட்கக்கேடு டி…" என்று தலையில் அடித்துக் கொண்டவள்,
"அடியேய் நீ பாதுகாப்புக்கு வச்சிருக்கேன்னு சொன்னீயே பத்து பேர், அவங்களுக்கு ஃபோன் போடு. அதுல ஒருத்தனாவது உன் ஃபோனை அட்டென்ட் பண்ணட்டும். நானே அந்தப் பணத்தையும், ப்ரணவ்வையும் உன்கிட்ட ஒப்படைக்குறேன்." என்று திடமாகச் சொல்ல, ப்ரீத்தி உள்ளுக்குள் அதிர்ந்தாலும், தன் ஃபோனை எடுத்து அந்த ரவுடிகளின் நம்பரை அழுத்தி காதில் வைத்தவள்.
அந்தப் பக்கம் யாரும் ஃபோனை எடுக்காமல் போக. பதட்டத்தில் நகத்தைக் கடித்துக் கொண்டு இங்கும் அங்கும் நடந்தாள்.
"என்ன ஒருத்தனும் ஃபோன் அட்டென் பண்ணலயா?" என்று நக்கலாகக் கேட்ட யுக்தா, "உயிரோட இருந்த தானே கால் அட்டென் பண்ண முடியும். இந்நேரம் என் புருஷன் அவங்க எல்லாரையும் முடிச்சிட்டு, குழந்தைகளை வீட்டுக்கு அனுப்பிட்டு…" என்றவள் கஷ்டப்பட்டுத் தன் கையைத் தூக்கி தன் வாட்ச்சில் டைம் பார்த்தவள்,
"ம்ம்… இப்ப இந்நேரம் இங்க வந்திருப்பான்." என்று சொல்லி முடிக்கும் முன், கீழே ப்ரீத்தியின் அடி ஆட்கள் அலறும் சத்தம் மேலே கேட்க, "வந்துட்டான்" என்று யுக்தா சிரிக்க, ப்ரீத்திக்கு பைத்தியமே பிடித்து விட்டது.
"எப்படி டி எப்படி அவன் இங்க வந்தான்?” என்று தலைமுடியை பிடித்துக் கொண்டு ப்ரீத்தி கத்த,
"அடியேய் அப்ரசென்ட் வில்லி… நீயெல்லாம் பாதியில தான் டி வில்லி. ஆனா எம் புருஷன் பொறந்ததுல இருந்தே வில்லன். என்னையே ஏமாத்தி எனக்குத் தெரியாமயே என்னைக் கல்யாணம் பண்ண தில்லாலங்கடி டி அவன். அவன்கிட்ட உன் பருப்பு வேகுமா? போலிஸ்காரிக்கே பாதுகாப்பான்னு நக்கலடிச்சியே? அது அவன் எனக்குப் போட்ட பாதுகாப்பு இல்ல லூசே. உனக்கு விரிச்ச வலை! என் பின்னாடி ரெண்டு பேர் வருவாங்கன்னு தெரிஞ்சு, என்னை இங்க வர வச்ச உன் அறிவை கண்டு நா வியக்கேன் டி!" என்று யுக்தா வலியை மறந்து சத்தமாகச் சிரித்தாள்.
ப்ரீத்தி பேய் பிடித்தது போல் கத்தி அலறியவள், "என்னோட ப்ளான் எல்லாம் போச்சு. ஏய் உன்ன சும்மா விடமாட்டேன் டி. உன் புருஷன் இங்க வரும் போது உன்னோட பொணத்தைத் தான் பாக்கணும்." என்று வெறி வந்தது போல் கத்தியவள் இரும்பு கம்பியை யுக்தாவை நோக்கி ஓங்கினாள்.
அடுத்த நொடி ஆதி விட்ட அறையில் கன்னம் சிவந்து வாய் கிழிந்து ரத்தம் ஒழுக மயங்கி கீழே விழுந்து கிடந்தாள் ப்ரீத்தி.
பாதி உயிராகக் கிடந்த தன்னுயிரை கையில் ஏந்திக் கொண்டு ஆதி வெளியே ஓடி வரவும் நிஷாவும், வினய்யும் காரில் அங்கு வரவும் சரியாக இருந்தது.
ஆதி யுக்தாவை நெஞ்சோடு சேர்ந்து அணைத்தபடி வினய்யை காரை வேகமாக ஓட்ட சொல்லி கத்திக் கொண்டிருக்க, யுக்தா அரை மயக்கத்தில் தனக்காகத் துடிக்கும் ஆதியின் முகத்தைப் பார்த்து சிரித்தபடியே, "அவ்ளோ சீக்கிரம் நான் உன்னைத் தனிய விட்டுப் போக மாட்டேன் டா…" என்றவளை ஆதி இன்னும் தன்னோடு சேர்த்து இறுக்கி அணைத்தான்.
தன்னவன் காதலை கண்களில் நிறைத்தபடி, யுக்தா சுயநினைவை மெல்ல மெல்ல இழந்து கொண்டிருந்தாள்.
"ஏய் ஏய் எந்திரி டி. இன்னும் கொஞ்ச தூரம் தான். ஹாஸ்பிடல் வந்துடுச்சு…" என்று அவள் கன்னத்தில் மாறி மாறி தட்ட, யுக்தாவிடம் எந்த அசைவும் இல்லை.
ஆறு மணி நேரம் ஆமையாக நகர, குடும்பம் மொத்தமும் அழுவதற்குக் கூடத் தெம்பு இல்லாமல் யுக்தா அறைக்கு வெளியே ஆளுக்கு ஒரு மூலையில் முடங்கி இருந்தனர்.
இருள் படர்ந்த முகத்துடன் அந்த அறையை விட்டு வெளியே வந்த ஜீவாவை அனைவரும் கண்ணீர் திரையை விலக்கி விட்டு, அவன் வாயில் இருந்து யுக்தாவிற்கு ஒன்றும் இல்லை என்று வரும் ஒற்றை வார்த்தையைக் கேட்பதற்காக ஆவலாக அவனைப் பாத்திருந்தனர்.
ஜீவா இடவலமாகத் தலையை ஆட்டியவன், கண்கள் கலங்கி உதடு துடிக்க, "அவளுக்குக் கொடுத்திருக்கப் பாய்சன் ரொம்ப ஹெவி! விஷம் உடம்பு முழுக்க வேகாம பரவிட்டு இருக்கு. என்னால ஒன்னும் செய்ய முடியல…" என்று சொல்ல, ஜானவி அவன் கன்னத்தில் பளார் என்று அறைந்திருந்தாள்.
"ஏன்டா நீ டாக்டர் தானே? நீயே இப்டி நம்பிக்கை இல்லாம பேசற… அந்த ஒரு உயிரை உனக்குக் காப்பாத்த துப்பில்லாட்டி, நீயெல்லாம் என்ன இதுக்கு டா டாக்டருக்கு படிச்ச? உனக்கெல்லாம் எதுக்கு டா டாக்டர் பட்டம்? இவ்ளோ பெரிய ஹாஸ்பிடல்?" என்று கத்தியவள்,
ஜீவா சட்டை காலரை பிடித்து உலுக்கி, "இங்க பாரு நீ என்ன செய்வீயோ? ஏது செய்வியோ? எனக்குத் தெரியாது. எனக்கு என்னோட யுகி வேணும். எனக்கு அவ வேணும். மரியாதையா அவளை எனக்குத் திருப்பிக் குடு…" என்று கத்தியவள் அப்டியே மயங்கிச் சரிய, ஆதி அவளைத் தாங்கிப் பிடித்துச் சேரில் உட்கார வைத்தான்.
ஜீவா அருகில் வந்து, "அந்தப் பாய்சனுக்கு ஆன்டிடோட் இல்லையா ஜீவா?” என்று கலக்கமாகக் கேட்க,
"இது ஏதோ பாம்பு விஷம் மாதிரி இருக்கு ஆதி. நானும் முடிஞ்ச வரை டிரை பண்ணிட்டேன், என்னால ஒன்னும் பண்ண முடியல…" எனும் போதே, அவன் கண்களில் கண்ணீர் துளிகள் வேகமாக வெளியே வந்து விட, அந்த நேரத்தில் அங்கு வந்து சேர்ந்தாள் ராஜீ. கூடவே தன் அப்பாவின், நின்று போன பாய்சன்ஸ் பற்றிய ஆராய்ச்சியைத் தொடர்ந்து நடத்தி வரும் வருணையும் உடன் அழைத்து வந்திருந்தாள்.
வருண் யுக்தாவின் நிலையையும், அவள் மருத்துவப் பரிசோதனை ரிப்பேட்டையும் பார்த்தவன், உடனடியாக அவளுக்குத் தன்னிடம் இருந்த ஆண்டிடோட் (விஷ முறிவு மருந்து) மருந்தை அவள் உடலில் செலுத்தினான்.
"இன்னும் மூனு மணி நேரத்துல அவங்களுக்குக் கான்ஷீயஸ் வரணும்; அப்ப தான் நான் குடுத்திருக்க மருந்து வேலை செய்யும். இல்லாட்டி?" என்று இயலாமையோடு தலையை ஆட்டிய வருண் அங்கிருந்து நகர, அங்கிருந்த மொத்த பேருக்கும் நெஞ்சில் நெருப்பள்ளி வைத்தது போல் உள்ளம் எரிந்தது.
அனைவரும் அவள் காதில் விழும்படி அவள் பெயரை கத்தி கத்தி அழைக்க அவளிடம் எந்த அசைவும் இல்லை.
ப்ரணவ் "அம்மா… அம்மா…" என்று கதறும் சத்தம் கூட அவள் காதுகளை எட்டவில்லை.
அவள் உயிர் கொஞ்ச கொஞ்சமாக அவள் கூட்டைவிட்டு வெளியேறிக் கொண்டிருக்க, அதை அவள் உடலிலேயே கட்டி வைக்க, அனைவரும் போராடிக் கொண்டிருந்தனர்.
நேரம் ஆக ஆக யுக்தா உடலில் எந்த மாற்றம் இல்லாமல் போக, ஆதி மெதுவாக அவள் அருகில் வந்தவன், அந்த அறையில் இருந்த அனைவரையும் வெளியே இருக்கச் சொல்லிவிட்டு, யுக்தா படுத்திருந்த கட்டிலுக்கு அருகில் ஒரு சேரை போட்டு உட்கார்ந்தான்.
அவள் வலக்கையை எடுத்து தன் இரு உள்ளங்கைக்குள்ளும் அழுத்தி பிடித்துக் கொண்டவன், அவள் முகத்தையே பார்த்தபடி இருக்க, அவன் உதடுகள் எதை எதையோ பேச ஆரம்பித்தது.
"உனக்குத் தெரியும் இல்லடி? இப்படி தான் நடக்கப் போகுதுன்னு… தெரிஞ்சு தான அன்னைக்கு நான் இல்லாட்டி என்னையும், ப்ரணவ்வையும் நல்லா பாத்துப்பியான்னு பாட்டிகிட்ட கேட்ட நீ?" என்று கண் மூடிக் கிடக்கும் தன்னவளை முறைத்தவன்,
"ப்ரீத்தி எப்படியும் உன்ன கொன்னுடுவான்னு தெரிஞ்சு தான், நீ அவளைப் புடிக்கிற வேலைய எனக்குக் குடுத்தியாடி?அப்ப உனக்கு எல்லாமே தெரியும் இல்ல? எல்லாம் தெரிஞ்ச உனக்கு, நீ இல்லாட்டி நான் இல்லன்னு ஏன்டி தெரியாம போச்சு? என் உசுரு உனக்குள்ள தான் கலந்திருக்குன்னு ஏன்டி உனக்குப் புரியல?" என்றவன் குரலில் அப்படி ஒரு வெறுமை!
'ம்ம்ம்…’ என்று மூச்சை இழுத்து விட்டவன், "எனக்குத் தெரியும் டி. நான் பேசுறது எல்லாம் உனக்குக் கேக்கும்னு எனக்கு நல்லா தெரியும். ஏன்னா இப்ப உன் மனசு முழுக்க நான் தான் இருக்கேன். நான் உன்னை விரும்புறதை விட, நீ என்னை அதிகம் நேசிக்கிறன்னு எனக்குத் தெரியும். நீ என்னையும் ப்ரணவ்வையும், நம்ம குடும்பத்தையும் தனியா விட்டுப் போக மாட்ட. அது உன்னால முடியாது. நீ இல்லாம, உன் இம்சை இல்லாம நான் நிம்மதியா சந்தோஷமா இருக்குறதை கண்டிப்பா நீ சகிச்சுக்க மாட்டன்னு எனக்குத் தெரியும் டி. சோ உனக்கு ஒன்னு ஆகாது. நீ சீக்கிரம் திரும்பி வந்துடுவ…" என்றவன் தன் கைக்குள் இருந்த அவள் கையில் அழுத்தமாக ஒரு முத்தம் வைத்தான்.
"சீக்கிரம் கண்ணைத் தொற டி, ப்ளீஸ் டி. என்னால உன்ன இப்படிப் பாக்க முடியல…" என்று புலம்பிக் கொண்டிருந்தான்.
அப்போது உள்ளே வந்த ஜீவா மானிட்டரில் அவள் இதயத்துடிப்பு குறைந்து கொண்டே செல்வதைப் பார்த்தவன் கண்களில் கண்ணீர் நிற்காமல் வழிந்தது.
"ஆதி… ஆதி… அவ… அவ... நம்ம எல்லாரையும் விட்டு…" என்றவன் வாயை பொத்திக் கொண்டு கதற, ஆதி மெதுவாகத் திரும்பி ஜீவாவை பா
ர்த்தவன், தன் இடக்கையைத் தூக்கி காட்ட, ஜீவா திகைத்துப் போய் அப்படியே சிலையாக நின்றான்.